பருப்பு உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்(குழம்பிற்கு):
புளி -. ஒரு பெரிய எலுமிச்சை அளவு.
சாம்பார் பொடி - 3 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - 3 டீ ஸ்பூன்
சோம்பு. - 1 டீ ஸ்பூன்
சீரகம். - 1 டீ ஸ்பூன்
தேங்காய்.துருவல் - இரண்டு டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை.
பருப்பு உருண்டைக்கு:
துவரம் பருப்பு. - ஒரு ஆழாக்கு
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
வர மிளகாய். -. ஆறு அல்லது ஏழு.
உப்பு. -. 1 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம். -. ஒரு சிறிய கட்டி
சோம்பு. -. 1 டீ ஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
அரிசி மாவு - ஒரு டீ ஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் இவைகளை கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து வடிய வைத்து பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ரொம்ப நைஸாகவும் இருக்கக் கூடாது. கொரகொரப்பாகவும் இருக்கக்கூடாது.
அப்படி அரைக்கப்பட்ட விழுதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து கலந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். இப்போது பருப்பு உருண்டை தயாராகி விட்டது.
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு போட்டு, கடுகு வெடித்ததும் வெந்தயம், கருவேப்பிலை போட்டு ஊற வைத்திருக்கும் புளியை மூன்று முறைகள் கரைத்து விட்டு இன்னும் கொஞ்சம் ஜலம் விட்டு, உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். பருப்பு உருண்டை, குழம்பில் மிதக்க வேண்டும். அதனால் குழம்பு சற்று நீர்க்க இருக்க வேண்டும்.
தேங்காய், சோம்பு, சீரகம் இவைகளை நைஸாக அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு வேக வைத்து தயாராக இருக்கும் பருப்பு உருண்டைகளை இரண்டு இரண்டாக குழம்பில் போடவும். இந்த சமயத்தில் குழம்பை கிளறக் கூடாது. கிளறினால் பருப்பு உருண்டை கரைந்து விடும். வெந்த பருப்பு உருண்டைகள் தன்னால் மேலே எழும்பி வரும்.
மிகவும் சுவையான பாரம்பரிய உணவு இது. செய்முறை படிக்கும் பொழுது கடினமாகத் தோன்றலாம். ஆனால் சுலபமானது தான்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க..
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க.
நீக்குமிகவும் சுவையான தஞ்சை மாவட்டத்தின் பாரம்பரிய உணவு இது...
பதிலளிநீக்குதின்னேலிக்காரங்களும் அப்படிதான் சொல்றாங்க....
நீக்குஎங்க ஊரிலேயும். தஞ்சை மாவட்டத்தில் மத்தப்பேர் எப்படியோ! எங்க மாமியார் வீட்டில் மோர்க்குழம்பில் மட்ட்ட்ட்ட்டும் போடுவாங்க. எங்க பொண்ணுக்கெல்லாம் இப்படிப் புளிவிட்டுப் பருப்புருண்டைக் குழம்பு பண்ணுவாங்கனே ரொம்ப வருஷம் தெரியாது. :)
நீக்குபுளியை அதிகம் சேர்க்காமல் செய்வது எனக்குப் பிடித்தது..
பதிலளிநீக்குஅரைத்து எடுத்த மாவை உள்ளங்கைகளில் வைத்து அழுத்தி வடையாக்கி பொரித்து குழம்பில் இடுவதும் இன்னொரு வழக்கம்..
வாழ்க நலம்..
ஆம். பொதுவாகவே குழம்பில் - அது சாம்பாரோ, வெந்தயக்குழம்போ, ஏன் புளிக்குழம்பாகவே இருக்கட்டுமே.. புளி அளவாய் இருத்தல் நலம்!
நீக்குஎங்கள் வீட்டிலும் அக்கா சொல்லி இருபிப்பது போல பருப்பு உருண்டைக் குழம்பு செய்வார்கள். ஆனால் சோம்பு மசாலா எல்லாம் போடமாட்டார்கள். தேங்காய்க்கு கூட கிடையாது. நான் நீங்கள் சொல்லி இருப்பது போல பொரித்த வடைக்குழம்பு செய்வதுண்டு.
ஆமாம் ஶ்ரீராம்.நாங்களும் குழம்புக்கு சோம்பு, ஜீரகம், தேங்காய்த்துருவல் எல்லாம் அரைத்துச் சேர்க்க மாட்டோம். அதே போல் உருண்டை அரைத்தாலும் சோம்பு, ஜீரகம் போன்றவை சேர்ப்பதில்லை. பொதுவாகப் புளி சேர்த்த குழம்பு வகைகளுக்குப் பொடி தயாரிப்பில் கூட ஜீரகம் சேர்க்க மாட்டோம்.
நீக்குஉருண்டையில் வெங்காயமும் சேர்த்தது இல்லை. சப்பாத்திக்குத் தொட்டுக்கும் கோஃப்தாவில் வெங்காயம் சேர்ப்போம். அதிலே சோம்பு, ஜீரகம், தேங்காய், வெங்காயம் எல்லாமும் உண்டு.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் தயாரிப்பான சுவையுடன் கூடிய பருப்பு உருண்டைக் குழம்பு படங்களுடன் செய்முறையும் மிக அற்புதமாக வந்துள்ளது. நானும் இதுபோல்தான் செய்வேன். ஆனால், சோம்பு, சீரகம் மட்டும் இதுவரை சேர்த்ததில்லை. இப்படியும் ஒரு தடவை செய்து பார்க்கிறேன். சுவையான செய்முறையை அளித்த சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதே.. அதே..
நீக்கு
பதிலளிநீக்குவள வள என்று இல்லாமல் செய்முறை மிகச் சுருக்கமாக நன்றாக இருக்கிறது நன்று. படங்களும் கொலாஜ் அழகாக உள்ளது.
Jayakumar
நறுக்கு தெறித்தாற்போல என்பார்களே... அதில் எப்போதுமே பானு அக்கா ஸ்பெஷலிஸ்ட்!
நீக்குஅதே அதே....மீக்கு வராத ஒன்று. கட்ஷார்ட்! பானுக்கா பேசாம எடிட்டிங்க் கற்றுக் கொண்டு (சினி துறையில் பெண்களில் எடிட்டர்ஸ் உண்டா?) அதாவது சினி துறையில் வந்திருந்தாங்கன்னா பல படங்கள்ல ஐயோ இந்த நீள வசனம் எதுக்கு இங்கன்னு வெட்டி வெட்டி தள்ளியிருப்பாங்க! மணிரத்னத்திற்கு ஏற்ற எடிட்டரா இருந்திருப்பாங்க!!! ஆ பானுக்கா வந்து பார்க்கும் போது நான் இங்க வரமாட்டேனே...
நீக்குகீதா
பருப்புருண்டை குழம்பு அடிக்கடி நான் செய்வது.
பதிலளிநீக்குதேங்காய், சீரகம், வெங்காயம் கிடையாது.
சோம்பு கிடையவே கிடையாது. பாரம்பர்ய மணம் போகிவிடும் என்பதால்.
நாங்களும் வெங்காயம், சீரகம் சோம்பு போடுவதில்லை.
நீக்குநெல்லை, ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் பாரம்பரிய செய்முறை உண்டு இல்லையா? அப்படி இது ஒரு சமூகத்தின் பாரம்பரிய செய்முறை.
நீக்குமேற்கத்திய நாடுகளுக்கும் பாரம்பரிய செய்முறைகள் உண்டு. ஒவ்வொரு நாட்டிற்குமே ஒவ்வொரு பகுதிக்குமே உண்டே. எத்தியோப்பியாவின் இஞ்செரா போல!! உங்களுக்கும் இது தெரியுமே!!
கீதா
பிற சமூகத்தின் செய்முறைப்படி நாம் மாற்றும்போது (நகரத்தார் முறையில்), நம் பாரம்பர்ய முறை கடத்தப்படுவதில்லை. இதனை நான் மூன்று விதங்களில் மனோகரம் செய்தபோது உணர்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குபருப்பு உருண்டை குழம்பு செய்முறை, படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடிக்கும் எனது அம்மா பிரமாதமாக செய்வார்கள்.
பதிலளிநீக்குஸூப்பர்.
நீக்குஎளிதான அருமையான செய்முறை குறிப்பு...
பதிலளிநீக்குபருப்புக்களை ஊற வைக்கும்போதே ஒரு மேஜைக்கரண்டி அரிசியும் சேர்க்கலாம். அதோடு உருண்டைகளை மோர்க்குழம்பானால் முதலில் வெந்நீரைக் கொதிக்கவிட்டு உருண்டைகளைப் போட்டு வேகவைத்த பின்னர் மோர்க்குழம்புக் கலவையைச் சேர்ப்போம். இந்த மாதிரிப் புளி சேர்த்த குழம்பில் தாளிப்பில் நீர்க்கப் புளி ஜலத்தை விட்டுப் பொடி போட்டு, உப்புச் சேர்த்துக் கொதிக்கவிடும்போது உருண்டைகளை உருட்டிப் போடுவோம். இரண்டிரண்டாகப் போடுவோம். அது மிதந்து மேலே வந்த பின்னர் அடுத்த இரண்டு. கடைசியில் எல்லா உருண்டைகளும் மேலே வந்த உடன் அடுப்பை அணைத்துவிடலாம். புளி ஜலம் நீர்க்க என்றால் ரொம்ப நீர்க்க இருக்கணும். பண்ணும்போது நமக்கே புரிஞ்சுடும்.
பதிலளிநீக்குபானுக்கா, சூப்பர் போங்க...நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குஅழகா சொல்லிட்டீங்க.. பானுக்கா என்றாலே கட கட என்று....ஹாஹாஹாஹா....
கீதா
து ப கூடுதலாகவும் க ப குறைவாகவும் நீங்கள் செய்திருப்பது சூப்பர் நானும் க ப குறைவாகவே போடுவேன்.
பதிலளிநீக்குநான் நீங்கள் செய்திருக்கும் இந்த முறையிலும் செய்வதுண்டு...எங்கள் வீட்டில் இதுவும் பிடிக்கும்....என்றாலும்
பொதுவாகப் பெரியவங்க வீட்டில் இருந்ததால் சோம்பு, வெங்காயம் சேர்க்காம, ஜீரகமும் சேர்க்காமல் செய்வது. து ப வும் க பவும் சமமாக எடுத்துக் கொண்டு ஏனென்றால் பெரிவர்களுக்குக் கஷ்டமாக இருக்கக் கூடாது கொஞ்சம் மிருதுவாக இருக்க வேண்டும் என்று.
உருண்டைகளை ஆவியில் வேக வைத்தும் செய்ததுண்டு..
பொதுவாக நான் குழம்பு புளித்தண்ணீர் கொதிக்கும் போதே உருண்டையைப் போட்டுவிடுவது ஓரிரண்டு போட்டு மேலே வந்ததும், அடுத்து உருண்டைகளைப் போடுவது என்று....அப்படியே பழகிவிட்டது. அப்படிக் கொதிக்க விடும் போது பருப்பு உருண்டையின் சுவை குழம்பில் இறங்கும் என்று தோன்றும்.
ஒரு வேளை மிக்சியில் அரைக்கும் போது (பெரியவர்களுக்காக கொஞ்சம் நைஸாக அரைக்க வேண்டுமே) கொஞ்சம் தண்ணீர் கூடிவிட்டது என்றால் வாணலியில் கடுகு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை (இதுவும் பெரியவர்களுக்காக!!!) தாளித்து ஒரு பிரட்டு பிரட்டி உருட்டி புளித்தண்ணீரில் போட்டுவிடுவதுண்டு.
கீதா
பானுக்கா கொலாஜும் நல்லா இருக்கு
பதிலளிநீக்குகீதா
பருப்பு உருண்டை குழம்பு நன்றாகவுள்ளது.
பதிலளிநீக்குநாங்கள் சோம்பு, தேங்காய் சேர்ப்போம்.
எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு. சுவையான ஒரு குழம்பு.
பதிலளிநீக்குவந்து கருத்திட்ட எல்லோருக்கும் நன்றி. எங்கள் வீட்டிலும் சோம்பு, வெங்காயம் சேர்க்க மாட்டார்கள். திருமதி.சியாமளா வெங்கட்ராமன் அவர்கள் மத்யமரில் எழுதியிருந்தார். செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது அதனால் பகிர்ந்து கொண்டேன்.
பதிலளிநீக்கு