ஞாயிறு, 6 நவம்பர், 2022

நான் பயணம் செய்த இடங்களின் படங்கள் : தாய்பே பகுதி 3 :: நெல்லைத்தமிழன்

 

(001) தாய்பே Taipei, தாய்வான் –  Taipei Zoo – கடைசிப் பகுதி 

உயிரியல் பூங்காவில் உணவுப் பகுதியும், ஆங்காங்கே தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் வெண்டிங் மெஷினும் வைத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் மிகவும் பொறுப்பானவர்கள். கண்ட இடங்களில் குப்பை போடுவதில்லை. அதற்குரிய இடத்தில் போடறாங்க. ஒரு தடவை குடை கொண்டு போகலை. சட சட என்று மழை பெய்தது. ஒரு ஷெல்டரில் தங்கினேன்.

பொதுவா நான் வெளியில் உணவு உண்பதில்லை. அவங்களுக்கும் வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் என்ற வித்தியாசம் இல்லை. ஒரு சில ஜப்பானிய ரெஸ்டாரண்டுகளில் வெஜிடேரியன் உணவு கிடைக்கும். அதெல்லாம் எனக்குச் சரிப்படாது. எனக்கு வெஜிடேரியன்னா, சாதம், சாம்பார், காய்கறிகள், தோசை வகையறா, சப்பாத்தி, பரோட்டா போன்றவை. போனால் போகுதுன்னு பிட்சாவை ஏத்துப்பேன், அபூர்வமாக.















தாய்வான் உயிரியல் பூங்காவில் நான் எடுத்த படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு தொடரில் விரைவில் சந்திப்போம்.

இந்த வாரமும் செல்லம் படம் போட்டுடலாம். பெண்ணா ஆணா என்று கண்டுபிடிக்கும் வேலை உங்களுக்கு இல்லை. ஹி ஹி ஹி.


= = = = = = = =

38 கருத்துகள்:

  1. இந்த படங்கள் எந்த வருடம் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களையும் சேர்த்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடம் அவசியமில்லை என்பது என் எண்ணம். உள்ளடக்கம், வருடத்தினால் மாறிவிடுமா என்ன? பலமுறை நான் பயணித்திருக்கிறேன். சிலமுறைகள்தாம் அதிகம் படங்கள் எடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. செம சுருக். நல்ல வேளை
    படங்கள் இருந்தனவோ ஒரு பதிவு போலும் என்ற தோற்றத்தைக் கொடுத்ததோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு பகுதியே படங்களுக்கு என ஆனதுதானே ஜீவி சார்.

      நீக்கு
    2. ஓ...
      அண்ணன் காட்டிய வழியம்மா ஞாயிறு
      படங்களால் நிறைந்ததம்மா..

      நீக்கு
    3. அண்ணன்கள் (கேஜிஎஸ், கேஜிஜி....) காட்டிய வழி.

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  4. தாய்வான் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட படங்கள் அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
  5. // மக்கள் மிகவும் பொறுப்பானவர்கள். கண்ட இடங்களில் குப்பை போடுவதில்லை.//

    சிங்கப்பூரில் கூட இப்படித்தான்..

    நம்ம ஊர் ஜனங்களுக்கு சொல்லித் தர வேண்டியதே இல்லை...

    சுத்தம் & பராமரிப்பு விஷயத்தில் உலகுக்கே பாடம் எடுப்பார்கள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் துரை செல்வராஜு சார்... ஆனால் சிங்கப்பூரில் இந்த குணம் அரசினால் வரவழைக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் சட்டங்கள், ஃபைன் என்று ஆரம்பித்ததனால் பழக்கம் வழிவழியாக வந்துவிட்டது.

      இன்றும் டாக்சி டிரைவர்கள் ஏமாற்றிவிட்டனர் எனத் தெரிந்தால், உடனே புகார் அளித்தால், கடுமையான தண்டனை சிங்கப்பூரில் வழங்கப்படும்.

      நம்ம ஊரின் நிலைமையைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.

      நீக்கு
  6. // சுத்தம் & பராமரிப்பு விஷயத்தில் உலகுக்கே பாடம் எடுப்பார்கள்!...//

    சமீபத்திய
    மழை நீர் வடிகால் , சாக்கடைக் குழாய்கள் மிகச்சிறந்த உதாரணங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழைநீர் வடிகாலுக்காக அமைக்கப்பட்ட, கட்டப்பட்டவற்றில் ஏகப்பட்டது ஸ்வாஹாவாகியிருந்தாலும், அவற்றில் பிளாஸ்டிக் குப்பைகளைப் போடுவது என்று நம் மக்கள் நடந்துகொள்வதற்கும் அளவில்லை. இருந்தாலும் கடந்த பத்து வருடங்களாக சென்னையில் இந்த விஷயத்தில் முன்னேற்றம் இருக்கிறது.

      நீக்கு
    2. இங்க வளாகத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓரளவு நல்ல நிலையில் உள்ளவர்கள்தாம் வாழ்கிறார்கள் (ஒரு flat சுமார் 2.3 C) ஆனால் பலர், அவர்களுக்கு மேல் இருப்பவர்கள் (எந்த flat என்பது தெரியாது) குட்காவைக் குதப்பித் துப்புவதால், கீழ் வீடுகளின் கண்ணாடி சன்னல்களில்/பால்கனி கண்ணாடிகளில் கறை படிகிறது என்று கம்ப்ளெயிண்ட் பண்ணுகிறார்கள். இதற்கு முன்பு shaftல் மேல் வீடுகளிலிருந்து பெண்கள் சம்பந்தமான குப்பைகளைத் தள்ளிவிடுகிறார்கள் என்று கம்ப்ளெயிண்ட் (வாட்சப் குழுமத்தில்தான்). அதனால் இது இந்தியர்களின் குணம்.

      லண்டனில், சரவணபவன் இருக்கும் பகுதியில், முன்பு 90 சதம் வெள்ளையர்கள் 10 சதம் ஆசியர்கள் என்றிருந்தார்களாம். இவர்கள் குத்காவைத் துப்பும் வேகத்தில் அசூயைப்பட்டு மெதுமெதுவாக வெள்ளையர்கள் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிட்டார்களாம். நான் சென்ற (5 வருடங்களுக்கு முன்) போது, வெள்ளையர்கள் 30, ஆசியர்கள் 70 சதம் என்று ஆகிவிட்டதாம். அதனால் பொது இடங்களைச் சுத்தமில்லாமல் வைத்துக்கொள்வது இந்தியர்கள் குணம். பொது இடங்களில் துப்புவதும், பைப் விடுவதும் எல்லா மாநிலத்திலும் உள்ள இந்தியர்கள் குணம்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நேற்று சனிக்கிழமை விடுமுறை...

    இன்று எப்படியும் பெருமாள் கோயில் தரிசன படங்கள் இருக்கும் என்று வந்தால் - ஏமாற்றமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து கோவில் படங்களையே வெளியிட்டுவந்தால் சலிப்பாக இருக்காது? அதனால் அவ்வப்போது இடையில் வேறு தலைப்புகளில் படம் வரும். இன்னொன்று துரை செல்வராஜு சார்.. எல்லாக் கோயில்களிலும் சிற்பங்கள் வரிசை நிறைய இருப்பதில்லை. அதற்காக இணையத்திலிருந்து படங்களைக் கோர்ப்பதிலும் இஷ்டமில்லை. நான் 100க்கும் மேற்பட்ட திவ்யதேசக் கோவில்களைச் சேவித்திருக்கிறேன். பல அபிமான தலங்களும். இது தவிர, வரலாற்று இடங்களும், பிரயாணத்தின்போது எடுத்த படங்களும் உண்டு.

      நீக்கு
  9. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    உயிரியல் பூங்காவின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அவற்றிற்கு பொருத்தமாக நீங்கள் தந்த வசனங்களையும் படித்து ரசித்தேன்.

    வரிக்குதிரைக்கு வரிகள் சரியான இடைவெளியோடு இறைவன் படைத்ததிருப்பதைப் போன்று, ஒட்டகச்சிவிங்கிக்கும் கட்டங்களின் டிசைன் அழகாக அமைந்திருப்பதை நானும் ரசிப்பேன். இறைவன் படைப்பே என்றும் அழகுதான்.

    பூங்காவை என்றில்லை அந்தந்த ஊரரையே சுத்தமாக வைத்திருக்கும் மக்களை நாம் பாராட்ட வேண்டும்.ஒவ்வொரு ஊர்களிலும் வாழும் மக்களின் ஒத்துழைப்பும், சிந்தனைகளும் நன்றாக இருந்தால், அரசாங்கத்தை அவ்வளவாக குறை சொல்ல வேண்டாம்.

    யானை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. ஆனால் இந்த ஆப்பிரிக்க யானை மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தும். மயிலும் அழகாக உள்ளது. தோகை நல்ல பெரிதாக உள்ளது. பசுமை மிகுந்த இடங்களும் பறவைகளும் காண மனதிற்கு நன்றாக உள்ளது. அத்தனைப் படங்களையும் அழகாக எடுத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

    செல்லம் அழகான கவுன் போட்டுள்ளதே..! பெண்ணாகத்தான் இருக்கும். முகத்திலும் அதன் (B)பாவம் தெரிகிறது. :)))

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்வானில் அரசாங்கமும், மக்களும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போது நகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் விதம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. உதாரணமாக, காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை, முக்கியமான ரோடுகளின் பாதசாரிகள் பாதையின் ஒரு பகுதியில் நிறைய கடைகள் முளைக்கும். 10 மணி ஆகிவிட்டால், அது இருந்த இடமே தெரியாமல் சுத்தமாக ஆகிவிடும். மாலையிலும் இதுபோன்ற கடைகள் முளைக்கும். கடைகளில் சுத்தமான கையேந்திபவன்கள், வளையல், பர்ஸ், குடை என்று பலவிதக் கடைகள் உண்டு. இதனால், மக்களுக்கும் உபயோகம், அரசாங்கத்திற்கும் வருவாய், நகரின் அழகும் பாதிக்கப்படாது. நம் பாண்டிபஜார் போன்றவற்றைக் கண் முன் கொண்டுவாருங்கள். கடைகளுக்குப் போகத்தான் மனிதர்கள் நடமாட என இருந்த நிலைமை. இப்போதும் கையேந்திபவன்கள் இஷ்டப்படி முளைத்திருக்கின்றன, நகரின் பல இடங்களில்.

      பெங்களூரில் ஓரளவு இவை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. யானைக்குள்ள சிறப்பாக நான் படித்தது, 1. காலில் விரல்கள் இல்ல 2. கொம்பு இல்லை ஆனால் வாயிலிருந்து வந்த கொம்பு உண்டு என்பது போன்று ஆறு வித்தியாசங்கள். யானை, கடல், இரவில் வானம் இவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

      நீக்கு
  10. இன்றைய புகைப்படங்களை இரசிப்பதற்காக கணினியை திறந்தேன். வாசகங்கள் அருமை தமிழரே... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி.... நீங்கள் வெளிநாட்டில் பிரயாணம் செய்தபோது எந்த மாதிரியான படங்கள் எடுப்பீர்கள்? அங்கிருக்கும் அழகிகளையா, நிலங்களையா, பேருந்து போன்ற வசதிகளையா, முக்கிய இடங்களையா அல்லது உங்களுக்கு வித்தியாசம் என்று பட்டவைகளையா?

      நீக்கு
    2. புதுமையான காட்சிகளை கண்டிப்பாக அதையும் வித்தியாசமான கோணத்தில் பார்த்து எடுப்பேன்.

      துபாய், அல்அய்ன் ஜூவில் படங்கள் எடுத்து இருக்கிறேன்.
      அரபு நாட்டில் பெண்களை எப்படி புகைப்படம் எடுக்க முடியும் ?

      நீக்கு
    3. அரபுப் பெண்களைப் படம் பிடித்தால் உள்ள போகவேண்டியதுதான். அதில் சந்தேகமில்லை. நீங்கள் யூரோப் சென்றிருந்தீர்கள் என்று சொன்னதால் கேட்டேன். துபாயிலும் ஜுமைரா பீச்சில் சில படங்களை நான் எடுத்திருக்கிறேன் (அரபிகள் அல்ல)

      நீக்கு
    4. வெளி நாடுகள் செல்லும் பொழுது எந்த மாதிரி படங்களை எடுப்போமா?.. இது என்ன கேள்வி? பெரும்பாலும் இயற்கை காட்சிகளின் பின்னணியில் குடும்ப உறுப்பினர்களை நிற்க வைத்து, கு.உ. கூட வரவில்லை என்றால் இ. காட்சிகள், இ. காட்சிகளின் பின்ன்னியில் நாம் என்று தான் பெரும்பாலும் என்று அமைகின்றன.
      அன்னிய பெண்கள் மனதில் நுழையலாமே தவிர கேமராவில் நுழைய தடா தான் பெரும்பாலும். இப்படியே நாம் பழக்கப் பட்டிருக்கிறோம் என்பது...
      என்ன சொல்வது?
      ஏதாவது வார்த்தைகளைப் போட்டு சொல்ல வந்ததை முடித்து வையுங்கள் நெல்லை.

      நீக்கு
    5. ஜீவி சார்...உண்மையைச் சொல்லணும்னா, நான் முடிந்தவரை முக்கியமான நிகழ்வுகள், நான் நிற்கும்/காரை நிறுத்தும் இடம் என்று பெரும்பாலானவற்றைப் புகைப்படம் எடுத்துவிடுவேன். என் புகைப்படக் கலெக்‌ஷனைப் பார்த்தால், நான் அன்று எங்கு எங்கு சென்றிருந்தேன் என்பதெல்லாம் தெரிந்துவிடும். ஆனால் பெரும்பாலும் படங்கள் கண்ணியமாகத்தான் இருக்கும்.

      நான் அல்லது குடும்ப உறுப்பினர்களை நிறுத்தி சிலப் புகைப்படங்களை எடுத்திருப்பதால் அதனைப் பகிரும் வாய்ப்பு போய்விடும். இருந்தாலும் நான் இருக்கும் ஒரு புகைப்படத்தை இங்கு வெளியிடக் கொடுத்திருக்கிறேன்.

      எந்த நிகழ்வு என் கண்ணைக் கவர்கிறதோ உடனே அதனைப் புகைப்படம் எடுத்துவிடுவேன். உதாரணமா...வெளிநாட்டில் இரயில் நிலையங்களில் வாத்தியம் வாசித்து உதவி யாசிப்பவர், பொது இடத்தில் ஏதேனும் வித்தியாசமாக விற்பவர்கள், ஏன்... லண்டன் பிரிட்ஜில், மூணு சீட்டு-வெளிநாட்டினைச் சேர்ந்தவர்கள்தாம் ஆடினதையும், ஹீத்ரூ ஏர்போர்ட்டில், ஒரு ஆண் இளைஞனும் இன்னொரு ஆணும்-கல்லூரியில் சேர்ந்திருப்பவர்கள் போன்ற தோற்றம் முத்தம் கொடுத்துக்கொண்டதை, அப்போது எனக்கு அதிசயமாகத் தெரிந்ததால், தூரத்திலிருந்து ஒரு போட்டோ, இளனியை சரக் சரக் என்று வெட்டி அதிலிருந்து இளரீரை பெரிய அண்டாவில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞியை-பிலிப்பைன்ஸில் என்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.

      நீக்கு
    6. இதெல்லாமே இயற்கை இல்லேனா சுற்றுச் சூழல் சமாசாரத்தில் அடங்கும். நான் குறிப்பிட்டது நீங்க சொன்ன அந்த அழகிகள் பற்றி.

      நீக்கு
    7. இவங்க (எபி) கல்கி மாதிரி... நடிகைகள் படம் வெளியிடறதையே பெரிய சலுகையா நினைக்கறாங்க. இதுல நான் எடுத்த போட்டோக்கள் அனுப்புனா (ரசித்துப் பார்த்துவிட்டு) எபி வாசகர்கள் ஏத்துக்க மாட்டாங்க என்று சொல்லிடுவாங்க.

      நீக்கு
  11. தாய்மாமன் உயிரியல் பூங்கா படங்கள் அழகு.
    மிருகங்கள் , இயற்கை காட்சிகள், பூங்காக்கள் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  12. எல்லாப்படங்களையும் காலம்பரவே பார்த்து ரசித்துவிட்டேன். எல்லாம் பேசறாப்போல் எழுதினது கேஜிஜியா, ஸ்ரீராமா? நெல்லையா? ஆப்பிரிக்க யானைகளின் காதுகளைப் பார்த்தாலே தெரிஞ்சுடுமே! யானையே அழகுன்னாலும் இந்திய யானையின் அழகும், கம்பீரமும் தனி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய யானை..இறைவனைச் சுமப்பதாலும் நமக்கு அதன்மீது அதிக அன்பு கீசா மேடம்.... கேப்ஷன்கள் எழுதியது நான்.

      நீக்கு
    2. படங்கள் எல்லாம் மிகவும் அழகு மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பதிவு அன்புடன்

      நீக்கு
  13. தாய்வான் உயிரியல் பூங்காவில் எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் வாசகங்கள் நன்றாக இருக்கிறது நெல்லை. குறிப்பாக இரண்டு படங்களை இணைத்து சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.
    செல்லம் படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!