மறுபடியும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு பாடல். இரண்டே சரணங்கள். அவையும் சிறிய சரணங்கள். இனிமையான பாடல். யார் எழுதியது, யார் இசை என்றெல்லாம் என்னைக் கேட்கக் கூடாது!!
முத்துவேல் ரத்தினவேல் முருகன் கை வேலாகும்
முத்தமிழில் புகழ் பாடும் முருகன் பேர் அழகாகும்
முருகன் பேர் அழகாகும்
தித்திக்கும் தேன் அமுதம் முருகன் வாய் மொழியாகும்
கண்மணியில் கலந்திருக்கும் முருகன் அருள் ஒளியாகும்
நினைவில் வந்து ஆடுவதும் முருகன் ஏறு மயிலாகும்
கனவில் வந்து ஆடுவதும் சேவல் எனும் கொடியாகும்
ஆசை மனதில் பாடுவதும் முருகன் ஆறு முகமாகும்
அன்பில் இன்பம் தேடுவதும் முருகன் என்ற பழமாகும்
முருகன் என்ற பழமாகும்
===============================================================================================
1975 ல் வெளியான படம் 'வாழ்ந்து காட்டுகிறேன். முத்துராமன்-சுஜாதா நடித்துள்ள படத்தில் வில்லியாக பத்மப்ரியா! அவர் பாடும் பாடலாகத்தான் இன்றைய வாணி ஜெயராம் பாடல்.
எஸ் எஸ் தென்னரசுவின் கதைக்கு மகேந்திரன் கதை வசனம் எழுத, கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை. இந்தப் பாடல் பத்மப்ரியா பாடும்போது வாணிஜெயராம் குரலில் மாதவிக்கு ஆதரவாகவும், சுஜாதா பாடும்போது பி சுசீலா குரலில் கண்ணகிக்கு ஆதரவாகவும் எழுதி இருப்பார் கண்ணதாசன்.
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
மாதவி ஆடவந்தாள் – ஒரு
மன்னவன் கூட வந்தான் – அவர்
பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்பே
கண்ணகி வாழவந்தாள் அதையும்
மாதவி காண வந்தாள்
.
(காவிரி...)
.
திருவும் மனமும் சேந்ததுதானே
திருமணம் என்றுரைப்போம் - அங்கு
திரு வேறாகவும் மனம் வேறாகவும்
இருவரும் தனித்திருந்தார்
மாலையணிந்தவள் சூரியன் போலே
காய்கின்ற குணமும் உண்டு -ஆனால்
மயக்கத்தில் வந்தவள் வெண்மதிபோலே
மனதினில் குளிர்வதுண்டு
மனதினில் குளிர்வதுண்டு (காவிரி)
நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம்
நல்லிசை பயின்றதுண்டு
நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம்
நல்லிசை பயின்றதுண்டு
அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால்
இருவரும் பிரிவதுண்டு
ஆயிரம் காலத்து தென்றலைப் போலே
வாழிய குலமகளே - உன்னை
அருகினில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பாள்
அழகிய கலைமகளே
அழகிய கலைமகளே
காவிரி நகரினில்
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமே வாழ இறைவன் அருள் புரிவார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குமுருகன் பாடல் மிகவும் பிடித்த பாடல். மிக அருமையான பாடல்.
பதிலளிநீக்குபாடலை கேட்கும் போதே மனதில் அமைதி வந்து விடும்.
பகிர்வுக்கு நன்றி.
அதுவும் சூலமங்கலம் குரல் ஸ்பெஷல்.
நீக்குஇரண்டும் சிறப்பான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஆம். நன்றி ஜி,
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளியின் இரு பாடல்களும் அருமை. முதல் பக்திப்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். சூலமங்கலம் சகோதரிகள் இணைந்து பாடும் பாடல்களில் இதுவும் புகழ் பெற்ற பாடல்.
இரண்டாவதாக இடம் பெற்ற திரைப்பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இருவர் பாடும் பாடலாக வாணொலியில் இடம் பெற்று வந்திருக்கிறது. படம் பார்த்த நினைவில்லை. இன்று இரு பாடல்களையும் பிறகு மீண்டும் கேட்டு ரசிக்கிறேன். நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து தரும் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா... இது ஒருவர் பாடும் பாடல்தான்? இருவர் பாடும் பாடலாக என்றாலும் சுசீலாம்மா தனியாக முழுதாக இந்தப் பாடலை பாடுவார். வானிம்மா தனியாக இந்தப் பாடலைப் பாடி இருப்பார்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குபாடலை கேட்டு, பார்த்து புரிந்து கொண்டேன். கண்ணகி மாதவி என்றதும் இருவருக்காக பி. சுசீலா அவர்களும், வாணி ஜெயராம் அவர்களும் இணைந்து பாடும் பாடல் என நினைத்து விட்டேன். காணொளியில் புரிந்து கொண்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாணிஜெயராம் பாடலும் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்டபாடல். பாடல் வரிகளை கேட்காமல் பாடல் இனிமையை ரசித்த காலம்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்.
ஆமாம், ஆனால் நம்மையும் அறியாமல் சில வரிகள் மனதில் ஒட்டிக்கொண்டு விடும்!
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குசீர்காழி அவர்களுக்குப் பாட்டெழுத நெல்லை அருள்மணி, உளுந்தூர்பேட்டை சண்முகம், இசையமைக்க டி ஆர். பாப்பா, புகழேந்தி...
பதிலளிநீக்குடி.எம்.எஸ் அவர்களுக்குப் பாட்டெழுத தமிழ்நம்பி இசை - பல சமயங்களில் அவரே...
சூல மங்கலம் சகோதரிகளுக்குப் பாட்டெழுத பூவை செங்குட்டுவன் இசைக்கு குன்னக்குடியார்..
தவிர பல பாடல்களைத் தாங்களே இசையமைத்துப் பாடி விடுவர்...
அன்றைக்கு இப்படியான விவரங்களுடன் பாட்டுப் புத்தகங்கள் திருவிழாக்களில் கிடைக்கும்...
ஆமாம். ஆனால் பகுதி பாடல்களுக்கு புத்தகம் கிடைத்ததா என்ன?
நீக்குயு டியூபில் இஷ்டத்துக்கு பெயர் சொல்கிறார்கள். நம்பி சொல்ல முடியாது!
பகுதி பாடல்களுக்கு = பக்தி என்று படிக்கவும்!!!
நீக்குசூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல்களுள் இன்றைய பாடலும் சிறப்புடையது..
பதிலளிநீக்குஎல்லா பாடல்களுமே ஒதுக்க முடியாத தன்மை உடையவை!
நீக்குவாழ்ந்து காட்டுகிறேன்...
பதிலளிநீக்குபடம் பார்த்திருக்கின்றேன்..
கவியரசரின் கவிநயம் மிக்க பாடல்களுள் இதுவும் ஒன்று..
ஆமாம். இது வில்லி பாடும் பாட்டு. கதாநாயகிக்கு இதே பாடலில் வரிகள் மாறும்!
நீக்குஅன்றைக்கு இப்படி இரு நிலைகளைக் காட்டும் பாடல்கள் நிறையவே வந்தன... எழுதுவதற்கும் வித்தகர்கள் பலர் இருந்தார்கள்..
பதிலளிநீக்குஇன்றைக்கோ பரிதாபம்...
கவிநயமாக ஒரு பாட்டையும் காணோம்.. எழுதுவதற்கும்
எவரும் இல்லை!...
ஆம். நம் மனம் அன்றைய திறமைகளில் தங்கி விட்டது.
நீக்குகார்க்கியின் சில பாடல்கள் நன்றாய் இருக்கின்றன என்று சொன்னால் ஏற்பீர்களா?
// நமது மனம் அன்றைய திறமைகளில் தங்கித் தான் விட்டது... //
நீக்குஅது யார் கார்க்கி?..
அவர் ஒரு பாடலாசிரியர். இன்னொரு அறிமுகம் உண்டு! டயமண்டுவின் புதல்வர்!
நீக்குடயமண்டுவின் புதல்வரா?..
நீக்குஆமாம். மதன் கார்க்கி. அவர் ஒரு பொறியியல் பட்டதாரி.. வசனங்களும் நன்றாய் எழுதுவார்.
நீக்குநான் அறிந்ததில்லை..
நீக்கு// நமது மனம் அன்றைய திறமைகளில் தங்கித் தான் விட்டது.. //
பதிலளிநீக்குஅது யார் கார்க்கி?..
வைரமுத்துவின் பிள்ளைகளில் ஒருவர். இவரிடம் தான் வைரமுத்துவின் மனைவி பொன்மணி இருக்கார்னு நினைக்கிறேன்.
நீக்குபக்திப் பாடல்களையும் தொகுத்து தனிப் புத்தகமாக திருவிழாக் காலங்களில் கடை விரித்திருப்பார்கள்...
பதிலளிநீக்குநான் வாங்கி இருக்கிறேன்... வீரமணியின் ஐயப்பன் பாடல்கள் என்றே புத்தகம் வந்தது..
தம்புச் செட்டித் தெருவில் இருந்து ஸ்ரீமகள் பதிப்பகம் என்ற பெயரில் வெளிவரும் புத்தகங்கள் சில பத்துப் பைசாக்களில் கிடைக்கும்..
முப்பது பைசா என்றாலும் அன்றைக்கு அது பெரிய காசு..
நீங்கள் சொன்னதும் எனக்கும் நினைவுக்கு வருகிறது.
நீக்குமுப்பது பைசாவிற்குள் அன்றைக்கு காலை டிபனை முடித்து விடலாமே!..
நீக்குஅதப் பற்றியும் எழுதுங்களேன்...
முன்பே ஓரிருமுறை எழுதி இருக்கிறேனே...
நீக்கு// இது வில்லி பாடும் பாட்டு...//
பதிலளிநீக்குவில்லி என்பது பொருள் பொதிந்த தமிழ் வார்த்தை..
வில்லன் என்பதற்கு பெண்பால் ஆகி விட்டது..
இதன் அர்த்தமே வேறு!..
வில்லை வைத்திருப்பவன் வில்லன்.. தெரியுமே... சுருளி சொல்லி இருக்கிறார்! வில்லியும் அதே போலதானோ! வில் பவர் இருப்பவள்?!!
நீக்குசுருளியிடம்
பதிலளிநீக்குகுமரிமுத்து அளவுக்கு எதிர் பார்க்காதீர்கள்!....
( கில்லர் ஜி அவர்களின் தளத்தில் சமீபத்திய காணொளி ஒன்று இருக்கின்றது..)
குமரிமுத்து நடித்து அப்படி தமாஷ் காட்சி எதுவும் நான் பார்த்ததில்லை. சுருளி ஹிட்லர் உமாநாத்தில் சொல்வார்!
நீக்குகுமரி முத்துவின் திரைத் தமாஷ்
நீக்குஅல்ல...
தனிப்பட்டதாக
குமரி முத்து அவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பற்றிப் பேசுகின்ற காணொளி!/.
திரு.குமரிமுத்து அவர்களின் நகைச்சுவை என்பது அவரது வினோதமான சிரிப்பு மட்டுமே...
நீக்குஅவரிடம் வடிவேலு போன்றவர்களின் திறமை இல்லையா... அல்லது அதற்கான வாய்ப்புகள் அமையவில்லையா ? என்பது தெரியவில்லை.
அதற்கான வாய்ப்புகள் அமையவில்லையா?..
நீக்குவகுத்தான் வகுத்த வகை யல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது..
அவருக்கான விதி அவ்வளவு தான்!..
வில்லை எடுத்தவன் வில்லன் என்கிற வார்த்தையிலிருந்து தொடங்கி நான் சொன்னது காமெடி மட்டுமே என்பதை புரிய வைக்க பெரும் முயற்சி செய்தேன். விழலுக்கு இறைத்த நீர்! குமரி முத்துவின் பேச்சுகளை சில வருடங்களுக்கு முன்னரே கேட்டிருக்கிறேன் என்பதையும் தேவகோட்டையார் தளத்திலேயே சொல்லி இருந்தேன்! அவரை நான் எந்த விதத்திலும் குறை கூறவில்லை என்பதை நேரிடையான வார்த்தைகளில் சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன்!
நீக்குஇன்றைய இரண்டு பாடல்களும் அருமையானவை.
பதிலளிநீக்குவெள்ளி நாளில் பக்திப் பாடல் பகிர்வு சிறப்பு.
முதலாவது சில தடவை கேட்டிருக்கிறேன்.
இரண்டு பாடல்களுமே நன்று. பகிர்வுக்கு நன்றி.
நன்றி மாதேவி.
நீக்குமுத்துவேல் ரத்தின வேல் நிறைய தடவை கேட்டதுண்டு. ரொம்பப் பிடித்த பாடல்...
பதிலளிநீக்குபல்லவி, அனுபல்லவி, சரணம் அவ்வளவுதான்
அருமையான பாடல்
கீதா
ஆமாம். நன்றி கீதா.
நீக்குஇர்ண்டாவது பாடல் இடம் பெற்றத் திரைப்படம் எதுவும் தெரியாது ஸ்ரீராம். ஆனால் பாடல் கேட்டதுண்டு நிறைய. வரிகளைப் பார்த்ததும் டக்கென்று மெட்டு பிடிபடவில்லை கேட்டதும் அட இந்தப்பாட்டு நிறைய கேட்டிருக்கோமே என்றது மனம்.!!!
பதிலளிநீக்குஅருமையான பாடல். ரசித்த பாடல்.
கீதா
ஆம். நன்றி கீதா.
நீக்குகாவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
பதிலளிநீக்குமாதவி ஆடவந்தாள் – ஒரு
மன்னவன் கூட வந்தான் – அவர்
பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்பே
கண்ணகி வாழவந்தாள் அதையும்
மாதவி காண வந்தாள் //
கஷ்டம் .. கஷ்டம்!
தன் சூழ்நிலையை அவள் விளங்குகிறாள்.
நீக்குவில்லி வேடம்.
ஐயோ மறுபடி வில்லி என்று சொல்லி விட்டேன்..
கண்ணதாசன் ஸார். ;))
பதிலளிநீக்கு:))
நீக்கு