நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
9.1.26
நீர் கொண்ட மேகம் பொதுவானது நிலம் பார்த்து நீரை பொழியாதது
Positive News : செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்து அடையாள அட்டையை பெற்றனர். ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர். இதேபோல், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.
அண்மையில் மறைந்த பாடகர் ஜெயச்சந்திரனுக்கு ஒரு அஞ்சலி.
‘பணி தீராத வீடு’ என்ற திரைப்படம் 1972இல் (53 வருடங்களுக்கு முன்) திரையிடப்பட்டது. இயக்குனர் கே எஸ் சேது மாதவன். ஜெயச்சந்திரனுக்கு சிறந்த பாடகர் விருது கிடைத்த பாடல். இப்படத்தில் மற்றுமொரு விசேஷம். எம் எஸ் விஸ்வநாதன் தன்னுடைய கணீர் குரலில் பாடிய “கண்ணு நீர் துள்ளிய ஸ்த்ரீயோடு உவமிச்ச” என்ற பாடலும் புகழ் பெற்ற ஒன்று. கேட்க விரும்புவர்கள் யு டியூபில் கேட்கலாம்
கற்பகம்' படத்தில், நான் பாதி படம் வரைதான் வருவேன். என்றாலும், அந்த படம் பார்த்தவர்கள் அத்தனை பேர் மனதிலும், `கற்பகம்' கதாபாத்திரம் பதிந்து விட்டது. எனக்கு, ரசிகைகள் நிறைய பேர் உருவானார்கள். நிறைய ரசிகர்-ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும், ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.
`கற்பகம்' படம் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, காதில் கிடந்த கம்மல், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, ``எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
அவருடைய அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன நான், ``இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு போதும்'' என்று அந்த பெண்ணின் நகைகளை மீண்டும் அவருக்கே அணிவித்தேன். ``நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்...'' என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
பிறகு ஒருநாள், ஒரு பட்டுப்புடவையுடன் என் வீட்டுக்கு வந்தார். இதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொன்னால், அவர் மனம் புண்படும் என்பதற்காக, அந்த பட்டுப்புடவையை வாங்கிக்கொண்டேன்.
எனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த இன்னொரு படம், `நம்ம வீட்டு தெய்வம்.' அந்த படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த பெண்கள் எல்லோரும், ``பூஜை ரூமுக்கு போனால், உங்க முகம்தான் தெரியுது'' என்றார்கள்.
`மிருதங்க சக்ரவர்த்தி' படம் வந்த நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். சாமி கூட கும்பிட விடாமல் இடைïறு செய்வது யார்? என்று திரும்பி பார்த்தபோது, ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தார்.
``மிருதங்க சக்ரவர்த்தி படம், என் வாழ்க்கையை போலவே இருக்கிறது. எங்க வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர். நான் பாடகி. எங்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் உள்ளன'' என்றார். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
எனக்கு பாராட்டு வாங்கி கொடுத்த இன்னொரு படம், `இதயக்கமலம்.' அந்த படம் பார்த்துவிட்டு, ``எங்கள் வீட்டுக்கு உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்'' என்று பல வயதான பெண்கள் பாராட்டினார்கள்.
அந்த காலகட்டத்தில், நடிகர்-நடிகைகள் `நட்சத்திரங்களாக' மதிக்கப்பட்டதற்கு எம்.ஜிஆரும், சிவாஜியும்தான் காரணம். எம்.ஜி.ஆருடன் நான் சுமார் பத்து படங்களிலும், சிவாஜியுடன் சுமார் பதினைந்து படங்களிலும் நடித்து இருக்கிறேன்.
பொதுமக்கள் மத்தியில் நடிகர்-நடிகை கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்று எம்.ஜி.ஆர். சொல்லித்தருவார். யாரைப்பார்த்தாலும், இரண்டு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று சொல்வார்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், ``நீ காலையில் எழுந்ததும் என்ன செய்வே?'' என்று கேட்டார். ``டீ குடிப்பேன்'' என்றேன். ``பல் துலக்குவதற்கு முன், கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு பிறகு துப்பினால், அந்த அரிசியை சாப்பிடுகிற கோழி செத்துப்போயிடும். அந்த அளவுக்கு அதில் விஷம் இருக்கிறது. அதனால், பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது'' என்று சொன்னார்.
அன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத் தான் டீ-காபி சாப்பிடுவேன்.
சிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.
என் மகள் திருமணத்தன்று, ``விஜயா பொண்ணுக்கு இன்று திருமணம்'' என்று தன்னுடன் குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ வைத்து, முதல் ஆளாக திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர்-சிவாஜி வந்த பிறகுதான் நடிகர்-நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது. வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், அரசியலிலும் நடிகர்-நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள் இருவரும்தான் காரணம்.
நவம்பர் 2025 ல் தியேட்டரில் வெளியான இந்த தெலுங்குப் படத்தை Netflix OTT யில் புத்தாண்டின் முதல் வாரத்தில் பார்த்தேன். சுமாரான படம். கன்னடத்தில் புகழ்பெற்ற உபேந்திரா, ராம் பொத்தினேனி, பாக்யஸ்ரீ நடித்திருக்கும் படம். தமிழ் டப்பிங் இருந்ததால் தமிழில்தான் வசனம் கேட்டேன்.
இல்லாத அல்லது இழந்த தன்னம்பிக்கையை ஒரு ரசிகனிடமிருந்து உச்ச நடிகர் பெறுகிறார். அதேபோல தன்னம்பிக்கையை இவர் படங்கள் பார்த்து வளர்த்துக் கொள்கிறான் அந்த ரசிகன். 'உன்னை மாதிரி எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் ரசிகனை எல்லாம் நடிகர் அறிவாரா' என்று ரசிகனின் நண்பர்கள் அவனைக் கடிகிறார்கள். அதுவும் நடக்கிறது.
சூப்பர்ஸ்டார் சூர்யாவின் கடைசி ஒன்பது படங்கள் ஊற்றிக் கொண்டதில் அவரது 100 வது படம் தயாரிப்பாளரால் பாதியில் நிறுத்தப்பட, 3 கோடி ரூபாய் இருந்தால் படம் தொடரலாம் என்னும் நிலை. உடைந்து போகிறார் சூர்யா. பெரும்பாலும் ரஜினியை நினைவூட்டும் விதத்தில் சூர்யாவாக உபேந்திரா. எங்கெங்கோ அலைந்தும் பணம் கிடைக்காத நிலையில், திடீரென அவர் கணக்கில் மூன்று கோடி ரூபாய் வந்து விழுகிறது. தந்தது யார் என்று தேடும் பயணம் தொடங்க, சூர்யாவின் ரசிகன் சாகர் கதை விரிகிறது. உயிருக்குயிரான காதலியா ஆராதிக்கும் நடிகரா என்னும் கேள்விக்கு நடிகனுக்கே முதலிடம் தருகிறான் அந்த ரசிகன். இவனைப் பார்க்க ஊருக்கு வந்த காதலி, அவன் பக்கத்து ஊரில் நடக்கும் நடிகரின் ஷூட்டிங் பார்க்கக் கிளம்பி, இவளை பார்த்து தயங்கி நிற்க, ஒருமுறை நடிகரைப் பார்ப்பது உன் கனவு சென்று வா என்று அனுப்புகிறாள்.
அடுத்த முறையில் நடிகருக்காக சாகர் தன் காதலை மூன்று கோடி ரூபாய்க்கு அவள் தந்தையிடம் விற்கிறான். அவனைச் சந்திக்க வரும் சூப்ப்பர்ஸ்டாருக்கு இவன் கதை கொஞ்சம் கொஞ்சமாக தெரியப்படுத்தப்படுகிறது. தன்னம்பிக்கை இழந்து தவித்துக் கொண்டிருந்த சூப்பர்ஸ்டார் ரசிகன் எல்லாவற்றையும் இழந்தாலும் மறுபடி தான் எழுந்து விடுவோம் என்று நிற்கும் தன்னம்பிக்கையைப் பார்த்து அவர் தன்னம்பிக்கை பெறுகிறார்.
இதை ஏன் பார்ப்பதற்கு தெரிவு செய்தேன் என்று தெரியாது, நான் பார்க்கும் வகை இல்லை இந்தப் படம் என்றாலும் பார்த்து முடித்தேன். மோசமில்லை. பார்த்துதான் ஆகவேண்டும் என்று அவசியமும் இல்லை! கொஞ்சம் ஜவ்வுதான்!
அறிஞர் அண்ணா எழுதிய காதல் ஜோதி கதையை கிருஷ்ணன் பஞ்சு மேற்பார்வையில் திருமலை -மகாலிங்கம் இயக்கினார்கள். படம் 1970 ல் வெளியானது. ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு இசை T K ராமமூர்த்தி. மெல்லிசை மன்னருடன் மெல்லிசை இரட்டையர்களாக இருந்து, ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிந்து அப்புறம் ராமூர்த்தி தனியாக சில படம் செய்தார். பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தார். நான் கேள்விப்பட்டவரை பிரிந்து விட்டாலும் M S விஸ்வநாதன் அவர்கள், தான் பணியாற்றிய எல்லா படங்களின் சம்பளத்திலிருந்தும் ராமூர்த்திக்கும் பங்கு கொடுத்து வந்தார். .
1965 ல் சண்டையின்றி சாதாரணமாக பிரிந்தவர்கள், 1995 ல் 'எங்கிருந்தோ வந்தான்' என்கிற படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தார்கள்.
'சண்டிராணி' படத்தில் அதன் இசை அமைப்பாளர் சி ஆர் சுப்பாராமன் பாதியிலேயே மறைந்து விட, என் எஸ் கிருஷ்ணன் ஆதரவுடன் இவர்களிருவரும் அந்தப் படத்தை முடித்தார்கள்.
'பணம்' என்கிற படத்திலிருந்து இருவரும் இணைந்து இசை அமைக்கத் தொடங்கினார்கள். பிரிவினைக்குப் பிறகு எம் எஸ் வி 700 படங்களுக்கு மேல் இசை அமைந்திருந்தாலும் ராமூர்த்தி 19 படங்களுக்குதான் இசை அமைத்திருந்தார்.
ராமமூர்த்தியின் தந்தை திருச்சியில் பெரிய வயலின் வித்வான். அந்த வகையில் இவரும் அப்பாவோடு இணைந்து கச்சேரியை செய்திருக்கிறார். இவர் திறமையைப் பார்த்து இளம் வயதிலேயே சுப்பாராமன் ராமமூர்த்தியை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அங்குதான் எம் எஸ் வி யும் இவரும் நண்பர்கள் ஆனார்கள். ராமூர்த்தி, எம் எஸ் வி யை விட ஆறு வயது மூத்தவர்.
'கலைக்கோவில்' இந்த இருவரின் சொந்தப் படைப்பு. அந்தப் படத்தின் பாடல்கள், படம் இரண்டும் தோல்வி அடைய, இது பற்றிய கல்கியின் விமர்சனமும் இவர்களுக்குள் பிளவை உண்டாக்கியது. சர்வர் சுந்தரம் படத்திலும் வேறு காரணங்களால் இந்தப் பிளவு அதிகமானது என்று அறியப்படுகிறது. ஹிந்தி இசை அமைப்பாளர் நௌஷாத் இருவரையும் வைத்து டாகுமெண்டரியோ எதுவோ... ஒரு படம் எடுக்க நினைத்து ஏவிஎம்மில் காத்திருக்க, ராமமூர்த்தி அங்கு வருவதைத் தவிர்த்து விட, 'ஆயிரத்தில் ஒருவன்' படம் முடிந்ததும் இருவரும் பிரிவை அறிவித்தார்கள்.
இந்தப் படத்தில் சீர்காழி பாடிய வேறு இரண்டு பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஏனோ தலைவர் பாடிய இந்தப் பாடல் என் கண்ணில் படாமல் இருந்தது. யதேச்சையாக சமீபத்தில் கேட்டதும் மனதில் ஒட்டிக்கொண்டு கொஞ்ச நாட்களுக்கு காலையில் தூக்கத்திலிருந்து எழும்போது கூட இந்தப் பாடல் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது!
ஆரம்ப ஆலாபனை ஒட்டவில்லை என்றாலும் ரசிக்க வைக்கும். தலைவர் குரல் ஸ்பெஷல். அதுவும் சரணத்தில்...
வாலியின் பாடல்.
காட்சியில் ஜெய்சங்கரும், காஞ்சனாவும்.
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது கலையாதது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது உறவாடுது
நீர் கொண்ட மேகம் பொதுவானது
நிலம் பார்த்து நீரை பொழியாதது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
குளிர் கொண்ட காற்று நடை போடுது
கொடி கொண்ட பூவில் குடியேறுது
மை வைத்த கிண்ணம்தான் விழியல்லவா
நானும்
மன வாசல் நுழைகின்ற வழியல்லவா
இள நெஞ்சமா
மலர் மஞ்சமா
இதழோரமா
சுவை கொஞ்சமா
காதல் ஜோதி அணையாதது கண் கண்ட கனவெல்லாம் கலையாதது ஊரும் உறவும் அணை போடுது உன்னோடு என் ஆசை உறவாடுது உறவாடுது
கே ஆர் விஜயா அவர்கள் சொன்ன பகுதி மிகவும் கவர்ந்தது. நடிக நடிகைகள் திரையில் மாத்திரம் ஜொலித்து, பொதுவாழ்வில் அதாவது பொதுவெளியில் அபூர்வமாக இருந்தால் அந்த கிரேஸ் இருக்கும். எப்போ அவர்கள் பற்றிய எல்லாமே மிகைப்படுத்தப்பட்டு, எப்போதும் காணும்படியாக ஆகிவிட்டதோ அப்போதே அந்த கிரேஸ் மறைந்துவிட்டது.
வாங்க நெல்லை.. எப்போதும் காணும்படி ஆகிவிட்டதென்றால் தகவல்களையோ, அவர்களையா? இதைச் சொன்னாலும் இன்னமும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. இன்னமும் பைத்தியமாகத்தானே அலைகிறார்கள்!
காதல்ஜோதி படம் பற்றிக் கேள்விப்படுவது முதல் முறை. அண்ணா எழுதிய கதை 1970ல் ரொம்ப அவுட் டேட்டட் ஆகி இருக்குமே! அதைப் போய் தைரியமாகப் படமாக எடுத்தார்களா? இந்தப் பாடலையும் கேட்ட நினைவில்லை. பாடல் என்னவோ இனிமையாகத்தான் இருக்கின்றது. தலைவரின் ஆரம்பக்கால அடக்கமான குரல் கேட்பதற்கு சுகம். சர்வர் சுந்தரத்தில் அப்படி என்னதான் ஆயிற்று இருவருக்கும் இடையில்? எம்.எஸ்.வி ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த பின்னும் பிரமாதமாக இசையமைத்தார் என்றாலும் ஆரம்பக்காலத்தில் இரட்டையர்களின் வெற்றிக்கு ராமமூர்த்தியின் பங்களிப்பு எம்.எஸ்.வியின் பங்களிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. இசை நுணுக்கங்களில் எம்.எஸ்.வியை விட ராமமூர்த்தி இன்னும் சிறந்தவர் என்றே கேள்விப்பட்டிருக்கின்றேன். எவ்வளவு வாத்தியங்கள் இசைக்குழுவில் இருந்தாலும், ஒருவர் சுருதி பிசகினாலும் ராமமூர்த்தி உடனே சுட்டிக்காட்டுவாராம் ("அந்த ரெண்டாவது ரோவில் நான்காம் வயலின் சுருதி சேரல்லியே"). வாலியை எனக்குப் பிடிக்கும். ஆனால் இந்தப் பாடலில் வாலியின் வரிகள் ரொம்ப சுமார் ரகம் (other than the title for today "நீர் கொண்ட மேகம் பொதுவானது நிலம் பார்த்து நீரை பொழியாதது").
வாங்க சூர்யா ஸார்.. நான் இன்னொரு நாளில் பகிரப்போகும் சாட்டை கையில் கொண்டு பாடல்தான் இந்தப் படத்தில் மிகப் பிரபலமான பாடல். தலைவர் பாடல் பத்தோடு பதினொன்றாக போனது வருத்தம்! படம் பெரிய அளவில் ஓடியதாகத் தெரியவில்லை. தலைவரின் குரலுக்கு கேட்கவா வேண்டும். இளமையான இனிமையான குரல் வேற...
சர்வர் சுந்தரத்தில் என்ன நடந்தது என்று யாராவது தனியாக புத்தகம் போட்டிருந்தால் தகவல் கிடைக்கும். எப்போதுமே திறமையானவர்களுக்கு இரண்டாம் இடம்தானே.. ஆனால் எம் எஸ் வி யும் ஏப்பை சாப்பை இல்லையே.. வெகு திறமைசாலிதான் அவரும்.
வாலியைப் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் அதே கருத்துதான் எனக்கும்.
கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அம்மன் வேடத்தில் எந்த நடிகையும் சோபிக்கவில்லை. அறுபதுகளில் விடலைப் பையர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த (பட்டணத்தில் பூதம் / ஊட்டி வரை உறவு, etc.) கே.ஆர். விஜயா, சட்டென்று எழுபதுகளின் ஆரம்பத்தில் சாமியாக மாறிவிட்டார்.
எனக்கென்னவோ கே ஆர் விஜயா நடிப்பு மனதில் பதிவதில்லை. பட்டணத்தில் பூதம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். அப்பாதுரை பார்த்தால் ஒரு கமெண்ட் போடுவார்! அவர் சாமியாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் மவுசு குறையவில்லை. சின்னப்பெண்ணாக நடித்து, தானே தயாரித்து, 'நான் வாழ வைப்பேன்' படத்தில் மேக்சி எல்லாம் போட்டுக் கொண்டு சிவாஜியுடன் ஆடிப் பாடினார்!
உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பாராட்டுகள்.
கூடவே வேண்டுகோளும் வைக்க வேண்டும் இல்லைனா கண்டிஷன் போட வேண்டும். குடிக்கக் கூடாது என்று! குடிக்க மாட்டார்கள் என்று நம்புவோம். உடல் உறுப்பு தானம் என்பது நம் பொறுப்பைக் கூட்டும் செயல்.
முதல் பாடல் மலையாளப் பாடல் கேட்டதில்லை, ஸ்ரீராம். எம் எஸ் வி குரல். அவருக்கு மலையாளம் தாய்மொழி என்பதால் பாடுவதும் எளிதாக இருநிருக்கும். ஆச்சரியம், தமிழ்ப்பாடல் பாடும் போதும் மலையாளம் வாசனை எட்டிப் பார்த்தது இல்லை என்றே தோன்றும்!
மற்றுமொரு விசேஷம். எம் எஸ் விஸ்வநாதன் தன்னுடைய கணீர் குரலில் பாடிய “கண்ணு நீர் துள்ளிய ஸ்த்ரீயோடு உவமிச்ச” என்ற பாடலும் புகழ் பெற்ற ஒன்று. கேட்க விரும்புவர்கள் யு டியூபில் கேட்கலாம் //
ஓகே பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன். முதல் கருத்தின் எழுத்துகள் மறைந்திடட்டும்!!!! ஸ்ரீராம்!!!!
ட்ரான்ஸ்லிட்டரேஷன் - தமிழ்!!!!! சில்பி மலையாளத்தில் தமிழ் வார்த்தை சிற்பின்னே வந்திருக்கு. இட்ஸ் ஓகே மலையாளத்தில் நிறைய வாக்குகள் தமிழ் தான். பண்டைய தமிழ்தான்!
இது சம்பந்தமாக சிவசங்கரி எழுதிய ஏதோ ஒன்று அரைகுறையாக நினைவுக்கு வருகிறது.. அவரும் அவர் தோழியும் நேரே சென்று பார்த்த யாரோ ஒருவர் பற்றி... சொல்லத்தெரியவில்லை. நானென்ன பானு அக்காவா? எல்லாவற்றையும் சட்சட்டென சொல்வதற்கு?
மிருதங்க சக்கரவர்த்தி படம் சுசீந்திரத்தில் ஷூட்டிங் நடந்தப்ப, எங்க ஊரில் சிலர் என் வகுப்புத் தோழிகள் கூடப் பார்த்ததாகச் சொன்னாங்க. ஷூட்டிங் நடக்கையில்.
இஃகி,இஃகி,இஃகி, மிருதங்கச் சக்கரவர்த்தி படம் பார்க்கையில் நானும், நம்ம ரங்க்ஸும் சிரிச்ச சிரிப்பு! இன்னமும் நினைவில் இருக்கு. தூர்தர்ஷனில் வந்தது. அதுவும் அந்த கிளமாக்ஸ் காட்சி! :)))))
ஹிஹிஹி, யாருக்கும் எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. படத்தைப்படமாக மட்டுமே பார்க்கிறேன். நடிகர்களிடம் தனியான அக்கறை காட்டுவதில்லை. ஜிவாஜிக்கு நான் எதிர்ப்பும் இல்லை. நேத்திக்குத் தான் முதல் மரியாதை படத்தையும் ஜிவாஜி நடிப்பையும் புகழ்ந்து இருந்தேன். ஜிவாஜி படங்களிலேயே எனக்குப் பிடிச்சது முதல் மரியாதை படம் தான்.
தெலுங்குப்படம் - ஹீரோ தன் ஆதர்ச நடிகருக்காகத் தன் காதலையே விற்கிறான் 3 கோடி ரூபாய்க்கு....காதலி பொய்ங்கலையா? அதிர்ச்சியடையலையா?
பொதுவாகத் தெலுங்குப்படங்கள் சுபம் போடாம முடிக்கமாட்டாங்க ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்கன்னு வாசித்ததுண்டு. இதன் முடிவு எப்படியோ? எப்படியும் நான் படம் பார்க்கப் போவதில்லை அதனால் நீங்க தைரியமா எனக்கு மட்டும் முடிவைச் சொல்லிடுங்க!!!
// தெலுங்குப்படம் - ஹீரோ தன் ஆதர்ச நடிகருக்காகத் தன் காதலையே விற்கிறான் 3 கோடி ரூபாய்க்கு....காதலி பொய்ங்கலையா? அதிர்ச்சியடையலையா? //
அடையாம இருந்தா அவ என்ன காதலி! பின்னாடி சூப்பர்ஸ்டார் ரசிகனைப் பார்க்க வரும்போது அவளும் எல்லாத்தையும் கேட்டு கண்கலங்கறா... அன்றுதான் அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கும் நாள்.
ஆட்டோ ஓட்டுநர்களைப் பாராட்டுவோம். அவங்க உடல் நலத்துடன் இருக்கவும் பிரார்த்திப்போம். பாடகர் ஜெயசந்திரன் பற்றிக் கேள்வி தான். பாடி எல்லாம் கேட்டதில்லை. இங்கே படித்துத் தெரிந்து கொண்டேன். அதென்னமோ நீலகிரினு படிச்சதுமே ஊட்டி நினைவுகள். எனக்கென்னமோ இன்னமும் அங்கே போய் வீடு பார்த்துக் கொண்டு இருக்கணும்னு நினைச்சது நடக்காமல் போனதில் இன்னமும் வருத்தம் இருக்கு. இனி எல்லாம் நினைச்சுப் பார்க்க முடியாது.
வாங்க கீதா அக்கா.. ஜெயச்சந்திரன் பாடி கேட்டதில்லையா... ஏகப்பட்ட பாடல்கள் தமிழில் பாடி இருக்கிறார். பாடல்களைச் சொன்னால் 'அட, இதுதான் தெரியுமே, கேட்டிருக்கிறேன்' என்பீர்கள்!
கே.ஆர்.விஜயா மட்டுமில்லை, எனக்கு எந்த நடிக, நடிகையரும் அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. ஆனால் நடனம்னு நினைச்சால் பத்மினியை விட வைஜயந்திமாலாவும், அவரை விடக் கமலா லக்ஷ்மணனும் மிகவும் எழிலுடன் நடனம் ஆடக் கூடியவர்கள். அதிலும் கமலா லக்ஷ்மணனுக்கு உடல் வில்லாக வளையும். ரப்பர் பந்து போல் துள்ளிக் குதிப்பார்.
அது அந்தக் கால பார்வை! வைஜயந்தியிடம் ...ம்ம்ம்.... சரி.. உங்க கருத்து.. ஆனால் பத்மினியை ஏதோ ஒரு படத்தில் கொடி இடை என்று பாடும்போது கஷ்டமா இருக்கும். அல்லது தேவிகாவையா? ஒரு எழுத்து பிழையாயிருக்கோ என்று தோன்றும்.
ரஜேந்திரகுமார், வைஜயந்தி மாலா நடிச்ச "சாத்தி" படம் பார்த்திருக்கீங்களா? தமிழில் பாலும் பழமும். அதில் தமிழில் நடிச்ச சரோஜா தேவி(?)யை விட வைஜயந்தி அருமையாக நடிச்சிருப்பார். அதில் அவருடைய பூரண எழிலும் வெளிப்பட்டிருக்கும். இத்தனைக்கும் கறுப்பு, வெள்ளைப் படம்.
தமிழகத்திலிருந்து சென்ற வைஜயந்தி மாலாவும் சரி, தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினியும் சரி, திரை உலகில் முதலாவது இடத்தில் இருந்தார்கள் தான். ஆனால் அவங்க இருவரும் பெரும்பாலும் அழகுப்பதுமையாகவே வந்து சென்றார்கள். டூயட் பாடுவதும் அதற்கு ஆடுவதும் தவிர்த்து எந்த வேலையும் இருக்காது. ஆனாலும் இருவரும் நடிச்சது (உண்மையான நடிப்பு) ஓரிரு படங்களில் தான். அதில் வைஜயந்திமாலாவுக்கு "சாத்தி" என்றால் ஹேமமாலினிக்கும் ஒரு படம் உண்டு. ரிஷி கபூருடன் ஜோடியாக நடிச்சிருப்பார். பஞ்சாபின் சில பகுதிகளில் உள்ள ஒரு வழக்கத்தைப் பின்பற்றி வந்த படம். அண்ணன் மனைவியை அண்ணன் இறந்ததும் அவன் குடும்பத்தைக் காக்க வேண்டி தம்பியை (வயதில் சின்னவனாக இருந்தாலும்) அண்ணிக்கு மணமுடித்துவிடுவார்கள். அப்படி ஒரு கதை தான் அந்தப் படமும். போடுவது என்பார்கள் பஞ்சாபில். படத்தின் பெயரும் அப்படித் தான் ஏதோ. ஹேமமாலினி அருமையான நடிப்பு. அதிலும் சொந்தப் பெண்ணே தாயை வெறுக்கும் காட்சி. பத்மினி கோலாபுரி தான் பெண்ணாக வருவார். அதென்னமோ படத்தின் பெயரே நினைவில் இல்லை. :(
Ek Chadar Maili Si (1986): This was their primary film as the leading pair, a bold adaptation of Rajinder Singh Bedi's novel where Hema Malini's character is forced by tradition to marry her younger brother-in-law, played by Rishi Kapoor, after her husband's death.
கே.ஆர்.விஜயா சொன்னவை அவ்வப்போது துண்டு துண்டாக முகநூலில் படிச்சிருக்கேன். அந்தக் கால நடிகர்களிடம் பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அதோடு இல்லாமல் தேசப்பற்றையும் வளர்த்தார்கள். இப்போவோ?
இன்றைய பாடல்களோ, படங்களோ தெரியாதவை. எம்.எஸ்.வி., ராமமூர்த்தியின் பிரிவு பற்றிய செய்திகள் தினமலர் வாரமலரில் ஒரு கட்டுரையாகப் பல ஆண்டுகள் முன்னரே வந்திருக்கு. கலைக்கோயில் "சித்ராலயா" பானரில் வெளிவந்ததுனு நினைக்கிறேன். படம் பார்த்திருக்கேன். காஞ்சனா ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடிச்சிருப்பது இன்னிக்குத் தான் தெரியும். நேற்றுப் பதிவு எழுதாத குறையை இன்னிக்குத் தீர்த்துக் கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். நாளைக்கு நெல்லை தொடருவார் இல்லையா? நான் படிச்ச கதை வெளிவருமா நாளைக்கு?
தினமலர் கட்டுரை தலைப்பு சொல்லுங்க தேடிப்பார்க்கிறேன்! நேத்திக்கு பதிவு எழுதாத குறையா... அப்பாடி.. அப்படின்னு ரிலாக்ஸா இருந்தேன், இருக்கேன்!! நாளை என்ன வரும்னு அல்லது என்ன வரணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க கீதா அக்கா?
இப்போ இல்லை ஸ்ரீராம், அது சுமார் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் இருக்கலாம். சனிக்கிழமை மலரிலோ அல்லது ஞாயிறு மலரிலோ வந்த ஞாபகம். ஆன்மிக மலர் மட்டும் சேர்த்து வைத்திருந்தேன். அவையும் பேப்பர்காரரிடம் போட்டாச்சு. :(
// காஞ்சனா ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடிச்சிருப்பது இன்னிக்குத் தான் தெரியும். //
கீதா அக்கா... இப்போது தெரிந்து கொண்ட ஒரு செய்தி!!!! டெல்லி டு மெட்றாஸ் படத்திலும் ஜெய்சங்கர் காஞ்சனா ஜோடி!! 'புன்னகையோ பூ மழையோ' என்று ஒரு பாடல் அதிலிருந்து இப்போது கேட்டேன்!
K R விஜயா கட்டுரை படித்து இருக்கிறேன். அவரை எனக்கு என் சிறு வயதில் மிகவும் பிடிக்கும். என் மாமா தலை முடியை பறக்க விட்டப்படி கடற்கரையில் சிவப்பு புடவை பறக்க பெஞ்ச்மேல் நிற்கும் பட போட்ட சாக்லேட் டப்பா வாங்கி தந்தார் . எனக்கு K R விஜயா பிடிக்கும் என்பதால். சாக்லேட் தீர்ந்த பின் அதில் என் பாசிகள் வளையல்கள் வைத்து இருந்தேன் பத்திரமாக பல ஆண்டுகள்.
King of Andhra thaluk பட விமர்சனம் நன்றாக இருக்கிறது. மெல்லிசை இரட்டையர்களாக இருந்து, ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிந்த கதை இப்போது என்றால் யூடியூபில் ஆள் ஆளுக்கு அலசி இருப்பார்கள் . அந்தக்காலம் எதர்கு பிரிந்தார்கள் என்று அவ்வளவாக தெரியாது.
காதல் ஜோதி அணையாதது பாடல் முன்பு ரேடியோவில் அடிக்கடி ஒலி பரப்பினார்கள். இப்போது தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சிகளில் கூட கேட்கவில்லை. பல ஆண்டு கழித்து கேட்டேன் இன்று.
கே ஆர் விஜயா அவர்கள் சொன்ன பகுதி மிகவும் கவர்ந்தது. நடிக நடிகைகள் திரையில் மாத்திரம் ஜொலித்து, பொதுவாழ்வில் அதாவது பொதுவெளியில் அபூர்வமாக இருந்தால் அந்த கிரேஸ் இருக்கும். எப்போ அவர்கள் பற்றிய எல்லாமே மிகைப்படுத்தப்பட்டு, எப்போதும் காணும்படியாக ஆகிவிட்டதோ அப்போதே அந்த கிரேஸ் மறைந்துவிட்டது.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. எப்போதும் காணும்படி ஆகிவிட்டதென்றால் தகவல்களையோ, அவர்களையா? இதைச் சொன்னாலும் இன்னமும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. இன்னமும் பைத்தியமாகத்தானே அலைகிறார்கள்!
நீக்குஇன்றைய பாடல்கள் கேட்ட நினைவு இல்லை. பிறகு காணொளி பார்க்கணும்.
பதிலளிநீக்குபாருங்கள்.. கேளுங்கள்... ரசித்தீர்களா என்று சொல்லுங்கள்!
நீக்குகாதல்ஜோதி படம் பற்றிக் கேள்விப்படுவது முதல் முறை. அண்ணா எழுதிய கதை 1970ல் ரொம்ப அவுட் டேட்டட் ஆகி இருக்குமே! அதைப் போய் தைரியமாகப் படமாக எடுத்தார்களா?
பதிலளிநீக்குஇந்தப் பாடலையும் கேட்ட நினைவில்லை. பாடல் என்னவோ இனிமையாகத்தான் இருக்கின்றது. தலைவரின் ஆரம்பக்கால அடக்கமான குரல் கேட்பதற்கு சுகம்.
சர்வர் சுந்தரத்தில் அப்படி என்னதான் ஆயிற்று இருவருக்கும் இடையில்?
எம்.எஸ்.வி ராமமூர்த்தியை விட்டுப் பிரிந்த பின்னும் பிரமாதமாக இசையமைத்தார் என்றாலும் ஆரம்பக்காலத்தில் இரட்டையர்களின் வெற்றிக்கு ராமமூர்த்தியின் பங்களிப்பு எம்.எஸ்.வியின் பங்களிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. இசை நுணுக்கங்களில் எம்.எஸ்.வியை விட ராமமூர்த்தி இன்னும் சிறந்தவர் என்றே கேள்விப்பட்டிருக்கின்றேன். எவ்வளவு வாத்தியங்கள் இசைக்குழுவில் இருந்தாலும், ஒருவர் சுருதி பிசகினாலும் ராமமூர்த்தி உடனே சுட்டிக்காட்டுவாராம் ("அந்த ரெண்டாவது ரோவில் நான்காம் வயலின் சுருதி சேரல்லியே").
வாலியை எனக்குப் பிடிக்கும். ஆனால் இந்தப் பாடலில் வாலியின் வரிகள் ரொம்ப சுமார் ரகம் (other than the title for today "நீர் கொண்ட மேகம் பொதுவானது நிலம் பார்த்து நீரை பொழியாதது").
வாங்க சூர்யா ஸார்.. நான் இன்னொரு நாளில் பகிரப்போகும் சாட்டை கையில் கொண்டு பாடல்தான் இந்தப் படத்தில் மிகப் பிரபலமான பாடல். தலைவர் பாடல் பத்தோடு பதினொன்றாக போனது வருத்தம்! படம் பெரிய அளவில் ஓடியதாகத் தெரியவில்லை. தலைவரின் குரலுக்கு கேட்கவா வேண்டும். இளமையான இனிமையான குரல் வேற...
நீக்குசர்வர் சுந்தரத்தில் என்ன நடந்தது என்று யாராவது தனியாக புத்தகம் போட்டிருந்தால் தகவல் கிடைக்கும். எப்போதுமே திறமையானவர்களுக்கு இரண்டாம் இடம்தானே.. ஆனால் எம் எஸ் வி யும் ஏப்பை சாப்பை இல்லையே.. வெகு திறமைசாலிதான் அவரும்.
வாலியைப் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் அதே கருத்துதான் எனக்கும்.
கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அம்மன் வேடத்தில் எந்த நடிகையும் சோபிக்கவில்லை. அறுபதுகளில் விடலைப் பையர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த (பட்டணத்தில் பூதம் / ஊட்டி வரை உறவு, etc.) கே.ஆர். விஜயா, சட்டென்று எழுபதுகளின் ஆரம்பத்தில் சாமியாக மாறிவிட்டார்.
பதிலளிநீக்குஎனக்கென்னவோ கே ஆர் விஜயா நடிப்பு மனதில் பதிவதில்லை. பட்டணத்தில் பூதம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். அப்பாதுரை பார்த்தால் ஒரு கமெண்ட் போடுவார்! அவர் சாமியாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் மவுசு குறையவில்லை. சின்னப்பெண்ணாக நடித்து, தானே தயாரித்து, 'நான் வாழ வைப்பேன்' படத்தில் மேக்சி எல்லாம் போட்டுக் கொண்டு சிவாஜியுடன் ஆடிப் பாடினார்!
நீக்குஉடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குகூடவே வேண்டுகோளும் வைக்க வேண்டும் இல்லைனா கண்டிஷன் போட வேண்டும். குடிக்கக் கூடாது என்று! குடிக்க மாட்டார்கள் என்று நம்புவோம். உடல் உறுப்பு தானம் என்பது நம் பொறுப்பைக் கூட்டும் செயல்.
கீதா
உண்மை. அவர்களுக்காக தெரிய வேண்டும்! அல்லது பொறுப்பானவர்கள் எடுத்துச் சொல்லி இருப்பார்கள்.
நீக்குவாங்க கீதா.
சினிமா செய்திகள் படித்தேன். பாடல்கள் கேட்ட நினைவில்லை.
பதிலளிநீக்குவாங்க வெங்கட். நன்றி.
நீக்குமுதல் பாடல் மலையாளப் பாடல் கேட்டதில்லை, ஸ்ரீராம். எம் எஸ் வி குரல். அவருக்கு மலையாளம் தாய்மொழி என்பதால் பாடுவதும் எளிதாக இருநிருக்கும். ஆச்சரியம், தமிழ்ப்பாடல் பாடும் போதும் மலையாளம் வாசனை எட்டிப் பார்த்தது இல்லை என்றே தோன்றும்!
பதிலளிநீக்குபாடல் நல்லாருக்கு. அக்காலத்து மெட்டில்.
கீதா
நானும் இப்போதுதான் கேட்கிறேன் கீதா.. JKC அனுப்பித் தந்திருக்கிறார்.
நீக்குஸ்ரீராம் அப்பாடல் ஜெயசந்திரனா எம் எஸ் வியஆ? நீங்க சொல்லி யுட்யூப் லிங்க் போய் கேட்டால் எம் எஸ் வி போல இருக்கிறதே
பதிலளிநீக்குகீதா
மற்றுமொரு விசேஷம். எம் எஸ் விஸ்வநாதன் தன்னுடைய கணீர் குரலில் பாடிய “கண்ணு நீர் துள்ளிய ஸ்த்ரீயோடு உவமிச்ச” என்ற பாடலும் புகழ் பெற்ற ஒன்று. கேட்க விரும்புவர்கள் யு டியூபில் கேட்கலாம் //
நீக்குஓகே பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன். முதல் கருத்தின் எழுத்துகள் மறைந்திடட்டும்!!!! ஸ்ரீராம்!!!!
கீதா
ஹா.. ஹா.. ஹா... 'என்னடா நாம் கேட்டபோது ஜெயச்சந்திரன் குரல் சுப்ரபாதம் சுப்ரபாதம் என்றது.. இப்போ மாயாமா இருக்கே' ன்னு பார்த்தேன்!!
நீக்குசுப்ரபாதம்....ஜெயசந்திரனின் குரல் ஆஹா!!!
பதிலளிநீக்குஅழகான மோஹனம்! கேட்டிருக்கிறேனோ?! இப்பாடல். கேட்ட நினைவு வருகிறது கேரளத்தில் இருந்தபோது.
மனதிற்கு இதமான பாடல்....கேட்கும் போதே சுகம்...ஜெ சவின் குரலும் மோகனமும்....
கேட்டுக் கொண்டே தட்டுகிறேன். சரணத்தில் வரி முடியும் போது மந்திரமே...மந்திரமே.....அதன் பின் சங்கதிகள் சூப்பர் அது போல அடுத்த சரணம்....
கீதா
ஜெயச்சந்திரன் குரல் என்றும் இனிமையானது.
நீக்குட்ரான்ஸ்லிட்டரேஷன் - தமிழ்!!!!! சில்பி மலையாளத்தில் தமிழ் வார்த்தை சிற்பின்னே வந்திருக்கு. இட்ஸ் ஓகே மலையாளத்தில் நிறைய வாக்குகள் தமிழ் தான். பண்டைய தமிழ்தான்!
பதிலளிநீக்குகீதா
அதுல நானொண்ணும் அறியில்லா கேட்டேளா... எனக்கு மலையாளம் கொறச்சு கொறச்சு கூட அறியான்!
நீக்குஹாஹாஹா....ஸ்ரீராம், அறியில்லான்னு சொல்லிட்டு மலையாளத்துலயே பேசிட்டீங்களே!
நீக்குகீதா
ஏன் கன்னட மருமகள் கன்னடம் கற்று தரவில்லையா? கன்னட பாடல் எதுவும் போடவில்லையே. கொத்தில்லா
நீக்குJayakumar
கன்னட மருமகள் யாருக்கு? எனக்கில்லை. கீதாவுக்கும் இல்லை.. பின் யாருக்காக்கும்?!
நீக்குதப்பு. அதனால் என்ன ஒரு கன்னட கானடா பாடல் போடுவதில் குழப்பம் இல்லை.
நீக்குபோட்டுட்டா போச்சு..
நீக்குஎதிலும் வாதமில்லை.
மொழியில் பேதமில்லை!
நேரம் போதவில்லை!!
கே ஆர் விஜயா சொல்லியிருப்பவை பார்த்தீங்கனா, அப்போ ரசிகைகள் வீடு வரை செல்ல முடிந்திருக்கிறதே என்று. இப்ப அப்படி முடியுமா?
பதிலளிநீக்குஎனக்கு கே ஆர் வி நடிப்பு கவர்ந்ததில்லை. சரி என்ன படம் பார்த்தேன் அவரின் நடிப்பைச் சொல்வதற்கு? ஏதோ சில சீன்கள்? யெஸ் படத்தின் பெயர் தெரியாமலேயே!
கீதா
இது சம்பந்தமாக சிவசங்கரி எழுதிய ஏதோ ஒன்று அரைகுறையாக நினைவுக்கு வருகிறது.. அவரும் அவர் தோழியும் நேரே சென்று பார்த்த யாரோ ஒருவர் பற்றி... சொல்லத்தெரியவில்லை. நானென்ன பானு அக்காவா? எல்லாவற்றையும் சட்சட்டென சொல்வதற்கு?
நீக்குஹாஹாஹா...அதைச் சொல்லுங்க...அந்தக் கடைசி வரியைச்சொன்னேன்!
நீக்குகீதா
//அவரும் அவர் தோழியும் நேரே சென்று பார்த்த யாரோ ஒருவர் பற்றி... சொல்லத்தெரியவில்லை. // I think Savithri!
நீக்குஆமாம். அப்படிதான் நினைக்கிறேன். சரி என்றுதான் தோன்றுகிறது. சாவித்ரியின் வீழ்ச்சிக் காலங்களில்.
நீக்குமிருதங்க சக்கரவர்த்தி படம் சுசீந்திரத்தில் ஷூட்டிங் நடந்தப்ப, எங்க ஊரில் சிலர் என் வகுப்புத் தோழிகள் கூடப் பார்த்ததாகச் சொன்னாங்க. ஷூட்டிங் நடக்கையில்.
பதிலளிநீக்குகீதா
அடடே...
நீக்குஇஃகி,இஃகி,இஃகி, மிருதங்கச் சக்கரவர்த்தி படம் பார்க்கையில் நானும், நம்ம ரங்க்ஸும் சிரிச்ச சிரிப்பு! இன்னமும் நினைவில் இருக்கு. தூர்தர்ஷனில் வந்தது. அதுவும் அந்த கிளமாக்ஸ் காட்சி! :)))))
நீக்குநினைச்சேன்... எனக்கே அது ஞாபகம் வந்தது என்னும்போது உங்களுக்கு வராமல் இருக்குமா? நீங்கள் எல்லாம் சிவாஜி எதிர்ப்பு கோஷ்டி!
நீக்குஹிஹிஹி, யாருக்கும் எதிர்ப்பும் இல்லை. ஆதரவும் இல்லை. படத்தைப்படமாக மட்டுமே பார்க்கிறேன். நடிகர்களிடம் தனியான அக்கறை காட்டுவதில்லை. ஜிவாஜிக்கு நான் எதிர்ப்பும் இல்லை. நேத்திக்குத் தான் முதல் மரியாதை படத்தையும் ஜிவாஜி நடிப்பையும் புகழ்ந்து இருந்தேன். ஜிவாஜி படங்களிலேயே எனக்குப் பிடிச்சது முதல் மரியாதை படம் தான்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குவெள்ளியின் பதிவு சிறப்பாக இருந்தாலும்
பதிலளிநீக்குவியாழனின் மறுபதிப்பு போல இருக்கின்றதே
பொக்கிஷத்தை எல்லா நாளிலும் தூவுவதாக சிறிய எண்ணம்...
நீக்குகே ஆர் விஜயா அவர்களது பேட்டி பகுதி சிறப்பு..
பதிலளிநீக்கு__/\__
நீக்குதெலுங்குப்படம் - ஹீரோ தன் ஆதர்ச நடிகருக்காகத் தன் காதலையே விற்கிறான் 3 கோடி ரூபாய்க்கு....காதலி பொய்ங்கலையா? அதிர்ச்சியடையலையா?
பதிலளிநீக்குபொதுவாகத் தெலுங்குப்படங்கள் சுபம் போடாம முடிக்கமாட்டாங்க ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்கன்னு வாசித்ததுண்டு. இதன் முடிவு எப்படியோ? எப்படியும் நான் படம் பார்க்கப் போவதில்லை அதனால் நீங்க தைரியமா எனக்கு மட்டும் முடிவைச் சொல்லிடுங்க!!!
வித்தியாசமா முடிச்சிருக்காங்களான்னு தெரிஞ்சுக்கதான்!
கீதா
// தெலுங்குப்படம் - ஹீரோ தன் ஆதர்ச நடிகருக்காகத் தன் காதலையே விற்கிறான் 3 கோடி ரூபாய்க்கு....காதலி பொய்ங்கலையா? அதிர்ச்சியடையலையா? //
நீக்குஅடையாம இருந்தா அவ என்ன காதலி! பின்னாடி சூப்பர்ஸ்டார் ரசிகனைப் பார்க்க வரும்போது அவளும் எல்லாத்தையும் கேட்டு கண்கலங்கறா... அன்றுதான் அவளுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கும் நாள்.
ஓ! திருமண நாளன்று ஓடி வந்து காதலனுடன் இணைந்துவிடுகிறாளோ? இல்லைனா தெலுங்கு மக்கள் பொங்கிடுவாங்களே.. என்ன கவலை பாருங்க எனக்கு...ஹிஹிஹி
நீக்குகீதா
ஆமாம். அவங்க அப்பாவும் சம்மதிச்சுடறார். பாதாளக் கரண்டி போட்டு படத்தோட கதையை அகழ்ந்து எடுக்கறீங்களே... நான் இன்னிக்கி அகண்டா 2 பார்க்கணும்! இன்னிக்கி நெட்ப்ளிக்ஸ்ல ரிலீஸ்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும் பிரார்த்தனையும்.
நீக்குஓ இப்படித்தான் பிரிஞ்சாங்களா இரட்டையர்கள்! பிரிந்த பிறகும் எம் எஸ் வி பங்கு கொடுத்திருப்பது வியப்பான அதே சமயம் அவர் மனதையும் காட்டுகிறது.
பதிலளிநீக்குதமிழ் நடிகை சுலக்ஷணா எம் எஸ் வியின் முன்னாள் மருமகள்.
கீதா
ஆமாம். மிக நல்ல மனிதர் எம் எஸ் வி. சுடுசொல் பேசி அறியாதவர். பிறர் மனம் நோக பேசாதவர்.
நீக்குகாதல் ஜோதி பாடல் சூப்பரா இருக்கு மெட்டு. மனசுல பசக் நீங்க சொன்னது போல்!. வேறு ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்துகிறது என்னன்னு சட்டென்று மனதிற்குவரவைல்லை.
பதிலளிநீக்குதலைவரின் குரல் இளமை! கவர்ச்சி!
கீதா
அதே.. அதே...
நீக்குஆட்டோ ஓட்டுநர்களைப் பாராட்டுவோம். அவங்க உடல் நலத்துடன் இருக்கவும் பிரார்த்திப்போம். பாடகர் ஜெயசந்திரன் பற்றிக் கேள்வி தான். பாடி எல்லாம் கேட்டதில்லை. இங்கே படித்துத் தெரிந்து கொண்டேன். அதென்னமோ நீலகிரினு படிச்சதுமே ஊட்டி நினைவுகள். எனக்கென்னமோ இன்னமும் அங்கே போய் வீடு பார்த்துக் கொண்டு இருக்கணும்னு நினைச்சது நடக்காமல் போனதில் இன்னமும் வருத்தம் இருக்கு. இனி எல்லாம் நினைச்சுப் பார்க்க முடியாது.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. ஜெயச்சந்திரன் பாடி கேட்டதில்லையா... ஏகப்பட்ட பாடல்கள் தமிழில் பாடி இருக்கிறார். பாடல்களைச் சொன்னால் 'அட, இதுதான் தெரியுமே, கேட்டிருக்கிறேன்' என்பீர்கள்!
நீக்குஇருக்கலாம்.
நீக்குகே.ஆர்.விஜயா மட்டுமில்லை, எனக்கு எந்த நடிக, நடிகையரும் அவ்வளவாகக் கவர்ந்ததில்லை. ஆனால் நடனம்னு நினைச்சால் பத்மினியை விட வைஜயந்திமாலாவும், அவரை விடக் கமலா லக்ஷ்மணனும் மிகவும் எழிலுடன் நடனம் ஆடக் கூடியவர்கள். அதிலும் கமலா லக்ஷ்மணனுக்கு உடல் வில்லாக வளையும். ரப்பர் பந்து போல் துள்ளிக் குதிப்பார்.
பதிலளிநீக்குஎங்கள் அப்பாவின் இளமைப் ப்ராயங்களில் அவர் கமலா ரசிகர்!
நீக்குபத்மினியிடம் பெண்களுக்கே உரித்தான எழில் (Grace?) குறைவு. கொஞ்சம் ஆண்மைத் தனம் எட்டிப்பார்க்கும் உடல்வாகு! ஆனால் வைஜயந்திமாலாவும், கமலாவும் இயல்பாகவே மிகவும் எழில் (Grace?)உள்ளவர்கள்
நீக்குஅது அந்தக் கால பார்வை! வைஜயந்தியிடம் ...ம்ம்ம்.... சரி.. உங்க கருத்து.. ஆனால் பத்மினியை ஏதோ ஒரு படத்தில் கொடி இடை என்று பாடும்போது கஷ்டமா இருக்கும். அல்லது தேவிகாவையா? ஒரு எழுத்து பிழையாயிருக்கோ என்று தோன்றும்.
நீக்குரஜேந்திரகுமார், வைஜயந்தி மாலா நடிச்ச "சாத்தி" படம் பார்த்திருக்கீங்களா? தமிழில் பாலும் பழமும். அதில் தமிழில் நடிச்ச சரோஜா தேவி(?)யை விட வைஜயந்தி அருமையாக நடிச்சிருப்பார். அதில் அவருடைய பூரண எழிலும் வெளிப்பட்டிருக்கும். இத்தனைக்கும் கறுப்பு, வெள்ளைப் படம்.
நீக்குராஜேந்திர குமார்
நீக்குஇல்லை. 'வை' படம் என்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடி விடுவேன்!
நீக்குதமிழகத்திலிருந்து சென்ற வைஜயந்தி மாலாவும் சரி, தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினியும் சரி, திரை உலகில் முதலாவது இடத்தில் இருந்தார்கள் தான். ஆனால் அவங்க இருவரும் பெரும்பாலும் அழகுப்பதுமையாகவே வந்து சென்றார்கள். டூயட் பாடுவதும் அதற்கு ஆடுவதும் தவிர்த்து எந்த வேலையும் இருக்காது. ஆனாலும் இருவரும் நடிச்சது (உண்மையான நடிப்பு) ஓரிரு படங்களில் தான். அதில் வைஜயந்திமாலாவுக்கு "சாத்தி" என்றால் ஹேமமாலினிக்கும் ஒரு படம் உண்டு. ரிஷி கபூருடன் ஜோடியாக நடிச்சிருப்பார். பஞ்சாபின் சில பகுதிகளில் உள்ள ஒரு வழக்கத்தைப் பின்பற்றி வந்த படம். அண்ணன் மனைவியை அண்ணன் இறந்ததும் அவன் குடும்பத்தைக் காக்க வேண்டி தம்பியை (வயதில் சின்னவனாக இருந்தாலும்) அண்ணிக்கு மணமுடித்துவிடுவார்கள். அப்படி ஒரு கதை தான் அந்தப் படமும். போடுவது என்பார்கள் பஞ்சாபில். படத்தின் பெயரும் அப்படித் தான் ஏதோ. ஹேமமாலினி அருமையான நடிப்பு. அதிலும் சொந்தப் பெண்ணே தாயை வெறுக்கும் காட்சி. பத்மினி கோலாபுரி தான் பெண்ணாக வருவார். அதென்னமோ படத்தின் பெயரே நினைவில் இல்லை. :(
நீக்குChaddhar போடுவது. வார்த்தை விடுபட்டிருக்கு.
நீக்குEk Chadar Maili Si (1986): This was their primary film as the leading pair, a bold adaptation of Rajinder Singh Bedi's novel where Hema Malini's character is forced by tradition to marry her younger brother-in-law, played by Rishi Kapoor, after her husband's death.
நீக்குகே.ஆர்.விஜயா சொன்னவை அவ்வப்போது துண்டு துண்டாக முகநூலில் படிச்சிருக்கேன். அந்தக் கால நடிகர்களிடம் பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அதோடு இல்லாமல் தேசப்பற்றையும் வளர்த்தார்கள். இப்போவோ?
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க... அதேபோல கதைகளில் "அட்றா அவளை வெட்றா அவளை என்று வன்முறையையும் தோன்றியதில்லை..
நீக்குஇன்றைய பாடல்களோ, படங்களோ தெரியாதவை. எம்.எஸ்.வி., ராமமூர்த்தியின் பிரிவு பற்றிய செய்திகள் தினமலர் வாரமலரில் ஒரு கட்டுரையாகப் பல ஆண்டுகள் முன்னரே வந்திருக்கு. கலைக்கோயில் "சித்ராலயா" பானரில் வெளிவந்ததுனு நினைக்கிறேன். படம் பார்த்திருக்கேன். காஞ்சனா ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடிச்சிருப்பது இன்னிக்குத் தான் தெரியும். நேற்றுப் பதிவு எழுதாத குறையை இன்னிக்குத் தீர்த்துக் கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். நாளைக்கு நெல்லை தொடருவார் இல்லையா? நான் படிச்ச கதை வெளிவருமா நாளைக்கு?
பதிலளிநீக்குதினமலர் கட்டுரை தலைப்பு சொல்லுங்க தேடிப்பார்க்கிறேன்! நேத்திக்கு பதிவு எழுதாத குறையா... அப்பாடி.. அப்படின்னு ரிலாக்ஸா இருந்தேன், இருக்கேன்!! நாளை என்ன வரும்னு அல்லது என்ன வரணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க கீதா அக்கா?
நீக்குஇப்போ இல்லை ஸ்ரீராம், அது சுமார் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் இருக்கலாம். சனிக்கிழமை மலரிலோ அல்லது ஞாயிறு மலரிலோ வந்த ஞாபகம். ஆன்மிக மலர் மட்டும் சேர்த்து வைத்திருந்தேன். அவையும் பேப்பர்காரரிடம் போட்டாச்சு. :(
நீக்குதலைப்பு என்னன்னு குன்ஸாவாவது சொல்லுங்க.. தேடிப் பார்க்கலாம்!
நீக்கு// காஞ்சனா ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடிச்சிருப்பது இன்னிக்குத் தான் தெரியும். //
நீக்குகீதா அக்கா... இப்போது தெரிந்து கொண்ட ஒரு செய்தி!!!! டெல்லி டு மெட்றாஸ் படத்திலும் ஜெய்சங்கர் காஞ்சனா ஜோடி!! 'புன்னகையோ பூ மழையோ' என்று ஒரு பாடல் அதிலிருந்து இப்போது கேட்டேன்!
ஆமாம்.. இன்னிக்கி என்ன திருவாழிமார்பரைக் காணோம்... அண்ணா... எங்க இருக்கீங்க அண்ணா... என்ன ஆளைக் காணோம்?
பதிலளிநீக்குஇன்றைய தமிழ் பாடல் கேட்டு இருக்கிறேன். மற்றையவை இப்பொழுதுதான் தெரியும். நன்றி.
பதிலளிநீக்குவாங்க மாதேவி.. நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குசுப்ரபாதம் சுப்ரபாதம் சுப்ரபாதம் காலை நேர பூபாள ராகத்தில் ஆரம்பித்த பாடல் மிக இனிமையாக இருக்கிறது. இயற்கை காட்சிகளும் அருமை.
பதிலளிநீக்குJKC ஸார் கவனிக்கவும்!
நீக்குK R விஜயா கட்டுரை படித்து இருக்கிறேன். அவரை எனக்கு என் சிறு வயதில் மிகவும் பிடிக்கும். என் மாமா தலை முடியை பறக்க விட்டப்படி கடற்கரையில் சிவப்பு புடவை பறக்க பெஞ்ச்மேல் நிற்கும் பட போட்ட சாக்லேட் டப்பா வாங்கி தந்தார் . எனக்கு K R விஜயா பிடிக்கும் என்பதால்.
பதிலளிநீக்குசாக்லேட் தீர்ந்த பின் அதில் என் பாசிகள் வளையல்கள் வைத்து இருந்தேன் பத்திரமாக பல ஆண்டுகள்.
அட.. அப்படி எல்லாம் டப்பாக்கள் வந்ததா?
நீக்குKing of Andhra thaluk பட விமர்சனம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமெல்லிசை இரட்டையர்களாக இருந்து, ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிந்த கதை இப்போது என்றால் யூடியூபில் ஆள் ஆளுக்கு அலசி இருப்பார்கள் .
அந்தக்காலம் எதர்கு பிரிந்தார்கள் என்று அவ்வளவாக தெரியாது.
காதல் ஜோதி அணையாதது பாடல் முன்பு ரேடியோவில் அடிக்கடி ஒலி பரப்பினார்கள். இப்போது தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சிகளில் கூட கேட்கவில்லை. பல ஆண்டு கழித்து கேட்டேன் இன்று.
ரேடியோவில் இந்தப் பாடல் ஒலிபரப்பினார்களா என்று எனக்குத் தெரியாது. நான் கேட்டதில்லை. இப்போது சமீபத்தில்தான் கேட்டேன். நன்றி கோமதி அக்கா.
நீக்கு