5.1.26

"திங்க"க்கிழமை :  காஜர் ஷாந்தினி   -  துரை செல்வராஜூ ரெஸிப்பி    

குப்பை, கழிவுநீர் தேங்கிய இடம்... சோலையானது!: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

திருப்பூரில், குப்பையால் துர்நாற்றம் வீசிய இடம், மக்களின் முயற்சியால், தற்போது பசும் சோலையாக மாறியுள்ளது.  திருப்பூரில் ஆறு மாதங்களுக்கு மேலாக நிலவும் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியாமல் அதிகாரிகள் திக்குமுக்காடி வருகின்றனர். குடியிருப்பு மற்றும் முக்கிய சந்திப்புகளில் கொட்டப்படும் குப்பை, எடுக்கப்படாமல் தேங்கி வருவதால் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். குப்பையை தரம் பிரித்து வழங்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.  மாநகராட்சி 2வது மண்டலத்துக்குட்பட்ட, 19வது வார்டு திருநீலகண்டபுரத்தில் பஸ் ஸ்டாப்பையொட்டிய பகுதியில் அள்ளப்படாமல் குப்பை தேங்கி, கடும் துர்நாற்றம் வீசியது. கடந்த, இரு வாரங்கள் முன், அப்பகுதியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். உடனடியாக, அங்கு குவியும் குப்பையை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.  பிரதான பகுதியாக உள்ள அந்த இடத்தில், மீண்டும் குப்பை கொட்டுவதை தடுக்கும் நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மேற்கொண்டனர்.  குப்பை கொட்டுவதை நிறுத்திய மக்கள், மீண்டும் யாரும் குப்பை கொட்டாமல் இருக்கும் வகையில், ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் தற்போது பூச் செடிகளை நட்டு, பூந்தொட்டிகளை வைத்து, பசும் சோலையாக மாற்றியுள்ளனர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா!

நல்ல மாற்றம் உருவாக வேண்டும் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்துக்கொடுப்பது என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் குப்பையைத் தரம்பிரித்து தருவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்னும் முழுமையானதாக இல்லை. இதேபோல், கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. காரணம், அபராதத்தையும் கடை உரிமையாளர்கள் பலர் பொருட்படுத்துவதில்லை. மேலும், இந்தப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதும், மக்களின் ஒத்துழைப்பின்மையும் காரணங்கள். இருப்பினும் சில கடைகள், துணிப்பைகளைத் தரத் துவங்கியிருப்பதே நல்ல மாற்றம்தான். ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பொருட்கள் கிடைக்காமல் செய்தால், குடியிருப்பு பகுதிகளிலேயே மக்காத குப்பைகள் சேகரிப்பு என்பது குறையத் துவங்கிவிடும்.

========================================================================================================

காஜர் ஷாந்தினி
துரை செல்வராஜூ
******* *************
குவைத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தபோது இப்படிச் செய்வதற்கு அறிந்தேன்..

தேவையானவை:

கேரட் 250 gr
தேங்காய் ஒருமூடி
சர்க்கரை 250 gr
நெய் தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
பாதாம் 50 gr
முந்திரி 50 gr


செய்முறை:

கேரட் மற்றும் தேங்காயைத் துருவிக் கொள்ளவும்..

கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய்யை ஊற்றி தேங்காய்த் துருவலுடன் கேரட் துருவலையும்
சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கேரட் நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாமல் வருகின்ற போது. மேலும் சிறிது நெய் சேர்த்துக் கிளறி, 
கலவை தளதள என்று வருகின்ற பக்குவத்தில் இறக்கி வைக்கவும்.

முந்திரி, பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்து உடைத்து
ஷாந்தினியின் மீது தூவி இறக்கி வைக்கவும்.

மீதமிருக்கும் நெய்யை தட்டில் தடவி கலவையைப் பரப்பி ஆறுவதற்கு முன்பாகவே துண்டுகளாக இட்டால் அது தனியொரு விதம்..

தேங்காய்த் துருவலுடன் கேரட் துருவலையும் சேர்த்து சிற்றரவையில் ஒரு சுழற்று சுழற்றி விட்டும் காஜர் ஷாந்தினி செய்யலாம்...

நமது நலம் நமது கையில்!..

52 கருத்துகள்:

  1. கேள்விப்படாத இனிப்புப் பெயர்.

    பிறகு வந்து எழுதுகிறேன். படமில்லாத இனிப்பா துரை செல்வராஜு சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  படத்தை எறும்பு தோன்று விட்டதாம்!!!

      :))

      நீக்கு
    2. எறும்பு என்று சொல்வானேன்? சீனி பண்டத்தை சீனி'வாசன்' திங்காம இருப்பாரா?

      நீக்கு
    3. இருக்கலாம்!  திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுடன் தொடர்புடைய புராணங்களின்படி, லட்சுமி தேவி வைகுந்தத்தை (விஷ்ணுவின் இருப்பிடம்) விட்டு வெளியேறிய பிறகு, துயரத்தில் ஆழ்ந்த விஷ்ணு, வெங்கடமலைக்கு வந்தார். அவர் ஒரு புஷ்கரிணி (ஏரி) அருகே ஒரு புளிய மரத்தின் கீழ் ஒரு எறும்புப் புற்றில் தங்கி, லட்சுமியின் வருகைக்காக தியானம் செய்து தீவிர தவம் செய்தார் என்று படித்திருக்கிறோமே...!

      நீக்கு
    4. ஸ்ரீராம்....அந்தச் 'சீனி' திருவாழ்மார்பன் அண்ணாதான்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்!!

      கீதா

      நீக்கு
    5. கீதா...   அது புரியாமல் இருக்குமா?!!

      நீக்கு
    6. இப்போது படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

      நீக்கு
  2. காலை வணக்கம், செல்வாண்ணா!
    யார் இந்த ஷாந்தினி; உங்களுக்கு உறவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... வாங்க TVM!

      நீக்கு
    2. TVM... ஷாந்தினி என்கிறார்..  தளதள என்கிறார்...  என்னவோ போங்க..  மார்கழி குளிருக்கு கதகதப்பாய்தான் இருக்கிறது!

      "கிருஷ்ணக்குறும்பு"   - ஆஹா...

      நீக்கு
    3. ஹாஹாஅஹா....நான் காலைல பார்த்ததும் கேட்க நினைச்சேன் அண்ணாவிடம்...நீங்க கேட்டுவிட்டீங்க திவமா அண்ணா

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம்....சிரித்துவிட்டேன்! அவர் ஜஸ்ட் சொல்லிட்டுப் போனா நீங்க அதுக்கு ஆலாபனை, கமகம், சங்கதி எல்லாம் போட்டு ஸ்வரப் பிரஸ்தாரமே செய்துட்டீங்க போங்க!!!!!

      கீதா

      நீக்கு
    5. உங்க நிரவலும் நல்லா இருக்கு கீதா!

      நீக்கு
    6. ஹாஹாஹா இனிப்புக்கு ஒரு கச்சேரியே ஓட்டிவிட்டோம்!! அவ்வளவு பேமஸ் ஆகிவிட்டது நம்ம துரை அண்ணாவின் இனிப்பு!

      கீதா

      நீக்கு
    7. இனிய கச்சேரியா, சுவையான கச்சேரியா கீதா?  இனிப்புக்கு என்று தனியாக எதுவும் ராகம் உண்டா என்ன?  மதுவந்தியை சொல்லலாமா?!

      நீக்கு
    8. இனிய சுவையான கக்சேரி......ஸ்ரீராம் பி ஹெச்டி யே பண்ணிட்டீங்க....!!! யெஸ். மதுவந்தி தேன் போன்ற ராகம் ...காதல் சிச்சுவேஷனுக்கு ஏற்ற ராகம்....

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    முதல் செய்தி - சிறப்பு. இப்படியான மாற்றங்கள் தேவை.

    Gகாஜர் ஷாந்தினி - பெயர் நன்றாகவே இருக்கிறது. இங்கே கிடைக்கு. கேரட் அத்தனை சுவையாக இருப்பதில்லை. தில்லியில் கிடைப்பவை நல்ல சுவையுடன் இருக்கும். இங்கே கிடைக்கும் கேரட்டில் செய்து பார்க்க வேண்டும். குறிப்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.. வணக்கம்.  மழைக்காலத்தில் கேரட், பீட்ரூட் போன்றவற்றில் இனிப்பு இருப்பதில்லை.  கொய்யாவிலும்!

      நீக்கு
    2. மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நீக்கு
    3. இங்க இரண்டு வகை கேரட்டும் கிடைக்கும் (ஊட்டி கேரட் உள்ளூர் கேரட்டுன்னு நார்மல் கேரட்டிலும் தகிடுத்த்தம் உண்டு). இப்போ தில்லி கேரட் சீசன். என்ன பிரச்சனைனா இனிப்பு தவிர சமையலுக்கு அது சரிப்படுவதில்லை.

      நீக்கு
    4. காரட், உருளைக்கிழங்கு எல்லாம் வடக்கே கிடைப்பது போல் சுவையாகத் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. வெங்காயமும் தான். பெரும்பாலும் தமிழகத்தில் அரை கிலோ வெங்காயம் வாங்கினால் இரண்டு, மூன்று அழுகித் தூக்கிப் போடும்படி இருக்கும். வடக்கே நல்ல வெங்காய நிறத்தில் அழுத்தமாகப் பெரிதாகவும் கிடைக்கும். ஒரு வெங்காயம் நான்கு பேருக்குப் போதும்.

      நீக்கு
  4. இதன் பெயர் புதிதாக இருக்கிறது துரை அண்ணா

    ஆனால் பிறந்த வீட்டில் இப்படிச் செய்ததுண்டு. அதுவும் தேங்காய் பயன்பாடு எங்கள் ஊரில் அதிகமாச்சே! அப்படி ஆனால் அதையும் காரட் தேங்காய் அல்வா என்று சொல்லிச் செய்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா!! நந்தினியா உங்கள் மகள் பெயர்! ரொம்பப் பிடித்த பெயர்!

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் கீழே பாருங்க....

      கீதா

      நீக்கு
    3. மகிழ்ச்சி நன்றி சகோ

      நீக்கு
  5. இதில் என் அம்மா பர்ஃபி போன்றும் பால் விட்டுச் செய்வார். முந்திரி எல்லாம் அரைத்துப் போட்டு. நானும் கற்றுக் கொண்டேன்.

    காரட் சம் சம்னு ஏதோ ஒரு பெயர் வைச்சு...

    காரட் தேங்காய் துருவிப் போட்டு வதக்கிக் கொண்டு தேங்காய்ப்பால் மூன்று பால் எடுத்து விட்டு பிரதமன் செய்வது போல் வீட்டில் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அம்மா வும் கொஞ்சம் விதம் விதமாகச் செய்து பார்ப்பார்...அப்படித்தான் எனக்கும் வந்திருக்கும்

    பீட் ரூட்டிலும் இப்படியே செய்வதுண்டு

    காஜர் ஹல்வா போன்றும் பீட்ரூட் ஹல்வா, தேங்காய் போட்டு இப்படி, பாயசம் பர்ஃபி என்று!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. //முந்திரி, பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்து உடைத்து
    ஷாந்தினியின் மீது தூவி// இது கூட ஒரு தினுசான ரொமான்டிக்காவே இருக்கு. ஷாந்தினி அம்மையார் கோபப்படுவாரா அல்லது கருமமே கண்ணாக எடுத்து சாப்பிட்டுவிடுவாரா? கூட பிஸ்தாவும் போடுப்பா என்றும் சொல்லக்கூடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///இது கூட ஒரு தினுசான
      ரொமான்டிக்காவே இருக்கு. ////

      ஆகா!...

      நீக்கு
    2. சூடாகப் போடக்கூடாது.. பொன்மேனி உருகி விடும்!

      நீக்கு
    3. இதுவும் நல்லா இருக்கு!..

      நீக்கு
  8. வறுத்த முந்திரி பாதாமை எந்த ஷாந்தினியின்மீது தூவணும்? அடிக்க வரமாட்டாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சரியான கேள்வி
      பதில் அளிப்பதற்கு
      ஸ்ரீராம் வருகின்றார்

      நீக்கு
    2. எனக்குத் தெரிஞ்ச ஷாந்தினிக்கு எழுபது வயசு...   ரிடையர் ஆகி 12 வருஷம் ஆகுது!

      நீக்கு
    3. ஸ்ரீராம் பகிர்ந்த படத்தில் காஜர்னா கேரட் படம் போட்டிருக்கார். ஷாந்தினிக்கு தேங்காய் மூடி படம் போட்டிருக்காரே.

      நீக்கு
    4. @Nellai! காஜர் ஷாந்தினி என்பதற்கே தேங்காய் மூடி, காரட் படம் வந்திருக்கு. ஹிந்தியின் காஜர்னா காரட் தானே! அதனால் பொருத்தமாய்த் தான் இருக்கு.

      நீக்கு
  9. தேங்காய் கேரட் அல்வா... ஆஹா... நல்லா இருக்கு.

    ஆனால் ஜீனி சேர்த்து எந்த இனிப்பைச் சாப்பிட்டாலும் எடை அதிகமாகிறது. இதே செய்முறையில் வெல்லம் அல்லது பனைவெல்லம் (வீட்ல ஸ்டாக் இருக்கு. நான் உபயோகித்தால்தான் உண்டு) போட்டுச் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
    2. கீதா ரங்கன் இப்போ சொன்னார், வெல்லமும் எடையை அதிகரிக்க வைக்கும் என்று. ஆனால் என் அனுபவம் (தினமும் என்ன சாப்பிடுகிறேன் என்று தெரியும், என் எடையை தினமும் எழுதி வைக்கிறேன்), ஜீனியை உபயோகித்த இனிப்பு எடையை அதிகமாக்குகிறது. வெல்லம் அந்த அளவு எடையை அதிகரிப்பதில்லை. இதற்கு ஒரு காரணமும் இருக்கலாம். பொதுவாக சீனி சேர்க்கும்போது எண்ணெயும் அந்தப் பண்டத்தில் சேர்ப்பதினால் இருக்கலாம்.

      நீக்கு
    3. ஜீனி சேர்க்கும் பண்டத்தில் எல்லாம் என்னை(நெல்லையை)ப் பார்க்கலாம் என்கிறீர்களோ...

      நீக்கு
    4. இதோடு பால் சேர்த்தோ அல்லது கோவா சேர்த்தோ பண்ணி இருக்கேன். நன்றாக இருக்கும். உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்காத ஒன்று.

      நீக்கு
    5. என்னிடம் திருப்பதி லட்டு, உள்ளூர் கோவில் லட்டு மற்றும் பல இனிப்பு வகைகள் போன்றவை இருக்கின்றன. எதையும் சாப்பிடாமல் கஷ்டப்பட்டு டயட் மெயிண்டெயின் பண்ணினால், என்ன என்ன இனிப்பு செய்து சாப்பிடலாம் என்று லிஸ்ட் போடுவது நியாயமா?

      நீக்கு
    6. கீதா அக்கா அவர்களது
      கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  10. தேங்காய் கரட் அல்வா வித்தியாசமான ஷாந்தினி :) பெயரும் நன்றாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!