அவர் சட்ட அறிவில் பெரிய அளவில் புத்திசாலி. ஆனால் ஏனோ நீதிமன்றத்துக்குள் சென்று வாதாடுவது இல்லை. அதற்கான காரணம் பின்னால் ஃபிளாஷ்பேக்காக சொல்லவும் செய்கிறார்கள். நீதிமன்ற வாசலில் நாற்காலியில் டைப்ரைட்டரின் முன் அமர்ந்து நோட்டரி பப்ளிக் வேலை செய்கிறார். அதனால் டீக்கடைக்காரர் உட்பட அவரை கிண்டல் செய்பவர்கள் அதிகம். மகனும் மகளும் கூட கிண்டல் செய்கிறார்கள். மனைவி அலட்சியப்படுத்துகிறாள். சட்டக்கல்லூரியில் சேருவதாகச் சொன்ன மகன் வேறு பாடத்தில் சேர அப்ளிகேஷன் வைக்கிறான். கேட்டால் இவரை மரியாதை இல்லாமல் பேசி அவமானப்படுத்துகிறான். அவனுக்கு அப்பாவின் இயலாமை மேல் கடும் கோபம்.
அவரை நம்பி வரும் ஒரே நபர் புதிதாக சட்டம் பயின்று பயிற்சிக்கு வரும் ஒரு மாணவி. அழகிய மாணவி. கல்லூரிக்கு காலத்தில் இவர் கற்றுக்கொடுத்த விஷயங்களால் கவரப்பட்டு இவர் மேல் இருக்கும் மதிப்பால் இவரிடமிருந்து சிபாரிசுக்கு கடிதம் வாங்கியதாலேயே எந்த வழக்கறிஞரிடமும் ஜூனியராக சேர முடியாத நிலை. கேலிக்கு உள்ளாகிறார்.
இன்னொரு பிரபல வழக்கறிஞரிடம் உதவியாளராக இருக்கும்
அவரது சீனியர் மாணவன் அவரை எள்ளி நகையாடுகிறான். 'வாஉனக்கு சிபாரிசு செய்கிறேன்' என்கிறான்.
அந்தப் பெண் இவரிடம் தைரியமாக உள்ளே வந்து வழக்காட அழைக்கிறாள். இவர் மறுக்கிறார்.
எல்லோரும் அவரின் இயலாமையைச் சுட்டிக் காட்டி கேலி பேசும் ஒரு சூழ்நிலை அவரை மாற்றுகிறது. தன்னை நிரூபிக்க ஒரு வழக்கை கையில் எடுக்கத் தீர்மானிக்கிறார்.
ஆரம்பக் காட்சியில் ஒரு பெரியவர் கோர்ட் வளாகத்தில் தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்கிறார். யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அதையே இவர் தன்னை நிரூபிக்க பயன்படும் வழக்காக எடுக்கிறார். அந்தப் பெண்ணையும் துணைக்கழைத்துக் கொள்கிறார்.
சாதாரண வழக்கு போல தோன்றும் இது திடீரென படா படா வழக்கறிஞர் PP யாக வர, சூடு பிடிக்கிறது. இந்த சின்ன வழக்குக்கு இவ்வளவு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஏன் என்று கூட முதலில் இவ்விருவரும் சந்தேகபப்டுவதில்லை. வழக்கம் போலான ஆரம்ப அவமானங்கள், தோல்விகள்...
நீதிபதிகள் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்கள் முன் இந்த சாதாரண நோட்டரி பப்ளிக் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் . தடுமாறுகிறார்.
அந்த பிரபல வழக்கறிஞர் அசைக்க முடியாமல் சில வாதங்களை எடுத்து வைத்ததும் கோர்ட்டிலேயே மயங்கி விழுகிறார் இவர். அங்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.
விசாரிக்க ஆரம்பிக்கையில் தீக்குளித்து இறந்தவர் கொடுத்திருந்த அட்ரஸ் ஒரு மனநல காப்பகம் என்று தெரிகிறது. அதாவது மனநிலை சரி இல்லாதவர்! சோர்ந்து போகிறார் இவர். இப்படி வரும் ஆரம்பக் குழப்பங்களை சுந்தரமூர்த்தியாக வரும் சரவணன் எப்படி சமாளிக்கிறார் ஏன்பது கதை.
மனநிலை சரியில்லாதவராக வரும் நடிகர் நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் காட்சிக்குக் காட்சி அவர் அழுவதைப் பார்த்தல் இரக்கத்துக்கு பதில் எரிச்சல்தான் வருகிறது. நாயகியாக வருபவர் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றாலும், இந்த மாதிரி கதைகளுக்கு தேவையான உதவியாளர் பாத்திரத்துக்கு வருகிறார், அழகாக இருக்கிறார். சரவணன் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். இளவயதிலேயே வராதது இப்போதா வரப்போகிறது?
கோர்ட் சம்பந்தப்பட்ட கதை என்றதுமே ஆர்வமாகப் பார்த்தேன். ஏமாற்றவில்லை. எலலவற்றையும் மீறி சுவாரஸ்யமாகவே இருந்தது.
ZEE 5 OTT யில் பார்த்தேன்.
================================================================================================
ஓர் அபார நூல்
என் தந்தையார் எனக்கு பிரபந்தத்தின் மேல் ஆர்வத்துடன் சில அரிய புத்தகங்களையும் விட்டுச்சென்றார். பாலகங்காதர பிரம்மாண்டமான புத்தகம். பொடிப்பொடியான ஆங்கில எழுத்து களில் ஆயிரம் பக்கங்கள். இதை ஒரு நாள் படித்து முடிக்கவேண்டும் என்கிற ஆர்வத்துடன் பக்கம் பதினைந்து வரை வந்திருக்கிறேன்.
அதேபோல பனாரஸிதாஸ் பதிப்பித்த 'வேதிக் கன்கார்டன்ஸ்' என்னும் புத்தகத்தைத் தூக்கி வைக்க இரண்டு ஆள் வேண்டும். அத்தனை கனமானது. இந்தப் புத்தகத்தை அவ்வப்போது என் அப்பாவின் நினைவுக்காகப் புரட்டுவேன். அதோடு சரி. மூன்றாவது புத்தகம், ஸ்தானிகம் பார்த்தசாரதி ஐயங்கார் தொகுத்த 'திவ்யப்ரபந்த அகராதி: இதன் தொகுப்பாசிரியர் ஸ்ரீரங்கம் தேவஸ்தான பத்திரிகை யின் ஆசிரியராக இருந்தவர்.
இந்த நூலை என் தந்தை கையெழுத்திட்டு 1964ல் எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார். இதைத்தான் நான் போற்றிப் பாதுகாத்து அடிக்கடி படித்தும் பயன்பெற்றிருக்கிறேன். இந்த நூலுக்கு அந்தக் காலத்தில் அறநிலைய ஆட்சித்துறை அமைச்ச ராக இருந்த எம்.பக்தவத்சலமும் தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும் முன்னுரையும் அணிந்துரையும் வழங்கியிருக்கிறார்கள். ஒரு தனி மனித சாதனையாக நம்மை வியப்படைச் செய்யும் நூல்.
நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் உள்ள ஏறத்தாழ எல்லா சொற் களுக்கும் அவை எந்தப் பாட்டில் எந்த வரியில் வருகிறது, அதற்கான அரும்பத உரை, வியாக்கியானங்களில் உள்ள சிறப்புக் குறிப்பு விளக்கம் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தந்திருக்கிறார் பார்த்தசாரதி ஐயங்கார். 1918லிருந்து இந்த அகராதி திரட்டுவதில் ஈடுபட்டு பலரிடம் உதவி கேட்டு கிடைக்காமல் சோர்விழக்காமல் பத்தாயிரம் ரூபாய் வரை சேர்த்து முடித்து பதிப்பித்திருக்கிறார்.
இது அகராதி மட்டும் அல்ல. ஒருவிதமான 'கன்கார்டன்ஸ்' என்று சொல்லலாம். ஒவ்வொரு சொல்லும் பிரபந்தத்தில் எந்தெந்த பாடல்களில் எந்தெந்த அர்த்தத்தில் வழங்குகின்றன என்று குறிப்பிட்டி ருக்கிறார். கூடுதலாக நாலாயிரம் பாடல்களுக்கு கணக்கு காட்டியிருக்கிறார். தேசிகர் தமிழ், கோயில் தமிழ், சிலேடைகள் போன்ற விஷயங்களும் உள்ளன. தேசிகர் தமிழில் வேதாந்த தேசிகர் அருளிய ரஹஸ்ய கிரந்தங்களின் ஊடே உள்ள சில அரிய தமிழ்ப் பதங்களுக்கு விளக்கங்கள் கூறியுள்ளார். உதாரணம், 'அடி தப்பாதே கருவி வைக்கை' என்பதற்கு 'சதுரங்கம் ஸ்தாகம், இடம், கட்டான், கருவி-ஆனை, குதிரை என்ற பெயருள்ள செப்புகள்'
'கோயில் தமிழ்' என்ற தலைப்பில் ஸ்ரீரங்கம் கோயிலிலே வழங்கும் விசேஷமான தமிழ்ச் சொற்களை பட்டியலிட்டிருக்கிறார். உதாரணம் அளவுக்காரன் - கொட்டாரத்தில் நெல் அளப்பவன், அருளப்பாடு காரளப்பன் என்ற மரியாதைச் சொல்லால் பெருமாளிடம் அழைப்பு உண்டு."
இவ்வாறான பல அரிய செய்திகள் கொண்டது இந்நூல்.
"திவ்யப்ரபந்த அகராதியின் ஓர் உதாரணம், பார்த்தசாரதி ஐயங்காரின் ஆராய்ச்சியின் ஆழமும் ஞானமும் தெரிய வரும். 'தினைத்தனையும் 1014-4 சொல்லவொண்ணா தினை ஸூக்ஷ்மமான தாந்யம், எள்ளத்தனை என்னுமாப் போலேயாய்' அபரிமிதமான காலத்தைச் சொல்கிறது 1919/1.
தினைத்தனையும் விடாள் 3526-3 தினைத்தனையும் அச்சம் 1919-1 தினையாஞ்சிறிதளவும் 2929-2"
பார்த்தசாரதி ஐயங்காரின் இந்த அபார நூலில் அவருடைய நாலாயிர கணக்குத்தான் சற்று எனக்கு உதைக்கிறது. எப்படியாவது 4000 வரவேண்டும் என்று பெரிய திருமடல், சிறிய திருமடல் போன்ற ஆசிரியப்பாக்களை 148 1/2, 77 1/2 என்று செயற்கையாக கணக்கிட்டு நாலாயிரத்துக்கு இழுத்திருக்கத் தேவையில்லை. இரண்டு மடல்களும் இலக்கணப்படி ஒற்றைப் பாக்களே இதைப் பற்றி வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளைக் கேட்டபோது கணக்கு வர வேண்டும் என்பதற்காக நாலாயிரத்துக்கு இழுக்க வேண்டியதில்லை என்றார். 'ஸ்டாண்டர்டு' எண்ணிக்கை வைப்பு ஸ்ரீவைஷ்ண மற்றும் ஸ்ரீசுதர்ஸனரின் பதிப்புகளில் கிடைக்கிறது. பார்த்தசாரதி ஐயங்காரின் அகராதியைப் பயன்படுத்த தபால் ஆபீசுகளில்போல ஒல்டு நம்பர், ந்யூ நம்பர் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சின்ன சங்கடத்தைத் தவிர மற்றபடி இது ஒரு மிக அருமையான நூல்.
சுஜாதா
28.08.2005
================================================================================================
கிசுகிசுவை படிக்க முடிகிறதா? உடைக்க முடிகிறதா?
கீழே உள்ள படங்களில் இருக்கும் ஆண் நடிகர்களை அடையாளம் காணமுடியும் என்றே நினைக்கிறேன்!
===============================================================================================
எந்தப் பாடலை வரிகள் மாற்றி இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாதா என்ன! பாடிப் பாருங்கள் சரியாக இருக்கும்!
நான் சமைக்க திங்க நினைப்பதெல்லாம் நீ சமைக்க வேண்டும்
காயோடும் கறியோடும் கலந்தாக்க வேண்டும்
கலந்தாக்க வேண்டும் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் (நான் திங்க )
குழம்போடு ரசம் வைத்து பரிமாற வேண்டும் பரிமாற வேண்டும்
நான் என்ன போட்டாலும் பொறுத்தாக வேண்டும் பொறுத்தாக வேண்டும்
பருப்போடு காய்சேர்ந்து குழம்பான பின்னே குழம்பானபின்னே
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
மோர்சாதம் போதும்னு சொல்லாமை வேண்டும் சொல்லாமை வேண்டும்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் (நான் திங்க )
கறியென்றும் தயிரென்றும் பகை ஒன்றும் இல்லை
பகை ஒன்றும் இல்லை
சமைக்காத சமையலால் பயனொன்றும் இல்லை பயனொன்றும் இல்லை
உன்னோடு நான் சேர்ந்து உறவானபின்னே உறவானபின்னே
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
பணியாரம் தினம்தோறும் டிஃபனாகவேண்டும் டிஃபனாகவேண்டும்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
நான் சமைக்க திங்க நினைப்பதெல்லாம் நீ சமைக்க வேண்டும்
காயோடும் கறியோடும் கலந்தாக்க வேண்டும்
கலந்தாக்க வேண்டும் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
==============================================================================================
=====================================================================================================
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொக்கிஷம்
நீங்கள் பேச நினைத்ததையெல்லாம் இங்கே பகிர்ந்ததுபோல, வீட்டில் பாடியிருந்தால் பணியாரம் தினம் தினம் கிடைத்திருக்குமே.
பதிலளிநீக்குபணியாரம் என்றால் வைணவ பரிபாஷையில் சிறு தீனி, அதாவது பஜ்ஜி, பகோடா, கேசரி சுகியன் போன்று
இதுவரை படித்திருக்கிறேன். பிறகு வருகிறேன்.
வாங்க நெல்லை... சும்மா அந்த டியூனில் ஒரு பாட்டு. அர்த்தம் இருந்தாலும் அர்த்தம் இல்லை! அதாவது உண்மை இல்லை. சும்மா கற்பனை.
நீக்குபணியாரம் என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தமும் உண்டு. பணியாரம் என்றே ஒரு பண்டமும் உண்டு.
தொடர்க...!
கண்ணுல முதல்ல பட்டது உங்கள் பாடல் வரிகள்!!!
பதிலளிநீக்குஹை இன்னிக்கு கீதா டக்குனு கண்டு பிடிச்சிட்டா!
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். இந்தப் பாட்டுதானே? ஸ்ரீராம்.
இல்லை கீதா இது வேறு ஒரு பாட்டுன்னு என்னை ஏமாற்றிவிடாதீர்கள்!!! நான் கஷ்டப்பட்டு ஒரு பாட்டு கரெக்ட்டா சொல்லிட்டேன்னும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!
கீதா
வாங்க கீதா... சரியா கண்டு பிடிச்சுட்டீங்க... அதே பாட்டுதான்!
நீக்குசட்டமும்,நீதியும் நானும் பார்த்தேன். எனக்கென்னவோ பிடிக்கவில்லை. grip இல்லாமல் சவ சவ என்று இருப்பது போல தோன்றியது. மேலும் இப்படிப்பட்ட பட்ட கதைகள் இப்படித்தான் போகும், முடியும் என்பதை யூகிக்க முடிகிறதே.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... இந்தமாதிரி கதைகளை எளிதில் யூகித்து விடலாம். அதுவும் இது 15 நாட்களில் எடுக்கபப்ட்டதாம்! ஆனாலும் சில எதிர்பாராத திருப்பங்கள் இருந்தன.
நீக்குபணியாரம் - குழிப்பணியாரம்!!!! வேண்டுமா. பணியாரமே வேண்டுமா? செட்டிநாட்டு ஸ்டைல்.
பதிலளிநீக்குரொம்ப ஈசியாச்சே!
கீதா
ஹா.. ஹா... ஹா... ஒரே மாதிரி சாப்பிடாமல் எல்லா விதத்திலும் வித்யாசமா சாப்பிட வேண்டியதுதான்!
நீக்குகிசுகிசுக்களை யூகிக்க முடியவில்லை.
பதிலளிநீக்குமுத்துராமன், நாகேஷ், நம்பியார், தயிர் வடை தேசிகன்.
அப்போதைய பிரபலங்கள் யார் என்பதில் குழப்பம் இருக்கும்தான். இரண்டாவது பதில் ஈஸிதான் இல்லை? யாராவது நம்பியாரை வெ ஆ மூர்த்தி என்று சொல்வார்களோ என்று பார்த்தேன்!
நீக்குநான் வெ ஆ மூர்த்தி என்று நினைத்தேன்.
நீக்குஆ... அப்பாடி... ஒரு ஆளாவது சிக்கினாரே...
நீக்குசட்டமும் நீதியும் பார்ட் பார்த்ததும், எனக்கும் கோர்ட் சீன்கள் பிடிக்கும் ஆனால் ஓடிடி இல்லை.
பதிலளிநீக்குஇப்பகுதியை வாசித்ததும், நேற்று வெங்கட்ஜி தளத்தில் உள்ள வாசகமும், நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு வரியும் அங்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.
கீதா
அங்கு என்ன கொடுத்தீர்கள் என்று நினைவில்லை. போய்ப் பார்த்தால்தான் தெரியும்!
நீக்குகல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடலின் மெட்டுக்கும் வரிகள் எழுதி விடுங்கள். சமீபத்தில் வேறு ஏதோ பாடலுக்கும் வரிகள் எழுதியிருந்தீர்களே? கில்லர்ஜியின் பாதிப்பா?
பதிலளிநீக்குபானுக்கா, ஸ்ரீராம் பாடலின் வரிகளை மாற்றி முன்னரே எழுதுவார், அதையும் அவர் இங்கே பகிர்ந்திருக்கிறார். மாற்றிய வரிகளில் அர்த்தமும் இருக்கும்.
நீக்குகீதா
எதற்கு கல்லெல்லாம் மாணிக்க கழலாகுமா பாடலுக்கு எழுத வேண்டும் என்று குறிப்பாக கேட்கிறீர்கள்? கில்லர்ஜி பாதிப்பா கேள்விக்கு கீதா பதில் சொல்லி விட்டார். நீங்கள் எபி பக்கம் முன்பு அடிக்கடி வருவதில்லை என்பதால் உங்களுக்குத் தெரியவில்லை!
நீக்குஜோக்ஸ் பிரமாதம்! மதனுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇந்த வாரம் எல்லாம் சினிமா சம்பந்தம் உள்ளவை ஆகிவிட்டன, ஜோக்குகள், கவிதை, கோயில் படம் தவிர. எனக்கு சினிமா அலர்ஜி.
பதிலளிநீக்குபாடல்களை ரீமிக்ஸ் செய்வது கில்லெர்ஜீ தொழில். அவருக்கு போட்டியாக வராதீர்கள்.
கவிதை வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்கிறதோ? இந்தியாவை போல.
ஜோக்குகள் ஜோக்குகள் தான். கடைசி ஜோக் ரிப்பீட் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் அவசர பதிவு.
Jayakumar
வாங்க JKC ஸார்...
நீக்குசீரிஸ் வகையறாக்களை சினிமா ஆக்கி விட்டீர்கள்.
பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் எனக்கும் கிளல்ர்ஜிக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரியாதது வருத்தம்தான். நானும் பத்து வருடங்களுக்கும் முன்னாலிருந்தே பேஸ்புக்கிலும், இங்கும் வரிகளை மாற்றி எழுதி வருகிறேன்.
கவிதை ஓகே
அவசர பதிவா? ஹா.. ஹா.. ஹா...
பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கில்லெர்ஜீ தொழில். அவருக்கு போட்டியாக வராதீர்கள்//
நீக்குஹாஹாஹா.....ஜெ கே அண்ணா முன்னரும் நீங்கள் இங்கு இதைச் சொல்லியிருக்கீங்க. உங்களின் இந்தக் கருத்திற்கு நான் அப்பவும் சொல்லியிருக்கிறேன்.
ஸ்ரீராம் இதெல்லாம் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறார் முன்னரே. மாற்றுவதில் அர்த்தமும் இருக்கும்.
சிறிய வயதில் பலரும் இதைச் செய்திருக்கக் கூடும்.
எங்கள் வீட்டில் நாங்க சின்னவங்களா இருந்தப்ப இப்படிப் பல பாடல்களில் வரிகளை மாற்றிப் போட்டு அந்தந்த கான்டெக்ஸ்ட்டுக்கு ஏற்ப பாடிக் கலாய்ப்பதுண்டு.
உதாரணம் - என் ஜோடி மஞ்சக் குருவிக்கு - சூடான வத்தக் குழம்பு, ஜோராகச் சுட்ட அப்பளம்னு ...அப்புறம் கரும்பு தின்னும் அத்தை மகனே....நீ கைவலிக்க கரும்பொடித்து என்றெல்லாம்...(இப்படிப் பாடி ஒரிஜினல் பாட்டே மறந்து போச்சு ஹாஹாஹா)
ஆனா இப்ப இதைப் போட்டால் இப்படி ஒரு ஒப்பீடு வந்துவிடும் , வந்துவிடுகிறது. .இது ஒரு படைப்பாளியின் கற்பனையையும் படைப்பையும் பாதிக்கும்.
இப்படிச் செய்வதை ஒருவர் மட்டும்தான் செய்யணுமஆ? ஏன் மற்றொருவர் செய்யக் கூடாது?
இது ஏதேச்சையாகவும் இருக்கலாமே!
அப்படிப் பார்த்தா இட்லி, தோசை வடை, சாதம் எல்லார் வீட்டிலும் செய்யக் கூடிய ஒன்று. ஆனால் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும் இல்லையா அது போலத்தான்.
அரபிந்தோ சொன்னது போல் உலகில் வேறு எங்கோ ஒரிடத்தில் உள்ளவர் நினைப்பது போல் நாமும் நினைக்கக் கூடும். நம்மைப் போல் வேறு எவரேனும் நினைக்கவும் கூடும்.
நீங்கள் சொன்னது போல் சுஜாதாவைப் பற்றியும் இப்படியான கருத்துகள் உண்டு. ஆங்கிலக் கதைகளைத்தான் இங்கு தமிழில் எழுதினார் என்று. ஆனால் நாம் அப்படி எடுத்துக் கொள்வதில்லையே.
கீதா
__/\__
நீக்கு//ஃபோட்டோ எடுக்கற நேரத்தில் எங்கிருந்து வறீங்க சார்// எனக்கும் சமீபத்தில் இப்படி தோன்றியது.
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... அப்புறம் அவர் ரொபம்ப நேரம் அங்கிருந்து காணாமல் போகவில்லை. எனவே அங்கே காலியாக என்னால் எடுக்க முடியவில்லை. கேஜிஎஸ் வேற அவசரப்பப்படுத்திக் கொண்டிருந்தார்.
நீக்குசுஜாதாவின் வாசிப்பு எப்போதுமே பிரமிப்புதான். நினைவுத்திறனும், வாசிப்பும் அதை சரியான இடத்தில் சரியாகப் பயன்படுத்தும் விதமும், அந்த நினைவுத்திறனும், அவருடைய 18 வயதில் அவர் எழுதிய முதல் கதையிலேயே அறியலாம்.
பதிலளிநீக்குகீதா
உண்மைதான். எனக்கு அதோடு கூட பாசுரங்கள் (மனப்பாடமாக) சொல்லத் தெரிந்தவர்கள் மீதும் மரியாதை உண்டு. அதில் இருக்கும் அழகிய தமிழ் போல வேறெங்கிலும் பார்க்க முடியுமா?
நீக்குஎனக்கும் ஸ்ரீராம். எனக்கு ஒரு சிலதான் தெரியும். பிரபந்தப் பாசுரங்கள் + தேவாரம் திருவாசகம், திருப்புகழ் இவை எல்லாமே தமிழின் அழகான வடிவங்கள். சொற்களும் கட்டமைப்பும். கேட்கவே இனிமையாக இருக்கும். தமிழினிது!
நீக்குகீதா
கிசு கிசு கொஞ்சம் வாசிக்க முடிந்தது என்றாலும், நோ ஐடியா....கே ஆர் விஜயா படம் போட்டிருப்பதால் அது மட்டும் கொஞ்சம் யூகிக்க முடிந்தது. அவங்களுக்குக் குழந்தைகள் கிடையாதோ?
பதிலளிநீக்குகீதா
கே ஆர் விஜயாவுக்கு குழந்தைகள் இல்லையா? எனக்குத் தெரியாது.
நீக்குகிசுகிசுவில் சில சங்கடங்கள் உண்டு. மூன்றெழுத்து பிரபல சண்டிகர் என்பார்கள். விஜய், அஜித், ஆர்யா, என்றும் நிறைய மூன்றெழுத்து நடிகர்கள் இருப்பார்கள்.
கே ஆர் விஜயாவுக்கு ஒரு மகள் உண்டு என்றும் அவர் பெயர் ஹேமா என்றும் என் அக்கா போன் செய்து தகவல் சொன்னார்.
நீக்குஓ அப்படியா. அக்காக்கும் தாங்க்ஸ் சொல்லிடுங்க, ஸ்ரீராம். அப்ப எதுக்கு அந்த இடத்தில் கே ஆர் விஜயா படம்? வாசகர்களைக் குழப்பவோ?
நீக்குகீதா
படங்களில் அடையாளம் எல்லாம் காணமுடிகிறது அந்தக் கடைசி படத்தில் யாரது? ஏதோ மேக்கப்பா? கமல் எல்லாம் செஞ்சுக்குவாரே அது போல?
பதிலளிநீக்குகீதா
அவர் தயிர்வடை தேசிகன்.
நீக்குநான் சமைக்க நினைப்பதெல்லாம் நீ திங்க வேண்டும்னும் எழுதலாமே!!!!!! ஏன் சமைக்க என்பதை கட் செஞ்சீங்களோ!!! ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
உங்க வரி தவறு. நான் சமைத்து வைப்பதெல்லாம் நீ உண்ண வேண்டும்... என்பதே சரி
நீக்குகரீக்டு
நீக்குகீதா
எங்க வீட்டுல மாத்திரம் இது நடக்காது. நான் சொல்லாத உணவைச் சமைத்தால் நான் அனேகமாக சாப்பிடமாட்டேன். இது ஒரு முப்பது வருடப் பழக்கம். மனைவிக்கு எரிச்சல்தான். என்ன பண்ணறது?
நீக்குசமைக்க என்பதை எங்கள் க்ரூப்பில் திங்க என்று சுஜாதா மாற்றிக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டுவிட்டேன்.
நீக்குநெல்லை.. நீங்கள் செய்வது அராஜகம்!!!! பாவம் உங்கள் பாஸ்!
நீக்குஉண்மைதான் ஶ்ரீராம். அதனால சில பல உணவுகளை அவளுக்கு சமைக்க சந்தர்ப்பமே வராது. நல்லவேளை பசங்க உணவில் நான் தலையிடுவதில்லை என்பதால் அவங்களைச் சாக்கிட்டு சின்ன வயதிலிருந்தே பலவற்றைச் செய்வாள் (நான் கஸ்டமர் இல்லை) இன்றுகூட, இன்னும் என்ன செய்யச் சொல்லலாம் என முடிவு செய்யவில்லை.அவள் அம்மா இருப்பதால் அவருக்கேற்ற மாதிரி ஏதேனும் சமைப்பாள். நான் அன்றன்றைக்கு எடையைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்வேன், இன்று காய் கூட்டா, சாதம் உண்டா இல்லை தோசையா என்ன என்பதை.
நீக்குநான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கத்தரிக்காய் பஜ்ஜி சாப்பிட்டளன். என்ன ருசி என்ன ருசி. நீங்க சாப்பிட்டிருக்கிறீர்களா?
எங்கள் வீட்டிலும் ஆரம்பம் முதலே - பிள்ளைகள், மாமியார் வந்த பிறகு - என் விருப்பங்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு பிடித்ததை செய்வார்கள். நானும் சாப்பிடுவேன். பட்டிக்காடா பட்டணமா வி கே ராமசாமி மாதிரி இப்போது கொஞ்ச நாளாய் எனக்கு வீரம் வருகிறது!
நீக்குகத்தரிக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருக்கிறேன். ரொம்ப நாளாகி விட்டது. பிடிக்கும்!
நெல்லை பாவம் உங்க ஹஸ்பென்ட். அவங்களுக்கு அவகாடோ வாங்கிக் கொடுங்க. ஆசைப்பட்டாங்க.
நீக்குகீதா
நந்தியின் படம் அழகு....அதற்கான வரியை வாசித்து சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குஅதுக்கு அடுத்த படம் அட்டகாசம்....இந்தப் படத்தின் வரியை நான் அடிக்கடி நினைப்பதுண்டு. பல படங்களையும் ஆட்கள் இல்லாமல் எடுக்க நினைப்பேன் ஆனா சரியா கோணம் பார்த்துக் க்ளிக் செய்யறப்ப யாராவது உள்ளார புகுந்துருவாங்க.
கீதா
வடநாட்டு டூர் போனபோது பதிவுக்கு உதவும் என்று சில படங்களை நான் எடுக்க முயலும்போது எங்கிருந்தோ விசு மாமா வந்து எதிரே நின்று விடுவார். சரி என்று அவரை எடுத்து விட்டு அவர் நகரும் வரை சைலண்ட்டாக காத்திருந்து மறுபடி வியூ செய்தால் மறுபடி அங்கே வந்து நின்று விடுவார்.
நீக்கு"மாமா, நான் இந்த இடத்தை தனியாக யாரும் இல்லாமல் போட்டோ எடுக்க விரும்புகிறேன். பிளாக்குக்கு உதவும்" என்பேன். "ஏன் தனியாக எடுக்கணும்? ஏண்டா போட்டோவை வேஸ்ட் செய்யறே" என்பார்!
அந்தத் தூண்கள் படம் அட்டகாசம். சிறு குழந்தையை அல்லது காதலியை தூணின் மறைவிலிருந்து எட்டிப் பார்ப்பது போல் முகம் மட்டும் (இயற்கையாக அமைந்தால் சூப்பரா இருக்கும் முகத்தில் இருக்கும் உணர்வுகள்)...லாங்க் ஷாட்டில் எடுத்தாலும் அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
நல்ல கற்பனை, ஆனால் அப்போது எனக்கு சிறு குழந்தையும் இல்லை. சோதனையாக காதலியும் இல்லை!
நீக்குஹாஹாஹா பரவால்ல அப்ப இல்லைனா என்ன...ஆ! இப்ப காதலியைச் சொல்லலை....நம்ம வீட்டில் குட்டிபாப்பாஸ் வரும் போது அவங்களை அப்படி எடுத்துடுங்க!!
நீக்குநான் ஃபோட்டோஸ் எடுக்கறப்ப இப்படி நிறைய யோசிப்பேன். அதுக்கெல்லாம் நான் தனியாகப் போகணும். என் அலைவரிசையில் இல்லாதவர் கூட யாரேனும் இருந்தால் நடக்காது.
ராமலக்ஷ்மி அவங்க portrait எடுக்கறதயும் ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன். சூப்பரா எடுக்கறாங்க இல்லையா!?
கீதா
ராமலக்ஷ்மி இதிலெல்லாம் மாஸ்டர் டிகிரி வாங்கினவங்க...
நீக்குகவிதைகள் இரண்டும் அட்டகாசம்.
பதிலளிநீக்குமுதல் கவிதையையும், இரண்டாவது கவிதையையும் நான் வசன டைப்பில் ஒன்றில் எழுதியிருக்கிறேன். இதே அர்த்தத்தில்,
கீதா
அட....!
நீக்குஉனக்கும் எனக்குமான வித்தியாசங்களை மாத்திரமா இல்லை தவறுகளையுமா? பெரும்பாலும் அப்படித்தானே நிகழ்கிறது
பதிலளிநீக்குதவறுகள்தான் வித்தியாசங்கள்!
நீக்குஜோக்ஸ் அட்டகாசம். பாருங்க காலம் கெட்டுப் போச்சு அந்த ரோபோ போல வடிவம் இப்ப நடக்குதே..
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா... மதன் மறுபடியும் தீர்க்கதரிசி பட்டம் பெறுகிறார்!
நீக்குநாலாயிரம் பாசுரக் கணக்கில் சுஜாதாவின்எண்ணம் மிகவும் சரிதான். நாலாயிரத்துக்கான சொல்லதிகாரம் -சொல்லடைவு என்ற புத்தகத்தை (சுஜாதா சொல்லியிருப்பது) எழுத்தாளர் சுஜாதா தேசிகன் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். மிக உபயோகமான புத்தகம், நாலாயிரத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க... எனக்குதான் அபரிச்சயம் இல்லையே.. நீங்கள் எல்லாம் கட்டாயமாக சிறு வயதிலேயே இதையெல்லாம் பாடம் செய்திருப்பீர்கள் இல்லை?
நீக்குஇல்லை. சில பல பாசுரங்கள் தவிர. காரணம் அந்த வயதில் இதன் முக்கியத்துவம் புரியாத்து. வயதாகிவிட்டால் மன்னம் செய்வது கடினம். (இதற்கு ஒரு வழி இருக்கிறது என சென்ற வருடம் கண்டுகொண்டேன். பிறகு எழுதுகிறேன்)
நீக்குஎன் மனைவியின் (ஒன்று விட்ட) சகோதர்கள் அவர்கள் மனைவிகள், அவர்கள் சிறு பிள்ளைகள் கூட ஏன் அவர் தாயும் பாசுரங்களை மனப்பாடமாக சத்தமாக பாடுவார்கள். எனக்கு பொறாமையாக இருக்கும்.
நீக்குவெப் சீரீஸ்... பார்க்கணும். எத்தனையோ இருக்கு. ஆனால் ஒரு நாளில் அவற்றுக்கு ஓரிரு மணி நேரத்துக்குமேல் கிடையாது
பதிலளிநீக்குபெரும்பாலும் நானும் அப்படி பிளாக்குக்கு, புத்தகத்துக்கு, செய்திகளுக்கு, OTT க்கு, தூங்க என்று கலந்து கட்டிதான் நேரம் ஒதுக்குகிறேன். சமயங்களில் எல்லை மீறி விடும். ரொம்ப ரேர்!
நீக்குசரவணன் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்ற வரியை வாசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அவரது நடிப்பை முன்பு சில படங்களில் கண்டிருப்பதால். நடிப்பின் மிக முக்கியமான அம்சமான உணர்வுகள், உடல் மொழி அவருக்கு அவ்வளவாக வராது.
பதிலளிநீக்குவெப் சீரீஸ் இல்லையா? பார்ப்பது சிரமம் நான் அதில் இல்லை.
துளசிதரன்
அடுத்த வரியை வாசிக்கவில்லையா?!!
நீக்குஇளவயதிலேயே வராதது அந்த வரியை வாசித்துவிட்டேன். மொபைலில் வாசிப்பதால் சில சமயங்களில் வரிகள் விட்டுப் போய்விடுகின்றன.
நீக்குதுளசிதரன்
ஹா.. ஹா.. ஹா.. அவர் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பன்றார்!
நீக்குஉங்கள் கவிதைகள் மிகவும் அருமை ஸ்ரீராம். எதிர்பாரா அணைப்புகள், எதற்கென்று தெரியாத புன்னகைகள், இவற்றைக் கவிதையாக்கும் உங்கள் கற்பனை வியக்க வைக்கும் ஒன்று.
பதிலளிநீக்குகிசு கிசு வாசித்து ஓரிரண்டைத் தவிர பாக்கி எல்லாம் உடைக்க முடியவில்லை.
முத்துராமன், நம்பியார்? நாகேஷ், மற்றவர் தயிர்வடை தேசிகன் என்று சொல்லப்பட்ட நடிகர்தானே?
ஜோக்ஸை மிகவும் ரசித்தேன். மதன் அவர்களுக்கு இருக்கும் கற்பனை அபாரம்.
துளசிதரன்
நன்றி துளஸிஜி. அந்த எதிர்பாரா அணைப்பும் எதற்கென்று தெரியா புன்னகையும் இன்னும் மனதில் நிற்கிறது!
நீக்குஇன்றைய பதிவு அருமை.
பதிலளிநீக்குபகிர்வுகளும் அருமை.
உங்கள் பாடல் மாற்றல்,
வரிகளை மாற்றி போட்டது அருமை.
கோயில் படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் வாசகங்களும் புன்னகை பூக்க வைக்கிறது. படங்கள் அருமை.
உங்கள் கவிதைகளும் அருமை.
நகைச்சுவை நன்றாக இருக்கிறது.
கீழே உள்ள படங்களில் இருக்கும் ஆண் நடிகர்களை அடையாளம் காணமுடியும் என்றே நினைக்கிறேன்! //
பெண் நடிகையையும் அடையாளம் காண முடிகிறது.
சகுந்தலா. மந்திரிகுமாரியில் எம்.ஜியாரின் கதாநாயகி.
குணசித்திர மற்றும் வில்லி பாத்திரத்தில் அருமையாக நடிப்பார்.