வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் இனிய போகி & பொங்கல் வாழ்த்துகள் !
எங்கள் கேள்விகள் :
1) பொங்கல் திருநாள் என்றதும் உங்கள் நினைவுக்கு வருபவை என்னென்ன?
2) இந்தப் படத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, பல வருடங்கள் கழித்து அவர்கள் குற்றவாளி அல்லர் என்று தெரிந்தால், அதற்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? வைத்திருக்கவேண்டும்?
# இதற்கு சட்டத்தில் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு உண்டான விதிகள் இருக்கும் என்று நினைக்கிறேன் - சரியாகத் தெரியவில்லை. அதற்கான இடம் இல்லாவிடில் கொண்டு வர வேண்டும்.
2. பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா?
# உண்டு. அதற்காக பாவம் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்க முடியாது அல்லவா ?
3. இந்த சோஷியல் மீடியா, தொலைக்காட்சிகள் வந்த பிறகு உறவுக்குள் பேச்சுவார்த்தைகள் குறைந்துவிட்டதா? எல்லோரும் மீடியாவில் மூழ்கிவிட்டார்களா?
# மொபைல் கைபேசி வந்த பின், நிச்சயம் குறைந்து விட்டது.
4. மனித மனம் ஏன் தன்னுடைய வயதை ஒத்துக்கொள்ளாமல், இன்னமும் பிறர் அண்ணன், அக்கா, மாமா என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகிறது? எனக்கு வயதாகவில்லை என்று சொல்லத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள்.
# அப்படி விரும்புகிறார்களா என்ன ? நான் என் வயது பற்றி பெருமைப் படும் ஆள். அதுவும் சரியல்ல என்பது புரிந்தாலும் ...
5. கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் உண்டா? நீங்களாகச் செல்வீர்களா அல்லது வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்துக்காகச் செல்வது உண்டா?
# வழக்கம் உண்டு. நானாக செல்வது மட்டுமில்லாமல் இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு செல்வது இன்னும் அதிகம் பிடிக்கும்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 'பராசக்தி' என்று ஒரு படம் வரப்போகிறது. உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?
& இந்தி எதிர்ப்புப் போராட்டம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பரவிய 1965 கால கட்டத்தில் என்னுடைய சிறிய அண்ணன்தான் எஸ் எஸ் எல் சி படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் இ எ போராட்டத்தில் கொஞ்சம் பங்குகொண்டார் என்று ஞாபகம்
நான் ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் படித்த காலத்தில், (1965/66) பாலிடெக்னிக் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொண்டு ஊர்வலமாக சென்றார்கள். (குள்ளன் சாஸ்திரி - ஒழிக என்பது போன்ற கோஷம் எழுப்பிய ஞாபகம்) பாலிடெக்னிக் அருகே ஊர்வலம் சென்றவுடன் பாலிடெக்னிக் & ஜே டி எஸ் ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோ லீவு என்று அறிவித்தார்கள். போராட்டம் வெற்றி என்று சொல்லி எல்லோரும் வீடு திரும்பினோம்.
சின்ன வயதில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வல கார்களிலும், கல்யாணத்தில் மணமக்களை உட்கார வைக்கும் ஊஞ்சலிலும் அடித்து,பிடித்து இடம் பிடித்ததுண்டா?
# இல்லை. காரணம் என் இளவயதில் கார் ஊர்வலத் திருமணம் அபூர்வத்திலும் அபூர்வம். என் பதினெட்டு வயது சமயத்தில்தான் உறவுக் கல்யாணத்தில் கார் ஊர்வலம் நடந்தது. காரே கிடைக்காமல் இரவு 9க்கு மேல் ஜானவாசம் .
நான் முதலில் காரில் பயணித்தது என் இருபது வயதில்.
கே. சக்ரபாணி சென்னை:
இவ்வளவு வருடங்களாக தங்கத்தை பேங்க்கில் வைத்து லோன் வாங்கியிருந்தார்கள். ஆனால் இனிமேல் தங்கம் வாங்குவதற்கே லோன் வாங்கவேண்டும் போலிருக்கிறதே!
# கருக்காத பித்தளை என்ற பெருமைக்குரிய தங்கம் இவ்வளவு விலை உயர்வது ஒரு சுவாரசியம்.
கருப்புப் பணம் தங்கமாக சேமிக்கப் படுகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.
= = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
சமீபத்தில் மதுரையில் ஹோட்டல் சபரீஷில் ஐந்து வகை ஊத்தப்பம் வாங்கிச் சாப்பிட்டேன். அவர்களிடம் ஏழுவகை ஊத்தப்பம் என்றொரு ஐட்டம் இருக்கிறது, ராகி மற்றும் மில்லட் ஊத்தப்பம் என்று நினைவு. அப்போது மாவு தயாராக இருந்திருக்கவில்லை. ஐந்து ஊத்தப்பத்தில் கேரட், கீரை, பொடி, ஆனியன் மற்றும் இன்னொரு வகையும் இருந்திருக்கும். நான் இரண்டு ஆனியன் ஊத்தப்பமாக இருக்கட்டும் என்று கேட்டதால் இப்படித் தந்தார்கள். விலை அதிகமில்லை (முருகன் இட்லியில் ஒரு ஆனியன் ஊத்தப்பமே 155 ரூபாய்). ஆனியன் என்றால் சிறிய வெங்காயமே உபயோகிக்கின்றனர். நான் இட்லி மி.பொடி வாங்கிக்கொண்டேன். அவ்வளவு ருசியாக இருந்தது.
நெல்லையில் தங்கியிருந்த ஹோட்டலில் பஃப்ஃபே முறையிலான காலை உணவு. ஹோட்டலிலேயே செய்வதால், தினமும் நெல்லை புகழ் அல்வாவையே இனிப்புக்கு வைத்திருந்தார்கள். (எப்படித்தான் கட்டுப்படியாகின்றதோ). நான் (ங்கள்) ஒவ்வொரு முறையும் பல அல்வாத் துண்டுகளை எடுத்துக்கொண்டோம் (எண்ணிக்கையைச் சொல்லி, எதற்கு வயிற்றுவலியை வாங்குவானேன்). ரொம்ப ருசியாக இருந்தது. நெல்லையில் சுவையான அல்வா, பல கடைகளில் கிடைக்கும். அதிகபட்சம் கிலோ 400 ரூபாய்.
= = = = = =
உங்களுக்கெல்லாம் மகாபாரத யுத்தம் நடந்தது குருக்ஷேத்திரத்தில் என்பது தெரிந்திருக்கும். அது சுமார் 20 மைல் சுற்றளவுள்ள பகுதி. மஹாபாரதம் குறிப்பிடும் அத்தகைய பெரிய சேனைகள் யுத்தம் புரிந்த இடம் என்பதால் மிகப் பெரிய பரப்பளவுள்ள இடம். நான் துரியோதனன் ஒளிந்திருந்த மடு, அபிமன்யூ சக்ரவியூகத்தில் மாண்ட இடம் என்று பல இடங்களுக்குச் சென்றேன். அதில் ஒன்று மேலே உள்ள, கர்ணன் தேர் அழுந்திய இடமும் ஒன்று. இந்த இடமே பல ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கிறது, தொல்லியல் துறை வசம் இருக்கிறது. இங்கு நடந்துசென்று, கர்ணன் தேர் அழுந்தியதாகக் கருதப்படும் இடம், அருகிலிருந்த கிணறு போன்ற பகுதிகளைப் பார்த்தேன். இதுபற்றி ஒரு தொடரில் எழுதுவேன் என்றாலும், புதனில் ஓரிரு படங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.
இந்த இடத்திற்கு நான் சென்றதே கொஞ்சம் அதிசயம்தான். ஆறு பேர்கள் கொண்ட குழுவாக ஆட்டோக்களில் எங்களை வேறு பல இடங்களுக்கு அனுப்பினார்கள் (கீதா உபதேசம், பீஷ்மர் அம்புப்படுக்கை, பாலாஜி கோயில் என்றெல்லாம்). எங்கள் ஆட்டோ கடைசியாக வந்துகொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக்கொடுத்து, பல்வேறு இடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, கர்ணன் தேர் அழுந்திய இடம் நான்கு கிமீ தூரத்தில்தான் இருக்கிறது, போய் வருவதற்கு 500 ரூபாய் அதிகம் ஆகும் என்றார். உடனே எல்லோரும் சம்மதித்து அங்கு சென்று பார்த்து படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். எங்கள் ஆறு பேருக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு கிடைத்தது. (என் மனைவி உடம்பு சரியில்லாததால் அன்று அறையிலேயே தங்கிவிட்டார்)
தேர் அழுந்திய பகுதி (இங்குதான் கர்ணன் இறந்தான்)
= = = = = = = =
KGG பக்கம்.
முன்பெல்லாம் (1970, 71 etc ) டிசம்பர் / ஜனவரி மாத காலங்களில், சென்னை விழாக்கோலம் பூண்டிருக்கும்.
1) கர்நாடக சங்கீத இசை விழாக்கள்.
நேத்திக்கி அகாடெமில சந்தானம் பாடினார் பாருகோ ஒரு மோகனம் - அடடா பிச்சு ஒதறிட்டார்!
" என்னவோ இந்த ரவி ரகு மாலி போல ஃப்ளூட் வாசிக்கிறாங்க என்று சொல்லறாங்க.. ஆனா இவங்க மாலியினுடைய பிணத்தின் நிழல் பக்கம் கூட நெருங்கமுடியாது " (என்னுடைய சித்தப்பா சொன்னது)
2) பொங்கல் டிரேட் ஃபேர் என்னும் பொங்கல் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சி.
" டேய் ஏதுடா இந்த ட்ரான்சிஸ்டர் ரேடியோ ?"
" பொங்கல் டிரேட் ஃபேர் கடையில வாங்கினேன் "
" டிரேட் ஃபேர் கடையில் மட்டும் எப்பிடிடா இவ்வளவு பெரிய அப்பளம் பொரிச்சு விக்கிறாங்க ?"
" டெல்லி அப்பளமாம். மேலே ஏதோ காரப்பொடி தூவி தருகிறார்கள்! டேஸ்ட் சூப்பர் !"
3) பொங்கல் சீசனில் நிச்சயம் ஒரு சர்வ தேச கிரிக்கட் - 5 நாள் போட்டி நடைபெறும்.
" என்ன இருந்தாலும் ஃப்ராங்க் வோரல் போல ஷாட் அடிக்க ஒரு ஆள் பிறந்து வரணும். "
" அதெல்லாம் நம்ம என்ஜினீயர் கிட்ட நடக்காது. ஒரே விநாடியில stumping பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவான் ! "
" ஐயோ சர் தேசாய் விளையாட வந்துட்டான்டா ரன் எடுக்காம டொக்கு வெச்சிக்கிட்டே இருப்பான்டா .."
4) காணும் பொங்கல் அன்று நகரப் பேருந்துகளில் இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு (விடுமுறைப் பயண) டிக்கெட் வாங்கிக்கொண்டுவிட்டால் அதை அன்று முழுவதும் நகரப் பேருந்துகளில் அந்த பயணச் சீட்டைக் காட்டி எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
காணும் பொங்கல் அன்றைக்கு மியூசியம் (சென்னை நகர slang பாஷையில் செத்த காலேஜ் !) அல்லது ஜூ (சென்னை நகர slang பாஷையில் உயிர் காலேஜ் !) பக்கம் போனோம் என்றால் நம்மால் எதையும் உருப்படியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது. பாமர மக்களின் கூட்டத்தில் நம்மை அவர்களே பிழிந்து தூக்கிக் கொண்டுபோய் எங்காவது மூலையில் ஒதுக்கிவிடுவார்கள்!
ஆக, மார்கழி மாதம் முழவதையும் உற்சாகமாக கழிக்கலாம்!
இப்போது அப்படி எந்தக் கொண்டாட்டங்களும் இரசிக்கும்படியாக இல்லை என்று நினைக்கிறேன்.
= = = = = = = = = = =

இனிய பொங்கல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி. உங்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்கு//உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. பள்ளிக்கூட காலத்ல ஹிந்தி படிச்சேன்- ப்ரவீண் வரை. உண்மையை சொல்லணுமானா, படிக்காட்டி எங்கப்பா விட்டிருக்க மாட்டார். :-)
பதிலளிநீக்குஹிந்தி டீச்சர் மேஜையில் ரமண பகவான் ஃபோட்டோ இருக்கும். அப்டிதான் அவர் அருள் வலையில மாட்டினேன். ஆனால் அந்த டீச்சரிடம் ஒரு முறை கூட பாடம் தவிர்த்த எதுவும் பேச அனுமதியில்லை!! ரொம்பவே முசுடு :-)
கருத்துரைக்கு நன்றி.
நீக்குடீச்சருக்கு அப்போ என்ன வயசு என்று சொல்லவில்லை நீங்கள். ஏனென்றால் என் அத்யாபக் என்னை விட இளையவர். துரதிருஷ்டவசமாக அல்லது அதிருஷ்டவசமாக ஆண்!
நீக்குஎன் அம்மாவைவிட மூத்த பெண்மணி! :-)
நீக்கு///உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. // கீதா ரெங்கன் ப்ளீஸ் நோட். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது பிறந்து விட்ட உங்களுக்கு அப்போது பிறக்கவே பிறக்காத திருவாழ்மார்பன் தம்பி. அவரை தம்பி அல்லது அம்பி என்று அழையுங்கள்.
நீக்கு///உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?// பொறக்கலீங்கோ. // கீதா ரெங்கன் ப்ளீஸ் நோட். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது பிறந்து விட்ட உங்களுக்கு அப்போது பிறக்கவே பிறக்காத திருவாழ்மார்பன் தம்பி. அவரை தம்பி அல்லது அம்பி என்று அழையுங்கள். ;))
நீக்குநாராயண நாராயண !!
நீக்குஅது ஹிந்தி எதிர்ப்பு போராட்டமல்ல.
நீக்குஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.
//சட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, பல வருடங்கள் கழித்து அவர்கள் குற்றவாளி அல்லர் என்று தெரிந்தால், அதற்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? வைத்திருக்கவேண்டும்? // அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்களுக்கு கேஸ் போட்டு பென்னம்பெரும்பாலும் ஜெயித்து விடுவார்கள்! என்னைப்பொறுத்தவரை அதுதான் சரியும் கூட.
பதிலளிநீக்குச்சே! நாம எல்லாம் அமெரிக்கால பொறந்திருக்கணும்!
நீக்குஜனநாயகத்தில் புறம்போக்குகள்தான் அதிகம். அதாவது புறத்தால் பேசும் பேச்சுகளும், புறத்தாலேயே சென்று விடும் பணமும்!
நீக்கு:)))
நீக்கு//பாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் உண்டா? // ஐயோ பாவம்! ;-)
பதிலளிநீக்கு:)))
நீக்குபதிவுத் தலைப்பு எதிர்மறையாக இல்லாமல் 'பாவம் பார்க்காமல் வருத்தப்பட்ட தருணங்கள் உண்டா?' என்றிருந்தால் தன்னைத் தான் உணர்ந்து வருந்துகின்ற உன்னதமாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி என்று சப்பையாக பதிலளிக்காமல் உணர்வு பூர்வமாக உங்கள் அனுபவத்தில் உணர்வாக நான்கு வரிகள் எழுதவும். இது எபி வாசகனின் அன்பான வேண்டுகோள்.
நீக்குநெ த கேட்ட கேள்வி தலைப்பாக உள்ளது. எங்கள் தலைப்பு அல்ல. கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅறிவேன். அதைத் தலைப்பாக்கியவர்கள் என் கருத்தை உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடாதா என்ன?
நீக்குஹிஹிஹி ஜீவி ஸார்... பூவ பூவுன்னும் சொல்லலாம், புயிப்பம்னும் சொல்லலாம்.. அல்லது நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்!
நீக்குஜீவி சார்... இப்போ தோணுது உங்கள் கருத்துப்படியே கேள்வி கேட்டிருக்கலாமோ என.
நீக்குஎனக்கு, பாவம் பார்க்காமல் பிறகு வருத்தப்பட்ட தருணங்கள் நிறையவே உண்டு. வீட்டில் அந்த மாதிரி சமயங்கள் வாய்க்கும்போது, வீட்டுத் தலைவன் என்ற கூடுதல் பொறுப்பினால் பாவம் பார்க்காமல் விட்டுவிடுவேன், பிறகு அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று கருதி
மனத்தில் இருப்பதை எந்த நேரத்தும் மறைக்காமல் சொல்லும் நெல்லையின் குணம் போற்றுதற்குரியது.
நீக்குநெல்லை! ஒரு மரக்கட்டையைப் பார்ர்த்தாலும் இதை என்ன செய்யலாம்ன்னு தச்சனுக்குத் தோணுமாம். அதே கதை தான். இப்படி மாற்றி நான் சொன்னதை ஒரு கதையாக்கணும்ன்னு உத்வேகம் என்னில் இப்பொழுது கிளர்ந்திருக்கிறது.
நீக்குவிரைவில் செவ்வாயில் எதிர்பார்க்கலாமா ஜீவி சார்? நீங்க முன்னால் எழுதின கதைகளையும் இங்க பகிரலாமே.
நீக்குபோதை என்ற வார்த்தையைப் பார்த்து டாஸ்மாக் நோக்கி நடக்கும் மக்கள்தாம் தமிழகத்தில் அதிகம். அதிலும் இப்போதுதான் 3000 கிடைச்சிருக்கும். இதில் போதை ஒழித்து என்ற வார்த்தைகளைப் படிக்கும் பொறுமை இருக்குமா?
பதிலளிநீக்கு:)))) + :(((((
நீக்குஅவர்கள் ஏன் இங்கு வந்து இதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் நெல்லை!!
நீக்குகமுகு (பாக்கு) மரங்கள் படம் ஒன்றையும் தோற்றவில்லை.
பதிலளிநீக்குசிறு வயதில் ஒரு பொங்கலுக்கு காட்டு பாளையம் என்ற கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததும், கொண்டாடியதும் ஞாபகத்தில் வருகிறது.
தண்டிக்கப்படாவிட்டாலும் தவறுதலான கைதுக்கு எதிராகப் பல வருடங்கள் போராடி 50 லக்ஷம் இழப்பீடு வாங்கினார் நம்பி நாராயணன்.
Jayakumar
எனக்கும் அவர் ஞாபகம் வந்தது. அது மாதவன் நடித்து படமாகவும் வந்தது.
நீக்குஅந்தப்படம் நன்றாகவே இருந்தது. மாதவன் நடிப்பும் ஓகே! ஸ்ரீரங்கத்தில் பார்த்தேன். பிஎஸ் என் எல்லில் இணையம் இணைப்புக்காகக் கொடுத்த இலவச இணைப்பு மூலம் சில/பல படங்கள் பார்த்திருக்கேன். அதில் இதுவும் ஒன்று. "துரந்தர்" படம் பார்த்துட்டீங்களா? இங்கே பார்க்கலாமா என்னனு தெரியலை. மகன், மருமகள் பார்த்ததாகவும் தெரியலை. இரண்டு நாட்கள் முன்னால் "அரண்மனை" படம் பார்த்தாங்க. எத்தனாவது "அரண்மனை"னு தெரியலை. ஒரு சில படங்களை மருமகள் இங்கெல்லாம் பார்க்காதீங்கனு சொல்லிடுவா!
நீக்குபொங்கல் திருநாள் என்றதும் மூன்றாம் வகுப்பு படித்த சமயத்தில் பரமக்குடியில் அப்பாவுடன் சந்தைக்குச் சென்று நானும் சகோதரனும் கரும்பைத் தூக்கி வந்த நினைவு வருகிறது..
பதிலளிநீக்குமற்றபடி பொங்கல் என்றதும் வேறு நினைவுகள் இல்லை. பெங்களூர் வந்த பிறகு, போகி, பொங்கல் அன்று மாத்திரமே மஞ்சக் குலை கிடைக்கும் என்பதால் மறக்காமல் வாங்கி வந்துவிட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு மாத்திரம் மனதில் இருக்கும். தபிழர்கள் மாத்திரமே இந்தப் பழக்கம் கொண்டுள்ளதால் அதற்குப் பிறகு பசுமஞ்சள் மாத்திரமே கிடைக்கும், இலை நஹி
எங்களுக்கு பொங்கல் என்றதும் அம்மா செய்யும் பொங்கல், அதைவிட ஏழு தான் கூட்டு.. இதையெல்லாம் விட பொங்கல் வாழ்த்து அட்டைகள்.. யார் யார் அனுப்பி இருக்கிறார்கள், என்னென்ன படங்கள் வந்திருக்கின்றன .. அதை வாங்குவதும் அனுப்புவதும் ஒரு திருவிழா போல ஊர் முழுவதும் நடக்கும். என் முதல் காதலிக்கு ( இது அவளுக்கு தெரியாது) பெயர் போடாமல் பொங்கல் வாழ்த்து அனுப்பினேன். ( தெரிந்திருந்தால் பெயர் போட்டே அனுப்பி இருப்பேனே!!)
நீக்குநல்ல ஐடியா சாரே! secret admirer! உங்களுக்கு மகிழ்ச்சி; அன்னாரும் மகிழ்ந்திருக்கக்கூடும். இரண்டாம் மூன்றாம் காதலிக்கு என்னென்ன அனுப்பினீர்கள் என்பதையும் இப்போதோ அல்லது இன்னொரு கதையாகவோ தெரியப்படுத்தவும். :-)
நீக்கு:))))
நீக்குஇன்னொரு கதையாக என்றால்? இது கதை என்கிறீர்களோ?!! அல்லது அந்த முதலாவது கதைதான் என்ன!!
நீக்குமூன்றாவது காதலி எதிர்பாராத விதமாக மனைவியாகி விட்டார்!
wow! Third time is the charm! I am happy for you, Sriramji!!
நீக்கு//இன்னொரு கதையாக என்றால்?// since you have written several stories already, in general.
நீக்குதங்கம் வாங்குவதற்கே..... உலக நாடுகள் மத்தியில் டாலர் மீதான நம்பகத் தன்மையும் அதனைக் கட்டுப்படுத்துபவர் மீதான நம்பகத் தன்மையும் குறைந்ததால், தங்கத்தை வாங்கி வைக்கறாங்க. அதுவே கடந்த பதினைந்து மாதங்களில் எண்பது சத்த்திற்கைம் அதிகமான விலையேற்றத்திற்குக் காரணம். வெள்ளியும் 80 ருபாயிலிருந்து 160-200 பக்கம் சென்றுவிட்டது.
பதிலளிநீக்குஇனி பஞ்சலோகச் சிலை என்றால் பஞ்சம் என்பதால் தங்கம் வெள்ளி இல்லாது செய்த சிலை என்றுதான் பொருள் கொள்ளணும் போலிருக்கு.
:((((
நீக்குபடத்தில் உள்ள தண்டுகளைப் பார்க்கும்போதெல்லாம் பல குடியிருப்பு வளாகங்களில் (எங்களதும் உட்பட) ஏகப்பட்ட அளவில் தென்னை/ஈச்சை இலை போன்று நிறைய இலைகளுடன் வளர்க்கும் குறு மரங்கள் நினைவுக்கு வருகிறது. நிழல் இல்லாமல் ஆனால் பச்சைப் பசேலென்று காட்சி கொடுக்கும் இவைகளினால் என்ன லாபம்?
பதிலளிநீக்குFocus is the bark of the trees squeezed in close space.
நீக்குஹிந்தி எதிர்ப்பு கால்த்தில் எனக்கு நாலு அல்லது ஐந்து வயதிருக்கும். இருந்தாலும் அப்போது நடந்த ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது. நான், என் கடைசி அக்கா, அம்மா, அப்பா நால்வரும் எதற்காகவோ திருச்சி மெயின்கார்ட்கேட் பகுதியில் இருக்கும் செயிண்ட் ஜோசஃப் சர்ச் வாசலில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது கல்லூரி, பள்ளி, மாணவர்கள் ஊர்வலமாக வந்து கொண்டே இருந்ததால் எங்களால் ரோடை க்ராஸ் பண்ண முடியவில்லை. அந்த மாணவர்கள் பேரணியில் என் மூத்த அக்காவும் சென்றார். அவர் எங்களை கவனிக்கவில்லை. என் அம்மா அக்காவை அழைத்ததை பார்த்த வேறு ஒரு பெண் அக்காவை கூப்பிட முயன்றார். அதற்குள் அவர்கள் தாண்டிச் சென்று விட்டார்கள்.
பதிலளிநீக்குஇந்தக் கேள்வியை எழுதி அனுப்பி விட்டு என் அக்காவிடம், இந்த சம்பவத்தை கூறி, "என்ன முழக்கமிட்டீர்கள்? எது வரை சென்றீர்கள்?" என்று கேட்டேன். அக்கா,"வேறு என்ன முழக்க்மிட்டிருப்போம்? ஹிந்தி ஒழிக என்றுதான்சொல்லியிருப்போம். அண்ணா சிலை வரை அப்போது அண்ணா சிலை கிடையாது, கரூர் டர்னிங்க் என்பார்கள், அதுவரை சென்று விட்டு திரும்பி விட்டோம்" என்றார்.
இதைத்தவிர ரயில் நிலையங்களில் தார் பூசி அழிக்கப்பட்ட ஹிந்தி பெயர் பலகைகளும் நினைவில் இருக்கின்றன. நான்கு வயதில் நடந்தது நினைவில் இருக்குமா? என்று கேட்காதீர்கள், எனக்கு இப்படி சில நினைவில் இருக்கின்றன.
அட பார்றா... உங்க அக்கா ஹிந்தி எதிர்ப்பு வீராங்கனையா? இப்போ நஷ்ட ஈடு எதுவும் வாங்க முடியாதா?!!
நீக்குஹஹாஹா! எல்லா மாணவ மாணவிகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். என் பெரிய அக்காவுக்கு முன்னால் ஹிந்தியிலும் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று இருந்ததாம்., என் அக்கா காலத்தில் பாசாக வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் படிக்க வேண்டும் என்றிருந்ததாம். படிக்கவே மாட்டோம் என்று போரடியிருக்கிறார்கள். நாம் தப்பித்தோம். ஆனால் அப்படி தப்பித்த நம் குழந்தைகளை சி.பி.எஸ்.ஸி. பள்ளியில் சேர்த்து, ஹிந்தி படிக்க வைத்தோம்.
நீக்குஅந்தக் காலத்தில் எங்கள் இந்தி எதிர்ப்பு ஸ்கூல் லீவுக்காக
நீக்குமட்டுமே.
எந்தக் காலத்திலும் அதுதான் நோக்கம்! நம்மால் (மாணவர்களால்) சரித்திரத்தைப் புரட்ட முடியுமா என்ன! கருணாநிதி ஆட்சியை எதிர்த்து எங்கள் பள்ளி நடத்திய போராட்டமும் அஃதே அஃதே
நீக்குசட்டத்தினால் தவறாக தண்டிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பதிலளிநீக்குயார், நாமெல்லாம் சேர்ந்தா? சனநாயக நாட்டிலே ஒரு வளக்கு போட்டா சென்ம சென்மமா இயுக்கும்.. நம்ம லொள்ளு பேரன்களுக்கு கூட கொஞ்சமாதான் நஷ்டஈடு கிடைக்கும். அதுவும் தேகந்தான்சந்!
நீக்கு:)))
நீக்கு//சனநாயக நாட்டிலே ஒரு வளக்கு போட்டா சென்ம சென்மமா இயுக்கும்.. // நம் நாட்டிலே ... என்று சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.ஜன நாயகம் என்று சொல்லக்காரணம் உண்டா?
நீக்குமக்கள்தான் நாயகர்கள் என்று பொருள் வரும் என்று நான் சொல்லவந்தால் நீங்கள் என்ன பதில் கொடுக்க நினைத்திருக்கிறீர்கள் என்று இப்பவே சொல்லி விடுங்களேன்..
நீக்குமற்ற எவ்வளவோ ஜன நாயக நாடுகளில் இதைவிட வேகமாக நடக்கிறதே, தவறு ஜன நாயக கொள்கையில் இல்லையே என்பதாக யோசித்தேன்.
நீக்குதிருநெல்வேலியில் மட்டும் அல்வா சிறப்பாக இருப்பதற்கு தாமிராரணி தண்ணீர் காரணமா?
பதிலளிநீக்குநெல்லை அல்வா வைத்து வெல்ல அல்வா. அல்வா என்றால் பாம்பே அல்வா தான். பிஸ்தாவும் நெய் ஒழுகலுமாய் அப்படி ஒரு டேஸ்ட். நாக்கைத் தடவி தொண்டைக்குழிக்குள் வழுக்கி.. சேட்ஜி கடைகளில் விழுங்கியதில்லையா என்ன? பாரீஸ் கார்னர் பக்கம் போனாலே பாம்பே அல்வா டேஸ்ட் ஆளை அசத்தும்.
நீக்குஅவர்கள் தாமிரவருணி தண்ணீர் ஒரு காரணம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். நான் பத்து அல்வாத் துண்டுகள் சாப்பிட்டிருந்தாலும் எடை கூடாத்தற்குக் காரணம் பல கோயில்களில் பிரகாரத்தில் நடந்த நடைதான்.
நீக்குஜீவி சார்.. பாம்பே அல்வா டேஸ்ட் கிடையாது. கராச்சி அல்வா என்ற ரப்பர் அல்வா அதன் இழுவைக்காகப் பிடிக்கும். இந்தத் தடவை நெல்லையில் அனேகமா எல்லாக் கடைகளிலும் குறைந்தது 200 கிராம் வாங்கிவந்து, சாப்பிட்டால் எடை அதிகரிக்கிறது என்று எல்லாவற்றையும் வீண் செய்தது நினைவுக்கு வருது.
நீக்குஜீவி ஸார்.. வழுக்கி இறங்கும் அல்வா பாம்பே பிஸ்தாவா... நீங்கள் மதுரை பிரேமவிலாஸ் அல்வா சாப்பிட்டு அறியாதவர்.. ஆஹா.. அது அல்வா... அதுதான் அல்வாவுக்கெல்லாம் பிஸ்தா..
நீக்குஅட! போகி ஸ்பெஷல் இன்று எங்கள் வீட்டு போளியை மறந்து விட்டு அலவாவது இன்னொண்ணாவது?....
நீக்குஆயிரம் சொல்லுங்கள்.. பண்டிகை, விசேஷம்ன்னா ஸ்மார்த்தர்களை அடிச்சிக்க ஆளில்லை. ஒவ்வொரு பண்டிகைக்கும் விதம்விதமா அடுக்ஜளை களைகட்டும் அழகு ஒன்றே போதும்.
ஆஹா!!
நீக்குநாங்களும் போளி, பாயசம், வடை, மோர்க்குழம்பு என்று ஜமாய்த்தோம். போளி ஆஹா.. ஓஹோ .. பேஷ் பேஷ்!
நீக்கு//இன்று எங்கள் வீட்டு போளியை மறந்து விட்டு// போகிக்கு போளி பாரம்பர்யம் என்று ஏன் ஜல்லி அடிக்கிறோம்? நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மைதா எங்க இருந்தது?
நீக்கு/சமீபத்தில் மதுரையில் ஹோட்டல் சபரீஷில் ஐந்து வகை ஊத்தப்பம் வாங்கிச் சாப்பிட்டேன்/
பதிலளிநீக்குஒன்றொன்றும் இவ்வளவு பெரியதாக இருக்கின்றதே! ஐந்தும் சாப்பிட முடிந்ததோ? ஆனியன் ஊத்தாப்பம் பார்ப்பதற்கே நாவில் எச்சில் ஊறுகின்றது.
எல்லாமே உள்ளங்கையைவிடச் சற்று பெரிது. விலை 140க்குள் என நினைவு. ஆஹா.. அருமையாக ருசித்தேன். அதற்காகவே, இன்னொரு முறை மதுரை செல்லும் திட்டமிருக்கிறது.
நீக்குநானும் அதே சபரீஷில் அண்ணன், அப்பாவுடன் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல ஹோட்டல் அது.
நீக்குஹோட்டல் சபரீஷ், மதுரை, குறித்து வைத்துக் கொள்கிறேன்.
நீக்குபா.வெ. மேடம். அங்கேயே தங்கினோம். அவங்க கடைகள் மூன்று இருக்கின்றன. பார்த்தால் சாதாரண கடைபோல அதில் ஒன்று இருக்கும். அதில் உணவு சுமார். மற்ற சபரீஷ்கள் சூப்பர். மதுரைல வேற எங்கயும் உணவு வெகு சுமார். கோபு ஐயங்கார் கடைல நான் நுழையும்போது ஒருவர், உணவு நல்லா இருக்கும், சுத்தம்தான் குறைவு என்றார். நான் அங்கு சாப்பிடலை
நீக்குதேர் அழுந்திய பகுதி (இங்குதான் கர்ணன் இறந்தான்)/
பதிலளிநீக்குஇதெல்லாம் இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறார்கள்?
இதெல்லாம் வழிவழி கடத்தப்படும் செய்திகள். ப்ராசீன், புராதானப் பகுதிகள். யுகம் மாறுவதால், வட இந்திய யாத்திரைகளில் இடத்துக்கு, அதாவது அந்த ஊர் மண்ணை மிதிப்பதுதான் முக்கியம், தற்போதுள்ள ப்ராசீன் இடங்களைவிட எனச் சொல்வர். தொல்லியல் துறையின் கணிப்புப்படி தற்போது உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியிலிருந்து 200 மீட்டர் தொலைவில்தான் ஜன்மஸ்தான் இருந்தது என்றும், அகழ்வாய்ந்தால் தெரியும் எனவும், அந்த இடம் முஸ்லீம் வசம் இருப்பதால் அதைச் செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுப் படித்த நினைவு.
நீக்கு//அந்த ஊர் மண்ணை மிதிப்பதுதான் முக்கியம்,// என் நண்பரின் குடும்பம் சென்ற ரயில் வண்டி ஜான்ஸியில் நின்றபோது அவர் அம்மா 'இது ஜான்ஸி ராணி ஊரல்லவா' என்று ரயில் நிலையத்திலேயே விழுந்து கும்பிட்டாராம்!
நீக்கு__/\___
நீக்கு//'இது ஜான்ஸி ராணி ஊரல்லவா' // ஆஹா... அவர் மணியாச்சிக்கும் வந்திருந்தால் அதேதான் செய்திருப்பார். நாடு பற்றிய உணர்வு நம்மில் ஊறியிருக்கணும்.
நீக்குஎன்னுடன் யாத்திரைக்கு வந்த ஒருவர், கோகுலம் செல்ல ரொம்பவே ஆசைப்பட்டார். அவர் சொன்னார், கோகுலம் போனால் அங்க விழுந்து புரளணும். கண்ணன் நடந்த மண் அல்லவா என்றார். அதற்காகவே அங்கு ஒரு பெரிய கோயில் மற்றும் புரள்வதற்காக ஒரு இடம் வைத்திருக்கிறார்கள். நான் சென்றிருந்தும், உடை அழுக்காகிடும் என்று உட்காரக்கூட இல்லை. இப்படி இருக்கு என் பக்தி.
ஜனவரியில் சென்னையில் நடக்கும் புத்தகத் திருவிழாவை மறந்தது ஏனோ? 70-71ல் அது கிடையாதா?
பதிலளிநீக்குஇந்த வருடம் நடப்பது 49 வது காட்சி. கனக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!
நீக்கு* ண
நீக்குநான் கணக்குல வீக். நீங்களே சொல்லிடுங்க.
நீக்குகொஞ்சம் இருங்க.. கால்குலேட்டரைக் காணோம்.. தேடி எடுத்தாறேன்!
நீக்கு2026-49 = 1977
நீக்குகொரோனா போன்ற காரணங்களால் சில ஆண்டுகள் நடக்காமல் போயிருக்கலாம் அல்லவா?
நீக்குச்ச்சே... பாஸ் கிட்ட சொல்லி மோர்க்குழம்பில் வெண்டைக்காய் போடச்சொல்லி சாப்பிட்டுவிட்டு கணக்கு போடலாம் என்று வந்தால்...
நீக்குபொங்கல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பண்டிகை. ஊருக்குச் சென்றபொழுது பெரிய திண்ணைகளுக்கு செம்மண் பட்டை, சுண்ணாம்பு பட்டை அடித்தது, மாடுகளுக்கு பூஜை செய்தது, கஸிங்களோடு போட்டி போட்டு கரும்பு தின்றது, அதனால் வாய் புண்ணானது, அம்மா, பாட்டி, அத்தைகள், மாமிகள், அவர்கள் குழந்தைகள், சகோதரிகள் என்று எல்லோரோடும் சேர்ந்து காக்காய் பிடி, கன்னு பிடி வைத்து, 'காக்கா கூட்டம் கலைந்தாலும் எங்க கூட்டம் கலையாமல் இருக்கணும்' என்று வேண்டிக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வரும். சென்னையில் இருந்தபோது அம்மா இருந்தவரை எல்லோரும் சேர்ந்துதான் கனுப்பிடி வைப்போம். அன்று அம்மா வீட்டில் சாப்பாடு. அம்மா வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு புக்ஃபேர் சென்றது என்று பல இனிமையான நினைவுகள்.
பதிலளிநீக்குஇனிய நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//எனக்கும் ஒரு சந்தேகம் பாட்னா என்ற பாடலிபுத்திரத்தில் இருந்து// கௌரவர்கள் ஆண்டது டில்லிதானே? பாட்னா என்பது கர்ணன் ஆண்ட அங்க தேசம். டில்லிக்கு அருகில்தானே ஹரியானா? அங்கேதானே குருக்ஷேத்திரம் இருக்கிறது. டில்லிக்கு அருகில் சமீபத்தில் பிரபலமான குர்காவுன் என்பது துரோணருக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட இடம் என்பார்கள் குருவின் கிராமம் என்பதுதான் குர்காவுன்..
நீக்குபானுக்கா, ஜெ கே அண்ணா எனக்கும் இந்த டவுட் வரும். பானுக்கா சொன்னதுதான் நான் அறிந்ததும்.
நீக்குஉத்தர்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் தற்போதைய குருகிராமத்தில் இருப்பவர்ககள் இதைத்தான் சொன்னார்கள். அவர்கள் பராசரர் வழி வந்தவர்கள்.
நம்ம வெங்கட்ஜி கூட கௌரவர், பாண்டவர் ஆண்ட இடம் என்று ஹஸ்தினாபுரம் மேப் கொடுத்த நினைவு. அவர் சுற்றுலா சென்ற பதிவில் கொடுத்திருந்த நினைவு.
உத்தர்பிரதேசத்தில் இப்போதைய மீரட்.
பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் இப்போதைய தில்லி.
குரு வம்சம் அரசாண்ட பகுதி என்று ஹரியானா, தில்லி, உத்தர்பிரதேசம். என்று வரும்.
கீதா
டில்லியை இந்திரப்பிரஸ்தம் (பாண்டவர் தலைநகரம்) என்று கூறுவார்கள். ப்ரயாக்ராஜ் போன்று பெயர் மாற்ற நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.
நீக்குJayakumar
பெயர் மாற்றங்களை நாம் வரவேற்கணும். பாரத்த்தின் தொன்மையான பெயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பெயர் மாற்றம் பெற்றது. ட்ரிவேண்ட்ரம் என்பதையே திருவனந்தபுரம் எனப் பெயர் மாற்றினரே
நீக்குஏன் பாண்டவர்கள் தலை நகர் என்றால் பிடிக்கவில்லையாக்கும்?பாண்டவர்களுக்கு மாற்று கெளரவர்கள் தான் என்று... எதைத் தான் மாற்றாமல் இவர்கள் விட்டார்கள்?..
நீக்குகெளரவம் பிடிக்கவில்லை உங்களுக்கு...!!!
நீக்குபாண்டவர்கள் பக்கம் தானே கண்ணன் இருந்தார்?
நீக்குஆக நாமும் பாண்டவர் பக்கம் தான்.
நானும் குருஷேத்திரம் சென்றிருக்கிறேன். ஆனால் கர்ணன் தே அழுந்திய இடம் எல்லாம் பார்க்கவில்லையே ;((
பதிலளிநீக்குகுருஷேத்திரத்தில் துரியோதன்ன் மறைந்துகொண்ட மடு, சக்ரவியூகம் எனப் பலப் பல இடங்கள் உள்ளன. ஜனமேஜயன் சர்ப்ப யாகம் செய்த இடமும் சிறிது தொலைவில் உள்ளது. பல இடங்களுக்கு யாத்திரைக்கைக் கூட்டிச் செல்வதில்லை. எனக்கு அந்த இடங்களைக் காணும் வாய்ப்பு ஒரு யாத்திரையில் கிடைத்தமு. இத்தனைக்கும் பல யாத்திரைகளின்போது குருஷேத்திரம் சென்றிருக்கிறேன்.
நீக்குமடுவில் மனிதன் மறைந்து கொள்ள முடியுமா? மறைபொருள் மாற்றுப்பொருள் ஏதும் இருக்குமோ?!
நீக்குதுரத்தும்போது மடுவுக்குள் சிறிது நேரம் மூச்சுவிடாமல் இருக்கமுடியாதா? மூச்சு எடுப்பதற்கு மாத்திரம் டக் என்று தலையை வெளியில் நீட்டி பிறகு தண்ணீருக்குள் அமிழ்ந்து..இப்படித்தான் புரிந்துகொள்ளணும்.
நீக்குகௌ அண்ணே, இங்க யாரும் 'போதை' யில் கிடையாதே!!!! ஹிஹிஹி...டிவி போதையும் நம் மக்களுக்குக் கிடையாது....ஓ ஊருக்குச் சொல்றீங்களா!!!
பதிலளிநீக்குவா ...தை! ஒரு மாதம்தான் நீ இருப்பாய்...அப்புறம் போ....தை அடுத்தவருடம் வா தை!
கீதா
:)))
நீக்குபோதைக்குப்பின் வாதைதான் ;-)
நீக்குபொங்கல் என்றாலே, பால் பொங்கும் பருவம்!!!
பதிலளிநீக்குஊரில் ரசித்தது போன்று அதன் பின் எங்கும் இல்லை.
கௌ அண்ணா நீங்க போட்டிருக்கும் படம் கரும்பு போல இருந்தாலும் அது கரும்பல்ல...மூங்கில் வகை, இலையோடு போட்டிருந்தீங்கனா என்ன வகைன்னு சொல்லியிருக்க முடியும்.
கீதா
// பொங்கல் என்றாலே, பால் பொங்கும் பருவம்!!!//
நீக்குஅட.. அந்தப் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும் என்றால் வெள்ளியன்று பகிவீர்களா என்ன?
நீக்குரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம். அந்தப் பாட்டு!
நீக்குநான் வீட்டில் பொங்கலுக்குப் பால் கொஞ்சம் வைத்து பொங்கும் போது பொங்கலோ பொங்கல் சொல்வேனோ இல்லையோ இந்தப் பாட்டைப் பாடிப்புடுவேன்!!!!
கீதா
:)))
நீக்கு//பால் பொங்கும் பருவம்// youthful ebullience!! அருமையோ அருமை. இப்பதான் கவனிக்கிறேன். 'கிளரொளி இளமை' எனும் ஆழ்வார் வரியோட போட்டி போடுது!! இது கண்ணதாசன் வரியா அல்லது பல வருஷமா பொது புழக்கத்தில் இருந்த ஒன்றா?
நீக்கு//நான் வீட்டில் பொங்கலுக்குப் பால் கொஞ்சம் வைத்து பொங்கும் போது பொங்கலோ பொங்கல் சொல்வேனோ இல்லையோ இந்தப் பாட்டைப் பாடிப்புடுவேன்!!!!// ஹா ஹா, நாச்சியாரே! பொங்கலுக்கும் சினிமா பாட்டு!
நீக்குஇந்த வரிகள் கண்ணதாசன். அதாவது பால் பொங்கும் பருவம். குன்னக்குடி இசை! கண்ணதாசன் குறளிலிருந்தும் பாசுரங்களிலிருந்தும் வரிகள் எடுத்து புழக்கத்தில் விட்டு பழக்கப்படுத்தியவர்தானே...
நீக்குசட்டத்தினால் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, //
பதிலளிநீக்குகண்டிப்பாக நியாயம் கொடுக்க வேண்டும்.....பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் அவர்கள் மீது தவறு இல்லை என்று தேசிய அளவில் அறிவித்துச் லீகல் அத்தாட்சியும் கொடுக்க வேண்டும். லீகலாக compensation கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் குற்றவாளி (குற்றம் பொறுத்து) என்று முத்திரை கொடுக்கப்பட்டால் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கூடச் செல்ல முடியாது.
கீதா
வேண்டுமென்றே ஒருவர் பெயரை கெடுக்கும் வேலைகள்தான் பிரதானமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா என்ன!
நீக்குஸ்ரீராம் சாத்தியமோ இல்லையோ....இதெல்லாம் நம் மனசுல நினைச்சேனும் சந்தோஷப்படுவோமேன்னுதான்...கொஞ்சம் வீர வசனம் பேசி....சினிமால இப்படியான வீர வசனங்களை, கதைகளில் வீர வசனங்களை ரசிப்பது போல!!!! அப்படி வைச்சுக்கலாம்!
நீக்குகீதா
நீதிபதிகள் அரசாங்க சம்பளம் பெறுவதால், மக்களுக்கு சாதகமாக பெருந்தொகையை நஷ்ட ஈடாக பரிந்துரைக்க மாட்டார்கள். ஜூரி முறையில் உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்கள் தீர்மானிப்பதால், அத்தனை வருடங்களை களவாடிய முகமற்ற அரசாங்கத்தின் மீதுள்ள கோபமும், சக குடிமகன் மீதான அனுதாபமும், பெருந்தொகையை தீர்ப்பளிக்க முன்வரும் என்று நினைக்கிறேன்.
நீக்கு//பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் அவர்கள் மீது தவறு இல்லை என்று// என்னைக்கேட்டால், அதைவைத்து புலனாய்வுக் கட்டுரைகள், யூடியூப் காணொளிகள் வெளியிட்டவர்களைத் தூக்கில் போடலாம். என்ன சொல்றீங்க?
நீக்குபாவம் பார்த்து ஏமாந்த தருணங்கள் நிறைய. நல்லது செய்யப் போக....அதனால் இப்போது வரையிலும் கூட சில கஷ்டங்கள் தொடர்கின்றன.
பதிலளிநீக்குகீதா
பாவம் என்பதை sin என்று கொண்டால்?
நீக்குஹாஹாஹா....சரியா புடிச்சீங்க, ஸ்ரீராம்
நீக்குபாவம் னாலே எனக்கு உடனே பாவப்பட்ட மக்கள்ன்னுதான் நினைவுக்கு வந்தது!!
உங்க பாயின்டுக்கே வரேன்....ஹையோ அப்படிச் செய்வது'பாவம்' (sin)இல்லையோ என்று நினைத்து அப்புறம் அதற்கான பின்புலம் பார்த்து ஏமாந்து தப்பா ஜட்ஜ் பண்ணிவிட்டோமே என்று பரிதாபப்பட்டதும் உண்டு.
கீதா
3. நம் வீட்டில் இதுவரை அப்படி இல்லை.
பதிலளிநீக்கு4. ஹாஹஹாஹாஹா இது என்னைத்தானே சொல்றீங்க நெல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
இல்லை கீதா ரங்கன். மனித மனம் அப்படித்தான் சொல்ல ஆசைப்படுகிறது, அனேகமா எல்லோரும்.
நீக்குசின்ன வயதில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வல கார்களிலும், கல்யாணத்தில் மணமக்களை உட்கார வைக்கும் ஊஞ்சலிலும் அடித்து,பிடித்து இடம் பிடித்ததுண்டா?//
பதிலளிநீக்குஎன் அத்தையின் கல்யாணத்தில் அடித்துப் பிடிக்காமலேயே கிடைத்தது! ரொம்பச்செல்லமாக்கும்! என் அத்தைகள் இருவருக்குமே!
வேறு எந்தக் கல்யாணத்திலும் அப்படி அமர்ந்த நினைவில்லை.
கீதா
நானும் முயற்சித்திருக்கிறேன். ரோட்ல வேடிக்கை பார்க்கறவங்க எல்லாம் கார்ல ஏறக்கூடாதுன்னு ஓரமா அனுப்பிட்டாங்க..
நீக்குஅச்சச்சோ! அப்படியா? கருணையே இல்லாதவங்களா? ஏம்பா...சின்னப் பிள்ளை ஆசைப்படுதுன்னு ஏத்திவிட்டிருக்கலாம் இல்லையா?
நீக்குகீதா
//நானும் முயற்சித்திருக்கிறேன். ரோட்ல வேடிக்கை பார்க்கறவங்க எல்லாம் கார்ல ஏறக்கூடாதுன்னு ஓரமா அனுப்பிட்டாங்க.. // hehehehehehe
நீக்குஊத்தப்பம் ஆஹா! ஆனால் நம்பர் பயமுறுத்துகிறதே! எனக்குச் சொன்னேன்!
பதிலளிநீக்குநானும் வீட்டில் சிறிய வெங்காயம்தான் பெரும்பாலும் ஊத்தப்பத்திற்கு. கீரையும் போட்டுச் செய்வதுண்டு...பொடி...தக்காளி..காய் என்று
கீதா
அல்வா அதுவும் நெல்லை அல்வா இழுக்கிறது ஆனால் படத்தை மட்டும் பார்த்துவிட்டு...ச்சீ இது நல்லால்லைனு சொல்லிட்டுப் போய்விடுகிறேன்!!!
பதிலளிநீக்குகீதா
சும்மா சொல்லலை. நெல்லைல சாப்பிட்ட எல்லா அல்வாக்களிலும் அதுதான் சூப்பரோ சூப்பர். தினமும் காலை உணவுக்கு அது டிரேயில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தனியாக வாங்கவில்லை.
நீக்குநெல்லை, குருஷேத்திரம் படங்கள் எல்லாம் சூப்பர்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன். பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் பகிர்ந்தேன்.
நீக்குகௌ அண்ணா பகுதி ரசித்தேன்.
பதிலளிநீக்குநான் சென்னையில் இருந்த வரை அதுவும் மகன் அங்கு இருந்தவரை இருவரும் பல கச்சேரிகள் சென்று வந்ததுண்டு, தங்கமயமான வருடங்கள்!
பொங்கல் டிரேட் ஃபேர், புத்தகக் காட்சி என்று மகிழ்ந்த நாட்கள்,
கீதா
பாராட்டுக்கு நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா
நீக்குபோகி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு/// ஜனநாயகத்தில் புறம்போக்குகள்தான் அதிகம்.///
பதிலளிநீக்குவணிகத்தினுள் தர்மம் கிடையாது..
///உங்கள் மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?//
பதிலளிநீக்குபோராட்டம் கல்லெறிதல் இவற்றை வேடிக்கை பார்த்திருக்கின்றேன்...
அப்போது இரண்டாம் வகுப்பு
தப்பித்துவிட்டீர்கள் !!
நீக்குகுருஷேத்திரம் பற்றிய பகுதி அடுத்ததா!...
பதிலளிநீக்குஇந்தி அரக்கி என்றொரு படம் வரைந்து
பதிலளிநீக்குகாட்டினார்கள்...
:)) நான் கூட இந்தி அரக்கி படம் சுவரிலும் வீதியிலும் பார்த்தேன்.
நீக்குஅனைவருக்கும் இனிய போகி மற்றும்
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துகள்
கே. சக்ரபாணி
அனைவர் சார்பிலும் நன்றி.
நீக்குபாவம்"" பொருள் மாறித் தொனிப்பதால் இரக்கம் காட்டி ஏமாந்த தருணங்கள் வாழ்க்கை பூராவும் உண்டு. அதிலும் நம்மிடம் உதவி வாங்கும்வரையிலும் ரொம்பவே அமைதியா இருந்துட்டுக் காரியம் முடிஞ்சதும் அவங்க சொரூபத்தைக் காட்டுவாங்க. :( இப்போக் கூட ரங்க்ஸுக்கு உடம்பு முடியாத தருணத்தில் கூட அப்படி நிகழ்ந்தது. நாம ரொம்பவே இ.வா. போல இருக்குனு நினைச்சுண்டேன். :(
பதிலளிநீக்குவிதி வலியது.
நீக்குபொங்கல்னதும் நிறையவே நினைவலைகள். தலைப்பொங்கலுக்குக் கருவிலி போகும்போது நான் அலுவலகத்திலிருந்து நேரே எழும்பூர் வந்துட்டேன். மத்தியானம் சின்ன டப்பாவில் கொண்டு போன மோர் சாதம் தான். எழும்பூரில் இரவு உணவைச் சாப்பிடலாம்னு நினைச்சிருந்தோம். அவர் வீட்டிலிருந்து எழும்பூர் வந்ததும் ரயிலடியில் இருந்த உணவகம் போகலாம்னா ஏகப்பட்ட வரிசை! நல்லவேளையாக டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனாலும் எங்கள் கம்பார்ட்மென்டில் ஏற முடியாமல் போர்ட்டரிடம் சொல்லி இடம் ஒதுக்கித் தரச் சொல்லிப் போய் உட்கார்ந்தோம். அம்புடுதேன். மறுநாள் காலை மாயவரம் வரையிலும் அங்கே இங்கே அசைய முடியவில்லை. உட்கார்ந்ததே பெரும்பாடு என ஆயிடுச்சு. கும்பகோணத்தில் இறங்கி ஊருக்குப் போனதும் நம்மவர் என்னைக் குளிச்சுச் சாப்பிட்டுட்டுப் படுத்துக்கோ என்றார். ஆனால் புக்ககமாச்சே! அது நடக்கலை. அன்னிக்கே மத்தியானம் மயக்கம் போட்டு விழுந்து அரை நாள் எழுந்திருக்காமல் மறுநாள் பொங்கல் பானை வைக்க எழுந்திருப்பேனா என பயமுறுத்திட்டுப் பின்னர் ஒருவழியாக எழுந்து குளித்துப் பொங்கல் பானை வைச்சேன். இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. மற்றபடி பொங்கல் எல்லாம் வழக்கமான உற்சகத்துடன் சென்றன. போன வருஷம் ரங்க்ஸ் இருந்தார். போகி அன்னிக்குத் திருவாதிரை வந்ததுனு நினைக்கிறேன். ஆசையாய்க் களி பண்ணச் சொல்லிச் சாப்பிட்டார். இந்த வருஷம் திருவாதிரை அன்னிக்கு அதே நினைவாக இருந்தது.
பதிலளிநீக்குநினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீக்குஹிந்தி புழக்கம் அதிகமாயிடுச்சா?... இப்பொழுதே மஹர் சங்கராந்தி (Mahar Sankaranthi) என்று ஆங்கிலத்தில் வேறு அடைப்புக் குறிக்குள் போட்டு பொங்கல் வழித் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சங்கராந்தி சரி.. அது என்ன மஹர்?...
பதிலளிநீக்குமஹர் என்றால் மகர மாதத்தைச் சொல்கிறார்களாக்கும் என்று நானும் நிச்சயப்படுத்திக் கொள்ள இணையத் தேடலில் தேடினேன்.
ஹி.. ஹி.. நீங்களும் தான் தேடிப் பாருங்களேன்
Yea. It is "Makara" sangkranthi. not Mahara! தமிழில் தை மாதம் என்பதை சமஸ்கிருதப் பெயர் மகர மாதம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇந்தி ஒரு கலப்படமான மொழி. மொகலாயர் ஆட்சி காலத்து பாரசீகம், மற்றும் அரபு, துருக்கிய மொழியின் ஆளுமையும் பாதிப்பும் கொண்ட கலவையான மொழி அது. போதாக்குறைக்கு போஜ்புரி, அவாதி போன்ற பிராந்திய மொழிகளின் தாக்கமும் கொண்ட தனித்தன்மையற்ற மொழி அது.
நீக்குமேஜையை ஆண்பால் என்றும் நாற்காலியை பெண்பால் என்றும் வகைப்படுத்துகிற ஒரு குழப்பமான இலக்கண வளப்பமின்மையும் அதற்கு உண்டு.
அதனால் மகர சங்கராந்தி என்ற சொல்லை மகர் சங்கராந்தி என்று தற்காலத்தில் சிலர் உச்சாரிப்பதில் வியப்பொன்றும் இல்லை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்படவில்லை!
நீக்குஹி..ஹி.
நீக்குமேலே அகற்றப்பட்ட இரண்டு கருத்துக்களும் மொபைலில் தட்டச்சு செய்து ஏகப்பட்ட எழுத்து பிழைகளுடன் இருந்தன. அதனால் நீக்கி விட்டேனே தவிர வேறு காரணமில்லை.
பாரதத்தின் மொழிகள் என்றால் ஒன்று தமிழ், அடுத்தது சமஸ்கிருதம் (அதாவது இலக்கியங்களுக்காக. மக்களின் பேச்சு மொழி அல்ல). நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்.
நீக்குபாக்கு மரங்கள் நான்கைந்து இருந்தன அம்பத்தூர் வீட்டில். 88 ஆம் வருடம் இரண்டாம் மு/றையாக ராஜஸ்தான் போனப்போ குடித்தனக்காரங்க பொறுப்பிலும் என் அப்பா பொறுப்பிலும் விட்டுச் சென்றோம். கடைசியில் நாங்க ஐந்தாறு வருடங்கள் கழிச்சுத் திரும்பும்போது ஒரே ஒரு பாக்கு மரம் தான் இருந்தது. அதிலிருந்தும் கொட்டைப்பாக்கெல்லாம் எடுத்திருக்கோம். அக்கம்பக்கத்தவர் கார்ப்பரேஷனில் தெரிஞ்சால் வரி கட்டச் சொல்லுவாங்கனு சொல்லிட்டிருந்தாங்க. பாக்கு மரம், தேக்கு மரம், சந்தன மரம் ஆகியவை பணப்பயிர்கள் என்பதால் இவற்றை வீட்டில் வளர்க்கும் முன்னர் அனுமதி வாங்கணும். நாங்க வாங்கலை. கடைசியில் அந்த ஒரே ஒரு பாக்கு மரமும் பட்டுப் போய் விட்டது.
பதிலளிநீக்குபாக்கு மரம் பாக்கு மரம் என்று படிக்கும்போதெல்லாம் எனக்கு "பாக்கு மரங்களின் நிழலோரம் சிறு பவளமல்லிகைகள் பாய்போடும்" வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நீக்குசட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்காகப் போராட ஆட்கள் இருப்பாங்க; இருக்காங்க. ஆனால் ஒரு காரணமும் இல்லாமல் நெருங்கிய உறவில் உள்ள ஒரு பிடிக்காத ஒரு நபரைக் கடைசி வரை வெறுக்கும் காரணம் என்னனு புரியாமல் முழிச்சிருக்கேன். ஏன் பிடிக்கலை நம்மை? நாம என்ன செய்தோம்னு அந்த நபர் மனம் மருகுவார். பாவமாக இருக்கும். இது உண்மையாகப் "பாவம்" பார்ப்பது.
பதிலளிநீக்குபொறாமை காரணமாக இருக்கலாம்.
நீக்குஇணையப் புழக்கம் அதிகம் ஆனதுமே மனிதருக்குள் ஒருவருக்கொருவர் பழக்கம்/புழக்கம் விடுபட்டுப் போயாச்சு. யாரும் யாரிடமும் முன்னை மாதிரி நெருங்கிப் பழகுவதில்லை. எல்லாம் வாட்சப் மயம்.
பதிலளிநீக்குநானெல்லாம் என்னோட வயசைச் சொல்லணும்னே இல்லாமல் கல்யாணம் ஆகி வந்த அந்தப் பதினெட்டு/பத்தொன்பது வயதிலேயே முப்பது தாண்டிய மாமிகள் எல்லாம் என்னை மாமினும் அவரை மாமானும் கூப்பிட்டிருக்காங்க. நமஸ்காரம் பண்ணப் போனால் வேண்டாம்னு தடுத்துடுவாங்க. அவங்க சின்னவங்களாம். :))))
மதுரையில் இருந்தவரை அநேகமாகத் தினம் தினம் இரண்டு வேளையும் கோயிலுக்குப் போனது உண்டு. காலையில் மேலாவணி மூலவீதி வீட்டிலிருந்து பொடிநடையாக மேலக்கோபுர வாசல் வழி மீனாக்ஷி தரிசனம். மாலை தெற்காவணி மூலவீதி, மேலாவணி மூல வீதி தொடங்கும் இடத்தில் உள்ள மதனகோபால ஸ்வாமி கோயில். சௌராஷ்ட்ரா கிருஷ்ணன் கோயில் என்போம். அங்கே தான் ஸ்ரீஹரிதாஸ்கிரியின் சொற்பொழிவுகள், கச்சேரி எல்லாம் நடக்கும். தினமும் சாயங்காலம் அங்கே போயிடுவோம்
இனிய நினைவுகள்!
நீக்கு//மதனகோபால ஸ்வாமி கோயில். // பலமுறை சென்றிருக்கிறேன். உங்களுக்குத் தெரியும் இல்லையா? இந்தக் கோயில் மண்டபம், தூண்கள் சிற்பங்களோடு மொத்தமா அமெரிக்காவுக்கு கொண்டுபோய் அங்க அப்படியே அமைச்சிருக்காங்க. நெட்ல தேடிப் பாருங்க.
நீக்குஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியும் அப்போ நான் ஓசிபிஎம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததையும் பள்ளியை விட்டு மாணவிகளை வெளியே அனுப்பாததால் எங்களைப் போன்ற வெளியே இருந்து வரும் மாணவியரைத் தக்க பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைச்சதையும் சொல்லி இருக்கேன். கூடவே அப்பாவை அடிச்சுப் போட எனப் பள்ளி மாணவர்கள்/கல்லூரி மாணவர்கள் கூட்டமாக வீட்டுக்கு வந்து வாசல் ரேழியில் அமர்க்களம் பண்ணியதையும், வீட்டுக்கார மாமி சாமர்த்தியமாகப் பேசி அனுப்பியதையும் மற்றக் குடித்தனக்காரர்கள் மற்றும் நண்பர்கள் அப்பாவைத் தனி இடத்தில் வைத்துப் பாதுகாத்ததையும் ஏற்கெனவே சில/பல முறை சொல்லி இருக்கேன். அதன் பின்னரும் வீட்டுக்கு மொட்டைக் கடிதாசுகள், மிரட்டல் கடிதங்கள் வரும் என்பதோடு இல்லாமல் நான் தினம் பள்ளிக்குச் செல்லும் வழியில் மேலாவணி மூலவீதியிலிருந்து மேலமாசி வீதி/வடக்கு மாசி வீதி ஆலால சுந்தர விநாயகர் கோயில் தாண்டி வடக்கு வெளி வீதியில் சேதுபதி பள்ளி அருகே இருக்கும் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறணும். அதுவரை தொந்திரவு தொடரும். அந்த வருஷம் முழுப்பரிட்சை முடிஞ்சு அடுத்த வருஷம் தொடங்கும் வரை இதெல்லாம் நடந்தது.
பதிலளிநீக்குஅடடா.. நீங்கல்லாம் படாதபாடு பட்டிருக்கீங்க போலருக்கே அந்தக் காலத்தில்... ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் சுஜாதாவின் கதை ஒன்றும் - இந்தப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பு ஞாபகத்துக்கு வரவில்லை..
நீக்குதமிழ்நாட்டின் கேவல மொழி அரசியல் எத்தனையோ பேர்களது வாழ்க்கையை வேட்டையாடியிருக்கிறது. அரசியல் என்கிற பேரில் வாழ்க்கையே அவலமாகிப்போனதும், இன்னும் அந்த திசையிலேயே போய்க்கொண்டிருப்பதும் தமிழ்நாட்டில்தான். பீஹாரில் லாலு பிரசாத்-ராப்ரி தேவியின் மஹா கேவல 15 வருட ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடலாமோ..
எந்தக் கல்யாணங்களிலும் மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் போன்றவற்றில் இடம்பிடிச்சது இல்லை. மாப்பிள்ளை அழைப்புக்குக் காரெல்லாம் வைப்பது என்பது அப்போல்லாம் ஒரு ஆடம்பரம் என்னும் அளவில் இருந்து வந்தது. வெகு சிலரே மாப்பிள்ளை அழைப்பு/ஜானவாசம் என நடத்தினார்கள்.
பதிலளிநீக்குநான் படிச்சப்போ எல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயப்பாடம். மதிப்பெண்கள் எல்லாவற்றையும் சேர்த்தே கணக்கிடுவார்கள். அப்பாவுக்கு எஸ் எஸ் எல்சியின் ஹிந்தி பரிட்சை பேப்பர்கள் திருத்துவதற்கு வரும். ஹிந்தியை விருப்பப் பாடமாகவும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து எடுக்கலாம் என்றிருந்தது பின்னால் நான் எஸ் எஸ் எல் சி எழுதும்போது ஹிந்தித் தேர்வு முற்றிலும் எடுக்கப்பட்டு விட்டது.
தகவல்களுக்கு நன்றி.
நீக்குசின்னச் சின்னதாய் இருந்தாலும் இத்தனை ஊத்தப்பம் சாப்பிட முடியுமானு தெரியலை. அதோடு வெங்காய ஊத்தப்பம்னு கேட்டாலே சங்கீதா போன்ற ஓட்டல்களில் பொடி தடவிய ஊத்தப்பத்தில் தான் வெங்காயத்தையும் சேர்த்துக் கொடுக்கிறாங்க. அந்த ருசி எல்லாம் பழகவே இல்லை என்பதால் அதெல்லாம் பிடிப்பதில்லை. சபரீஷ்னு ஓட்டல் எல்லாம் இப்போ வந்ததாக இருக்கும். அல்வாவும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. போளி, அல்வா எல்லாம் ரங்க்ஸுக்குப் பிடிச்சது. ஆகவே இப்போ அதை எல்லாம் சாப்பிடுவதே இல்லை
பதிலளிநீக்குகுருக்ஷேத்திரத்தில் நாங்களும் பீஷ்மர் அம்புப்படுக்கை, கர்ணன் தேர் அழுந்திய இடம், கீதோபதேசம் நடந்த இடம்னு முக்கியமானவை எல்லாமும் பார்த்தோம். அங்கே உள்ள பிரம்மசரோவரில் தர்ப்பணங்கள், தானங்கள் செய்தோம். அப்போ மஹாலய பக்ஷம் வேறே.
பதிலளிநீக்குகேஜிஜியின் கச்சேரி அனுபவங்கள் அருமை. நாங்கல்லாம் நவராத்திரி சமயங்களிலும், ஸ்ரீராமநவமி சமயத்திலும் பத்து நாட்கள் நடைபெறும் பிரபலங்களின் கச்சேரிகளை இலவசமாகத் தான் கேட்டிருக்கோம். நவராத்திரி சமயம் மீனாக்ஷி கோயில் ஆடி வீதிகளில் கச்சேரி இருக்கும். ஸ்ரீராமநவமிக்குக் காக்காத் தோப்புத் தெரு வக்கீல் ஒருத்தர் வீட்டில் ஏற்பாடு பண்ணுவாங்க. மதுரை மணி ஐயரின் கடைசிக் கச்சேரி அங்கே தான் நடந்ததாக ஒரு நினைவு. அப்போ அவருக்குக் கண் தெரியாமல் போக ஆரம்பித்த் சமயம். இதைத் தவிர்த்தும் மேலகோபுர வாசலில் இருக்கும் நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடைக்காரங்க (அப்பாவுக்குச் சொந்தம்) அவங்க கடை திறந்த வெள்ளி விழாவோ/தங்க விழாவோ பெரிசாக் கொண்டாடினாங்க. அப்போ தினம் ஒரு கச்சேரி, கதா காலட்சேபம் என வைச்சாங்க. அதில் தான் எஸ்.டி. சுப்பு லக்ஷ்மி காலட்சேபம், கொத்தமங்கலம் சுப்புவின் காந்தி கதை வில்லுப்பாட்டு, எம்.எஸ். எம்.எல்.வி. டி.கே.பட்டம்மாள் ஆகியோரின் கச்சேரிகள்னு கேட்டிருக்கோம். வீடு பின்னால் தான் என்பதால் வீட்டில் மாடி அறையில் உட்கார்ந்த வண்ணமே கூடக் கேட்கலாம்.
இந்தச் சுற்றுலாப்பொருட்காட்சி அநேகமாக ஐலன்ட் கிரவுன்டில் திறக்கும் நாளோ அல்லது மறுநாளோ போயிடுவோம். பின்னால் போகலாம்னா கூட்டம் தாங்க முடியாது என்பதோடு எங்க குழந்தைகளுக்குப் பள்ளியும் இருக்கும். பொங்கலுக்கே சங்கராந்தி அன்னிக்கு மட்டும் தான் விடுமுறை. மற்ற நாட்கள் எல்லாம் பள்ளி இருக்கும். என் மாமனார்/மாமியார் மட்டும் இதை நம்ப மாட்டாங்க. நான் ஏதோ குழந்தைங்களை வற்புறுத்திப் பள்ளிக்கு அனுப்பி வைப்பதாய்ச் சொல்லிட்டிருப்பாங்க. :))) அதே போல் ஜனவரி ஒண்ணாம் தேதியும் மத்திய அரசு விடுமுறை இருக்காது. நம்மவர் அலுவலகம் போவார். மைத்துனர்/நாத்தனார் வீட்டுக்காரர் எல்லாம் பப்ளிக் செக்டார் என்பதால் அவங்களுக்கு விடுமுறை. அவங்க கூட நாங்களும் மத்திய அரசுப் பணி தான். எங்களுக்கெல்லாம் லீவு தான். அண்ணா மட்டும் ஏன் போகணும்னு சத்தம் போடுவாங்க! எப்படி எல்லாம் தொந்திரவுகள் வருதுடா ஈஸ்வரா!னு நினைச்சுப்பேன்! :))))))))
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் போகி பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குகேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//படத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?//
படத்தைப்பார்த்தவுடன் முதலில் கரும்பை நினைக்க வைக்கும் ஆனால் இது தென்னைமரம் போல இலைகள் உள்ள அழகு செடியாக வளர்க்க படுவது வீட்டுக்குள்ளும் வைத்து இருப்பார்கள்.
நாங்கள் மாயவரத்தில் வாசலில் தொட்டியில் வைத்து இருந்தோம்.
படமும் பதமும் நெல்லைத்தமிழன் பகிர்வு எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகுருக்ஷேத்திரத்தில் பார்த்த இடங்கள் பகிர்வு அருமை.
KGG சார் பக்கம்பகிர்வு அருமை.
பதிலளிநீக்குமார்கழி மாதம் உற்சாகமாக இருக்க அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி சங்கீதம், கிரிக்கெட், பஜனை , கோயில் உலாக்கள்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்த நாட்களின் அனுபவ பகிர்வு அருமை.