மரவள்ளி அடை/தோசை
JKC
இந்த அடை
பற்றிய சமையல் குறிப்பு முன்பே எ பி யில் வந்திருக்கலாம். அப்படியானால் இதை
மீள்பதிவு ஆகக் கொள்ளலாம்.
பச்சரிசி
ஊறவைத்து அரைத்து மாவை புளிக்க வைக்காமல் வார்க்கும் தோசைகள் மூன்று. நீர்த்தோசை,
அரிசி சிறுதானியம் தோசை, மற்றும் அரிசி பருப்பு கலந்து அரைத்த அடை தோசை ஆகியன. இவ்வரிசையில் அரிசி,
மரவள்ளிக்கிழங்கு சேர்த்தரைத்து சுடப்படும் தோசையே மரவள்ளி தோசை. ஒரு வித்தியாசமான
காலை உணவு.
சாதாரண
அடைக்கு பருப்பு தேவை. பருப்பை நீக்கி மரவள்ளி கிழங்கை சேர்த்து அரைத்து
தோசைக்கல்லில் வார்த்தெடுப்பது தான் மரவள்ளி அடை.
வேண்டிய
பொருட்கள்.
ஊறவைத்த
பச்சரிசி. (மூன்று மணி நேரம் ஊறினால் போதும்)
மரவள்ளிக்கிழங்கு
ஒரு துண்டு.
வற்றல்
மிளகாய் 5 (தேவையான காரத்திற்கு ஏற்ப)
வெங்காயம்
பொடியாக அரிந்தது.
பெருங்காயப்பொடி
உப்பு.
அரிசி கிழங்கு விகிதம் தரப்படாததை கவனித்திருக்கலாம். அரிசி
கூடுதல் ஆனால் மொறு மொறுப்பு கூடுதல் ஆகும். கிழங்கு கூடுதல் ஆனால் மொழுக் மொழுக்
கூடுதல் கிடைக்கும். வேண்டிய திட்டம் அவரவர் தீர்மானிப்பதுவே.
அரிசி, கிழங்கு துண்டங்கள், மிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில்
அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
தோசைக்கல்லில்
வார்த்து இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
தொட்டுக்கொள்ள
சட்னி அரைக்கவில்லை. நாட்டு சர்க்கரை தான்.
தேங்காய் துருவல் அடையில் தூவி நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
ஜெ கே அண்ணா, தோசை சூப்பர்.
பதிலளிநீக்குஊரில் இருந்த வரை இது அப்பப்ப செய்வாங்க வீட்டில். திருவனந்தபுரத்திலும் நான் செய்ததுண்டு.
அதன் பின் எப்போதாவது என்று ஆகிவிட்டது. செஞ்சு பல மாதங்கள் ஆகிவிட்டது. நினைவு படுத்திட்டீங்க ஜெ கே அண்ணா.
கீதா
சிறப்பு. பார்க்க அழகாக இருக்கிறது. தோசை என்பதைவிட அடை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் போல தெரிகிறது.
பதிலளிநீக்குஸ்ரீராம் நல்லாருக்கும். பிறந்த வீட்டில் வெங்காயம் எல்லாம் சேர்க்க மாட்டாங்களே அதனால் பெருங்காயம் நிறைய சேர்த்துச் செய்வாங்க கறிவேப்பிலையும் .
நீக்குநான் அப்படியும் செய்தாலும் வெங்காயம் சேர்ப்பேன் பூண்டும் இஞ்சியும் கொஞ்சம் சேர்த்தும் செய்வதுண்டு.
டேஸ்ட் நல்லாருக்கும் ஸ்ரீராம். செஞ்சு பாருங்க முடிஞ்சா.
கீதா
பார்க்கணும் கீதா... நம்ம வீட்டுல புது முயற்சி எல்லாம் செய்ய மாட்டாங்க... எப்புட்டி அம்மாகி நிப்பட்டியே கதி!
நீக்குதோசை தித்திப்பாய் இருக்கும் என்று தோன்றுகிறது. சிவப்பு மிளகாய் சேர்த்தும் கூட , வெங்காயமும், தேங்காயும் சேர்க்கும் அடையிலேயே காரமில்லாமல் தித்திப்பாயிருக்கும். JKC அதற்கு நாட்டுச்சர்க்கரை வேறு தொட்டுக் கொண்டிருக்கிறார்...!
ஸ்ரீராம் நீங்க புகுந்தீங்கனா செய்வீங்களே அப்படி முயற்சி செய்யலாம். வர்ஷினியும் கூட புதிதாகச் செய்வாங்களே அப்படியும் முயற்சி செய்யலாம்!!!! . தித்திப்பாக இருக்காது ஸ்ரீராம்.
நீக்குநாட்டுச் சர்க்கரை அது ஜெ கே அண்ணா தொட்டுக் கொண்டிருக்கிறார். இதற்குத் தேங்காய் சட்னி அல்லது தக்காளிச் சட்னி நல்லாருக்கும்.
கீதா
/எப்புட்டி அம்மாகி நிப்பட்டியே கதி!/
நீக்குஇதுவும் நிப்பட்டிதானே.. :))
என் புகுந்த வீட்டிற்கு இது பழக்கமில்லை அவங்க மரவள்ளிக் கிழங்கே வாங்க மாட்டாங்க. நான் அவங்களுக்கு செய்து கொடுத்தப்பதான் - புழுக்கு, பொரியல்,அடை தோசை, அப்பளம் என்று அப்பதான் அவங்களுக்கு இந்த வகைகள் எல்லாம் அறிமுகம்.
பதிலளிநீக்குஎன் பிறந்த வீட்டில் சகஜம். வெயில் காலம் என்றால் மரச்சீனிக் கிழங்கு அப்பளம் வீட்டில் போடாமல் இருந்ததில்லை. நானும் செய்ததுண்டு. மகனுக்கும் கூட செய்து அனுப்பினேன். இப்பதான் செய்ய முடியலை இப்ப உள்ள வீட்டில் வெயில் வேண்டும் என்றால் மொட்டை மாடிக்குப் போக வேண்டும் லிஃப்ட் இல்லாத இரு மாடிகளுடன் ஆன தனி வீடு.
எங்க பிறந்த வீட்டில் அடை செய்யறப்ப பருப்பும் கூடச் சேர்த்து கிழங்கும் போட்டு அரைத்துச் செய்வாங்க. கூடவே இப்படித் தோசையும்.
நாவூறுது. இப்பலாம் டயட் கான்செப்டில் போவதால் இது விட்டுப் போச்சு. நினைவுபடுத்திட்டீங்க. செய்யணும்.
கீதா
குறைந்த பொருட்கள், எளிமையான செய்முறை, உளுந்தைக்காட்டிலும் கிழங்கு விலை கம்மி, தொட்டுக்கொள்ள சட்னி வகைகள் தேவை இல்லை. இப்படி பல சிறப்பு அம்சங்கள் உள்ளதால் செய்து பார்க்கலாம். ஒரு குறை, உப்புமா போல் திடீர் என்று செய்யமுடியாது. அரிசி ஊறவேண்டும்.
பதிலளிநீக்குவாசனைக்கு சீரகம் வேண்டுமானால் சேர்க்கலாம். மிளகாய் பைதாகி மிளகாய்.
@கீதா. மரசீனி பப்படம் சாப்பிட்டிருப்பீர்கள். மார்சீனி பப்படம் பற்றி திங்கக்கிழமை பதிவு ஓன்று போடலாமே.
Jayakumar
போடலாம் அண்ணா பப்படம் பற்றி வீட்டில் அது இல்லாமல் இருந்ததே இல்லையே.....ஆனால் நான் வீட்டில் கிழங்கை அரைத்து வேகவைத்து அப்பளம் செய்ததை ஃபோட்டோக்கள் எடுக்காமல் விட்டுவிட்டேன்.
நீக்குஇனி எப்ப செய்வேன் என்று தெரியவில்லை.
கீதா
மரவள்ளிக் கிழங்கும், சர்க்கரைவள்ளி கிழங்கும் ஒன்றோ..?(இதன் பெயர்தான் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறோ?) படத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு போல் உள்ளதே..!
நீக்குமரவள்ளிக் கிழங்கு Tapioca, சர்க்கரை வள்ளிக்கிழங்கு Sweet potato. மரவள்ளி சின்ன மரமாக இருக்கும், வேரில் கொத்தாக கிழங்கு இருக்கும். சர்க்கரைவள்ளி கிழங்கும் வேரில் காய்ப்பதே. வர்சையாக வேரில் இருக்கும்,
நீக்குJayakumar
தகவல்களுக்கு நன்றி. சர்க்கரைவள்ளியின் ஆங்கிலப் பெயர் தெரியும். மரவள்ளியின் பெயர் அறிந்து கொண்டேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவாக மரவள்ளிக்கிழங்கு அடை படங்களுடன் செய்முறை விளக்கமும் நன்றாக உள்ளது. நாங்கள் இதுவரை இந்த மரவள்ளிக்கிழங்கை வாங்கியதில்லை. ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கு வாங்கியுள்ளோம் . அதுவும் அதன் இனிப்பு ஒரு சிலருக்குப் பிடிக்காது. முன்பு எங்கள் வீட்டில் நான் மட்டுந்தான் இதை வேக வைத்து, பொரியல், கூட்டு என சாப்பிடுவேன். கரி அடுப்பில் சுட்டும் சாப்பிடலாம். இதைப் போட்டு சாம்பார் நன்றாக வாசனையுடன் இருக்கும்.அப்போதும் சில சமயங்களில் சாம்பாரில் உள்ள இந்த காய்கள் எனக்கு மட்டுந்தான் வரும். அதனால் நானும் முன்பு அதிகமாக வாங்குவதில்லை. இப்போது வீட்டில் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், மரவள்ளி கிழங்கு வாங்கியதில்லை. இதனை வைத்துச் செய்யும் அப்பளம் சாப்பிட்டுள்ளோம்.
இந்த அடை சுவையானதாக இருக்குமென நினைக்கிறேன். வீட்டில் வாங்கினால், ஒரு முறை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"அட" புதுமையாக இருக்கிறதே.....
பதிலளிநீக்குசகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிறந்தநாளில் அவர் பார்க்க விரும்பிய கோவில் தரிசனங்கள் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். சர்க்கரை வள்ளி கிழங்கில் மருத்துவ குணம் உண்டு. உடலுக்கு நல்லது. மரவள்ளி அப்படி அல்ல
நீக்குகல்லிடையில் ஆதி வராகர் தரிசனம் பெற்று கொண்டீர்களா ? பயணத்திலும், பதிலுக்கு நன்றி கூறியிருப்பதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றி
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நெல்லை.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா சாம்பசிவம் மேடம். திருநெவேலியில் கோயில் கோயில்களாகச் சுற்றிக்கொண்டிருப்பதால் மரச்சீனி அடையை முழுமையா படிக்கலை
நீக்குமரவள்ளிக்கிழங்கு எங்க வீடுகளில் வாங்கியதில்லை. ஆனால் அம்மா வாங்கிக் காரம் போட்ட அப்பளம் செய்து கொடுத்திருக்கார். சாப்பிட்டிருக்கோம். மாலை நேரம் சாப்பிட ஏதும் இல்லை என்றால் அதைப் பொரிச்சோ, சுட்டோ நெய் ஊற்றிச் சாப்பிடுவது உண்டு.
பதிலளிநீக்குஇப்போதான் கல்லிடைக்குறிச்சி யில் மரச்சீனி அப்பளாக்கட்டு ஒன்று வாங்கினேன்
நீக்குஅம்பத்தூரில் வீடு கட்டிக் குடித்தனம் போனதும் பக்கத்து வீட்டுப் பாலக்காட்டு மாமி இந்த மரவள்ளிக்கிழங்கை வைத்து மாலை சாப்பிடட் வேக வைத்துத் தாளிப்பெல்லாம் போட்டுக் கொடுப்பார். எங்க வீட்டுக்கும் கொடுத்திருக்கார். இதில் ஒரு முறை ஒரே ஒரு கிழங்கில் போளி செய்து பார்த்தேன். சுமாராக இருந்தது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அடிக்கடி போளி பண்ணுவேன்.
பதிலளிநீக்குமரவள்ளிக் கிழங்கு இனிப்பு கிடையாது. போளிக்கு லாயக்கில்லை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் போளி நல்லாருக்கும்
நீக்குஎன் புகுந்த வீட்டில் கருவிலி கிராமத்தில் வயலில் ஒரு கிழங்கைப் பயிராக்கிக் கொண்டு வருவார்கள். அதற்குக் கீரிப்பிள்ளைக் கிழங்கு எனப் பெயர். அதை நிற்க வைத்து நட்டால் அப்படியே செங்குத்தாகவும், படுக்கை வசத்தில் நட்டால் படுக்கை வசத்திலும் கிழங்கு வரும். அதைத் தோலைச் சீவி வறுவல் பண்ணுவாங்க. அநேகமாகக் கருவிலியில் இது தான் காய்கறி. ஊரில் காய்கறிக் கடையெல்லாம் கிடையாது. ஒரே ஒரு சின்னப் பெட்டிக்கடை. உப்பு, தீப்பெட்டி, வெற்றிலை போன்ற பொருட்கள் அவசரத்துக்குக் கிடைக்கும். எப்போவாவது அபூர்வமாகப் பொட்டுக்கடலை கிடைக்கும். வறுத்த பட்டாணியும். ஆகையால் அங்கே காய்கறிகள் வயலில் வரப்பில் விளைவது தான். கீரை, சேம்பு இலை, கிழங்கு போன்றவைகள் கிடைக்கும். கீரை கூட அபூர்வம் தான். ஆகவே இந்தக் கீரிப்பிள்ளைக் கிழங்கு தான் அங்கே சாப்பாட்டிற்குத் தொட்டுக்கொள்ளும் வ்யஞ்சனம். இல்லை என்றால் பயத்தம்பருப்பில் பருப்பு உசிலி.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குhttps://engalblog.blogspot.com/2021/04/blog-post_5.html
நீக்குதிரு. நெல்லை தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள். ஆன்மீக பயனக்கட்டுரைகள் தொடர
வாழ்த்துக்கள்.
கே. சக்ரபாணி
மிக்க நன்றி சக்ரபாணி சார்
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெல்லை . வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் அண்ணா ஹா ஹா ஹா
நீக்குசகோதரி கீதாரெங்கன் தங்களுக்கு அக்கா என்பது மாதிரி சகோதரர் ஸ்ரீராம் தங்களுக்கு அண்ணா என்பதையும் தெரிந்து கொண்டேன். :))))
நீக்குஅட நெல்லைத் தமிழனுக்கும் வய்சாவுதா? நான் உலகம் சுற்றும் வாலிபன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குபிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து.
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பிள்ளைகள் போலெ தொல்லைகள்
எல்லாம் மறந்த நாள்.
Jayakumar
முந்தைய பதிவின் சுட்டி
பதிலளிநீக்குhttps://engalblog.blogspot.com/2021/04/blog-post_5.html
இந்தப்பதிவில் சென்று சகோதரி வானம்பாடியின் கிழங்கு தோசை படித்து வந்தேன். உங்கள் இருவரின் மரவள்ளிக் கிழங்கு தோசை பக்குவங்களும் நன்றாக உள்ளது. நன்றி.
நீக்குஅடடா ! இன்று பேரனை பாடசாலையில் இருந்து ஆட்டோவில் கூட்டி வரும்போது வழியில் மரவள்ளிக் கிழங்கு விற்க வைத்திருப்பதை கண்டேன் இதை அவித்து துவையல் செய்தால் என்ன ? என்ற எண்ணம் வந்தது .வாங்கவில்லை வந்துவிட்டோம்.
பதிலளிநீக்குஎன்ன பொருத்தம் இப்பொழுது இங்கு பார்த்தால் தோசை சூப்பராக இருக்கிறது.
நெல்லை தமிழன் அவர்களின் பிறந்தநாளுக்கு இனிய வாழ்த்துகள்.