சம்பு சாஸ்திரியைத் தெரியுமா உங்களுக்கு. உங்களில் நிறைய பேருக்கு தெரிந்தவர்தான். விவரம் சொன்னால் ஞாபகத்துக்கு வரும்.
நெடுங்கரை கிராமத்து அக்ராஹாரத்தில் மிராசுதார் அந்தஸ்தில் இருந்தவர்.. நன்செய் புன்செய் நிலங்கள், சொந்த வீடு, மாடுகள் என்று வாழ்ந்த சம்பு சாஸ்திரிகள் அக்ராஹாரத்தில் நாள் கிழமைகளில் பஜனைகள், பூஜைகள் செய்வார். அதற்கு வரும் அக்ராஹாரத்து ஜனங்கள் பெரும்பாலும் அவர் அளிக்கும் ப்ரசாதத்துக்காகத்தான் வந்தார்கள். இவர் சாதி வேறுபாடுகள் மனதில் வைத்துக் கொள்ளாதவர். மிக நல்ல மனிதர். அங்கிருந்த சிலர் அப்படி இல்லை.திருமணமாகி கணவன் வீடு செல்லாமல் இருந்த சாஸ்திரியின் தங்கை ஒருநாள் திடீரென அஸ்திராயப்பட் ஆக, ஓடிப்போய்விட்டாள் என்று அக்ராஹாரத்தில் அவர் எதிரிகள் சொல்லி அவரைப் புண்படுத்துவார்கள். தங்கை மீது பெரும் பாசம் கொண்டவர் சாஸ்திரி. அவர் அவள் மகாமகக் குளத்தில் மூழ்கி இறந்து விட்டாள் என்பார்.
எதுவுமே காரணத்தோடுதான் நடக்கிறது என்று நம்புபவர் சம்பு சாஸ்திரி. அம்பிகையின் கட்டளை இல்லாமல் எதுவும் நடைபெறுவதில்லை என்று நம்புபவர். தன் மனைவி பாக்கியம் இறந்தவுடன் குழந்தை சாவித்ரிக்காக வேண்டி உறவினர் வார்த்தைகளை, அம்பிகையின் குரலாய்க் கேட்டு அம்பிகையின் ஆணை என்று மங்களத்தை மணக்கிறார். சித்தி கொடுமை அரங்கேறுகிறது. இவருக்கும் சுகமில்லை, நிம்மதி இல்லை. ஆனால் அதை அவர் குறையாக கருதுவதில்லை. மங்களத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவார். அதுதான் சாஸ்திரி.
இந்தக் கொடுமைகளிலிருந்து சீக்கிரம் மகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டி, அலைந்து திரிந்து ஒரு B A வரனைப் பிடித்து ஊர் திரும்புகிறார். பொறாமை கொண்ட அக்ராஹாரத்து தீக்ஷிதர், சாமா, முத்துசாமி அய்யர் உள்ளிட்டவர்கள் காரியத்தைக் கெடுக்கப் பார்த்தாலும் திருமணம் நடக்கிறது. மணமகன் ஸ்ரீதரனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. சம்பந்தி தங்கம்மாள் பணப் பேய்.
ஒரு பெருமழையில் வீடுகளிழந்து தவிக்கும் சேரிவாழ் ஜனங்களுக்கு தங்கள் மாட்டுக்கொட்டகையில் இடம் கொடுத்து பாதுகாத்ததற்கு சாதிப்பிரஷ்டம் செய்யப்படுகிறார். இதனாலும், மாப்பிள்ளையின் விருப்பமில்லாத்தன்மையாலும் சம்பந்தி வீட்டிலிருந்து மகளை பலவருடங்கள் கழித்தே அழைத்துக் கொள்கிறார்கள். வெள்ளத்தைத் தொடர்ந்து ஊரில் பெரும் பஞ்சம். இவர் நிலத்தில் வெள்ளம் காரணமாக ஒதுங்கிய மணல் யாவும் சேர்ந்து விட நிலம் பாழ். கடவுளின் தண்டனை என்று அக்ராஹாரம் கொக்கரிக்க, அம்பிகையின் தீர்மானம் என்று சாஸ்திரி அதை ஏற்கிறார். சாவித்ரியை அழைத்துச் செல்ல வந்திருக்கும் அவள் மாமியார் கடந்த தீபாவளிக்கும், இப்போது அழைத்துச் செல்வதற்கும் எக்ஸ்ட்ரா பேமெண்ட் வாங்குகிறார். இருக்கும் நிலத்தை விற்று சமாளிக்கிறார் சாஸ்திரி. அதில் வேலை பார்க்கும் பட்டிக்காரன் நல்லானுக்குக் கூட இதனால் வருத்தம். ஊரை விட்டு வெளியேறுகிறான். மங்களத்துக்கு வருத்தம் இல்லாமல் இருக்குமா? சாவித்ரிக்கு இந்த விவரங்கள் தெரியாது. கல்யாணச் செலவில் கடனாளியாக சாஸ்திரி ஊரை விட்டு வெளியேறி பிழைப்பு தேடி தனியாக சென்னை வருகிறார். வேலை எதுவும் கிடைக்காத வெறுப்பில் சந்நியாசியாய் போகும் எண்ணத்தில் இருப்பவர் கையில் ஒரு அனாதைக் குழந்தை மாட்ட, அதற்காக வாழத் தொடங்கிகிறார். நெடுங்கரை பட்டிக்காரன் நல்லான் உதவி செய்கிறான்.
பம்பாயிலிருந்து சென்னை வந்து தங்கும் பணக்காரி இவர் வளர்க்கும் குழந்தையை தான் வளர்ப்பதற்கு கவர்ந்து கொள்கிறாள். குழந்தை பணத்துக்கு மயங்கி அவளுடன் சென்று விட்டதில் சாஸ்திரிக்கு உள்ளார்ந்த, வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வருத்தம். மனம் புண்பட்டு அம்பிகையிடம் அரற்றுகிறார். பந்த பாசங்களைத் துறந்து விட்டதாய் தான் நினைத்தது தவறு என்று உணர்கிறார்.
மகள் சாவித்ரி ஆயிரம் கனவுகளோடு கணவனைக் காண கல்கத்தா செல்பவளுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது. அன்பில்லாத கணவன் ஒரு சட்டைக்காரியிடம் மயங்கி கிடக்கிறான். மாமியார் கொடுமையை பரிபூரணமாக அனுபவிக்கிறாள். அவள் படும் அவஸ்தையைக் கண்டு அவளை ஊருக்கு அனுப்பிக் காப்பாற்ற முனைகிறார் மாமனார்.
கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாய் அந்நியருடன் தமிழ்நாடு வரும் சாவித்ரி நெடுங்கரையில் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு கலக்கமுறுகிறாள். பயணத்தில் அவள் கொண்டுவந்த பெட்டியையும் ஒரு அம்மாள் ஆட்டையைப் போட்டு விடுகிறாள். ஊரில் விசாரிக்கையில் நிலங்களை எல்லாம் விற்று விட்ட காரணத்தாலும் பஞ்சம் காரணமாகவும் ஊரே அவஸ்தைப்பட்ட நிலையில் சாஸ்திரியும் ஊரை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் எங்கு என்று தெரியாது என்று அறிந்து சென்னை வந்து அப்பாவைத் தேடி அலைந்து தோல்வியுற்று மயங்கி விழுபவளை சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்க பெண் குழந்தை பிறக்கிறது. அப்புறம் வேலை தேடிச் செல்பவள் அதுவும் கிடைக்காமல் போக தற்கொலைக்குச் செல்கிறாள்.
பணக்காரியிடமிருந்து அவள் அறியாமல் வெளியே வந்து விடும் குழந்தை சாருவும், விரக்தியில் நல்லானும் அறியாமல் (தெரிந்தால் அவன் தடுப்பான்) ஊரை வீட்டுக் கிளம்பும் உத்தேசத்துடன் இருந்த சாஸ்திரியும் இணைகிறார்கள். இருவரும் ஊர் ஊராய் சென்று தேசபக்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகையில்தான் மங்களத்தின் கடைசி நாட்கள் பற்றி அறிந்து வந்து அவளைக் கடைத்தேற்றுகிறார்கள்.
கொடுமை புரிந்த சித்தி கடைசிக் காலத்தில் மரணப்படுக்கையில் திருந்தி உயிர் விடுகிறாள். கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை, சாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது போன்ற இவர்கள் பிரச்சாரத்தினால் ஊரில் நிறைய திருந்துகிறார்களாம். இவர்களும் புகழ் பெறுகிறார்கள்.
ஒரு பேங்க் ஃபோர்ஜரியில் கைதாகி சென்னைக்கு கொண்டுவரப்படும் சாவித்ரியின் கணவன் ஸ்ரீதரனை பணக்காரி காப்பாற்றுகிறாள். அவன் இவளைத் தன் மனைவி சாவித்ரி என்று அடையாளம் காண்கிறான். சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கிறான். இவள் மறுக்கிறாள்.
வழக்கு நீதிமன்றம் செல்கிறது. ஏடாகூட கேள்விகள். சாட்சி சொல்ல சாஸ்திரிக்கு சம்மன் செல்கிறது. அப்புறம் வரும் திருப்பங்கள் ஓரளவு எதிர்பார்த்தாலும் சுவாரஸ்யமான திருப்பங்களே. வரும் திருப்பத்தை 'சட்டபூர்வமாக' மக்கள் ஏற்கவேண்டும் என்று கதாசிரியர் விரும்பி இருக்கிறார். எனவே எல்லாவற்றையும் சட்டத்தின் வாயிலாகவே சொல்லக் செய்கிறார். நீதிபதியே விரும்பினாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக அந்தக் கால சட்டங்கள் இல்லை என்று நீதிபதியே சொல்கிறார். ஆசிரியர் கடைசி கட்டத்தில் பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தையும் உள்ளே கொண்டு வருகிறார். கதாசிரியர் காந்திஜியின் பெரும் ஆதரவாளராக இருக்கிறார். அவரை மகா புருஷனாகக் காண்கிறார்.
பாரதியார், நேதாஜி உள்ளிட்டோரை சற்றே இரண்டாம் பட்சமாக வைத்து மறைமுகமாக விமர்சித்து எழுதி இருக்கும் இந்தக் கதை 1939 ல் விகடனில் வெளிவந்தது. பாரதத்தின் பெருமை மனைவி எவ்வளவு கொடுமைக்கு ஆளானாலும் கணவனை அனுசரித்தே வாழவேண்டும் என்பதை மறுப்பது போல மறுத்து, காரணம் காட்டி இணையச்செய்கிறார். இல்லை எனக்குப் புரியாத அங்கதமோ என்னவோ..
கடைசி வரை தனக்கு நடக்கும் யாவுமே அம்பிகையின் ஆணை என்று ஏற்றுக் கொள்கிறார் சாஸ்திரி. எதையும் குறை காணாதவராகவும், நல்ல குணங்களாலுமே வடிவமைக்கப் பட்டிருக்கிறார். அவர் மீது பொறாமை கொண்டு அவரைப் புண்படுத்த வந்த தீக்ஷிதரைக் கூட, தனக்கு சேதி சொல்ல வந்த அம்பிகையின் தூதுவராகவே காண்கிறார். அவர் பெண் சாவித்ரி கூட 90 சதவிகிதம் அப்படிதான். அப்பா மீது பெரும் பக்தி கொண்ட பெண், ஆனால் கல்யாணம் செய்து தன்னைத் 'தள்ளி விட்டு' விட்டு கவலைப் படாமல் இருந்தார் என்று அப்பாவின் மேல் கோபமும் இருக்கிறது.
சாவித்ரி பணக்காரியாய் வடநாட்டிலிருந்து திரும்பவேண்டும். அதுவும் குறைந்த கால இடைவெளியில். எப்படி? அப்போது ஒரு தங்கை கேரக்டரைப் படைத்து விடுவோம். அந்த கேரக்டருக்கு வேறு வேலை இல்லை. எனவே அதைச் சாகடித்து விடலாம். அதன் பயன் அண்ணனின் பாசம் பற்றிய உரைகல்லுக்கு உதவும்! இது படைப்பாளியின் முன்யோசனை, சாமர்த்தியம்.
சாவித்ரியின் கணவன் வடிவமைப்பில் நேர்த்தி இல்லை. சாவித்ரிக்காக, அவரின் கோப, நல்ல குணங்களை வெளிப்படுத்த ஒரு கருவியாய் இருக்கிறார். ஆனாலும் ஆண்!
ஒவ்வொருவர் கட்சியையும் வைத்திருந்து, தகுந்த கட்டத்தில் விளக்கம் சொல்லி புதிர்களை விடுவித்து நியாயம் கற்பிக்கிறார் ஆசிரியர். ஆங்கில மொழியிலேயே கதைகள் வந்து கொண்டிருந்த காலத்தில் தமிழில் முதலில் முயற்சி செய்து வென்றவர் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜம் அய்யர். அவர்தான் தமிழில் வசன கதைகளுக்கு பெரும் முன்னோடியாய் இருந்திருக்கிறார். அப்புறம் சிறுகதைகள் எழுத சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கொஞ்சம் முன்னோடியாய் இருந்திருக்க, கல்கி விகடனில் கள்வனின் காதலியும், அதைத் தொடர்ந்து இந்த தியாக பூமியும் எழுதி இருக்கிறார்.
அந்த காலகட்டத்தில், சினிமா, தொலைகாட்சி, செல்ஃபோன், வாட்ஸாப் என்று வேறு கவனக் கலைப்புகளே இல்லாத காலகட்டத்தில், இப்படியான ஒரு கதை தொடர்கதையாக வந்ததாலும், கதையில் பெண் விடுதலை, சிரமங்கள், பிரிவு, குழந்தையின் குறும்பு, கடைசியாக விடுதலைப் போர் என்று மசாலா தூவியதில் வாரா வாரம் மக்களிடையே எப்படி வரவேற்பைப் பெற்றிருக்கும், அதைப்பற்றி விவாதிக்க வைத்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
===================================================================================================
சில வருடங்களுக்குமுன் பேஸ்புக்கில் பகிர்ந்தது..
கொசு - ஒரு புலம்பல்.
தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் இந்தக் கொசுக்களுக்கு - நிஜமான கொசுக்கள்தாங்க - ஒரு நிரந்தர ஒழிப்பு வழியைக் கண்டு பிடிக்கிறவர்களுக்குத்தான் எங்கள் வோட்டு என்று சொல்லலாமா என்று பார்க்கிறேன்.
குட்நைட்டாவது, மார்ட்டினாவது... இது போன்ற 'விரட்டி'களுக்கு கொசுக்கள் பயந்த காலம் மலையேறி விட்டது. எந்தக் கொசுவிரட்டிக்கும் அவை இப்போது பயப்படுவதே இல்லை. அவற்றைத் தடுத்து நிறுத்தும் சக்தியும் இந்த விரட்டிகளுக்கு இப்போது இல்லை.
கொசுமருந்து தெளிக்கிறேன் என்று புகைபோடும் கார்ப்பரேஷன் வண்டிகள் தெருவிலிருக்கும் கொசுக்களைக் கூட்டம் கூட்டமாக வீட்டுக்குள் விரட்டி விட்டுச் செல்கின்றன.
இதற்குப் பயந்து ஜன்னல்களில் நெட்லான் அடித்திருந்தாலும் இருட்டத் தொடங்குமுன் கதவுகளை அடைத்துக் கொண்டு புழுங்க வேண்டியதாயிருக்கிறது.அப்படியும் எங்கிருந்துதான் கிளம்புகின்றன என்று தெரியாமல் கும்பல் கும்பலாக வந்து கொண்டேயிருக்கின்றன...
கொசுக்களைச் சமாளிக்க இப்போதைக்கு எலெக்ட்ரானிக் பேட் ஒன்றுதான் ஆயுதம். அதுவும் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை தந்து வாங்கினாலும் சீக்கிரமே அந்த 'பேட்'டுகள் உயிரை விட்டு விடுகின்றன.
உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும். கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே. முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும்
மழைத்துளியின் எடை, கொசுவை விட 50 மடங்கு அதிகம். இருப்பினும், மழை பெய்யும்போது, கொசு சுதந்திரமாக பறக்கலாம். கொசு அதன் குறைவான வலிமையைப் பயன்படுத்தி மிகுவிரைவாக செயல்படுவதால், மழைத்துளிகள் தாக்காது தப்பிச் செல்லாம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர். ஆனால், இது உண்மையா? 2011-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ச்சோஜியா மாநில அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், உயர்வேக ஒளிப்பதிவு வசதியில், கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர். அவர்களது சோதனை முடிவின்படி, கொசுக்கள் மழையும்போது மெதுவாக பறப்பதால் தான், மழைத்துளிகளை கடந்து செல்ல முடிகிறது என அறிய வந்தனர். இது, மக்களின் பொதுவான கருத்தை விட வேறுபட்டதாக உள்ளது.
பெண் கொசுக்கள், விலங்கு மற்றும் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சுவதோடு, பல நோய்களையும் பரப்பி விடுகிறது. இது, உலகிலேயே கொடுமையான உயிரிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும், கொசு பரப்பும் மலேரியா காய்சலால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை, 20 முதல் 30 இலட்சம் வரை இருக்கும். மேலும், சுமார் 20கோடி மக்கள் இந்நோய் தொற்றால் அல்லல்படுகின்றனர். தவிரவும், மஞ்சகாமாலை, டெங்கு காய்ச்சல், மஞ்சக்காமாலை நச்சுயிரிதொற்று முதலியவற்றை பரப்புவதற்கு காரணமாகும்.
மக்கள் உடலிலிருந்து நுகரும் வேதி மணத்தை நாடும் திறமை கொசுவுக்கு மிகவும் வலிமையாக உள்ளது. கொசுவின் உணர்வறி உறுப்புக்களில், மணங்களையும் வேதிப் பொருட்களையும் உணர்வதற்காக 70க்கு அதிகமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் வெளிவிடும் மூச்சு காற்றையும் மனித உடலின் மணத்தையும், கொசுக்கள் அவற்றின் உணர்வறி உறுப்புக்கள் மூலம், உணர்ந்துக் கொள்கின்றன. கரியமில வாயு உள்ளிட்ட கரிம பொருளாயதங்களையும் கூட, இந்த உணர்வறி உறுப்புக்கள் நுற்றுக்கு மேலான அடி தொலைதூரத்தில், கொசுக்கள் இந்த பொருளாயதங்களை உணர்ந்து கொண்டு, இலக்கை உறுதிப்படுத்தி கண்டறிய முடியும். ஆழமான சிவப்பு ஆடையை அணிந்திருக்கும் மக்களை, கொசுக்கள் கடிக்க விரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன
.......இந்தக் கொசுக்களை ஒழிக்க உலகமெங்கிலும் பல்வேறு வழிகளில் ஆய்வுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் செயற்கையாக கொசுக்களை உற்பத்தி செய்து, அவற்றுடன் இயற்கை கொசுக்கள் இனம்பெருக்கம் செய்தால் விரைவில் கொசு இனம் குறைந்துவிடும் என்று மெய்ப்பிக்கப்பட்டது.
தற்போது இன்னொரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் கார்னெல் நகரில் நடந்த ஆய்வு முடிவுகள் ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில், கொசுக்களில் இருக்கும் ஒருவித புரதத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவற்றை அழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது கொசுக்களில் உள்ள ஒரு வகைப் புரதம், அவற்றின் சிறுநீர் சுரப்பதற்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. கொசு நமது உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது அந்தப் புரதத்தை கட்டுப்படுத்த முடிந்தால் அவற்றின் சிறுநீர் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டமும் தடைபடும். இதனால் கொசு மரணத்தைத் தழுவும். கொஞ்சம் கொஞ்சமாக கொசு இனமும் முடிவுக்கு வரும்.
மிகச் சிறியதும், மிக வேகமாக பறந்து நழுவிச் சென்றுவிடுவதுமான கொசு இனத்தை அழிக்க இதுவே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட அந்த புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சியாக ஆய்வுகள் தொடருகின்றன......
• The average life span of the female mosquito is 3 to 100 days; the male's is 10 to 20 days.
• Mosquito adults feed on flower nectar and juices of fruits for flight energy.
•
The female requires a blood meal for egg development
• Depending on species, female mosquitoes may lay 100 to 300 eggs at a time and may average 1,000 to 3,000 during their lifespan.
• The mosquito matures from egg to adult in 4 to 7 days.
• Most mosquitoes remain within 1 mile of their breeding site. A few species may range up to 20 miles or more.
• Several mosquito species are known carriers of significant diseases of man and domestic animals.
• There are 140 different kinds in the world.
• Female Mosquitoes are attracted to carbon-dioxide and will pierce the skin of people and other warm-blooded animals to suck blood, causing a painful swelling.
• The larvae feed on algae and organic matter. They are full grown in 2 - 14 days.
• The pupae still swim about actively, but do not feed as pupae. Eyes, legs and wings can be seen developing.
• Adults emerge after 1 - 14 days.
=================================================================================================
மாரடைப்பு வந்தால் வேகமாக, 20 முறை இரும வேண்டும் என்பது போன்ற 'வாட்ஸ் - ஆப்' வதந்திகளை நம்பாதீர்!
பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி குறித்து கூறும், சென்னை மேத்தா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர் சரவணகுமார்:
- தீக்காயத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது, கொப்புளங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். 'சில்வர் சல்பாடையசின்' என்ற மருந்தை, காயத்தில் தடவலாம். அதேசமயம் காயத்தில் மை ஊற்றுவது, மஞ்சள் துாள் தடவுவது, மாவு பூசுவது கண்டிப்பாக செய்யக் கூடாது.
-
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு நிகழும். முதலில் இதயத்தின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, பின் இடது தோள்பட்டை, கை என பரவும். வழக்கத்தை விட அதிகமாக வியர்ப்பது, மூச்சு வாங்குவதே இதன் அறிகுறி.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் மிக வயதானவர்களுக்கு, இந்த அறிகுறி இல்லாமலும் மாரடைப்பு வரலாம்.
பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமான இடத்தில் அமர வைத்து, கைவசம், 'ஆஸ்பிரின், கிளோப்பிடெக்ரல்' மாத்திரை இருந்தால், 300 மி.கி., கொடுக்கலாம்.
மாரடைப்பை, வாயு என்று நினைத்து சோடா குடிக்க வைப்பது பலரும் செய்யும் தவறு.
மாரடைப்பு வந்தால் வேகமாக, 20 முறை இரும வேண்டும் என்பது போன்ற, 'வாட்ஸ் - ஆப்' வதந்திகளையும் நம்பாதீர்கள்.
- வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் இறுக்கமான ஆடை அணிந்திருந்தால் தளர்வுபடுத்தி, நல்ல காற்றோட்டமான சூழல் தர வேண்டும். புரையேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களை இடதுபுறமாகத் திருப்பிப் படுக்க வைக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு அதிகப்படியான காய்ச்சலால் வலிப்பு வரும் என்பதால், முதலில் காய்ச்சலின் அளவைக் குறைக்க வேண்டும்.
வலிப்பு சமயங்களில் வாய் வழி மருந்து கொடுக்கக் கூடாது. ஆசன வாயில் வைக்கக் கூடிய மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்; குளிர்ந்த நீரால் பற்றுப் போடலாம். கையில் இரும்பு, சாவி கொடுப்பது, சூடு வைப்பது தவறு.
- ஆசிட், பினாயிலை உட்கொண்டவர் சுயநினைவுடன் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவை குடிக்க வைக்கலாம். அது, குடல் பகுதியில், 'கோட்டிங்' போல் அமைந்து, பாதிப்பைக் குறைக்கும்.
- பூச்சிக்கொல்லி, அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை உட்கொண்டவர்களை, கரித்துாள், டீத்துாள் எனச் சாப்பிட வைக்கலாம். உதாரணமாக, ௫௦ கிலோ எடை உள்ளவருக்கு, ௫௦ கிராம் கொடுக்கலாம். இவை விஷத்தன்மையை உறிஞ்சி, அதிகப்பட்டியான குடல் பாதிப்பை தவிர்க்கும்.
- விபத்து மற்றும் மிக்சி, மின் விசிறியில் கையைக் கொடுத்து விரல் துண்டானால், ரத்தப் போக்கு உள்ள இடத்தில் சுத்தமான துணியால் அழுத்தம் கொடுக்க வேண்டும். துண்டான பகுதியை ஒரு கவரில் போட்டு, ஐஸ் கட்டி நிரம்பிய பையின் மீது வைத்து மருத்துவமனை செல்ல வேண்டும்.
தினமலர் - 'சொல்கிறார்கள்' பகுதியிலிருந்து.. 2016
=========================================================================================================
வறண்ட மேகங்கள்
மழையை பிரசவிக்கமுடியாத
மலட்டு மேகங்கள்
விடை பெற்றன
மனத் தாங்கலோடு..
வந்த
சூரியன்
கடுத்து நோக்கினான்
வனமழித்து, மணல் விற்ற
உலகை... [மீள்]
=======================================================================================
நியூஸ்ரூம் -
காதல் எத்தனை காதலடி! - பானுமதி வெங்கடேஸ்வரன்
நிலவுக்குச் முதலில் சென்ற மூவர் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், காலின்ஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் இப்போது உயிரோடு இருப்பவர் ஆல்ட்ரின் மட்டுமே. தொன்னூற்று மூன்று வயதாகும் இவர் இப்போது எழுபது வயதாகும் ஒரு பெண்ணை(??) திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம். அந்தப் பெண்ணை இருபது வருடங்களாக காதலித்தாராம். காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், வயதும் இல்லை போலிருக்கிறது.
இது இப்படி என்றால், இன்னொரு முன் ஜாக்கிரதை காதல் கதை தெரியுமா? காதலித்த ஒரு ஆணும், பெண்ணும் ஒரு வங்கியில் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கி அதில் இருவரும் தலைக்கு மாதம் ஐநூறு செலுத்தி வந்தார்களாம். ஒரு வேளை இந்தக் காதல் கைகூடாமல் போனால் அந்தக் கணக்கில் இருக்கும் தொகை ஏமாற்றப்பட்டவர்க்குச் சேர வேண்டும் என்று ஒப்பந்தமாம். அதன்படி காதலி நடுவில் நழுவி, காதலனை கை கழுவ, அவனுக்கு ரூபாய்.25000 கிடைத்ததாம். காதலுக்கு மரியாதை இவ்வளவுதான். இதை அவன் ட்விட்டரில் பதிய அது வைரலாகி விட்டதாம்.
இன்னுமொரு சினிமா காதல் போன்ற காதல்
96 என்று திரிஷா, விஜய் சேதுபதி நடித்த படம் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? திரிஷாவின் குறிப்பிடத்தக்க படங்களுள் ஒன்று. கிட்டத்தட்ட அதைப்போன்ற ஒரு கதை இல்லை நிஜம்! கேரளாவில் கொல்லத்தில் 70களில் பள்ளியில் படித்தவர்கள் பள்ளி மாணவர்களின் ரீ யூனியனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் வீடு திரும்பவில்லை. அந்த இரண்டு பேரும் பள்ளி காலத்தில் காதலித்திருக்கிறார்கள், ஆனால் சில நிர்பந்தங்களால் மணந்து கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்ததும் மனதடியில் இருந்த காதல் வெளிப்பட்டு விட்டது போல.
இதெல்லாம் இருக்கட்டும், இந்த வருடம் தமிழ் நாட்டில் ப்ளஸ் டூ தேர்வுக்கு 50,000 மாணவர்கள் ஆப்சென்டாம். மடிக்கணினி, சைக்கிள் என்று எல்லாவற்றையும் இலவசமாக பெற்றுக் கொண்ட இவர்கள் பள்ளிக்கு வராமல் பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சென்று விட்டார்களாம். இங்கே டி.சி. கொடுக்காமல் அங்கே எப்படி சேர்த்துக் கொண்டார்கள்? ஜூன் மாதம் இப்போது ஆப்செண்ட் ஆன மாணவர்களுக்கு தனி தேர்வு வைக்கப் போகிறார்களாம். அதில் ஒழுங்காக பரிட்சை எழுதச் சொல்லி பாஸ் போடுவார்களா? அல்லது ஆல் பாஸா? இந்த மாநிலத்தை கடவுள் அல்லது இயற்கை காப்பாற்றட்டும்!
===========================================================================================================
பொக்கிஷம்
கீழுள்ள இரண்டு படங்களையும் வரைந்தவர் ராமு. அப்புறம்தான் அவர் வரையும் ஓவியங்களில் ஒரு மாற்றம் தென்பட்டது. கிட்டத்தட்ட அந்த மாறுதல் உடல் பொருள் ஆனந்திக்கான படங்களிலேயே படிப்படியாய் தெரிந்தது என்று நினைக்கிறேன். இது உபொஆக்கான படம் இல்லை.
வியாபாரத்தில் 'உங்க கையாலதான் முதல் போணி' என்று சொல்லும்போது எனக்கு இந்த பயம் வரும்!
ஹிஹிஹி.. இது ஏதோ திப்பிசம் வகையறா போல இருக்கே...
இது என்னடா வம்பாப்போச்சு.. இந்தப் பக்கமே வந்திருக்கக் கூடாதோ...
என் சட்டை வீணானாலும் சரி...
அந்தக் கால தக்கினிக்கி!!
நான் காய் சாப்பிடமாட்டேன்.. பழம்தான்!
தமிழ் திரைப்பட வரலாற்று திரையிடலில் தியாகபூமி (கடைசி காட்சிகள் இல்லாமல்) பார்த்திருக்கிறேன். நாவல் படித்ததில்லை. கட்டுரையில் விவரங்கள் முழுமையாக உள்ளன.
பதிலளிநீக்குகொசு புராணம்: ஆப்டர் ஆல் ஒரு கொசுவை ஜெயிக்க முடியாத மனிதனின் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது.
அளவோடு பெய்து
வளமோடு வாழ
பருவத்தில் பெய்ய வேண்டி
மழை மேகங்களோடு
அளவறிந்து சொல்லவே
வந்து பார்த்தன
வறண்ட மேகங்கள்.
வாசகர் பங்களிப்பு எ பி யில் கூடி வருவது மகிழ்ச்சி. (பா வே). இனி வெள்ளியன்றும் வாசகர் பங்களிப்பு வந்தால் வாரம் ஏழு நாளும் வாசகர்கள் அன்பளிப்பு இருக்கும்.
பொக்கிஷம் நன்று.
Jayakumar
அப்பாடி... ஒரு வழியாய் முதல் கமெண்ட்! அலுவலகம் கிளம்பும் முன் பதில் அளிக்க வசதியாய்!
நீக்குதிரைப்படமாக வந்திருக்கிறதா? தெரியாது!
கொசுவை ஜெயித்த மனிதன் இல்லை!
அளவுக் கட்டுப்பாடு செய்தால்
எளவு
மழை பத்தாதே மக்களுக்கு!
அதிகமாய்ப் பொழிந்தால்தான்
அதை
சமுத்திரத்துக்கு அனுப்ப முடியும்!
வாசகர் பங்களிப்பு... ம்ம்ம்.. பார்க்கலாம்!!
இன்றைய உங்கள் கமெண்ட் ரொம்ப பாஸிட்டிவ்! நெம்ப சந்தோசம்!
தியாக பூமி வாசித்திருக்கிறேன். வாசித்து பிரமித்த விஷயங்கள் - சொல்லப் போனால் 'நான் படிச்ச கதை' க்கு எழுதலாமோ என்றும் கூட நினைத்து..........
பதிலளிநீக்குபிரமித்த விஷயங்கள் அப்போதே கல்கி எவ்வளவு முற்போக்குச் சிந்தனைகளுடன் எழுதியிருக்கிறார் என்று வியந்து போனேன்....பல விஷயங்கள் அதில் முற்போக்குச் சிந்தனை.....பெண் கம்பீரமாகத் தனித் தன்மையுடன் நிற்கவேண்டும் என்ற எழுத்து....
அப்புறம் வருகிறேன்...
கீதா
வாங்க கீதா... பால் வாங்கிகிட்டு போகும்போது எட்டிப்பார்த்து குட்மார்னிங் சொல்லிட்டு போறமாதிரி... வாங்க பொறவு.. அளவளாவலாம்.. ஆனால் வருட இறுதி.... இன்று மாலை எல்லாம் நேரம் ரொம்பக் கஷ்டம் எனக்கு!
நீக்குஹாஹாஹாஹா....ஸ்ரீராம், எனக்கும் கொஞ்சம் இல்லை ரொம்பவே இருமல் படுத்துதே....இப்பதான் கொஞ்சம் ஓகே....வேலைகளும் கூடவே...
நீக்குஇன்னும் ஒன்றே ஒன்று சொல்லிட்டு ஓடுகிறேன்.
கல்கியின் மகன் ராஜேந்திரன் அவர் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறாரே!! உபநயனத்துக்கு! யார் அந்த அரவிந்தன்? பாரதி அண்ணாவின் மகன்?!!
கீதா
ஆமாம். கி ரா வோடு அப்பாவுக்கு பழக்கம் உண்டு.
நீக்குஅப்பா வழியாகத்தான் வந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது...ஸ்ரீராம்
நீக்குகீதா
தியாகபூமி படத்தை அப்போதைய ஆங்கிலேய ஆட்சி தடை செய்து பின்னர் மிகுந்த சிரமங்களுக்கிடையே வந்தது எனச் சொல்லுவார்கள். இதைப் பற்றி என் அம்மாஅப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். இதில் சாவித்திரியின் பெண்ணாக நடித்த பேபி சரோஜா இயக்குநர் சுப்ரமணியம் அவர்களின் மகள்/பத்மா சுப்ரமணியத்தின் அக்கா/ அந்தக்கால கட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் சரோஜா என்றே பெயர் வைத்தார்கள் என்பார்கள். எங்க உறவிலும் இப்படி நாலைந்து சரோஜாக்கள் உண்டு. அதே போல் சாந்த சக்குபாய் படம் வெளிவந்ததும் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சக்குபாய் அல்லது சக்கு எனப் பெயர் வைத்தார்களாம். என் பெரிய நாத்தனாருக்கு அதனாலேயே சக்கு என்று பெயர்.
பதிலளிநீக்குஓ... மக்கள் அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்! அந்த கேரக்டரின் பெயர் சாரு!
நீக்குகதைப்படி சாரு/ அது சரியே/ ஆனால் நடித்த குழந்தையின் உண்மைப்பெயர் சரோஜா. பேபி சரோஜா என்னும் பெயரிலே இன்னும் சில படங்களும் நடிச்சிருக்கார்/
நீக்குஅது புரிந்தது. அந்தக் கால ஷாலினி என்பதைச் சொல்லவே கட்டுரையில் குழந்தையின் குறும்புப் பேச்சைக் குறிப்பிட்டேன்.
நீக்குதடை செய்ய அப்படி என்ன அதில் இருக்கு என்று புரியவில்லை. முதலில் கீழே ஸ்ரீராம் பதில் கருத்துக்கு நான் நினைத்தேன் ஒரு வேளை புரட்சிக் கருத்துகளை நம்ம மக்கள் ஏற்க மாட்டாங்களே அப்படின்றதுக்காகவோன்னு இங்க மேல வந்து பார்த்தா ஆங்கிலேயர்கள் தடைன்னு பார்க்கறப்ப
நீக்குஅதில் சொல்லப்பட்ட விடுதலை போராட்டக் கருத்துகளுக்காகவா?
ஆனால் அது ஒன்றும் பெரிசா இல்லையே....
கீதா
அப்போ 'ம்' என்றால் சிறைவாசம், 'ஏனெ'ன்றால் வனவாசம் போல...!
நீக்குஅந்தக் காலத்து விகடன் பைன்டிங்கில் "ராஜூ" வரைந்த சித்திரங்களோடு சித்தப்பா வீட்டில் படிச்சிருக்கேன். சில சம்பவங்கள் இங்கே உள்ள கட்டுரையில் முன்னும் பின்னுமாக வந்தாலும் பொதுவாக எல்லாவற்றையும் சொல்லி இருக்கீங்க. சாவித்திரி அவள் அத்தையைப் பார்ப்பது, அவருடன் செல்வது, வேண்டுமென்றே தன் குழந்தையை அப்பா பார்க்க வேண்டும் என்பதற்காக விட்டுச் செல்வது இதெல்லாம் இந்தக் கதையில் இல்லை. குழந்தையை விட்டுவிட்டு அப்பா எடுத்துப் போகிறாரா என்று கவலையுடன் பார்த்திருந்து விட்டுப் பின்னர் போவாள். அதன் பின்னரே அத்தையைப் பார்த்து அவளுடன் செல்வது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் விஷயங்களை சஸ்பென்ஸில் வைத்து பின்னர் சொல்கிறார் கல்கி. மேலும் முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லி வந்தேன். எனவே சில விஷயங்கள் சொல்லவில்லை. முன் பின்னாய் சொன்னது கேரக்டர்வைஸ் அனலைஸ் மாதிரி.
நீக்குராஜு முப்பதுகளிலேயே வந்து விட்டாரா?
நீக்குஆமாம்னு நினைக்கிறேன். எஸ்விவியின் நகைச்சுவைக்கட்டுரைகள், தேவனின் துப்பறியும் சாம்பு ஆகியவற்றிற்கு ராஜூ தான் படம் வரைந்திருந்தார். (முதலில் நாவல் உருவில் தான் விகடனில் வந்தது. பின்னர் தேவன் இறந்த பின்னர் அவர் நினைவாகப் படக்கதையாக கோபுலுவின் சித்திரங்களோடு வந்தது. நான் முதலில் இதைத் தான் படிச்சேன். பின்னர் பல வருஷங்கள் கழிச்சுச் சித்தப்பா வீட்டில் பைன்டிங்கில் இரண்டும் கிடைத்தன.)
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஸ்ரீராமநவமி வேலைகள் இருக்கு. அப்புறமா வரேன்.
பதிலளிநீக்குஓகே ஓகே.. நான் அலுவலகம் கிளம்பி விடுவேன். மற்ற கமெண்ட்ஸுக்கு முடிந்தால் இரவு பதில்!!!
நீக்குஇதென்ன ஸ்ரீஜெயந்தியா ஏகப்பட்ட பட்சணங்கள் பண்ணுவதற்கு
நீக்குபாயசம், வடை, சுண்டல், பானகம், நீர்மோர். என்னோட இப்போதைய உடல்நிலையில் இதுக்கே நேரம் ஆயிடுச்சு இன்னிக்கு. :(
நீக்குவடை சுண்டல் செய்யப்படுவதற்குள் அலுவலகம். பாயசம், பானகம் நீர் மோர் சுவைத்தாயிற்று!
நீக்குசாய் கோவிலில் ராமநவமி விழாவில் கலந்து கொண்டு வடை, லட்டு, பானகம், பாசிப்பருப்பு , வெள்ளரி, கிடைத்தது.
நீக்குவிடியற்காலையில் முதல் ஆளாக வந்தும் ஏனோ கருத்திட வில்லை..
பதிலளிநீக்குதியாகபூமி நாவல் படித்ததாக நினைவு..
தங்களது தொகுப்பு சிறப்பு..
நன்றி. ஆனால் ஏன் கருத்திடவில்லை. நாவல் படித்ததுள்ளாய் ஆயினும், கருத்திட்ட வேறு விஷயங்களும் இருக்கின்றனவே கதம்பத்தில்!
நீக்கு* // நாவல் படித்ததுள்ளாய் //
நீக்குபடித்ததில்லை ஆயினும் என்று படிக்கவும்!
கல்கி அவர்களது எழுத்துக்களுக்கு அருகில் நாம் யார்?...
நீக்குநான் எழுதி இருப்பது தவறா?
நீக்குபொக்கிஷம் அருமை..
பதிலளிநீக்குஅந்தக் கவிதை?..
மலட்டு மேகம் என ஒன்று இருக்கின்றதா?..
நாம் சொல்வதுதான். மழை பொழியா மேகம்.. மழை சூல் கொள்ளா மேகம்...!
நீக்குநியூஸ் ரூம் - புதிய பகுதியா!..
பதிலளிநீக்குஆம்!
நீக்கு
பதிலளிநீக்குஹையா..
நானும் மின்னஞ்சலில் கவிதை ஒன்று அனுப்பி இருக்கிறேன்..
ஹைய்ய ஹையா!..
Acknowledged!
நீக்குஇந்தக் காலத்தில் சேர்ந்து வாழ்ந்தாலே பெரிய விசயம் தான்...
பதிலளிநீக்குஅதுவும் கொஞ்ச காலமாவது...!
நீக்குகாதல் எத்தனை காதலடி - ஆத்தாடி...!
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா..
நீக்குகொசு : ஆழமான சிவப்பு ஆடையை விட கருப்பு நிறமும் அதிகம் ஈர்க்கும் என்று நினைக்கிறேன்...
பதிலளிநீக்குநிறங்கள் கொசுவை ஈர்க்குமா, தெரியுமா என்று தெரியவில்லை!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் நலமே விளைக. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குகொசு புராணம் கலவரப்படுத்துகின்றது..
பதிலளிநீக்குயார் காட்டிலோ மழய்!.. (மழை)
கொசு புராணம் காலம் காலமாக வருவதுதானே... இதை நான் 2014 ல் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்.
கல்கி அவர்களின் எழுத்தில் வந்த தியாகபூமி புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டு அம்மா வீட்டில் இருந்தது. அம்மா படித்திருக்கிறார்கள். படமும் பார்த்திருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. எங்களுக்கு அவ்வப்போது அதன் கதையை சொல்வார்கள். ஆனால், கோர்வையாக நினைவில்லை. நீங்கள் இப்போது சொன்ன விமர்சனத்தில் சிறிது நினைவுக்கு வருகிறது. இப்போது கிடைத்தாலும் படிக்கலாம். ஆனால் நேரந்தான் வேண்டும். கதை சுவாரஸ்யமாக உள்ளது.
கவிதை அருமை. மழை பொழியா இந்த மேகங்கள் வந்து இங்கும் இப்போது வெப்பத்தை அதிகமாக்கி செல்கிறது. மாலைச்சூரியனும் அதுவரையில் அதற்கிடையில் சிறைப்பட்டு மறைந்திருந்த நிலையை எண்ணி வருந்தி, பின் எட்டிப்பார்த்து உங்கள் கவிதையில் உள்ள வாசகங்களை உமிழ்ந்து விட்டுப் போகிறான். கவிதையை ரசித்தேன். மீண்டும் வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கதை கிட்டத்தட்ட இங்கேயே கொடுத்து விட்டேன். கொஞ்சம் யூகித்தால் மிச்ச கதை முடிவும் விளங்கி விடும்!
நீக்குகமலாக்கா இணையத்தில் இருக்கிறது.
நீக்குhttps://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0376.pdf
வாசிக்கும் போது கறுப்பு வெள்ளைப் படம் மனதுள் விரியும்!!! அப்படியான அழகான விவரிப்புகள்!!!
கீதா
தகவலுக்கு நன்றி சகோதரி.
நீக்குஅதான் பார்த்தேன்.
பதிலளிநீக்குகி. இராஜேந்திரனின்
கடிதம் ஒன்று என்னிடம் உள்ளது. அதைத் தேடி எடுத்து வைத்திருக்கிறேன்
அவரின் அன்பளிப்பு
விஷயம் பயங்கர சஸ்பென்ஸ். Keep it up.
கடைசி வரை யாரும் சொல்லதிருந்தால் அடுத்த வியாழன் சஸ்பென்ஸை விடுவிக்கலாம். அதுவும் புதுமையாக நன்றாகத் தான் இருக்கும், ஸ்ரீராம்.
புரியவில்லையே... எனக்கே சஸ்பென்சாக இருக்கிறது என்ன என்று! மற்றபடி பதிவு பற்றி...?
நீக்குதேடி எடுத்து வைக்கிறேன் என்று சொல்ல வந்தது வைத்திருக்கிறேன் என்று தவறாக தட்டச்சு ஆகிவிட்டது.
நீக்குகடிதம் கிடைத்ததும்
சொல்கிறேன், ஸ்ரீராம்.
கி.ராஜேந்திரனால் உங்கள் அண்ணா பையருக்கு அளிக்கப்பட்ட புத்தகம் பற்றிய சஸ்பென்ஸை! இப்போவே சொல்லிட்டீங்க இல்லையா! அதைச் சொல்லி இருக்கலாம். அல்லது அவரிடம் உள்ள கடிதத்தையும் சொல்லி இருக்கலாம்.
நீக்குகல்கி கி.ராஜேந்திரனின் கையெழுத்து அழகாக இருக்கிறது
நீக்குஎன்று சொல்ல நினைத்தேன்.
சொல்ல நினைத்தது மறந்தே. போயிற்று.
நீக்குசொல்ல மறந்தது கூட சஸ்பென்ஸான்னு கேட்டுறாதீங்க..
நீக்குகையெழுத்து தவிர வேறொன்றும் சொல்ல நினைத்து மறந்து போயிற்றா? அதுதான் நினைத்த உடன் சொல்லி விடவேண்டும் என்பது!
நீக்குசஸ்பென்ஸை கொஞ்சம் திசை திருப்பினேன். யாரும் கண்டுக்கலை.
நீக்குசரி, சொல்லிடட்டுமா? சொல்லுங்க..
இன்னுமா சஸ்பென்ஸ்... தூக்கம் வருது.. நாளைக்காலை இது பழங்கஞ்சி ஆகிவிடும். சொல்லுங்க..!
நீக்குதியாக பூமியில் பெண் விடுதலை, முற்போக்குக் கருத்துகள் என்று சாவித்திரியின் வாயிலாக கல்கி சொல்லியிருப்பதை அட போட வைத்து ரசிக்க முடிந்தது. மற்றபடி, எளிதாக யூகிக்க முடிகிறது கதையை. கடைசியில் சுபம் போடாமல் விடமாட்டார் என்று....அது போல, நிறைய மிகைகள். மருத்துவமனையில் சாவித்திரி இருந்த போது அவளிடம் நர்ஸ் ஒரு விளம்பரத்தைக் காட்டும் போதே கதை புரிந்து விடுகிறது. சாவித்திரி அடுத்து அங்கு செல்வாள் என்று. கொஞ்சம் சினிமாத்தனம்?
பதிலளிநீக்குஅதுவும் தியாக பூமி சினிமா வேறு வந்ததே ஒரு வேளை அப்படி எழுதப்பட்டதோ? என்றும் தோன்றியது, ஸ்ரீராம். ஒரு வேளை நீங்கள் சொல்லியிருப்பது போல் இக்கதை அப்போது ரசிக்கப்பட்டிருக்கலாம்.
இப்போது பார்வைகள், எண்ணங்கள், எழுத்துலகமும் வேறு என்றான பிறகு வாசித்ததால், ம்ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல?
கீதா
அப்படி சொல்ல முடியாது கீதா... கதைகள் எழுத ஆரம்பித்த ஆரம்ப காலங்கள் அல்லவா ?அப்பொழுதே இவை தொடங்கி இருக்கின்றன என்று என்பதற்கு சந்தோஷப்பட வேண்டும்.
நீக்குஅப்பொழுதே தொடங்கி இருப்பதற்கு கண்டிப்பாக மகிழ்ச்சி ஸ்ரீராம். அதான் சொன்னேனே அவர் கருத்துகள் எல்லாம் ரொம்பப் பிடித்தது. நல்ல முற்போக்குக் கருத்துகள் அந்தக் காலகட்டத்திலேயே...
நீக்குநான் சொல்ல வந்தது....சில சம்பவங்கள் டக்கென்று நடந்துவிடுவது போல் வருவதால்....சம்பவங்களின் கோர்வைக்கு நிறையவே யோசித்து சரியாக இணைத்திருக்கிறார்.
இப்போதைய எழுத்துகளில் சம்பவங்கள் இப்படி வரும் போது அவை திணிக்கப்பட்டவையாகக் கருதப்பட்டுவிடுகிறதே!!!
கீதா
எனக்குத் தெரிந்து "தியாகபூமி" "அமரதாரா" இரண்டுமே கல்கி திரைப்படத்துக்கு என்றே எழுதினார் என்பார்கள். அமரதாரா எழுதும்போது தான் திடீரென ஆஸ்த்மா கடுமையாக ஆகி இறந்து விட்டார். பின்னர் அவர் மகள் "ஆனந்தி" கல்கி வைத்துவிட்டுச் சென்ற குறிப்புக்களில் இருந்து இரண்டு பாகத்தையும் எழுதி முடித்தார். சுவாரசியமாகவே இருந்தது/இருக்கும். வல்லி சிம்ஹன் இந்த அமரதாரா இரு பாகங்களையும் எனக்குப் பரிசாக அளித்திருக்கிறார். அவ்வப்போது எடுத்துப் படிப்பேன்.
நீக்குஆனந்தி தொடர்ந்தது அமராதாராவா வேறு நாவலா? நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்.
நீக்குஅமரதாராதான்.
நீக்குOnly Amarathara!
நீக்கு//வல்லி சிம்ஹன் இந்த அமரதாரா இரு பாகங்களையும் எனக்குப் பரிசாக அளித்திருக்கிறார். அவ்வப்போது எடுத்துப் படிப்பேன்.// books are still with me.
நீக்குOk.. Ok...
நீக்குசாம்பு சாஸ்திரி சேரிக் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித் தருவது போன்றானவை அப்போதைய காலகட்டத்துக்கு மாறுபட்டதுதான் இல்லையா? அப்பகுதியும் ஓகே....
பதிலளிநீக்குஆனால் என்னவோ முடிவு சுபம் என்று முடிக்க வேண்டும் என்பதற்காக அதுவும் போராட்டத்தில் இணைவது போல இணைத்திருப்பது போலத் தோன்றியது.
// இல்லை எனக்குப் புரியாத அங்கதமோ என்னவோ..//
இதே இதே...மீக்கும்
நீங்கள் கட்டுரையில் சொல்லியிருப்பது எனக்கும் தோன்றியது. இதை எல்லாம் தான் நா ப க வில் சொல்ல நினைத்திருந்தேன். அப்புறம் ஏனோ எழுதவில்லை.
கீதா
நாடக மாதிரி இருந்ததா, வித்தியாசமாகவா (ஒரு அறிமுகம் போல)?
நீக்குஆனால் அப்போது இதை தடை செய்ய என்ன இருக்கிறது என்று புரியவில்லை!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவித்தியாசமாக இருந்தது ஸ்ரீராம்.....அதில் நாடக மாதிரி இருந்தாலும்.... புரட்சிக் கருத்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. கதைக்கு நல்ல பலம் சேர்த்தது போலத் தோன்றியது. சம்பு சாஸ்திரி சேரி சம்பவங்கள் எல்லாம்.
நீக்கு//சாம்பு சாஸ்திரி சேரிக் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித் தருவது போன்றானவை அப்போதைய காலகட்டத்துக்கு மாறுபட்டதுதான் இல்லையா? அப்பகுதியும் ஓகே....//
கருத்தில் ஓகே என்று அது வேறு கருத்துக்கு எழுதியது தெரியாமல் இங்கு ஒட்டிக் கொண்டு விட்டது!!!
கண்டிப்பாகத் தடை செய்ய எதுவும் இல்லை. ஆனால் நம் மக்களால் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியாத புரட்சிக் கருத்துகள் அதனால் இருக்குமோ...எதுக்காச்சும் கொடி பிடிக்கணுமே!!!!
கீதா
படத்தில் வந்த நீதிமன்றக் காட்சிகள் என்பார்கள். அதோடு இதில் சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தும் காந்தியை வாழ்த்தியும், வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் போன்றவை சொல்லப்பட்டும் இருப்பதாலும் தடை போட்டிருக்கலாம்.
நீக்குகாந்தியால் கொண்டாடப்பட்ட "ரகுபதி ராகவ ராஜாராம்!" பாடலின் திருத்தப்பட்ட மூலப்பதிப்பை எங்கேயோ பார்த்தேன். நினைவில் வரலை. அதில் ஈஷ்வர் அல்லா தேரா நாம்! சப்கோ ஷண்மதி தே பகவான்!" இருக்காது.
நீக்குநா ப க என்பது நாடக என்றாகி விட்டது! நான் கேட்க நினைத்தது நா ப க மாதிரி இருந்ததா என்றே... வேறு மாதிரி அமைத்ததாய் நினைப்பு எனக்கு!
நீக்குகீதா அக்கா சொல்வது சரி என்று படுகிறது.
நீக்குமூலப் பாடலோடு கூடிய யூ ட்யூபே இருக்கு. தேடணும்.
நீக்குஸ்ரீராம், முதல் பகுதி நா ப க!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஹி.. ஹி.. ஹி.. இந்த வியாழனைத் தாண்டியாச்சு!
நீக்குஹாஹாஹா புரிந்தது
நீக்குகீதா
கல்கி அவர்களின் விவரணங்கள் அக்காலத்துக் காட்சிகளை மனதில் விரித்து விடும். காலத்துக் காட்சிகள் நிஜமாகவே மனதில் விரிந்தது. அது கல்கி அவர்களின் எழுத்து ஆளுமை!!! அந்த நடை. அது மிகவும் கவர்ந்தது.
பதிலளிநீக்குகீதா
ஆம். காலத்தின் கண்ணாடி. அதை முனைந்து கொண்டு வந்திருக்கிறார்.
நீக்குஸ்ரீராம், மற்ற பகுதிக்கு அப்புறம் வருகிறேன்....
பதிலளிநீக்குஆனால் கவிதையைப் பாராட்டாமல் செல்ல முடியவில்லை. அருமையான கற்பனை ஸ்ரீராம்....ரொம்ப ரொம்ப ரசித்தேன். மலட்டு மேகங்கள்...
அப்படியே கொட்டப் போகிறது இதோ பெய்துவிடும் என்று எண்ண வைத்து...ஆனால் அவை கலைந்து போய்விடும். இரு துளி விழும்!!! அவ்வளவுதான்...மீண்டும் சூரியன் வந்துவிடும்....
இதன் தொடர்ச்சி அப்பால அங்கிட்டு!!!
கீதா
நன்றி கீதா.
நீக்குகவிதையில் [மீள்] ???????
பதிலளிநீக்குகீதா
முன்னர் பேஸ்புக்கில் போட்டேன். தளத்தில் போட்டேனா நினைவில்லை. சர்ச் செய்தால் கிடைக்கவில்லை. அதுதான் போட்டுவிட்டு எதற்கும் ஒரு பாதுகாப்புக்கு மீள்!
நீக்குஇன்று ஸ்ரீராம நவமி
பதிலளிநீக்குதினம்.
ரகுபதி ராகவ ராஜாராம்
நீக்குபதீத பாவன சீதாராம்
-- மஹாத்மாவிற்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை நாமெல்லாம் மறந்து எவ்வளவு காலமாச்சு..
பானகம், நீர்மோர்,
வடை பருப்பு.. மறக்கவில்லை..
அவருக்கு ரொம்பப் பிடிக்கும். நமக்கெல்லாம் ரொம்பச் சுமாராய் பிடிக்கும்!
நீக்கு
கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர். //
பதிலளிநீக்குஹாஹாஹாஹா கொசு மழை!! சொற்றொடர் புரிந்தது......சும்மா ஜாலிக்கு!!!
ஸ்ரீராம் என்னதான் கொசு விரட்டிகள் கண்டுபிடித்தாலும்....survival of the fittest இருக்கத்தான் செய்யும். ஆனால் ஆச்சரியம்...பாருங்க பல உயிரினங்கள் அழிந்து இல்லாமலேயே ஆகிவிடுகின்றன அவங்களுக்கு எல்லாம் survival of the fittest பொருந்த மாட்டேங்குது பாருங்க!!!
இத்தனை ஆராய்ச்சிகள் இருக்க, கொசுவின் முதல் உதயம் எதிலிருந்து எப்படி எந்தக் காலத்தில்னு இருக்கா?!!! மண் தோன்றா கல் தோன்றா காலம்னு சொல்லுவமே அப்படியா!!!!
கீதா
ஹா.. ஹா.. ஹா... புரிகிறது. ஆனால் அது காபி பேஸ்ட்தானே.. மாற்றப் பார்க்கிறேன்.
நீக்குகொசு, கரப்பான் போன்றவற்றை அணுகுண்டு வீசினாலும் அழிக்க முடிவதில்லை!
நீக்குகல்கியிலும் தியாகபூமி வெளிவந்தது.
பதிலளிநீக்கு29-8-93 இதழில் ஆரம்பம் கொண்டிருக்கிறது..
ஓவியங்கள் ஸ்யாம்.
பைண்டிங்காக என்னிடம் இருக்கிறது.
பின்னூட்டங்களில்
வாட்ஸாப் மாதிரி போட்டோ போட முடியவில்லையே என்றிருக்கிறது.
ஒரே கதை இரண்டு புத்தகங்களில்... அது ஒரு சாதனைதானே? வெறெந்தக் கதையும் அப்படி வந்திருக்காது.
நீக்குகல்கியிலும் தியாகபூமி வெளிவந்தது.
பதிலளிநீக்கு29-8-93 இதழில் ஆரம்பம் கொண்டிருக்கிறது..
ஓவியங்கள் ஸ்யாம்.
பைண்டிங்காக என்னிடம் இருக்கிறது.
பின்னூட்டங்களில்
வாட்ஸாப் மாதிரி போட்டோ போட முடியவில்லையே என்றிருக்கிறது.
தினமலர் சொல்கிறார்கள் குறிப்புகள் நல்லாருக்கு ஆனால் உடனடியாகச் செய்வது என்பது அந்த சமயத்தில் அந்த டக் உணர்வு தோன்றணுமே....அது இல்லாம ஆ இதுக்கு நம்ம ஸ்ரீராம் வியாழன்ல தினமலர் பகுதி ஒன்று பகிர்ந்திருந்தாரேன்னு மண்டைக்குள்ள தேடினா....!!!!!
பதிலளிநீக்குகீதா
தேடினா? தேடினா என்னன்னு சொல்லவில்லையே...
நீக்குஅட! பானுக்கா பகுதியா....- இதில் கேரளத்து சம்பவம் தெரியும்...
பதிலளிநீக்குஅந்த 70 வயசுக்காரர் செஞ்சுக்கட்டும் விடுங்க...காதல் எந்த வயசிலும் வரலாம்...போனா போகுது...நம்ம ஊர்ல வயது வரம்பு என்று நாம் சொல்வதால் நமக்கு 'இது என்ன இது' என்று தோன்றலாம்...அவங்க ஜாலியா இருக்கட்டும்..
காதலுக்கு மரியாதை - இதெல்லாம் காதலா...பணம் அடிப்படையில் காதல் எல்லாம் ...இதுங்கள எல்லாம் என்னத்த சொல்ல...இப்ப இருக்கற காலகட்டத்துக்கு எல்லாமே வைரல்தான்...
இந்த மாநிலத்தை கடவுள் அல்லது இயற்கை காப்பாற்றட்டும்!//
இந்தப் பகுதி ரொம்ப வேதனை. கல்வி போகும் போக்கு சுத்தமா சரியில்லை.
கீதா
காதல் காதல் காதல்... காதல் போயின் சாதல் என்றால் கவிஞர். காதல் காதல்.. காதல் போயின் இன்னொரு காதல் என்றார் பாலகுமாரன்!
நீக்குபாலகுமாரனா வைரமுத்துவா?
நீக்குஏதோ ஒரு கதை மூலமாக பாலகுமாரன்தான் சொல்லி இருப்பார். ஆரம்ப கால கதை.
நீக்குபொக்கிஷம் - ராமுவின் இரு படங்களுமே நன்றாக இருக்கு.
பதிலளிநீக்கு'உங்க கையாலதான் முதல் போணி' என்று சொல்லும்போது எனக்கு இந்த பயம் வரும்!//
ஹைஃபைவ் ஸ்ரீராம் எனக்கும் வரும்.
திப்பிசம் - ஹாஹாஹாஹா.....
டாக்டர் வீட்டுக் கல்யாணம் - சிரித்துவிட்டேன்....
பொக்கிஷம் எல்லாமே சூப்பர்...
கீதா
திப்பிசம் வார்த்தையை கீதா அக்கா கண்டுக்கலை போல!
நீக்கு:))))) Yes
நீக்கு__/\__
நீக்குஎதற்குச் சொல்ல வந்தேன் என்றால்
பதிலளிநீக்குஸ்யாம் அச்சு அசலாக தியாகபூமி கதை காலத்துப் பெண்கள் தோற்றத்தை தன் ஓவியத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
வானதி பதிப்பக புத்தக அட்டை போல அல்ல.
(பாவடை, தாவணி
என்று என் கதைகளில் எழுதினாலே
"இது எந்தக் காலத்துக் கதை?" என்று ஒற்றை வரியில் எபியில் பின்னூட்டமிட்டு ---
பாவடை - தாவணி எந்தக் காலத்ததுவோ
அந்தக் காலத்துக் கதை என்று புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளவே.
ஸ்யாமின் ஓவியங்கள் என்னிடம் வேறு புத்தக பைண்டிங்கில் உண்டு. அவர் திறமை பார்த்திருக்கிறேன்.
நீக்கு'வனமழித்து, மணல் விற்ற உலகை' -- இந்த மாதிரி கடைசி வரியில் குறிவைத்து அஸ்திரமேந்தும் எந்தக் கவிதையும் சோடை போனதில்லை.
பதிலளிநீக்குமுன்னால் எவ்வளவுக்கெவ்வளவு
சாதுவாக வரிகளை வரிசை கட்டுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கடைசி வரி வீரியம் பெற்றுத் திகழும்.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குதியாகபூமி படித்ததில்லை.
பதிலளிநீக்குகவிதை நன்று.
ஜோக்ஸ் ரசனையாக இருந்தது.
நாங்கள் புதிய கண்டு பிடிப்புகள் மூலம் கொசுவை விரட்ட முயற்சிக்க; கொசுவும் வாழ்வதற்கு இசைவாக்கம் பெற்று புதுவழி கண்டு பிடிக்கும்.
.
நன்றி மாதேவி.
நீக்குசஸ்பென்ஸை கொஞ்சம் திசை திருப்பினேன். அப்படியும் யாரும் தெரிஞ்சிக்கலை.
பதிலளிநீக்குகூர்மையாய் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வெகு சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.
சரி, சொல்லிடட்டுமா,
சொல்லுங்க..
சொல்லுங்க..
நீக்குசொல்லுங்க..
சொல்லுங்க..
கி. ராஜேந்திரனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குமுதத்தில் 'எனக்குப் பிடித்த கதை' என்று
நீக்குஎழுதச் சொல்லி ஒரு போட்டி வைத்தார்கள்.
நான் கி.ராஜேந்திரனின் 'நெஞ்சில் நிறைந்தவள்' என்ற நாவலை எனக்குப் பிடித்த கதையாக எழுதி அந்தப் போட்டிக்கு அனுப்பி வைத்து பரிசு பெற்றேன். அந்தக் கட்டுரை கி.ராஜேந்திரன் பார்வைக்கும் பட்டு எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.
அவர் கையெழுத்து கிறுக்கலாக இருக்கும். ஆனால் இந்த அன்பளிப்பு புத்தகத்தில் தெளிவாக எழுதியிருப்பது அவர் அல்லவே என்று பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
நீக்குஅப்புறம் தான் எழுதியிருக்கும் வாசகங்களை உன்னிப்பாகப் படித்தேன்.
ஆமாம். ஒரு நினைவுக் குறிப்பு போல கல்கி ராஜேந்திரன் தன் பரிசாக அனுப்பி வைத்திருந்த புத்தகத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர் யாரோ தெளிவாக எழுதியிருக்கிறார்கள், கல்கி ஸ்ரீ ராஜேந்திரன் அவர்களின் அன்பளிப்பு என்று.
என் சேமிப்பில் கி. ராஜேந்திரன் கடிதத்தைத் தேடி எடுத்து இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அது இப்போதைக்குக் கிடைக்கவில்லை.
கிடைக்கும் பொழுது ஒரு வியாழனில் போட்டுக் கொள்ளலாம். சரியா?
ஓ.. இதுதானா? அது என் தந்தை பாஹே வின் கையெழுத்து. கல்கி ராஜேந்திரன் தன்னை 'அவர்களின்' என்று விளித்துக் கொள்வாரா என்ன...
நீக்கு//அந்தக் கட்டுரை கி.ராஜேந்திரன் பார்வைக்கும் பட்டு எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.//
நீக்குஅடடே.. அந்த நேரம்.. அந்தக் கடிதத்தை கையில் வாங்கி ஆச்சர்யப்பட்ட அந்த நேரம் வந்த சந்தோஷம் விலை மதிக்க முடியாததாய் இருந்திருக்கும்.
இருந்தது தான்.
நீக்குஇருந்தாலும் அதை வைத்துக் கொண்டு
கல்கி பத்திரிகையிடம்
நெருங்க நான் முயற்சித்ததே இல்லை. ஏனென்றால் எழுதுவதைப் பொறுத்த மட்டில்
நான் ஜெயகாந்தனின் ஸ்கூலில் படித்தவன்.
நமது தளத்தில் காலச்சக்கரம் நரசிம்மாவின் சங்கதாரா பற்றி 'படித்ததன் பகிர்வு' எழுதி இருந்தேன். திடீரென அந்தப் பதிவில் நரசிம்மமாவே வந்து கமெண்ட் போட்டதும் ரொம்ப ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் ஆனது. அதேபோல ஒருதடவை தமயந்தி என்பவர் எழுதிய சிறு கதையை சிலாகித்திருந்தேன். நீண்ட நாட்கள் கழித்து அவரே வந்து கமெண்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
நீக்குரகுபதி ராகவ ராஜாராம்!..
பதிலளிநீக்குமூலமானது வேறு..
காந்தியை குஷிப்படுத்துவதற்காகவே வரிகள் மாற்றப்பட்டன..
அப்படியே நமக்கும் கொடுக்கப்பட்டது..
பாட்டன் கேணி வெட்டியதால் நல்ல தண்ணீரைக் குடிக்க முடிய வில்லை..
நல்லவேளை..
தப்பித்து விட்டோம்!..
:)))
நீக்கு'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலை எழுதியது யார்?
நீக்குசொல்லுங்கள்
பார்ப்போம்.
காந்தியை குஷிப்படுத்த என்று சொல்லி யார் யாரெல்லாமோ தங்களைக் குஷிப் படுத்திக் கொள்கிறார்கள் போலிருக்கு..
நீக்குபரிதாபம்.
ஹா.. ஹா.. ஹா..
நீக்குஅல்லது
ஹிஹிஹி...
// ''ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலை எழுதியது யார்?
நீக்குசொல்லுங்கள் பார்ப்போம். //
பாடல் காந்தியால் பிரபலம் அடைந்தாலும் இது DHUN வகையறாவைச் சேர்ந்தது. துளசிதாசரால் எழுதப்பட்டது என்றும், காந்திக்கு சற்றே மாறுபப்ட்ட வரிகளுடன் தரப்பட்டது என்றும், லக்ஷ்மணாச்சார்யா எழுதியது என்றும் தேடிப்படிக்க முடிகிறது. துளசிதாசர் ஈஸ்வர அல்லா தேரோ நாம் எழுதி இருப்பாரா... சந்தேகம்தான்!
No. Not by Thulsidas.
நீக்குகுஜராத்தியர் ஒருத்தர் எழுதினது.. அநேகமாகக் கனு தேசாயாக இருக்கலாம்.
நீக்குஅப்போ விக்கி சரியான தகவல் தரத் தவறுகிறது.
நீக்குஇது காந்தியே தன்னுடைய மாலை நேர பஜனைக்கு என்றே தேர்ந்தெடுத்த வரிகள். அவராலேயே இது சேர்க்கப்பட்டது என்பார்கள். எனக்குச் சரியான ஆதாரம் கிடைத்ததும் விபரமாக எழுதுகிறேன். ஆனால் இந்தப் பாடலை எழுதியவரால் காந்தியைக் குஷிப்படுத்தவென சேர்க்கப்பட்ட வரிகள் அல்ல இவை. குஜராத்தில் இந்த வரிகள் இல்லாமல் தான் கோயில்களில் பஜனைப்பாடல்களோடு பாடுவார்கள்.
நீக்குஇந்தப் பாடல் பற்றி ஒரிஜினல் விவரங்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரிஜினலை நம் இஷ்டத்துக்கு மாற்றி தனியாய் ரசிக்கலாம். பொதுவில் எப்படி வைக்கலாம்? படைத்தவருக்கு என்ன மரியாதை?
நீக்குதியாகபூமி தொலைக்காட்சியில் திரைப்படமாக பார்த்தேன், அதன் பின் நூலகத்தில் தேடி புத்தகத்தை வாசித்தேன்.
பதிலளிநீக்குகொசு புலம்பலை தடுக்க எங்கள் வீட்டில் ஓடாமாஸ்தான் தடவி கொள்வோம். கடித்தால் வீட்டில் என்ரால் விபூதி தடவி கொள்வேன். அரிப்பு நின்று விடும் இல்லையென்றால் தடிப்பு தடிப்பாக ஆகிவிடும்.
தினமலர் செய்தி பகிர்வு பயன் உள்ளது
வறண்ட மேகங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
காதல் எத்தனை காதலடி! - பானுமதி வெங்கடேஸ்வரன் பகிர்வு, பொக்கிஷபகிர்வு, நகைச்சுவை அனைத்தும் நன்றாக இருக்கிறது.
இன்றைய கதம்பம் அருமை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குநன்றி கோமதி அக்கா. ஒரே ஒரு பாராட்டு.
நீக்குகீதா ரெங்கன் மற்றும் JKC கூட சொல்லி இருந்தார்கள். கவனிக்கவில்லையா?
நீக்குஅட? நானும் பாராட்டி இருந்தேனே! :(
நீக்குஆமாம். ஆமாம்.
நீக்குதியாக பூமியைப் பற்றி என் அப்பா கூறிய தகவல்கள். அந்தப் படம் படமாக்கப்பட்ட பொழுதே விகடனில் தொடராக வந்ததாம். முடிவை எழுதக் கூடாது, அப்போதுதான் படத்திற்கு கும்பல் வரும் என்று வாசன் கூற, அதற்கு கல்கி ஒப்புக்கொள்ளாததால்தான் கல்கிக்கும், வாசனுக்கும் கருத்து வேற்றுமை வந்ததாம்.
பதிலளிநீக்குஇது இன்னொரு தகவல். படம் வெளியாகும் அல்லது தயாரிக்கப்படும் சமயமே பத்திரிகையில் வருவது என்பது பின்னாளில் மௌனகீதங்கள் படம். விக்ரம் கூட அப்படித்தானா, நினைவில்லை.
நீக்குவாசனுக்கும் கல்கிக்கும் மனத்தாங்கல் வந்தது இதனால் இல்லை. வாசனிடம் சொல்லிக்கொள்ளாமல் கல்கி சத்யாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் போய் விட்டார். வாசன் கல்கியைப் போகக் கூடாதுனு சொல்லி இருப்பார் போல. ஆனால் கல்கியோ அதைத் தீவிரமாக எடுத்துக்கலை. சிறையிலிருந்து திரும்பி வந்ததும் வாசன் கல்கியிடம் உங்கள் சேவை இனித் தேவை இல்லை என்று சொல்லி விட்டாராம். மனம் நொந்த கல்கி அதன் பின்னர் 2 மாதங்களுக்குள்ளேயே ராஜாஜி ஆலோசனையில் சதாசிவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் கல்கி வாராந்தரி! இது சித்தப்பா சொல்லி இருக்கார். சித்தப்பாவும் ஜெமினி ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தது ஏனெனில் ஸ்டுடியோவிலும் வேலை பார்த்துக்கொண்டு பத்திரிகைகளுக்கும் சித்தப்பா எழுதினதில் வாசன் அவர்களுக்கு விருப்பமில்லை என்பார்கள். அது ஏதோ பேச்சு வார்த்தையில் குற்றம் குறை வரச் சித்தப்பா வேலையை விட்டு விலகி விட்டார். இது சித்தியை அவர் கல்யாணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளும் பிறந்தப்புறமாத்தான்.
நீக்குஆமாம். இந்தத்தகவல் பற்றி ஒரு வருடத்துக்குள் நானும் இதை ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். இதில் என்று சரியாய் நினைவில்லை. பொன்னியின் புதல்வர் படிக்காமலேயே வைத்திருக்கிறேன். எடுத்து படிக்க வேண்டும்.
நீக்குராமுவின் ஓவியம் மிக அழகு. பின்னாளில் கார்டூன் பாணி வந்து விட்டது.
பதிலளிநீக்குஆமாம். கதைக்குக்கூட அபப்டி வரையும்போது ரசிக்க முடியாமல் இருந்தது.
நீக்குகவிதையும், பொக்கிஷமும் அருமை!
பதிலளிநீக்குநன்றி. நன்றி.
நீக்குபயணத்தில் இருக்கும்போது படித்துவிடுகிறேன். ஆனால் சில நேரங்களில் பின்னூட்டங்கள் போடமுடிவதில்லை. காரணம், பயணம் நெட்வர்க், அல்லது நேரமின்மை. இரவு நேரச் சாப்பாட்டிற்குப் பின் உடனே தூங்கினால்தான் அடுத்தநாள் அதிகாலையில் எழுந்துகொள்ளமுடியும் என்றெல்லாம் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ். என்னவோ கடந்த இரு வாரங்களில் வியாழன், வெள்ளி பதிவு சமயம் ரொம்பவே டைட் ஷெடியூலாக இருந்தது.
பதிலளிநீக்குஇன்னும் 3 வாரங்களுக்காவது எங்கும் பயணிப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரே ஊரில் ஒரே இடத்தில் இருந்துகொண்டிருக்கும்போது பயணம் நல்ல மாற்று மருந்து. ஆனால் பாருங்கள், சமயங்களில் இக்கரைக்கு அக்கறை பச்சை என்று ஆகிவிடும். தொடர் பயணங்கள், 'கொஞ்ச நாள் ஒரு மாறுதலுக்கு வீட்டிலேயே இருந்து பார்ப்போமே' என்று எண்ண வைக்கும்!!
நீக்குவீட்டில் இருக்கும்போது ஒரு ரொட்டீனைக் கடைபிடிப்பேன் (காலை 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 11 மணி உணவு, ஆன்லைன் பிரபந்த வகுப்பு 3 நேரங்களில், 6 மணிக்கு முன்னால் இரவு உணவு, பிறகு 9 1/2 மணிக்குள் தூக்கம் என்று). இவையெல்லாம் பயணத்தில் குளறுபடியாகும். பயணத்தால் சென்ற மாதம் 5 நாட்கள் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்கலை. அதுவும் தவிர, தங்குமிடங்களின் சுத்தமின்மையும் கஷ்டமாக இருக்கிறது. செருப்பில்லாமல் கோவில்களில் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது (கல் தரை, ரோடு, சிறு கற்கள் உள்ள சாலை என்று)
நீக்குஆரம்ப ஓவியர்கள் ரொம்பவே மெனெக்கெட்டு சித்திரம் வரைவர். அதனால் ஒரு ஓவியத்திற்கே ஓரிரண்டு நாளெடுத்துவிடும். பிறகு அவர்கள் பிரபலமாகி நிறைய பத்திரிகைகள் அவர்களைப் படம் தரச்சொல்லிக் கேட்கும்போது எளிமையாக வரைய ஆரம்பித்துவிடுவார்கள். இதனால்தான் ஆரம்பப் படங்களுக்கும் பிரபலமானபின் வரையும் படங்களுக்கும் வித்தியாசம் நிறையவே உண்டு. மாருதி போன்ற ஒரு சிலர் விதிவிலக்கு
பதிலளிநீக்குசான்ஸ் கிடைக்கும்வரை அக்கறை, அப்புறம் அலட்சியம் என்றா சொல்கிறீர்கள்? ராமு போன்றோருக்கு அந்த அளவு சான்ஸ் கிடைத்ததாகவும் தெரியவில்லை!
நீக்குகல்கண்டு முழுவதுமாக ராமுதான். பிறகு நையாண்டி கதைகளுக்கு பிற பத்திரிகைகளில் ராமுவின் ஓவியம். (எனக்கு ஒரு சந்தேகம். ராமு, செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்று. அதனால்தான் தமிழ்வாணன் அவரை ஆதரித்தாரோ?)
நீக்குவாட்சப் மருத்துவர்களை மட்டுமல்ல இந்த 'சொல்கிறார்கள்' மருத்துவர்களையும் நான் நம்புவதில்லை. நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அவசரத்தில் மாற்றி நினைவில் கொண்டால் என்னாகும்?
பதிலளிநீக்குவாட்சாப் மருத்துவர்களுக்கு சொல்கிறார்கள் தேவலாம். இவர்கள் ஏற்கெனவே அந்தத்துறையில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். வாட்சாப் மருத்துவர்கள் முகம் தெரியாதவர்கள்!
நீக்கு70 வயதில் திருமணம்.... இதெல்லாம் அவங்க பெர்சனல் விஷயம் என்பது என் எண்ணம் நம்மூரிலேயே இப்படித் திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. சிலர் கம்பேனியன் வேணும் என்று திருமணம் செய்துகொள்கிறார்கள், விளம்பரங்கள் கொடுக்கிறார்கள்.
பதிலளிநீக்குபாலிடெக்னிக் - இது ஒரு ஏமாற்று டெக்னிக். ஏற்கனவே பாலிடெக்னிக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சீட்டுகளே நிரம்பவில்லை என்று ஒரு செய்தி படித்தேன். பசங்க, ஓசிக்கு பாஸ் பண்ணிடுவாங்க என்று ஓமைக்ரான் போன்ற வைரஸ்களை எதிர்பார்த்துக் காத்திருந்திருப்பாங்க. அது நடக்கலைன்னதும் எக்ஸாமுக்கு வரலை போலிருக்கு. கடந்த இருவருடங்களாக ஓசி பாஸ்தானே
முன்பெல்லாம் கல்வியறிவில் தமிழகத்துக்கு ஒரு சிறந்த இடம் இருந்தது. இப்போது எல்லாவற்றுக்கும் இலவசம் அறிவிப்பது போல எல்லா வகுப்புகளுக்கும் ஆல்பாஸ் செய்ய வைப்பதால் தரம் கீ.........ழிறங்கி விட்டது.
நீக்குகொசுக்களை ஒழிக்க எனக்குத் தெரிந்து அருமையான வழி, வடிவேலு ஒரு படத்தில் செய்வதுதான். ஒவ்வொரு கொசுவாகப் பிடித்து பாக்கு/கிராம்பு/ஏலம் உடைக்கும் கடாயில் போட்டு அடிக்கவேண்டியதுதான்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... யதேச்சையாக என்று அந்தக் காமெடி கண்ணில் பட்டது. அந்த காமெடியை வைத்து என் தங்கை மகள் ஒரு காமெடி செய்திருந்தார். அதுவும் நினைவுக்கு வந்தது!
நீக்குதியாகபூமி - நோ கமெண்ட்ஸ்
பதிலளிநீக்குபுரிகிறது. வியாழனின் மெயின் பகுதி சமீப காலங்களில் உங்கள் மனத்தைக் கவரவில்லை என்று தெரிகிறது.
நீக்குஅப்படி இல்லை. ஏற்கனவே செவ்வாய், சனி இரு தினங்களும் கதை. இதில் வியாழனிலும் கதை/நாவல் பற்றி என்றால் தாங்குமா?
நீக்குநான் படித்ததை பகிர்ந்து கொள்ள செவ்வாய், சனியை நாடுவதை விட வியாழனிலேயே வெளியிட்டு விடலாம் என்பது என் எண்ணம்!
நீக்கு