வியாழன், 16 மே, 2024

ஆர்வக் கோளாறால் வந்த அவஸ்தை

 மகன் திருமணம் முடிந்து குலதெய்வம் கோவிலுக்கு சென்றோம். 

நல்லவேளையாக குலதெய்வம் கோவில் இருக்குமிடம் அருகிலேயேதான் திருமணம் நடந்திருந்தது.

முன்னதாகவே சொல்லி வைத்தால்தான் நம் நேரத்துக்கு அர்ச்சகர் வருவார்.  இல்லாவிட்டால் அவர் இஷ்டப்பட்ட நேரத்துக்கு வந்து நித்ய பூஜை செய்து செல்வார்.எனக்கு மொட்டை போட்டபோது முதல் என் மகன்களுக்கு மொட்டை போட்டது வரை அங்கிருந்த அர்ச்சகர் இப்போது இல்லை.  தற்சமயம் வேறொருவர் பொறுப்பு வகிக்கிறார்.  அதிலும் மிகச் சமீபத்தில் அவரையும் நீக்கி விட்டு வேறொருவரை நியமித்திருப்பதாய்ச் சொன்னார்கள்.  பார்த்ததில்லை.

முதல் நாள் திருமணத்துக்கு வந்திருந்த எங்கள் பழைய அர்ச்சகர் ராமகிருஷ்ணன், மறுநாள் காலை ஏழரை மணிக்கு வரச் சொல்லி இருந்தார்.  அவரே வருவதாகவும், பூஜைப்பொருட்கள் எல்லாம் தானே வாங்கி வந்து விடுவதாய்ச் சொல்லி இருந்தார்.  ஆர்வக்கோளாறு.

அருகிலேயே இருக்கும் சேங்காலிபுரம், குடவாசல் உள்ளிட்ட ஊர்களில் இருக்கும் பழைய நண்பர்கள், புதிய ஃபேஸ்புக் நண்பர்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்வோம்.  சேங்காலிபுரத்தில் இருந்த எங்கள் உறவினர் மாற்றிக் கொண்டு அவிநாசி சென்று விட்டார்.  அது எங்களுக்கு கொஞ்சம் வசதிக் குறைவு.  திருமணத்துக்கு வந்திருந்த பேஸ்புக் நண்பர்களில் ஒருவரும் நாங்கள் மறுநாள் கோவிலுக்கு வரப்போவதை அறிந்திருந்தார்.  உதவி செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர் அவருக்குத் தெரிந்த சிவாச்சாரியார் ஒருவரை சொல்லி வைத்து விட்டார்.  ஆர்வக்கோளாறு!

காலை கோவிலை நாங்கள் அடைந்தபோது நாங்கள் பார்த்தது ஒரு புதுமுகம்.  கோவிலைத் திறந்து பூஜை ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க, ஊதுபத்தி, மாலை, பூ, பழம், வெற்றிலை என்று எதுவுமே வாங்காமல் சென்றிருந்தோம்.  பாஸ் வரும் வழியிலேயே நாம் கொஞ்சமாவது வாங்கிக்கொண்டு போவோம் என்று சொன்னதையும் அலட்சியப்படுத்தி இருந்தோம். 

 'அதான் ராமகிருஷ்ணன் தானே கொண்டு வருவதாக சொல்லியிருக்காரே....'

இப்போ ராமக்ருஷ்ணனே இல்லையே...  என்ன செய்யலாம்?

புதியவரிடம் பேசும்போது தன் பெயர் ரமேஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், 'நாராயணன் சொல்லி' வந்ததாக குறிப்பிட்டார்.  நாராயணன்!  ஃபேஸ்புக் ப்ரெண்ட்!

வயதில் இளையவரான தெரிந்த அவரிடம் அண்ணன் விவரம் கேட்டு அனத்திக் கொண்டிருந்தார்.  இறுக்கமாகவே காணப்பட்ட அவர் அண்ணன் கேள்விகளால் சட்டென 'இர்க்' ஆனார்!

"இதோ பாருங்கோ...  நான் சின்னப் பையன் இல்லே..  எனக்கு 41 வயசாறது..  ஆயிரம் கும்பாபிஷேகம் பண்ணி இருக்கேன்..மரியாதை கொடுத்து பேசறது நல்லது"

எல்லோருக்குமே சட்டென ஒரு மாதிரி ஆனாலும் அடுத்த வேலையைத் தொடரவேண்டுமே..

பூஜைப்பொருட்கள் ஒன்றுமே இல்லை என்றதும் என் இளையவனை குடவாசலுக்கு அனுப்ப முடிவு செய்து பேசியபோது, ரமேஷ் தானும் சென்று வேண்டியதை வாங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.  அவர் வண்டியில்தான் இளையவனை அனுப்பப் பேசிக் கொண்டிருந்தோம், லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தோம்.  லிஸ்ட்டுக்கும் அவசியமில்லை.  இவரே செல்கிறார் என்று பணம் கொடுத்து அனுப்பி வைத்தோம் -  ஆர்வக்கோளாறு!

ராமகிருஷ்ணன் பற்றி அவரிடம் ஒன்று பேசவில்லை.  நினைவில்லையா, தயக்கமா...  சொல்லத் தெரியவில்லை.  அவர் அப்படி சடபடவென பேசியபின் சொல்லத் தோன்றவில்லை.

இவர்கள் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் ராமகிருஷ்ணன் பூஜை சாமான்களுடன் டிவிஎஸ் 50 ல் வந்து இறங்கினார்.  அப்போது கூட தேள் கொட்டவில்லை.  இவர் ஸ்வாமியிடம் சென்று வேலை ஆரம்பித்த சிறிது நேரத்தில் ரமேஷும் என் இளையவனும் வந்து இறங்கிய போதுதான் தேள் கொட்டியது!  

பேந்த விழித்து, அசடு வழிந்து..  

வண்டியிலிருந்து இறங்கும்போதே நிலைமையை ரமேஷின் கண்கள் அளவெடுத்ததை பார்த்தேன்.

மௌனமாக ரமேஷும் உள்ளே சென்று வேலைகளில் கலந்து கொண்டார்.

ஆனால் மெல்ல மெல்ல பட்டாசு வெடிக்கத் தொடங்கியது..  ராமகிருஷ்ணன் வரும்போது தன்னை அழைத்தது ஏன்?  இது தனக்கொரு இன்சல்ட்..  நான் ராமகிருஷ்ணனை விட அனுபவம் மிக்கவன் வேறு...   இப்படி எல்லாம் பேசிக் கொண்டே இருந்தார்.  அண்ணன் குறுக்கிட்டு கொடுக்க முயன்ற விளக்கங்கள் வீணாயின.  அண்ணனை சும்மா இருக்கும்படி நான் சொன்னதையும் அவரும் கேட்கவில்லை.  பேச்சு வளர்ந்து கொண்டே போனது.  எனக்கு ரமேஷ் பக்கமும் நியாயம் இருப்பதாகத்தான் பட்டது.  எல்லாம் முடிந்து ஓரமாக அமர்ந்ததும் இருவருக்கும் சம அளவு தட்சிணை கொடுத்தாலும் ரமேஷின் ஆதங்கம் அடங்கவே இல்லை.  

"இனியொரு தரம் இப்படி எல்லாம் பண்ணாதீங்கோ" என்று நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படியாக லேசான மனத்தாங்கலுடன் (எங்களுக்கல்ல!  எங்களுக்கு தர்மசங்கடம்!) நிறைவேற்றி முடிக்கப்பட்டது குலதெய்வ தரிசனம்.

=========================================================================================\


நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தில் ஏழு பேருக்கு மறுவாழ்வு.

- ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் தயாரிப்பு செலவு சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 8% அதிகரித்துள்ளது. அசைவ உணவு தயாரிப்பு செலவு 4% குறைந்துள்ளது. Crisil (கிரிஸில்) அறிக்கை.

- ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நாலாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தியாளரான இந்தியா.

- ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா என்னும் இடத்தருகே லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது மினிவேனிலிருந்து ரூபாய் நோட்டுகள் சிதறின. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அந்த பகுதியில் இருந்த ரோந்து போலீசிடம் தகவல் தெரிவிக்க, அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனையிட்டதில் மூன்று மூட்டைகளில் கட்டு கட்டாக தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ஏழு கோடி ரூபாய் ஹைதராபாத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுவது தெரிந்தது.

- மும்பை காட்கோபர் பகுதியில் வைக்கப் பட்டிருந்த 100 அடி ராட்சத விளம்பர பதாகை திங்கள் கிழமையன்று(13.5.24) வீசிய புழுதிப் புயலால் சரிந்ததில் இதுவரை 14 பேர்கள் உயிரிழந்துள்ளனர், 70க்கும் முற்பட்டர் படுகாயம்.

================================================================================================

முகநூலில் படித்தது...   இங்கே எடுத்துப் பகிர்வது!

அஷ்டபந்தனகலவை
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன கலவைமருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?...
அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.
கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.
`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’
''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.
அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே ப்ரியமாக தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.
'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'
இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.
இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெயை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.
இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.
தகவல்:திரு.அருணாசலம் ஆச்சாரி,அன்னூர்

#ப்யாரீப்ரியன்
========================================================================

மறுபடியும் இன்னும் கொஞ்சம் கி வா ஜ ...

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

பாராட்டுரை சொல்ல வந்த
கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.
அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு,
*"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.
____________

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.
“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.
*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.
____________
ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார்.
அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.
கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று!!
அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? -
ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.
கிவாஜ -
*இன்னிக்கு வேணாமே!*
*தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..
அந்தப் பெண் சொன்னாள் - *பரவால்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.

===========================================================================


ஏனோ எல்லோரும் 
கடவுளை 
வெளியேயே 
எதிர்பார்க்கிறார்கள் 

வானத்தில் தெரிவாரா 
வடிவாக இருப்பாரா 
முடிவேதும் சொல்வாரா 

உருவமாக வருவாரா 
அருவமாக நின்று 
குரல் மட்டும் தருவாரா 

முன்னே வந்து நிற்பாரா 
மெச்சினேன் உன் பக்தியை 
என்று 
உச்சி முகர்வாரா 
எந்த உருவில் வருவார் 
நொந்த என் மனதுக்கு 
ஆறுதல் தர 

பெறும் நிலையிலேயே 
இருக்கிறார்கள் - யாரும் 
தரும் நிலையில் இல்லை.

தங்களுக்கான கருணையை 
கடவுளிடம் 
எதிர்பார்த்து 
காத்திருக்கும் மனிதர்கள் 
காட்டுவதேயில்லை 
அதை 
சகமனிதர்களிடம் 

===========================================================================================

அரிய கணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...


ஹேர்ஸ்டைல் அல்ல... நீர்ஸ்டைல்!




அந்தரத்தில் இருக்கும் கணத்தில் புகைப்படம் எடுப்பது ஒரு திறமை. சமீபத்தில் என் மகன் தான் மணக்கப்போகும் என் (அப்போது வருங்கால) மருமகளுடன் 'ப்ரீவெடிங் ஷூட்' நடத்தியபோது, துணைக்குச் சென்ற என் இளையமகன் தனது செல்போனில் , இருவரும் அந்தரத்தில் இருந்த ஒரு கணத்தை அற்புதமாக படம் பிடித்தான். அது நினைவுக்கு வருகிறது!


===============================================================================================


ஓர் அரிய இலக்கிய பாலம் 

வி ஸ காண்டேகர் அவர்களின் எழுத்துகள் அதிகமாக பரவியது கா ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பினால்தான் என்று காண்டேகரே சொல்லி இருக்கிறார்.  ஒரு நேரத்தில் காண்டேகர் எழுத்துகளை மக்கள் தேடித்தேடி விரும்பிப் படித்தார்கள்.  தனது தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா ஸ்ரீ ஸ்ரீ பற்றி காண்டேகர் சொல்லி இருப்பது.. அவர் மொழி பெயர்க்கும் உரிமையை கொடுத்தது கா ஸ்ரீ ருக்கு மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழ் எழுத்தாளர்கள், நடிகர்கள், கவிஞர்கள் பலரும் இவரின் ரசிகர்கள்.  இவரின் தத்துவ விசாரம் மிகவும் புகழ்பெற்றது.  'காண்டேகர் மணிமொழிகள்'  என்றே ஒரு புத்தகம் வெளிவந்தது.

ஞானபீட விருது பெற்ற யயாதி நாவலின் முன்னுரையில் காண்டேகர் கா ஸ்ரீ ஸ்ரீ பற்றியும் தமிழ் ராசிகள் பற்றியும் சொல்லி இருப்பது கீழே.....

மொழி அமைப்பிலும் இலக்கிய வழக்கிலும் இந்தி, குஜராத்தி முதலியவை தமிழை விட மராட்டிக்கு மிகவும் அருகில் உள்ளவை. ஆனால் ஹிந்தியில் நடக்காத அதிசயத்தை தமிழாக்கம் இயல்பாகவும், சுலபமாகவும் சாதித்துக் காண்பித்தது.  பலப்பல ஆண்டுகளுக்கு முன்பு என் நூல்களை தமிழில் ஆக்க அனுமதி கேட்டு ஒரு கடிதம் வந்தது தூய மராட்டியிலே அதை எழுதியவர் சிறுவயதில் தந்தையின் வேலை நிமித்தமாக பம்பாயில் இருந்ததனால் மராட்டியில் பழக நேர்ந்தது பிறகு அவர் மொழி அறிவை தானே நன்கு வளர்த்துக் கொண்டார் எனது இலக்கியத்தை தமிழாக்கி தமிழ் மக்களிடையே எனக்கு நிறைந்த புகழையும் பிரியத்தையும் திரட்டி தந்த அவரே கா ஸ்ரீ ஸ்ரீ .  எந்த மொழியின் அ ஆ இ ஈ கூட எனக்கு தெரியாதோ, அந்த மொழி பேசுவோரின் வீடுகளில் என்னை கொண்டு விட்டார். 

கா ஸ்ரீ ஸ்ரீ யின் பணி இல்லை என்றால் அடக்கத்துடன் ஒதுங்கி வாழும் இயல்புள்ள என் வாழ்வில் இன்று கிடைத்துள்ள பெரு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் நான் இழந்து இருப்பேன் தமிழாக்கம் வெளிவந்த பின்பு பல மாணவ மாணவியரும் இளைஞரும் முதியோரும் எனக்கு கடிதம் எழுதலாயினர் இவை ஆங்கிலத்தில் இருக்கும் மை டியர் ஃபாதர் என்று ஒரு பெண்ணின் கடிதம் தொடங்கும் 'ஏதேனும் ஒரு மொழியை கருவியாக கொண்டு மிகத் தொலைவில் சென்று ஒளி கொடுக்கும் மின்சக்தி இலக்கியத்துக்கு உண்டு' என்ற உண்மையை நான் உள்ளூ உணரலானேன். உல்கா, வத்ஸலா, சுலோச்சனா முதலிய கதாநாயகிகளை பற்றி இந்த கடிதங்களில் பல வகைக் கேள்விகள் இருக்கும் இந்த கற்பனைக் கன்னியர் என் வீட்டிலேயே வளைய வருவது போலவும், இவர்களின் இன்ப துன்பம் பற்றி அனைத்தையும் நெடுந்தொலைவில் உள்ளவர்களுக்கு சொல்வது எனக்கு எளிது போலவும் இந்த வினாக்கள் எழுப்பியவர்களுக்கு எண்ணம். 

மராட்டிய எழுத்தாளராக எனக்கும், தமிழ் வாசகருக்கும் இடையே உதித்த இந்த அரிய நட்பு, கடிதங்களுடன் நிற்கவில்லை கோல்ஹாப்பூர் எங்கிருக்கிறது என்பதை முன்பு அறிந்திராத பலர், என்னை நேரில் காண வந்தனர் இங்கு வரும் தமிழர் என்னுடனேயே இருப்பர் எங்கள் பேச்சு அனைத்தும் ஆங்கிலத்தில் தான் ஆனால் ஒரே நிமிஷத்தில் அவர்கள் எங்களுடன் ஒன்றி விடுவர் நட்பை வளர்க்கும் கலையில் மராட்டியர் எவ்வளவு பின்னடைந்து இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மை எனக்கு புலப்படும் சில ஆண்டுகளுக்கு முந்திய ஒரு நிகழ்ச்சி வீட்டை விட்டு வெளி கிளம்ப யாரும் துணியாதபடி அடை மழை காலம் மாலை நேரம் இந்த முகூர்த்தம் பார்த்து என்னிடம் அன்புள்ள தமிழ் இளைஞன் ஒருவன் வாசலில் வந்து நின்றான். தனியே இல்லை, தன் புதும மனைவியுடன் என் ஆசியை வேண்டி அவர்கள் வந்திருந்தனர் இப்படி தமிழ் வாசகர்களுக்கு என்னிடம் உள்ள அன்பு பலவகை உருவம் கொண்டது.

விசாலமான நமது பாரத நாட்டில் பெருஞ்சாலைகளிலும், ரயில் வழிகளிலும் பாங்களை கட்டுவதால் மட்டும் ஒற்றுமையை உண்டாக்கிவிட முடியாது. இனம், மாநிலம், பண்பாடு முதலிய பிரிவுகளால் வேறுபட்டுள்ள மாந்தரின் உள்ளங்களை இணைத்து, அவர்களின் உணர்வில் ஒருமையைப் படைக்கும் உறுதியான பாங்கள் நமக்கு தேவை சிறந்த இலக்கிய மொழிபெயர்ப்பாளர் தான் இத்தகைய பாங்களை அமைக்க வல்லவர்கள் தமிழில் கா ஸ்ரீ ஸ்ரீ  எனக்கு இவ்வாறு கிடைத்திருப்பது எனது பெரும் பாக்கியம். 

எழுத்தாளன் என்ற முறையில் என் ல்லை எனக்கு தெரியும் ஆயினும் நான் மிகப்பெரிய இலக்கிய மகா ரதர்களின் திருவடியில் அமர்ந்து, இலக்கியத்தை பயின்றிருக்கிறேன் என் எளிய பாடலை என் பலவீனக் குரலில் இசைக்க முயன்றிருக்கிறேன்.  அந்த நாவலை தமிழகம் நன்கு வரவேற்கும் என்று நம்புகிறேன்.

=================================================================================================

பொக்கிஷம் :-








121 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    குறள் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. சைவ உணவின் தயாரிப்பு செலவு சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 8%..

    அது கிரீஸ் நாட்டில் என்றாலும் இங்கேயும் அந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசைவம் என்பதை விட மக்கள் பிரியாணி மோகம் கொண்டு அலைகிறார்கள்.  அதில் சேர்க்கப்படும் மசாலாவில் ஏதாவது கலக்கிறார்களா தெரியவில்லை!

      நீக்கு
    2. அதெல்லாம் தொழில் ரகசியம்... நேற்று கூட ஏதோ ஒரு தொ. கா.. வில் காட்டினார்கள் -
      கெட்டுப் போன இறைச்சி யில் பிரியாணி செய்து மாட்டிக் கொண்ட உனவகத்தை...

      நீக்கு
    3. அது பாட்டுக்கு நடக்கிறது ஆங்காங்கு...  பெரிய கடைகளையே நம்ப முடியவில்லை!

      நீக்கு
    4. Crisil என்று வர வேண்டியது, கிரீஸில் என்று வந்திருக்கிறது. Typo error. நான் கவனிக்காமல் அனுப்பி விட்டேன். மன்னிக்கவும்.

      நீக்கு
  5. இங்கே மார்க்கெட்டில் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை இவற்றை கொசுறு என்று கொடுக்கப்பட்ட காலம் போய் விட்டது...

    பத்து ரூபாய்க்குக் குறைந்து கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் தருகிறார்கள்.  கறிவேப்பிலை ஏராளமாக தருவார்கள்.  கொத்துமல்லிதான் கிடைப்பது சிரமம்.  காலை நேரத்திலேயே கொத்துமல்லி கட்டுகள் விற்றுப்போய்விடுகின்றன பெரும்பாலும்.

      நீக்கு
  6. கறிவேப்பிலை கொத்தமல்லி இவற்றில் எந்த ஒன்றையும் தனியாக வாங்க முடியாது..

    பெரிய ஊரில் புழங்கப்படும் ஆறெழுத்து வசவு வார்த்தை தான் இலவசமாகக் கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு அப்படி இல்லை. தனியாக வாங்க முடியும். வசவும் கிடையாது.

      நீக்கு
    2. ஆமாம்... எல்லாம் தலை கீழாகி விட்டது..

      மாதம் மும்மாரி ஒழிந்து போய் பாலைவனத்தில் பெருமழை!..

      முன்பு பயணிகளை வா... போ.. என்று விளிக்கின்ற உரிமையை நல்லவன் (பல்லவன்) நடத்துனர்கள் பெற்றிருந்தார்கள்..

      இப்போது இங்கே பேருந்துகளில் ....

      ஒன்றும் சொல்வதற்கில்லை..

      நீக்கு
  7. குல தெய்வம் கோயில் அரசு கட்டுப்பாட்டின் கீழா, ஸ்ரீராம்?

    முன்பிருந்த அர்ச்சகர் இப்ப இல்லாத போது எப்படி வருகிறேன் என்றார்? ஆர்வக் கோளாறுன்னு நீங்களே சொல்லிருக்கீங்க என்னாச்சுன்னு பார்த்து வருகிறேன். இது 'வந்துவிட்டேன் ஐயா' கருத்து!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே..  அதெல்லாம் எப்படி அரசு கட்டுப்பாட்டில்?!

      நீக்கு
    2. ஓ! அப்ப அர்ச்சகர் மாற்றுவது நீக்கப்படுவது எல்லாம் கிராமத்து மக்கள் நிர்வாகம் இல்லையா?

      கீதா

      நீக்கு
    3. இது மாதிரியான கோயில்களில்...

      கீதா

      நீக்கு
    4. இது கிட்டத்தட்ட குடும்ப கோவில்.  சில குடும்பங்களுக்கு மட்டுமானது.  அது திறந்திருக்கும் சமயத்தில் மற்றவர்களும் வழிபடுவார்கள்தான்.  ஆனாலும் சிலரது அதிகாரத்துக்குட்பட்டது.

      நீக்கு
  8. யாருக்குமே நாம் உதவி செய்ய நினைக்கும் போது உதவி தேவைப்படுபவர்களோடு கலந்து பேசி செய்வது நல்லது. ஆர்வக்கோளாறில் இந்த rescue mode பல சமயங்களில் நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

    ராமகிருஷ்ணன் வருகிறேன் என்று சொன்ன பிறகு ஃபேஸ்புக் நண்பரிடம் சொல்ல முடியலையோ? உங்கள் பழைய அர்ச்சகரே வரேன்னு சொல்லிவிட்டார் என்று?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெவ்வேறு சமயங்களில் நடந்த உரையாடல். அது மட்டுமின்றி பேஸ்புக் நண்பர் சொல்லாமல் உதவி செய்ய நினைத்திருந்தார்!!!

      நீக்கு
  9. இந்தியாவும் உப்ப சூரிய சக்தி உற்பத்தியில் மேலே வருவது மிக நல்ல பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    என் உறவினர் ஒருவர் இதில் பலவருடங்களுக்கு முன்பே ஈடுபட்டு செய்து வருகிறார். அவரோடு சென்னையில் சில கிராமங்களுக்குச் சென்றதுண்டு. அதில் ஒரு அனுபவம் பற்றியும் எங்கள் தளத்தில் எழுதியிருக்கிறேன். படங்களோடு.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முதல்ல இந்த பேனர்கள், கட் அவுட்கள் வைப்பதைத் தடுக்க வேண்டும். வைக்கக் கூடாது என்று சட்டம் வர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் நாட்டில் பெரிய பேனர்கள் வைக்க முடியாது. சென்னையில் பேனர் ஒன்று டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண் மீது விழுந்து அந்தப் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பேனர்கள் வைக்க தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி கோயம்பேட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் பேனர் ஒன்றை தன் வீட்டு வாசல் முன் வைத்ததற்காக ஒரு பெண் மிரட்டல்களையும் மீறி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

      நீக்கு
    2. சட்டத்தை யார் மதிக்கிறார்கள்?  சட்டம் போட்டவர்களேதான் பேனர் வைக்கிறார்கள்.  டிராபிக் ராமசாமி இதற்கும்தான் போராடினார்.

      நீக்கு
  11. என் தங்கையுடன் அவள் செய்த பரிகாரத்திற்காக பைரவர் பரிகார கோயில்கள் சென்ற போது இந்த அஷ்டபந்தனம் தயாரிப்பதை திருப்பத்தூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. அதையும் எங்கள் தளத்தில் எழுதிய நினைவு படங்களோடு. அது கலசத்திற்கு கும்பாபிஷேகத்திற்கு என்று சொன்னார்கள் நிறைய கலச வடிவில் பிடித்து வைத்தார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் படித்த நினைவு லேசாக வருகிறது!

      நீக்கு
  12. ஒருவருக்கு இருவராக அர்ச்சகர் வந்தது வேடிக்கை. இதுதான் உதவி உபத்திரமாகும் தொல்லை. சமாளிப்பு சரிதான்.

    பா வே அவசரமாக தயாரித்த நியூஸ் ரூம் ஆகாசவாணி செய்திகள் போல் இருக்கிறது. bland

    கி வா ஜா சிலேடைகள் எப்போதும் ரசிக்கத்த்தக்கவை.

    கடவுளை காணும் கவிதை பரவாயில்லை என்றாலும் கடைசி கருத்துடன் நான் ஒப்பவில்லை. சகமனிதர்களிடம் கருணை காட்டும் நல்ல உள்ளங்கள் பலரை நீங்களே பாசிட்டிவ் செய்திகளில் அறிமுகப்படுத்துயிருக்கிறீர்கள்.

    நல்ல கதைகளை தேடிப்பிடித்து படிக்கும் தமிழர் வழக்கம் மறைந்து வருகிறது. காண்டேகர் நாவல்கள் தமிழரகள் விரும்பி படித்த காலம் போய் ஒரு பக்கக் கதையை வாசிக்கக் கூட மடிக்கின்றனர். பொதுவே வாசிப்பு குறைந்து விட்டது.

    பயில்வான் ஜோக் வாசிக்கும்போது நடிகர் நடிகையரின் அந்தரங்கங்களை வெளியிடும் பயிலவான் கண் முன் தோன்றினார்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்திகளில் பெரும்பாலும் தேர்தல் செய்திகள், மற்றும் ஐ பி எல் செய்திகள் அடைத்துக் கொள்வதால் வரும் சிரமம்!

      மக்கள் தொகை எவ்வளவு?  அதில் பாசிட்டிவ் மனிதர்களை தேடித்தேடி போடவேண்டி இருக்கிறது!  சதவிகிதம் ஏற வேண்டாமா?!

      ஆம், நல்ல கதைகளை தேடி வாசிக்கும் பழக்கம்...  ஒரு நிமிஷம்.. நல்ல கதைகள் இப்போது வருகிறதா?  தேடினால்தானே கிடைக்கும் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!

      பயில்வான் ரங்கநாதன் நல்ல இம்பாக்ட் ஏற்படுத்தி இருக்கிறார் போல!

      நீக்கு
    2. செய்திகளை அவசரமாக தயாரிப்பதில்லை. தினசரி படிக்கும் செய்திகளில் எ.பி.யில் பகிரலாம் என்று தோன்றும் செய்திகளை நோட் பேடில் புதன் இரவில் அவைகளை ஸ்ரீராமுக்கு அனுப்பி விடுவேன். ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல தற்சமயம் பெரும்பாலும் தேர்தல் செய்திகள். சைந்தவி, ஜீ.வி. பிரகாஷ் பிரிந்தார்கள் போன்ற செய்திகளை பகிர்வதில் எனக்கு விருப்பமில்லை. கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் இப்போது பொக்கிஷம் என்பதை அப்போது

    " கடி " என்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பைண்டிங்குகளில் இருக்கும் கடிகள், அருவிகள், ஜோக்குகள், சிரிப்புகள்!

      நீக்கு
    2. கடி என்றது நானல்ல....

      அப்போது ஆ வி யில் பெருந்திரளாக இருந்தது...

      நீக்கு
  15. இன்றைய கதம்பத்தில் ஆர்வக்கோளாறு, வி ஸ காண்டேகர், கிவாஜ, அஷ்டபந்தனம் போன்றவை என்னைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  16. ப்ரீ ஷூட் நாங்கள் அனுமதி தரவில்லை, அவங்களும் கேட்கலை. மணமகனை, வீட்டாரை அஃபீஷியலாக மண்டபத்தில் வரவேற்பதற்கு முன், அவர்களும் நாங்களும் (பெண் தவிர) கோவிலுக்குச் செல்லத் திட்டம் போட்டிருந்தோம். காலை 6:30 மணிக்கு. நாங்கள் முதல் தளத்தில் எல்லோரும் சேர்ந்து செல்வோம் எனக் காத்திருக்க, அவர்களோ நேரமாகிவிட்டதே நாங்கள் சென்றுவிட்டோம் என நினைத்து லிஃப்ட் வழியே தரைத் தளத்திற்குச் சென்று கிளம்பிவிட, அந்த ஒரு நிகழ்ச்சியில் கோவிலில் பத்து நிமிடங்கள் அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. மற்றபடி எல்லாமே நல்ல கோஆர்டினேஷனில் நடந்தது.

    நல்ல புரிதலும், திட்டமிடலும் இல்லையென்றால் திருமணங்களில் தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகன் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்று உறுதியாகஇருந்தான். ஆர்வமானவன். .திருமணத்துக்கு முன் வந்த மருமகளின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாய் ட்ரீட் வைத்து அசத்தினான்.

      நீக்கு
  17. வானில் பறந்து வந்த சித்தரை கிவாஜ தன் வீட்டு மாடியில் சந்தித்ததைப் பற்றி எழுதியிருக்கிறாரே. படித்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  18. விஸ காண்டேகரின் நாவல்களை லைப்ரரியில் பார்த்திருக்கும் எனக்கு அவற்றைப் படிக்கும் சந்தர்ப்பம் இருந்ததில்லை. படிக்கணும் என்ற ஆர்வம் வருகிறது. பொறுமை இருக்குமா?

    இதன் பிறகுதான் மொழிபெயர்ப்புகளுக்கும் மத்திய அரசின் பரிசு கொடுக்கும் நிகழ்வு வந்ததோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். இப்போது படித்தால் பொறுமை இருக்குமா என்பது சந்தேகம்தான்.

      நீக்கு
  19. ஆர்வக் கோளாறு.... திருமணம் முடிந்து, இரண்டு கோவில்களுக்குச் சில நாட்கள் கழித்துச் சென்றோம். அவர்கள் கோவிலில் எங்களுக்குத் தெரிந்த அர்ச்சகர்கள் உண்டு. ஆனால் இந்த மாதிரி பிரச்சனைகளைத் தவிர்க்க, அவர்களே முழு ஏற்பாடும் செய்துகொள்கிறோம் எனச் சொன்னதால் விட்டுவிட்டோம். எங்கள் தெரிவு கோவிலில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் அபப்டி செய்து கொள்வதுதான் வழக்கம். இந்த முறை இப்படி ஆயிற்று!

      நீக்கு
  20. @Sriram: இன்றைய newsroom ல் சைவ சமையல் செலவு அதிகரித்துள்ளது என்னும் செய்தியில் Crisil(கிரிஸில்) என்று வர வேண்டியது, கிரீஸில் என்று வந்திருக்கிறது. சரி பார்க்காமல் அனுப்பி விட்டேன். மன்னித்து, முடிந்தால் திருத்தி விடவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. //கறிவேப்பிலை கொத்தமல்லி இவற்றில் எந்த ஒன்றையும் தனியாக வாங்க முடியாது..//
    தஞ்சையில் எல்லா கடைகளிலுமே கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை என்று தனித்தனியாக தருகிறார்களே? அதிலும் கறிவேப்பிலை பெரிய பெரிய இலைகளாக வேண்டும் என்று நான் கேட்டு வாங்கி வருவேன். முக்கியமாக உழவர் சந்தையிலும் பெரிய மார்க்கெட்டிலும் கொத்தமல்லிக் கட்டுக்கள் தனியாகவே வாங்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே பார்த்தேன். சேனனியிலேயே வாங்க முடிகிறபோது தஞ்சையில் இன்னும் சுலபமாச்சே.... வாங்க மனோ அக்கா.

      நீக்கு
  22. திருமணம் ஆன, ஆகவிருக்கும் வீடுகளில் பல அவசரங்களில் இது மாதிரி ' ஆர்வக்கோளாறுகள்' நிறைய நடப்பதுண்டு. குல தெய்வ வழிபாடு இந்த மாதிரி சங்கடங்களுடன் நடந்தேறியது தான் வருத்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் ஏதுமில்லை. இதுவும் ஒரு அனுபவம். அவர்களுக்குத்தான் கஷ்டம்!

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு


  24. கி.வா.ஜ.வும், அவருடைய சீடர் ஒருவரும் ஒரு விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பிய பொழுது கி.வா.ஜ.விற்கு பெரிய பையும், அவருடைய சீடருக்கு சற்று சிறிய பையும் கொடுத்தார்களாம். கி.வா.ஜ. உடனே,"சின்னப் பையனுக்கு, சின்னப் பையா?"என்றாராம். அந்த சின்னப் பையன் யார் தெரியுமா? சுகி சிவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமா, கற்பனையா என்று தெரியாமல் இது மாதிரி நிறைய கோர்க்கலாம் போல...!

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பதிவில் நிறைய விபரங்களை தந்துள்ளீர்கள். நிதானமாக படித்து வருகிறேன்.

    குலதெய்வ கோவிலில் அறிமுகமில்லாத இரண்டு அர்ச்சகர்கள் கூடி வந்ததும் ஒரு நேரந்தான் .! இருவருமே இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் வல்லவராக இருப்பினும், கற்ற வித்தையில் ஒருவர் மற்றவரின் குறைகளை நேரடியாகவோ, இல்லை, மறைமுகமாகவோ சொல்லும் போது, அவர்களுக்குள் மனபேதங்கள், கருத்து வேறுபாடுகள் வந்து விடும். (நிச்சயம் மனதுக்குள் ஒருவரை பற்றி ஒருவர் அர்ச்சனைகளை நடத்தியிருப்பார்கள்.ஹா ஹா ) இது போல் சில சமயங்களில் நம்மை மீறி ஏதாவது இப்படி நடந்து விடுகிறது. எப்படியோ நல்லவிதமாக குல தெய்வ வழிபாட்டைநடத்தித் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // (நிச்சயம் மனதுக்குள் ஒருவரை பற்றி ஒருவர் அர்ச்சனைகளை நடத்தியிருப்பார்கள்.ஹா ஹா //

      :))

      சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது!

      நீக்கு
  26. பொக்கிஷம் சிறப்பு! புத்தரின் அருள்மொழி எல்லா காலத்துக்கும் பொருந்தும் நிதர்சனம்!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் பகிர்வாக வந்த தங்கள் கவிதை அருமை. சினிமாவில், படித்த பல புராண கதைகளில் வருவது போல் இன்னமும் இறைவனை நேரில் காணத்தான் நாம் ஆசைப்படுகிறோம். (அது நடக்காது என்று நூறு சதவீதம் தெரிந்திருந்த போதும்.) ஆனால், தாங்க முடியாத ஒரு இடர்கள் வரும் கால கட்டத்தில் , மனது ஒன்றி அவனை அழைக்கும் போது, நம் வினைகளுக்கேற்ப வேறு உருவில்/ செயலில் "அவன்" தான் இருப்பதை உணர்த்துகிறான். இதைத்தான் சமீபத்தில், மனித வடிவில் "அவன்" இருக்கிறான் என்றொரு கதைப்படித்தோம். நம் எ. பியில். நிறைய யோசிக்க வைக்கிறது தங்கள் கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இங்கிருந்தே உதாரணம் காட்டுகிறீர்கள். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  28. இரு குருக்கள் வந்து குலதெய்வ வழிபாட்டை நல்லபடியாக செய்து வைத்தார்களே அதை நினைத்து கொள்ள வேண்டியது தான்.

    சில நேரங்களில் சில உதவிகள் இப்படி ஆகி விடுகிறது. தர்மசங்கடங்கள் நடைபெறும் . ரமேஷ் குருக்கள் தானே நல்லபடியாக செய்து கொடுத்து உங்களிடம் நல்ல பெயர் வாங்க நினைத்து இருக்கிறார்.

    தொலைக்காட்சியில் புழுதி புயலில் விளம்பர பலகை விழுந்ததை பார்த்து மனது கனத்து போனது .

    மாயவரத்தில் நிறைய கோவில்களுக்கு அஷ்டபந்தன மருந்து இடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடிக்கும் வாய்ப்பே கிடைத்திருப்பது பாக்கியம். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  29. தங்களுக்கான கருணையை
    கடவுளிடம்
    எதிர்பார்த்து
    காத்திருக்கும் மனிதர்கள்
    காட்டுவதேயில்லை
    அதை
    சகமனிதர்களிடம் //

    அருமை.

    பதிலளிநீக்கு
  30. தஞ்சை பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகள் உள் குத்து வைத்துக் கொண்டு செய்கின்றார்களோ என்னவோ தெரியாது..

    இப்படி இரண்டு மூன்று தடவை நடந்திருக்கின்றது..

    பெரிய மார்க்கெட் செல்வதைக் குறைத்துக் கொண்டோம்..

    அருகில் திருவையாறு இருக்கின்றதே....

    தவிர கண்டியூரில் வியாழன் தோறும் மாலையில் காய்கறிச் சந்தை...

    ஒன்றும் பிரச்னை இல்லை.. ஏவாரிகளால் தான் பெயர் கெடுகின்றது..

    தஞ்சையில் எப்போதுமே காய்கள் குறைவான விலை தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க்கெட் அல்ல, சாதாரண கடைகளிலேயே அள்ளித்தருகிறார்கள்.. ஏன், இன்று கூட வாங்கி வ ந்தேன்.

      நீக்கு
  31. காலையிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்...

    பதாகை என்றால் துணியில் ஆன கொடி, தோரணங்கள்..

    பதிலளிநீக்கு
  32. //கிவாஜ -
    *இன்னிக்கு வேணாமே!*
    *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..
    அந்தப் பெண் சொன்னாள் - *பரவால்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.//

    கிவாஜாவை மடக்கிய பெண் புத்திசாலிதான் பேச வைத்து விட்டார் இல்லையா!
    அரிய கணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அருமை. உங்கள் சின்ன மகன் அவர்களும் அந்த மாதிரி திறமையாக படம் எடுத்தது அறிந்து மகிழ்ச்சி.

    பொக்கிஷ பகிர்வுகளில் தேர்தல் சிரிப்பு இருக்கிறது. தேர்தல் நேரத்தில்.

    பதிலளிநீக்கு
  33. *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.//

    "நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்"* //

    ரொம்ப ரசித்து, ஆஅஹா என்று நானும் கை தட்டுகிறேன்!!! வாரியார் அவர்களின் சொற்பொழிவே சுவாரசியமா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  34. விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தில் ஏழு பேருக்கு மறுவாழ்வு.//

    நல்ல விஷயம். இளைஞரின் குடும்பத்தையும் பாராட்டி வாழ்த்த வேண்டும். இப்படி முன்வருபவர்கள் குறைவு என்பதால். இப்போதுதான் விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  35. கி வா ஜ வும் சிலேடையில் வல்லவராச்சே என்று நினைத்த போது கீழே அவரது சிலேடைகளும் பார்த்துவிட்டேன்

    மாது உளம் கனிந்து கொடுத்த கனி//
    செம...ரசித்தேன்.

    அது போல அந்தப் பெண் வசமாகப் பிடித்தார் கி வா ஜ வை!!! பேச்சிற்கு அழைக்க! ஆ நம்மகிட்டயேவா என்று கி வா ஜ நினைத்திருப்பாரோ!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. கவிதையை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம் அதுவும் க்டைசியில் வருவது

    //தங்களுக்கான கருணையை
    கடவுளிடம்
    எதிர்பார்த்து
    காத்திருக்கும் மனிதர்கள்
    காட்டுவதேயில்லை
    அதை
    சகமனிதர்களிடம் //

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ... இது ஏதாவது கதையில் வருமா கீதா?!

      நீக்கு
    2. ஸ்ரீராம் இப்படி எல்லாம் பூனையை வெளியிடக் கூடாது...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  37. அந்தரத்தில் இருக்கும் கணத்தில் புகைப்படம் எடுப்பது ஒரு திறமை. //

    ஆமாம் ரொம்பவே. டைமிங்க் ரொம்ப கரெக்டா இருக்கணும். கோகுலுக்குப் பாராட்டுகள்!

    ரெண்டு படங்களும் சூப்பர் ஷாட்!

    பழைய வீட்டில் பூனைக்குட்டி மரத்தில் கிளையில் தாவுவதை நான் எடுத்திருந்தேன். continuous ஷாட்ச் ஆப்ஷனில் போட்டு. அந்தப் படங்களை இன்னும் நான் பதிவெழுதி போடவே இல்லை!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. அருமையாக எடுத்திருப்பீர்கள். கோகுலிடம் உங்கள் பாராட்டைச் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  38. காண்டேகர் - புதிய சுவாரசியமான தகவல்கள். காண்டேகர் எழுத்தை வாசிக்க நினைத்து தவறியது. கல்லூரி நூலகத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்ன? கல்லூரி பாடப் புத்தகங்களை அப்புறம் யார் படிப்பது?

      நீக்கு
    2. இனி வாசிக்க பொறுமை இருக்குமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்! அதது அந்தந்த வயதில்!

      நீக்கு
  39. அரசியல் ஜோக்ஸ் இரண்டும் புன்னகைக்க வைத்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
  40. எப்ப்டியோ ஒன்றிற்கு இரட்டையாக அர்ச்சகர்கள் வந்து அருள் கிடைக்க வழி செய்தீர்களே சமாளித்து. நல்லதுதானே. நல்ல விஷயம். எப்படி இருந்தாலும், தர்மசங்கடம் ஏற்பட்டாலும், இறைவனின் அருள்தான் முக்கியம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  41. வாரியார், கிவாஜ அவர்களின் சிலேடை நகைச்சுவையை ரசித்தேன். இப்படியான நகைச்சுவைகள் எவ்வளவு இதம். இப்போதெல்லாம் வரும் நகைச்சுவைகள் பெரும்பாலும், ஏளனம் செய்வதாகிவிட்டன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  42. வண்டியில் பணக்கட்டு என்பது தேர்தல் சமயத்திலோ.

    செய்திகள் பார்த்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. உங்கள் கவிதை மிக அருமை, ஸ்ரீராம்.

    அஷ்டபந்தன கலவை பற்றிய தகவல்கள் சிறப்பாக இருக்கிறன.

    காண்டேகர் பற்றி இலக்கியத்தில் அறிந்ததுண்டு.

    பொக்கிஷத்தில் கடைசி இரண்டும் சிரிக்க வைத்தன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. நாந்தான் நூறாவது கமெண்டூ.... என்றெல்லாம் எழுதி அரட்டையை நீட்டும் அதிரா எங்க போனாங்கன்னே தெரியலை. சிலபேரை காலவெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடுகிறதா? ஏஞ்சலினும் அப்படித்தான் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமெண்ட் எண்ணிக்கை 99 என்று பார்த்தபோது நானும் இதையே நினைத்தேன் என்பது(ம்) ஆச்சர்யம்!

      நீக்கு
    2. கொஞ்ச நேரம் முன்பு சகோதரர் நெல்லைத்தமிழர் எழுதிய கருத்தைப் பார்த்ததும், எனக்கும் அதே நினைவு வந்தது.

      இரண்டாவதாக நூறைப் பார்த்திருந்தால், நானும் எப்படியாவது நூற்றில் ஒருவளாக வந்திருப்பேன். எங்கே...? மதியம் உறவின் வருகை.பாக்கி விட்டதையே படிக்க முடியவில்லை. பிறகுதான் படிக்க வேண்டும். மன்னிக்கவும். (ஏதோ நூற்றி ஐந்தாவதையாவது தொடலாம் என்ற நப்பாசை. அதுவும் நீங்கள் ஏதாவது பதில் தந்தால்தான் உண்டு. :)) )

      நீக்கு
    3. கமெண்ட் எண்ணிக்கை கூடுவதில் ஏதாவது சுய திருப்தி இருக்கா, என்ன?

      நீக்கு
    4. ஆனா வழக்கமான எட்டு பேர் வாசிப்பு பின்னூட்டங்களை
      தவிர எபிக்கான வெளியார் வாசிப்பு இருக்கே அது தான் எனக்கு முக்கியமாகப் படும்.

      எபியின் 'கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் வாசித்தது' கணக்கெடுப்பு இருக்கே அது மற்ற பதிவர் பதிவுக்களில்
      நான் காணாத விசேஷ முயற்சி.
      அதற்காக எபிக்கு எழுதுகிறவன் என்ற ஹோதாவில் என் நன்றி.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. // கமெண்ட் எண்ணிக்கை கூடுவதில் ஏதாவது சுய திருப்தி இருக்கா, என்ன? //

      இல்லை. ஆனால் படிக்க சுவாரஸ்யம்.

      நீக்கு
    7. // வெளியார் வாசிப்பு இருக்கே //

      அது ஒரு மாயை. நம் கமெண்ட்டுக்கு பதில் என்ன என்று திறந்து பார்த்தால் கூட எண்ணிக்கை கூடும். அந்த எண்ணிக்கையிலும் ஒன்றுமில்லை உண்மையில்!

      நீக்கு
    8. இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. இங்கே கமெண்ட்டுகள் பல பதிவுகளுக்குக் குறந்திருக்கிற காலமிது. அதனால் அதில் ஏதோ விசேஷம் இருப்பதாகவே கருதுகிறேன்.

      வேறொரு சமயம் இது பற்றி பிரஸ்தாபிக்கிறேன். நீங்கள் பின்னிரவில் போடப்படும் கமெண்ட்டுகளையும் பார்த்து பதில் சொல்வீர்களென்று தெரியும்.
      நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  45. /// அது பாட்டுக்கு நடக்கிறது ஆங்காங்கு... பெரிய கடைகளையே நம்ப முடியவில்லை!... ///


    ஆறு வருடங்கள் ஆகி விட்டன...

    பிற உணவகங்களுக்குள் நுழைந்து..

    சிவமங்கல உணவு முறை பாதுகாப்பானது என்பதை மக்கள் எப்போது உணர்வார்களோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   ஆறு மணி நேரம் ஆகிறது ஒரு உணவகத்துக்குள் நுழைந்து...!

      நீக்கு
  46. காண்டேகரைப் பற்றி சமீபத்திய பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அவரைப் பற்றி மீண்டும்
    இங்கு வாசித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  நன்றி.  இது போன்ற குறிப்புகள் என் சேமிப்பில் இருக்கும்.  ரொம்பப் பெரிதாக இல்லாததை வெளியிடுவேன்.  காண்டேகர் கதைகள் அப்போதே வாசிக்க கொஞ்சம் கண்ணைக்கட்டும்.  இப்போது எப்படி, தெரியவில்லை.  மறுபடி ஒன்று எடுத்து வாசித்துப் பார்க்க வேண்டும்.

      நீக்கு
  47. ஹி..ஹி.. விவரிப்பு மனஓட்டங்கள் பிரமாதம்.

    ரமேஷ் -- ராமகிருஷ்ணன்
    எல்லாமே பெயர்கள் தாமே?..

    நகுலனின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.

    'ராமச்சந்திரனா என்று
    கேட்டேன்
    ராமச்சந்திரன் தான்
    என்றார்
    எந்த ராமச்சந்திரன் என்று
    நான் கேட்கவுமில்லை
    அவர் சொல்லவும் இல்லை'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இந்தக் கவிதை நானும் படித்து மிக ரசித்திருக்கிறேன்.  நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  48. குல தெய்வம் கோயில் சென்று வந்த மகிழ்ச்சியுடன். ... அர்ச்சகரின் வேண்டுகோளும்.:(

    ஜோக்ஸ் நன்று.

    ஆடுதான் ...அய்யோ என்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  49. குல தெய்வம் கோயில் சென்று வந்த மகிழ்ச்சியுடன். ... அர்ச்சகரின் வேண்டுகோளும்.:(

    ஜோக்ஸ் நன்று.

    ஆடுதான் ...அய்யோ என்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!