6.11.25

மனம் கவர்ந்த மாப்பிள்ளையின் அண்ணா...

 

தங்கை மாமனாரின் வருஷாப்தீக நிகழ்ச்சியில் சுபஸ்வீகரணம் நாளன்று -  கடந்த வெள்ளிக்கிழமை - சென்று வந்தேன்.  அங்கு கவனித்த ஒரு விஷயம் கவனத்தைக் கவர்ந்தது.சட்டென மனம் கவர்ந்தார் மாப்பிள்ளையின் அண்ணா..  வீட்டுக்கு மூத்தவர்.  75 வயதுக்கு மேல் ஆகிறது. தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர்.  இன்னமும் அரசு  ஊழியர்களுக்கு துறைத் தேர்வுக்கு அவர்கள் தயாராக அங்கு சென்று வகுப்புகள் எடுக்கிறார்.

இந்த சுபஸ்வீகரணத்தில் இடம்பெறும் வைதீகக் காரியங்களில் ஒன்று சம்பந்தப்பட்ட வீட்டு அங்கத்தினர்கள் யாவரின் நட்சத்திரமும், ராசியும் சொல்வது.  எல்லோர் பெயர், நட்சத்திரம், ராசி சொல்லி அவர்களின் நல்வாழ்வுக்கு வேண்டுவது.  

சாதாரணமாக அது மாதிரி நிகழ்வில் அவரவர்களுடைய உறவின் விவரங்களை அவரவர்களே அளிக்க வேண்டி வரும்.  அவர்களுக்குத்தானே தெரியும்?  அவர்களே மனைவியின் நட்சத்திரத்தைக் கூட யோசிப்பவர்கள் நிறையபேர் உண்டு.  மருமகள், பேரனோ பேத்தியோ அவர்களின் விவரங்களை ஒருமுறை மகனிடமோ, மருமகளிடமோ கேட்டுக்கொண்டு பதில் சொல்வார்கள்.  ஜம்புலிங்கமே  ஜடாதரா தேங்காய் மாதிரி மசால்வடா - மகாதேவா சொல்லி   "ம்ம்ம்.." உறுமலுக்குப்பின் சரியான வார்த்தை  சரியான விவரம் பெறப்படுவதும்  நடக்கும்.

இவர், தனது, தனது மனைவியின், மகன், மருமகள், பேரன், பேத்தியின் விவரங்களில் தொடங்கி இரண்டு தம்பிகளின் இதே போன்ற விவரங்கள் வரை சட்சட்டென்று அவரே சொல்லிக்  கொண்டு வந்தது வியப்பு.  அது மட்டுமில்லாமல் தம்பியின் மகனுக்கு அவர்கள் நட்சத்திரம் தப்பாகச் சொல்கிறார்கள் என்பதை அவன் திருமணத்தில் அதை தான் நோட் செய்ததாகக் கூறி அதையும் அவர்களுக்கு சரியாகச் சொன்னார். முதலில் இவர் நட்சத்திரம் சொன்னதும் தம்பி மனைவி 'இல்லை, அது இன்ன நட்சத்திரம்' என்று சொல்ல, இவர் மறுத்து வருஷம் தேதி நேரம் சொல்லி பூராடம் என்றார்.  சாஸ்திரிகளும் அதை உடனே சரி பார்த்து 'அண்ணா சொல்வது சரி' என்று தீர்ப்பளித்தார்.

மாதா மாதம் செய்யும் அமாவாசை தர்ப்பணிங்களிலேயே சமயங்களில் அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டி விவரங்களில் இரண்டாம் தலைமுறையும் மூன்றாம் தலைமுறையும் குழம்பிவிடும்.  சிலருக்கு நினைவே இருப்பதில்லை.  சிலர் எழுதி வைத்துக் கொண்டு அதைப் பார்த்துதான் ஒவ்வொரு முறையும் செய்வார்கள்!

நடுவில் சிறிய இடைவெளி கிடைத்தபோது சபையிலே நான் இதைச் சொல்லி அண்ணாவைப் பாராட்டினேன்.  உடனே சாஸ்திரிகள் என்னை அடக்கினார்/  சபையில் நாலு பேருக்கு நடுவில் இதெல்லாம் சொல்லப்பபடாது என்றார்.  நான் மறுத்து, "பாராட்டை பப்ளிக்காதான் சொல்லணும், தவறைத்தான் தனியா சொல்லணும்"  என்றேன்.  எல்லோரிடமும் ஆட்சி செய்து கொண்டிருந்த வாத்தியாருக்கு நான் அவரை மறுத்துப் பேசியதில் வருத்தம் என்றாலும் கைகொடுத்தார்!  சமாளித்தார்.

இது மாதிரி நிகழ்வுகளிலும் இன்னும் வாத்தியாரை அழைத்து செய்யும் விசேஷங்களில் நான் இன்னொன்று கவனித்திருக்கிறேன்.

எந்த ஒரு சுப-அசுப விசேஷங்களும் தொடக்கத்தில் ஒரே மாதிரி அமையும்.  இறைவனைத் துதித்து சுக்லாம்பரதரம் சொல்லி ப்ராணாயாமத்துக்குப்பின் சுய அறிமுகம் நடக்கும்.

ஓரளவு இந்த இடம்வரை பெரும்பாலும் அனைவருக்கும் மந்திரங்கள் மனப்பாடம்.  அமாவாசை தர்ப்பணம் செய்வதால் கிடைக்கும் பலன்.

இந்த இடங்கள் வரும்போது என் சகோதரர் உட்பட பயோ டேட்டா போல வரும் மந்திரங்களை சாஸ்திரி உச்சரிக்கும் முன்னரே சொல்லி தன் புலமையை வெளிப்படுத்துவார்கள்.  ஆனால் அவை தாண்டி முக்கிய கட்டத்தில் நுழைந்தபின் சாஸ்திரிகள் உச்சரிக்கும் மந்திரங்களை சமயங்களில் திரும்பிச் சொல்வதே கடினமாக இருக்கும்.  நமது முந்திரிக் கொட்டை தனத்தை கவனித்து சாஸ்திரி இரிடேட் ஆகி இருந்தால் கஷ்டமான இடங்களை நாம் சொல்லா விட்டால் நிறுத்தி ம்ம்ம்  என்று உறுமி மறுபடி சொல்லி நம்மை திரும்பிச் சொல்லக் செய்வார்.

இது மாதிரி சந்தர்ப்பங்களில் வாத்தியாருக்கு எதிரே அமர்பவர்களுக்கு சாஸ்திர ஞானம் பிய்த்துக் கொண்டு போகும்.  தனக்கு எல்லாம் தெரியும் பாவமோ, தனக்கும் தெரியும் பாவமோ - இங்கு பாவம் என்பது sin அல்ல, Bhaavam என்று அறிக! - மு.கொ தனம் இருக்கும். அப்படி அமர்பவர்களுக்கு என்றில்லை.  சுற்றி இருப்பவர்களுக்கும்தான்.  ஆளுக்கொரு சாஸ்திரம் சொல்வார்கள்.

மூத்த மருமகளுக்கு  சீர் கொடுக்க வந்ததது ஒரு மூத்த தம்பதி.  அவர்கள் ஒரு தட்டில் ஒரு பருப்பு தேங்காய், பூ, பழம், வெற்றிலை, குங்குமம், மஞ்சள், வைத்து புடைவை, வேஷ்டி வைத்து  தயார் செய்து கொண்டிருந்தார்கள்.  இளைய மருமகள் அருகில் திரும்பி கிசுகிசுப்பாக, ஆனால் எல்லோருக்கும் கேட்கும்படி தப்பா வைக்கறாங்க...   இன்னிக்கி சுபம்..  ஒரு பருப்பு தேங்காய் வைக்கக் கூடாது.  இரட்டையாய் வைக்கணும் என்றார்.  இன்னொருவரும் இவர் ஆரம்பித்ததும் சட்டென புரிந்து கொண்டு அவரும் கூட கூட சாஸ்திரம் சொல்லத் தொடங்கினார்.  

சாஸ்திரிகள் அவர்களை கையமர்த்தினார்.  "நான் இருக்கேன்ல...  நான் பார்த்துக்கறேன்..  நானும் பார்த்தேன்..  சொல்றேன்.." என்றார்.  எனக்கு இந்த இடத்தில ஒரு சந்தேகம் வரும், வந்தது!  ஒன்று சாஸ்திரிகள் அதை கவனிக்காமல் விட்டிருக்கலாம்.  அல்லது ஏதோ ஒன்று..  மூத்தவர்கள்..  செய்து விட்டு போகட்டும் என்று விட்டிருக்க வேண்டும். 

அப்புறம் சாஸ்திரிகள் அந்த மூத்த தம்பதியினரைப் பார்த்து மெதுவாகத் தொடங்கும்போது இதை 'முதலில் கண்டுபிடித்த; இரண்டு பேரும் கூடக்கூட  வாத்யார் குரலை மீறி குரல் கொடுத்தனர்.  சாஸ்திரி அவர்களைத் திரும்பிப் பார்த்தார் தவிர, வேறொன்றும் சொல்லவில்லை, சொல்ல முடியவில்லை.  "பருப்பு தேங்காய் இன்னிக்கி இரண்டாய் வைக்க வேண்டும்...  எங்கே போவீங்க ரெண்டாவதுக்கு..  என்று அவர்களே கேட்டு, அவர்களில் ஒருவர் ஒரு தீர்வும் சொன்னார்.  "இரண்டாய் கட் பண்ணி வச்சுடுங்க!!!!"  இந்த இடத்தில சாஸ்திரிகள் குறுக்கிட்டு இங்க பாருங்க அத்தை..  அந்த பருப்பு தேங்காயை ஸ்வாமி கிட்ட வச்சுடுங்க...   மத்ததை தட்டில் வச்சு கொடுங்க" என்றார்.  அது ஏற்றுக்கொள்ளப்பட்டது!  ஓரமாக இருந்த அந்த பருப்பு தேங்காக் கடலை மிட்டாய்.  எனக்கு ஒரு விள்ளல் கிடைக்குமா என்று மனம் கேட்டதை யாரிடமும் சொல்லவில்லை - பாஸைத் தவிர.  அவர் ஒரு முறைப்பில்  என்னை அடக்கி அங்கிருந்து அழைத்துக் கொண்டு போனார்.

​========================================================================================



கூரைக்கூச்சல் – 04
"சேட்டை" வேணுஜி 


அனுபவத்தொடரில், ஒரு தத்துவம் கூட சொல்லாமல் இருப்பது அனாச்சாரமாகி விடலாம் என்பதால்..

வாழ்க்கையில் இரண்டுவிதமாக பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். ஒன்று, அதாகவே வந்து சேரும் தவிர்க்கமுடியாத அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது. அன்றி, என்னைப்போல, ஆகாயத்தில் போகிற அடியை, ஏணி வைத்து ஏறி வாங்கிக் கொண்டு பாடம் கற்றுக் கொள்வது. ஓசூரில் ஓரளவு நிம்மதியாக இருந்த நான், வலியப்போய் ஒன்றுக்கு இரண்டு ஓணான்களை என் யூனிஃபார்முக்குள் விட்டுக்கொண்டது அப்படித்தான்.

டி.வி.எஸ். கேண்டீன் குறித்து எழுதியபோது, இரவு உணவுக்கு மட்டும் வெளியே பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதையும் எழுதியிருந்தேன். அப்படி, இரவு உணவுக்காக நான் தேடிக்கண்டுபிடித்த, என் பட்ஜெட்டுக்கு உகந்த ஒரு மெஸ்ஸில், தினசரி பார்த்த ஒரு நபர் மீது பரிதாபம் ஏற்பட்டது; இப்போதைக்குப் பெயர் ராமன் என்று வைத்துக் கொள்வோம்; அவனது பெயரில் ஒரு பாதி அதுதான். டி.வி.எஸ்ஸில் ஹெல்ப்பராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான்; சென்னைக்காரன். நானே முன்னூற்றுச் சொச்ச சம்பளத்தில் முழிபிதுங்குகையில், என்னைக் காட்டிலும் கணிசமான தொகை குறைச்சலாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன், திண்டாடிக் கொண்டிருக்கிறான் என்பதை சீக்கிரமே புரிந்துகொண்டேன். அவன் இருந்த இடத்துக்கு அதிக வாடகை கொடுத்துவந்ததால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தான்.

இவனையும் நம் அறையில் தங்க வைத்தால், வாடகைச்செலவு பாதிகுறையும்; இவனுக்கும் உதவியாக இருக்குமே என்று ஒரு நல்ல எண்ணம் வந்து தொலைத்தது. The way to the hell is paved with good intensions – என்பது அப்போது என் களிமண்டைக்குப் புரியவில்லை. அவனும் குதூகலத்துடன் ஒப்புக்கொள்ள, முப்பது ரூபாய் மிச்சம்பிடிக்கப்போய் எவ்வளவு பெரிய சிக்கல்கள் வரப்போகின்றன என்பதை அறியாமல் நானும் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.

இந்த ராமனுக்கு இன்னொரு நண்பன்; பெயர் லட்சுமணன். (நிஜப்பெயரே!). அவனும் ஹெல்ப்பரே! நான் இருக்கும்போதும் இல்லாதபோதும் என் அறையில் இந்த ராமலட்சுமணர்கள் கூடிப்பேசுவார்கள். அந்த லட்சுமணனுக்குப் பால்வடியும் முகம். எப்படியென்றால், ஒரு டபராவில் டிக்காஷனும் சர்க்கரையும் போட்டு அவன் முகத்துக்கு நேராக நீட்டினால், இரண்டு டோஸ் டிகிரி காப்பி குடிக்குமளவுக்கு, அவ்வளவு பால் வடியும். பெருமாள், ஆராதனை, பிரபந்தம், தாயார் என்று அவன் வாய்திறந்து பேசினாலே, பக்திரசம் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிப்போடு கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்.

என் அறையில் நான் ஒரே ஒரு குட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் படத்தை வைத்து, எப்போதாவது கொஞ்சம் பூ வைத்து, ஒரு ஊதுபத்தி கொளுத்துவதோடு சரி. மற்றபடி மலைமேல் குடிகொண்டிருந்த சந்திரசூடேஸ்வரருக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. எங்கு போனாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அண்ணாத்தே பிள்ளையார் எனக்கு தோஸ்த் ஆகிவிடுவார் என்பதால், சந்திரசூடேஸ்வரர் கோவிலில், திருவருட்செல்வர் சிவாஜி மாதிரி, கெத்தாக உட்கார்ந்திருந்த ராஜகணபதிக்கும் எனக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டிருந்தது. போதாக்குறைக்கு, ஓசுர் முக்கிய சந்திப்பில் இருந்த பிள்ளையாருக்கு சல்யூட் அடிக்காமல் வேலைக்குப் போனதில்லை. என் பக்திச்சுருக்கம் இதுதான்.  

இந்த லட்சுமணன் என்பவனின் பக்தி, ஆசாரம், பேச்சு எல்லாமே சுத்த புரூடா, மகாமோசடி என்பதை நான் கண்டுகொள்ள அதிக நாள் பிடிக்கவில்லை. என் அறைக்கு எதிரே, சாலையின் எதிர்ப்புறத்தில் வசித்துவந்த அந்த தாவணிகளை வசியம் பண்ணத்தான் அவன் வந்திருக்கிறான் என்பதை அம்மணக்கண்களால் ஒரு நாள் கண்டுபிடித்தேன்.

ராமனும் சாமானியப்பட்டவனல்ல. அவன் அறைக்கு வந்த சில நாட்களிலேயே, வீட்டு ஓனர் திடீரென்று எனது புகைபிடிக்கிற பழக்கம் குறித்து ஆட்சேபம் எழுப்ப ஆரம்பித்தார். இத்தனைக்கும் பல தடவை அவர் வாடகை வாங்க வரும்போதெல்லாம் என் அறை புகைமூட்டமாகவே இருந்தும் அவர் ஒருபோதும் ஆட்சேபித்ததில்லை. நான் பெங்களூருவிலிருந்து வாங்கி வைத்திருந்த ஆமை வடிவ ஆஷ்-ட்ரேயை அவர் வரும்போதெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்வார். அப்படிப்பட்டவர்…?

என்னாச்சு இந்த மனுஷனுக்கு என்று கொஞ்சம் நோண்டியதும், ராமன் என்னைக் கழற்றிவிட்டு, லட்சுமணனுடன் அந்த அறையில் இருக்கலாமென்று திட்டம் தீட்டியது புரிய வந்தது. இது தவிர, அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எனது கொள்கையில் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. வாரத்துக்கு இரண்டு நாட்களாவது தரையை டெட்டால் போட்டு மெழுகுவது, சாம்பிராணி போடுவது, தினசரி கூட்டிப்பெருக்குவது, குளியலறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதெல்லாம் எனக்கு கட்டாயங்கள். ராமன் மிகப்பெரிய சோம்பேறி! அதுகூட பரவாயில்லை என்று விட்டால், எனது பொருட்களை கொஞ்சம்கூட வெட்கமின்றி உபயோகப்படுத்தத் தொடங்கினான். நான் எடுத்த முடிவு அடிமுட்டாள்தனம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

ஓனரிடம் ஒரு நாள் மனம்விட்டுப் பேசியபோது, ராமனுக்கு நான் சிகரெட் பிடிப்பது பிடிக்காததால், அவரிடம் போய் அவ்வப்போது புகார் அளித்திருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள், ஷிஃப்ட் முடிந்து வந்ததும், ‘ஒரு வாரம் அவகாசம்; வேறு இடம் பார்த்துக் கொள். இல்லாவிட்டால், உன் சாமான்களை எடுத்து வெளியே வைத்து விடுவேன். நான் மெட்றாஸ்காரனில்லை; பட்டிக்காட்டான்,’ என்று எச்சரித்து, அத்துடன் அவனுடன் பேசுவதையே நிறுத்தினேன்.

இவன் நேராக எங்கள் பர்சனல் மேனேஜரிடம் சென்று முறையிட, அன்னார் என்னை அழைத்து விசாரித்தார். ஒரு கட்டத்தில், ‘என் அறையில் நான் யாரைத் தங்கவைப்பது என்பது என் விருப்பம். இதில் கம்பனி தலையிடக்கூடாது,’ என்று நான் கண்டிப்பாகச் சொல்ல, பர்சனல் மேனேஜருக்கும் எனக்கும் ஒரு இறுக்கம் தொடங்கியது. ஒரு வாரம் ஆனதும், நான் சொன்னபடியே ராமனின் எல்லாப் பொருட்களையும் எடுத்து, அறையின் வாசலில்கூட இல்லை; நேராக சாலையிலேயே வைத்துவிட்டு, பழைய பூட்டை மாற்றி, புதுப்பூட்டு வாங்கி மாட்டி விட்டேன். ராமன் நினைத்தாலும் அறைக்குள் நுழைய முடியாது. சினிமாவில் வருகிற மாதிரி, கொட்டும் மழையில் ராமன் எல்லா சாமானையும் எடுத்துக் கொண்டு போவதை பால்கனியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தபோது, கிஞ்சித்தும் இரக்கம் ஏற்படவில்லை. ‘சனியன் ஒழிஞ்சது’ என்றுதான் தோன்றியது.

எதிர்வீட்டு பெண்களுக்கும் எனக்கும், அவர்களது அம்மாவின் மூலம் ஒரு ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டிருந்தது. அந்த அம்மா, சந்திரசூடேஸ்வரர் கோவில் மலையடிவாரத்திலிருந்த, அனுமார் கோவிலுக்கு அடிக்கடி வருவார். அந்தப் பரிச்சயம் காரணமாக, ராமனை நான் வெளியேற்றியதைத் தெரிந்துகொண்டு, நான் அறையில் இல்லாத நேரத்தில் லட்சுமணன் ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தததை உடைத்தார். மறுநாளே, லட்சுமணனை அழைத்து ‘உன் ஃப்ரெண்டை துரத்திட்டேன். நீயும் என் ரூம் பக்கம் வராதே,’ என்று எச்சரித்துவிட்டேன்.

மீண்டும் தனியாக வாழத்தொடங்கினேன். ஒரு நாள், ஜெனரல் ஷிஃப்டில் வேலைபார்த்துவிட்டு வந்து, மலைக்கோவிலுக்கும் போய்விட்டு வந்து, தூக்கம் வராமல், இரவுக்காட்சி சினிமாவுக்குப் போனேன். ‘ நல்ல நாள்’ என்று ஞாபகம். விஜய்காந்த், தியாகராஜன், நளினி நடித்தபடம். படம் பார்த்துவிட்டு வெளியேறியபோது, பக்கத்தில் பர்சனல் மேனேஜர்.

‘நைட்ஷோ பார்த்திட்டு எப்படி நீ நாளைக்கு ஜெனரல் ஷிஃப்ட்டுல வேலை பார்ப்பே?’ என்று அதிகார தோரணையில் கேட்க, ’ நீங்க மட்டுமென்ன மார்னிங் ஷோவுக்கா வந்திருக்கீங்க?’ என்று நான் பதிலுக்குக் கேட்க, மனைவியுடன் வந்திருந்த பர்சனல் மேனேஜர் ஆகப்பட்டவர் டர்சனல் மேனேஜரானார்.

இப்போது எப்படியென்று தெரியவில்லை; அப்போதெல்லாம் டிவி.எஸ்ஸில் மேலாளர்களை எதிர்த்துப் பேசுவது என்பதற்கெல்லாம் உடனடி டிஸ்மிஸ் என்பதுதான் உபாயமாக இருந்தது. நான் அந்தாளின் மூக்கை உடைத்ததை, யாரோ கேட்டுவிட, அடுத்த ஓரிரு நாட்களுக்கு பஸ்ஸில் பார்த்தவர்கள் எல்லாரும் வந்து கைகொடுத்தார்கள். ‘சரியாக் கொடுத்தேடா! இவனுக்கெல்லாம் இதுதான் சரி!’

ராமனும் லட்சுமணனும் சும்மாயிருக்கவில்லை. அவர்கள் புரொடக்‌ஷனில் பணிபுரிந்ததால், அவர்களுடைய மேலாளரான சூப்பரிண்டெண்டிடம் என்னைப் பற்றி வத்தி வைத்தார்கள். மிகவும் கரிசனத்துடன் என்னுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்த அவரும் திடீரென்று உப்புப்பெறாத விஷயத்துக்கெல்லாம் என்மீது எரிந்து விழ ஆரம்பித்தார்.

டிவி.எஸ்-50 வண்டியில் அட்ஜெஸ்ட்மெண்ட் நட் என்று ஒரு பொருள் உண்டு. குட்டியாக, ஓட்டைபோட்ட பெப்பர்மிண்ட் போலிருக்கும். ஒரு முறை, அது 2000 வந்திருக்க, நான் தவறுதலாக 22,000 என்று வரவுவைத்து, ஸ்டாக்கில் ஏற்றி விட்டேன். திடீரென்று ஒரு நாள், என் தவறு கண்டுபிடிக்கப்பட, அடுத்த நாள் உற்பத்திக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நட் போதாது என்பது கண்டறியப்பட்டது. இந்த சிறிய தவறு, மேலிடம் வரை கொண்டுசெல்லப்பட்டது. ராமச்சந்திரன் சாரும், ஸ்ரீசைலன் சாரும் என்னைக் கடிந்துகொண்டாலும், இந்த ஒரு தவறுக்காக என் மீது நடவடிக்கை கூடாது என்று எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.

இது தொடர்பாக நடைபெற்ற ஒரு விசாரணை மாதிரி நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட அதிகாரி, டிவி.எஸ் நிறுவனங்களில் சர்வசாதாரணமாகப் புழங்கும், தென்மாவட்டங்களில் அடிதடி, வெட்டுக்குத்து வரை கொண்டு செல்லும், ஒரு மிக நாராசமான வார்த்தையால் என்னைத் திட்ட, நான் ‘mind your tongue’ என்று சற்றும் யோசிக்காமல் பதிலுக்குச் சொல்லிவிட்டேன். அது ஒழுங்குமீறலாக மாறி, எனக்கு மெமோ கொடுக்குமளவுக்குப்போனது. அதாவது, பர்சனல் டிபார்ட்மெண்ட் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பர்சனல் மேனேஜருக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்! திரும்பத் திரும்ப என்னை அழைப்பார்; காத்திருக்க வைப்பார்; அதுவும் நின்றபடி.

‘அந்த வசையை பொறுத்துக்கொள்ளாமல்தான் திருப்பிப்பேசினேன்.  அதுவும் அவரை மரியாதைக் குறைவாக எதுவும் பேசவில்லை,’ என்று எழுத்துவடிவத்தில் விளக்கம் கொடுக்க நேரிட்டது. ராமசந்திரன் சாரும் மற்ற ஸ்டோகீப்பர்களும் எனக்கு உறுதுணையாக உறுதியுடன் இருந்தார்கள். ஆகவே, முதலும் கடைசியும் என்று எச்சரிக்கப்பட்டு என் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள். ஆனால், முதல் கரும்புள்ளி என் கோப்பில் வைக்கப்பட்டு விட்டது.

மனிதன் எவ்வளவு ஆபத்தானவன் என்ற பாடத்தின் முதல் அத்தியாயத்தை, அனுபவரீதியாகக் கற்றுக் கொண்டேன்

=================================================================================================

புத்தக வெளியீட்டு பரிதாபங்கள்


ஆட்சியாளர்களையும், 'பபாசி' நிர்வாகத்தையும் புகழ்ந்து பேசினால் தான் புத்தகங்களை விற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்ட புத்தக கண்காட்சிகளுக்கு செல்லும் பதிப்பாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.  தமிழகத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் வகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'யும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சிகளை நடத்துகின்றன. இதற்காக தமிழக அரசின் சார்பில், மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா, 30 லட்சம் ரூபாய்; வேலுார், துாத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலுார், கரூர் மாவட்டங்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய்; மற்ற மாவட்டங்களுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு, 8.45 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.   இந்த நிதியானது, மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அரங்குகள் அமைப்பது, பிரதான சாலைகளில், 'பிளக்ஸ் பேனர்'கள் வைப்பது, வாகனங்களில், 'ஸ்டிக்கர்'கள் ஒட்டுவது, அந்தந்த பகுதி வானொலி, 'டிவி'களில் விளம்பரம் செய்வது உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படுகிறது. இவ்வளவு வசதிகள் செய்தும், ஆளும் கட்சியினரையும், 'பபாசி' நிர்வாகிகளையும் புகழ்ந்து, 'கவனி'த்தால் தான் புத்தகங்கள் விற்க முடியும் என, முன்னணி பதிப்பகத்தினர் புலம்புகின்றனர். அவர்கள் கூறியதாவது:  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்மாநில மொழிகளின் புதிப்பாளர்கள், சென்னையில் தான் இயங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கவும், புத்தக விற்பனையின் சந்தையாகவும், வாசகர்களின் மையமாகவும் சென்னையை மாற்றும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.  

உழைப்பே காரணம் :  அப்போதைய முன்னணி பதிப்பாளர்களால் துவங்கப்பட்ட புத்தக கண்காட்சி, இதுவரை, 48 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில், சென்னையில் லட்சக்கணக்கானோர் கூடும் இடமாக புத்தகக் கண்காட்சி மாறியுள்ளதற்கு, தொடர் உழைப்பே காரணம். இந்நிலையில் தான், தனியார் அமைப்பு நடத்தும் ஒரு கண்காட்சிக்கு, பாதுகாப்பு அளிப்பது முதல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவது, கழிவு மேலாண்மை செய்வது என, அனைத்திலும் அரசும் பங்களிக்கிறது.  புத்தக வாசிப்பில் ஆர்வமுடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த புத்தக கண்காட்சியை அறிவுத் திருவிழாவாக மாற்றும் வகையில், 1 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கினார். அதிலிருந்து சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், புத்தக வாசிப்பில் ஆர்வமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்களின் முயற்சியால், முக்கிய நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. பின், தமிழக அரசே, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்த நிதி உதவியும் செய்கிறது. இது, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காதது.  ஆனாலும், 'பபாசி'யின் முக்கிய பொறுப்புகளில் உள்ளோர், ஆளுங்கட்சியினரை தவறாக வழிநடத்தி, இந்த திட்டத்தை சிதைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்ல எழுத்தாளரின் எழுத்தை கண்டறிந்து, எழுத்தை பெற்று, அச்சிட்டு, தரமான புத்தகமாக்குவதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது. அப்படி அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை, தற்போது வாசகர்களிடம் சேர்க்க முடியவில்லை. இதற்கு காரணம், பபாசியின் தலைமை பொறுப்பில் உள்ளோர், தங்களுக்கு தெரிந்தவர்களை பினாமிகளாக வைத்து, பல்வேறு பெயர்களில், 400க்கும் மேற்பட்ட போலி பதிப்பகங்களை உருவாக்கி, ஸ்டால்களை பெறுவது தான்.  அவர்கள், ஒரே பதிப்பகத்தின் நுால்களை விற்க, பல்வேறு பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களின் பெயர்களில் அரங்குகளை பெறுகின்றனர். உதாரணமாக, தற்போது களத்தில் இல்லாத, 'தாழையான் பதிப்பகம், ஓம்சக்தி இன்டர்நேஷனல்' உள்ளிட்டவற்றை இருப்பதாகக் காட்டி, போலி உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். அவ்வாறான போலி பதிப்பகங்களின் சார்பில், பிரபல பதிப்பக நுால்களை, 10 சதவீத தள்ளுபடியில் பெற்று, கண்காட்சியில் இரட்டை அரங்குகளை அமைத்து விற்பனை செய்கின்றனர்.

விற்க முடிவதில்லை  :  மேலும், கிலோ கணக்கில் பழைய ஆங்கில நுால்களை பெற்று, பல அரங்குகளில், 50 சதவீதத் துக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், புதிய நுால்களை அச்சிட்ட வர்களால், விற்பனை செய்ய முடிவதில்லை. மேலும், ஒற்றை அரங்கு பெறும் பதிப்பாளர்களுக்கு, புத்தகங்களை எடுத்துச் செல்வது, வேலையாட்களை தங்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான செலவு அதிகம்.   புத்தக விற்பனை மந்தம் என்பதாலும், அடுத்தடுத்த மாதங்களில் அருகருகே உள்ள மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதாலும், புத்தக விற்பனையில் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பல அரங்குகளை பெற்று அதிக லாபம் பெறுவோர், அந்தந்த மாவட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களின் வாயிலாக, மாவட்ட செய்தி துறை அதிகாரிகளை சரிசெய்கின்றனர். அதன்பின், மாவட்ட கலெக்டர்களின் அனுமதியை பெற்று, மாவட்ட, பஞ்சாயத்து, கட்சி நுாலகங்களுக்கான கொள்முதலையும் பெற்று விடுகின்றனர்.

இதனால், முன்புபோல நுாலக ஆணைக் குழுவால், பொது நுாலகத் துறையின் வாயிலாக, வெளிப்படையாக புத்தகங்கள் வாங்கப்படுவதில்லை. எனவே, நல்ல நுால்கள், வாசகர்களின் கைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் எனில், தற்போதைய, 'பபாசி' நிர்வாகத்தாருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் , அந்தந்த ஊரில் உள்ள ஆளும் கட்சியினரை புகழ்ந்தும் பேசினால் தான் புத்தகம் விற்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- தினமலர் - 

=============================================================================================


வறண்டு கிடந்த
மனக்குளத்தில்
அன்பின் வரிகளை
விதைக்கிறாய்
விதைகளைக்
கவிதையாக்கும்
மாய உயிர் நீ... 
2014


இதற்கு ரிஷபன் ஸார் கொடுத்திருந்த கமெண்ட்  :  "பூக்கிறது மனசு"

***********************

2010, 2011, 2012 ல் எல்லாம் தமிழ்நாட்டில் எப்போது கரண்ட் போகும் எப்போது வரும் என்றே தெரியாது...  அப்போது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் கொடுத்திருந்த ஒரு கவிதையை உல்ட்டா பண்ணி எழுதியது...




==============================================================================================

இணையத்திலிருந்து -  படித்தது - ரசித்தது  - பகிர்வது 

"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் போர் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த போரில் நாம் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்த தோல்வியால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அந்த சமயம் நமது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர் நமது காமராஜர் ஐயா..
காமராஜர் நேருவிடம் கேட்டார்.
"ஏன்.. எதனால் நாம் தோல்வி அடைய நேர்ந்தது?" என்று கேட்டார்.
அப்பொழுது நேரு சொன்னார்.
"நமக்கு இருக்கக்கூடிய இரணுவ ஆயுதங்கள் எதுவும் அவ்வளவு வலிமையானதாக இல்லை. நாம் நவீன இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி நம்முடைய இராணுவத்தை வலிமைப்படுத்தினால் தான், நாம் ஜெய்க்க முடியும்..!" என்று நேரு சொன்னார்.
"அப்டினா, முதல்ல அத பண்ணுங்க.. தேசத்தோட பாதுகாப்புதான ரொம்ப முக்கியம். உடனே அந்த இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி இராணுவத்தை வலிமைப்படுத்த வேண்டியது தான..." என்று கேட்டாராம் காமராஜர்.
நேரு சொன்னார், "நாம் அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்கள் எல்லாம் வாங்கிவிட்டோம்.. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல்" என்றார்.
"என்ன சிக்கல்?"- காமராஜர்,
"அந்த இராணுவ ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென்றால், 'அங்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பேங்க் நமக்கு ஜாமீன் கையெழுத்து (அதாவது சூரிட்டி) போட்டால் தான் நமக்கு அந்த ஆயுதங்களை அனுப்பி வைப்போம்' என்று அமெரிக்கக்காரன் சொல்லிவிட்டான். ஆனால், நம் இந்தியாவை நம்பி அங்கிருக்கக்கூடிய எந்த வங்கியும் 'Assurance' உறுதியளிக்க தயாராக இல்லை. அதான் என்ன பண்றதுனு தெரியல" என்று மிகவும் கவலையோடு நேரு காமராஜரிடம் சொன்னார்.
காமராஜர் தன்னுடைய ஆட்சியில் பத்துக்கும் மேற்பட்ட அணைகளை கட்டியவர். அப்பொழுதே ஏகப்பட்ட நீர்மின் நிலையங்கள், மதிய உணவுத் திட்டம் என்று நிறைய வித்தியாசமான ஐடியாக்களை புகுத்தியவர் காமராஜர். அவருக்கா ஐடியாவிற்கு பஞ்சம் இருக்கப் போகிறது. காமராஜர் வழக்கம்போலவே சிறிது வித்தியாசமாக யோசித்தார்.

"ஒன்னும் பிராப்ளம் இல்ல நேரு. அமெரிக்க வங்கியில் கிளை ஏதாவது இந்தியாவில் இருக்கிறதா..?" என்று கேட்டார் காமராஜர்,
"இருக்கு. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் கிளை இந்தியாவில் இருக்கு"
உடனே காமராஜர் ஐயா, "இங்கிருக்கக்கூடிய அந்த அமெரிக்க வங்கியை முதலில் மூட உத்தரவு போடு" என்றார் காமராஜர்.
நேரு பதறிப் போய் "என்னது.. அமெரிக்க நிறுவனத்தை நாம் மூட வேண்டுமா? அப்படி செய்தால் உலகளவில் பிரச்சனை வந்துவிடும்" என்று பயந்தார் நேரு.
"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." என்றார் காமராஜர்.
காமராஜர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நேருவும் அந்த அமெரிக்க நிறுவனத்தை அழைத்து "நீங்கள் எங்களுக்கு உதவி பண்ணாத காரணத்தால், சீக்கிரம் உங்கள் கடையை மூடிவிட்டு உங்கள் நாட்டுக்கு நடையைக் கட்டுங்கள்" என்றாராம்.
உடனே அந்த வங்கியில் மேலாளர் பதறிப்போய் அமெரிக்காவைத் தொடர்புக் கொண்டு விஷயத்தைக்கூறி, அந்த அமெரிக்க அதிகாரிகள் உடனே பதறிப் போய் இந்தியாவிற்காக சூரிட்டி கையெழுத்துப் போட்டு அடுத்த பதினைந்தாவது நாளில் அந்த நவீன ஆயுதங்கள் இந்தியாவிற்கு வந்து இறங்கின.
இதுதாங்க காமராஜர் ஐயாவின் மாத்தி யோசிக்கும் திறன்.!
'அவனுடைய கடையை இங்கு மூடினால், அவன் வழிக்கு வருவான்' என்ற அந்த மாத்தி யோசிக்கும் திறன் தான், நம் தேசத்தின் பாதுகாப்பையே நிர்ணயம் செய்திருக்கிறது.
நீங்களும் காமராஜர் ஐயாவைப் போல் கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்கள். முதலில் உங்களையும், பிற்பாடு இந்த நாட்டையும் பலப்படுத்துங்கள்.

================================================================================

பொக்கிஷம் :

KGG சமீபத்தில் சென்னை வந்து சென்றபோது சில பழைய பைண்டிங் புத்தகங்கள் கொடுத்தார்.  அதில் ஒன்று நடுப்பக்க ஜோக்ஸ் மட்டும் தொகுத்தது.  84  விகடன் என்று நினைக்கிறேன்.  கொஞ்ச நாளைக்கு இது தொடரும்!

'சிரிக்கா விட்டால் விடமாட்டேன்' என்று புனிதன் மாதிரி சொல்ல மாட்டேன்.  சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.


மேலே இடது பக்கம் இருப்பது ஆர்ட் அல்ல.  கரையான் தின்றது போக மீதி!

கரையான் மிச்சம் வைத்திருக்கும் பகுதிகளைப் படித்து இன்புறுங்கள்!


நல்ல ஐடியா...  பொட்டுக்கு பதில் நாமம் போட்டுவிட்டால் இன்னும் பொருத்தமாய் இருக்கும்!

இது சென்ற தேர்தலில் ஒரு முக்கிய கட்சி சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று நினைவு!

இதில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கிறது!

இதையும் சேர்த்து மூன்று!




96 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியான தங்களது எண்ணங்கள் எப்போதும் போல் சுவாரஸ்யமாக இருந்தது. ரசித்துப் படித்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். சாஸ்திரங்களை கற்ற சாஸ்திரிகள் அனைவரும் அதற்கு ஒரு மாற்று யோசனைகளையும், உண்டாக்கி விடுவார்கள். ஆனால், என்ன ஒன்று.. அவரவர் நியாயம் அவரவருக்கு.

    கற்றதும் பெற்றதும் சில சமயங்களில் காற்றாகிப் போய் விடும் போது ஒரு சபை அவமானம் அதனால் ஒரு மனப்பதட்டம் சிலருக்கு வரும். சிலர் அதை காற்றின் தூசியாக கருதி தட்டி விட்டு போய் விடுவார்கள். இதற்கும் ஒரு மன வலிமை வேண்டும்.

    இப்போது "பிறந்த நாள்" என்று கொண்டாடும் முறைகளில் பிறந்த ஜென்ம நட்சத்திரம் நினைவில்லாமல் போவது அதிசயம் ஒன்றுமில்லை. இதில் குடும்பத்தின் அத்தனை பேரின் நட்சத்திரங்களையும் தெரிந்து வைத்திருக்கும் மாப்பிள்ளையின் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

    இறுதி வரிகளை படித்ததும் மனதிற்குள் சிரித்தேன். அந்த பருப்புத் தேங்காயிற்கு, தட்டிலிருந்து இறக்கப்பட்டதும், என்ன தோன்றியிருக்குமோ? தான் சுயமரியாதை இழந்தாலும், மற்றஅனைவருக்கும் விரைவில் பயனுள்ளதாக இருப்போம் என்ற பெருமையுடன் அது ஸ்வாமியின் காலடியில் வீற்றிருந்திருக்கும். :)) மற்றவைகளை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா... வழக்கம் போல உங்கள் வார்த்தை தெரிவுகளும் வாக்கிய அமைப்பு மிகவும் கவர்கின்றன. அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

      இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்று
      ஒன்று சொல்லியிருந்தேன். தனக்குத் தெரிந்த ஒன்று இரண்டு பகுதிகளை சாஸ்திரிகள் சொல்வதற்கு முன்னாலேயே சொல்வதும், தனக்கு தெரியாத விஷயங்களை சொல்லக்கூட முடியாமல் தடுமாறுவதும்.... அதுவும் ஒரு விஷயம் தான்.

      இந்த காலத்தில் பழைய முறைப்படி சில நடைமுறைகளை பின்பற்ற முடிவதில்லை. ஒப்புக்கு செய்கிறோம். கலியுகத்தில் இறைவன் நாமத்தை சொன்னாலே புண்ணியம் என்று வைத்திருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்திக் கொள்கிறோம்!

      நீக்கு
    2. /இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்று
      ஒன்று சொல்லியிருந்தேன். தனக்குத் தெரிந்த ஒன்று இரண்டு பகுதிகளை சாஸ்திரிகள் சொல்வதற்கு முன்னாலேயே சொல்வதும், தனக்கு தெரியாத விஷயங்களை சொல்லக்கூட முடியாமல் தடுமாறுவதும்.... அதுவும் ஒரு விஷயம் தான்./

      ஆம். அதையும் பலவிடங்களில் கவனித்திருக்கிறேன். தனக்குத்தான் ஒரு சாஸ்திர சம்பிரதாயங்களை ஆரம்பம் முதற்கொண்டு எல்லாம் தெரியுமென்ற/ தெரிந்து கொண்டிருக்கிறோமென்ற மார்தட்டல். அதிலும் அந்தத் தற்பெருமையை மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்ற ஆர்வம் வேறு. அப்போது அவர்கள் கண்ணில் பேசாமடந்தைகளாக (என்னைச் சொல்கிறேன்.) அமர்ந்திருப்பவர்கள் ஒரு புழுவிற்கு சமம். நானும் இதையெல்லாம் பார்க்கும் போது மனதிற்குள் புன்னகைத்துக் கொள்வேன். வேறு என்ன செய்வது?

      இறைவன் நாமாவைதான் அப்போது உச்சரிக்க வேண்டும். அதை விட சிறந்தது என்ன இருக்கிறது.! சாஸ்திரங்களும், சம்பிரதாயங்கள் உடன் வரப் போவதில்லை. நன்றி

      நீக்கு
    3. அப்போது அவர்கள் கண்ணில் பேசாமடந்தைகளாக (என்னைச் சொல்கிறேன்.) அமர்ந்திருப்பவர்கள் ஒரு புழுவிற்கு சமம். //

      நெவர் கமலாக்கா.. இப்படியான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. நம்ம self esteem ஐ எதற்கும் குறைத்துக் கொள்ளக் கூடாது கமலாக்கா.

      அமைதியாக இருப்பதே எவ்வளவு பெரிய பவர் தெரியுமா?!!!!! "silence in many occasions is the best choice"

      கீதா

      நீக்கு
    4. கீதா சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன் நாம் சும்மா இருப்பதால் ஒன்றும் தெரியாது என்றும் அர்த்தம் இல்லை சும்மா இருப்பதே இந்த மாதிரி இடங்களில் நல்லது என்றும் சொல்வேன்

      நீக்கு
  3. இவர், தனது, தனது மனைவியின், மகன், மருமகள், பேரன், பேத்தியின் விவரங்களில் தொடங்கி இரண்டு தம்பிகளின் இதே போன்ற விவரங்கள் வரை சட்சட்டென்று அவரே சொல்லிக் கொண்டு வந்தது வியப்பு. //

    நிஜமாகவே வியப்புதான் அதுவும் இந்த வயதில்.

    இப்படிச் சிலர் இருப்பதைப் பார்க்கிறேன், ஸ்ரீராம்.

    எங்கள் வீட்டிலும் ஒரு சிலர் உண்டு, ஸ்ரீராம். அது எப்படி என்று அதை ஆராய்ந்த போது, இம்மாதிரியான விஷயங்களில் ஈடுபாடும், காரியங்களில், சாஸ்திரங்களில் ஒரு சின்ன பயமும், பஞ்சாங்கத்தை அடிக்கடிப் பார்ப்பவர்களிடமும் இதை எல்லாம் நினைவில் இருப்பது புரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஞ்சாங்கம் பார்ப்பதால் மட்டும் என்று இல்லாமல் அவர்களுடைய சொந்தத் திறமை அவர்களுக்கு வாய்த்திருக்கும் அந்த அதிர்ஷ்டம் அல்லது சக்தி காரணமாக அவர்களால் அதை மனதில் வைத்துக் கொள்ள முடிகிறது

      நீக்கு
    2. ஹி,ஹி,ஹி, எங்க வீட்டில் இம்மாதிரி விசேஷங்களில் அடியாள் தான் எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு சொல்லுவேன். இன்னும் சொல்லப் போனால் மஹாலயம் தர்ப்பணத்தின் போது மாமாவின் அப்பா வழி, அம்மா வழிப் பெரியோர்கள், எங்க அப்பா/அம்மா, இன்னும் சில முக்கியமான உறவினர்கள் பெயரை கோத்திரத்தை நினைவாக முன்னரே எழுதி மாமாவிடம் கொடுத்துடுவேன். அவர் சொல்லும் காரணம் இதை எல்லாம் எப்படி நினைவில் வைச்சுக்கறது என்பது தான். :))) இப்போவும் மாமாவின் காரியங்களில் நான் தான் வழி காட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது. பிள்ளைக்கு சம்ஸ்கிருதம் படிக்கத் தெரியும். ஆனால் சாஸ்'திரோக்தம், நடைமுறைகள் எதுவும் தெரியாது. மாமாவின் தம்பி சுத்தம். ஆக நான் தான் எல்லாம் எழுதி ஆத்து வாத்தியாரிடம் கொடுத்தேன். :(

      நீக்கு
    3. ஶ்ரீராம் ஆமாம் அது ஒரு தனித்திறமை நினைவாற்றல் என்பது.

      கீதா

      நீக்கு
    4. ஹை ஃபைவ் கீதா அக்கா!. எங்கள் வீட்டிலும் நான்தான் எல்லோருடைய பெயர், நட்சத்திரம் எல்லாம் சொல்வேன். என்னுடைய பாட்டி இறந்து போனபொழுது நான் கல்லூரி மாணவி. அப்போதே நான்தான் எல்லோருடைய பெயர், நட்சத்திரம்,ராசி எல்லாம் சொன்னேன். என் கடைசி மாமியை அழைக்கும் பெயர் நாமகரண பெயர் வேறு. அதையும் சொன்னேன். அதைப்போல அப்போதெல்லாம் யாராவது இறந்து விட்டால் உறவினர்களுக்கு கடிதம் எழுதிதான் தெரிவிக்க வேண்டும். என்னுடைய பெரிய தாத்தா இறந்து போன பொழுது,என் சின்ன தாத்தா என்னைத்தான் கடிதம் எழுதச் சொன்னார். அதனால் அந்த ஃபார்மெட் தெரியும். பாட்டி இறந்த பொழுது நான்தான் உறவினர்களுக்கு கடிதம் எழுதினேன்.
      என் அக்காவின் கணவர் இறந்த பொழுது, அக்கா பெண்ணுக்கு எழுதி தந்தேன், அதைத்தான் அவள் வாட்சாப்பில் எல்லோருக்கும் அனுப்பினாள். அது மட்டுமல்ல, உறவினர்கள் இறந்த திதியும் நினைவில் வைத்துக் கொள்வேன்.
      அது மட்டுமல்ல, குடும்பத்தில் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு முதலில் வாழ்த்து அனுப்புவேன். இப்போது என் அண்ணா பையன் அதை செய்கிறான். என் மூன்றாவது அக்காவுக்கும் இதெல்லாம் தெரியும். அவளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஜாதகமே மனப்பாடம்.யார் யாருக்கு எந்த கிரகம் எங்கே இருக்கிறது? எது உச்சம்? எது நீச்சம்? எல்லாம் சரளமாக சொல்லுவாள். அவள் கணவரோ கோவில்களுக்குச் செல்லும் பொழுது எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு படிக்கும் பொழுதே தட்டு தடுமாறுவார்.

      நீக்கு
    5. ஆமாம், பானுமதி சொல்றாப்போல் எங்க பையர் கல்யாணம் வரைக்கும் எல்லோருக்கும் கடிதம் போடுவது, பத்திரிகை அனுப்புவது எல்லாம் நான் தான் செய்திருக்கேன். உதவிக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

      நீக்கு
  4. சபையிலே நான் இதைச் சொல்லி அண்ணாவைப் பாராட்டினேன். உடனே சாஸ்திரிகள் என்னை அடக்கினார்/ சபையில் நாலு பேருக்கு நடுவில் இதெல்லாம் சொல்லப்பபடாது என்றார். நான் மறுத்து, "பாராட்டை பப்ளிக்காதான் சொல்லணும், தவறைத்தான் தனியா சொல்லணும்" என்றேன். எல்லோரிடமும் ஆட்சி செய்து கொண்டிருந்த வாத்தியாருக்கு நான் அவரை மறுத்துப் பேசியதில் வருத்தம் என்றாலும் கைகொடுத்தார்! சமாளித்தார்.//

    நீங்கள் சொன்னதும் சரி, வாத்யார் சொன்னதும் சரி, ஸ்ரீராம்.

    பொதுவெளியில் என்றாலும் பாராட்டுவதை அடக்கித்தான் வாசிக்க வேண்டும். நீங்கள் அதீதமாகச் சொல்லவில்லை. ஆனால் பாராட்டுகளை ரொம்ப ஓவராக ஆகா ஓஹோ என்று பொதுவெளியில் சொல்லும் போது, அது சில சிக்கல்களை உருவாக்கும். குடும்பத்திலும் கூட. எனவே இடம் பொருள் ஏவல் என்பதற்கிணங்க எல்லாமே அளவோடு இருப்பது நல்லது.

    இதில் சரி தப்பு என்றில்லை. ஆனால் சொல்லும் விதம், சபை இதைப் பொருத்து. தனிப்பட்ட முறையில் எத்தனை வேண்டுமானாலும் பாராட்டி நம் சந்தோஷத்தை வெளிப்படுத்தலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாத விவரங்கள் என்றால் பரவாயில்லை கீதா! அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தானே நான் சொல்லிப் பாராட்டுகிறேன்?

      நீக்கு
    2. இங்கு இன்னும் ஒரு சில சொல்ல விட்டுப் போச்சு ஸ்ரீராம்.

      பாராட்டுதலில் தப்பில்லை, ஸ்ரீராம், இடமும் பொருளும் முக்கியம் என்பதைத்தான் முந்தைய கருத்துகளிலும் (இடம் பொருள் ஏவல்) சொன்னேன் நான் கல்லூரியில் கற்றுக் கொண்ட ஒரு அனுபவம். ஒரு தோழி, என்னிடம் எல்லாம் பகிர்ந்துகொள்பவள். அவள் வீட்டுக்குத் தெரியாமல் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் பெற்றிருந்தாள். அதில் கூடவே அவள் விரும்பியவனும் அவளுடன் போட்டிக்கு (வேறு கல்லூரி) சென்றிருந்தான் அவனுக்கும் பரிசுகிடைத்திருந்தது வேறு ஒரு போட்டியில். கல்லூரிக்குச் செல்லும் பேருந்திலேயே விஷயம் தெரிந்துவிட்டது அவளுக்குப் பரிசுகிடைத்தது பற்றி. பேருந்தை விட்டு இறங்கியதும் அவளைப் பார்த்த சந்தோஷத்தில் வெற்றி பெற்றதைப் பாராட்டிய அதே வேளையில், அவளின் தைரியத்தையும் பாராட்டியதும், அவள் என்னைக் கிள்ளினாள் பாருங்கள், நான் எதுக்கு கிள்ளற நான் உன்னை பாராட்டத்தானே செய்யறேன் என்று சொல்லும் போது, கிளம்பிய மற்றவர்கள் சட்டென்று நின்று என்னடி சொல்லற என்றதும் தான்....எனக்குக் கொஞ்சம் உரைத்தது.

      தோழி என்னை அவசர அவசரமாக இழுத்துக் கொண்டு சென்றாள். திட்டினாள் பாருங்கள்.....பரிசுக்குப் பாராட்டியது ஓகே. ஆனால் கூடவே என் ரகசியத்தையும் எல்லோருக்கும் தெரியும்படி ஆக்கிட்டியேடி என்று....சந்தோஷப்பட்டுப் பாராட்டும் போதும் கூட தலைகால் புரியாமல் நாம் உணர்வுகளைக் கொட்டிவிடக் கூடாது அதுவும் பொதுவாகப் பொதுவெளியில் தெரியாத விஷயங்களைக்....கட்டுப்டுத்தித்தான் பாராட்ட வேண்டும். என்ற பாடம் கற்பித்தாள். நான் உணர்ந்த ஒரு தருணம். வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு விஷயங்களைப் போதிக்கிறது என்று. அதன் பிறகு உளவியலில் நுழைந்த போதும் நிறைய கற்க முடிந்தது.

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம் நீங்க சொல்றது சரிதான் ஆனால் அபப்டித் தெரிந்த விஷயத்தையே பாராட்டும் போதும் கூட ....

      குடும்பத்தில் என்றால், சப்போஸ் இரு மருமகள்கள் அலல்து இரு மகள்கள் மகன்கள், மாப்பிள்ளைகள் என்று இருந்தால், அதுவும் பக்குவம் அடையாத வயதில் இப்படிப் பாராட்டும் போது ஒரு சிலருக்குத் தாழ்வு மனப்பான்மை வருகிறது. கூடவே பாராட்டப்படுபவரைப் பற்றி ஒரு குறையும் சொல்வாங்க. ஏன்னா அவ்ங்ககளுக்கு அவங்க வீட்டிலும் சரியான அங்கீகாரம் கிடைத்திருக்காதாக இருக்கலாம்.

      பாராட்டுகளையும் ஒப்பீட்டளவில் செய்யும் போது இன்னும் மோசம். ரொம்பவே சிக்கல்களை உருவாக்கும்.

      நீங்களே பார்த்திருப்ப்பீங்க ஸ்ரீராம், நாம நாலைந்து பேர் இருக்கோம்னு வைங்க. ஒரு விழாவில் அன்பளிப்பு கொடுக்கறோம்னு வைங்க....அதைப் பெறுபவர் ஒப்பிட்டோ அலல்து பாரு அவங்க எப்படி செஞ்சிருக்காங்க நிறைய என்று சொல்லும் போது மற்றவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.

      குறிப்பாக சபைகளில்....4, 5 மகன்கள், மகள்கள் இருக்கும் குடும்பங்களில் ஒருவர் செய்வதைப் பெரிதுபடுத்தி மற்றவர்கள் செய்வதுடன் ஒப்பிட்டுச் சொல்லும் போது குடும்பகளிலேயே உட்பூசல் குறைபாடுகள் தொடங்கும்.

      அதற்காக ஒருவர் செய்வதைப் போலவா மத்தவங்க செய்ய முடியும் அவங்களுக்கு என்ன முடியுமோ அதைத்தானே செய்ய முடியும். இதுவும் சமூக அவலங்களில் ஒன்று.

      நம் மனதை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கற்ற பாடம். போட்டி போட்டுக் கொண்டு பரிசுப் பொருள் வாங்கிச் செல்வதும் கூடாது அவங்க என்ன நினைப்பாங்க என்றும் நினைக்கக் கூடாது நம் அன்பை வெளிப்படுத்தினாலே போது சின்ன நெல்லிக் கனியைக் கொடுத்தாலும்!

      கீதா

      நீக்கு
    4. நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன் கீதா ஸ்கொயர்!!

      ஆனால் வேலை செய்வது பற்றியோ அல்லது வேறு ஒப்பீடுகளோ, அதுவும் குறிப்பாக இன்னாருக்கு உரைக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இங்கு அப்படியல்ல .ஸ்பான்டேனியஸாக அப்போது நடந்த ஒரு சிறு விஷயத்துக்கு இவ்வாறு பாராட்டும் போது அது நிச்சயமாக மற்றவர்களை பாதிக்காது.

      மேலும் எங்கள் குடும்பத்தில் நான் அவ்வாறு ஒருவரை ஏற்றியோ இறக்கியோ பேசுபவன் அல்ல என்பதும், குறை கூறும் பழக்கமும் எனக்கு இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்றே நான் நம்புகிறேன்!!

      நீக்கு
    5. //ஸ்பான்டேனியஸாக அப்போது நடந்த ஒரு சிறு விஷயத்துக்கு இவ்வாறு பாராட்டும் போது அது நிச்சயமாக மற்றவர்களை பாதிக்காது.// ஸ்ரீராம்ஜி, இந்தப்பொன்னான மனதுடன் இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!! பாராட்ட இடம் பொருள் ஏவல் இருக்கக்கூடாது. இருந்தால், ஏதோ ஒரு இடத்தில் தகிடுதத்தம் இருக்கிறதென்று பொருள். எதிரியையும் அப்போதைக்கப்போதே உவந்து பாராட்டும் மனப்பழக்கம் வேண்டும்.

      நீக்கு
    6. @தி.கீதா: //பாராட்டியது ஓகே. ஆனால் கூடவே என் ரகசியத்தையும் எல்லோருக்கும் தெரியும்படி ஆக்கிட்டியேடி// ம்ம்ம் சரி,சரி :)))

      நீக்கு
  5. பாராட்டு என்பது ஊக்கம் தரும் கண்டிப்பாக. அதே வேளையில், அதீதமாகப் போகும் போது பாராட்டு பெறுபவருக்குக் கூச்சம் ஏற்படும் வகையில் அது இருக்கக் கூடாது. (நீங்க பாராட்டியது சரி!!! அதைச் சொல்லலை). அது போல அது கூட இருப்பவர்களில் ஒரு சிலருக்கு சின்ன சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதுவும் evolve ஆகாதவர்கள் என்றால் பாராட்டு பெறுபவரிடம் சின்ன பொறாமையையும் ஏற்படுத்தும். இது குடும்பங்களில் சகஜம். வெளியுலகிலும் சகஜம்.

    உடனே பாராட்டு பெறுபவரைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லத் தொடங்குவார்கள், இதை நீங்க பொதுவெளியில் பார்க்கலாம் குடும்பங்களிலும் பார்க்கலாம்.

    எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பாராட்டும் போது அது அது இன்னொரு ஆளுடன் ஒப்பீட்டளவில் இருப்பது போல இருக்கக் கூடாது, என்றுதான் நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம், ஆனால் வெறும் பாராட்டே கூட குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கும்.

      கீதாக்கா பார்த்தாங்கனா சொல்லுவாங்க பாருங்க!!!

      கீதா

      நீக்கு
    3. அதே! அதே! தி/கீதா சொல்லுவது முற்றிலும் சரி. இம்மாதிரி வைதீகக் காரியங்களில் பெயர், நக்ஷத்திரம் கேட்டுக் கொண்டு ஹோமம் ஆரம்பிக்கையிலேயே வீட்டுக்குப் பெரியவங்க கிட்டத் தான் ஆத்து வாத்தியார்கள் கேட்பாங்க. என் மாமனார் அப்போல்லாம் வாத்தியாரிடம் மாட்டுப் பொண்ணு எழுதி வைச்சிருக்கானு சொல்லிட்டு எழுதி வைச்சதைக் கொடுப்பார். அதுக்கெல்லாம் யாரும் பாராட்டெல்லாம் வெளிப்படையாய்ச் சொல்லி நான் பார்த்தது இல்லை. இன்னும் சொல்லப் போனால் எல்ல்லா வைதிகக் காரியங்களிலும் சிலவற்றை நான் செய்யும்படி இருக்கும். ஆனால் எல்லோருமே அதை சகஜமாகத் தான் எடுத்துப்பாங்க. அதே போல் தான் இந்தப் பெயர் நக்ஷத்திரம் சொல்லுவதும். எங்க வீட்டில்/குடும்பத்தில் நாங்க இருவரும் தான் பெரியவங்க என்பதால் மாமனார் காலத்துக்குப் பின்னர் மாமியார் இருந்தாலும் நாங்க தான் முன்னிட்டுக்கொண்டு எல்லாமும் செய்யும்படி/சொல்லும்படி இருக்கும்.

      நீக்கு
    4. பல காலமாகவே எங்கள் வீடுகளிலும், அல்லது கிட்டத்தட்ட எல்லார் வீடுகளிலும் 'வீட்ல இருக்கிற பெரியவர்களை கூப்பிடுங்க" என்று சொல்லி அவர்கள் வீட்டு வழக்கம் என்ன என்று கேட்டு செய்வதை பார்த்திருக்கிறேன். இங்கும் அப்படித்தான். இதில் எல்லாம் மாறுதல் இருக்காது. சிறு விஷயங்களில் மட்டும்தான் சின்ன சின்ன உரசல் வரும். அதற்கும் கூட அந்த விஷயம் காரணமாக இருப்பது இருக்காது. பெரும்பாலான வீடுகளில் இரண்டு மூன்று மருமகள்கள் இருக்கும் இடத்தில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பது என்பது மிக மிக அபூர்வம். ஏற்கனவே நடந்த வேறு ஏதாவது காரணமாக கூட இருக்கலாம்!! இது மாதிரி ஹோமங்களில் ஒரு டைரியில் நாங்கள் ஏற்கனவே எழுதி வைத்திருப்போம். அதை எடுத்து காட்டி விடுவோம்.

      நீக்கு
    5. எங்க வீட்டில் எங்க மைத்துனர்/ஓர்ப்படி எல்லாம் நாங்க சொல்லுவது தான் ஏத்துப்பாங்க. ஆகவே இதில் எல்லாம் பிரச்னை வராது. சொல்லப் போனால் நான் வேறே ஊர் என்பதாலும் அந்நியம் என்பதாலும் மாமியார், மாமனார் இந்த விஷயத்தில் என்னிடம் ரொம்பவே கண்டிப்பாக இருப்பாங்க. ஏதேனும் கொஞ்சம் மாறினாலும் உன் வழக்கத்தைக் கொண்டு வராதே என்பார்கள். ஆகவே நான் ரொம்பக் கவனமுடன் அவங்க என்ன செய்யறாங்க என்று பார்த்துக் கொண்டு அதே மாதிரிப் பின்பற்றுவேன்.

      நீக்கு
  6. நமது முந்திரிக் கொட்டை தனத்தை கவனித்து சாஸ்திரி இரிடேட் ஆகி இருந்தால் கஷ்டமான இடங்களை நாம் சொல்லா விட்டால் நிறுத்தி ம்ம்ம் என்று உறுமி மறுபடி சொல்லி நம்மை திரும்பிச் சொல்லக் செய்வார்.//

    இந்த இடத்தில் வாத்யார் குரு போன்று இல்லையா அதனால மாணாக்கர் அடக்கித்தான் வாசிக்கணும் என்னதான் ப்ரில்லியண்டாக இருந்தாலும்!!!!!!!

    நம்ம வீட்டில் இது போன்றவை அதாவது அமாவசை தர்ப்பணம் போன்ற விஷயங்கள் எல்லாம் வாத்யார் வந்து நடத்தியது இல்லை. மாமானார், என் அப்பா எல்லாம் அவர்களாகவே செய்வதால் பிள்ளைகளும் அவங்களே செய்துவிடும் வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு செய்தாலும் அது அவரை பொறுத்தது. அதாவது சொல்லிக் கொடுக்கும் குருவை பொறுத்தது. பாவம் நமக்கு இல்லை என்று ஒரு கருத்தும் சொல்வார்கள். தெரிந்தவர் அவர்தான் ,தெரியாதவர்களுக்காக செய்கிறார். எனவே அந்த ப் பின் விளைவு அவரைத்தான் சேரும் இல்லையா ? தர்ப்பணம் நாங்களும் நாங்களே தான் வீட்டில் செய்கிறோம். அதற்கு வாத்தியார் வருவதில்லை.

      நீக்கு
  7. அப்படி அமர்பவர்களுக்கு என்றில்லை. சுற்றி இருப்பவர்களுக்கும்தான். ஆளுக்கொரு சாஸ்திரம் சொல்வார்கள்.//

    ஹையோ ஸ்ரீராம் இந்த விஷயம் இருக்கே ஆளுக்காள் சொல்லும் விஷயம்....நம்ம மனசு வலுவாக இல்லைனா அம்புட்டுத்தான் குழம்பித் தவித்து முடியைப் பிச்சுக்காததுதான்.

    இதுக்குப் பிறகு வருது பாருங்க...அந்தப் பாரா...ஹையோ எனக்குப் பிடிக்காத ஒன்று.

    நாம் தெளிவாக இருந்துவிட்டால் நலல்து.

    //மூத்தவர்கள்.. செய்து விட்டு போகட்டும் என்று விட்டிருக்க வேண்டும். //

    ரைட்டு ஹைஃபைவ்!!!!!

    இது போன்ற விஷயங்களில் அப்பீட்டு கூடவே ரொம்பத் தெளிவு. மாபெரும் சக்தி இருக்குக் போது இதெல்லாம் என்ன என்ற தெளிவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக் கொள்ளவும் கூடாது !!சமயங்களில் அப்படி காட்டிக் கொள்ளும் போது அதற்கு ஒரு துணைவிதி சொல்லி நாம் மடக்கப்படுவோம்!!

      நீக்கு
    2. கண்டிப்பாக ஸ்ரீராம்....

      கீதா

      நீக்கு
    3. 100% ஸ்ரீராம்! அதுவும் பெண்கள் கொஞ்ச்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். தெரிந்தால் கூட தெரியாதது போல காட்டிக் கொள்வதைத்தான் மடம் என்பார்கள்(அச்சத்தை தொடர்ந்து வரும் மடம்)

      நீக்கு
    4. பானுமதி சொல்லுவது உண்மை. எங்க மதுரைப் பக்கம் எல்லாம் மூத்த மாட்டுப்பெண் என்றால் வீட்டுப் பெரியவங்களே கிரீடம் சூட்டி விடுவார்கள். அவங்களைக் கலந்துக்காமல் எதுவும் சொல்ல/ செய்ய மாட்டார்கள். அதுவே தஞ்சைப்பக்கம்/கும்பகோணம்/மாயவரம் பக்கமெல்லாம் மூத்த மாட்டுப் பெண் வாயே திறக்கக் கூடாது. எதுவும் கருத்துச் சொல்லக் கூடாது. நாத்தனார், மைத்துனர்கள் சின்னவங்களாக இருந்தாலும் மரியாதை காட்டிப் பேசணும். நாத்தனார் சின்னவர் என்பதால் பெயர் சொல்லியோ "டீ" போட்டோ ஒருமையிலேயோ பேசக் கூடாது. மைத்துனர்கள் நம்மைப் பெயர் சொல்லுவாங்க. கேட்டுக்கணும். அவங்களோடு நேரிடையாகப் பேசக் கூடாது. (இந்த விஷயத்தில் ரொம்ப சிரமப்பட்டிருக்கேன்.) நான் பாட்டுக்கு சகஜமாக எங்க வழக்கப்படி பேசிடுவேன். உடனே அக்கம்பக்கமெல்லாம் எப்படியோ விஷயம் தெரிந்து வந்துடுவாங்க. என்னைப் பார்த்து ஏண்டி, மச்சினரைப் பார்த்துப் பேசறியாமே? எப்படிடி இவ்வளவு தைரியம்? என்பார்கள். என் கடைசி மைத்துனர் என்னை ஏ மாட்டுப் பெண்ணே! என்றோ "கீதாக் கோண்டு!" என்றோ கூப்பிடுவார். அவர் வந்தால் எழுந்து நிற்கணும் என்பார். இத்தனைக்கும் எங்க கல்யாணத்தின்போது அவருக்கு வயசு ஆறு. ஆனால் மாமனார், மாமியாரெல்லாம் இதைத் தான் நியாயம் என்பார்கள். என்னைச் சரியா நடந்துக்கத் தெரியலை என்பார்கள். பத்து வருஷம் கழிச்சு என்னோட ஓர்ப்படி வரும்வரைக்கும் இந்த நிலை தான். அதன் பின்னரே மாற்றங்கள்.

      நீக்கு
  8. ​அவசரமாக எழுதப்பட்டது போல் தோன்றுகிறது. எழுத்து பிழைகள் நிறைய உள்ளன.

    //தினசரி பார்த்த ஒரு நபர் மீது பரிதாபம் ஏற்பட்டது; இப்போதைக்குப் பெயர் ராமன் என்று வைத்துக் கொள்வோம்; அவனது பெயரில் ஒரு பாதி அதுதான். டி.வி.எஸ்ஸில் ஹெல்ப்பராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான்; சென்னைக்காரன். // இந்த வர்ணனை உங்களுக்கும் பொருந்தும்!!!

    விதை கவிதை யானால் செடி என்ன காய்க்கும்? காப்பியங்களா?

    காலப்போக்கில் அச்சு புத்தகங்கள் இல்லதாகி விடும் போல் தோன்றுகிறது. ஓலை சுவடிகள் மறையவில்லவா? ஆக கிண்டல் போன்ற சாதனங்கள் ஆட்சியை பிடிக்கும் எனத்தோன்றுகிறது. காசெட்டில் விருப்ப பாடல்களை பதிந்த காலம் ஞாபகத்தில் வருகிறது. காசெட்டுக்கு பதில் பெண் டிரைவ்.

    கொஞ்சம் கொடுங்களேன்..... கொடுக்கிறோம்.. 100 யூனிட் இலவசம்.

    காமராஜர் பற்றிய செய்தி முன்பே வாசித்தது போல் உள்ளது.

    இரண்டு அலைவரிசை என்ன எல்லா அலை வரிசைகளும் கடலுக்கு (பிஜேபி) அர்ப்பணிக்கப்பட்டவை. முதல் பொக்கிஷ ஜோக்கை சொல்கிறேன்.
    இன்று தேர்தல். தேர்தல் பற்றிய ஜோக்குகள்!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜே கே சி சார்... எழுத்துப் பிழைகள் முதல் பகுதியில் இருக்கிறதா, வேறு எங்காவதா? நான் மறுபடியும் சோதித்து பார்த்த போது எழுத்து பிழைகள் என் கண்ணில் படவில்லை .

      அவசர கதியில் எல்லாம் எழுதப்படவில்லை. மெதுவாகத்தான் எழுதப்பட்டது தான். நேற்று காலை முதல் கணினி யு பி எஸ் ரிப்பேர் ஆகிவிட்டதால் கணினியில் பதில் சொல்ல முடியவில்லை. பிளாக் பக்கமும் வர முடியவில்லை! மொபைலில் தான். கமலா அக்கா போலவோ செல்வா அண்ணா போலவோ மொபைலில் சரளமாக செய்ய வருவதில்லை .

      காமராஜர் செய்தி இணையத்தில் எடுப்பது தானே! நீங்களும் வாசித்திருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. . தேர்தல் நகைச்சுவைகள் மிகவும் தற்செயல். அதில் என்ன வருகிறது அதுதானே!

      நீக்கு
  9. இந்த இடத்தில சாஸ்திரிகள் குறுக்கிட்டு இங்க பாருங்க அத்தை.. அந்த பருப்பு தேங்காயை ஸ்வாமி கிட்ட வச்சுடுங்க... மத்ததை தட்டில் வச்சு கொடுங்க"//

    சூப்பர்....மேலே முந்தைய கருத்தில்....

    இதில் எந்தக் குற்றமும் கிடையாது நாமாகவே ஏற்படுத்திக் கொள்ளும் பயங்கள். கூடவே cause and effect theory என்று இது மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியாரே முதலில் கவனிக்காமல், பிறகு கவனித்து ஆவன செய்தார் என்று தான் எனக்குத் தோன்றியது. யாரும் சொல்லாமல் இருந்தால் ஒரு வேலை அவர் அப்படியே விட்டிருந்தாலும் விட்டிருக்கலாம்!!

      நீக்கு
    2. பொதுவாக ஆத்து வாத்தியார்கள் ஒரு பருப்புத் தேங்காய் வைப்பதைத் தான் ஆதரிப்பார்கள்/ஆதரிஅத்திருக்கின்றனர். இங்கேயும் பாருங்க, இரண்டாக விண்ட பருப்புத்தேங்காயில் ஒரு பாகத்தைத் தானே தட்டில் வைக்கச் சொல்லி இருக்கார்? அது தான் முறை இம்மாதிரிக் காரியங்களின் சுப நிகழ்ச்சிக்கு! மிகக்குறைவாக ஒரு சில வாத்தியார்கள் உங்க வீட்டுப் பழக்கம் என்னவோ அதைச் செய்யுங்கள்னு சொல்லுவாங்க.

      நீக்கு
    3. ஒரு பருப்பு தேங்காயை இரண்டாக விண்டு வைக்கச் சொன்னவர் சாஸ்திரிகள் அல்ல. வேறு ஒரு பெண்மணி . சாஸ்திரிகள் அதை ஒப்புக்கொள்ளாமல் ஓரமாக வைக்க சொல்லி விட்டார் .

      ஆனால் ஒன்று.... சாஸ்திரங்கள் ஊருக்கு ஊர், குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடுகின்றன!! வீட்டு வழக்கம்.

      நீக்கு
  10. எனக்கு ஒரு விள்ளல் கிடைக்குமா என்று மனம் கேட்டதை யாரிடமும் சொல்லவில்லை - பாஸைத் தவிர. அவர் ஒரு முறைப்பில் என்னை அடக்கி அங்கிருந்து அழைத்துக் கொண்டு போனார்.//

    சிரித்துவிட்டேன்!!!!! கொஞ்சம் Serious matter ends in a ripple of laughter!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருப்பு தேங்காய் கூட கடலை உருண்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தான் உண்மையில் கேட்டேன்! பருப்பு தேங்காய் அளவு வந்தது போக, மீதம் இருந்த கலவையில் நான்கு ஐந்து உருண்டைகள் செய்து வைத்திருப்பார்கள் போல....

      நீக்கு
    2. அது எந்தப்பருப்புத் தேங்காயாக இருந்தாலும் கூட்டில் அடைத்தது போக மிச்சத்தை இப்படி உருண்டையால அல்லது துண்டமாக மைசூர்ப்பாகு, பர்பி, போன்ரவற்றில் துண்டங்களாக வைக்கணும். மிட்டாய்ப் பருப்புத் தேங்காயில் மிட்டாய் உருண்டைகளாக, முந்திரிப்பருப்பில் முந்திரி உருண்டைகளாக இருக்கும். ரொம்பவே சாஸ்திரம் தெரிஞ்ச குடும்பம் போல. அதான் எல்லாத்தையும் முறையாகச் செய்திருக்காங்க.

      நீக்கு
    3. தானம் என்று, எனக்கு ஒரு உரிக்காத முழு தேங்காயும், 500 ரூபாயும் வைத்துக் கொடுத்தார்கள்.

      நீக்கு
  11. வேணுஜியின் தொடக்கமே சிரிக்க வைத்துவிட்டது அதானே என்று!!

    The way to the hell is paved with good intentions//

    அட்சர லட்சம்!!!

    வேணுஜியின் பக்திச் சுருக்கம் என்னை மிகவும் கவர்தது. சேம் போட் என்பதாலோ!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி இல்லாத காரணத்தினால் சென்ற வாரம் போல அதில் படங்கள் சேர்க்க முடியவில்லை

      நீக்கு
  12. பதில்கள்
    1. ஓம் முருகா... வாங்க செல்வாண்ணா.... வணக்கம்.

      நீக்கு
  13. இங்கே மழை... எனது கைத்தலபேசியில்
    இணையம் இழுவையாகி விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இணையம் பிரச்சனை இல்லை . மொபைலில் வேலை செய்வது தான் பிரச்சினை!!!

      நீக்கு
  14. புறநகர்ப் பகுதிக்கும் புறநகர்...
    அதனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசாமல் ஊருக்குள் ஒரு வீடு பிடித்து வாடகைக்கு வந்து விடுங்களேன்....

      நீக்கு
  15. /// பேசாமல் ஊருக்குள் ஒரு வீடு பிடித்து வாடகைக்கு வந்து விடுங்களேன்..///..

    காலம் கனிந்திருக்கின்றது..
    விரைவில் நல்ல செய்தி..

    பதிலளிநீக்கு
  16. 84 விகடன் நகைச்சுவை...

    பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற பத்திரிகைகளோடு ஒப்பிடும்போது பரவாயில்லை ரகம்.

      நீக்கு
  17. திரு மதனும் விகடன் நகைச்சுவையும்...
    அது ஒரு பொற்காலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். சிலருக்கு அதீத திறமைவாய்த்து விடுகிறது

      நீக்கு
  18. //இன்னிக்கி சுபம்.. ஒரு பருப்பு தேங்காய் வைக்கக் கூடாது. இரட்டையாய் வைக்கணும் என்றார்// மதுரைப்ப்பக்கங்களில் கல்யாணம், உபநயனம், சீமந்தம், சஷ்டி அப்தபூர்த்தி போன்ற சுப விசேஷங்களில் தான் இரண்டு பருப்புத் தேங்காய். இம்மாதிரிப் பித்ரு காரியத்தை அடுத்து வரும் சுபஸ்வீகாரத்துக்கு ஒன்றே ஒன்று தான் வைக்கணும். அன்னிக்குக் கோலமும் ஒத்தைக் கோலம் தான் போடுவாங்க/மணையில் உட்காருவதற்கு. மற்ற விசேஷங்களுக்கு இரட்டை மணை எனப்படும் இரட்டைக் கோலம். இன்னும் இறந்தவர்கள் சிறு வயதாக இருந்தால் பருப்புத் தேங்காயே கிடையாது. சர்க்கரையைக் கூம்பு வடிவில் பொட்டலம் கட்டித் தான் வைக்கணும். என் கடைசி நாத்தனாரின் கணவர் 54 வயதிலேயே இறந்தப்போ (அவங்க அப்பா, மத்த பெரியவங்க எல்லாம் இருந்தாங்க வேறே) எங்க மாமியார் தஞ்சாவூர் வழக்கப்படி இரண்டு பருப்புத் தேங்காய் வைக்கச் சொல்ல நாங்களும் வைச்சோம். நாத்தனாரின் புக்ககம் திருநெல்வேலிப்பக்கம் கடையநல்லூர். அவங்க வீட்டுப் பெரியவங்க என்னிடம், "என்ன கீதா! நீ மதுரைக்காரியா இருந்துண்டே இரண்டு பருப்புத் தேங்காய் வைச்சிருக்கே? நாங்கல்லாம் இருக்கிறச்சே அவன் போயிட்டான். எங்களுக்கு மனசு ஒத்துக்க வேணாமா?வெறும் சர்க்கரையைத் தானே பொட்டலம் கட்டி வைக்கணும்?" என்று கேட்டாங்க. நான் என்ன சொல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே ஏற்கனவே சொல்லி உள்ளபடி , சாஸ்திரங்கள் அவரவர் குடும்ப பழக்க/வழக்கத்திற்கு ஏற்றபடி வீட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன. ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்றுக்கொள்வதில்லை. வந்த வீட்டில், அந்த வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் அந்த வீட்டுக்கு வாழ வந்த பெண்களுக்கு ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது!

      நீக்கு
  19. பொதுவாக இறந்தவர்/இறந்த மனுஷி வயசில் 60க்கு மேல் இருந்தால் அதில் எந்தவிதமான கட்டுப்பாடும் பார்க்க மாட்டாங்க. அநேகமாகப் பிள்ளை, பெண்கள் திருமணம் ஆகிப் பேரன், பேத்தி எடுத்திருப்பாங்க என்பதால் நல்ல சாவு என்றும் 70/75 க்கு மேல் என்றால் கல்யாணச் சாவு என்றும் சொல்லுவார்கள். ஒன்பதாம் நாள், பத்தாம் நாள் பெண்கள் இருந்தால் ஒன்பதாம் நாளுக்கு இனிப்பும், இட்லி, வடை போன்ற பலகாரங்களும் அமர்க்களப்படும். பத்தாம் நாள் சாப்பாட்டிலும் காலை உணவு, மற்றும் மதியச் சாப்பாட்டில் முப்பருப்பு, முப்பழம் என அமர்க்களமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையாக இருந்தால், அல்லது பிராமண வீடுகளில் பூணூல் போடுவதற்கு முன்பு இறந்திருந்தால் திதி கிடையாது, என்றெல்லாம் சொல்வார்கள்.

      நீங்கள் சொல்லியிருக்கும் இது மாதிரி செய்திகள் எனக்கு புதிது.

      நீக்கு
  20. சேட்டைக்காரைன் அனுபவங்கள் சுவாரசியம். சேட்டைக்காரரைப் போலத் தான் நானும் சில சமயங்களில்/பெரும்பாலான சமயங்களில் உண்மையைப் பளிச்சுனு உடைச்சுச் சொல்லிடுவேன். ஆனால் அதை யாரும் விரும்புவதில்லை. பேசத் தெரியலை என்பார்கள். அநேகமாக இது தென் தமிழ்நாட்டவர்களின் குண விசேஷமோ என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதில் மிகப்பெரிய அனுபவம் உண்டு. ஆனால் எதிர்மறையில்...

      நீக்கு
    2. //இது தென் தமிழ்நாட்டவர்களின் குண விசேஷமோ என நினைக்கிறேன்.// இல்லை, நான் கிழக்கு தமிழகம், ஆனால் நானும் நினைப்பதை சொல்லி விடுவேன். அதனால் கெட்ட பெயர் நிறைய. என் அம்மா எனக்கு பேசத்தெரியலை என்று திட்டுவார். உண்மைதான் என்று தோன்றுகிறது. மாற்றிக் கொள்ள முயற்ச்சிக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் நடக்கலாம்.

      நீக்கு
  21. குழந்தையும் கவிதையும் அபாரம். பொக்கிஷம் சுமார். கண்ணதாசனைப் படிக்க முடியலை. புத்தகக் கண்காட்சி நல்ல அலசல். காமராஜர் இன்னமும் வாட்சப்பில் சுத்திட்டு இருக்கார். சுமார் நாலைந்து முறை வந்து விட்ட விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி கீதா அக்கா. காமராஜர் செய்தியை நான் இணையத்தில் படித்தேன். எனக்கு வாட்ஸ் அப்பில் வரவில்லை.

      நீக்கு
    2. உண்மையாக இருக்குமா என்னும் சந்தேகம் எனக்கும் உண்டு.

      நீக்கு
  22. சேட்டைக்கார ஜியின் அனுபவங்கள் அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும் அதான் அந்தக் கடைசிவரி!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எனவே, நல்ல நுால்கள், வாசகர்களின் கைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் எனில், தற்போதைய, 'பபாசி' நிர்வாகத்தாருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் , அந்தந்த ஊரில் உள்ள ஆளும் கட்சியினரை புகழ்ந்தும் பேசினால் தான் புத்தகம் விற்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.//

    புத்தக விற்பனையிலும் இப்படியான ஊழல்களா! எதுலதான்னு இல்லாம ஆகிவிட்டது. இப்படி இருந்தால் எப்படி நல்ல நூல்கள் வாசகர்களைச் சென்றடையும்? ஆச்சரியமாக இருக்கிறது நிலைமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிலும் ஊழல் இருக்க தானே செய்கிறது, பாடநூல் நிறுவனங்கள் நூலகங்கள் உட்பட!

      நீக்கு
  24. கவிதை சூப்பர், ஸ்ரீராம். குழந்தைக்கும் பொருந்தும் காதலிக்கும் /காதலனுக்கும் பொருந்துமோ?

    ரிஷபன் அண்ணாவின் கமென்ட் பொருத்தம்.

    எனக்குத் தோன்றியது வறண்ட மனக்குளம் நிரம்பத் தொடங்கியது.

    வறண்டமனம் சோலையானது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. நீங்கள் சொல்லியிருப்பதும் நன்றாக இருக்கிறது

      நீக்கு
  25. மின்சாரக் கவிதை - புன்சிரிப்பை வரவழைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அப்போதைய நிலைமை! நீங்களும் சென்னையில் இருந்த இதை அனுபவித்து இருப்பீர்கள்!!

      நீக்கு
  26. காமராஜர் விஷயம் சுவாரசியம்! எப்படி மாற்றிச்சிந்தித்திருக்கிறார் என்றும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இது உண்மையான செய்தி அல்ல என்று சொல்கிறார் ஜி வி சார்

      நீக்கு
  27. ஜோக்ஸ் ஓகே...

    கரையான் போட்ட அந்த டிசைனை ரொம்ப ரசித்தேன் மொட்டை மரத்தில் கார்டூன்கள் நடுவில் ஒரு விலங்கு திரும்பிப் பார்ப்பது போன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு

  28. ​இன்று இரண்டு பேரைக் காணவில்லை. நெல்லை, பா வெ. டூரா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை என்ன பிஸி என்று தெரியவில்லை. பானு அக்கா செவ்வாய் பதிவுக்கும் வரவில்லை. நேற்று வந்தார். நேற்று அவர் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

      நீக்கு
    2. பெங்களூர் -நாமக்கல்-மதுரை நான்கு இரவுகள் -நெல்லை மூன்று இரவுகள் -கன்யாகுமரி ஒரு இரவு எனத் தென் தமிழக கோயில் பயணங்கள் அண்ணனுடன் காரில். இன்று மதுரை இரண்டாம் இரவு

      நீக்கு
  29. சாஸ்திரிகள் வேலைகள் என்றால் முதலே தலைமுறை விடயங்கள் எழுதி வைத்துவிடுவோம். நல்ல ஞாபக சக்தி உங்கள் தங்கையின் மாமனாருக்கு.

    'வலியப்போய் ஒன்றுக்கு இரண்டு ஓணான்களை...." ஆரம்பமே சிரிக்க வைத்தது. இறுதி முடிவு கவலையான விடயத்தை தந்தாலும் அதையும் ஆரம்பத்திலேயே நகைச்சுவையாக தருவது அவரின் கைவண்ணம்.பாராட்டுகள்.

    அரசியல் ஜோக்ஸ் காபரே டான்சர் ...ஹா..ஹா......அரசியல் எங்கே போகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்த விஷயங்களை சொல்லி பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  30. வித்தியாசமாக முதல் பகுதி அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்

    எனக்கு மனைவிதான் பெயர் நட்சத்திரம் ராசிலாம் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல கோயில் அர்ச்சனையின்போது சொல்லுவேன்

    பதிலளிநீக்கு
  31. எனக்கு சாஸ்திரம் அது இது என்று குறை கண்டுபிடிப்பவர்களைக் கண்டால் அலர்ஜி. சரி செய்ய முடியாதவற்றை பிறருக்குச் சொல்லி அவர்கள் மனத்தைத் தவிக்கவிடுவது பெரும் பாவம். இவர்களுக்குப் புரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி செய்ய முடியாதுனு எதுவே இல்லை நெல்லை. பொதுவாகக் குழந்தைகளுக்குச் சின்ன வயசில் இருந்தே சிலவற்றைப் பெ/ர்ரோர் கற்றுக் கொடுக்கணும். எங்க ஊர்ப்பக்கம்/வீடுகளில் அது இயல்பாக இருக்கும். ஆனால் மற்ற இடங்களில் அப்படி இல்லை என்பதைப் பின்னால் தான் புரிந்து கொண்டேன். உதாரணத்திற்கு ச்ராத்தம் செய்த அன்று மாலையில் கூடக் கோயில்களுக்குப் போகக் கூடாது. எங்க வீட்டில்/குடும்பத்தில் பெரியவங்க இதைக் கடைப்பிடித்ததோடு அல்லாமல் யாரேனும் கேட்டால் சொல்லுவாங்க. இன்னிக்கு ச்ராத்தான் அதான் போகலைனு. இதுவே நான் கல்யாணம் ஆகி வந்தப்புறமா என் மாமியார் ச்ராத்தம் அன்று மாலை கோயிலுக்குக் கிளம்ப, என் வாய் சும்மா இருக்காமல் இன்னிக்குப் போகக் கூடாது எனச் சொல்ல ஒரே களேபரம். அவங்க கிளம்பிப் போனாங்க. போகும்போது தெரு முக்கில் இருந்த வாத்தியார் வீட்டு வழியே போய் அவரிடம் நான் சொன்னதைக் குற்றமாகச் சொல்லிச் சத்தம் போட, அவரோ, உங்க மாட்டுப்பொண்ணு சரியாத்தான் சொல்றா. என்று விட்டார். பின்னர் திரும்பி வந்தாங்க. அதன் பின்னர் போவதில்லை. இது மாதிரிப் பல உதாரணங்கள் இருக்கு. எங்க வீடுகளில் பாட்டி, பெரியப்பா, தாத்தாக்கள், மாமாக்கள்னு இருந்ததால் பரவலாக எல்லாமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

      நீக்கு
    2. over spelling mistakes. Please don't mind it.

      நீக்கு
  32. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  33. சேட்டைக்காரனின் வேலியில் போன இரண்டு ஓணான்களை வேட்டிக்குள் விட்டுக்கொண்ட அனுபவமும் ஒரு அலுவலகத்தில் பாலிடிக்ஸ் உருவாகும் விதமும் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
  34. பல அலுவலகங்களில் ஜாதி மதம் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. அதைப் பொறுத்துத்தான் நமக்கு நண்பர்கள் மற்றும் எதிரிகள் அமைவர்

    பதிலளிநீக்கு
  35. வீட்டில் நடக்கும் விழாக்களில் இப்படி நினைவாற்றலோடு பெயர், நட்சத்திரம் சொல்பவர்கள் எங்கள் வீட்டில் சின்னமாமனார்தான். என் மாமா பஞ்சங்கத்தில் எல்லோர் பிறந்தநாட்களையும் அடிகோடிட்டு வைத்து இருப்பார்கள் அதைப்பார்த்து சொல்வார்கள்.

    அதே போல சடங்குகளை அப்படி செய்ய வேண்டும் , இப்படி செய்ய வேண்டும், இது , முன்பு, இது பின்பு என்று எல்லாம் என் தங்கை, என் ஒர்படி இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். நான் அவர்களுக்குள் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று விட்டு விடுவேன்.

    என்னை கேட்டால் எனக்கு தெரியாது நீங்கள் எது சரியோ செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன் . ஒவ்வொரு குடும்பத்திலும் வழக்கங்கள் மாறு பட்டால் என்ன செய்வது?

    எங்கள் சாதி சடங்கு பிறப்பு முதல் இறப்புவரை என்று புத்தகம் அடித்து ஒரு கையேடு கொடுத்தார்கள் ஒரு கல்யாணவீட்டில் அதன் படி செய்யுங்கள் என்றாலும் உறவினர்கள் ஒருபக்கம் நல்லது, கெட்டது செய்துவைக்கும் குருக்கள் அய்யா ஒருபக்கம் என்று ஆளுக்கு ஒருபக்கம் இழுத்தால் ஒன்றும் செய்ய முடியாது நடப்பது நடக்கட்டும் என்று இருந்தாலும்
    மக்கள் ஏதாவது பேசி கொண்டு இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  36. சேட்டைக்கார்ர் அனுபவங்களை நன்றாக சொல்லி வருகிறார். கவிதைகள் நன்றாக இருக்கிறது , குழந்தை கவிதையும் குழந்தை படமும் அருமை.
    காமராஜர் செய்தி வணங்குகிறேன் காமராஜரை.
    சிரிப்புகள் நன்றாக இருக்கிறது தேர்தல் சமய சிரிப்புகள்

    பதிலளிநீக்கு
  37. I started using Fat Burner Elite a few weeks ago after struggling for months to lose the extra weight around my belly and thighs. Despite regular workouts and a clean diet, the scale just wouldn’t move — until I gave this supplement a try. Within the first two weeks, I noticed a visible difference in my energy levels and stamina. My metabolism felt faster, I wasn’t constantly craving snacks, and my workouts became more effective.

    By the end of the first month, I had dropped almost 5 kilos without feeling weak or drained. The best part? It didn’t give me jitters or sleepless nights like other fat burners I’ve tried before. Fat Burner Elite helped me stay focused, active, and in control of my diet naturally.

    If you’ve been looking for a safe and effective way to boost your fat loss journey, I genuinely recommend giving Fat Burner Elite a try. It worked for me when nothing else did — and it might just be the push your body needs to finally shed those stubborn pounds. Don’t wait too long — grab your bottle of Fat Burner Elite today and start seeing real results!

    visit - https://www.reviewitbari.com/fat-burner-elite-review/

    பதிலளிநீக்கு
  38. சேட்டைக்காரன் அனுபவங்கள் சுவாரஸ்யம். காமராஜ் பற்றிய செய்தி ஏற்கனவே படித்ததுதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!