சனி, 2 ஏப்ரல், 2022

Positive & நான் படிச்ச புத்தகம்

 மத்திய அரசுப் பணியை உதறிவிட்டு, பிறருக்கு வேலை வாங்கித் தருவதையே வேலையாக்கிக் கொண்ட சமூக சேவகருக்கு பாராட்டுகள் குவிகின்றன.  புதுச்சேரியைச் சேர்ந்தவர், இ.பா.வீரராகவன்; தன்னால் முடிந்தளவு பலருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதை சமூக சேவையாக செய்து வந்தார். 2019 வரை 3,345 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார். இதையடுத்து, தனியார் 'டிவி'யில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நடிகர் விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டார்.தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:'டிவி' நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியை தற்செயலாகவே சந்தித்தேன். மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, பகுதி நேரமாக சமூக சேவையை செய்து வந்தேன். வள்ளலாரை பின்பற்றும் நான், இது போன்ற சேவையால் மன நிறைவை பெற்றேன். இதனால் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு, முழு நேரமும் இச்சேவையில் இறங்கினேன். இதற்காக முடிந்த உதவிகளை செய்வதாக விஜய் சேதுபதியும் கூறினார்.'டிவி' நிகழ்ச்சிக்கு பின், நாட்டின் பல பகுதியில் இருந்தும், வேலை கொடுப்போரும், வேலை தேடுவோரும் என்னை தொடர்பு கொண்டனர்.


புதுச்சேரி தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து, 'வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தொண்டு நிறுவனமாக செயல்பட, விஜய் சேதுபதி உதவினார்; எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் சம்பளம் கொடுத்தார். கடந்த 2020 முதல், ௨௦22 மார்ச் வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒரு லட்சத்து 133 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், புதுச்சேரியில் 7,000 பேரும், தமிழகத்தில் 93 ஆயிரம் பேரும் பயன் அடைந்துள்ளனர். எங்களது வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தை 4.35 லட்சம் பேரும், 1,400க்கும் மேற்பட்ட 'வாட்ஸ் ஆப்' குழுக்களும் பின்பற்றி வருகின்றனர். இதைத் தவிர, 73 சுயதொழில் முனைவோர்களையும் உருவாக்கியுள்ளோம்.

கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளோம். புதுச்சேரியில் துவங்கிய எங்கள் சேவை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்றிருப்பதில் மகிழ்ச்சி.வேலை தேடும் நபர்கள், https://www.vvvsi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தகவல்களை தினமும் பெறலாம். வேலை தரும் நிறுவனமாக இருப்பின், info@vvvsi.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
=============================================================================================

கடந்த 20 ம் தேதி...  இந்தக் கோடையின் ஆரம்பத்திலும் அதிசயமாக ‛அசானி' என்று பெயரிடப்பட்ட புயல் வருவதற்கான அறிகுறியாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.


இந்த நிலையில் இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்கும் பாக் ஜலசந்தி கடல் கால்வாயை, ஆட்டிசம் நோய் பாதித்த வாய் பேச இயலாத பதிமூன்று வயது சிறுமி அநாயசமாக நீந்திக்கடந்து கொண்டிருந்தார்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படை பிரிவில் பணியாற்றுபவர் மதன்ராய், இவரது மனைவி ரெஜினா ராய்.இவர்களது மகள் ஜியாராய்.இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். மூளை வளர்ச்சி குறைபாடுகளுடன் வளரும் குழந்தைகளை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாக கருதுவர். பத்து வயது குழந்தையின் செயல்பாடு இரண்டு வயது குழந்தையின் செயல்பாட்டுடன் ஒத்திருக்கும்.

தற்போது இந்திய கடற்படையினருக்கான பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஜியாராய்க்கு சிறு வயது முதலே நீச்சலில் ஆர்வம் அதிகம்.இதை கவனித்த பெற்றோர் சிறுமிக்கு நீச்சல் பயிற்சி வழங்கினர்.இதன் காரணமாக நீச்சலில் பல சாதனைகள் புரிந்தார்.சிறுமியைப் பற்றி கேள்ளவிப்பட்ட பிரதமர் மோடி தமது ‛மான் கி பாத் ரேடியோ' நிகழ்வில் சிறுமியை பாராட்டி பேசினார்.
சர்வதேச நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாராக இருந்தாலும் இந்தியா-இலங்கைக்கு இடையே உள்ள கடல்பகுதியை கடந்து சாதனை புரிய விரும்புபவர்.ஜியாராயும் அந்த சாதனை புரியட்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டனர்.இரு நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஜியாராய் களத்தில் இறங்கினார் கடலில் நீந்தினார்.
இலங்கையின் தலைமன்னார் பகுதியில் தனது நீ்ச்சலை ஆரம்பித்தவர் இந்தியாவின் தனுஷ்கோடி அருகில் உள்ள அரிச்சல் முனையில் கரையேறினார்.மொத்தம் உள்ள 29 கிலோமீட்டர் துாரத்தை பதிமூன்று மணி நேரம் பத்து நிமிடத்தில் கடந்தார்.2004-ல் புலா சவுத்ரி என்ற பெண் இதே துாரத்தை 13 மணி நேரம் 52 நிமிடத்தில் கடந்ததுதான் இதுவரையிலான சாதனையாக இருந்தது.இப்போது ஜியாராய் இந்த சாதனையை நாற்பது நிமிடம் முன்கூட்டியே வந்து முறியடித்து அதிவேக நீச்சல் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார்.சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறுமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

ஜியாராய் கடந்த வந்து பாதையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கடல்வாழ் உயிரினங்களும் அதிகம் உண்டு கடல் கொந்தளிப்போடு கடல் வாழ் உயிரினங்களின் ஆபத்தையும் கடந்து இவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டு பாராட்டினார்.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஆட்டிசம் சங்கம் உள்ளிட்ட பல முகமைகளின் ஒத்துழைப்புடன் இந்திய மாற்றுத் திறனாளி நீச்சல் கூட்டமைப்பு இந்த நிகழ்வை நடத்தியது.
இந்த அற்புதமான சாதனைக்காக செல்வி ஜியா ராய் மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு கப்பற்படையின் வைஸ் அட்மிரல் பகதூர் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.கௌரவமிக்க பிரதமரின் தேசிய பாலர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள செல்வி ஜியா ராய் உலகின் அனைத்து கடல்களிலும் நீந்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

====================================================================================================================

சென்னை--தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், தன் 134வது மாரத்தானை, பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று நிறைவு செய்தார்.


கடந்த 2004ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கியதால், கால் எலும்பு ஆறு துண்டுகளாக உடைந்த நிலையில், சுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கால்களை மடக்கி அமரவோ, வேகமாக நடக்கவோ முடியாது என்ற நிலையில், சிகிச்சை பெற்று திரும்பினார்; நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், யோகா, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி, நடை பயிற்சியிலும் ஈடுபட்டார்.

2013ல் மெதுவாக ஓடும் அளவுக்கு முன்னேறினார். அடுத்தாண்டு, புதுச்சேரியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று, 21 கி.மீ., ஓடினார். அது தந்த தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தால், அடுத்த ஆண்டுக்குள், 25 மாரத்தான் போட்டிகளில் ஓடி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அப்போது துவங்கிய ஓட்டம், கொரோனா, மழை, தேர்தல் காலத்திலும் கூட நின்றதில்லை.

ஈடுபாட்டுடன் ஓடும் அவர், 10க்கும் மேற்பட்ட நாடுகள், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.நேற்று, பீஹார் மாநில தலைநகர், பாட்னாவில் நடந்த மாரத்தான் போட்டியில், 21.1 கி.மீ., துாரத்தை, இரண்டரை மணி நேரத்தில் ஓடி நிறைவு செய்தார். இது அவரின் 134வது மாரத்தான் போட்டி.அமைச்சர் சுப்பிரமணியன் விடாமுயற்சியுடன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதால், இளைஞர்கள் பலரும் ஊக்கம் பெற்று ஓட்டத்தை துவக்கியுள்ளனர்.

====================================================================================================================================================================================================================================================================================================================================================


நான் படிச்ச புத்தகம்

பானுமதி வெங்கடேஸ்வரன் 


நான் படிச்ச புத்தகம்.


நான் இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு என் மகன் அமேசானில் ஆர்டர் கொடுத்திருந்த 'My life in full' என்னும் இந்திரா நூயி எழுதிய புத்தகம் வந்தது. கனடா வருவதற்குள் அதை படித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. இங்கே நூலகத்தில் வெயிட்டிங் லிஸ்ட் மிகவும் நீளமாக இருந்ததால் ஆன்லைனில் படிக்க என் மகள் ரிஜிஸ்டர் செய்தாள்.  

சமீபத்தில் ஆன்லைனில் கிடைத்தது. டவுன் லோட் செய்து படித்து முடித்தேன். 

எங்கள் வீட்டில் இருந்த ஒரே ஒரு ஃபர்னிச்சர் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சல்தான்.

மாலையில் பள்ளியிலிருந்து வந்ததும் தாத்தாவின் காலடியில் உட்கார்ந்து வீட்டுப்பாடங்களை செய்வோம். எங்களைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களை அடித்தபடி படிப்போம்.

உமிக்கரியால் பல் துலக்குவோம். 24 வயது வரை பல் டாக்டரிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொண்டதில்லை.

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் அம்மா ஒரு டெய்லரை பிடித்து ஆறு செட் பள்ளிச் சீருடை தைக்க கொடுப்பாள். எப்போதும் இருக்கும் அளவை விட இரண்டு இன்ச் பெரிதாக தைக்கச் சொல்லுவாள். நாங்கள் வளர்ந்தாலும் போட்டுக்கொள்ள முடியுமே. இப்படி தொடங்கும் இந்திரா நூயி யின் சுய சரிதம் நம்மை சட்டென்று உள்ளே இழுக்கிறது.

எளிய ஆங்கிலத்தில், சரளமான நடையில் தன் அனுபவங்களை அழகாக விவரித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இருக்கும் அதில் முதல் பாகத்தில் தன் இளமைக் காலம்,  படிப்பு, அமெரிக்காவில் மேல்படிப்பு, திருமணம், பெப்ஸிகோவிற்கு முந்தைய நிறுவனங்களில் பணி புரிந்தது போன்றவற்றையும், இரண்டாம் பாகத்தை பெப்ஸிகோ நாட்கள் என்றும்  பிரித்திருக்கிறார். 

குட் ஷெப்பர்டில் படிக்கும் பொழுது அம்மாவின் எதிர்ப்பை மீறி கிடார் கற்றுக்கொண்டு ஒரு இசைக்குழுவும்  வைத்திருந்தாராம். தாம்பரம் கிருத்தவ கல்லூரியில் படித்த பொழுது பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ் வுமனாக களமிறங்கியதை மறக்க முடியாது என்கிறார்.

மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற பொழுது அங்கு மாணவர்கள் சாண்ட்விச்சை கடித்துக் கொண்டே வகுப்பை கவனித்ததும், இஷ்டப்படி தாமதமாக வகுப்பிற்கு வந்து, அனுமதி கேட்காமல் பாதியில் எழுந்து போனதும் அதிர்ச்சி அளித்ததாம். 

ஆரம்ப காலத்தில் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டோடு ஆள் வைத்துக் கொள்வது காஸ்ட்லியான விஷயமாக இருந்ததால் ஒரு நல்ல டே கேரை கண்டுபிடிப்பதில் இருந்த சிரமம், ஆசியக் குழந்தை என்பதால் அவர் குழந்தை பள்ளியில் புறக்கணிக்கப்பட்டது, அதே காரணத்தினால் அவருக்கு சொந்த வீடு அமைவதில் சிக்கல், ரியல்டரால் ஏமாற்றப்பட்டது போன்ற விஷயங்களைப் பற்றி படிக்கும் பொழுது  இவர் நடந்து வந்த பாதை மலர்ப் பாதை அல்ல என்று புரிகிறது. 

அவருடைய மூத்த பெண் சிறுமியாக இருந்த காலத்தில் அவள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறாள், புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் என்று அவருடைய கணவர் கூற, தாயோ, "என்னுடைய மூன்று குழந்தைகளை எப்படி வளர்த்தேனோ அப்படித்தான் இவளையும் வளர்க்கிறேன்" என்றாராம். 'டென்ஷன் இன் த ஃபேமிலி' என்று ஒற்றை வரியில் கடந்து போனாலும் எப்படிப் பட்ட டென்ஷனாக இருந்திருக்கும் என்பது நமக்கு புரிகிறது.

அலுவலகத்தில் உயரத்தை தொட விரும்பும் பெண்கள் ஏற வேண்டிய ஏணி குறுகலான, செங்குத்தான, வழுக்கும் படிகளைக் கொண்டது என்கிறார். 

"உயர் பதவியில் இருக்கும் பெண்ணின் முகத்தைப் பார்த்து பேச மாட்டார்கள், நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கே பேசுவார்கள்".

ஒரு முறை ஒரு பத்திரிகையைச் சார்ந்த புகைப்படக்காரர், "மேடம் வேறு உடை அணிந்து கொள்கிறீர்களா?  இந்த உடையை நீங்கள் ஏற்கனவே வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து கொண்டிருக்கிறீர்கள்" என்றாராம். "என்னுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக ஆண் பத்து வருடங்களாக ஒரே சூட்டை அணிந்து கொண்டிருப்பது அந்த புகைப்படக்காரருக்கு ஒரு பொருட்டில்லை என்றெல்லாம் அங்கலாய்க்கிறார்.

தன் வேலையில் அவர் சந்தித்த பல சவால்களைப் பற்றியும் எழுதியிருந்தாலும் அலுவலகத்தில் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று சில பெண்கள் முடிவு செய்வது சரியில்லை என்பது இவரது கருத்து. மகப்பேற்றினை சந்தோஷமாக அனுபவித்தேன் என்கிறார்.

பெப்சிகோவின் சி.யி.ஓ.வாக பதவியேற்றுக் கொண்டதை அவர் அம்மாவிடம் சொன்ன பொழுது அவர் தாயார்,"வெளியிலே நீ மஹா ராணியாக இருக்கலாம், வீட்டில் நீ ஒரு மனைவி, தாய், குடும்பத் தலைவி, உன் கிரீடத்தை கராஜிலேயே கழற்றி வைத்து விட்டு வா" என்றாராம். அந்தக் கிரீடம் உறவினர்களிடமிருந்து நம்மை எப்படி அன்னியப் படுத்துகிறது என்றும் கூறியிருக்கிறார். நம் நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்ட பொழுது உறவினர்கள் யாரும் வாழ்த்துச் சொல்லவில்லையாம்.

அவருக்குப் பிறகு  பெப்ஸி கோவின் தலைமை பதவிக்கு ஒரு ஆண் மகனை அவர் தேர்ந்தெடுத்தபொழுது,"ஒரு பெண் சி.இ.ஓ.விற்குப் பிறகும் கூட கார்ப்பரேட் உலகில் பெண்களுக்கு இருக்கும் கிளாஸ் சீலிங் தகர்க்கப்படவில்லை" என்று டைம்ஸ் பத்திரிகை எழுதியதாம். சி.இ.ஓ.வாக இருந்து ஓய்வு பெறும் ஒரு ஆணிடம் யாரும் நீங்கள் ஏன் உங்களைத் தொடர்ந்து ஒரு பெண்ணை நியமிக்கவில்லை?" என்று கேட்பதில்லை என்கிறார்.

"உன் கிரீடத்தை கராஜிலேயே கழற்றி வைத்து விட்டு வா" என்ற அதே அம்மா ரிடையர்மெண்டிற்குப் பிறகும் அவரிடம்  ஆலோசனைகளும்,        உதவிகளும் கேட்டு வரும் கடிதங்களைப் பார்த்து, "இந்த உலகம் உன்னிடமிருந்து நிறைய எதிர் பார்க்கிறது, அதற்கு நீ செய்ய வேண்டியது இருக்கிறது, செய்" என்றாராம். 

அலுவலகத்தில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தன் குழந்தைகள் தன்னை எப்போது அழைத்தாலும் அதை புறக்கணித்த தில்லை யாம்.

"குழந்தைகளே நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நான் உங்களுக்கு உதவியாக உங்களோடு இருப்பேன்" என்று  மகள்களுக்கு உறுதி அளித்து இப்புத்தகத்தை முடித்து தான் எப்போதும் பெண் என்று நிரூபித்திருக்கிறார்.

நல்ல வாசிப்பனுபவத்தை தந்த புத்தகம்.

64 கருத்துகள்:

 1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
  பொய்யா விளக்கே விளக்கு..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வாழ்கவே...

   வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.

   நீக்கு
 3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளால்
  நாம் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. இந்த்ரா நூயி வெகு சுவாரஸ்யமான புத்தகம்.

  அவரைப் பற்றி நிறைய சேதிகள்
  படித்ததில் இந்தக் கிரீடமும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் .ஸ்ரீராம். பேரனுக்கு அவன் அலுவலகத்தில் கொடுத்தார்கள்.
   இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன்.

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஆங்காங்கே அறிவிக்கும் தளர்வுகளால் பாதிப்பு இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாய் இருக்கும்படிப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. இன்னிக்கு எடுத்த எடுப்பிலேயே ரோபோ வந்தாச்சு! எல்லாச் செய்திகளுமே அருமையானவை. திரு வீரராகவன், அமைச்சர் ஆகியோர் பற்றிப் படிச்சேன். ஜியா ராய் பற்றிய விஷயம் புதிது. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்திரா நூயியின் இந்தப் புத்தகம் குறித்த விமரிசனங்களும் செய்தித்தாள்கள் மூலம் படிச்சேன். பானுமதியும் நன்றாக எழுதி இருக்கிறார். அமேசானில் புத்தகம் கிடைச்சதும் படிக்கலைனால் கையில் எடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே? புத்தகத்துக்கு ரொம்பவே டிமான்ட் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் ரோபோ டிக் வந்தது. இப்போது இல்லை.

   நீக்கு
  2. //புத்தகத்துக்கு ரொம்பவே டிமான்ட் போலும்.// ஆமாம். நான் படித்து முடிப்பதற்காக என் மகனும், மருமகளும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

   நீக்கு
 7. பானு விமரிசனம் செய்திருக்கும் அழகு
  அருமை.
  எனக்கு ஆன்லைன் படிப்பது கடினம்.
  இப்போது கையில் வைத்துக் கொண்டு படிப்பது சுவாரஸ்யமாக
  இருக்கிறது. வாழ்த்துகள் பானுமா.

  பதிலளிநீக்கு
 8. இன்றைய செய்திகள் நன்று.

  நிறையபேர் இன்ஸ்ப்பிரேஷனாக அமைகிறார்கள்.

  நீச்சலில் சாதனைகள் படைத்த குற்றாலீஸ்வரன், இதனால் வாழ்க்கைக்குப் பிரயோசனமும் கிடையாது, இந்தியாவில் எந்த உதவியும் கிடைக்காது என்று தொந்துகொண்டு இப்போ சாதா வேலையில் வெளிநாட்டில் இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  நிறைய பேர் இன்ஸபிரேஷனாக அமைகிறார்கள், நெகிழ வைக்கிறார்கள்.

   நீக்கு
 9. அமைச்சர் திரு சுப்ரமணியனின் சாதனை மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  என்ன ஒரு விடா முயற்சி!!!

  சிறப்புடன் மேன்மேலும் சாதனை புரிய நம் வாழ்த்துகள்.
  மிக நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 10. திரு வீர ராகவனின் அரிய சேவை மகத்தானது.
  வேகை வாங்கிக் ஒடுத்து இத்தனை குடும்பங்களை
  வாழ வைக்கிறார்.

  அத்தனை மனம்களும் அவரை இடைவிடாமல் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
  வந்தனங்கள்.

  பதிலளிநீக்கு
 11. சிறுமி ஜியா ராய் அவர்களுக்கும் அவர் பெற்றோர்களுக்கும்

  மனம் நிறைந்த வாழ்த்துகள். சுலபமான
  சாதனையா இது. எத்தனை ஊக்கம் வேண்டும்!!!!
  அதுவும் கவனம் சிதறாமல் நீரில் போரிட்டு
  நீந்திக் கடந்த அவர் மன உரத்தைப்
  பாராட்டுவதில் மகிழ்ச்சி.
  இந்த வார நற் செய்திகளுக்கு மிக நன்றிமா.

  பதிலளிநீக்கு
 12. வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் வேலை வாங்கித்தருவது ஒரு பெரிய காரியம். திரு வீரராகவன் பணி போற்றற்குரியது. 

  பிரபலங்களின் சுய சரிதைகள் சூடாக விற்பனையாவதற்கு காரணம் அவர்கள் பிரபலமாக இருப்பதால் தான். ஆனால் அச்சரிதங்களைப் படிப்பவர்கள் எல்லோரும் பிரபலமடைவதில்லை. சும்மா படிப்பதோடு சரி 

  பானு அக்கா (வேறே எப்படி சொல்வது என்று தெரியவில்லை) இந்திரா நூயி சரிதத்தை படித்து சாராம்சத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

   சனி பிடித்திருந்த சனிக்கிழமையில் சனி விலகி நல்ல செய்திகள் வருவதும், அறிவு விருத்தியாக படித்த புத்தகம் பற்றிய விவரங்கள் வருவதும் ஒரு சுவையான மாற்றம் என்றே கொள்ளலாம்.  

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னரும் பாசிடிவ் செய்திகள் என்னும் பெயரில் நல்ல செய்திகளே வந்தன. திருமதி ரமா ஶ்ரீநிவாசன் அவருடைய எதேனும் ஓர் அனுபவம்/நிகழ்ச்சி பற்றி சனிக்கிழமைகளில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் முகநூல் மத்யமர் குழுமத்தோடு ஐக்கியம் ஆனதும் இந்த மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

   நீக்கு
  2. //பானு அக்கா (வேறே எப்படி சொல்வது என்று தெரியவில்லை// என் திருமணத்திற்கு முன்பு என்னுடைய பெரிய அக்காவின் குழந்தைகள் என்னை பானு சித்தி என்று கூப்பிட்டால் அந்த தெருவில் இருந்த பெரும்பாலானோர் என்னை பானு சித்தி என்று அழைப்பார்கள். எங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் "எல்லோருக்கும் நீ சிந்தியா?" என்று சிரிப்பாள். அதைப்போல இங்கே உங்களுக்கும் அக்காவாக இருந்து விட்டு போகிறேன், அதனால் என்ன?

   நீக்கு
  3. வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் பாஸிட்டிவ் செய்திகள் தொடங்கி பத்து வருடங்கள் ஆகிறது ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...  நடுவில் நிறுத்தலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்தது - அதற்கு படிப்பவர்களின் வரத்து கம்மியாய் இருந்ததால்.  அப்புறம் பெரும்பான்மை விரப்பப்படியும், ஒரு நல்ல விஷயத்தை கைவிட வேண்டாம் என்றும் தொடர்கிறோம்.

   நீக்கு
  4. என் தம்பியின் நண்பர்கள் அனைவருக்குமே நாங்க இரண்டு பேரும் அக்கா/அத்திம்பேர் தான். அதே போல் என் அண்ணா பையரின் மாமனார் குடும்பத்தில் அனைவருக்குமே நான் அத்தை. வயதில் மூத்தவர்களுக்குக்கூட! :)))))

   நீக்கு
 13. அற்புதமான சாதனை.. செல்வி ஜியா ராய் மற்றும் அவரின் பெற்றோர்கள் அனைவருக்கும் முன்மாதிரி ஆனவர்கள்..

  பதிலளிநீக்கு
 14. திரு வீரராகவன் செய்து வரும் சேவை மகத்தானது. பாராட்ட வார்த்தைகளில்லை! ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி இப்படிப்பட்ட சாதனை செய்வதற்கு அவரையும் விட அவரின் பெற்றோர்கள் தான் முக்கிய காரணம். அந்த உன்னதமான பெற்றோருக்கு இனிய வாழ்த்துக்கள்!
  அமைச்சர் மா.சுப்ரமணியனின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் கால் எலும்பு ஆறு துண்டுகளாகியும் அதே கால்களால் மராத்தன் வரை சாதனை படைக்கச்செய்துள்ளது!
  இந்திரா நூயி பற்றிய பானுமதி வெங்கடேஸ்வரனின் நூல் விமர்சனம் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 15. // விபத்தில் சிக்கியதால், கால் எலும்பு ஆறு துண்டுகளாக உடைந்த நிலையில்.. //

  திரு. சுப்பிரமணியன் அவர்களது மனோதிடம் கருத்தில் கொள்ளத்தக்கது..

  பதிலளிநீக்கு
 16. இந்திரா நூயி அவர்களது புத்தகத்தைப் பற்றிய தொகுப்பு அருமை..

  பதிலளிநீக்கு
 17. இந்த வீரர்களை பாராட்டி விருது வழங்குவதோடு தொடர்ந்து அரசே தத்து எடுத்து ஊக்குவிப்பதில்லை.

  குற்றாலீஸ்வரன் இன்று என்ன ஆனான் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாட்டில் மனைவியுடன் வசிக்கிறார் எனச் சிலரும் ஈசிஆர் சாலையில் ஏதோ ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டுத் திரும்புகையில் ஓர் விபத்தில் மனைவியுடன் இறந்துவிட்டதாக ஓர் வதந்தியும் இருக்கிறது.

   நீக்கு
  2. நம் நாட்டில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் கண்டுகொள்ளுப் படுவதில்லை

   நீக்கு
  3. குற்றாலீஸ்வரன் சௌக்கியமாக இருப்பதாக இயம்புகிறது இந்த விக்கிப் பக்கம்.

   https://en.wikipedia.org/wiki/Kutraleeswaran

   நீக்கு
  4. நானும் பார்த்தேன்/படித்தேன் ஶ்ரீராம். ஆனாலும் மனதில் ஏதோ நெருடுகிறது. ஆதாரங்களுடன் கூடிய தகவலை விரைவில் தேடணும். :(

   நீக்கு
  5. கீதாக்கா குற்றாலீஸ்வரன் நன்றாக இருக்கிறார். அவரது யுட்யூப் பேட்டிகள் 2019 ல் வந்திருந்தன. அவர் நீச்சலை ஏன் விட்டார் என்பதைச் சொல்லியிருக்கும் பேட்டி.

   சமீபத்தியது 2021ல் ஸ்போர்ட்ஸ் விகடனில் வந்திருந்தது. நான் பார்த்ததை இங்குப் பகிர்கிறேன்

   https://sports.vikatan.com/sports-news/exclusive-interview-with-swimmer-kutraleeswaran

   அவர் அரசையோ அல்லது சங்கங்களையோ சுட்டவில்லை.

   ஆனால் முன்பு அவர் சின்ன பையனாக இருந்த போது சாதனைகள் படைத்த போது ஒவ்வொரு போட்டிக்கும் செல்வதற்கு பணம் திரட்ட அவர் அப்பா கஷ்டப்பட்டதை முன்பு வாசித்த நினைவு இருக்கிறது.

   கீதா

   நீக்கு
 18. செயல்கள் ஆன செய்திகள் சிறப்பு...

  புத்தக வாசிப்பு அருமை...

  பதிலளிநீக்கு
 19. சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் ஏன் வருவதில்லை ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடல் நலம் சரியில்லையோ/இல்லைனா அவர் மகன் திரும்பிச் செல்வதிற்கான ஏற்பாடுகளில் பிசியோ!

   நீக்கு
  2. மகன் ஊர் திரும்புவதில் பிஸியாயிருக்கக் கூடும்.

   நீக்கு
 20. இ.பா.வீரராகவன் அவர்கள் பலரது வாழ்க்கை ஓட்டத்திற்கு உதவுகிறார் என்றால் நிஜமாகவே ஓடும் அமைச்சரும்(சுப்பிரமணியம்), ஒரு சிறப்பு குழந்தையை பாக் ஜலசந்தியை நீச்சலடித்து கடக்க வைத்திருப்பது இமாலய சாதனை. அந்த குழந்தையின் பெற்றோர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

  பதிலளிநீக்கு
 21. சனிக்கிழமை ஒருநாளாவது ஜீவி ஸார் வருவார் என்று பார்த்தால் அவரையே காணோமே இன்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா இல்ல! வாட்சப் குழுமத்தில் கூட அவரை ஒரு வாரமாகக் காணவில்லை. உடல் நலமாய் இருக்கார் இல்லையா? பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. நான் நலமே, கீதா சகோ.
   சில நாட்களுக்குப் பின் வருகிறேன்.
   தங்கள் விசாரிப்புக்கு நன்றி.

   நீக்கு
 22. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. இந்திரா நூயி குறித்த புத்தகம் வாசித்த அனுபவத்தை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கும் பானும்மா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. அனைத்தும் நல்ல செய்திகள்.
  தன்னம்பிக்கை தருபவை.
  பானு அவர்களின் புத்தக விமர்சனம் அருமை.
  இந்திரா நூயி தாயின் கடமையை அருமையாக சொல்லி இருக்கிறார், அவருக்கும் தாய் உறுதுணையாக இருந்து இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 24. இரு பாசிட்டிவ் செய்திகளும் நன்று குறிப்பாக அசானிக்கிடையில் அசாத்தியமாக நீந்திய ஜியாராய் சிறுமி! அவருக்குப் பிரத்யேகமான வாழ்த்துகள். பாராட்டுகள்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 25. இந்திரா நூயி பற்றிய விவரங்களை மிக அருமையாக முக்கியமானவற்றைச் சொன்ன விதம் சிறப்பு. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 26. ஜியாராய்! வாசிக்கும் போது மனம் நெகிழ்ந்துவிட்டது. எப்படியான குறைபாடு! கண்ணில் நீர் வந்துவிட்டது. இந்தக் குழந்தை பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டும். பெற்றோருக்கு என் வணக்கங்கள். இப்படியான ஒரு குழந்தையை வளர்ப்பது அத்தனை எளிதல்ல. எனவே பெற்றோரை ரொம்ப ரொம்ப பாராட்டுகிறேன். வணங்குகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. பானுக்கா, அழகா நச்சுன்னு இந்திராநூயி பற்றி சொல்லியது நன்றாக இருக்கிறது. இவரைப் பற்றிய சில வாசித்ததுண்டு. நெட்டில். புத்தகமாக இல்லை. அவரே எழுதியது. அவர் குழந்தைகளைப் பற்றி, கடிதங்கள் பற்றி, அவங்க அம்மா சொன்னது அவர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

  நல்ல உதாரணப் பெண்மணி. நல்ல புத்தகம் அறிமுகம், பானுக்கா

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!