மத்திய அரசின் டிஜிட்டல் நுண்ணறிவு தளமான டி.ஐ.பி., வாயிலாக, கடந்த 6 மாதங்களில், 660 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி மோசடி முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டி.ஐ.பி., தளத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள், நிதி மோசடி அபாய குறியீடுகளை பயன்படுத்த துவங்கியுள்ளன. இது இவ்வாண்டு மே 22ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, வங்கித்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆறே மாதங்களில் இவ்வளவு மோசடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுடன் சேர்ந்து இக்குறியீட்டு முறைகளைப் பயன்படுத்துவது குறித்து அறிவை பகிர்ந்துகொள்ளும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதுவரை இதுபோன்ற 16 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் பெருமளவு மாற்றங்களை சந்தித்து வருகின்றன. டிஜிட்டல் கைது நடவடிக்கை முதல் சட்டப்படியான தொலைத்தொடர்பு முறைக்கு போக்கு காட்டிவிட்டு இயங்கும் சிம் பாக்ஸ் நெட்வொர்க் வரை நன்கு திட்டமிடப்பட்ட இணைய குற்றங்கள் கூட்டாக அரங்கேற்றப்படுகின்றன. தனிநபர்களை பொறுத்தவரை, இணைய குற்றங்களிலிருந்து அவர்களை காக்க சஞ்சார் சாத்தி செயலி, இணையதளம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஒரு உற்சாகமான பாடல். மொழியில் என்ன இருக்கிறது? எழுந்து ஆட வைக்கும் எந்த இசையும் சம்மதமே! இல்லையா?
ஹிந்தியில் முன்னரே சில படங்கள் ரஹ்மான் செய்திருந்தாலும் அவை எல்லாம் அவர் தமிழிலும் தெலுங்கிலும் போட்ட டியூன்கள். முழுப்படமும் புத்தம் புதிதாக அவர் போட்டது ரங்கீலா படத்துக்காக. 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ராம் கோபால் வர்மா இயக்க, அமீர்கான், ஊர்மிளா மடோந்கர் நடித்திருந்தனர்.
சில பாடல்களின் ஆரம்ப இசையே மிக ஆர்ப்பாட்டமாக இருக்கும். அந்த வகையில் நான் பல ஹிந்திப் பாடல்களை சொல்வேன். ஹம் கிஸீ ஸே கம் நஹீன், ஸமாதி, யாதோங்கி பாராத், என்று பெரும்பாலும் ஆர் டி பர்மன் பாடல்கள். இந்தப் பாடல் அந்த வகையில் கவர்ந்து இழுக்கும் இசை. வீட்டில் நல்ல ஸ்பீக்கர் இருந்தால் அதில் போட்டு கேளுங்கள். நீங்களும் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள்.
படத்தின் கதை கிராமத்திலிருந்து வரும் ஜோடி ஒன்று சினிமாவில் காலூன்றும் சமயம், கூட இருந்தவ தன்னை கழற்றி விடுகிறாளோ என்று அவனை ஐயம் கொள்ள வைக்கும் கதை. தமிழில் முன்னதாக வந்த ஏணிப்படிகள் கூட இதே கதைதான்.
நடனம் சரோஜ்கான். உதித் நாராயண் குழுவினருடன் பாடும் பாடல்.
சாவித்ரி - (சற்றே உணர்ச்சி வசப்பட்டு லேசான திணறலுடன்) எனக்கு வயது... எனக்கு வயது... 30 தான்.
சந்திரபாபு - முப்பது வேணாம். ஸ்வீட் சிக்ஸ்டீன் என்பார்களே... 16 போதும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்.
பலத்த கைத்தட்டல்கள் ஒலித்தன. சந்திரபாபு சொற்படியே 16 மெழுகுகள் ஒளிர்ந்து வெளிச்சம் தர, விஜயா ஸ்டுடியோவில் 1966ல் சாவித்ரியின் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது.
ஜெமினிகணேசனின் திரை வாழ்க்கையில் சாவித்ரிக்கும், வி.சி.கணேசனுக்கும் முன்பே சிநேகிதக் கொடி கட்டிப் பறந்தவர் சந்திரபாபு. விஷம் குடித்து உயிரை விடும் தருணத்திலும் தன் சகா, ஜெமினி கணேசனை சினிமா சிகரத்தில் அமர்த்திப் பார்க்க ஆசைப்பட்டத் தன்னலமற்றத் தன்னிகரில்லாக் கலைஞன்.
எஸ்.எஸ்.வாசனுக்கு பாபு எழுதிய கடிதத்தின் முக்கிய வரிகள் இவை:
‘பல தடவை நடிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு உங்கள் ஸ்தாபனத்தில் முயற்சித்தேன். கிட்டவில்லை. வெளியிலும் கிடைக்கவில்லை. இன்று காலை மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைச் சந்தித்தேன்.ஆபிசில் வந்து பார் என்று தட்டிக் கழித்து விட்டீர்கள்.
உங்கள் ஸ்டுடியோவில் இந்த ஜென்மத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று நம்பிக்கையில்லை. மனம் நொந்து நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது என்று முடிவு செய்து விட்டேன்.
என் நண்பன் கணேசன், அழகன்; திறமை மிக்கவன்; ஆர்வமுள்ளவன். அவனுக்காவது ஒரு நல்ல வாய்ப்பளியுங்கள். குட்பை!’
சாவித்ரியின் ஒப்பனை வாழ்க்கையில் சிவாஜி, சந்திரபாபு இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜி ‘பாசமலர்’அண்ணன் என்றால், பாபு உற்சாகமூட்டும் உத்தமத் தோழன். அவர்கள் இருவருக்கும் ஜெமினி-சாவித்ரி ஜோடி, நேசம் நிரம்பி வழிய வழிய நிறையவே ‘சியர்ஸ்...’ சொல்லி இருக்கிறார்கள்.
ஜெமினி-சாவித்ரி-சந்திரபாபு காம்பினேஷனில் உருவான காமெடி திரைப்படம் மாமன் மகள். அதில் சாவித்ரிக்காக ஏங்கி சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் பாடலுக்காகவே மாமன் மகளுக்கு ரிபீட்டட் ஆடியன்ஸ் குவிந்தனர்.
மூன்று திலகங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் இது. ஒருவர் நடிகர் திலகம் சந்திரபாபு. மற்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மூன்றாமவர் நடிகையர் திலகம் சாவித்ரி. இம்மூவரும் பங்கேற்ற படம் மாடி வீட்டு ஏழை.
சந்திரபாபு நடிகர் திலகமா...! என்கிற உங்களின் வியப்புக்குறி வினா எனக்குப் புரிகிறது. அவர் கணேசனையும் மிஞ்சும் திறமைகள் படைத்தவர். விழுப்புரம் சின்னையா கணேசனுக்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்த அமைந்த சந்தர்ப்பம், தூத்துக்குடி பனிமயதாசன் என்கிற ஜே.பி.சந்திரபாபுவுக்குக் கிடைக்கவில்லை அவ்வளவே.
‘பேசும் படம்’ கணேசனை நடிகர் திலகமாக அறிவித்தது. ‘குமார ராஜா’ சினிமா விமர்சனத்தில் ‘குமுதம்’பாபுவை நடிகர் திலகமாகக் கொண்டாடியது.
‘தமிழ் நாட்டில் நடிகர் திலகங்கள் இருவர் உண்டு என்று நிருபிப்பவர் போல் நகைச்சுவையோடு கூட, நகை கலப்பே இல்லாத ஆழ்ந்த உணர்ச்சி மிக்க கட்டங்களையும், பிறவித் திறமையுடன் பாபு கையாளும் முறை மகிழ்ச்சியூட்டுகிறது.’
பயாஸ்கோப்பில் கணேசன் நாயகன் மாத்திரமே. பாபுவோ பாடகர். கதாசிரியர். தயாரிப்பாளர். இயக்குநர் என அநேக முகங்கள் உடையவர். கணேசனுக்கே ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் பின்னணி பாடிய பெருமை பாபுவுக்கு உண்டு. நடிப்பு அசுரன் சிவாஜி கணேசனை தன் அனாயசமான நடிப்பால் கட்டிப் போட்டவர். சபாஷ் மீனாவே சாட்சி!
சந்தர்ப்பவசத்தால் சந்திரபாபு மாடிவீட்டுஏழையில் இணைய நேர்ந்தது. பாபுவின் ஆகாய ஆற்றலை உணர்ந்த அவரது சிநேகிதர்கள், ஒரு படம் இயக்கச் செய்யச் சொல்ல, பாபு புதைகுழியில் விழுந்தார்.
எம்.ஜி.ஆர். என்கிற சிங்கத்தைக் கட்டிப் போடும் ரிங் மாஸ்டராக ஆசைப்பட்ட பாபு, அசிங்கப்பட்டுப் போன கதை உங்கள் அனைவருக்கும் முன்னமே தெரிந்திருக்கலாம். அந்த அவஸ்தையைக் கூற வந்த பாபு, சாவித்ரியின் பெருமை பேசியுள்ளார். அதுவே இங்கு நமக்குத் தேவை.
‘எந்த நேரத்திலும் அன்போடு உதவுகிற சாவித்ரியிடம், என் வீட்டின் பேரில் 25,000 ரூபாய் கடன் கேட்டேன். அவரும் மறுப்பு சொல்லாமல் பணம் கொடுத்தார்.’ - சந்திரபாபு.
அந்தத் தொகை மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தர உதவியது.
சந்திரபாபு சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டு பானுமதியின் பரணி ஸ்டுடியோவில் புரட்சி நடிகருக்காகக் காத்திருந்தார். ஏ.எல். ஸ்ரீநிவாசனின் காசில் போடப்பட்ட குடிசை செட், வாத்தியாரைக் காணாமல் களை இழந்தது.
காலை பூஜையில் இருந்திருக்க வேண்டிய வள்ளல், ஒப்பனையோடு தலை காட்டிய நேரம் முற்பகல் பதினோரு மணி. இரண்டு நாள் படப்பிடிப்போடு மாடி வீட்டு ஏழை நின்று போனது.
எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்காததால் சந்திரபாபுவுக்கு சகிக்க இயலாத நஷ்டம். அதுவரையில் சம்பாதித்த சொத்துகள் மொத்தமும் ஜப்திக்கு வந்தன. அப்படியும் டைரக்டர் பைத்தியம் ஓயவில்லை. தமிழில் சாவித்ரிக்கும் நாயகி வாய்ப்புகள் வருவது சுத்தமாக நின்று போனது.
1966ல் ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, பாரதி, காஞ்சனா, இரண்டு மூன்று நிர்மலாக்கள் என ஏகப்பட்டப் புது மலர்கள். நடிப்போடு கவர்ச்சியிலும் முன்னணியில் நின்றனர். இளைஞர்களின் இதயங்களில் சாவித்ரி மெல்ல மெல்ல ‘நேற்றுப் பூ’வாகிவிட்டார்.
அந்த நிலையிலும் சந்திரபாபு நட்புக்கு மரியாதை அளித்து, தோழமைக்குத் தோரணம் கட்டினார். சாவித்ரியை ஹீரோயினாக்கித் துணிச்சலாகப் புதுமையான படம் ஒன்றை அறிவித்தார்.
காமராஜர் தலைமையில் பிரமாதமாக பாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ துவக்க விழா நடந்தது.
‘பாபு இதுவரை பேசிக்காட்டியதை இந்தப் படத்தில் ஓரளவு செய்திருக்கிறான். அடைக்கலம் என்கிற ஓர் ஊமை வேலைக்காரன் வேடம் எனக்கு. படம் முழுவதும் ஒரே ஒரு ஆடையில் வருகிறேன். அந்த உடையின் விலை மூன்றே கால் ரூபாய்தான். மனோகரும் சாவித்ரியும் பேசும் கட்டம் ஒன்று வருகிறது. செட்டின் ஒரு கோடியில் பேசத் தொடங்கும் அவர்கள், மறு கோடி வரை பேசியபடி வருகிறார்கள்.
‘முக்கியக் கதா பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் சில புதிய உத்திகளைக் கையாண்டிருக்கிறேன். அந்த அறிமுகமே பாத்திரத்தின் தன்மையை விளக்கிவிடும். இந்தப் படத்தில் இருந்து எனக்கு நிறையப் பணம் வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் ஒரு கலைஞன். நான் டைரக்டராகி விட்டேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் என் முதலீடு. எனவே நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை.’ -சந்திரபாபு.
1966 ஜூன் 17ல் வெளிவந்தது ‘தட்டுங்கள் திறக்கப்படும்.’ இன்றைக்குப் பார்த்தாலும் முற்றிலும் மாறுபட்டப் புதுமையான திரைச்சித்திரமாக உங்களுக்குத் தோன்றும். ஜின் ஜின்னாக்கடி நடனங்களுக்குத் தனி மவுசு ஏற்பட்ட சூழல். சந்திரபாபு மழலைகளைக் கொஞ்சியவாறு பாடிய ‘கண்மணி பாப்பா’ கேட்பாரற்று ஒலித்தது.
சந்திரபாபுவின் தயாரிப்பு டைரக்ஷன் முயற்சி முற்றிலும் தோல்வியில் முடிந்தது. சாவித்ரிக்கும் புதிய புகழ், திருப்புமுனை ஏதும் அமையாமல் போனது. பயாஸ்கோப் சமூகத்தால் கை விடப்பட்ட கலைஞன் சந்திரபாபு ஒரு வாய்ச் சோற்றுக்கும் வக்கற்று வீதியில் நின்றார். அதற்கானப் பழி சாவித்திரி மீதும் விழுந்தது.
1967 தைத் திருநாளில் வெளியானது கந்தன் கருணை. நடிகையர் திலகத்துக்கு மீண்டும் உமையவள் வேடம். புதிய சிவன் - ஜெமினி. சினிமாஸ்கோப் சைசில் ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா’ என்று சிவசுப்ரமணியனின் புகழ் பாடிய சாவித்ரியைப் பார்த்து மக்கள் மனம் வெறுத்துப் போனார்கள். ஒருவரின் தோற்றத்தை விமர்சிப்பது அநாகரிகம்.
ஓசி பாஸில் பார்க்காமல் கவுண்டரில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி சினிமா பார்ப்பவர்கள் பாமர ரசிகர்கள். பிரம்மாண்ட சாவித்ரியைக் கண்டு மனம் கலங்கினார்கள். திருவருட்செல்வரில் ‘ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே’ பாடலிலும் மிகப் பருமனான சாவித்ரியே திரையில் தோன்றினார். அவருக்கு கணவராக முதலும் கடைசியுமாக முத்துராமன் காட்சி அளித்தார்.
பணம். காசு. துட்டு. முக்கியமில்லை சாவித்ரிக்கு. எப்போதும் தனக்குப் பொருந்தாத வேடங்களைத் தவிர்த்து விடுவார். கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா பாசமா படத்தில் ஜெமினிகணேசன் - சரோஜாதேவி ஜோடி. கதையின் முதுகெலும்பான திமிர் பிடித்த மாமியார் வேடத்தில் எஸ். வரலட்சுமி ஒப்பந்தம் ஆனார். அந்த ரோலில் முதல் நாளே அவர் சொதப்ப ஆரம்பித்தார்.
கே.எஸ்.ஜி.க்குத் தன்னுடன் மூன்று முத்திரைச் சித்திரங்களில் பணியாற்றிய சாவித்ரியின் ஞாபகம் வந்தது.
ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சாவித்ரியைத் தேடி ஓடினார். இரவு நெருங்கும் தருணம். எப்படியும் மறு நாள் படப்பிடிப்பு நடந்தாக வேண்டும். கால நேரம் பார்க்காமல் பணமா பாசமாவில் அவரை நடிக்கச் சொல்லி கெஞ்சி கேட்டார் கே.எஸ்.ஜி.
‘வாத்தியாரே! உங்களின் கலை ஆர்வத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்களே! ஜெமினி கணேஷின் நிஜமான மனைவி நான். அவருக்கு மாமியாராக இந்த சாவித்ரி நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா! உங்களின் படம் ஓஹோவென்று ஓட வேண்டாமா...?’
எஸ். வரலட்சுமி சிறந்த நடிகை. நல்ல பாடகி. கந்தன் கருணையில் அவர் பாடிய வெள்ளிமலை மன்னவா சூப்பர் ஹிட். நீங்கள் எதிர்பார்ப்பது போல் அவர் நடிக்கா விட்டால் நான் நடிக்கிறேன். ஹீரோவை மாற்றி விடுங்கள். ஜெமினி கணேஷ் உங்களின் நலம் விரும்பி. நிலைமையைப் புரிந்து கொள்வார். தனக்குப் பதிலாக வேறு ஒருவரை அவரே சிபாரிசு செய்வார்.’
சொன்னதோடு மட்டுமல்லாமல் எஸ். வரலட்சுமி வீட்டுக்குச் சென்று கே.எஸ். ஜி.யின் பரிதாபகரமான சூழலை விளக்கினார் சாவித்ரி. அகந்தை, ஆணவம், இறுமாப்பு, ஈகோ, கர்வம், தெனாவட்டு என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்ப, எப்படி நடிக்க வேண்டும் என்று தன்னை விட சினிமாவில் சீனியரான எஸ். வரலட்சுமிக்கு வகுப்பு எடுத்தார் நடிகையர் திலகம். சாவித்ரி வீடு திரும்பிய போது இரவு மணி 12.45.
அன்றைய பொழுது கே.எஸ். ஜி.க்கு மட்டுமல்ல. தமிழ் சினிமாவுக்கும் மிகப் பிரமாதமாக விடிந்தது. கே.எஸ்.ஜி. எதிர்பார்த்த கம்பீர மாமியாரை எஸ். வரலட்சுமி கண் முன்னே நிறுத்திக் காட்டினார். பணமா பாசமா செட்டுக்குள் நுழைந்த சாவித்ரி, கே.எஸ்.ஜி.யிடம்
‘என்ன வாத்தியாரே! வரலட்சுமி நடிப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’ என்றார்.
சாவித்ரி காலத்தால் செய்த உதவி 1968ல் வசூலில் மாளப் பெரிதாகி நின்றது. ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கமான மதுரை தங்கத்தில் 25 வாரங்கள் ஓடிய ஒரே வெற்றிச் சித்திரம் பணமா பாசமா. அதில் இடம் பெற்ற எலந்தப் பயம் பாடல் அகில இந்தியப் புகழை அடைந்தது. எவர் க்ரீன் ஹிட் என்கிறார்களே... அதற்கு இலக்கணம் எலந்தப் பயம்!
‘பணமா பாசமாவை எப்போது தியேட்டர்களிலிருந்து எடுக்கப் போகிறீர்கள்...?’ என்று பட விநியோகஸ்தர்களிடம், உருவாக்கியப் படைப்பாளியே கேட்ட நிகழ்வு அதற்கு முன்போ பின்போ கோலிவுட்டில் நடந்தது கிடையாது.
தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய அருமையான வாய்ப்பையும் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து, தான் நடிக்காத படத்திலும் நட்போடு தலையிட்டு, அதைத் திரை வரலாற்றில் நிலை நிறுத்திய பெருமை சாவித்ரி ஒருவரையே சேரும்!
சொம்மோகடிதி சொக்கோகடிதி என்னும் தெலுங்குப்படம். இது இருநிலவுகள் என்று தமிழில் டப் செய்யப்பட்டது. கமல் இரு வேடங்களில் நடித்த இந்தப் படம் ஜனவரி 1979 ல் தெலுங்கில் வெளியாக, கமல் குரலுக்கு Y G மகேந்திரா டப்பிங் கொடுக்க மார்ச் 1979 ல் தமிழில் வெளியானது. சிங்கீதம் சீனிவாசராவ் கமலுடன் இணைந்த முதல் படம் இது.
கமல் ஜெயசுதா, ரோஜா ரமணி, நடித்த படத்துக்கு இசை ராஜன் நாகேந்திரா.
இதே பாடல் தமிழிலும் இருந்தாலும், வாலி பாடல்களை எழுதி இருந்தாலும் ஏனோ தமிழ் அதில் அவ்வளவு சரியாக வரவில்லை என்பது என் எண்ணம். எனவே பாடலை தெலுங்கிலேயே தருகிறேன். தமிழில் 'நான்தானே கள்ளு அருகே வா அள்ளு' என்றெல்லாம் எழுதி இருந்தார் வாலி.
காலை வணக்கம், மஹாஜனங்களே! //கடந்த 6 மாதங்களில், 660 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி மோசடி முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக // நன்று. குறுக்கு சால் புத்தி யோசிக்கிறது: தடுக்க முடியாமல் போனவை பற்றி (data based on past) எஸ்டிமேட் ஏதும் தருவார்களா? பத்து மடங்கு, நூறு?
வாங்க TVM.. வணக்கம். நாம ஒரு கல்யாணம் காட்சிக்கு போறோம்னு வைங்க... வந்த நம்மளை விட்டுடுவாங்க..... உங்க மனைவி வரலையா, புள்ள வரலையான்னு கேட்பாங்க... அது மாதிரி இல்ல இருக்கு!!
சாவித்ரி.. சந்திரபாபு.. எப்படிப்பட்ட கலைஞர்கள் தமிழ்நாட்டில்.. ஒரு காலத்தில்! இப்போதெல்லாம் தமிழ்த் திரையுலகம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? தெலுங்குப் பாட்டையும் போட்டு ஆந்திராவுக்கு அனுப்பிவிட்டீர்கள் வாசகர்களை! சவுத் இண்டியன் சினிமா என்றால் தெலுங்குதான் என்று ஆகிவிட்டிருக்கிறது..
நம்மவர்களுக்கு எல்லாம் இருண்டுபோய்விட்டது. இருந்தும், ... வருவாரு.. விடியல் தரப்போறாரு... என்று எவன் வாயையாவது பார்த்தவாறு 2026 ஐயும் பார்த்திருக்கிறார்கள்.
இன்றைக்கு எ.பி.யைத் திறந்த நான் குழம்பி விட்டேன், பாசிடிவ் செய்தி, பாடல்.. ஸ்ரீராமின் சோளிங்கர் பயணம் என்ன ஆச்சு? வியாழக்கிழமையிலேயே ஏன் பாடல்களை போட்டிருக்கிறார்? என்று ஒரே குழப்பம். கனடாவில் வியாழந்தான், ஆனால் இந்தியாவில் வெள்ளி வந்திருக்குமே என்று பிறகுதான் பல்பு எரிந்தது. ஹி ஹி!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குமுதல் பாடல் பலமுறை கேட்ட பாடல். இரண்டாம் பாடல் கேட்டதாகத் தெரியவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.
வாங்க வெங்கட்.. வணக்கம். இரண்டாவது பாடல் அப்படியே தமிழில் இருக்கிறது!
நீக்குகாலை வணக்கம், மஹாஜனங்களே!
பதிலளிநீக்கு//கடந்த 6 மாதங்களில், 660 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி மோசடி முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக // நன்று. குறுக்கு சால் புத்தி யோசிக்கிறது: தடுக்க முடியாமல் போனவை பற்றி (data based on past) எஸ்டிமேட் ஏதும் தருவார்களா? பத்து மடங்கு, நூறு?
வாங்க TVM.. வணக்கம். நாம ஒரு கல்யாணம் காட்சிக்கு போறோம்னு வைங்க... வந்த நம்மளை விட்டுடுவாங்க..... உங்க மனைவி வரலையா, புள்ள வரலையான்னு கேட்பாங்க... அது மாதிரி இல்ல இருக்கு!!
நீக்குYou nailed it!! lolol
நீக்கு:-))
நீக்குசாவித்ரி.. சந்திரபாபு.. எப்படிப்பட்ட கலைஞர்கள் தமிழ்நாட்டில்.. ஒரு காலத்தில்! இப்போதெல்லாம் தமிழ்த் திரையுலகம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? தெலுங்குப் பாட்டையும் போட்டு ஆந்திராவுக்கு அனுப்பிவிட்டீர்கள் வாசகர்களை! சவுத் இண்டியன் சினிமா என்றால் தெலுங்குதான் என்று ஆகிவிட்டிருக்கிறது..
பதிலளிநீக்குநம்மவர்களுக்கு எல்லாம் இருண்டுபோய்விட்டது. இருந்தும், ... வருவாரு.. விடியல் தரப்போறாரு... என்று எவன் வாயையாவது பார்த்தவாறு 2026 ஐயும் பார்த்திருக்கிறார்கள்.
வாங்க ஏகாந்தன் ஸார்... இப்போல்லாம் திரையுலகம் கொள்ளைக் கும்பல் மாதிரி இருக்கு. நாயக அராஜகம்!
நீக்குதெலுங்குப் பாடல் சரி, மேலே ஹிந்திப் பாடல்? 'இசைக்கு மொழி ஏது'ன்னு ஜல்லி அடிச்சுடுவேன்!
இன்றைக்கு எ.பி.யைத் திறந்த நான் குழம்பி விட்டேன், பாசிடிவ் செய்தி, பாடல்.. ஸ்ரீராமின் சோளிங்கர் பயணம் என்ன ஆச்சு? வியாழக்கிழமையிலேயே ஏன் பாடல்களை போட்டிருக்கிறார்? என்று ஒரே குழப்பம். கனடாவில் வியாழந்தான், ஆனால் இந்தியாவில் வெள்ளி வந்திருக்குமே என்று பிறகுதான் பல்பு எரிந்தது. ஹி ஹி!!
பதிலளிநீக்கு