மரவள்ளி அடை/தோசை
JKC
இந்த அடை
பற்றிய சமையல் குறிப்பு முன்பே எ பி யில் வந்திருக்கலாம். அப்படியானால் இதை
மீள்பதிவு ஆகக் கொள்ளலாம்.
பச்சரிசி
ஊறவைத்து அரைத்து மாவை புளிக்க வைக்காமல் வார்க்கும் தோசைகள் மூன்று. நீர்த்தோசை,
அரிசி சிறுதானியம் தோசை, மற்றும் அரிசி பருப்பு கலந்து அரைத்த அடை தோசை ஆகியன. இவ்வரிசையில் அரிசி,
மரவள்ளிக்கிழங்கு சேர்த்தரைத்து சுடப்படும் தோசையே மரவள்ளி தோசை. ஒரு வித்தியாசமான
காலை உணவு.
சாதாரண
அடைக்கு பருப்பு தேவை. பருப்பை நீக்கி மரவள்ளி கிழங்கை சேர்த்து அரைத்து
தோசைக்கல்லில் வார்த்தெடுப்பது தான் மரவள்ளி அடை.
வேண்டிய
பொருட்கள்.
ஊறவைத்த
பச்சரிசி. (மூன்று மணி நேரம் ஊறினால் போதும்)
மரவள்ளிக்கிழங்கு
ஒரு துண்டு.
வற்றல்
மிளகாய் 5 (தேவையான காரத்திற்கு ஏற்ப)
வெங்காயம்
பொடியாக அரிந்தது.
பெருங்காயப்பொடி
உப்பு.
அரிசி கிழங்கு விகிதம் தரப்படாததை கவனித்திருக்கலாம். அரிசி
கூடுதல் ஆனால் மொறு மொறுப்பு கூடுதல் ஆகும். கிழங்கு கூடுதல் ஆனால் மொழுக் மொழுக்
கூடுதல் கிடைக்கும். வேண்டிய திட்டம் அவரவர் தீர்மானிப்பதுவே.
அரிசி, கிழங்கு துண்டங்கள், மிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில்
அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
தோசைக்கல்லில்
வார்த்து இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
தொட்டுக்கொள்ள
சட்னி அரைக்கவில்லை. நாட்டு சர்க்கரை தான்.
தேங்காய் துருவல் அடையில் தூவி நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
ஜெ கே அண்ணா, தோசை சூப்பர்.
பதிலளிநீக்குஊரில் இருந்த வரை இது அப்பப்ப செய்வாங்க வீட்டில். திருவனந்தபுரத்திலும் நான் செய்ததுண்டு.
அதன் பின் எப்போதாவது என்று ஆகிவிட்டது. செஞ்சு பல மாதங்கள் ஆகிவிட்டது. நினைவு படுத்திட்டீங்க ஜெ கே அண்ணா.
கீதா
சிறப்பு. பார்க்க அழகாக இருக்கிறது. தோசை என்பதைவிட அடை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் போல தெரிகிறது.
பதிலளிநீக்குஸ்ரீராம் நல்லாருக்கும். பிறந்த வீட்டில் வெங்காயம் எல்லாம் சேர்க்க மாட்டாங்களே அதனால் பெருங்காயம் நிறைய சேர்த்துச் செய்வாங்க கறிவேப்பிலையும் .
நீக்குநான் அப்படியும் செய்தாலும் வெங்காயம் சேர்ப்பேன் பூண்டும் இஞ்சியும் கொஞ்சம் சேர்த்தும் செய்வதுண்டு.
டேஸ்ட் நல்லாருக்கும் ஸ்ரீராம். செஞ்சு பாருங்க முடிஞ்சா.
கீதா
பார்க்கணும் கீதா... நம்ம வீட்டுல புது முயற்சி எல்லாம் செய்ய மாட்டாங்க... எப்புட்டி அம்மாகி நிப்பட்டியே கதி!
நீக்குதோசை தித்திப்பாய் இருக்கும் என்று தோன்றுகிறது. சிவப்பு மிளகாய் சேர்த்தும் கூட , வெங்காயமும், தேங்காயும் சேர்க்கும் அடையிலேயே காரமில்லாமல் தித்திப்பாயிருக்கும். JKC அதற்கு நாட்டுச்சர்க்கரை வேறு தொட்டுக் கொண்டிருக்கிறார்...!
ஸ்ரீராம் நீங்க புகுந்தீங்கனா செய்வீங்களே அப்படி முயற்சி செய்யலாம். வர்ஷினியும் கூட புதிதாகச் செய்வாங்களே அப்படியும் முயற்சி செய்யலாம்!!!! . தித்திப்பாக இருக்காது ஸ்ரீராம்.
நீக்குநாட்டுச் சர்க்கரை அது ஜெ கே அண்ணா தொட்டுக் கொண்டிருக்கிறார். இதற்குத் தேங்காய் சட்னி அல்லது தக்காளிச் சட்னி நல்லாருக்கும்.
கீதா
என் புகுந்த வீட்டிற்கு இது பழக்கமில்லை அவங்க மரவள்ளிக் கிழங்கே வாங்க மாட்டாங்க. நான் அவங்களுக்கு செய்து கொடுத்தப்பதான் - புழுக்கு, பொரியல்,அடை தோசை, அப்பளம் என்று அப்பதான் அவங்களுக்கு இந்த வகைகள் எல்லாம் அறிமுகம்.
பதிலளிநீக்குஎன் பிறந்த வீட்டில் சகஜம். வெயில் காலம் என்றால் மரச்சீனிக் கிழங்கு அப்பளம் வீட்டில் போடாமல் இருந்ததில்லை. நானும் செய்ததுண்டு. மகனுக்கும் கூட செய்து அனுப்பினேன். இப்பதான் செய்ய முடியலை இப்ப உள்ள வீட்டில் வெயில் வேண்டும் என்றால் மொட்டை மாடிக்குப் போக வேண்டும் லிஃப்ட் இல்லாத இரு மாடிகளுடன் ஆன தனி வீடு.
எங்க பிறந்த வீட்டில் அடை செய்யறப்ப பருப்பும் கூடச் சேர்த்து கிழங்கும் போட்டு அரைத்துச் செய்வாங்க. கூடவே இப்படித் தோசையும்.
நாவூறுது. இப்பலாம் டயட் கான்செப்டில் போவதால் இது விட்டுப் போச்சு. நினைவுபடுத்திட்டீங்க. செய்யணும்.
கீதா
குறைந்த பொருட்கள், எளிமையான செய்முறை, உளுந்தைக்காட்டிலும் கிழங்கு விலை கம்மி, தொட்டுக்கொள்ள சட்னி வகைகள் தேவை இல்லை. இப்படி பல சிறப்பு அம்சங்கள் உள்ளதால் செய்து பார்க்கலாம். ஒரு குறை, உப்புமா போல் திடீர் என்று செய்யமுடியாது. அரிசி ஊறவேண்டும்.
பதிலளிநீக்குவாசனைக்கு சீரகம் வேண்டுமானால் சேர்க்கலாம். மிளகாய் பைதாகி மிளகாய்.
@கீதா. மரசீனி பப்படம் சாப்பிட்டிருப்பீர்கள். மார்சீனி பப்படம் பற்றி திங்கக்கிழமை பதிவு ஓன்று போடலாமே.
Jayakumar
போடலாம் அண்ணா பப்படம் பற்றி வீட்டில் அது இல்லாமல் இருந்ததே இல்லையே.....ஆனால் நான் வீட்டில் கிழங்கை அரைத்து வேகவைத்து அப்பளம் செய்ததை ஃபோட்டோக்கள் எடுக்காமல் விட்டுவிட்டேன்.
நீக்குஇனி எப்ப செய்வேன் என்று தெரியவில்லை.
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.