திங்கள், 13 மே, 2024

"திங்க"க்கிழமை  :  பனீர்க் குருமா - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 பனீர் குருமா எனப்படும்

ஊக்கி  குருமா 
(நம்ம உருளக் கெழங்கு குருமா தாங்க!..)

*** *** **** *** ***




பனீர் 200 கிராம்
உருளைக்கிழங்கு  2
நடுத்தரமாக
கேரட் 1 நடுத்தரமாக
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
கல் உப்பு - சிறிதளவு

அரைப்பதற்கான பொருட்கள்:
தேங்காய்த் துருவல் - 1/4 கப் 
முந்திரிப்பருப்பு 3 
இஞ்சி சிறிதளவு
பூண்டு 4
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு  1 டீஸ்பூன்
பட்டை - சிறிது
கிராம்பு  2 
ஏலக்காய்  2
நட்சத்திரப் பூ 1

நட்சத்திரப் பூவை உடைத்து விதைகளை நீக்கி விட்டு மெல்லிய ஓட்டினை மட்டும் தேங்காய்த் துருவலுடன் சேர்த்துக் கொள்ளவும்..

மசாலா :
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டீ ஸ்பூன் 
மல்லித்தூள்  2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள்  - இவை எல்லாம் வீட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தால் மிக மிக நல்லது..

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
கடலெண்ணெய் சிறிதளவு
சோம்பு  1/4 டீ ஸ்பூன்
பிரியாணி இலை - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு 

பனீர் கட்டியை ஒருமுறை அலசி விட்டு (பெரியதாக இருந்தால்) சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.. 

உருளைக் கிழங்குகளையும் நன்றாகக் கழுவி விட்டு விருப்பப்படி  நறுக்கிக் கொள்ளவும்.. இதற்குமேல் கேரட், வெங்காயம் தக்காளியை விட்டு வைக்கக் கூடாது.. இவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்..

அரைப்பதற்கு என்று குறிக்கப்பட்டுள்ள (தேங்காய் துருவல் முதலான) அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்துக் கொள்ளவும்..

குழம்பு வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் உருளைக் கிழங்கு துண்டுகளை வேகவைத்துக் கொள்ளவும்.. 

உருளைக் கிழங்கு அரை வேக்காட்டில் இருக்கும்போது  கேரட், வெங்காயம் தக்காளியையும் சேர்த்து தேவையான உப்பு இடவும்..

குழம்பு கொதித்து வரும்போது தேங்காய் விழுதையும் மசாலாத் தூள்களையும் சேர்த்து விடவும்.. சில நிமிடங்களில் குழம்பின் நறுமணம்.. அடடா!..

இப்போது பனீர் துண்டுகளைச் சேர்த்து - உடனடியாக குழம்பைத் தாளித்து இறக்கி விடவும்..

ஒரு முக்கியமான பொருள் சேர்மானத்தில் இல்லையே?.. என்றால், 

அது வேண்டாம்...  விட்டுடுங்க!..

***

37 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். நன்றி.

      நீக்கு
    2. @ கமலா ஹரிஹரன்..

      /// இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்..///

      தங்கள் பிரார்த்தனை க்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இன்று சமையல் களம் காண்பதற்கு வருகை தருகின்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய குறிப்பினையும் அன்புடன் ஏற்றுக் கொண்டு வெளியிட்ட ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக பனீர் குருமா படங்களுடன் நன்றாக உள்ளது.

    அழகான படங்களின் அணிவகுப்பு, அளவான பொருட்களின் சேர்மானம் என பனீர் குருமா, சப்பாத்தி, பூரிக்கென தயாராக இருப்பது கண்டு பசி உணர்வு அதி காலையிலேயே வருகிறது.

    பக்குவங்களை தாங்கள் மிக அழகாக சொல்லியிருப்பதை மிகவும் ரசித்தேன்.

    பனீர் குருமாவிற்கு தேவையானது எல்லாம் பக்குவமான சுவையுடன் இணைந்து சேர்ந்திருக்க, மேலும், முக்கியமான பொருள் வேண்டாமென்றால், புரியவில்லையே..! அதையும் நீங்களே விளக்கினால் நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      மேலும், முக்கியமான பொருள்.. என்று சிலர் கச்சை கட்டிக் கொண்டு வருவார்கள்..

      அந்தப் பொருள் -
      கசகசா!...

      அது சாத்வீகமான உணவுக்கு தேவையில்லாதது....

      அதைத்தான்
      இலை மறைவாகச் சொன்னேன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      இறுதியில் சேர்க்கக் கூடாத பொருள் எதுவென விளக்கமான பதில் தெரிந்து கொண்டேன். கசகசாவும், ஜாதிக்காயும், (ஒரளவுக்கு மேல் சேர்த்தால்) ஒரு மயக்க நிலை ஏற்படுத்தும் கேள்வி பட்டுள்ளேன்.

      எங்கள் வீட்டில் முன்பு பொதுவாக இந்த மசாலா பொருட்கள் சேர்த்து இந்த மாதிரி கூட்டு (குருமா) அதிகமாக செய்ததில்லை. புகுந்த வீட்டுக்கு வந்த புதிதில், இந்த மாதிரி வாசனைகள் எங்கள் புகுந்த வீட்டு உறவுகளுக்கு பிடிக்காது என்பதை தெரிந்து கொண்டேன். எங்கள் மாமியார் பூண்டு கூட ஆண்களுக்கு அதிகமாக தரக் கூடாது எனச் சொல்லுவார். அதன்படி வாழ்ந்து வந்தாகி விட்டது இப்போது காலங்கள் மாறுயதில் எங்கள் இளைய தலைமுறைகள் ஒரளவு இந்த மாதியான கூட்டு வகைகளை விரும்புகிறார்கள். இதுவும் அவரவர் விருப்பங்கள்தானே..! நாணல் மாதிரி எனக்கென ஒரு விருப்பங்கள் இல்லாது வாழ்க்கை ஆற்றுடன் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. உடன் பதில் தந்தமைக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. கசகசா...

    நல்லது என்று புலால் உணவுகளில் சேர்க்கின்ற வழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்றது...

    புலால் உணவு தான் பிரதானம் என்று இருக்கின்ற அரபு நாடுகளில் இது தடை செய்யப்பட்ட ஒன்று..

    பதிலளிநீக்கு
  9. இங்கே புலால் உணவுகளில் திளைத்திருந்தோர் கூட அங்கே சென்றால் அடக்க ஒடுக்கமாகி விடுவர்..

    அங்கே இது தடை செய்யப்பட்ட் பொருளாகும்..

    பதிலளிநீக்கு
  10. குறிப்பாக வளைகுடா நாடுகளில் - கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனை...

    பதிலளிநீக்கு
  11. கசகசா என்பது மூலிகை என்று கொண்டாடுகின்றார்கள்..

    இச்செடியின் சூலகத்தில் இருந்து தயாரிக்கப்படுவதே

    அபின்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அதுதான் ஒரு வித மயக்க நிலையை உண்டாக்குகிறது போலும். இது போலுள்ள உணவு பொருட்களை தவிர்த்து சில உணவு பொருட்களில் நம் நல்லதையும் இணைத்து தருகிறது இயற்கை. ஆனால், நாம் அதை முற்றிலும் ஒதுக்குகிறோம். அறியாமைதான் காரணம். வேறு என்ன சொல்வது..?

      நீக்கு
  12. நான் பயின்ற காலத்தில் பள்ளியில் பதினோரு வருடங்கள்..

    பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடம் என்ற ஒன்றை பதினொன்றிலும் தொடர வேண்டும்...

    கல்லூரியில் புகுமுக வகுப்பிலும் அது தொடரும்..

    எனது விருப்பம் _ இயற்கை அறிவியல்.. தாவரவியல், உயிரியல்...

    (Natural science..
    Botany, Zoology )

    பதிலளிநீக்கு
  13. @ கமலா ஹரிஹரன்..

    /// கசகசாவும், ஜாதிக்காயும், (ஒரளவுக்கு மேல் சேர்த்தால்) ஒரு மயக்க நிலை ஏற்படுத்தும் கேள்வி பட்டுள்ளேன்... ///


    உண்மை தான்..
    ஒரு காலத்தில் இந்த இரண்டையும் வயதுப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்..

    கொட்டைப் பாக்கு - இதற்கும் அதே குணங்கள்..

    அந்த காலத்தில் சின்ன பசங்கள் தாம்பூலம் தரித்தால் கோழி வந்து முட்டும் .. கனவில் மாடு வந்து மிதிக்கும் ... என்றெல்லாம் பயமுறுத்தி வைப்பார்கள்...

    ஏன்?..

    இளம் பிள்ளைகளுக்கு காலமல்லாத காலத்தில் பாலினக் கிளர்ச்சி ஏற்பட்டு விடக்கூடாது!.. என்பதனால் தான்...

    இத்தனைக்கும் நமக்கு தாம்பூலம் மங்கலம்..

    ஆனால்,
    தாம்பூலம் தரிப்பது அரபு கலாச்சாரத்தில் ஹராம்...

    படுபாதகம்!..

    பதிலளிநீக்கு
  14. @ கமலா ஹரிஹரன்

    /// ஆனால், நாம் அதை முற்றிலும் ஒதுக்குகிறோம். அறியாமைதான் காரணம். வேறு என்ன சொல்வது?... ///

    அறிவு நிறைந்த ஆன்றோர்கள் எல்லாவற்றையும் வகுத்து வைத்திருக்கின்றனர்..

    இன்னாருக்கு இது.. இது... என்று கணக்கு அன்றைய மருத்துவத்தில் இருக்கின்றது..

    நவீன கல்வியால் அவற்றை எல்லாம் கடந்து விட்டோம்..

    என்ன செய்வது?..

    பதிலளிநீக்கு
  15. அகத்திக் கீரையும் பாகற்காயும் நல்லது தான்...

    ஆனால் சித்த வைத்தியத்தின்படி மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் - அகத்திக்கீரையையும் பாகற்காயையும் சாப்பிடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது...

    இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கும் காரணம்

    உணவுப் பழக்கம் மாறிப் போனது தான்...

    பதிலளிநீக்கு
  16. அகத்திக் கீரையும் பாகற்காயும் நல்லது தான்...

    ஆனால் சித்த வைத்தியத்தின்படி மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் - அகத்திக்கீரையையும் பாகற்காயையும் சாப்பிடக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது...

    இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கும் காரணம் உணவுப் பழக்கம் மாறிப் போனது தான்...

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. உருளைக்கிழங்கு குருமா செய்முறை விளக்கமும், படங்களும் அருமை.
    நேற்று தக்காளி, பனீர் போட்டு சப்பாத்திக்கு குருமா செய்தார் மருமகள். மசாலா பொருட்கள் அளவோடு சேர்த்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  19. மசாலா பொருட்கள் அளவோடு சேர்த்தால் நல்லது தான்...

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  20. பன்னீர் உருளை குருமா நன்றாக உள்ளது.

    மசாலாக்கள் அளவுடன் இருப்பது நன்றே. நான் வீட்டு மசாலாக்கள்தான் உபயோகிக்கிறேன்.

    நாங்கள் சமையலில் கசகசா சேர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  21. ஆகா... நீங்களும் நம்ம கட்சியா!..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி மாதேவி..

    பதிலளிநீக்கு
  22. பனீர் / உருளக்கிழங்கு குருமா செய்முறை மிக நல்லாருக்கு, துரை அண்ணா.

    உங்கள் செய்முறை குறிப்பும் பார்த்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  23. சமீபத்தில் ஒரு செய்தி வாசித்தேன். ஹோட்டல்கள் சிலவற்றில் பனீர் கலப்பட பனீர் பயன்ப்ப்டுத்தப்படுகிறது என்றும் அதைக் கண்டுபிடிப்பது எப்படி என்றும் சொல்லப்பட்டிருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...

      பாலைக் காய்ச்சி ஆறவைத்து பனீர் தயாரிக்காமல்
      சில ரசாயனங்கள் சேர்க்கையால் பால் நேராகப் பனீர் ஆக்கிப் பட்டு விடும் என்கின்றனர்..

      என்னவோ எல்லாவற்றுக்கும் கேடு காலம் தான்!...

      நீக்கு
  24. உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்ட பனீர் குருமா வில் சேர்க்கக் கூடாதது பற்றி சகோதரி கமலா ஹரிஹரன் அவர்களின் கருத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

    அதற்கு ஏன் அப்படி ஒரு பெயர் 'கசகசா'

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசகசா செடியின் சூலகத்தில் இருந்து தான் ஓபியம் எனப்படும் அபின் இருந்து தயாரிக்கப் படுகின்றதாகச் சொல்கின்றார்கள்..

      அரபு நாடுகளில் கசகசா தடை செய்யப்பட்ட ஒன்றாகும்..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!