ஞாயிறு, 12 மே, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 19 : நெல்லைத்தமிழன்


மாலை 5 ½ மணிக்கு தரிசனம் முடிந்தது. வெளியில் வந்து தேநீர்க் கடையில் இஞ்சி தேநீர் அருந்தினோம். பிறகு அங்கிருந்து ஆட்டோவில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இட த்திற்கு வந்தோம். 6 மணிக்கு கிட்டத்தட்ட 220 கிமீ தூரமுள்ள புஷ்கரை நோக்கிச் சென்றோம். வழியில் இரவு உணவு முடித்த பிறகு பயணம் தொடர்ந்தது. நள்ளிரவில் புஷ்கரில், நாங்கள் தங்கும் ஹோட்டல் ஓம் என்ற இட த்தை அடைந்தோம். இரவில், பேருந்திலிருந்து எங்கள் bagகளை இறக்கி, அவரவர்க்கு அறைச் சாவியை வாங்கிக்கொண்டு, அறையில் பைகளை வைத்தோம். பலருக்கும் முதல் மாடியில்தான் அறைகள் இருந்தன (இருவர் தங்கும் அறைகள்). சிலருக்கு நள்ளிரவில் தங்களின் கனமான பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு முதல் மாடிக்கு ஏற கஷ்டமாக இருந்தது. யாத்திரையில் இத்தகைய அசௌகரியங்கள் தவிர்க்க முடியாதுஏன் எனக்கு முதல் மாடி, அவருக்கு தரைத் தளம் என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது.

புஷ்கர்

புஷ்கர், கோவில் நகரமாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போதைய கோவில்கள் எல்லாமே 18ம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பிறகு கட்டப்பட்டவை. இதன் காரணம் முஸ்லீம் ஆட்சியில், பல புராதானக் கோவில்கள் இங்கு அழிக்கப்பட்டன. இது, ராஜஸ்தான் மாநிலத்தில், ஆஜ்மீர் மாவட்ட த்தில் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் மிகவும் புனிதமான இடம் இது. புஷ்கரில் குருநானக் மற்றும் குரு கோவிந்த சிங்கிற்கான குருத்வாராக்கள் மிகவும் புகழ் பெற்றவைபுஷ்கர் ஏரியில், குரு கோவிந்தசிங் நினைவாக, கோவிந்த் படித்துறை உள்ளதுமுஸ்லீம் காலத்தில் அழிக்கப்பட்ட கோவில்களை 18ம் நூற்றாண்டில், ஔரங்கசீப் அழிந்து ஹிந்துக்கள் வசம் வந்த பிறகு, புதுப்பித்தனர்.

புராண காலத்தில் பிரம்மா தவம் செய்த இடம். பிரம்மாவிற்கான கோவிலும் இங்கு உள்ளது. பிரம்மா கோவிலும் வராஹர் கோவிலும் மிகவும் பழமையானது.

சீக்கிய குருத்வாராநான் சென்று பார்க்கவில்லை. ஹோட்டலிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான்.

அழகிய குருத்வாரா

அப்பாடாநல்ல அறை கிடைத்தது. நன்றாகத் தூங்குவோம் என்று நினைக்க முடியாது. மறுநாள் காலை 6 மணிக்கு காபிக்குப் பிறகு புஷ்கர் ஏரியில் நீராடலாம் என்று குழுத் தலைவர் சொன்னார். நான் இரண்டாவது முறை சென்றிருந்த போது அமாவாசை தர்ப்பணம். நான் இரவிலேயே (தூங்குவதற்கு முன்பு) என் துணிகளைத் தோய்த்துக் காயப்போட்டுப் பிறகு படுத்துக்கொண்டேன். அதிகாலை 5 மணிக்கு நான் மாத்திரம் எழுந்து (காபி குடிக்கும் வழக்கம் இல்லாதால் அதற்காக் காத்திராமல்) புஷ்கர் ஏரியை நோக்கிச் சென்று, கரையில் ஜாக்கிரதையாக அமர்ந்து Cupனால் தண்ணீரை மொண்டு குளித்தேன். பிறகு தைரியம் வந்து முதல் படியில் இறங்கிக் குளித்தேன். உடை மாற்றிக்கொண்டு, நித்ய கடமைகளைச் செய்த பிறகு கரையில் தர்ப்பணம் செய்தேன். 6 ½ மணிக்கெல்லாம் ஹோட்டலுக்குத் திரும்பினேன். அப்போதுதான் மற்றவர்கள் ஏரியை நோக்கிச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து, துணிகளைக் காயப்போட்ட பிறகு, திரும்பவும் ஏரிக்குச் சென்றேன். அப்போதுதான், குழுவில் இருவர் நீரில் இறங்கும்போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார்கள் என்றும், அதில் ஒருவர் கிட்டத்தட்ட மூர்ச்சையாகிவிட்டார், அவரது செல்போனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது என்பதை அறிந்தேன். பிறகு என்னிடம் குழுத்தலைவர், நான் தனியாகப்போயிருக்க் கூடாது என்றும், ஏதேனும் ஆயிருந்தால் ஆபத்தல்லவா என்றும் சொன்னார். அவர் சொன்னதும் சரிதான்.

அடிக்கடி யாத்திரைகள் மேற்கொள்வதால், காலையில் வெகு சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராவதும், அதுபோல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இரவாகிவிட்தே என்று எண்ணாமல், தோய்க்கவேண்டியவற்றைத் தோய்த்துக் காயப்போட்டுவிட்டுத்தான் தூங்கச் செல்வதும் என்னிடம் உள்ள பழக்கம். இதுபோல, எந்த ஊரிலாவது நேரம் கிடைத்தால், காய்ந்து மடித்து வைத்துள்ளவற்றை அயர்ன் செய்துகொள்வேன். (இதற்காக பக்கத்தில் இருக்கும் அயர்ன் கடையைத் தேடிச் செல்வேன். இதைப்பற்றிப் பிறகு) அதிலும் இரண்டாவது முறை பயணம் செய்யும்போது, எங்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித் தெளிவாகத் திட்டம் போட்டுக்கொள்வேன்.  

புஷ்கர் ஏரிக்குச் செல்லும் பிரதான நுழைவாயில். 


இந்தப் படத்தில் ஒரு கயிறு தெரிகிறதா? அதைப் பிடித்துக்கொண்டுதான் இறங்கணும், குளிக்கணும். இது பாதுகாப்பிற்கு. இதைப்போல, எவர்சில்வர் சங்கிலிகள், ஹரித்வாரில் கங்கையில் குளிக்கும் இடத்தில் தடுப்புகள் இருந்தபோதிலும் நிறைய இருக்கும். அதனைப் பிடித்துக்கொண்டுதான் கங்கையில் குளிக்கணும்.

உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு…  இல்லை ஒருவேளை நீராடுவதற்காக வந்திருக்குமோ?

புஷ்கரில் தர்ப்பணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. (யாத்திரை என்பதால் நேரம்லாம் பார்ப்பது கடினம்). இது போல, திருவட்டாறு, பூரி, திருக்குறுங்குடி போன்ற இடங்களிலும் தர்ப்பணம் செய்ய வாய்த்திருந்திருக்கிறது.

வராஹ Ghகட்-படித்துறை புஷ்கர் ஏரி

ஏரியின் கரையில் அழகிய கட்டிடங்கள். புறாக்களின் கூட்டம்.



ஏரிக்கு வெகுதூரத்தில் தெரியும் இரண்டு மலைச் சிகரங்கள்


புஷ்கர் ஏரி


புஷ்கர் ஏரியின் இன்னொரு தோற்றம். 


ஏரியின் ஒரு கரையைப் பார்க்கும்போது, எனக்கு கங்கை நீரில் படகில் இருந்தபடி, வாரணாசி நகரப் படித்துறைகளைப் பார்ப்பது போலவே இருந்தது.

பிரம்மா கோவில்

மிகவும் பழமையான கோவில் இது. தற்காலத்தில் சீர்படுத்தப்பட்டிருக்கிறது. கோவிலை அடைய, இருபது முப்பது படிகள் ஏறிச்செல்ல வேண்டும்பிரம்மாவுக்கென அமைந்த ஒரே கோவில் இது என்று சொல்கிறார்கள்.



கோவில் நுழைவு வாயிலின் அருகே மணி. கோவில் கோபுரம்

பிரம்மா கோவிலில் இருந்த சிறு சிறு சன்னிதிகள்.

பளிங்குத் தரையில் அந்தக் கல்லை நன்கொடையாகக் கொடுத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோல நான் கோகுலத்திலும் பார்த்திருக்கிறேன். அடுத்த படம், பிரம்மா கோவிலை விட்டுக் கீழிறங்கும்போது பார்த்த சிற்பம்.

கிடைத்த இடங்களிலெல்லாம் கடைகள்தாம்.

பிரம்மா மூலவர்

கோவிலும், பிரம்மாவின் திருவுருவமும்

பிரம்மா கோவிலின் அருகே பார்த்த பசு. பிறந்த திலிருந்தே மூன்றாவது ஜோடி கால்கள் கழுத்திலிருந்து.  இயற்கையின் விநோதத்தைப் பாருங்கள். படைப்புக் கடவுளான பிரம்மாவிடம், இது நியாயமா என்று கேட்க வந்திருந்ததோ? 

பிரம்மா கோவிலை தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து அடுத்தாக ரங்க்ஜி மந்திர் என்று அழைக்கப்படும் தென்னிந்திய பாணியிலான கோவிலுக்குச் சென்றோம். அதைப்பற்றி அடுத்த வாரம் பார்க்கலாமா?

(தொடரும்) 

47 கருத்துகள்:

  1. வட இந்தியாவில் இஞ்சி போட்ட தேநீர் நன்றாக இருக்கும். ஆனால் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன் வெளியில் சாப்பிடுவதில்.

    குழுவாகச் செல்லும் போது சில அசௌகரியங்கள் அதுவும் ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் குழுவில் இதெல்லாம் சகஜம்தான். அதற்குத் தயார் நிலையில் இருப்பவர்கள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கீதா ரங்கன்(க்கா). பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் உணர்வு வருகிறது. இதோ உங்கள் ஃபேவரைட்டான லால்பாக்பிற்குக் கிறம்பிக்கொண்டிருக்கிறேன், நடக்கலாம் என்று

      நீக்கு
    2. குழுவாகச் செல்லும்போது, பல அசௌகரியங்கள், பலவித மனிதர்களின் குணங்களோடு சந்திக்க நேரிடும். அனைத்தையும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளணும்.

      நீக்கு
    3. வருக கீதா ரங்கன்(க்கா). பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் உணர்வு வருகிறது.//

      ஹாஹாஹாஹா.....வ்ந்துட்டுதானே இருக்கேன் நெல்லை, இந்த வாரத்தில். உங்க கருத்துக்கும் பதில் கொடுத்திருந்தேனே!!!!

      கீதா

      நீக்கு
    4. ஆ! லால்பாகிற்கு நடைப்பயிற்சிக்கா...சூப்பர் உங்களுக்கு அருகில் எனக்கு அப்படி இல்லையே, நீங்க எதுக்குப் போறீங்கன்னு தெரியுமே!!!ஹெ ஹெஹெஹெ.....மாங்கா, மாம்பழம், பலா, சீசன்!!!

      கீதா

      நீக்கு
    5. இன்று லால்பாக்கிற்கு நுழையப்போகும் நேரம் 9 மணி. ஆளுக்கு 30 ரூபாய், காருக்கு 40 ரூபாய்னு சொன்னதுனால, அங்க போகாம நேர பெங்களூர் கஃபேக்குப் போனோம். நான் சாப்பிடாமல் ஜெயநகர் வரை நடந்தேன். இன்றைய 10 கிமீ நடை முடிந்தது.

      நீக்கு
  2. படங்கள், மற்றும் கட்டுரை நன்றாக உள்ளன. யாத்திரை எங்கு முடியும். 19 வாரங்கள் ஓடி விட்டனவே. ஒவ்வொரு இடத்திற்கு சென்ற தேதியையும் குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். யாத்திரை பத்து நாட்கள் என்றாலும் சென்ற கோவில்களை, புகைப்பட உலாவாக்க் கொடுப்பது நோக்கம். ஓரு வாரப் பதிவிற்கு 17-25 படங்கள். இதனை யாத்திரைச் சுருக்கமாக ஒரு சில வாரங்களில் முடித்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு இடத்தின் கோவில், புகைப்படங்கள. விவரங்கள் எனத் தொகுப்பதால், பதிவுகளின் எண்ணிக்கை, நாள் கணக்கு irrelevantஆகப் போய்விடுகிறது.

      இடையில் வேறு படப் பதிவுகள் அனுப்பணும் என நினைத்து இன்னும் தயார் செய்யவில்லை.

      நீக்கு
  3. படங்களும் தகவல்களும் அருமை! ஏரியின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. அந்த பசுவைப்பார்க்கும் போது பாவமாக உள்ளது. அதற்கான உங்கள் கேள்வியும் நியாயமானது தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் மேடம். சிலவற்றைப் பார்க்கும்போது படைப்பின் குறையும், எதனால் இது நிகழ்ந்தது?, பூர்வஜென்ப பயனோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. அப்போதுதான், குழுவில் இருவர் நீரில் இறங்கும்போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார்கள் என்றும், அதில் ஒருவர் கிட்டத்தட்ட மூர்ச்சையாகிவிட்டார், அவரது செல்போனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது //

    இதெல்லம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள். நம்மால் மற்றவர்களுக்கும் கஷ்டமாகிவிடுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாதங்களுக்கு முன்னர் பூரி யாத்திரையின்போது, நடு இரவில் ஒரு தங்குமிடம் வந்து சேர்ந்தோம். தூக்கக் கலக்கத்தில் கையில் பெட்டியோடு பேருந்து இருந்த இடத்திலிருந்து தங்குமிடத்திற்கு நடக்கும்போது கவனக்குறைவால் சரிந்து விழுந்து இடுப்பில் அடிபட்டு, மறுநாள் விமானத்தில் கூட வந்தவர்களோடு ஒருவர் திரும்பினார்.

      நீக்கு
  6. நானும் பயணம் செய்யும் போது என் துணிகளைத் துவைத்து போட்டு விடுவது வழக்கம். பயண நாட்களைப் பொருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதில் கவனமாக இருப்பேன் கீதா ரங்கன். சில நேரங்களில் காலையில் டேங்கில் தண்ணீர் தீர்ந்துவிட்டால், தோய்த்ததுதான் காரணம் என்றும் சொல்லிடுவாங்க இல்லையா?

      நீக்கு
    2. நான் இப்படியான குழுவில் போனதில்லையே, நெல்லை. நானும் மகனும் நம் வீட்டு உறவினர் குழுவுடன் போயிருக்கிறேன் 15 நாள் திருநெல்வேலி மலைகள் அருவிகள் என்று.

      கீதா

      நீக்கு
    3. திரும்பவும் திருநெவேலி போகலாமா என்று யோசிக்கிறேன். வெயில் காலம் முழுமையாக முடியட்டும்.

      நீக்கு
  7. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது... ஆனால் தமிழ் மொழி சிறப்பாகப் பேசப்படுவது உலகத்தில் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த படி நெல்லைச் சீமை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. ஏரிக்கரையின் அழகான படங்கள். புறாக்கள் பறக்கும் புறா படம் செம. பறவைகள் பறப்பதை எடுக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும் டக்குனு எடுக்கணும் இல்லைனா ஏதேச்சையாக அமைந்தால் உண்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் புறாக்கள் கூட்டத்தைப் படமெடுத்திருக்கிறேன். கொஞ்சம் காத்திருந்து சட் என்று நாம் கேமராவோட போனால் அவை பறக்கும். நான் முதன் முதலில் துபாயில் 93ல் எடுத்த போட்டோ புறாக்கள் கூட்டம்தான்.

      நீக்கு
  9. ஏரியின் தூரத்தில் தெரியும் மலைகள் அந்தப் படம் ரொம்ப நல்லாருக்கு, நெல்லை புஷ்கர் ஏரியும் ரொம்ப அழகா இருக்கு. கரையில் பழைய கட்டிடங்கள் அம்சமா இருக்கு!

    //ஏரியின் ஒரு கரையைப் பார்க்கும்போது, எனக்கு கங்கை நீரில் படகில் இருந்தபடி, வாரணாசி நகரப் படித்துறைகளைப் பார்ப்பது போலவே இருந்தது.//

    ஆமா, (நான் நேரில் பார்த்ததில்லை படங்களைப் பார்த்ததில்லிருந்து சொல்கிறேன்) கங்கைக்கரை போல...

    பிரம்மா கோயில் படங்கள், புஷ்கர் விவரங்கள் படங்கள் எல்லாமே செம, நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணாசியில் சுமார் ஐந்து நாட்கள் தங்கியிருக்கிறேன். அது பற்றிய தொடரும் படங்களுடன் எழுதணும். எபி எங்க போகப் போகிறது... இன்னும் வருடங்கள் இருக்கே.. எழுதுகிறேன்.

      நீக்கு
  10. ஏரியும் மலைகளும் - அழகான படங்கள் நெல்லை அவர்களுக்கு நன்றி..
    புஷ்கர் ஏரியின் தரிசனம்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  11. கரையில் காத்திருக்கும் கொக்கு..

    காதலிக்காக இருக்குமோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.. இரவு முழுதும் ரகசியம் பேசி சாதித்துக் கொண்டவன், அதிகாலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டானே என்ற வருத்தமோ?

      நீக்கு
  12. சதுர்முக பிரம்ம தேவனின் திருக்கோயில் படங்கள், புஷ்கர் பற்றிய விவரங்கள் படங்கள் அருமை.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  13. அன்பின் நெல்லை அவர்களுக்காக...

    நேற்று தாங்கள் அடியெடுத்துக் கொடுக்க இன்றைக்கு ஒரு பதிவு..

    தங்களுக்காக...
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  14. "ஓம் நமோ நாராயணா."

    இன்று ஸ்ரீ ராமானுஜரின் ஜெயந்தி நாள்.

    மனித குல சமத்துவத்தை
    உபதேசித்த மஹானின்
    நினைவுகள் போற்றி.. போற்றி..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி சார். எங்கள் பஹ்ரைன் சத் சங்கிற்காக நானும் கலந்துகொண்டு பிரபந்தம் சேவித்தோம்.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. பதிவும், படங்களும் . விவரங்களும் அருமை.
    கடைசி படம் மனதை கனக்க வைத்து விட்டது.
    இறைவன் ஏன் இப்படி செய்தார்? கேள்வி மனதில் எழும் தான் எல்லோருக்கும்.
    நடக்க கஷ்டபட்டதா? போட்டோவில் பார்த்தே எனக்கே மனது கஷ்டமாக இருக்கிறது. நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.

    ஏரியும் அழகு. காத்து இருக்கும் கொக்கும் அழகு.
    ஏரியில் மீன் இருக்கா?


    //ஏரியின் கரையில் அழகிய கட்டிடங்கள். புறாக்களின் கூட்டம்.//
    மனதை கவர்ந்த படங்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம். இது மாதிரியானவற்றை நான் லண்டன் மியூசியத்திலும் பார்த்தேன் (Believe it or not). இந்த மாதிரி பலவித விலங்குகளின் பாடம் பண்ணிய உடல் (அல்லது மாடல்).

      ஏரியில் மீன் பார்த்த நினைவு இல்லை ஆனால் நிச்சயம் இருந்திருக்கும்.

      நீக்கு
  17. படங்களும் பேசுகின்றன.
    கற்பனை உலா சாத்தியப் பட்டோருக்கு அந்தந்த இடங்களில் தாமும் இருக்கின்ற, பார்க்கின்ற
    பேறும் வாய்க்கின்றன.
    விவரிப்புக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி சார். எனக்குமே இதனைப் படிக்கும்போது நான் சென்றிருந்த யாத்திரைகளை நினைவுபடுத்தும்.

      நீக்கு
  18. தெரியாத இடங்களில் இப்படி அதிகாலையில் தனியாக செல்வது தவிர்க்கப்பட வேண்டியது.

    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி.... இளங்கன்று பயமறியாது (ஹா ஹா ஹா)

      நீக்கு
  19. நீங்க்ள் அதிகாலை தனியாக ஏரிக்குக் குளிக்கச் சென்றதும் அங்கு கூட வந்தவர்களில் இருவர் கால் வழுக்கி விழுந்ததையும் வாசித்த போது நீங்கள் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கையில் மனம் பதட்டமடைந்தது. இனி இது போன்ற ரிஸ்க் எடுக்காதீர்கள்.

    அருமையான படங்களும் விவரங்களும், மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. இன்றைய இன்னொரு விசேஷம் என்னவென்றால் சங்கர ஜெயந்தியும் சேர்ந்து வந்திருக்கிறது.

    "ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர.."

    மஹான்கள் ஸ்ரீ சங்கரரும்
    ஸ்ரீ ராமானுஜரும் சேர்ந்து அருள் பாலிக்கும் விசேஷ நாள்!..

    சைவ வைஷ்ணவ ஒற்றுமை ஓங்குக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜீவி சார்.... ஆன்மீகம் தழைத்து ஓங்கட்டும்.

      நீக்கு
  21. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் யாத்திரை பதிவும் அருமை.தங்களின் அருமையான விஸ்தரிப்பில் பல இடங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். நன்றி.

    படங்கள் வழக்கம் போல நன்றாக உள்ளன. புஷ்கர் ஏரியின் பிரம்மாண்டம் கொஞ்சம் பயத்தை உண்டாக்குகிறது. நீர் நிலைகளே அதிகாலை, மற்றும் இரவு நேரத்தில் கொஞ்சம் பீதியை தரும். இதில் தாங்கள் தனியே அங்கு சென்று குளித்து விட்டு வந்த செய்தி மனக் கலக்கத்தை உண்டாக்கியது. பயணத்தில் கூடவே வந்தவர்கள ஓரிருவருடன் சேர்ந்து சென்றிருக்கலாம்.

    புஷ்கர் ஏரிக்கரையில் பறக்கும் புறாக்கள், நீரின் அருகிலேயே படியில் காத்திருக்கும் கொக்கு (அதுக்கு என்ன யோசனையோ? தனியாக வந்திருக்கோமே..! எல்லோருக்கும் இருக்கும் நியதிகளின்படி அருகில் இருக்கும் அந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டுதான் ஏரியில் இறங்கி குளிக்க வேண்டுமோ என யோசிக்கிறதோ என்னவோ?:)) )

    மூலவர் சதுர்முக பிரம்மதேவனை தரிசித்துக் கொண்டேன். கோவில் நன்றாக உள்ளது. கோவில் படங்கள் யாவும் அழகாக இருக்கிறது. அந்த பசுவின் மன உளைச்சகள் எப்படியிருக்குமென புரிந்து கொள்ள முடிகிறது. படைத்தவனை கண்டு முறையிட்டாலும் , அதன் வாழ்க்கை வலிகள் நிரம்பியதுதான். இதைப் போலுள்ள ஜீவன்களை பார்க்கும் போது நம் மனது தான் கஸ்டமாகிறது. என்ன செய்வது?

    அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... கொஞ்சம் பிஸியாயிட்டீங்களா? தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டதா? எங்க ஊர்லலாம் மழை அவ்வப்போது பெய்யுதே..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!