6.1.26

சிறு கதை : தாத்தாவின் பொக்கிஷம் - ஸ்ரீராம்

விருட்சம் அழகியசிங்கர் நடத்திய 'அசோகமித்திரன் நினைவு சிறுகதைப்போட்டியில் பணப்பரிசு பெறாவிடினும் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருட்சத்தில் வெளியாகி, அது அவர் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் இடம்பெற்றதும்,  என் பெயரை அவர் நடத்தும் வாட்ஸாப் குழுவில் இணைத்துக் கொண்டார்.  
அவ்வப்போது அதில் ஒரு படம் கொடுத்து இந்தப்படத்துக்கு பொருத்தமாக பத்து முதல் இருபது வரிகளில் ஒரு கதை எழுதச் சொல்வார்.  அப்படி என் கதைகளும் சில கதைகள் அங்கே பிரசுரமாகி உள்ளன.  அங்கு இருக்கும் திறமையானவர்கள் என்னை விட நன்றாக எழுதுகிறார்கள்.  

அவர் அங்கு 'குறுங்கதை' என்று தலைப்பிட்டிருந்தாலும் இவை 'சின்னஞ்சிறு கதை' வகையில் வரும் என்பது என் எண்ணம்.

அப்படி அவர் கொடுத்த ஒரு படத்துக்குப் பொருத்தமான (அங்கு என் முதல்) கதை ஒன்று அங்கு பிரசுரமானதை இன்று இங்கு பகிர்கிறேன்.  

சிலருக்கு, 'இது ஏற்கனவே படித்ததுதானே' என்று தோன்றும்.   குறிப்பாக பானு   அக்கா, மற்றும் கீதா அக்கா !   உண்மைதான்.  வெளியான உடனே 'எங்கள் பிளாக் ஆசிரியர் மற்றும் வாசகர் குழுமத்'தில் அவ்வப்போது பகிர்ந்திருந்திருக்கிறேன்.

"சிக்கவைத்து விட்டாரே மனுஷன்" என்று ஏகாந்தன் ஸாரும்,  "தாத்தாவின் அன்பு என்னே!!" என்று அப்பாதுரையும் அங்கு விருட்சம் பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தார்கள்.


 தாத்தாவின் பொக்கிஷம்

ஸ்ரீராம்




கடைசி மூச்சை விட காத்திருந்தார் ராமு தாத்தா.

அவர் படுக்கை அருகில் குழுமி நின்றார்கள் அவரது இரண்டு மகன்களும் பேரன்களும்.

அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.
கண்களில் ஏக்கம் இருந்தது.

தான் சேர்த்த புத்தகங்களை யாரும் படிக்கவில்லை என்கிற குறை தாத்தாவுக்கு.

மகன்களுக்கோ பேரன்களுக்கோ புத்தகம் படிக்கும் பழக்கமோ, ஆர்வமோ இல்லை என்பது பெரிய வருத்தம் அவருக்கு.

தனக்கு பின் அவை என்ன ஆகும் என்கிற கவலையும் இருந்தது அவருக்கு.
அவர் கண்களிலும் அந்த ஏக்கம் இருந்தது.

தாத்தா நிறைய சொத்து வைத்திருக்கிறார் என்று எண்ணம் அவர் மகன்களுக்கும் பேரன்களுக்கும்.

அதை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார் என்றும் அவர்களுக்கு சந்தேகம்.
நீண்ட நாட்களாகவே அதை அவர் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் தான் மிச்சம்.
இப்போதோ அவர் தன் கடைசி படுக்கையில் இருக்கிறார் என்று தெரிந்தது.

அதை இப்போதாவது தங்களிடம் சொல்வாரா என்று காத்திருந்தார்கள்.

தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த உறவுகளிடம் “நான் சேர்த்து வைத்துள்ள புத்தகங்களில் ஏதோ 10 புத்தகங்களில் நான் சொத்து வைத்திருக்கும் இடம் பற்றிய க்ளூ இருக்கிறது.

சிகப்பு நிற பென்சிலால் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன்.
அதனை எடுத்து கண்டுபிடிக்க வேண்டும்.

அதை வரிசையாக ஒரு பேப்பரில் எழுதவேண்டும்.

அதை ஒழுங்கு படுத்தி ‘டீ கோட்’ செய்தால் சொத்து இருக்கும் இடம் தெரியும் ” என்று கூறி நிறுத்தினார்.

அதோடுஉயிரை விட்டார் ராமு தாத்தா.




ஒருநாள் யதுகிரியும், அவர் தந்தையும் விடியற்காலையில் கடற்கரைக்கு போனார்கள். அங்கே பாரதி கவித்துவத்தில் மூழ்கிக் கிடக்கிறார்."

பாரதி சொல்கிறார் :

"இரவு இங்கு வந்தேன். கற்பனா உலகத்தில் பறந்து கொண்டிருந்தேன். எழுந்து பார்த்தால் கடற்கரை! திருவாய்மொழிப் பாட்டின் பரவசத்தில் இருந்தேன்." 

பாரதியின் அன்றைய உருவத்தை ஆசிரியர் சொல்கிறார்...

"தான் அவரை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக் கூடு! சிவப்பான கண்கள்! துர்ப்பலமான உடம்பு! பார்க்கச் சகிக்கவில்லை...."

'''என் மனத்தில் இருப்பதை அறிந்து கொண்டவர் போல 'நான் புதிய வழி யில் யோகாசனம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது' என்றார்.


செல்லம்மாள் வருத்தத்துடன். "யதுகிரி, இதுவரை விதியின் விளையாட்டைப் பார்த்தாகிவிட்டது. இனி இந்தச் செய்கையின் விளையாட்டைக் கேள். தெய்வம் பாதி கெடுத்தால் மனிதர் பூராவையும் கெடுத்துக் கொள்ள வேண்டுமா? 'எள்ளத்தனைப் பொழுதும் பயனின்று இராதென் நா வினிலே' என்று பாடிவிட்டு, எப்போதும் ஊமை போல் இருப்பதைப் பார்த்து நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. இந்தக் கஷ்டம் என் பகைக்கும் வேண்டாம்! என்ன வழியோ! என்ன விதியோ! இந்தக் கோலம் சகிக்க முடியவில்லையம்மா!"

யதுகிரியம்மாள் பங்களூருக்குப் போகிறார். பாரதிக்கு நமஸ்காரம் செய்து "எங்கள் ஊர்ப் பக்கம் (பங்களூருக்கு) வருவதில்லையா?" என்கிறார்.

"எனக்குப் பெங்களூரில் என்ன அம்மா  காரியம்!  போய்வா அம்மா. நீ மறுபடியும் வரும்போது நான் எந்த ஊரில் இருப்பேனோ!" 

'அதுவே நான் அவரைக் கண்ட கடைசித் தடவை' என்று ஆசிரியை எழுதியதைக் கண்டு அழவேண்டும் போலிருக்கிறது.

அவருக்குப் பாரதி இறந்த செய்தி மைசூரில் இருக்கும்போது கிடைக்கிறது. அந்த வருடம் அவர் மீண்டும் சென்னை வந்தபோது செல்லம்மாள் சொன்னார்:

'யதுகிரி, அவர் பிராணன் போகு முன் கூட 'செல்லம்மா. யதுகிரி எங்கே இருக்கிறாள்' என்றார். மைசூரில் இருப்பதாகச் சொன்னேன். எவ்வளவு குழந்தைகள்' என்றார். 'நம்மைப் போல இரண்டு பெண்கள்' என்றேன். 'உன்னைப் பார்க்க வேண்டும்போல இருப்பதாக'ச் சொல்லிவிட்டு, 'அவள் இப்போது எங்கே வருவாள், எங்காவது நன்றாக இருக்கட்டும்..  காலையில் சீக்கிரம் சமைத்துவிடு, எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்குப் போகணும் என்றார். இது சொன்ன ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டார்..."

உண்மையில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பாரதி என்முன் நிற்பது போன்ற உணர்வு எனக்குப் பல மணி நேரம் இருந்தது. தனது தந்தை போன்ற ஆசானுக்கு ஒரு வாடாத மலரையொத்த அழகிய காணிக்கையைச் செலுத்தியிருக்கிறார் ஆசிரியை. அது இணையற்றது. எல்லா வகையிலும் தலைசிறந்தது.

-கோ.குமார்.

நூல்: பாரதி நினைவுகள் - ஆசிரியர் யதுகிரி அம்மாள்
வெளியீடு: அமுத நிலையம் லிமிடெட், சென்னை-18.
உயர் பதிப்பு விலை : ரூ.1.62 மலிவுப் பதிப்பு: 30 காசு

************************************************************************************
தகப்பன் சாமி..!


கல்லூரியில் படிக்கும் பையன் தகப்பனாருக்கு எழுதிய கடிதம்: "பணத் தைச் செலவழிப்பது சுலபம்; சம்பாதிப் பதுதான் கஷ்டம். இதைப் பற்றித் தாங்கள் அறிந்திருக்கலாமென்றலும் மீண்டும் நினைவுறுத்துவது எனது கடமையாகிறது! ஆகையினால் என் னைப் பற்றிக் கவலைப்படாமல், உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வரவும்...

************************************************************************************




பழைய விகடன் இதழிலிருந்து.....

100 கருத்துகள்:

  1. மகன்களையும் பேரன்களையும் தாத்தா பழி வாங்கிவிட்டாரா இல்லை நல்வழிக்குத் திருப்பினாரா?

    புத்தகங்கள் படித்த நேரத்தில் வேற உருப்படியான வேலைகள் பார்த்திருந்திருக்கலாம் என பின்னால் நினைப்பார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   பிடிக்காத விஷயத்தை செய்வதென்றால் வேப்பங்காய்தான்!

      புத்தகங்கள் படிப்பது உருப்படி இல்லாத வேலை என்னும் பொருள் வருகிறதே...!

      நீக்கு
    2. உருப்படியா இல்லையா என்பது, என்ன மாதிரியான புத்தகங்கள் என்பதையும் பொறுத்ததல்லவா? தஸ்தயவ்ஸ்கிக்கும் அண்ணாதுரைக்கும் வித்யாசம் இல்லை? :-)

      நீக்கு
    3. படிக்கும் பழக்கம் ஆரம்பித்தாலே போதும். தானாய் ஒவ்வொன்றாய் ரசனை மாறி, கூடி விடும்.

      நீக்கு
    4. அந்த கதைக்கான கமென்ட். அப்பா கதை விட்டிருந்தால் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்திராத அவர்கள் கடைசியில் இதனைச் சொல்லியிருப்பர்

      நீக்கு
    5. நீங்கள் சொல்லி இருப்பது நான் நினைத்ததுதான் என்றால் ஆமாம் நெல்லை!

      நீக்கு
    6. என்னை பொறுத்த வரையில் "வாசிக்கக்கூடாத புத்தகம் " என்று ஒன்றில்லை. வாசிக்கக்கூடாதது என்றால் ஏன் பிரசுரிக்க வேண்டும்?
      பைபிள், குரான், பகவத் கீதை, ஜென், டாவோயிசம், என்று பல மத புத்தகங்கள், டால்ஸ்தாய், செகோவ், ஓ ஹென்றி, ஹெமிங்வே, ஷேஸ்பியர், கானன்டாயில் ஷெர்லாக் ஹோம்ஸ், தாகூர், கல்கி, சுஜாதா, என்று பலதரப்பட்ட fiction கள், சங்க இலக்கியங்கள், ஒரு விஞ்ஞான பார்வையில் போன்ற அறிவியல் புத்தகங்கள், "லேடி சாட்டர்லிஸ் லவர் சரோஜா தேவி புத்தகங்கள், மலையாள புத்தகங்கள் என்று பலவும் எனது வாசிப்பில், சில சேமிப்பில்.
      உருப்படி, உருப்படியிலாதது என்பது வாசித்த பின் தோன்றுவது. நல்லதை மனதில் தக்கவைத்து பொல்லாததை விரட்டிவிடுவதே விவேகம்.
      Jayakumar​

      நீக்கு
    7. சரியாக சொல்லி இருக்கிறீர்கள் JKC ஸார்...  தமக்கு இன்ட்ரஸ்ட் உள்ள புத்தகங்கள், அவ்வளவு விருப்பமில்லாத புத்தகங்கள் என்று வேண்டுமானால் பிரிக்கலாம்,

      என் அப்பா எல்லோருக்கும் புத்தகங்கள் ப்ரசண்ட் செய்வார்.  நிறைய பேருக்கு அவர்களுக்கு அவ்வளவு இன்ட்ரஸ்ட்  இல்லாத புத்தகங்களாய் இருக்கும் அவை.  எனக்கு கீரை வைத்தியம் என்று கொடுப்பார்.

      நீக்கு
    8. PDF மற்றும் எலக்டிரானிக் மீடியாவில் புத்தகம் படிப்பதில் பிரயோசனம் இல்லை. புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு படித்தால் நேரம் போவதே தெரியாது. நேற்று மூன்று மணி நேரம் புத்தகம் படித்தேன்.

      நீக்கு
    9. ஆமாம்.  நேரம் போவதே தெரியாதுதான்.  பத்தாவது நிமிடம் தூங்கத் தொடங்கி விடுவேன்.  நேரம் போவதே தெரியாது!!

      நீக்கு
  2. பாரதிக்கு கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் அப்போது தொற்றிக்கொண்டதோ?

    சரித்திர புருஷர்களால் அவர்கள் வீடு சோகமடைகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கடத்துக்கும் உள்ளாகிறார்கள் போல..  நேற்று ஜீவி ஸார் செல்லப்பா ஸார் குழுமத்தில் எழுத்தாளர் அகிலன் பற்றி சொல்லியிருந்தார்.  கதவை மூடிக்கொண்டு வீட்டுக்கு கூட காட்டாமல் கதை  அனுப்புவாராம் அகிலன்.  அந்த வார புத்தகத்தில் அதைப் படிக்க வீடே பரபரப்பாக இருக்குமாம்.

      நீக்கு
    2. பாரதி லெஹரி யில் இருந்ததாக ஒரு சின்ன சீன் கை சொடுக்கும் நேரமே உள்ள சீன் ஒன்று பாரதியின் படத்தில் வருமே.

      ஸ்ரீராம், நேற்று அதை நானும் வாசித்தேன். ஒவ்வொரு பிரபல நிபுணத்துவருக்கும் ஏதேனும் ஒன்று இப்படி இருக்கும் போல.

      கீதா

      நீக்கு
    3. '' நேற்று அதை நானும் வாசித்தேன். ''

      எதை?

      பாரதி படம் நான் பார்க்கவில்லை.

      நீக்கு
    4. //பாரதி படம் நான் பார்க்கவில்லை.//வாட்...???!!!

      நீக்கு
    5. YES.. அதற்கென்ன செய்ய!!!

      நீக்கு
  3. மாற்றங்கள் வரவேற்கும்படி இருக்கிறது. கதை சிறிய அளவு என்பதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொக்கிஷமெல்லாம் இன்னிக்கே வரதைப் பார்த்தால் வியாழக்கிழமைப் பதிவுகளிலும் ஏதேனும் மாற்றம் வருமோ?

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா.. இதையே கண்டின்யு பண்ணு என்கிறீர்களா? ஹிஹிஹி..

      நீக்கு
  4. //தாத்தா நிறைய சொத்து வைத்திருக்கிறார் என்று எண்ணம் அவர் மகன்களுக்கும் பேரன்களுக்கும். அதை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார் என்றும் அவர்களுக்கு சந்தேகம்.// சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லென்று, சுற்றும் இருந்து... பெரியாழ்வார் திருமொழி 4.5.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... எக்காலத்திலும் இது பொருந்தும் போலிருக்கிறதே...  அந்தப் பெரியவர் என்ன செய்தாராம்?

      வாங்க TVM... 

      நீக்கு
    2. அப்படி, தான் சாகும்போதும் சொத்திலேயே குறியாக உறவினர் கூட்டம் சேருமுன்னே, மனத்தை பகவத் சந்நிதி ஆக்கி, பெருமாளை அதில் நிலை நிறுத்தி, அன்பாகிற ஒரு பூவினை சமர்ப்பிப்பவர்கள், யம தூதர்கள் தண்டனையில் இருந்து பிழைப்பார்கள், என்று பெரியாழ்வார் சொல்கிறார்.

      நீக்கு
    3. அதாவது உறவினர் வரும் முன்னரே புட்டுக்கணும்னு சொல்றாரா?  அல்லது பொழைச்சுப்பார்னு சொல்றாரா? புட்டுக்குவாரு, ஆனா பாவங்கள்லேருந்து விடுதலை...  தண்டனை கிடையாது..  சரியா?

      மன்னிச்சுக்க வாத்தியாரே..  நம்ம புத்தி இப்படி தான் போவுது!

      நீக்கு
    4. புட்டுக்குவாரு, ஆனா யமலோகம் போறதுக்கு பதிலா வைகுந்தம் கொண்டு போய்டுவாங்க விஷ்ணுபடாள்! ஜாலிலோ ஜிம்கானா!
      அதாவது, சாகும்போது பெருமாள் பேரை சொல்லிடுவோம் அப்டின்னு மனப்பால் குடிக்காதே, ஏகப்பட்ட இடைஞ்சல்கள் வரும். அதனால கையும் காலும் மூளையும் நல்லா இருக்கும்போதே பகவத் த்யானம் பண்ணு நைனா, அப்டி, அப்டி . தெரிஞ்சுக்கினே கேக்றியே வாத்யாரே ;-)

      நீக்கு
    5. சாகற சமயத்துல சங்கரா சங்கரான்னு சொல்றவங்கதான் அதிகம்.  ரத்தம் சூடா இருக்கும்போது கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட கடைசியில் அந்த இறுதி தண்டனைக்கு பயந்து விடுகிறார்கள். 

      நீக்கு
    6. ஒன்றுமே பலனில்லை என்று உணர்ந்தவர் பின்பு உண்டென்பார் ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுருதி இதை உணர்ந்தால்
      அந்தி செயலழின் தலம் வரும் பொழுது சிவன் பெயர் நாவில் வாராதே ஆதலினால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லிப் பழகு பழகு....பாபநாசம் சிவனின் பாடல், டிகேஜெ வின் குரலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம் உங்கள் கருத்தைப் பார்த்ததும்...

      கீதா

      நீக்கு
  5. //தனது தந்தை போன்ற ஆசானுக்கு ஒரு வாடாத மலரையொத்த அழகிய காணிக்கையைச் செலுத்தியிருக்கிறார் ஆசிரியை.// தந்தைதானே பாரதி? மிஸ்ஸிங் சம்திங்?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியின் மகள்கள் சகுந்தலா பாரதி, தங்கம்மாள் பாரதி. யதுகிரி பக்கத்து வீட்டுப் பெண்

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. நன்றி, வாத்யாரே.

      நீக்கு
  6. சிறுகதை...... மிகச் சிறிய கதை......

    பொக்கிஷம் பக்கமாக இணைத்திருக்கும் செய்திகளும் சிறப்பு.

    பாரதி - என்ன சொல்ல? ஆகச் சிறந்த கவிஞர் எனினும் அவர் குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள் குறித்து நினைக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...  கதைக்கான கண்டிஷனே அதிகபட்சம் இருபது வரிகளுக்குள்.  நான் ஏற்கனவே இங்கு 'அருண்' போன்ற சிறிய கதைகள் எழுதி பழகியிருக்கிறேன்.  சுஜாதா சின்னஞ்சிறு கதைகள் கட்டுரையில் சொல்லி இருந்தார், வாசகர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எல்லாவற்றையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று!...

      பாரதி என்று இல்லை..  புத்தர், லக்ஷ்மணன் என்று எல்லார் நிலையும் அதுதான் என்பது சென்ற சனிக்கிழமை பதிவின் பின்னூட்டங்களில் அலசப்பட்டிருந்தன.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  7. தாத்தாவின் பாச்சா பலிக்கவில்லை. அவர்கள் எதையும் படிக்கவில்லை. கருமமே கண்ணாக, சிவப்பு மார்க்கிங் மட்டும் (ஸ்கிம்/ஸ்கேன்) பரபரவென தேடி விட்டு 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி போல, செத்தும் கெடுத்தான் பாட்டன்' என்று திட்டிவிட்டுப்போனார்ள் ;-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் கொஞ்சம் மாற்றி கொடுத்திருக்கலாமோ... படம் பார்த்ததும் முதலில் எழுதும் அவசரம்..!

      நீக்கு
    2. நீங்கள் எழுதியதுதான் சரி; அது உங்கள் கதை. எனக்கு, பிள்ளை பேரன் ஆகியோரை ஏமாற்றி நல்வழிப்படுத்த (என்ன முரண்!!) விருப்பமில்லைபோலிருக்கிறது :-))

      நீக்கு
    3. அப்படி இல்லை..  இப்படியும் ஒரு வழி இருக்கும்னு தோன்றவில்லை பாருங்க..  கொஞ்சம்தான் யோசித்துதான் டீகோட் கொண்டு வந்தேன்.  அப்படியும் இன்னும் கூட வழி இருக்கு பாருங்க..!

      நீக்கு
    4. கமெண்ட் எழுதியதற்கு என்னை நானே திட்டிக்கொள்கிறேன் (காலம் கடந்து). ஒருவர் கதை எழுதினால், பாராட்டணும்; இல்லை, சும்மா இருக்கணும். அதை விட்டுட்டு, நானா இருந்தா எப்படி எழுதி இருப்பேன் தெரியுமா என்று அவரிடமே சொல்வது அனாகரிகம். எனக்கு அந்த நிமிஷம் வேடிக்கையா ஒன்று தோன்றியது. யோசிக்காமால் எழுதிட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காம இருக்கலாம். Still, My bad. Lesson learned.

      நீக்கு
    5. இல்லை TVM..  இப்போதுதான் தவறாக எழுதி இருக்கிறீர்கள்.  வெளிப்படையான, உண்மையான கமெண்ட்ஸ் தான் வரவேற்கப்படுகின்றன.  அப்போதுதான் எனக்கும் என்னைத் திருத்திக் கொள்ள முடியும், வாசகர் எண்ணம் புரியும்.  புதிய சிந்தனைகள் மலரும்.  எனவே நீங்கள் செய்ததுதான் 100% சரி.

      சும்மா ஆஹா ஓஹோ என்றால் எனக்கு புத்தி வளராது!!!  நான் படைப்பதெல்லாம் காவியம் என்றே எண்ணிக் கொள்வேன்.

      நீக்கு
    6. தி வாமாண்ணா, நானும் ஸ்ரீராமின் கருத்தையே ஆ மோதிக்கிறேன்!

      இப்ப 3 நாட்களாக நானே, நான் எழுதிய ஒரு கதைக்கு...ஹையையோ இப்படி ஒரு முடிவை வைத்திருந்தால் இன்னும் அது பளிச்சுன்னு ஆகியிருக்குமே.....கடைசியில் ஓர் விஷயம் அட போட வைத்திருக்குமோ என்று தோன்றிக் கொண்டே இருக்கு ஆனா இட்ஸ் டூ லேட்!!!

      எனவே, இது இன்னும் நம் கற்பனையை வளர்க்க உதவும்.

      இல்லைனா நம் கற்பனையும் புத்தியும் தேங்கிவிடும்.

      அதற்குத்தானே நிறைய வாசிப்பனுபவம் வேணும் என்று சொல்லப்படுவது. நம்ம தலைவர் சுஜாதாவின் வெற்றியே அதுதானே!

      கீதா

      நீக்கு
    7. தி வாமாண்ணா, நானும் ஸ்ரீராமின் கருத்தையே ஆ மோதிக்கிறேன்!

      இப்ப 3 நாட்களாக நானே, நான் எழுதிய ஒரு கதைக்கு...ஹையையோ இப்படி ஒரு முடிவை வைத்திருந்தால் இன்னும் அது பளிச்சுன்னு ஆகியிருக்குமே.....கடைசியில் ஓர் விஷயம் அட போட வைத்திருக்குமோ என்று தோன்றிக் கொண்டே இருக்கு ஆனா இட்ஸ் டூ லேட்!!!

      எனவே, இது இன்னும் நம் கற்பனையை வளர்க்க உதவும்.

      இல்லைனா நம் கற்பனையும் புத்தியும் தேங்கிவிடும்.

      அதற்குத்தானே நிறைய வாசிப்பனுபவம் வேணும் என்று சொல்லப்படுவது. நம்ம தலைவர் சுஜாதாவின் வெற்றியே அதுதானே!

      கீதா

      நீக்கு
    8. நான் மேலே சொல்லியிருக்கும் அதே கதையில் இன்னொரு சின்ன மெருகேற்றலும் இரண்டு மூன்று நாட்களாகத் தோன்றுகிறது.

      ஆனால் பாருங்க எழுதும் போது, அதுவும் கடைசி நிமிடங்களில் எழுதும் போதும் மனம் பதற்றம் இல்லாமல் யோசிக்க வேண்டும் என்ற ஒரு பாடமும் கிடைக்கிறது. அப்ப ஒரு ஃப்ளோவில் எழுதிவிட்டேன். ஆனால் அதை இப்ப இன்னும் சற்று சரி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசி நிமிடப் பதற்றத்தில் நான் தட்டச்சு செய்து வைத்திருந்த குறிப்புகள் டக்குனு கண்ணில் படவில்லை என்ன சொல்ல!? இப்ப கிடைத்ததும் இப்படி யோசித்து வருத்தமடையத்தான் முடியுது.

      கீதா

      நீக்கு
    9. இது மாதிரி சமயங்களில் அந்த மாற்றத்தை வேறொரு விதமாக எழுதி புதுக் கதையாக்கி விடலாம் கீதா!  நான் அப்படிச் செய்வதுண்டு.

      நீக்கு
    10. ஓஹோ! உங்களுக்கு அது கைவந்த கலை, ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  8. மிக மென்மையான கதை..
    தங்கள் கை வண்ணத்தினால்
    செவ்வாய்கள் ஒளிர்கின்றன...

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம், இப்படிப் படம் கொடுத்து நம்ம எபி ல முன்னாடி வந்திருந்தாலும், அழகிய சிங்கர் அவர்கள் நறுக்குன்னு 20 வரிக்க்குள் எழுதச் சொன்னது நல்ல பயிற்சி இல்லையா?
    .
    அதுக்கு நல்லா வந்திருக்கு கதை, ஸ்ரீராம். கடைசில வைச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு!

    //அதோடுஉயிரை விட்டார் ராமு தாத்தா.//

    முடிவு பல யூகங்களுக்கும் வழி வகுப்பும். அவங்க அதைக் கண்டுப்பிக்க முயற்சி செய்தாங்களா...இல்லை இவரு என்ன சேர்த்து வைச்சிருப்பாருன்னு விட்டாங்களா? இல்லை ஏமாந்தார்களா....இதுக்கா இம்புட்டுக் கஷ்டப்பட்டோம்னு

    நானுமே முயன்றேனே!!! பக்கம் பக்கமா எழுதித் தள்ளும் நான் சமீபத்தில் வார்த்களை, வரிகளுக்குள் எழுதவும் பழகியது நினைவுக்கு வருகிறது. ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  ஆமாம்.  நிறைய சாத்தியங்களை யோசித்து கதையாக்கலாம்!

      நீக்கு
  10. வர வர டிரம்ப் மாதிரி என்னன்னவோ அதிரடி மாற்றங்களை எ பி யில் செய்கிறீர்கள். என்னைப்போன்ற எல்லா H 1B க்களை விரட்டாமல் இருந்தால் ஓகே. (America for americans only. engal blog enkalukke, marravar veliyeralaaam).

    இன்றைய செவ்வாய் நேற்றைய வியாழன் ஆகிவிட்டது போல் இருக்கிறது.
    பொக்கிஷம் என்ற கருத்தில் பொக்கிஷம் பற்றிய கதை, ஜோக், டைரி குறிப்பு (பாரதி), என்று நிறைய பொக்கிஷங்கள் தான். ஆனால் பதிவு பொக்கிசமாகாது. படித்தோம் சென்றோம் என்றே வாசகர்கள் பதிவை கருதுவர்.

    என்னவோ சொல்ல வந்து எங்கேயோ போயிட்டேன். மைக்ரோ கதை என்று சொல்லுவார் சுஜாதா. அதே தான் இது. ஒரு வார்த்தைக்கதை, ஒரு பத்திக் கதை, ஒரு பக்க கதை, என்று பல கதைகளுக்கும் இலக்கணம் வகுத்தவர் வாத்தியார். அந்த அடிப்படையில் மைக்ரோ/

    தற்செயலா அல்லது ஒரிஜினலா என்பனது தெரியவில்லை. இக்கதை நான் படித்த இரண்டு கதைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    சுஜாதாவின் கதையில் ஸ்ரீரங்கத்து தாத்தா வீட்டில் புதையல் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வீடு பூராவும் தோண்டியும் ஒன்றும் கிடைக்காமல் அவருடைய புத்தக சேமிப்பை ஆராய்வான் பேரன். அதில் பிரபந்தம் ஒன்றும் உண்டு. அதில் ஒரு காலி கவர் இருக்கும். "ராணி படம் தலைகீழ்" என்றும் எதோ சில கணக்குகள் இருக்கும். அதை குப்பையில் போட்டு விடுவார்கள். பின்னர் தான் புத்தியில் அந்த ஸ்டாம்ப் தான் புதையல், பொக்கிஷம் என்பதை அறிந்து நொந்து கொள்வார்கள்.
    இரண்டாவது கதை "நான் படிச்ச கதையில்" வெளியிடப்பட்ட "சப்புமல் குமாரயாவின் புதையல்" கரு. புதையல் உள்ள இடம் ஒரு செய்யுள் மூலம் விளக்கப் பட்டிருக்கும்.
    ஆக கதை இந்த இரண்டு கருப்பொருட்களையும் இணைத்து மைக்ரோ கதையாக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். மேலும் பின்னூட்டங்கள் எழுதப்படலாம்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC..  அப்படி எல்லாம் இல்லை.  உங்களை எல்லாம் விரட்டி விட்டு எங்களுக்கு என்ன வேலை இங்கே..  நீங்கள்தான் நாங்கள்..  நாங்கள்தான் நீங்கள்!

      சிறிய சோதனை முயற்சியாக சிறிய மாற்றங்கள்.    

      ஆமாம், நானும் சுஜாதா சொன்னதைச் சொல்லி இங்கே 'அருண்' உள்ளிட்ட கதைகள் சில எழுதி இருந்தேன்.  வாத்யார் வாத்தியார்தான்.

      நீங்கள் சொல்லி இருக்கும் முதல் கதை நினைவுக்கு வரவில்லை.  நான் படத்துக்கு பொருத்தமாக கதை எழுத்த வந்தபோது என் சேமிப்பு என்ன ஆகும் என்றும் யோசித்தேன்!  என் வீட்டில் என்னைத்தவிர வேறு யாரும் படிக்க மாட்டார்கள். 

      இன்னொரு விஷயம் இந்த 'ராணி தலைகீழாக' தேவனின் சி ஐ டி சந்துரு கதையிலும் வந்திருக்கிறது.  காலச்சக்கரம் நரசிம்மா இதே போல ஒரு கதையை மிக சமீபத்தில் மாத நாவலாக எழுதினார்.   அதை யோசித்திருந்தால் இந்தக் கதையில் ஏதோ ஒரு புத்தகம் பல மில்லியன் டாலர் விலை போகும் ஒற்றை வெளியியிடு அது இது என்று ஜல்லியடித்து அபூர்வப் புத்தகம் ஒன்று அதில் இருக்கிறது என்று எழுதி இருப்பேனே...!!!

      நீக்கு
  11. /// அதை விட்டுட்டு, எப்படி எழுதி இருக்கணும் தெரியுமா என்று அவரிடமே சொல்வது... ////

    இப்படி ஒரு கருத்தைப் படித்த பின்
    என்னுள் கதைக்கான கருவே துளிர்ப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, செல்வாண்ணா... வேறு எப்படி மாற்றி எழுதலாம் என்று எனக்கு சிந்தனை வரும்!

      நீக்கு
  12. செவ்வாய்கள் ஒளிர்கின்றன..

    என்ன ஒரு கவித்துவம்!!

    பதிலளிநீக்கு
  13. என் புது ஐடி புட்டுக்கிச்சு! அதனால இப்படி...பார்ப்போம் என்ன பதில் வருதுன்னு கூகுளிடம் இருந்து. கூகுள் தேவதைக்கு, யம்மா நான் ஒன்னும் பொய் சொல்றவ இல்லை, பித்தலாட்டம் பண்றவ இல்லை, கொள்ளைக்காரியுமல்ல.....பாவப்பட்ட என்னைப் போய் இப்படிக் கேள்வி கேட்டு, எதுக்கு இத யூஸ் பண்ணறன்னு கேள்வி கேட்டு என் பெயரில் ப்ளாகரே இல்லாதப்ப உன் ப்ளாகர் அக்கவுன்ட் னு சொல்லி முடக்கிட்டியே! நியாயமான்னு கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன்!!! பார்ப்போம் ஒழுங்கா ஆக்டிவேட் பண்ணுதா இல்லையான்னு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.. அப்படி எல்லாம் இல்லை. அது வேறு ஏதோ கோளாறு. தானாக சரியாக வரும் பாருங்கள்.

      நீக்கு
    2. ஓகே ஓகே! வரட்டும் ஸ்ரீராம்

      ஆனால் இது சும்மா ஒரு கற்பனை!!!

      கீதா

      நீக்கு
  14. இது மாதிரி இழுத்துக் கொண்டு
    கிடக்கின்ற தாத்தா கதைகளை வாசிக்கின்ற
    போது மனம் ஏனோ தளர்வடைகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனம் ரொம்ப மென்மை செல்வாண்ணா... பலவீனம் என்றும் சொல்லலாமோ!

      நீக்கு
  15. உங்க கதைக்கு வருகிறேன்...

    ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி மலையின் ஒரு பொந்துகள் பலவற்றில் ஒரு பொந்தில் இருக்கும் ஒரு சின்ன ஓட்டைக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தால்ல்னு!!!!!! சொல்லி....பசங்க ஒயிங்கா தங்கமலை ரகசியம், போன்ற மாயாஜாலக் கதைகளைப் படித்திருந்தால் ஒயிங்கா டிகோட் பண்ணிக் கண்டுபிடிச்சு....ஏமாந்து....

    இதுல ஒரு உலகமாக தத்துவத்தைச் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்....

    எதுக்குமே, அது சின்னதா இருந்தாலும் சரி பெரிசா இருந்தாலும் சரி, உழைப்பு போடலைனா பாச்சா பலிக்காத்துன்ற தத்துவம். கொள்ளையடிச்சாலும் சரி அதுக்கும் மூளை உடல் உழைப்பு தேவையாச்சே!!!ஹாஹாஹா

    ஆனா நீங்க மறு கேள்வி கேப்பீங்க அது இன்னான்னு எனக்கும் தெரியுது. அப்ப சமூகத்துல அலையறன்னு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகங்களே பெரிய பொக்கிஷங்கள்தானே கீதா... அறிவுப் பொக்கிஷம்.

      நீக்கு
    2. கண்டிப்பாக, ஸ்ரீராம். புத்தகப் பொக்கிஷங்களுக்கு ஈடு இணை ஏதுமுண்டோ?!

      ஆனா பொக்கிஷம்னு நினைக்கறவங்களுக்குப் பொக்கிஷம். இல்லைன்றவங்களுக்கு...ஹாஹாஹா நான் எழுதிய கதை!

      கீதா

      நீக்கு
  16. Copied from Krishnamoorti Krishna Iyer post in facebook today( 06-01-2026)
    *BLOOD DONORS NEEDED*

    அப்பாவி தங்கமணிக்கு சர்ஜரி நாளை நடக்க இருக்கிறது. அதன் பொருட்டு 40 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. கோவையில் உள்ளவரும், கோவையில் நண்பர்கள் உள்ளவரும் முடிந்தால் ரத்தம் கொடுக்கலாம்.

    Patient name: Bhuvaneshwari.S
    Patient ID: A882783
    Room # : B111 (special 😎
    Hospital: Sri Ramakrishna Hospital
    Doctor: Dr. Madhu Shankar
    Required: 30 units for Kidney Transplant (any group blood accepted)
    Contact person: V. Govindarajalu (Husband) - 96008 60934
    S. Selvarajan (Father) - 98948 46801

    Kindly goto blood bank in new block basement floor (8am to 5pm) and mention these details. Thank you 🙏.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவி புவனா நல்லபடியாக குணமாக பிரார்த்தனை செய்வோம். தன்னம்பிக்கையுடன் போராடி வருகிறார். சிறுவயதில் இறைவன் அவருக்களித்திருக்கும் சோதனை.

      நீக்கு
    2. பதினைந்து வருஷத்துக்கும் மேல் பழக்கம். மிகவும் நகைச்சுவையாக எழுதுவார். முதலில் அவர் உடல்நிலை குறித்து எதுவுமே தெரியலை. பின்னர் தெரிந்தப்போ அதிர்ச்சியடைந்தேன் என்றால் அது மிகை அல்ல. இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து ஏடிஎம் (நான் இப்படித் தான் அவரை அழைப்பேன். அவரும் இதை விரும்பினார்.)திரும்பவும் பழையபடி உடல் நலத்துடன் திரும்பி வந்து மீண்டும் அவரது நகைச்சுவையால் நம்மை எல்லாம் மகிழ்விக்க எனது பிரார்த்தனைகள். இறைவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வோம்.

      நீக்கு
    3. இங்கு எங்கள் பிளாக்கில் அவர் கதை கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் வந்திருக்கு கீதா அக்கா.   அறுவை சிகிச்சை நல்லபடி வெற்றிகரமாக முடிய பிரார்த்திப்போம்..

      நீக்கு
    4. ஏடிஎம் சஹானா இணைய இதழ் ஆரம்பிக்கையில் நான், ஆதி வெங்கட், திரு டிஆர்சி ஆகியோர் முனைந்து ஆலோசனைகள் சொல்லி ஆரம்பித்ததோடு அல்லாமல் முதல் வருடம் முடியும்வரை தொடர்ந்து எழுதிக் கொடுத்தும் சஹானாவை நிலைக்குக் கொண்டு வர உதவிகள் செய்தோம். அவர் அடிக்கடி எனக்குத் தொலைபேசிப் பேசுவார். ஆனால் திடீரென நின்று போச்சு. நானும் அப்போது பல பிரச்னைகளில் இருந்ததால் ஒண்ணும் தெரிஞ்சுக்க முடியலை. பின்னர் திடீரென ஒரு நாள் தெரிய வந்தப்போ மனம் வேதனை அடைந்தேன். என்ன ஆறுதல் சொல்லுவதுனே புரியாமல் திகைத்தேன் என்றால் அது மிகை அல்ல. என்னவோ! கடவுளின் சோதனை இப்படி எல்லாம் அமைந்து விடுகிறது.

      நீக்கு
    5. புவனா விரைவில்நலமடைய வேண்டும். இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

      நீக்கு
  17. உங்களின் கதை பழைய நீதிக் கதை ஒன்றை நினைவு படுத்தியது. ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் அவர் மட்டும் பாடுபட்டு உழைப்பாரே தவிர அவருடைய மகன்கள் உழைக்க விரும்பாத சோம்பேறிகள். அந்த முதியவர் இருக்கும் முன்னர் தன்னுடைய வயலில் புதையல் இருப்பதாக கூறி விட்டு இறந்து விட்டார். புதையலுக்கு ஆசைப்பட்ட மகன்கள் நிலத்தை உழுவார்கள். எதுவும் இருக்காது. ஆனால் மழை வந்ததும் நிலத்தை உழுது விட்டோமே விதை விதைக்கலாம் என்று விதை விதைப்பார்கள். பயிர் வளரும். விளைந்த பயிரை காப்பாற்றி அறுவடை செய்ததும் அவர்களுகுப் புரியும் எது புதையல் என்று. உங்கள் கதையில் வந்த தாத்தாவும் இதைத்தானே செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... 'ஒரு பாட்டுக்கு பல ராகம்...' என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. ஒரு கருவில் பல கதைகள்.

      நீக்கு
  18. யதுகிரி அம்மாளின் புத்தகம் பாரதியின் நினைவுகள் சில வரிகள் மனதைக் கனக்க வைக்கிறது.

    முழு புத்தகம் கிடைத்தால் வாசிக்க வேண்டும் போன்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதி நினைவுகள் பற்றி ஏகப்பட்ட பேர் புத்தகம் எழுதி இருக்கிறார்கள். பாரதி பற்றி முழுவதும் தொகுக்கப்பட்ட உண்மையான தரவுகளை, செய்திகளைக் கொண்ட புத்தகம் என்று கூட ஒரு புத்தகம் வந்தது.

      பாரதி என் ஆசான் என்று கனகலிங்கம் எழுதிய புத்தகம் கூட வந்தது.

      நீக்கு
  19. பொக்கிஷ ஜோக்குகளில் முதலாவது ஏற்கனவே வியாழனில் வந்திருப்பதாக நினைவு.

    இரண்டாவதும் vague நினைவு. புன்சிரிக்க வைத்தவை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  எனக்கு புதிதாகத் தெரிந்தது. 

      சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைக்கு பலசாலியாகலாம் என்று சோறூட்டும் தாய் பற்றிய ஜோக் முன்னரே வந்திருக்கிறது என்று விட்டு விட்டேன்.

      நீக்கு
  20. தகப்பன் சாமி - சிரித்துவிட்டேன். இதை எழுதிய அந்த பக்த பிள்ளை யாரோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரோ..  இது பாரதி பற்றி வந்த அந்தப் பக்கத்திலேயே இருந்தது!

      நீக்கு
  21. என்னோட புத்தகப் பொக்கிஷங்களைப் பற்றி நினைக்கத் தூண்டியது இந்தக் கதை. எங்க வீட்டில் என்னைத் தவிரப் புத்தகங்கள் படிக்கிறவங்க யாரும் இல்லை. உயிலில் சொல்லி வைச்சிருக்கேன் புத்தகங்கள் தகுந்த நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்னு. இருந்து பார்க்கவா போறேன்? என்ன ஆகுமோ தெரியாது. :( தலையிலா தூக்கிண்டு போகப் போறேன்! என்னவோ போங்க! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கெல்லாம் உயிலா?  தகுந்த நபர் என்று எப்படி கண்டுபிடிப்பது?  ஒருவரிடம் கொடுத்து, உடனே  அவற்றை அவர் எடைக்கோ, குறைந்த விலைக்கோ விற்று விட்டால்?!!

      நீக்கு
    2. அதைவிட, அத்தனை வருடங்கள் கழித்து புத்தகங்கள் செல்லரித்தோ இல்லை தொட்டவுடனே பொடிப்பொடியாக உதிரும்படியாகவோ இருந்தால் யாருக்குப் பிரயோசனம்?

      நீக்கு
  22. மற்றபடி நகைச்சுவைத் துணுக்குகள், யதுகிரி அம்மாளின் நினைவுகள் ஏல்லாமே முன்னர் படிச்சவைதான். வியாழனுக்கான முன்னோட்டமா? அல்லது வியாழன் பதிவுகளில் மாற்றமா எனத் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழசுதான் என்றாலும் இங்கே பகிராதவை இல்லையா கீதா அக்கா?

      நீக்கு
  23. ///தான் சேர்த்த
    புத்தகங்களை யாரும்
    படிக்கவில்லை என்கிற
    குறை தாத்தாவுக்கு.///

    நான் எழுதிய கதை கவிதைகளை எனது
    வீட்டினர் எவரும் படித்ததில்லை...

    எவருக்கும் தெரியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் அப்படிதான்.  சமயங்களில் மிரட்டி, வற்புறுத்தி படிக்க வைப்பேன்.

      நீக்கு
    2. //நான் எழுதிய கதை கவிதைகளை எனது
      வீட்டினர் எவரும் படித்ததில்லை...// இது எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட சாபமோ? என் வீட்டிலும் நான் எழுதுவதை யாரும் படிக்க மாட்டார்கள். மத்யமரிலும், முகநூலிலும் வருபவற்றை என் சகோதரிகள் படிப்பார்கள்.

      நீக்கு
    3. ஒரு வகையில் நல்லது, வசதி என்றும் வைத்துக் கொள்ளலாம்!!!

      நீக்கு
    4. எங்க வீட்டிலும் தூரத்து உறவினர் சிலர் மட்டுமே நான் எழுதுவதைப் படித்தார்கள். இப்போல்லாம் யாருமே படிப்பதில்லை. மாமாவுக்கு என்ன எழுதறேன், எதைப் பத்தினு தெரியும். ஆனால் அவரும் உட்கார்ந்து பதிவுகளைப் படித்ததில்லை. சொல்லுவேன். கேட்டுப்பார். சில சமயம் இப்படி இருக்கலாம், அப்படிச் சொல்லலாம் என யோசனைகள் சொல்லுவார். அதோடு சரி.

      நீக்கு
  24. தாத்தாவின் பொக்கிசம் கதை அருமை. புத்தகம் படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே வந்தால்தான் உண்டு.

    ஜோக்ஸ் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  சமயங்களில் கொஞ்சம் வயது போனபின் படிக்கத் தொடங்கியவர்களும் இருக்கிறார்கள்தான். 

      நன்றி மாதேவி.

      நீக்கு
  25. பாரதி பற்றி யதுகிரி அம்மாள் எழுதியிருப்பது மனதை கனக்க வைத்தது. //"யதுகிரி, இதுவரை விதியின் விளையாட்டைப் பார்த்தாகிவிட்டது. இனி இந்தச் செய்கையின் விளையாட்டைக் கேள். தெய்வம் பாதி கெடுத்தால் மனிதர் பூராவையும் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?//பாவம் செல்லம்மா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை அவர் காட்டிக் கொண்டதே இல்லை அல்லது அப்படி அவர் நினைத்ததே இல்லை.  கரெக்ட்டா?

      நீக்கு
  26. வியாழனன்று வர வேண்டியதை செவ்வாயிலேயே போட்டு விட்டால் வியாழனுக்கு என்ன செய்வீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன குறை..  வியாழனில் மட்டும்தான் வரவேண்டுமா என்ன...

      நீக்கு
  27. ஸ்ரீராம், உங்கள் கதை நன்றாக இருக்கிறது. எப்படியோ புத்தகத்தை புரட்டிப்பார்க்க வைத்து விட்டார்.

    யதுகிரி அம்மாள் எழுதிய புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது, முன்பு படித்த நினைவு தேட வேண்டும். இன்று வியாழனா என்ற சந்தேகத்தை கொடுத்தது பதிவு.
    நகைச்சுவை பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைப் பாராட்டியதற்கு நன்றி கோமதி அக்கா.. யதுகிரி அம்மாள் புத்தகம் உங்கள் வீட்டில் இருந்ததா? அட...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!