வெள்ளி, 29 ஏப்ரல், 2022

வெள்ளி வீடியோ : நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா

 எம் எஸ் வியின் இசையில் உருவான கிருஷ்ணகானம் ஆல்பம் ரொம்பப் பிரபலம்.  அதில் வெவ்வேறு பாடகர்கள் பாடியிருக்கும் எல்லாப் பாடல்களும் ரொம்பப் பிரபலம், இனிமை.   இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.

அதில் டி எம் எஸ் ஸுக்கான இந்தப் பாடலை கேட்காதவர்கள் குறைவு, விரும்பாதவர்கள் அதனினும் குறைவு.  எடுத்த உடனே ஒலிக்கும் குழலோசையைத் தொடர்ந்து தொடரும் பாடல் உங்கள் நினைவுகளை மீட்டும்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்….

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் …

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…

பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…இன்று இரண்டு ஜோதிகா பாடல்கள் இடம்பெறுகின்றன.  இரண்டு படங்களிலும் பூ இருக்கிறது!  ஒன்று பூவெல்லாம் கேட்டுப்பார், இன்னொன்று பூவெல்லாம் உன் வாசம்!

முதலில் 99 ல் வெளியான கேட்டுப்பார் படம்.  ஜென்டில்மேன் படப் பாடல் வரியிலிருந்து உருவப்பட்ட தலைப்பு என்றாலும் வசந்த் இந்தப் படத்துக்கு 'ரொமான்ஸ்', தத்தித்தாவுது மனசு என்றெல்லாம் தலைப்பு யோசித்தாராம்!  சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்.  இந்தப் படத்தில்தான் இருவருக்குள்ளும் நேசம் மலர்ந்ததாம்.

வசந்த்தின் கதைக்கு கிரேசி மோகன் வசங்கள் எழுத வசந்த்தே இயக்கி இருக்கும் படம்.  சூர்யா ஜோதிகாவுடன் விஜயகுமார், நாசர், அம்பிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இரு இசை அமைப்பாளர்களுக்குள் இருக்கும் ஈகோ மோதல்களால் பாதிக்கப்படும் காதல் ஜோடி எப்படி துணையின் வீட்டில் புதிய ஆளாகத் தங்கி பெரியவர்கள் மனதை மாற்றுகிறார்கள் என்பது கதை.  இதே கதைதான் அப்போது வெளிவந்த வேறு சில படங்களிலும்.  பிரசாந்த் சிம்ரன் நடித்த 'ஜோடி',  மின்சாரக்கண்ணா, அன்புள்ள காதலுக்கு..

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட்டான படம்.  பாடல்களை எழுதி இருப்பவர் பழனி பாரதி.

இளமை ததும்பும் படம்.  சூர்யாவுக்கு டான்ஸ் வராது என்கிற குற்றச்சாட்டு இந்தப் படத்தில் மறையத் தொடங்கியது என்று நினைவு.  ஜோதிகாவின் குறும்பு முகமும் துள்ளல் நடிப்பும் பிரபலம். 

பொதுவான ஒரு தகவல்.  கொஞ்ச வருடங்களாக நிறைய படங்களில் இளவரசு என்கிற குணச்சித்திர நடிகரைப் பார்த்திருப்பீர்கள்.  அவர் முதலில் ஒளிப்பதிவாராகத்தான் படங்களில் அறிமுகமாகி இருக்கிறார்.  கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.  


மனம் விரும்புதே உன்னை என்கிற படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் வாங்கி இருக்கிறார்.  கருத்தமமாவிலும், பாஞ்சாலங்குறிச்சியில் முறையே பொன்வண்ணனுக்கும், மகாநதி சங்கருக்கும் குரலும் கொடுத்திருக்கிறார் இளவரசு.


அடுத்த படமான உன் வாசம் படத்தில் பாடல்களை வைரமுத்து எழுத, வித்யாசாகர் இசை.  பல விருதுகளை வென்ற இந்தப் படத்தில் அஜித் நடிப்பது சரியாய் இருக்குமா என்று படம் எடுக்கப்படும்போது தயாரிப்பாளர் பயந்தாராம்.  அஜித் ஆக்ஷன் ஹீரோவாக, மாஸ் ஹீரோவாக உருமாறிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படிப்பட்ட குடும்பப் படம் எடுபடுமா என்கிற அவரது பயம் பொடியானது படத்தின் வரவேற்பில்.

பிரசாந்த் ஜோதிகா நடித்த ஸ்டார் படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்த நிலையில், அதிலிருந்து அவர் கழற்றி விடப்பட, இந்தப் படத்தில் ஒப்பந்தமானாராம் அஜித்.  நல்ல முடிவுதான்.  நான் வெகுவாக ரசித்த படங்கள் இவை இரண்டுமே.

இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களும் ஹிட்.  இந்தப் படத்திலிருந்து இன்று பகிரப்படும் இந்தப் பாடல் காபி ராகமாம்.  விக்கி செப்புகிறது.

எழில் இயக்கத்தில் அஜித், ஜோதிகா, சிவகுமார், சாயாஜி ஷிண்டே போன்றவர்கள் நடித்திருக்கும் படம்.

பொதுவான தகவல்.  இதில்  வில்லனாக நடித்திருக்கும் யுகேந்திரனுக்கு இது முதல் படம்.  அப்புறம் ஓரிரு படங்களில் நடித்தாலும் நடிப்பில் அவர் கவனம் பெறவில்லை.  மலேஷியா வாசுதேவன் மகனான இவர் ஏகப்பட்ட திறமைகளை வைத்திருப்பவர்.  மலேசியா மலையாளிகள் சங்கம் மலேஷியாவில் பிரபலம்.  அதிலிருந்துதான் வாசுதேவன் தமிழில் அறிமுகமானார்.  படங்களில் நடித்து, பாடல்கள் பாடி, தனியார் ரேடியோ நிலையம் தொடங்கி, அப்புறம் வேறு கம்பெனி தொடங்கி, என்று பிஸியாயிருக்கும் இவர் சிங்கப்பூர் ரேடியோ ஜாக்கி ஹெய்மா மாலினியை திருமணம் செய்திருக்கிறாராம்.  யுகேந்திரன் மகன்களின் பெயர் கிஷான் குட்டி நாராயணன், தர்ஷன் நாராயண் நாயர் என்பதிலிருந்து நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் நாராயணன் என்பது குடும்பப்பெயர் என்றும் தெரிய வருகிறது!!!

விவரங்களை ஒன்றாகக் கொடுத்து விட்டேன்.  அடுத்தடுத்து இரண்டு பாடல்களையும் கேட்கலாம்.  

முதல் பாடல் ஹரிஹரனும் சாதனா சர்கமும் பாடியது.  ஹரிஹரனின் குரல் பல இடங்களில் ரசிக்க வைக்கும்..  

குறிப்பாக "அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா" வரியில்.

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது விரல்
சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல் என்மேல்
நீ கொண்ட காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக பார்ப்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா

உன் பேரை சொன்னாலே நான்
திரும்பி பார்க்கிறேன்

உன் பேரை மட்டும்தான் நான்
விரும்பி கேட்கிறேன்

இருவர் ஒருவராய்  இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி

உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ

அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா

விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா

உன் மேல் நான் கொண்ட காதல் என் மேல்
நீ கொண்ட காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக பார்ப்பாயா

பல கோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய்

நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்

நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா

அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா

உன் கண்ணில் உண்டான காதலிது மூடிவிடும் என்னமோ

என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ

உன் மேல் நான் கொண்ட காதல் என் மேல் நீ கொண்ட
காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக பார்ப்பாயாஇந்தப் பாடல் சாதனா சர்கத்துடன் கே ஜே யேசுதாஸ் இணைந்து பாடியிருக்கும் பாடல்.  யேசுதாஸின் குரல் சற்றே வயதாகி இருந்தாலும் ரசிக்க வைக்கும்!  

நாயகனை விரும்பும் நாயகி, அதைச் சொல்லத் தயங்கிக் கொண்டு, சொல்லும் நேரத்துக்கு காத்திருக்கும்போது, அவன் அறையில் அவன் தனது புகைப்படத்தை மறைத்து வைத்திருக்கிறான் என்பதை பார்த்ததும் அவனும் தன்னை விரும்புகிறான் என்பதை அறிந்து உற்சாகத் துள்ளல் கொள்கிறாள்.  பாடல் பிறக்கிறது.காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை.. ஆ…..

தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா

நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா

உள்ளே என்னால் அரும்பானது
உன்னால் இன்று ருதுவானது

நான் அதை சோதிக்கும் நாள் வந்தது

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான…

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டமெங்கும்
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்

போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு

தன்நன் நானான… தன்நன் நானான…
தன்நன் நானான… தன்நன் நானான…

66 கருத்துகள்:

 1. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம்
  அனைவருக்கும்...

  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 3. சிவகுமாரின் மூத்த மகனும் அவரது மனைவியும் நடித்த படங்கள் எதையும் பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் எனக்கு இன்றைய வெள்ளி பதிவில் இருந்து அழகான ஓய்வு.. இத்தனைக்கும் ஓராண்டுக்கு முன்பு வரை சூரிய்யாவின் ரசிகன்..

  நாளைக்கு இங்கே மீண்டும் சிந்திக்கலாம்.. மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...   இசையை ரசிப்பதற்கு இத்தனை தடைகளா?!  அது சரி, முதல் பாடல்?

   நீக்கு
  2. துரை செல்வராஜு சார்.. நானும் இந்த முடிவை எடுத்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. காரணம் அதேதான். கார்த்தியின் எண்ணம் ஆட்டிடியூட் தமிழன், இந்தியன் என்பது.

   நீக்கு
  3. நீங்கள் சொல்லும் காரணங்களில் எனக்கும் உடன்பாடே..   ஆனால் நான் பாடல்களை ரசிக்கத் தவறுவதில்லை.

   நீக்கு
  4. சூர்யாவின் எந்தப் படத்தையும் பார்க்கும் ஆவல் இல்லை. பார்த்த ஒரே படம் ஏழாம் அறிவு? அல்லது ஏழாம் மனிதன்?

   நீக்கு
  5. எப்போதும் சொல்வதுதான்.  நக்கும் படம் பார்க்கும் ஆவல்கள் கிடையாது.  நல்ல பாடல்களை  ரசிக்காத தவறுவதும் கிடையாது!

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அனைவரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா.. நலமடைந்து விட்டீர்களா? வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. நன்றி அன்பின் ஸ்ரீராம்.
   கடவுள் இத்துடன் விட்டாரே என்று நன்றி சொல்லிக் கொள்கிறேன் மா.

   நீக்கு
  3. வணக்கம் வல்லிசிம்ஹன் சகோதரி

   நலமாக உள்ளீர்களா? உங்கள் வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா? நீங்கள் நலம் பெற்று இன்று வந்து கருத்துரைகளில் கலந்து கொண்டது மகிழ்வை தருகிறது. நீங்கள், மற்றும் அனைவரும் நலமாகி இருப்பதற்கு இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. @ரேவதி, உங்கள் உடல் குணமடைந்து வருவது பற்றி சந்தோஷம். கவனமாக இருக்கவும்.

   நீக்கு
 5. இந்த வெள்ளியின் மூன்று பாடல்களுமே முத்தானவை. திரு சௌந்தரராஜன் குரலில்,
  புல்லாங்குழல் என்றுமே கேட்டு ரசித்தபாடல். கண்ணன் நாமம்
  வாழ்க .கண்ணதாசன் வாழ்க.

  மற்ற இரு பாடல்களும் அவை வெளி வந்த
  காலத்தில் திரையில் வெகுவாக அனுபவித்த பாடல்கள்.
  என்ன!! நடன அசைவுகள் ஒரே மாதிரி இருக்கும்.

  சூர்யா,ஜோதிகா இருவரின் நடிப்பும்
  மிக மிகச் சிறப்பு.

  ஜோதிகா இன்னும் ஒரு படி மேல்.
  ''விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது விரல்
  சேர்த்து கொஞ்சம் வந்தது
  முழு காதல் என்று வந்தது
  தெரியாதே அது தெரியாதே
  அது தெரியாதே''

  முகBhaவங்களை ஜோதிகாவின் அசைவுகளில் வெகுவாக ரசிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா.  கண்ணன் பாடல்கள் எப்போதுமே சுகம்.

   // முகBhaவங்களை ஜோதிகாவின் அசைவுகளில் வெகுவாக ரசிக்க முடியும். //

   ஆம்.  நானும் ரசிப்பேன்.

   நீக்கு
  2. இந்த இரண்டு படங்களையும் மீண்டும் காண வேண்டும். மனம்
   உற்சாகம் பெறும்.

   நீக்கு
  3. இன்னும் சில பாடல்களும் இருக்கின்றன!

   நீக்கு
 6. பாடகர் ஹரிஹரன் குரலும் ஸாதனா சர்கம் குரலும் இழையும் அழகை இன்று
  முழுவதும் ரசிக்கலாம்.
  இசையும் பாடல்வரிகளும் மிக இனிமை.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 7. இரண்டாவது பாடலும் மிகச் சிறந்த தேர்வு.
  அஜித்தின் கௌரவமான நடிப்பு. அந்த இரட்டை வீடுகளின் இணைப்பு.

  ஜோதிகாவின் அவஸ்தை, பெரியவர்களின் வருத்தம்,
  பிறகு இரண்டு குடும்பங்களும் இணைவது எல்லாமே
  அருமை.
  சாயாஜி ஷிண்டே மிகவும் பிடித்த நடிகர்.

  ''புத்தகம் மூடிய மயிலிறகாக;''
  அற்புதமான கவிதை.
  ஜேசுதாஸ் குரல் வயதானதாக ஒலித்தாலும்
  ஸாதனாவோடு சேரும்போது
  கொஞ்சம் இளமை பெற்று விடுகிறதோ.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா.. ஹா..  அப்போது நெடுநாட்களுக்குப் பிறகு யேசுதாஸ் குரல் கேட்டதும் பரவசமானது.  நான் மிகவும் ரசித்த படங்களில் ஒன்று அது.

   நீக்கு
 8. மலேஷியா வாசுதேவன், கேரளத்தைச் சேர்ந்தவரா?
  புது செய்தி!!
  எத்தனை அழகான தமிழ் உச்சரிப்பு.
  உன்னதமாமன குரல். யுகேந்திரன்
  சற்றே வில்லத்தனமாகத் தெரிந்தாலும்
  நல்ல நடிப்பு.
  இத்தனை விஷயங்களும் தெரியக் கிடைத்தன இன்று.

  என் தங்கையின் கணவர் பெயரும் வாசுதேவன்.
  மலேஷியா வாசுதேவன் குழுவில்
  பாடிக் கொண்டு ,''பாடி'' அம்பத்தூர் கம்பெனி ஒன்றில்
  வேலையாகவும் இருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மலேஷியா வாசுதேவன், கேரளத்தைச் சேர்ந்தவரா?புது செய்தி!!//

   ஆம், எனக்கும் அது செய்தி!  அதனால்தான் பகிர்ந்தேன்.

   //மலேஷியா வாசுதேவன் குழுவில் பாடிக் கொண்டு ,''பாடி'' அம்பத்தூர் கம்பெனி ஒன்றில் வேலையாகவும் இருந்தார்...//

   பாடிக்கொண்டு -  அட...

   "பாடி" அம்பத்தூரில்  - ஹா..  ஹா...

   நீக்கு
 9. முதல் பாடல் கல்லூரி ஹாஸ்டலில் நான் பாடி நடந்த கலாட்டாக்களை ஏற்கனவே எழுதியிருக்கேன்.

  மற்றவற்றைப் பற்றி எழுத மனமில்லை. சூர்யா ஜோதிகாவை நினைத்தால் தேசத் த்ரோகம் என்பதுதான் கண்ணுக்கு வருகிறது. எதனால் என்று தெரியலை.

  பதிலளிநீக்கு
 10. இளவரசு எனக்குப் பிடித்த நடிகர். நல்ல திறமைசாலி

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. புல்லாங்குழல் பாடலை ரசியாதோர் உண்டா ?

  மலேஷியா மலையாளிதான் அவர்கள் காலத்தில் வாணி ஜெயராம் என்ற பாடகி தானே ஏதோ ஓரிடத்தில் தனது குரல் வளத்தால் இருந்தார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தேவகோட்டை ஜி.  வாணி ஜெயராம் பற்றி சொல்லளவும் வேண்டுமோ..

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் பகிர்வு அருமை. அந்த முதல் பாடல் அப்போதெல்லாம் கேட்காத நாளில்லை. அந்த கேசட் வீட்டிலேயே அடிக்கடி போட்டு அத்தனைப் பாடல்களும் மனப்பாடம். இனிமையான தெய்வீக பாடல்கள். மற்ற இரண்டையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. இன்று பகிர்ந்த பாடல்கள் மூன்றுமே ரசித்த, ரசிக்கும் பாடல்கள். தொடரட்டும் உங்கள் ரசனையும் பகிர்வும்.

  பதிலளிநீக்கு
 15. இன்று பகிர்ந்த பாடல்கள் மூன்றுமே ரசித்த, ரசிக்கும் பாடல்கள். தொடரட்டும் உங்கள் ரசனையும் பகிர்வும்.

  பதிலளிநீக்கு
 16. ஒரு முறை கருத்து வெளியிட்டும் அது வருவதில்லை. இரண்டாம் முறை முயற்சிக்கும் போது தான் வருகிறது. சில தளங்களில் இந்த மாதிரி பிரச்சனை இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வெங்கட்ஜி. ரொம்பப் பிரச்சனையாக இருக்கிறதுதான்.

   கூடவே இதுவும் வருகிறது ...முன்பு வந்ததா என்று தெரியவில்லை...//எதிர்காலத்தில் உங்கள் கருத்துகளை நிர்வகிக்க விரும்பினால் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்திக் கருத்து தெரிவிக்கவும். அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கருத்து தெரிவித்தால் உங்கள் கருத்தைத் திருத்தவோ நீக்கவோ முடியாது. //

   கீதா

   நீக்கு
  2. ஆம்.  கமெண்ட்ஸ் போடுவதில் பிரச்னைகள் அவ்வப்போது வருகின்றன. 

   @கீதா..  அனாமதேயராக பின்னூட்டமிட்டால் திருத்தவோ, நீக்கவோ முடியாது என்பது சரிதானே?

   நீக்கு
 17. இன்று பகிர்ந்த பாடல்கள் மூன்றுமே ரசித்த, ரசிக்கும் பாடல்கள். தொடரட்டும் உங்கள் ரசனையும் பகிர்வும்.

  பதிலளிநீக்கு
 18. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று தெரிந்தும், என்னவொரு ஐயம்...! அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா...? அதானே...!

  பதிலளிநீக்கு
 19. பாட்டை கேட்டு சொல்ல வந்ததை மறந்து விட்டேன்... "அடி போடி காதலியே" என பாடுவது சரி தானோ...? இல்லை எனக்கு மட்டும் அப்படி கேட்கிறதா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் கூட 'காதலியே' என்றே எண்ணியிருந்தேன்.  ஆனால் 'காதலிலே' என்று வந்தால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கிறது.  அதனால் அபப்டியே போட்டு விட்டேன்.

   நீக்கு
 20. எல்லாப் பாடல்களுமே கேட்டவை தான்! புல்லாங்குழல் கொடுத்த கீதங்களே! பாடலை ரசிக்காதோரும் உண்டோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

   ஆம். எல்லோரும் ரசிக்கும் பாடல் அது.

   நீக்கு
 21. மூன்றுமே கேட்டு ரசித்திருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் வழக்கம் போல் முதல் பாட்டுத் தவிர மற்ற இரண்டும் வரிகள் பார்த்து நினைவுக்கு வரவில்லை. பாடல் கேட்டுத்தான் நினைவு வந்தது.

  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் செம பாட்டு, ரசித்த பாடல். சிவரஞ்சனி ராகம்

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இந்த இரு படங்களுமே டீசண்டான படங்கள். வசந்தின் கதைகள் வித்தியாசமாக படமும் பார்க்கும்படி இருக்கும். ரிதம் ரசித்துப் பார்த்த படம். பூவெல்லாம் கேட்டுப்பார் சில சீன்கள் பார்த்த நினைவு இருக்கிறது. அதே போல பூவெல்லாம் உன் வாசம் படமும் முழுவதும் பார்த்ததில்லை இரண்டுமே பார்த்த வரையில் காட்சிகள் பிடித்து முழுவதும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்புறம் மறந்தே போன படங்கள்!

  பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அந்தப் பாட்டு "தும்பி வா தும்பக்குடத்து" பாட்டை அப்படியே பிரதிபலிக்கிறது பல இடங்களில். காபி ராகம்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "தும்பி வா தும்பக்குடத்து" பாடலின் ஒரிஜினல் ஆட்டோ ராஜா படத்தில் வரும் "சங்கத்தில் பாடாத கவிதை" பாடல். இது ஆரம்பம் கொஞ்சம் அதை ஒத்திருக்கிறது

   நீக்கு
  2. ஆமா ஸ்ரீராம் சங்கத்தில் பாடாத கவிதை....ஒரிஜினல்...

   கீதா

   நீக்கு
 23. இளவரசு மிகவும் பிடித்த நடிகர் . செம திறமை சாலி. அதுவும் குரல் மாடுலேஷன், தின்னவேலி உச்சரிப்பு செமையா இருக்கும். அவரைப் பற்றிய தகவல்கள் எனக்குப் புதுசு ஸ்ரீராம், இதுவரை அறிந்ததில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​தின்னவேலி உச்சரிப்பில் பேய் இருக்கிறாரா என்று தெரியாது. சில படங்களில் பேசி இருக்கலாம்!

   நீக்கு
  2. பயந்தே போய் விட்டேன். என்னடா இது தின்னவேலிக்கு வந்த சோதனை... ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா.... பேசி இருக்கிறாரா என்று வந்திருக்க வேண்டும்!

   நீக்கு
 24. புல்லாங்ககுழல் கொடுத்த மூங்கில்களே பாடல் அதிகமாகக்கேட்ட பாடல். டி எம் எஸ் ந் குரல் உச்சரிப்பு எல்லாமே மிகவும் பிடிக்கும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 25. மற்ற இரு பாடல்களும் கேட்டதில்லை. படங்களும் தெரியவில்லை. இப்போதுதான் கேட்டேன். இரண்டுமே நன்றாக இருக்கின்றன. இந்த இரண்டில் முதல் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் சகோதரரே

  இன்றைய இருப் படங்களைப் பற்றியும் நன்றாக விரிவாக விமர்சனம் செய்துள்ளீர்கள். இளவரசு அவர்களைப்பற்றி இது வரை நான் கேள்விப் பட்டதில்லை. ஜோதிகாவின் குறும்பு பேச்சும். நடிப்பும் அவர் படங்களில் நன்றாக இருக்கும். பாடல்கள் அருமை. முன்பு தொலைக்காட்சியில் அடிக்கடி கேட்டுள்ளேன். படங்களும் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். குறும்பான நடிப்புக்கு பெயர்போனவர். நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 27. மூன்று பாடல்களுமே இனியவை. 'புல்லாங்குழல் கொடுக்கும் மேகங்களே' பாடல் கோவில் திருவிழாக்காலங்களில் தினமும் போடும் பாடலாக இருந்து வருவது அதன் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 28. பகிர்ந்த மூன்று பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்களே! புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே மிகவும் பிடிக்கும் அடிக்கடி கேட்கும் பாடல்.
  நிறைய செய்திகள் இந்த பதிவில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!