நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
15.1.26
முத்தமொன்று கேட்கிறது சத்தமின்றி மலர்ந்திருக்கும் ஒற்றை ரோஜா
மேலே இருப்பது வைகுண்ட ஏகாதசி முடிந்து துவாதசி அன்று ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு.
முன்பு சில வருடங்களுக்கு முன் விரதம் இருந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா.. மறுபடியும் இருந்து பார்த்தால் என்ன என்று தோன்றவே, மறுபடியும் சென்ற சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தேன். அப்படி சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்பதை வீட்டாருக்கு காலையில்தான் அறிவித்தேன். இரண்டு காரணங்கள். என் மனம் மாறிவிட்டால் கேன்சல் செய்து விடலாம். இரண்டாவது அவர்கள் யாராவது ஏதாவது பேசி கலைத்து விட்டால்..?!!
முன்பு உண்ணாவிரதம் ஒரு நாளில், மௌன விரதம் ஒருநாளில் என்று தனித் தனியாக இருந்தது போக, இந்த முறை உண்ணா விரதத்துடன் மௌன விரதமும் சேர்த்தே இருக்கத் தீர்மானித்தேன். காலை விஷயம் தெரிந்ததும் பாஸ் அதிர்ச்சி அடைந்தார். அப்புறம் சிரித்தார். அப்புறம் சில உறவுகளுக்கு இதை ஒலி பரப்பினார் ஏதேதோ பேசிப் பார்த்தார்.
"மௌனவிரதம் என்றால் வாயை இப்படி இருக்க மூடிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன?"
கேள்வி நியாயம்தான். ஆனால் வாயைத் திறந்து வைத்து என்ன செய்வது? காற்றா வாங்கப் போகிறோம்? அல்லது மறந்துபோய் பேசி விட்டால்? இப்படி உதடுகளை அணைத்தபடியே வைத்திருந்தது எனக்கும் கொஞ்சம், செயற்கையாகத்தான் இருந்தது.
நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் பசி என்ற உணர்வு இல்லை. இதற்கு கவலைப்படணுமா என்று தெரியவில்லை! பாஸ் வற்புறுத்தி காலை மாலை காஃபி தவிர எக்ஸ்டரா ஒரு டீயும் கொடுத்து விட்டார். எபப்டியோ ஒரு நாள் கழிந்தது. சட்டென யாராவது அழைத்தால் உடனே பதில் குரல் கொடுக்கும் அபாயம் இருந்தது. என் தங்கை, அவள் பெண்கள், பேத்தி வீடியோ காலில் அழைத்தது அழைத்து வம்பு செய்தார்கள்.
பாஸ் பொங்கல் கணு பர்சேஸ் என்று மருமகளுடன் வெளியே செல்ல, மகன்கள் இருவரும் வேறு வேலையாக வெளியே சென்று விட, அவர்களவ்வப்போது என்னை போனில் அழைத்து சில விஷயங்களை என்னிடம் கன்வே செய்ய முயன்றது வேடிக்கை. என்னை உம் கொட்ட சொன்னார்கள். நான் மனதுக்குள் ஊஹூம் என்று சொல்லிக் கொண்டேன்! நாங்கல்லாம் யாரு... ஸ்ட்ரிக்ட்டு... ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு...
தற்செயலாக நான் இப்படி விரதம், அதுவும் மௌன விரதமும் சேர்த்து இருந்திருந்தாலும், கீதா அக்கா பிளாக் படித்தபோது கூடாரவல்லிக்கு முதல் நாளும் விரதம் இருப்பார்கள் என்று தெரிய வந்ததது. கூடாரவல்லி அன்று காலை குளித்தபின்தான் பேசினேன்! காலை டிஃபன் சாப்பிடாமல் கூடாரவல்லி சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன்.
வரும் சனிக்கிழமை 'கணு' என்பதால் 'உ வி', 'மௌ வி' இருக்க முடியாது!
ஒருநாள் எங்கள் வீட்டு ரோஜாச்செடியில் இந்த தோற்றம் பார்த்ததும் படம் பிடித்து வைத்தேன். சில நாட்களுக்குப் பின் திடீரென மனதில் தோன்றி அதற்கு கீழே உள்ளதை எழுதி இன்ஸ்டாவிலும், ஸ்டேட்டஸிலும் வைத்தேன். ஸ்டேட்டஸில் நானாக வைக்கவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு விபத்து போல அதில் இடம்பெற, பல வருடங்களுக்கு முன் எனக்கு அதிகாரியாய் இருந்த ஒரு பெண் அதிகாரி எனக்கு வாட்ஸாப்பில் 1 2 1 ல் குறிப்பிட்டு கட்டைவிரல், ஆட்காட்டிவிரலை ஒன்று சேர்த்த எமோஜி போட்டு பாராட்டி இருந்தார். பின்னும் சில மறந்து போன காண்டாக்ட் லிஸ்ட் நட்புகள் பாராட்டின! இப்போதெல்லாம் அவ்வப்போது நானே ஸ்டேட்டஸ் வைக்கிறேன்! அடுத்து வைத்த ரோஜா ஒன்றையும் கூடவே தருகிறேன்!
மொட்டாய் மலராய்
தோற்ற மயக்கம் காட்டி
தேற்ற முயல்கின்றன
மலர்காணா செடியின்
ஏக்கத்தை
துளிர் இலைகள்
*****************************************
(2)
முத்தமொன்று கேட்கிறது
குத்தும் முள் பாதுகாப்பில்
சத்தமின்றி மலர்ந்திருக்கும்
ஒற்றை ரோஜா
முட்களின் பாதுகாப்பில்
பூக்களின் இளவரசி!
பறிக்கவும் மனமில்லை - விட்டு
நகரவும் முடியலை!
சத்தம் வராமல், ரத்தம் சிந்தாமல்
முத்தம் கொடுக்க
யுக்தி ஒன்று சொல்லுங்கள்!
இதற்கு 20 வயது தம்பி ஒருவன் பதில் அனுப்பி இருந்தான். அவனிடமிருந்து அதை நான் எதிர்பார்க்கவில்லை. சட்டென பிடித்துப்போய் அவனைப் பாராட்டினேன். அவன் அனுப்பி இருந்தது...
சத்தம் வராமல் முத்தமிட....
தூதுவிடுங்கள் காற்றிடம்....
அது கொண்டு சேர்க்கும் பூவிடம்...
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
உறுபிழை பொருத்தருள்வாய்
மறுமை வேண்டேன் - அன்பில்
வறுமை வேண்டேன் - என்பால்
பொறுமைகொண்டு எனக்கும்
அந்த மேன்மையை
போதித்து காத்தருள்வாய் எம்பெருமானே
(செல்வாண்ணா தனது தளத்தில் பகிர்ந்திருந்த திருவெம்பாவை பாடல் ஒன்றை ஒட்டி எழுத முயன்றது!)
சென்ற வெள்ளியன்று காதல் ஜோதி படத்திலிருந்து SPB குரலில் ஒலித்த பாடல் கொடுத்திருந்தேன். இன்று அதே படத்திலிருந்து இன்னொரு பாடல். அந்தக் காலத்தில் இந்த மாதிரி மாட்டு வண்டிகள் சகஜம். எனவே பரபரப்புடன், ஈடுபாட்டுடன் காட்சியை ரசித்திருப்பார்கள். இப்பொழுது 'பார்றா.. இப்படி எல்லாம் வண்டி இருந்திருக்கிறது' எனும் எண்ணத்தில் ரசிக்கலாம்!
மாடுகளை விரட்டி ஓட்டிக்கொண்டு, வாலியின் பாடலை, T K ராமமூர்த்தி இசையில், சீர்காழி கோவிந்தராஜன் குரலில், பாடிக் கொண்டே ஓட்டுபவர் ரவிச்சந்திரன்.
ஓடிக்கொண்டிருக்கும் இரட்டை மாடுகளை அவர் 'ஓஹோஹோஹோ' என்று நிறுத்தி, பாதையில் போவோருக்கு வழிவிட்டு, தொடர்ந்து பாடுவார். காட்சியில் பெரிய சாலையாக எல்லாம் இருக்காது. அந்தக் கால சாலை! இதை அடுத்த பாடலிலும் பார்க்கலாம்! அதில் வேறு மாதிரி!
இன்னொன்று, "மோட்டார் என்ன சைக்கிள் என்ன எல்லாம் எனக்கு பின்னாடி.. போட்டா போட்டி வச்சா இங்கே நான்தான் போவேன் முன்னாடி" எனும் அணுகுமுறை ரசிக்கத்தக்கதாயிருக்கும். தன்னம்பிக்கை, உற்சாகம்.
முத்து படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாட்டில், பாடலின் இறுதியில் தன்னை முந்திச் செல்லும் கல்லூரிப் பேருந்தை ரஜினி மறுபடி விரட்டி, குதிரை வண்டியால் வெற்றி கொள்வார். அந்தக் காட்சியையும் நான் ரசிப்பேன்.
'ஓரம் போ ஓரம்போ ருக்குமணி வண்டி' வருது பாடல் நினைவுக்கு வருகிறது. நடந்து சென்று கொண்டே பாடினாலும் 'பார்த்துப் போ... ஏய் பார்த்துப் போ... நீ நடந்து போகும் சாலையிலே ஒரு நண்பரும் வரக்கூடும்.. சில நரிகளும் விளையாடும்' வரிகளும் நினவுக்கு வருகிறது.
C A பாலன் எழுதிய 'தூக்குமர நிழலில்' என்கிற கதையை 'இன்று நீ நாளை நான்' என்று படமாக இயக்கினார் மேஜர் சுந்தரராஜன். சிவகுமார், ஜெய்சங்கர். லக்ஷ்மி நடித்திருந்த படத்துக்கு இசை இளையராஜா. படத்தில் இன்னும் சில அழகான பாடல்கள் உண்டு. ஓரிரு பாடல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.
இன்று அதிலிருந்து ஒரு வண்டி ஓட்டும் பாடல்.
இங்கே கங்கை அமரன் எழுதிய பாடலை S P பாலசுப்ரமணியம் குரலில் இளையராஜா இசையில் சிவகுமார் பாடிக் கொண்டே ஓட்டுகிறார்! இதில் ரயில்வே கேட் மூடியதும் ஓவ் ஓவ் ஓவ் என்று வண்டியை நிறுத்துவார் SPB! கங்கை அமரனின் இயல்பான நகைச்சுவையும் பாடலில் இடையே இடையே உண்டு.
எனவே இன்றைய பாடல்கள் பகிர்வின் 'தீம்' மாட்டுவண்டி ஒட்டிக் கொண்டே வித்தியாசமாக பாடுவது. 'பாரப்பா பழனியப்பா', 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' போன்ற இன்னும் சில பாடல்கள் எல்லாம் வேறுரகம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
பாங்காக்: தாய்லாந்தில், மனித ரத்தத்தின் ரகசியங்களை ஆராயும் விஞ்ஞானிகள் உலகில் மூன்று பேருக்கு மட்டுமே, அரிதிலும் அரிதான ரத்த வகை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சிரிராஜ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், 5.44 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
அவர்கள் பரிசோதனைகளின் போது, பொதுவான 'ஏ','பி','ஓ' ஆகிய ரத்தக் குழு அமைப்பில் ஏற்படும் சிறு மாறுபாடுகளை ஆராய்ந்தனர். அப்போது 0.15 சதவீத நோயாளிகள் மற்றும் 0.03 சதவீத ரத்த கொடையாளர்களின் ரத்த மாதிரிகளில் வித்தியாசங்கள் தென்பட்டுள்ளன.
அந்த மாதிரிகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, ஒரு நோயாளி மற்றும் ரத்த தானம் செய்த இரண்டு பேருக்கு, 'பி(ஏ)' என்ற அரிய ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 'பி' ரத்த வகையின் கலப்பு வடிவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரத்த வகைகள், ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஆன்டிஜென்கள்' எனப்படும் புரதம் மற்றும் சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. 'ஏ', 'பி' ஆன்டிஜென்கள் மற்றும் ஆர்.எச்., காரணி ஆகியவற்றின் கலவையால், 'ஏ', 'பி', 'ஏபி', 'ஓ', என்ற குழுக்கள், 'நெகட்டிவ்', 'பாசிட்டிவ்' என்ற காரணிகள் அடிப்படையில், ரத்த வகைகள் எட்டாக பிரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள 'பி(ஏ)' ரத்த வகை என்பது 'ஏ.பி.ஓ.,' மரபணுவின் மாற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த ரத்தத்தில் 'பி' ஆன்டிஜென்களுடன், 'ஏ' ஆன்டிஜென்களின் தன்மை சிறிது இருந்ததால், பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 'பி(ஏ)' ரத்த வகை தோராயமாக ஒரு லட்சத்து 80,000 பேரில் ஒருவருக்கு காணப்படும் ஒரு மரபணு வினோதம் என்று கூறியுள்ளனர். அரிய ரத்த வகைகளைக் கொண்ட நபர்களுக்கு மாற்று ரத்தத்தை ஏற்ற முடியாது. இதனால் அவசரகாலத்தில் தகுந்த ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. எனவே உலக சுகாதார அமைப்பு, ரத்தப் பரிசோதனை முறைகளை மேம்படுத்துவதுடன், உலகளவில் தானம் செய்வோரின் தரவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
=======================
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா சமீபத்தில் காலமானார். அவரின் 90வது பிறந்த தினம் இன்று(டிச., 8). இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட பதிவில்...
"என் அன்பான இதயமே.... பிறந்தநாள் வாழ்த்துகள். இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது நீங்கள் என்னை விட்டு பிரிந்து இதயம் நொறுங்கி போய் உள்ளேன். அதை மெதுவாக சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து கொண்டிருக்கிறேன்.
நமது இனிய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை. அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பதே எனக்கு பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நமக்கு கிடைத்த அழகிய ஆண்டுகளுக்காகவும், நம்முடைய அன்பை உறுதிப்படுத்தும் நம்முடைய இரு அழகிய மகள்களுக்காகவும், என் இதயத்தில் எப்போதும் தங்கியிருக்கும் அத்தனை அழகான, மகிழ்ச்சியான நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
உங்கள் பிறந்தநாளில் உங்கள் பணிவுக்காகவும், இதயத்தின் நன்மைக்காகவும், மனிதநேயத்தின் மீதான அன்புக்காகவும் நீங்கள் பெரிதும் தகுதியான அமைதியின் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கடவுள் உனக்கு அருள்வாராக என்று பிரார்த்திக்கிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே... நம்முடைய இனிய 'ஒன்றாக' இருந்த தருணங்கள்...!" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
"Eko" has several meanings depending on the language and context, most commonly referring to the firstborn child in Indonesian/Javanese culture (from "eka" meaning "one"), a Japanese Buddhist term for the transfer of merit, or the name for Lagos, Nigeria, in the Yoruba language, meaning "cassava farm". It's also a brand name for various tech companies, like Eko Health (digital stethoscopes) or an employee experience platform
படத்தின் தலைப்புக்கு அர்த்தம் இதுதான். ஒன்று. குரியச்சனும் போத்தனும் மலேசியாவிலிருந்து சில அரியவகை நாய் வகையை இந்தியாவுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தி விற்க முடிவு செய்கிறார்கள். அந்த ப்ராசஸில் அங்கு நாய்களை வைத்திருந்த ஒருவரை அணுகுகிறார்கள். அவருக்கு ஒரு இளம் மனைவி. அவர் இறந்த செய்தியை அவர் மனைவியிடம் சொல்ல அங்கு போனால் அந்த நாய்கள் இவர்களை பக்கத்திலேயே நெருங்க விடமாட்டேன் என்கின்றன. ஒருவழியாய் பெரிய நாய்களைக் கொன்று, சில குட்டிகளுடனும், அந்த பெண்ணுடனும் இந்தியா வருகிறார் குரியச்சன்.
குரியச்சன் என்னும் அந்த மர்ம நபர் எங்கே இருக்கிறார் என்று ஒவ்வொருவராக வந்து தேடுகிறார்கள். அவரைப் பழிவாங்க ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அவர் அழைத்து வந்திருக்கும் அந்த மலேஷியப்பெண் மந்திர தந்திரங்கள் தெரிந்தவர் என்றும் பேச்சு அடிபடுகிறது ஊருக்குள். நாய்களுக்கு ஒரு எஜமான்தான் இருக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. செம கதை. செம படம்.
'சட்சட்'டென திருப்பங்கள். நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதில் ஊசலாடும் காட்சிகள். மிக மிக அருமையான லொகேஷன்கள். இவர்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி எல்லாம் கதை கிடைக்கிறதோ என்று தோன்றுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம். முடிவை நாம் புரிந்து கொள்ளும் வகையில் காட்டி இருக்கிறார்கள். முன்னதான வசனங்களை கவனிக்க வேண்டும். நான் தமிழ் வசனத்தில்தான் பார்த்தேன்.
நெட்ஃபிளிக்சில் நான் படங்களில் ஒன்று.
================================
Drive - ஒரிஜினல் : தெலுங்கு - பிரைமில் தமிழில்
இந்தியாவுக்கு வெளியே இருக்கும் மகா பணக்கார ஆதி ஒரு மீட்டிங் முடித்து வீட்டுக்கு கிளம்புகிறார். வழியில் வருகிறது ஒரு ஃபோன். அவனுடைய இந்த பயணம் உடனடியாக முடிவுக்கு வரக்கூடிய பயணம் இல்லை என்கிறது மர்மக் குரல். குரலுக்குரியவன் ஆதி சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் ஹேக் செய்திருக்கிறான். முதலில் எடுத்தெறிந்து பேசும் ஆதி, இவன் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவர, வெளிவர அதிர்கிறான், பதட்டமாகிறான், பணிகிறான், கெஞ்சுகிறான். செய்திச் சேனல்கள் பரபரக்கின்றன. அடுத்தடுத்து ரகசியங்கள் வெளியாகின்றன. க்ளட்ச் எடுத்து உடனடியாக படத்தின் வேகம் டாப் கியரில் பறக்கிறது. போலீஸால் கூட செய்ய முடியாத ஹேக் போன்ற சமாச்சாரங்களை வில்லன் செய்வது நம்ப முடியாவிட்டாலும், படங்களில் பார்த்து பழகி விட்டதால் பெரிய இடையூறாக தோன்றவில்லை. அந்த ஹேக்கர் கடைசியில் கதாநாயகன் என்று சொல்லப்படும் ஆதியை படமுடிவில் என்ன செய்கிறான் என்பது கதை. இரண்டாம் பாகத்துக்கான முன்னுரையோடு படம் தற்காலிகமாக முடிகிறது. பார்க்கலாம் டைப் படம். பரபரபரவென நகர்கிறது.
1960 ஆம் ஆண்டு வில்லிவாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் செயல்பட்டு வந்தது. அதன் தலைவா ஜீவா என்றழைக்கப்பட்ட நாரண துரைக் கண்ணன். பழுத்த தேசியவாதி, பாரதியார் கவிதைகளை நாட்டுடைமையாக்கப் பாடுபட்டவர்களில் ஒருவர். பல ஆண்டுகள் பிரசண்ட விகடன் என்னும் பத்திரிகை ஆசிரியராகப்பணியாற்றியவர். புதிய இளம் எழுத்தாளாகள். கவிதைகள். சுதைகள் சுட்டுரைகள் வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.
தொ.மு.சி. .அழகிரியார் எழுத்தாளராக வேண்டும் என்ற பெருங்கனவோடு வந்த போது அவர்களை ஆதரித்து பிரசண்டவிகடன் பத்திரிகையில் உதவியாசிரியராக நியமித்துக் கொண்டார். அவர்கள் எழுதிய கதைகளை வெளியிட்டு எழுத்தாளராக அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் தலைவராக இருந்த செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நான் செயலாளர், நா. கிருஷ்னாமூர்த்தி துணைச் செயலாளர். அதனால் அவரை அடிக்கடி சந்தித்து வந்தோம். பிரசண்ட விகடனில் அவர் என் முதல் சிறு கதையை வெளியிட்டார். அதோடு கதை நன்றாக இருக்கிறது. எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார். ஆனால் நான் எழுதிய முதல் கதை என்னிடம் இல்லை. அதன் பெயரும் நினைவில் இல்லை. அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி. லட்சுமி போன்றோரின் முதல் சிறுகதைகளையும் பிராண்டவிகடந் தான் வெளியிட்டது.
1961ஆம் ஆண்டில் செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநாடு வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் பொருளாளக இருந்த டி. பார்த்தசாரதி மாநாட்டில் சிறப்புரை ஆற்ற அறிஞர் அண்ணாவை அழைத்து வந்தார். கா.ஸ்ரீ..ஸ்ரீ, வெ.சாமிநாதசர்மா ஆகியோர் வாழ்நாள் சாதனையைப் போற்றி பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா சொன்னார், 'எழுத்தாளர்கள் கவிதைகள், கதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருக்கக்கூடாது. சமூக சரித்திர வரவற்று நூல்களையும் எழுதவேண்டும். செங்கற்பட்டிலும் சென்னையிலும் பல ஆறுகள் இருக்கின்றன். அவற்றில் எப்போதும் நல்ல நீர் ஓடாவிட்டாலும், வாழ்வாதாரத்திற்கு ஆறுகளே அடிப்படையாக இருக்கின்றன. அவை பற்றியும் எழுத வேண்டும். நான் செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னால் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அது அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கள் கடைசி நாள் பற்றியும் அவரைக் கொல்வதற்கு ஆயத்தமான ஜான்வர்க்கிப்பூத் பற்றியும் மாறி மாறி சொல்லும் புத்தகம். 1865 ஏப்ரல் 14 தேதி நடந்த மகத்தான சோக நிகழ்ளை அப்படியே சித்தரிப்பது.
அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி வெற்றிபெற்று விட்டார். ஆறு நாட்கள் ஆகி இருந்தன. எதிர்த்துப் போராடிய மாநிலங்களின் தலைமை தளபதி சரணடைந்து விட்டார். அடிமை ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மீது கோபம் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அடக்கமாகவே தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அவர் புத்தகம் படிப்பதிலும், இசை கேட்பதிலும் நாடகங்கள் பார்ப்பதிலும் ஆர்வங்கொண்டவர்.
தலைநகர் வாஷிங்டன் டிசியில் போர்டு கலையரங்கில் பல நாட்களாக நம் அமெரிக்கஸின்' என்ற நாடகம் நடைபெற்று வந்தது. அதைைக் காண 14 ஆம் தேதி இரவு ஜணதிபதி புறப்பட்டு சென்றார். அவர் குடும்பத்தினரும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர் நாடக அரங்கில் அமர்ந்ததும் நாடகம் தொடங்கியது. இரவு பத்து மணி. சிரிப்பும். கோண்டாட்டமுமாக நாடகம் நடத்து கொண்டிருக்கும் போதே ஜணதிபதியின் மெய்க்காவலர் நால்வர் தண்ணீர் குடிக்க வெளியில் சென்று விடுகிறார். கொலைகாரன் ஜனாதிபதிக்குப் பின்னால் உட்கார்ந்து நாடகம் பார்ப்பது போல நடித்துக் கோண்டிருக்கிறான். கொலைகார ஜான் வேர்க்ஸ்ஸபூத நிஜத்தில் நாடக நடிகன்தான்.
அமெரிக்கனின் நாடகத்தில் மூன்றாவது காட்சி, நகைச்சுவையானது பார்வையாளர்கள் கைதட்டி கொண்டும். சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். திடீரென்று துப்பாக்கிச் சப்தம் கேட்கிறது. நாடகத்தில் தான் நுப்பாக சூடு நடக்கிறது என்று பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டு ஓடுகிறார்கள். நாடகக்காரர்கள் துப்பாக்கி சூட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நாடகத்தைத் தொடர்கிறார்கள். ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தலை சாய்கிறது. கழுத்தில் இருந்து ரத்தம் வழிகிறது. சுதந்திரம் என்று கத்திக் கொண்டு பூத் வெளியில் ஓடுகிறான் பிடிகக வந்தவர்களை கத்தியால் குத்திவிட்டு, சுவர் ஏறி குதித்து ஓடிவிடுகிறான்.
புத்தகம் என் மனம் சுவர்ந்தது. சோகத்தின் ஊடாக சொல்லப்பட்டு உள்ளது. புத்தகத்தின் பெயர் ஆபிரகாம் லிங்கள் கடைசி நாள். எழுதியவர் மோஸ்ஒயிட் என்று பேசினார் அறிஞர் அண்ணா.
1962 ஆம் ஆண்டில் செங்கற்பட்டு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மாநாடு பல்லாவரத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் சங்கத் தலைவர் நாரண துரைக்கண்ணன் என்னும் ஜீவா. நா. கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தனபால் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருமலைப்பிள்ளை சாலையில் இருந்த முதலமைச்சர் கே.காமராஜ் இல்லத்திற்குச் சென்றார். சிறிது நேரம் காத்திருந்தோம். முதலமைச்சருக்கு நாரண துரைக்கண்ணன் நன்கு தெரிந்தவராக இருந்தார். எங்களை உட்காரச் சொல்லி என்ன காரியம் என்று விசாரித்தார்.
"செங்கற்பட்டு மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்க இரண்டாவதுமாநாடு பல்லாவரத்தில் நடைபெறுகிறது. அதனை நீங்கள் தொடங்கி வைக்க வேண்டும்"
. "எப்பொழுது?"
"தங்களுக்கு வசதிப்படும் ஒரு தேதியில்"
முதல்வர் நாரண துரைக்கண்ணனை ஒரு பார்வை பார்த்தார். பிறகு "யாரையெல்லாம் அழைக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
"அண்ணாதுரை அவர் செங்கல்பட்டு மாவட்டத்துக்காரர்."
"அவர் இருக்கும் போது நான் எதற்கு? நீங்கள் அவரையே வைத்துக் கொண்டு மாநாட்டை நடத்திக்கொள்ளுங்கள்" என்றார்.
"அவர் மாலையில்தான் வரப் போகிறார் நீங்கள் காலையில் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறீர்கள். மறுக்காமல் வரவேண்டும். இளம் எழுத்தாளர்கள் உங்கள் பேச்சைக் கேட்க ஆவலாக இருக்கிறார்கள்." நாரண துரைக்கண்ணன் கூறினார்
காமராஜ் ஒரு சிரிப்பு சிரித்தும் கொண்டு, "ஆட்டும் பார்க்கலாம்" என்று எங்களுக்கு விடை கொடுத்தார். அவர் வருவது உறுதியாகி விட்டது என்று கீழே வந்தோம்.
1906 ஆம் ஆண்டில் நாரண துரைக்கவிணன் பிறந்தார் அவர் அவ முன்னோர்கள் முன்னோர் மாமல்லபுரத்து அருகில உள்ள நாழிப்பட்டுர் ஊரில் இருந்து சென்னைக்குப் புலம் பெயர்ந்தவாகள். இளம் வயதில் இருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். டி.என்.சேஷாசலம், மறைமலை அடிகள், திரு.விக, பசுபதி என்று பல தமிழ்ப் புலவர்களிடம் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஆகவே அவர் நவீன படைப்பு எழுத்தாளராகவே விரும்பினார் ஆங்கிலம், தமிழ் உரைநடைப்படைப்புகள் படித்து நாவல், சிறுகளதகள் எழுதினார்.
பிரசண்ட விகடன் பத்திரிகையில் ஆசிரியராக முப்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். அதோடு ஆனந்த போதினி ஆசிரியராகவும் இருந்தார். அவர் சிறுகதைகள், நாவல்கள் அதிகமாகப் படிக்கப் பட்டன. 1942 ஆம் ஆண்டில் அவர் எழுதிய உயிரோவியம் என்ற நாவல் பிரசித்தி பெற்றது. டிகே. சண்முகம் சகோதரர்கள் உயிரோவியத்தை நாடகமாகித் தமிழ்நாடு முழுவதும் நடித்தார்கள் 'நான் ஏன பெண்ணாய்ப்பிறந்தேன், நடுத்தெரு நாராயணன், தரங்கிளி' அவரின் முக்கியமான நாவல்கள். வாழ்க்கை அறப்பண்புகள் கொண்டதாகவும் ஒழுக்கநெறிக கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களோடு எழுதினார். ஒரு வகையில் அவர் , மு.வ., நா.பார்த்தசாரதிக்கு முன்னோடி என்றே சொல்ல வேண்டும். அவர் பல பெரியவர்கள் பற்றி வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். அதில் முக்கியமானது 1938 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜாஜி.
நான் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாடகளில் அண்ணநகர் திருமங்கலத்தில் இருந்து சைக்கிளில் போய் சூளைமேட்டில் வசித்த நாரண துரைக்கண்ணளைய பார்த்து பேசிக் கொண்டு இருப்பேன். 1987 ஆம் ஆம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சூளைமேட்டில் வசித்து வந்த அவரைக் காண சைக்கிளில் சென்றேன். வா என்று வரவேற்றார். பாரதிதாசனைப் பார்க்கப் போகிறேன். சைக்கிளை இங்கேயே வைத்துவிட்டு என்னோடு வா என்றார். தியாகராயநகரில் ராம தெருவில் வசித்த கவிஞர் பாரதிதாசன் வீட்டிற்கு ஓர் ஆட்டோவில் சென்றோம். பாரதிதாசன் பென்சிலில் எழுதிக் கொண்டு இருந்தார். எங்களைப் பார்த்ததும் அட்டையையும் பென்சிலையும் மேசையில் வைத்து விட்டு நாரண துரைக்கண்ணனைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்.
"கவிஞருக்குத்தாள் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அதான் பார்த்துவிட்டுப் போகலாம். என்று வந்தோம்."
"உடம்புக்கு எள்ன? அது நன்றாகத்தான் இருக்கிறது. மனசுதான் சரியாக இல்லை. இந்த சினிமாகாரர்களை நம்பி வந்தது தப்பாகப் போய்விட்டது. ஒரு காரியமும் நடக்கவில்லை. மனத்திற்கு வருத்தமாக இருக்கிறது." என்றவர் என்னைப் பார்த்து தம்பி யார்? என்று கேட்டார்.
"இவர் எழுத்தாளார். நன்றாக எழுதக்கூடியவர். ஆகையால் தங்களைப் பார்க்க அழைத்துக்கொண்டு வந்தேன் என்றார்.
"கவிதை எழுதுவியா” என்று பாரதிதாசன் கேட்டார். "சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றேன்.
"எழுதினாலே கவிஞர்தான். நான் தமிழ்க் கவிஞர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கிறேன். நீயும் கையெழுத்துப் போடு" என்று பென்சிலையும் காகிதங்கள் நிறைந்த அட்டையையும் ஈடுத்து நீட்டினார். சரியாக பெரிய கோட்டாவில் காபி வந்தது. மூவரும் குடித்தோம்.
"சுகவிஞரே மனக் கவலையை விட்டுவிட்டு எழுதங்கள்" என்று சொல்லியபடி நாரண துரைக்கண்ணன் எழுந்தார். நானும் எழுந்து புரடசிக்கவிஞருக்கு வணக்கம் சொன்னேன்.
கவினார் பாரதிதாசன் இரண்டடிகள் எடுத்து வைத்து முன்னே வந்து எங்களுக்கு விடை கொடுத்தார்.
நாரண துரைக்கண்ணன் வழியாக நான் பெற்றது. அதிகம் அவர் தொண்ணூறாவது வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.
சா.கந்தசாமி - 2017 அமுதசுரபி தீபாவளி மலர்.
ஜோக்ஸுக்கு சென்று இந்த வியாழனை நிறைவு செய்யலாமா?!!
வாங்க நெல்லை.. பாடுவதா? என் பெரிய பலவீனமும் அதுதான் என்றாலும் குரல் வெளியே வராமல் இருப்பதுதான் சரி. அன்று இளையவன் உள்ளேயிளிருந்து அப்பா என்று திடீரென்று ஓங்கி குரல் கொடுத்ததும் "ஆ.." என்று கொடுத்து விட்டேன். அது மட்டும் தவறு. மற்றபடி ஓகே.
சின்ன வயசில் இருந்தே செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்காக உப்பில்லா விரதம் இருந்து வந்திருக்கேன். உடல்நிலை மோசமான பின்னரும் ஒரு முறை விரதம் இருந்தப்போ செவ்வாய்க்கு மறுநாள் புதன் அன்று கார்த்திகை விரதமும் சேர்ந்து கொள்ள இரு நாட்கள் தொடர்ந்து இருந்த விரதத்தினால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அன்னிக்கு மருத்துவர் கடிந்து கொண்டு இனிமேல் சாப்பிடாமல் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்க அத்தோடு போச்சு என் விரதம் எல்லாம். மௌன விரதம் வியாழக்கிழமைகளில் இருந்து வந்தேன். பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்த சமயம் அது. அன்னிக்குனு பார்த்து யாரானும் வருவாங்க பெண்ணின் ஜாதகம் பொருந்தி இருக்குனு பிள்ளை வீட்டுக்காரங்க பார்த்துட்டு வரச் சொன்னாங்க என்பாங்க. பேசியே ஆகணும். நம்மவர் அலுவலகம் போயிருப்பார். பெண் வீட்டில் இருந்தாலும் வந்தவங்களிடம் அவளே பேசவா முடியும்? ஆகவே மௌன விரதமும் முடிஞ்சது.
உங்களுக்கும் இனிதான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். காலை வேலைகள் இருப்பதால், 10.1/2மணிக்குத்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் அந்த காலத்தில் சூரியோதத்திற்கு முன்பே பொங்கலிட வேண்டுமென ஆர்வங்கள் நிறைய இருந்தது. அம்மா வீட்டில் இருந்த போது, அதிகாலை எழுந்ததுமே பால் பொங்கியாச்சா? வயிறு வீங்கியாச்சா? என அக்கம்பக்கம் உறவுகள் ஒருவருக்கொருவர் கேட்டு வாழ்த்துகளைச் சொல்லி விசாரித்துக் கொள்வோம். .இப்போது நமக்கென நல்ல நேரங்களை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். உங்கள் வீட்டில் எப்படி.? நன்றி.
பொதுவா எங்களுக்கு மடம் அல்லது ஆஸ்ரமத்திலிருந்து இத்தனை மணிக்கு பொங்கல்பானை இட வேண்டும் என்ற தகவல் வரும். அதன்படித்தான் இதுவரை நடக்கிறது. ஏன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களைச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது.
மனைவியிடம் எனக்கு ஒரு ஸ்பூன்தான் வேணும் என்று சொல்லியிருக்கிறேன்.
// இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. //
ஹா ஹா ஹா நெல்லை.. எனக்கும் தோன்றியது. எனக்கு வேறு நிலை. இரண்டு நாட்களாக தாமதமாக எழுகிறேன். இன்று இன்னும் கஷ்டம். பதில் சொல்வது வேறு சில வேலைகளுக்கு சிரமமாய் இருக்கிறது!
// ஏன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களைச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. //
பொதுவாகவே வைணவர்களுக்கு தனி நியமங்கள், நேரங்கள், நாட்கள் அமையும். இன்று ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் சொன்னால் அந்த வேளை தவறி விட்டால் மனம் கஷ்டப்படுமே என்று இரண்டு நேரம் சொல்கிறார்கள்!!!! ஏழே முக்காலுக்கு தயார் செய்தால் பத்தரைக்காவது வைக்க முடியுமே... ஹிஹிஹி!
// இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. //
உண்மைதான். இப்போது கொஞ்ச நாட்களாக இந்த குளிர் ஒத்துக் கொள்ளாமல் நிறைய படுத்தல்கள். அதனால் நான் தாமதமாகத்தான் எழுகிறேன். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், முன்பெல்லாம் நானும் சீக்கிரமே வந்து ஏன் முதல் கருத்தாக வந்து பதிவை விமர்சித்துள்ளேன் என்பதையும் நினைவில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)) .உங்களனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ஸ்ரீரங்கத்தில் இருந்து பண்டிகையும் இருந்திருந்தால் காலை நாலு மணிக்கே எழுந்து கோலம் போட்டு, காஃபிக்கடை முடித்து, வீடு பெருக்கித் துடைத்துக் காய்கள் நறுக்கிக் குளித்துப் பொங்கல் பானை வைக்கத் தயாராக ஆகி இருப்பேன். எங்களுக்கெல்லாம் பாம்புப் பஞ்சாங்கம் சொல்லும் நேரம் தான். காஞ்சி மடத்திலிருந்தும் வரும்.
இங்கு இப்போதுதான் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் ஆகிறது! பாஸும் மருமகளும் மற்ற வேளைகளில் பிஸி. நாளை கணுவுக்கு வேறு சகோதரி மற்றும் .கலந்த சாதம் அவியல் செய்ய வேண்டும். வைணவர்கள் இன்று அவியல், நாளை 7 தான் கூட்டும் செய்வார்கள் என்று நினைக்கிறேன். நான் ஸ்வீட் பொங்கலுக்கு ஏற்றாற்போல கான்டராஸ்ட்டாய் இருக்கட்டும் என்று மாற்றி விட்டேன்!
எனக்குத் தெரிந்தவரையில் தஞ்சை ஜில்லாவில் தான் இந்த எரிச்ச குழம்பு, தனிக்கூட்டு ஆகியவை பண்ணுகிறார்கள். எங்க ஊர்ப்பக்கமெல்லாம் பொங்கலன்று அநேகமா மோர்க்குழம்பு, ஏதேனும் பிட்லை/அல்லது புளிவிட்டு அரைத்துவிட்ட கூட்டு, வாழைக்காய்ப் பொடிமாஸ் இருக்கும். சர்க்கரைப் பொங்கல் மட்டும் தான் பண்ணுவோம். உளுந்து வடை கட்டாயமாய் இருக்கும். மறுநாள் கணுவிற்கும் சர்க்கரைப் பொங்கல் உண்டு. என் மாமியார் வீட்டில் பாயசம் தான். அதோடு எங்க பக்கமெல்லாம்(தென் மாவட்டங்களில்) பிசைந்த சாத வகைகள் மற்றும் அன்னிக்குக் கட்டாயமாய் அவியல், உளுந்து வடை இருக்கும். ஆனால் என் மாமியார் வீட்டிலோ தேங்காய்த் துவையல், வாழைக்காய்ப் பொடி, பறங்கிக்காய்த் துவையல், பீர்க்கங்காய்த் துவையல்னு பண்ணுவாங்க. ரசம் கிடையாது. சாம்பார் வைப்பாங்க. அப்பா வீட்டில் அப்பாவுக்காகக் கொஞ்சமானும் ரசம் வேண்டும். ஆகவே ரசம் மட்டும் இருக்கும். மற்றபடி சாம்பாரெல்லாம் இல்லை. எல்லாம் பிசைந்த சாதம் தான். இந்த எரிச்ச குழம்பெல்லாம் கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தான் தெரியும்.
//நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் பசி என்ற உணர்வு இல்லை. இதற்கு கவலைப்படணுமா என்று தெரியவில்லை! // perfectly alright. இரண்டு வகையான பசி உண்டு. முதலாவது, வழக்கமான நேரத்துக்கு வேளாவேளைக்கு வருவது; அது பொய்ப்பசி! கொஞ்சம் போல வயிற்றில் அமிலம் சுரக்கும். அவ்வளவுதான். இரண்டாவதுதான் autophagyஉடன் தொடர்புடையது; உண்மையாபன பசி. இது வந்தால், உணவு உள்ளே செல்லும் வரை நிற்காது. இந்தப்பசியை நன்கு உணரத்தான் (ஜைன) முனிவர்கள் நின்றுகொண்டே தவம் செய்வார்கள்!
நன்றி. வயிற்றில் ஜெலுசில் வார்த்தீர்கள்! நான் எடைகுறைக்கும் முகத்தான் உணவு குறைத்தபோது ஒன்று செய்வேன். சாப்பிடும் எண்ணம் அல்லது நாக்கு கேட்கும்போது ஒரு தீற்று ஊறுகாய் விழுது உள்ளே செலுத்துவேன். போதும்! அல்சர்.. அது இது என்றெல்லாம் பயம் இல்லை.
இந்த மாதிரிச் சாப்பிடும் எண்ணத்தை வெல்வது தான் உண்மையான உண்ணாவிரதம். நான் விரதம் இருந்த நாட்களில் எல்லாம் விரத நாளைக்கு என வேலைகள் அதிகமாக வைச்சுப்பேன். வீடு ஒழிப்பது தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுவேன். கூடிய வரையில் மத்தியானம் படுக்கையில் படுப்பதில்லை. இரவு ஏழு மணிக்குப் பின்னர் ஓரிரு மலைப்பழம், ஒரு தம்பளர் பால் சாப்பிட்டுப் படுத்தேனானால் மறுநாள் காலை வழக்கம் போல் நாலரைக்கு எழுந்துப்பேன்.
அது சரி.. நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிடைத்த வாசனையான ரோஜா இப்போது ஏன் கிடைப்பதே இல்லை? குல்கந்து தவிர? எசன்ஸ் எடுத்து எடுத்து ரோஜாவின் மணமே மறைந்துவிட்டதா?
நாற்பது வருடங்களுக்கு முன் உங்களுக்கு ரோஜாவை முகர நேரம் இருந்தது. இப்போது ஜஸ்ட் தாண்டிச் சென்று விடுகிறீர்கள்! ஒருவேளை ஹைப்ரிட் ரோஜா என்று வாசமில்லா மலரிது வந்து விடுகிறதோ..
பெரும்பாலும் வாசனை ரோஜா அதாவது ரோஜா நிறத்தில் வருமே அந்த ரோஜாப் பூக்கள் எப்போவானும் தான் கிடைக்கின்றன. கலப்பட ரோஜாக்கள், அதுவும் காகிதப் பூக்கள் போன்ற சின்னச் சின்ன சிவப்பு ரோஜாக்களே அதிகம் வருகின்றன. ரோஜா சாகுபடியே நின்னுடுத்தோனு நினைச்சுப்பேன். நல்லவேளையாக இந்த மரபணு மாற்றங்கள் மற்றப் பூக்களில் மல்லிகை, முல்லை, பிச்சி, தாமரை, செண்பகம் ஆகிய பூக்களில் இன்னும் வரலை. அந்த மட்டில் பிழைச்சோம்.
ரோஜாச் செடிகள் நிறைய வைச்சிருக்கோம். நாக்பூர் ரோஜாவுக்கு பிரபலம் என்பதால் என் நாத்தனாரிடம் சொல்லி ரோஜா பதியன்கள் கொண்டு வந்து அம்பத்தூர் வீட்டில் நட்டு வளர்த்திருக்கோம். அதில் கொடி ரோஜாச் செடி மட்டும் நீண்ட வருடங்கள் இருந்தது. மற்றவை நாங்க இல்லாதப்போ போய் விட்டன. எதுக்குச் சொல்றேன்னா அது ரோஜாவின் செந்தளிர் என்பது பார்த்ததுமே புரிஞ்சது என்பதற்குத் தான்.
மௌன த்யானம் #1 நான்கு துறவிகள் சில நாட்களுக்குப் பேசாமல் மௌனமாகத் தியானம் செய்ய முடிவு செய்தனர். முதல் நாள் இரவு ஆனதும், மெழுகுவர்த்தி மினுமினுத்து அணைந்து போனது. முதல் துறவி சொன்னார், "ஐயோ!! மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது." இரண்டாவது துறவி பதிலளித்தார், "நாம் பேசக்கூடாது என்றுதானே முடிவு செய்திருந்தோம்?" இதைக் கேட்ட மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள் இருவரும் ஏன் மௌனத்தைக் கலைத்தீர்கள்?" நான்காவது துறவி அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னார், "ஹா ஹா! நான் மட்டும்தான் பேசாமல் இருந்தேன்..!!"
யதேச்சையாக ஈகோ படம் நெட்ஃப்ளிக்சில் வந்த அன்று பார்த்தேன் (நாலு தவணையில், மூன்று நாட்களில் பார்த்து முடித்தேன்). மலையாள திரையுலகில் அனேகமாக எல்லாத் திரைப்படங்களுமே வித்தியாசமான கதைகளுடன் வருகின்றன. தமிழ்த்திரைப்படங்கள் அப்படி அல்ல. ஒருவேளை பா பட வரிசைகளைத் தந்த அந்தக்கால தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் கேரளத்தில் மறுபிறப்பு எடுத்திருக்கிறார்களா?
எங்களுக்குப் பிடித்திருந்தது. வித்தியாசமான கதைக்களம். எதிர்பாராத திருப்பங்கள். இயற்கை எழில். நம் தமிழகத்தில் நல்ல கதை எழுத ஆட்கள் இல்லை போலிருக்கு. கதாநாயகன் எப்படி என்ட்ரி ஆவார், என்னவெல்லாம் திறமை படைத்தவர் என எப்படிக் காண்பிக்கலாம்? அவர் மனதையும் குளிர்வித்து நாமும் தயாரிப்பாளர் காசுல எந்த எந்த நாடுகள் சுத்திப்பார்க்கலாம், அதற்கேற்ற மாதிரி பாடல்கள் வாங்கணும், கதாநாயகியோட வெளிநாட்டில் ரெண்டு டூயட்டாவது வச்சால்தான் நடிகர் மனம் குளிர்வார் என்ற யோசனையிலேயே இருந்துடறாங்க போலிருக்கு.
//பா பட வரிசைகளைத் தந்த அந்தக்கால தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் கேரளத்தில் மறுபிறப்பு எடுத்திருக்கிறார்களா?// எப்போவுமே மலையாளத் திரைப்படங்கள் சிலாகித்துப் பேசும்படியாக இருக்கும். அந்தக் காலத்திலேயே தான். அதோடு அங்கே ஹீரோ வொர்ஷிப் என்னும் பைத்தியக்காரத்தனமெல்லாம் இல்லை. நடிகர்களும் தங்களை மட்டும் திறமைசாலியாகக் காட்டணும் என வற்புறுத்த மாட்டார்கள். மோகன்லாலுடன் மமுட்டியும் நடிப்பார். ஜெயராமனுடன் மோகன்லாலும் நடிப்பார். ஈகோ இருக்காது. இங்கே?
அதிலும் இப்போ உள்ள இளைஞர்கள் யாருக்கும் திருமணம், காதல், குடும்பம் என்பதில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிஞ்சுக்கறதில்லை. தாலி கட்டுவது மட்டுமே திருமணம் என நினைக்கிறாங்க. திருமண பந்தம், குழந்தை பிறப்பு, பெற்றோருக்குக் குழந்தைகளுடன் உள்ள பந்தம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறவு முறைகளில் காணும் உள்ளப் பிணைப்பு போன்றவை அர்த்தமில்லாமல் ஆகிவிட்டன. இப்போ எல்லாம் மாமா, மாமி, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, மாமன் மகன், மகள் ஆகிய உறவுகளும் அருகிக்குறுகி விட்டன.
இந்தப் படம் கதை மட்டும் இல்லை, எடுத்திருக்கும் விதம், லொகேஷன்ஸ் எல்லாமே நல்லா இருக்கு.. தமிழில் இப்போதெல்லாம் அடிதடி, வெட்டு, குத்து, மெஷின்கன், ரத்த ஆறு...
மௌன த்யானம் #2 ஜென் பௌத்த துறவியாக விரும்பிய ஒருவனை ரோஷி (குரு) அறிவுரைகளை வழங்கி ஏற்றுக்கொண்டார். பிறகு, "ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். இங்கே நாங்கள் மௌன விரதம் கடைப்பிடிக்கிறோம். ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் நீங்கள் மூன்று வார்த்தைகள் மட்டுமே பேச முடியும்" என்றார். அதற்கு அவன், "சரி" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "சாப்பாடு மட்டமாக இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றான்.
மேலும் பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் மீண்டும் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "படுக்கை கடினமாக இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றான்.
மேலும் பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆமாம், நான் விலகுகிறேன்!" என்றான். அதற்கு ரோஷி, "உன்னைக் குறை சொல்ல முடியாது. நீ இங்கு வந்ததிலிருந்தே புலம்பிக்கொண்டே இருக்கிறாய்" என்றார்!
ஹா ஹா ஹா... நமக்கு வேண்டாம் அந்த மடம். மௌன விரத் இருக்கணும் என்றாலும் நல்ல படுக்கை, மேசையில் லேப்டாப், பார்க்க தொலைக்காட்சி வேண்டும். அது எப்படி ஒருவனால் சும்மா இருக்க முடியும்?
தன் அறையில் அவன் தனக்குத்தானே ஏதாவது பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? சிசி டிவியா வைத்திருப்பார்கள்? என்னவோ போங்க.. ரஜினியின் எட்டு எட்டா பிரித்துக் கொள்ளும் வாழ்க்கை போல முதல் பத்து வருடங்களிலேயே அவனுக்கு ஞானம் வந்திருக்க வேண்டும் போல..
நான் பள்ளி படிக்கும் காலத்திலேயே ஞானம் அடைந்திருக்கிறேன். நாடிச் சென்று அடைவோம். அங்கு பல படங்கள் பார்த்திருக்கிறேன் தஞ்சையில்!
நம்ம ஊர்ல 10 நாட்கள் எந்தவித வெளியுலகுத் தொடர்பும் இல்லாமல் (பிக்பாஸ் இல்லைங்க!!!!) தியானம் மௌனம்....என்று விபாசனா சைலன்ட் ரெட்ரீட் பயிற்சி இருக்கு தெரியுமோ!! புத்தரின் கொள்கைகள் அடிபப்டையில்...மொபைல், கணினி, எழுத்து புத்தகம் எதுவும் இல்லாமல்...Dhamma centres இருக்கு..
நான் அதற்கு அப்ளை செய்து, போகவேண்டிய சமயத்தில் அந்த பத்து நாட்களில் ஒரு நாள் தர்ப்பணம் இருந்தது. விதிவிலக்கு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் போகமுடியாமல் போய்விட்டது. இன்னொரு தடவை முயற்சிக்கணும்.
நாரண துரைக்கண்ணன் அவர்கள் பற்றிய பகுதி அருமை. தெரியாத நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவதுதான் சுவாரசியம். தெரிந்த சினிமா அக்கப்போர்களை மீண்டும் படிப்பதில் என்ன கிடைக்கும்? ஶ்ரீராம் இந்த மாதிரி எழுத்தாளர்கள், பழைய வரலாறுகளைத் தேடிப் படித்துப் பகிர்வாரா?
பரவாயில்லை, பிழைத்தேன். இதற்கு எனக்கு கண்டனங்கள் வரும் என்று நினைத்தேன். ஆனால் சினிமா அக்கப்போர்களும் சுவாரஸ்யம். மேலும் அதை பாடல்களுடன்தானே கொடுத்துக் கொண்டிருந்தேன்!
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. உங்களின் விரத மகாத்மியங்கள் நன்றாக உள்ளது. கூடவே துவாதசி பாரணை படமும் சிறப்பு. நானும் ஏகாதசி விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், ஒருதடவை மட்டும் உணவருந்தி. ஒருதடவை நீங்கள் சொல்வது போல் எதுவும் சாப்பிடாமல் என.
மெளன விரதம் வியாழன் தோறும், ஒரு வருடம் இருந்தேன். பிறகு அதுவும் போச்சு. விரதங்கள் மனதையும், வயிற்றையும் சுத்தமாக்கும். புத்துணர்ச்சி தரும். ஆனால் தொடர்ந்து இருக்கத்தான் இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அதே போலதான் நானும். என் அப்பா மௌன விரதம் இருந்து பார்த்திருக்கிறேன். போனில் வேண்டுமென்றே பேசுவோம். டயல் டைப் போன். போனில் ஒவ்வொரு விஷயம் சொல்லி முடித்ததும் டக் டக் என்றுவிரலால் தட்டி அக்நலாட்ஜ் செய்வார்! எனக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றி அப்போது இருந்திருக்கிறேன். சமயங்களில் காலை ஆறரை முதல் மாலை ஆறரை வரை. பெரும்பாலும் மறுநாள் வரை!
பொதுவாகவே முஸ்லீம்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யும் தொழுகைகள் உடல் நலனைக் கருத்தில் கொண்டே இருக்கும், யோகாசன முறை. அதேபோலத்தான் இந்துக்களின் வழிபாட்டு முரட்டைகளும். கோலம் போடுதல் முதல் வீடு பெருக்குவது வரை கூட உடற்பயிற்சிதானே!
மௌன த்யானம் #3 நான்கு முனிவர்கள் (காஷ்ட மௌனம் கடைபிடிக்கிறவர்கள்) ஒரு கோவிலில் தியானம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று கொடி பலத்த ஓசையுடன் படபடக்கத் தொடங்கியது. அவர்களில் இளைய முனிவர் தனது தியானத்திலிருந்து வெளிவந்து, "கொடி படபடக்கிறதே" என்றார். அதிக அனுபவமுள்ள இரண்டாவது முனிவர், "காற்றுதான் படபடக்கிறது" என்றார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்த மூன்றாவது முனிவர், "மனம்தான் படபடக்கிறது" என்றார். பழுத்த பழமான நான்காவது துறவி, "வாய்கள்தான் படபடக்கின்றன!" என்றார்.
ஆக யாரும் விரதத்தில் ஜெயிக்கவில்லை! என்ன மன உறுதியோ.. இதில் வேறு ஏதாவது எனக்குப் புரியாத பெரிய தத்துவம் இருக்கா வாத்யாரே.... பொதுவாக எனக்கு ஜென் கதைகள் புரிவதில்லை.
ஸ்ரீராம், ஞானியாகறதுக்கான முதல் படியா! ஓகே ஓகே!!!!
ஆல் த பெஸ்ட்!! தொடர...சில டிப்ஸ் ஹிஹிஹி
அடுத்த ஸ்டெப்பாக மொபைல் அல்லது டிவி ஏதேனும் ஒன்றைத் துறந்து....அதற்கு அடுத்த ஸ்டெப்பாக இரண்டையும் துறந்து...அடுத்த ஸ்டெப்பாக ஏதேனும் ஓர் அமைதியான இடம்....மலைப்பகுதி நதிப்பகுதிக்குப் போய் இருந்து....!!!
எழுத்தாளர் ஞாநி சொல்கிறீர்களா? நான் ஏற்கனவே புத்தராகி விட்டேன்.. உங்களுக்கு தெரியும்! நெல்லைக்கும் தெரியும்!! மலைப்பகுதிக்கு போ என்று என்னை கடத்தி விட்டு "இந்த மாதிரி வியாழன்ல எங்களை ரொம்ப படுத்தாதே " என்று சொல்ல வருகிறீர்கள், இல்லையா! நீங்கள் பெரிய ஞானி கீதா.. வாங்க...
மௌன த்யானம் #4 இரண்டு பழைய நண்பிகள் சந்தித்தனர். "உன் கணவர் இன்னும் வேலையில்லாமல்தான் இருக்காரா?" "இல்ல, இல்ல, இப்போ அப்டியில்ல." "தேவலையே. இப்போ அவர் என்ன செய்றார்?" "இப்போ அவர் அடிக்கடி தியானம் செய்றார்." "தியானமா! அது என்ன?" "எனக்குச் சரியாத தெரியல, ஆனா சும்மா உக்கார்ந்திருக்கறதை விட இது பரவாயில்ல!"
சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை சில துறவிகள் சொல்லி இருப்பதாக ஞாபகம். ஏதோ படத்தில் செந்திலோ, வடிவேலுவோ கூட சொல்லி இருக்கிறார்! மனம் உறங்கும் நாளெல்லாம் வந்தால் நான் சிவனுக்கு அடுத்த மூன்றாவது இடத்தை பிடித்து விடுவேனாக்கும்! நாம் தூங்கும்போது கூட மனம் தூங்குவதில்லை.
இமயமலைக்குப் போயிருந்தப்ப அதையும் நதிகளையும் பார்த்த பிரமிப்பில், வாய் பிளந்து அப்புறம் மூடி மனதுக்குள் பரவசமடைந்து.....intermittent விரதம் போல மௌனம் ப்ளஸ் சாப்பாடு (அது வேற ஒண்ணுமில்லைங்க பிரயாணம் செஞ்சப்ப நல்ல ஹோட்டல் வேணுமில்ல? அது இல்லைவழியில்!!!!!) ஆனால் பிரமிப்பில் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் வாவ் போட்டுக் கொண்டு மௌனமாக....அது ஒரு அழகான தருணம்!!!
ஊருக்கு வந்த பிறகு, உண்ணா விரதம் இருந்து பார்ப்போமேன்னு இருந்தா நடைப்பயிற்சி போனப்ப, சர்க்கரை அளவு குறைந்துவிட்டது! உடம்பு வெலவெலத்து.....ஏற்கனவே கட்டுப்பாடான சாப்பாடா...ஸோ...அதன் பிறகு இருப்பதில்லை.
மௌன விரதம் வீட்டில் சாத்தியப்படவில்லை. ஆனால் பல சமயங்களில் நம்மை அறியாமல் இருந்ததுண்டே!!!!!!!!!!!!!!!!!!! கோபம், வருத்தம்...என்று அதுவும் நல்லதாக இருந்தது வார்த்தைகள் வெளியில் வந்து விழாது பாருங்க!!! ஹாஹாஹாஹா....
//இமயமலைக்குப் போயிருந்தப்ப அதையும் நதிகளையும் பார்த்த பிரமிப்பில், வாய் பிளந்து அப்புறம் மூடி மனதுக்குள் பரவசமடைந்து...// நாச்சியாரே, காலடி ஆச்சார்யரும் சீடர்களும் முதன்முதல் இமயமலை அடைந்தபோது, சீடர்களின் reaction அச்சு அசல் உங்களுடையதே, apparently! 'இத்தனை அழகா, இவ்வளவு அழகு சாத்யமா' என்று சொல்லிச்சொல்லி மாய்ந்து போனார்களாம். ஆச்சார்யர், 'அப்பா, இந்த அழகு அங்கே வெளியில் இல்லை, உனக்குள்ளே இருப்பதுதான்' என்று உணரவைத்தாராம்!! 'சத்யம், சிவம், சுந்தரம்' பற்றி பின் எப்போதாவது பார்ப்போம் :-)
//'தம்ஸ் அப்' விளம்பரத்தில்வந்தது போல நான் இப்போதே அந்த நிலை அடிக்கடி அடைகிறேன்!!// இங்க நம்மாளு சிவமூலிகை, ப்ரஹ்மபத்ரம் இதெல்லாம் ஆரம்பிச்சுட்டார்! ஆன்மீகம் ஆரம்பிக்கறதுக்குள்ள இதெல்லாம் சம்ப்ரமமா வந்துடுது போல! ;-) ;-)
திவாமா, முதன் முறை போனபோது என்ன ஃபீலிங்கோ அதேதான் இரண்டாவது முறை போனப்பவும். இனி போனாலும் கூட அதேதான். எனக்கு ரொம்பப் பிடித்த இடங்கள்...மலைகள், நதிகள், அருவிகள் இயற்கை...அதில் இமயமலை சிலிர்க்க வைக்கும் ஒன்று/...
//ஆச்சார்யர், 'அப்பா, இந்த அழகு அங்கே வெளியில் இல்லை, உனக்குள்ளே இருப்பதுதான்' என்று உணரவைத்தாராம்!! '//
உண்மை அதுதான். வெளியில்தான் தேடுகிறோம்...அதனால்தான் எனக்கு இந்தத் தத்துவம் ரொம்பப் பிடித்த ஒன்று. ஆனா பாருங்க பிடிச்சாலும் அது எவ்வளவு கஷ்டம் இல்ல? புன்பற்றுவது!
//இந்தத் தத்துவம் ரொம்பப் பிடித்த ஒன்று// தத்வம் என்றில்லை. யதார்த்தம். (இயற்கை மட்டுமல்ல எந்த விதமான) அழகையும் ரசிப்பது ஆண்டவன் தரிசனமே!!! ஆத்திகனும் நாத்திகனும் இணையும் அற்புத புள்ளிகளில் இதுவும் ஒன்று! மெய் மறந்து, சொல் அற, மனம் அழிந்து ப்ரமித்து நின்றால், அது ஆத்ம தரிசனத்தின் sample!!! ஆத்ம தரிசனத்திற்கு மதம் தேவை இல்லை.
வாய்வழி பேசாவிட்டாலும் மனம் மௌனமாக இருக்க வேண்டுமே!!!!! ஆ ஆ ஆ ஆ இதை சொல்லிவிட்டேனே இங்கு! சரி இதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டேன்!!!!!!!!!!!!!! ஸ்ரீராமிற்குப் புரியும்!!!
//சாத்தியமே இல்லை நெல்லை.//சத்தியமாக சாத்தியம். எளிய எடுத்துக்காட்டு: ரொம்ப எளிய மனிதர்கள் கூட அதிர்ச்சியின்போது விழிப்பு நிலையில் திக்ப்ரமை பிடித்தாற்போல உறைந்து நிற்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே? உங்களுக்கே இந்த அனுபவம் இருக்கக்கூடும். stupified, stultified, stunned, dazed, amazed, shocked, bewildered, and astonished - ஆங்கிலேயனே இவ்வளவு சொல்கிறான். அதுவும் முனிவர்களின் மனமடங்குதலும் ஒன்றா என்றால், கால அளவில்தான் வித்யாசம். of course, முன்னது involuntary, பின்னது voluntary/deliberate. பதஞ்சலி யோக சூத்ரம் யோக: சித்த வ்ரித்தி நிரோத: என்றுதான் துவங்குகிறது, வாத்யாரே! சித்த வ்ரித்தி என்றால் எண்ணங்கள்; நிரோத் தெரியாதவர்கள் நம் தலைமுறையில் உண்டா என்ன? சம்ஸ்க்ர்த நிரோதம்தான் தமிழில் நிறுத்தம்.
அந்தநிலை வருவது நமக்கெல்லாம்.. சரி.. எனக்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஓங்கி ஒரு போடு போட்டு மயக்கத்தில் வைத்திருந்தால்தான் உண்டு!! இப்பப்பவே பாருங்க என் அல்பமனம் ஸ்லோகத்தை நிரோத்னு படிக்குது!
ஆனா எனக்குப் பக்தி கூடக் கிடையாது. கோவிலுக்குப் போனால் கூட பக்திப்பரவசம் ம்ஹூம்... ஆனா மலைகளையும் நதிகளையும் அதுவும் இமயமலையை அதன் பனிச்சிகரங்களைப் பார்த்தால் அதுக்கு மேல இன்னா கீதுப்பான்னு தோன்றும். அந்த ஆழ் அமைதி...கூடவே வேறு பல விஷயங்கள் உண்டு லிஸ்டில்.
ஆ! மேலே திவாமாண்ணா சொன்ன சங்கரரின் வரிகள் வருதே...அதெல்லாம் முடியாதுப்பா நாங்க பார்த்து ரசித்தே தீருவோம்...
நாம் நமது நான்காவது ஜென்மத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் கீதா.. இன்னும் இரண்டு ஜென்மங்கள் தாண்டி மூன்றாவது பிறவியில் இதெல்லாம் தமக்கு லபிக்கலாம்!
விரதம் என்று சொல்லிக் கொண்டு அன்று பாசிப்பருப்பு வெல்லம் போட்டக் கஞ்சி, உப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி என்று சாப்பிடுவது விரதத்தோடு சேர்த்தி அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து.
ஏனென்றால் அவை நன்றாகக் கலோரியை பார்த்துக் கொள்ளும். பசி எழாது.
அவனவன் அரிசியை உடைத்து சாதமாகச் சாப்பிட்டால் விரத்த்துக்கு பங்கமில்லைனு நினைக்கறாங்க. என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் மட்டுமே அருந்தி இருப்பதுதான் விரதம்.
பாலும் பழமும், போர்ன்விட்டா, காஃபி, போன்றவை வித்தியாசமான டயட்டில் இருக்கிறேன் என்று சொல்ல உதவும். உடனே, வச்சா குடுமி சரைச்சா மொட்டையா எனக் கேட்காதீர்கள். நான் சொன்ன விரத்த்துக்கான பாதை இது.
எதையாவது சாப்பிட்டு விட்டோ, ஒருவேளை உணவு எடுத்துக் கொண்டேன் என்றோ விரதம் இருப்பதில் எனக்கும் சம்மதமில்லை கீதா...
நெல்லை உண்மையில் அன்று தண்ணீர் கூட அருந்தவில்லை நான். ஆனால் பாருங்க பாஸ் வற்புறுத்தி இரண்டு காஃபி, ஒரு டீ கொடுத்து விட்டார். விரத பங்கம்! மகன்கள் என் விரதத்துக்கு பயங்கர எதிர்ப்பு. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று வைத்துக் கொண்டு இது தேவையா என்று! சீக்கிரமே காஃபி டீ இல்லாத விரதத்தை மேற்கொள்வேன் என்று உளமார நெஞ்சார மனமார உறுதி கூறுகிறேன்.. ஆனால்..
//மகன்கள் என் விரதத்துக்கு பயங்கர எதிர்ப்பு. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று வைத்துக் கொண்டு இது தேவையா என்று! // நான் உங்கள் மகன்கள் பக்கம்; not that it matters to you :-) சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லாவிடில் தாராளமாய் இருக்கலாம்; நல்லதும் கூட.
விரதம் இருப்பதெனில் மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் சின்னக் குழந்தைகள் முதல் விரதம் இருக்கும். எச்சில் கூட முழுங்காமல், "ம்" என்னும் சப்தம் கூட வெளிவராமல் கண்களாலேயே பேசிக் கொண்டு/பதில் சொல்லிக் கொண்டு நவராத்திரி பத்து நாட்கள், சாதுர்மாஸ்ய விரதம் நான்கு மாதங்கள் என இருப்பார்கள். அதை மிஞ்சி வேறே எங்கும் பார்த்தது இல்லை. நம்ம ஊரில் சொந்தக்காரங்க சிலர் சிவபூஜை செய்வதால் வெளிச் சமையல், மற்றவர் சமைப்பது, அவங்க கொடுப்பதைச் சாப்பிடுவதுனு ஏத்துக்க மாட்டாங்க. இப்போல்லாம் அப்படியான மனிதர்களைத் தேடித் தான் பிடிக்கணும்.
//எச்சில் கூட முழுங்காமல், "ம்" என்னும் சப்தம் கூட வெளிவராமல் கண்களாலேயே பேசிக் கொண்டு/பதில் சொல்லிக் கொண்டு நவராத்திரி பத்து நாட்கள், சாதுர்மாஸ்ய விரதம் நான்கு மாதங்கள் // பகலில் உண்ணாமல் என்று சொல்ல வருகிறீர்களா?
பொதுவாக, தண்ணீர் குடிக்காமல் இருக்கும் தொடர் உண்ணாவிரதம் உடல் ரீதியாக நல்லதில்லை. ஆபத்தாகவும் முடியலாம். தொடர் உண்ணாவிரதம நீருடன்இருப்பதானால், electrolyte balance முக்யம். குறைந்தது, உப்பும் அதை சமன் செய்ய பொட்டாசியமும் தேவை.
//விரதம் என்று சொல்லிக் கொண்டு அன்று பாசிப்பருப்பு வெல்லம் போட்டக் கஞ்சி, உப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி என்று சாப்பிடுவது விரதத்தோடு சேர்த்தி அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து.// உடல் நலம் இல்லாதவர்களுக்கு, மனக்கட்டுப்பாட்டிற்கு (சுவையான உணவில் நாட்டம் குறைய) உதவக்கூடும், perhaps
பொதுவாகவே உடைத்த அரிசி விரதத்துக்கு உதவும் என்பார்கள். அரிசியை உடைத்துச் சாப்பிடுவது விரத நாட்களுக்கு உகந்தது. அதோடு பாசிப்பருப்ப்பு,ம், வெல்லமும் சேரும்போது உடலுக்குத் தேவையான நடமாடும் சக்தியை அது கொடுக்கும். ஆகவே தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்க முடியாதவர்கள் இப்படி எடுத்துக்கலாம் என்பதும் விரதத்தின் ஓர் விதி. உப்பும் அப்படித் தான். உடலில் சக்தி சேரவே உப்பும், சர்க்கரை/வெல்லம் சேர்க்கப்படுகிறது. குறிப்பா விரத நாட்களில். ரொம்பவே ஆசாரமான சிலர் தினசரி நிவேதனத்தில் உப்புச் சேர்த்துப் பண்ணுவது அரிது. சிராத்தம் அன்றும் சில வீடுகளில் உப்பைத் தனியாக வைப்பார்கள். உப்பு கடலில் இருந்து விளைவதால் ஆசாரக்குறைவு. அதுவே சந்தா நமக் போன்ற மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும் உப்பெனில் அன்னிக்கு ஆசாரக்காரங்க அதைச் சேர்த்துப்பாங்க. வட மாநிலங்களில் ஆசாரம் மிகுந்த அனைவரும் பயன்படுத்துவது இந்தப் பாறை உப்பைத் தான். பெரும்பாலான கோயில்களில் பிரசாதங்களில் இதைத் தான் சேர்ப்பார்கள். என் அப்பாவின் சித்தி எது சமைச்சாலும் உப்புச் சேர்க்காமல் சமைச்சுட்டுக் கீழே இறக்கியானதும் இந்தப் பாறை உப்பைப் பொடி செய்து தூவிக் கொண்டு சாப்பிடுவார்கள்.
எதையாவது சாப்பிடுவது என்பதையே விரத நாட்களில் தவிர்க்க நினைக்கிறேன். ஒரு தைரியத்துக்குதான் கடவுள் பெயரைச் சொல்லி விரதம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். கட்டுப்பாட்டுக்கு பிடித்துக்கொள்ள ஒரு பற்றுகோல்.
எனக்கும் சமயங்களில் மற்ற தளங்களில் இப்படி ஆனதுண்டு கீதா.. இன்று நான் எழுந்ததே லேட் என்பதால் இனிதான் மற்ற தளங்கள் செல்ல வேண்டும். குளிக்க வேண்டும், தர்ப்பணம் செய்ய வேண்டும், காய் நறுக்கிக் கொடுக்க வேண்டும்... கடமைகள்.. கடமைகள்... எங்கே துறவுக்கு போவது!
ஸ்ரீராம் நல்லா பாருங்க......புதிய ஐடிலருந்து முதல்ல வந்துச்சு ஆனால் திடீர்னு மக்கர் பண்ணியது. பாருங்க அடுத்த கமென்ட்ஸ் எல்லாம் ப்ளாகர் ஐடி இல்லேனா என் பழைய ஐடிலருந்து வந்திருக்கும்,.
இப்ப மீண்டும் என் புதிய ஐடிலருந்து முயற்சி.....
யாருக்கு வேண்டிக்கணும்னு சொல்லுங்க கருத்து வெளியாவதற்கு...பரிகாரம்? கூகுள் ஆண்டவருக்கா!!!?
இப்ப மீண்டும் புது ஐடி முமுயற்சி செய்து போகலை...ரீ ஸ்டார்ட் செஞ்சு பார்த்தும் பயனில்லை...ஐடி ஓப்பன் ஆகுது ஆனா ப்ளாகரில் எங்கும் போட முடியலை
ஸொ மீண்டும் என் பழைய ஐடிலருந்து!!! அதுவும் எங்கள் தளத்தில் இணைத்து இருப்பதால் துளசிபெயரில் வருது
காலை திடீரென என் கணினி தானாகவே ஷட் டவுன் ஆகிக் கொண்டிருந்தது. மறுபடி மறுபடி முயன்றதில் கீபோர்ட்தான் கல்ப்ரிட் என்று தெரிந்தது. பேட்டரியைக் கழற்றி துடைத்து காய வைத்து மீண்டிருக்கிறேன்!
நன்றி கீதா.. நான் எழுதுவது எந்த இலக்கணத்திலும் வராது. எந்த கட்டுக்குள்ளும் அடங்காது "கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி என்று மனதுக்குள் SPB பாடுகிறார்! சும்மா தோன்றுவதை அப்படியே மனவரிகளை மடக்கிப் போடுவேன். அவ்வளவுதான், JKC யும் சொல்வார் பாருங்க!
"சாட்டை கையில் கொண்டு" பாடலை முதன் முறையாகக் கேட்கின்றேன் இது ஒரு பாப்புலர் பாடல் என்று போன வாரம் கூறியிருந்தீர்கள் .... நினைவிருக்கின்றது. ஏனோ ஒரு முறை கூடக் கேட்ட ஞாபகம் இல்லை. சீர்காழியின் குரல் ரவிச்சந்திரனுக்கு செட்டாக வில்லை என்பது என் அபிப்ராயம். தலையில் கூடையுடன் நடக்கும் அம்மணி அங்கமுத்துதானே? அந்தக்கால சிவாஜி, எம்ஜியார் படங்களில் சிறு வேடங்களில் வந்து விடுவார். பெண்களில் இவரும் ஆண்களில் உசிலை மணியும் அவர்களின் "கன பாடிக்க்காகவே" சிறு வேடங்களில் வந்து விடுவார்கள். இந்தக் காலத்தில் அதையெல்லாம் "பாடி ஷேம்" என்று சொல்லி விடுவார்கள்
வாங்க சூர்யா... ஆமாம் அவர் அங்கமுத்துதான். சொல்ல நினைத்து மறந்து போனேன். இவர் பேயறை வைத்து ஆனால் காட்சியில் அவர் இல்லாமல் ஒரு பாடல் இருக்கு தெரியுமோ...
சீர்காழி குரல் அவருக்கு செட் ஆகவில்லைதான். ஆனால் பாடலை தனியாக ரசிக்கலாம்! அல்லது அவர் வாயசைப்பை, முகத்தைப் பார்க்காமல் ரசிக்கலாம்!
அங்கமுத்து, உசிலைமணி வரிசையில் பகோடா காதரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
"அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்" பாடலைக் குறிப்பிடுகிறீர்களா? நாகேஷ் ட்ரெயினில் கோஷ்டியோடு பாடுவது போல் வரும். அந்தக் காலத்தில் ஸ்கூலில் ரொம்பப் பாப்புலர் பாடல்.
பகோடா காதர் கண்டிப்பாக அந்த லிஸ்டில் சேர்க்கவேண்டியவர்தான். இன்னும் இரண்டு பேர் அந்த லிஸ்டில் வருவார்கள்...பெயர் தெரியவில்லை. ஒருவர் அந்த தனுஷ்/பாக்யராஜ் படத்தில் வருவார்.
பொங்கல் அன்று பதிவு ஒரு சிறப்பு மலராக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்து ஏமாந்தேன். இப்படியா இரண்டு வாரம் மௌன விரதம் பூண்டு மற்றவர்களை எழுத வைத்து திரும்ப வந்து சினிமா மலராக பொங்கல் அன்று வெளியிடுவதை கண்டிக்கிறேன்.
சா கந்தசாமியின் நாரண துரைக்கண்ணன் பற்றிய குறிப்பு மட்டும் விதிவிலக்கு.
தனித்தன்மை வாய்ந்த வியாழனின் ருசி வேண்டும் வரட்டும்.
/1987 ஆம் ஆம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சூளைமேட்டில் வசித்து வந்த அவரைக் காண சைக்கிளில் சென்றேன். வா என்று வரவேற்றார். பாரதிதாசனைப் பார்க்கப் போகிறேன்/ பாரதிதாசன் அறுபதுகளிலேயே காலமாகி விட்டரே! தேதிகளில் ஏதோ குழப்பம்
அதே சமயம் நினைத்தாலே இனிக்கும் வசனம் நினைவுக்கு வருகிறது! புட்பால் கிரௌண்டில் ரஜினி கமலின் காதோர முடியை ஒதுக்கி காதில் பேசும் வசனம்! இங்கு கொஞ்சம் மாற்றி போட்டுக்கொள்ள வேண்டும்!
இன்றைய ரோஜா கவிதைகள் அருமை. "ரோஜா மலரே ராஜகுமாரி" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. பழைய இறைசார்ந்த பாடல் பாணியில் உங்கள் கவியும் அருமை. ரசித்தேன். இறைவனும் கண்டிப்பாக ரசித்திருப்பார் பகிர்வுக்கு மிக்க நன்றி.
கருப்பு வெள்ளையில் காட்சிகளைப் பார்ப்பதும் ஒரு சுகம் தான்.
பாட்டும் காட்சியும் நல்லாருக்கு. பாடல் இதுவரை கேட்டதில்லை. பொங்கலுக்கான பாடல்! மாட்டுவண்டி கிராமத்துக் காட்சிகளைச் சொன்னேன். அது போல அந்தக் காலத்து ரயில்.
பாடல் வரிகள் சூப்பர். மோட்டார் சைக்கிள் எல்லாம் என் பின்னாடிதான்...போட்டி வைச்சா நான் தான் போவேன் முன்னாடி என்று பாடலில் வரும் வரிகள் அட! என்று ரசித்தேன் அதுக்கு ஏற்றாற்போல் வேகமான இசை.
மேஜர் படம் எடுத்திருக்கிறார் என்பது எங்கேயோ கேட்ட நினைவு இது அவர் டைரக்ஷன் என்பது இப்பதான் தெரியும்...."கீதா உனக்கு இப்படி ஒரு படம் இருக்குன்னே தெரியாது இதுல என்ன பெரிசா இப்பதான் தெரியும்னு!!!!" மைன்ட் வாய்ஸ்!
நெட்ஃப்ளிக்ஸ் - ஓடிடி = நான் ரொம்ப பின் தங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!!! நோ நெட்ஃப்ளிக்ஸ்.....நோ டிவி.......எனவே கலந்துரையாட முடியாமல்....
சோதனை முயற்சிகளை வியாழனுக்காக ஒதுக்கி விட்டீர்களோ? ரசிக்க முடிகிறது. கவிதைகள் சிறப்பு! நானும் ஏகாதசி விரதம் இருந்து பார்த்தேன். ஏகாதசி அன்றுதான் சோதனையாக திருமணங்கள் வரும். அதை உறுதியோடு கடந்தேன். ஆனால் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மறுநாள் படபடவென்று வந்து விடும். குழந்தைகளும், அக்காக்களும் திட்டி, ஏகாதசி விரதத்தை கைவிட சொல்லி விட்டார்கள்.
டிரைவ் பார்த்தேன், அவ்வளவாக கவரவில்லை. தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன் என்று ஒரு சீரியல் பார்க்கிறேன். சுமார் ரகம்தான். கஸ்டம்ஸ் பற்றி ஒரு ஹிந்தி சீரியல் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்.
இப்போது மெளன விரதமிருந்தால் வாட்ஸ் அப் போனில் பேசுபவர்களுக்கு டைப் செய்து பதில் அளிக்கலாம்.
முன்புஎல்லாம் டெலிபோனில்பேசும் போது பதில் அளிக்க முடியாது. தெரிந்தவர்கள், உறவுகளிடம் போனில் விஷயத்தை சொல்லுங்கள் கேட்டுக் கொள்கிறேன் என்று போனில் இரண்டு தட்டு தட்டினால் கேட்டு கொண்டேன் என்று அர்த்தம் என்று சொல்லி வைத்து இருந்தேன்.
அப்புறம் கார்ட்லெஸ் போன் வந்த பின் கீழ்வீட்டுக்கு எடுத்து போவேன் அவர்கள் அக்கா இன்று மெளனவிரதம் என்ன சொல்லவேண்டுமோ சொல்லுங்கள் அக்கா கேட்டுக் கொள்வார்கள் என்பார்கள். அப்புறம் நான் எழுதி காட்டுவதை அவர்களிடம் சொல்வார்கள். இப்படியாக என் மெளன விரதம் தொடர்ந்தது . இரண்டு பதிவுகள் போட்டு இருக்கிறேன் என்மெளன விரத அனுபவங்களை பற்றி.
காதல் ஜோதியில் சீர்காழி பாடிய பாடலை மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேரேயும் சாரின் கல்லூரிக்கு வந்து பாடின போது பாடி கைதட்டல்களை பெற்றார் என்று சார் சொன்னார்கள் .
காலை வணக்கம், பெருமக்களே!
பதிலளிநீக்குஇன்றைக்கு விஸ்தாரமான பதிவு!
வாங்க TVM, வணக்கம்.. முரட்டு பதிவா இருக்கே என்று சொல்ல செல்வாண்ணா வருவார்...!
நீக்குநீங்கள் ஏகாதசி விரதம் இருந்தது, மௌன விரதம் இரண்டும் மனதைக் கவர்ந்தன. நான் இதுவரை இருந்ததில்லை. முதலில் மௌன விரத்த்தில் ஆரம்பிக்கலாமா என யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் மௌன விரதம் என்றால் நாம் வாயைத் திறந்து பாடக் கூடாதா அல்லது மற்றவர்களிடம் பேசக் கூடாதா?
வாங்க நெல்லை.. பாடுவதா? என் பெரிய பலவீனமும் அதுதான் என்றாலும் குரல் வெளியே வராமல் இருப்பதுதான் சரி. அன்று இளையவன் உள்ளேயிளிருந்து அப்பா என்று திடீரென்று ஓங்கி குரல் கொடுத்ததும் "ஆ.." என்று கொடுத்து விட்டேன். அது மட்டும் தவறு. மற்றபடி ஓகே.
நீக்குசின்ன வயசில் இருந்தே செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்காக உப்பில்லா விரதம் இருந்து வந்திருக்கேன். உடல்நிலை மோசமான பின்னரும் ஒரு முறை விரதம் இருந்தப்போ செவ்வாய்க்கு மறுநாள் புதன் அன்று கார்த்திகை விரதமும் சேர்ந்து கொள்ள இரு நாட்கள் தொடர்ந்து இருந்த விரதத்தினால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அன்னிக்கு மருத்துவர் கடிந்து கொண்டு இனிமேல் சாப்பிடாமல் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்க அத்தோடு போச்சு என் விரதம் எல்லாம். மௌன விரதம் வியாழக்கிழமைகளில் இருந்து வந்தேன். பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்த சமயம் அது. அன்னிக்குனு பார்த்து யாரானும் வருவாங்க பெண்ணின் ஜாதகம் பொருந்தி இருக்குனு பிள்ளை வீட்டுக்காரங்க பார்த்துட்டு வரச் சொன்னாங்க என்பாங்க. பேசியே ஆகணும். நம்மவர் அலுவலகம் போயிருப்பார். பெண் வீட்டில் இருந்தாலும் வந்தவங்களிடம் அவளே பேசவா முடியும்? ஆகவே மௌன விரதமும் முடிஞ்சது.
நீக்குநானெல்லாம் அளவாய்த்தான் விரதம்! ஒரேயடியாக இரண்டு நாள் தொடர்ந்து இருந்தால் எப்பப்படி?1
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
அனைவருக்கும் இனிதான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகளுக்கு நன்றி. இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. உங்களுக்கு பொங்கல் பானை காலை 7 3/4க்கா இல்லை 10 1/2 மணிக்கா?
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஉங்களுக்கும் இனிதான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். காலை வேலைகள் இருப்பதால், 10.1/2மணிக்குத்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் அந்த காலத்தில் சூரியோதத்திற்கு முன்பே பொங்கலிட வேண்டுமென ஆர்வங்கள் நிறைய இருந்தது. அம்மா வீட்டில் இருந்த போது, அதிகாலை எழுந்ததுமே பால் பொங்கியாச்சா? வயிறு வீங்கியாச்சா? என அக்கம்பக்கம் உறவுகள் ஒருவருக்கொருவர் கேட்டு வாழ்த்துகளைச் சொல்லி விசாரித்துக் கொள்வோம். .இப்போது நமக்கென நல்ல நேரங்களை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். உங்கள் வீட்டில் எப்படி.? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பொதுவா எங்களுக்கு மடம் அல்லது ஆஸ்ரமத்திலிருந்து இத்தனை மணிக்கு பொங்கல்பானை இட வேண்டும் என்ற தகவல் வரும். அதன்படித்தான் இதுவரை நடக்கிறது. ஏன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களைச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது.
நீக்குமனைவியிடம் எனக்கு ஒரு ஸ்பூன்தான் வேணும் என்று சொல்லியிருக்கிறேன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், பிரார்த்தனைகளும்.. இனிய பொங்கல் வாழ்த்துகள்.
நீக்கு// இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. //
நீக்குஹா ஹா ஹா நெல்லை.. எனக்கும் தோன்றியது. எனக்கு வேறு நிலை. இரண்டு நாட்களாக தாமதமாக எழுகிறேன். இன்று இன்னும் கஷ்டம். பதில் சொல்வது வேறு சில வேலைகளுக்கு சிரமமாய் இருக்கிறது!
// ஏன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களைச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. //
நீக்குபொதுவாகவே வைணவர்களுக்கு தனி நியமங்கள், நேரங்கள், நாட்கள் அமையும். இன்று ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் சொன்னால் அந்த வேளை தவறி விட்டால் மனம் கஷ்டப்படுமே என்று இரண்டு நேரம் சொல்கிறார்கள்!!!! ஏழே முக்காலுக்கு தயார் செய்தால் பத்தரைக்காவது வைக்க முடியுமே... ஹிஹிஹி!
// இப்படி அதிகாலையிலேயே வந்து அதிர்ச்சி (சந்தோஷ) கொடுத்துவிட்டீர்களே. //
நீக்குஉண்மைதான். இப்போது கொஞ்ச நாட்களாக இந்த குளிர் ஒத்துக் கொள்ளாமல் நிறைய படுத்தல்கள். அதனால் நான் தாமதமாகத்தான் எழுகிறேன். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், முன்பெல்லாம் நானும் சீக்கிரமே வந்து ஏன் முதல் கருத்தாக வந்து பதிவை விமர்சித்துள்ளேன் என்பதையும் நினைவில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)) .உங்களனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
கொண்டு விட்டேன்.. கொண்டு விட்டேன்... கோச்சுக்காதீங்கக்கா... சும்மா தமாஷுக்கு!
நீக்குஇன்றிலிருந்து பெங்களூரில் குளிர் ரொம்பவே குறைந்துவிடும். விரைவில் பகலில் நான் ஏசி போட்டுக்கும் நிலை வரும்.
நீக்குஸ்ரீரங்கத்தில் இருந்து பண்டிகையும் இருந்திருந்தால் காலை நாலு மணிக்கே எழுந்து கோலம் போட்டு, காஃபிக்கடை முடித்து, வீடு பெருக்கித் துடைத்துக் காய்கள் நறுக்கிக் குளித்துப் பொங்கல் பானை வைக்கத் தயாராக ஆகி இருப்பேன். எங்களுக்கெல்லாம் பாம்புப் பஞ்சாங்கம் சொல்லும் நேரம் தான். காஞ்சி மடத்திலிருந்தும் வரும்.
நீக்குஇங்கு இப்போதுதான் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் ஆகிறது! பாஸும் மருமகளும் மற்ற வேளைகளில் பிஸி. நாளை கணுவுக்கு வேறு சகோதரி மற்றும் .கலந்த சாதம் அவியல் செய்ய வேண்டும். வைணவர்கள் இன்று அவியல், நாளை 7 தான் கூட்டும் செய்வார்கள் என்று நினைக்கிறேன். நான் ஸ்வீட் பொங்கலுக்கு ஏற்றாற்போல கான்டராஸ்ட்டாய் இருக்கட்டும் என்று மாற்றி விட்டேன்!
நீக்குஎனக்குத் தெரிந்தவரையில் தஞ்சை ஜில்லாவில் தான் இந்த எரிச்ச குழம்பு, தனிக்கூட்டு ஆகியவை பண்ணுகிறார்கள். எங்க ஊர்ப்பக்கமெல்லாம் பொங்கலன்று அநேகமா மோர்க்குழம்பு, ஏதேனும் பிட்லை/அல்லது புளிவிட்டு அரைத்துவிட்ட கூட்டு, வாழைக்காய்ப் பொடிமாஸ் இருக்கும். சர்க்கரைப் பொங்கல் மட்டும் தான் பண்ணுவோம். உளுந்து வடை கட்டாயமாய் இருக்கும். மறுநாள் கணுவிற்கும் சர்க்கரைப் பொங்கல் உண்டு. என் மாமியார் வீட்டில் பாயசம் தான். அதோடு எங்க பக்கமெல்லாம்(தென் மாவட்டங்களில்) பிசைந்த சாத வகைகள் மற்றும் அன்னிக்குக் கட்டாயமாய் அவியல், உளுந்து வடை இருக்கும். ஆனால் என் மாமியார் வீட்டிலோ தேங்காய்த் துவையல், வாழைக்காய்ப் பொடி, பறங்கிக்காய்த் துவையல், பீர்க்கங்காய்த் துவையல்னு பண்ணுவாங்க. ரசம் கிடையாது. சாம்பார் வைப்பாங்க. அப்பா வீட்டில் அப்பாவுக்காகக் கொஞ்சமானும் ரசம் வேண்டும். ஆகவே ரசம் மட்டும் இருக்கும். மற்றபடி சாம்பாரெல்லாம் இல்லை. எல்லாம் பிசைந்த சாதம் தான். இந்த எரிச்ச குழம்பெல்லாம் கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தான் தெரியும்.
நீக்கு//நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் பசி என்ற உணர்வு இல்லை. இதற்கு கவலைப்படணுமா என்று தெரியவில்லை! // perfectly alright. இரண்டு வகையான பசி உண்டு. முதலாவது, வழக்கமான நேரத்துக்கு வேளாவேளைக்கு வருவது; அது பொய்ப்பசி! கொஞ்சம் போல வயிற்றில் அமிலம் சுரக்கும். அவ்வளவுதான்.
பதிலளிநீக்குஇரண்டாவதுதான் autophagyஉடன் தொடர்புடையது; உண்மையாபன பசி. இது வந்தால், உணவு உள்ளே செல்லும் வரை நிற்காது. இந்தப்பசியை நன்கு உணரத்தான் (ஜைன) முனிவர்கள் நின்றுகொண்டே தவம் செய்வார்கள்!
நன்றி. வயிற்றில் ஜெலுசில் வார்த்தீர்கள்! நான் எடைகுறைக்கும் முகத்தான் உணவு குறைத்தபோது ஒன்று செய்வேன். சாப்பிடும் எண்ணம் அல்லது நாக்கு கேட்கும்போது ஒரு தீற்று ஊறுகாய் விழுது உள்ளே செலுத்துவேன். போதும்! அல்சர்.. அது இது என்றெல்லாம் பயம் இல்லை.
நீக்குஇந்த மாதிரிச் சாப்பிடும் எண்ணத்தை வெல்வது தான் உண்மையான உண்ணாவிரதம். நான் விரதம் இருந்த நாட்களில் எல்லாம் விரத நாளைக்கு என வேலைகள் அதிகமாக வைச்சுப்பேன். வீடு ஒழிப்பது தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுவேன். கூடிய வரையில் மத்தியானம் படுக்கையில் படுப்பதில்லை. இரவு ஏழு மணிக்குப் பின்னர் ஓரிரு மலைப்பழம், ஒரு தம்பளர் பால் சாப்பிட்டுப் படுத்தேனானால் மறுநாள் காலை வழக்கம் போல் நாலரைக்கு எழுந்துப்பேன்.
நீக்குஆமாம்.. தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள் பசி, தூக்கத்தை வெல்லலாம்.
நீக்குரோஜாவின் இளந்தளிர் என்பது பிறகுதான் புரிந்தமு.
பதிலளிநீக்குகவிதைகளும் இளைஞனின் யோசனையும் மனதைக் கவர்ந்தன.
அது சரி.. நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிடைத்த வாசனையான ரோஜா இப்போது ஏன் கிடைப்பதே இல்லை? குல்கந்து தவிர? எசன்ஸ் எடுத்து எடுத்து ரோஜாவின் மணமே மறைந்துவிட்டதா?
நாற்பது வருடங்களுக்கு முன் உங்களுக்கு ரோஜாவை முகர நேரம் இருந்தது. இப்போது ஜஸ்ட் தாண்டிச் சென்று விடுகிறீர்கள்! ஒருவேளை ஹைப்ரிட் ரோஜா என்று வாசமில்லா மலரிது வந்து விடுகிறதோ..
நீக்குபெரும்பாலும் வாசனை ரோஜா அதாவது ரோஜா நிறத்தில் வருமே அந்த ரோஜாப் பூக்கள் எப்போவானும் தான் கிடைக்கின்றன. கலப்பட ரோஜாக்கள், அதுவும் காகிதப் பூக்கள் போன்ற சின்னச் சின்ன சிவப்பு ரோஜாக்களே அதிகம் வருகின்றன. ரோஜா சாகுபடியே நின்னுடுத்தோனு நினைச்சுப்பேன். நல்லவேளையாக இந்த மரபணு மாற்றங்கள் மற்றப் பூக்களில் மல்லிகை, முல்லை, பிச்சி, தாமரை, செண்பகம் ஆகிய பூக்களில் இன்னும் வரலை. அந்த மட்டில் பிழைச்சோம்.
நீக்குரோஜாச் செடிகள் நிறைய வைச்சிருக்கோம். நாக்பூர் ரோஜாவுக்கு பிரபலம் என்பதால் என் நாத்தனாரிடம் சொல்லி ரோஜா பதியன்கள் கொண்டு வந்து அம்பத்தூர் வீட்டில் நட்டு வளர்த்திருக்கோம். அதில் கொடி ரோஜாச் செடி மட்டும் நீண்ட வருடங்கள் இருந்தது. மற்றவை நாங்க இல்லாதப்போ போய் விட்டன. எதுக்குச் சொல்றேன்னா அது ரோஜாவின் செந்தளிர் என்பது பார்த்ததுமே புரிஞ்சது என்பதற்குத் தான்.
நீக்குசொந்த வீடு, அதுவும் தனி வீடாய் இருந்தால் நினைத்தபடி செடிகள் வைக்கலாம்.
நீக்குவியாழனைத் தொட்டடுத்து வெள்ளி வருகிறது. வியாழனில் பாடல் பதிவு நல்ல மாறுதலா?
பதிலளிநீக்குநல்ல மாறுதலா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சோதனைகள் தொடர்கின்றன.. உங்களுக்கும் எங்களுக்கும்!!
நீக்குஅப்போ வெள்ளிக்கிழமைக்கு யார் என யோசித்துக் கொண்டிருக்கேன். :)))) திருவாழியாரா?
நீக்குநீங்க எப்பவுமே ரொம்ப அட்வான்ஸா யோசிக்கறீங்க அக்கா...
நீக்குமௌன த்யானம் #1
பதிலளிநீக்குநான்கு துறவிகள் சில நாட்களுக்குப் பேசாமல் மௌனமாகத் தியானம் செய்ய முடிவு செய்தனர். முதல் நாள் இரவு ஆனதும், மெழுகுவர்த்தி மினுமினுத்து அணைந்து போனது.
முதல் துறவி சொன்னார், "ஐயோ!! மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது."
இரண்டாவது துறவி பதிலளித்தார், "நாம் பேசக்கூடாது என்றுதானே முடிவு செய்திருந்தோம்?"
இதைக் கேட்ட மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள் இருவரும் ஏன் மௌனத்தைக் கலைத்தீர்கள்?"
நான்காவது துறவி அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னார், "ஹா ஹா! நான் மட்டும்தான் பேசாமல் இருந்தேன்..!!"
அல்ப துறவிகள் போலிருக்கு. இதைப் படித்தால் நான் கூட துறவியாகி விடலாம் போலிருக்கே...
நீக்குமௌனத் துறவிகள்!!! நீங்க வேற ...அவங்க வாய் தான் பேசுது. உள்ள அமைதி!!! ஹிஹிஹி ஸ்ரீராம் நோட் இட்...
நீக்குகீதா
யெஸ்.. நோட்டட்.. ஆனா என்ன விவரம் கீதா?
நீக்குயதேச்சையாக ஈகோ படம் நெட்ஃப்ளிக்சில் வந்த அன்று பார்த்தேன் (நாலு தவணையில், மூன்று நாட்களில் பார்த்து முடித்தேன்). மலையாள திரையுலகில் அனேகமாக எல்லாத் திரைப்படங்களுமே வித்தியாசமான கதைகளுடன் வருகின்றன. தமிழ்த்திரைப்படங்கள் அப்படி அல்ல. ஒருவேளை பா பட வரிசைகளைத் தந்த அந்தக்கால தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் கேரளத்தில் மறுபிறப்பு எடுத்திருக்கிறார்களா?
பதிலளிநீக்குஅட.. பார்த்து விட்டீர்களா? ரசித்தீர்கள்தானே... நான் ரசித்தேன். முடிவை புரிந்து கொள்ள பத்து, இருபது நொடிகள் தேவைப்பட்டது.
நீக்குஎங்களுக்குப் பிடித்திருந்தது. வித்தியாசமான கதைக்களம். எதிர்பாராத திருப்பங்கள். இயற்கை எழில். நம் தமிழகத்தில் நல்ல கதை எழுத ஆட்கள் இல்லை போலிருக்கு. கதாநாயகன் எப்படி என்ட்ரி ஆவார், என்னவெல்லாம் திறமை படைத்தவர் என எப்படிக் காண்பிக்கலாம்? அவர் மனதையும் குளிர்வித்து நாமும் தயாரிப்பாளர் காசுல எந்த எந்த நாடுகள் சுத்திப்பார்க்கலாம், அதற்கேற்ற மாதிரி பாடல்கள் வாங்கணும், கதாநாயகியோட வெளிநாட்டில் ரெண்டு டூயட்டாவது வச்சால்தான் நடிகர் மனம் குளிர்வார் என்ற யோசனையிலேயே இருந்துடறாங்க போலிருக்கு.
நீக்கு//பா பட வரிசைகளைத் தந்த அந்தக்கால தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் கேரளத்தில் மறுபிறப்பு எடுத்திருக்கிறார்களா?// எப்போவுமே மலையாளத் திரைப்படங்கள் சிலாகித்துப் பேசும்படியாக இருக்கும். அந்தக் காலத்திலேயே தான். அதோடு அங்கே ஹீரோ வொர்ஷிப் என்னும் பைத்தியக்காரத்தனமெல்லாம் இல்லை. நடிகர்களும் தங்களை மட்டும் திறமைசாலியாகக் காட்டணும் என வற்புறுத்த மாட்டார்கள். மோகன்லாலுடன் மமுட்டியும் நடிப்பார். ஜெயராமனுடன் மோகன்லாலும் நடிப்பார். ஈகோ இருக்காது. இங்கே?
நீக்குஅதிலும் இப்போ உள்ள இளைஞர்கள் யாருக்கும் திருமணம், காதல், குடும்பம் என்பதில் உள்ள உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிஞ்சுக்கறதில்லை. தாலி கட்டுவது மட்டுமே திருமணம் என நினைக்கிறாங்க. திருமண பந்தம், குழந்தை பிறப்பு, பெற்றோருக்குக் குழந்தைகளுடன் உள்ள பந்தம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உறவு முறைகளில் காணும் உள்ளப் பிணைப்பு போன்றவை அர்த்தமில்லாமல் ஆகிவிட்டன. இப்போ எல்லாம் மாமா, மாமி, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, மாமன் மகன், மகள் ஆகிய உறவுகளும் அருகிக்குறுகி விட்டன.
நீக்குஇந்தப் படம் கதை மட்டும் இல்லை, எடுத்திருக்கும் விதம், லொகேஷன்ஸ் எல்லாமே நல்லா இருக்கு.. தமிழில் இப்போதெல்லாம் அடிதடி, வெட்டு, குத்து, மெஷின்கன், ரத்த ஆறு...
நீக்குமௌன த்யானம் #2
பதிலளிநீக்குஜென் பௌத்த துறவியாக விரும்பிய ஒருவனை ரோஷி (குரு) அறிவுரைகளை வழங்கி ஏற்றுக்கொண்டார். பிறகு, "ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். இங்கே நாங்கள் மௌன விரதம் கடைப்பிடிக்கிறோம். ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் நீங்கள் மூன்று வார்த்தைகள் மட்டுமே பேச முடியும்" என்றார். அதற்கு அவன், "சரி" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "சாப்பாடு மட்டமாக இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றான்.
மேலும் பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் மீண்டும் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "படுக்கை கடினமாக இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பிச் சென்றான்.
மேலும் பத்து ஆண்டுகள் கடந்தன. அவன் ரோஷியைச் சந்தித்தான். ரோஷி, "ஏதாவது சொல்ல விருப்பமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆமாம், நான் விலகுகிறேன்!" என்றான். அதற்கு ரோஷி, "உன்னைக் குறை சொல்ல முடியாது. நீ இங்கு வந்ததிலிருந்தே புலம்பிக்கொண்டே இருக்கிறாய்" என்றார்!
ஹா ஹா ஹா... நமக்கு வேண்டாம் அந்த மடம். மௌன விரத் இருக்கணும் என்றாலும் நல்ல படுக்கை, மேசையில் லேப்டாப், பார்க்க தொலைக்காட்சி வேண்டும். அது எப்படி ஒருவனால் சும்மா இருக்க முடியும்?
நீக்குஇல்லையா பின்னே? :-)
நீக்குதன் அறையில் அவன் தனக்குத்தானே ஏதாவது பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? சிசி டிவியா வைத்திருப்பார்கள்? என்னவோ போங்க.. ரஜினியின் எட்டு எட்டா பிரித்துக் கொள்ளும் வாழ்க்கை போல முதல் பத்து வருடங்களிலேயே அவனுக்கு ஞானம் வந்திருக்க வேண்டும் போல..
நீக்குநான் பள்ளி படிக்கும் காலத்திலேயே ஞானம் அடைந்திருக்கிறேன். நாடிச் சென்று அடைவோம். அங்கு பல படங்கள் பார்த்திருக்கிறேன் தஞ்சையில்!
LOL.
நீக்குநம்ம ஊர்ல 10 நாட்கள் எந்தவித வெளியுலகுத் தொடர்பும் இல்லாமல் (பிக்பாஸ் இல்லைங்க!!!!) தியானம் மௌனம்....என்று விபாசனா சைலன்ட் ரெட்ரீட் பயிற்சி இருக்கு தெரியுமோ!! புத்தரின் கொள்கைகள் அடிபப்டையில்...மொபைல், கணினி, எழுத்து புத்தகம் எதுவும் இல்லாமல்...Dhamma centres இருக்கு..
நீக்குகீதா
நான் அதற்கு அப்ளை செய்து, போகவேண்டிய சமயத்தில் அந்த பத்து நாட்களில் ஒரு நாள் தர்ப்பணம் இருந்தது. விதிவிலக்கு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் போகமுடியாமல் போய்விட்டது. இன்னொரு தடவை முயற்சிக்கணும்.
நீக்குஅந்த சென்டர் பற்றி தெரியாது. ஆனால் அப்பாதுரை வருடத்துக்கொருதரம் காட்டுக்கு வனவாசம் போவார். ஒரு மாசம்னு நினைக்கிறேன்.
நீக்குநாரண துரைக்கண்ணன் அவர்கள் பற்றிய பகுதி அருமை. தெரியாத நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளவதுதான் சுவாரசியம். தெரிந்த சினிமா அக்கப்போர்களை மீண்டும் படிப்பதில் என்ன கிடைக்கும்? ஶ்ரீராம் இந்த மாதிரி எழுத்தாளர்கள், பழைய வரலாறுகளைத் தேடிப் படித்துப் பகிர்வாரா?
பதிலளிநீக்குபரவாயில்லை, பிழைத்தேன். இதற்கு எனக்கு கண்டனங்கள் வரும் என்று நினைத்தேன். ஆனால் சினிமா அக்கப்போர்களும் சுவாரஸ்யம். மேலும் அதை பாடல்களுடன்தானே கொடுத்துக் கொண்டிருந்தேன்!
நீக்குஅந்தக்காலத்து ஆனந்த விகடனில் இவர் எழுதிய பறவைகள் பற்றிய ஒரு கதை லேசுபாசாக நினைவில் இருக்கு. மற்றபடி வேறேதிலும் இவர் எழுத்தைப் பார்க்கலை. படிக்கலை.
நீக்குஎனக்கும் எதுவும் நினவில்லை.
நீக்குநீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பழைய விகடன்கள் இருந்திருந்தால் பார்த்திருக்கலாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. உங்களின் விரத மகாத்மியங்கள் நன்றாக உள்ளது. கூடவே துவாதசி பாரணை படமும் சிறப்பு. நானும் ஏகாதசி விரதங்கள் இருந்திருக்கிறேன். ஆனால், ஒருதடவை மட்டும் உணவருந்தி. ஒருதடவை நீங்கள் சொல்வது போல் எதுவும் சாப்பிடாமல் என.
மெளன விரதம் வியாழன் தோறும், ஒரு வருடம் இருந்தேன். பிறகு அதுவும் போச்சு. விரதங்கள் மனதையும், வயிற்றையும் சுத்தமாக்கும். புத்துணர்ச்சி தரும். ஆனால் தொடர்ந்து இருக்கத்தான் இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதே போலதான் நானும். என் அப்பா மௌன விரதம் இருந்து பார்த்திருக்கிறேன். போனில் வேண்டுமென்றே பேசுவோம். டயல் டைப் போன். போனில் ஒவ்வொரு விஷயம் சொல்லி முடித்ததும் டக் டக் என்றுவிரலால் தட்டி அக்நலாட்ஜ் செய்வார்! எனக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றி அப்போது இருந்திருக்கிறேன். சமயங்களில் காலை ஆறரை முதல் மாலை ஆறரை வரை. பெரும்பாலும் மறுநாள் வரை!
நீக்குபொதுவாகவே முஸ்லீம்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யும் தொழுகைகள் உடல் நலனைக் கருத்தில் கொண்டே இருக்கும், யோகாசன முறை. அதேபோலத்தான் இந்துக்களின் வழிபாட்டு முரட்டைகளும். கோலம் போடுதல் முதல் வீடு பெருக்குவது வரை கூட உடற்பயிற்சிதானே!
//போனில் வேண்டுமென்றே பேசுவோம்.//கர்மா!! அதனால்தான் இப்பொ உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு அதையே செய்கிறார்கள் :-)
நீக்குஓ.. பிற்பகல் தத்துவமா?! ஆனால் இந்த சோதனைகள் எல்லாம் தேவைதான்.. அதையும் கடந்துதான் வரவேண்டும்!!
நீக்குமௌன த்யானம் #3
பதிலளிநீக்குநான்கு முனிவர்கள் (காஷ்ட மௌனம் கடைபிடிக்கிறவர்கள்) ஒரு கோவிலில் தியானம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று கொடி பலத்த ஓசையுடன் படபடக்கத் தொடங்கியது.
அவர்களில் இளைய முனிவர் தனது தியானத்திலிருந்து வெளிவந்து, "கொடி படபடக்கிறதே" என்றார்.
அதிக அனுபவமுள்ள இரண்டாவது முனிவர், "காற்றுதான் படபடக்கிறது" என்றார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்த மூன்றாவது முனிவர், "மனம்தான் படபடக்கிறது" என்றார்.
பழுத்த பழமான நான்காவது துறவி, "வாய்கள்தான் படபடக்கின்றன!" என்றார்.
ஆக யாரும் விரதத்தில் ஜெயிக்கவில்லை! என்ன மன உறுதியோ.. இதில் வேறு ஏதாவது எனக்குப் புரியாத பெரிய தத்துவம் இருக்கா வாத்யாரே.... பொதுவாக எனக்கு ஜென் கதைகள் புரிவதில்லை.
நீக்குபெரிய தத்துவம் கீது! சாவகாசமா, is the flag moving or the wind moving or the mind அப்டீனு கூகில் பண்ணிப்பாத்துக்கிடுங்க .-)
நீக்குபார்த்தேன். இதைதானே கவிஞர் "கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்தததும் கொடி அசைந்ததா என்று கேட்கிறார்.
நீக்குஸ்ரீராம், ஞானியாகறதுக்கான முதல் படியா! ஓகே ஓகே!!!!
பதிலளிநீக்குஆல் த பெஸ்ட்!! தொடர...சில டிப்ஸ் ஹிஹிஹி
அடுத்த ஸ்டெப்பாக மொபைல் அல்லது டிவி ஏதேனும் ஒன்றைத் துறந்து....அதற்கு அடுத்த ஸ்டெப்பாக இரண்டையும் துறந்து...அடுத்த ஸ்டெப்பாக ஏதேனும் ஓர் அமைதியான இடம்....மலைப்பகுதி நதிப்பகுதிக்குப் போய் இருந்து....!!!
கீதா
மலைப் பகுதி ந்திப் பகுதிக்குப் போனா, பாம்பு வருமா கரட்டான் ஓணான் வருமான்னு மனம் படபடக்குமே.
நீக்குஎழுத்தாளர் ஞாநி சொல்கிறீர்களா? நான் ஏற்கனவே புத்தராகி விட்டேன்.. உங்களுக்கு தெரியும்! நெல்லைக்கும் தெரியும்!!
நீக்குமலைப்பகுதிக்கு போ என்று என்னை கடத்தி விட்டு "இந்த மாதிரி வியாழன்ல எங்களை ரொம்ப படுத்தாதே " என்று சொல்ல வருகிறீர்கள், இல்லையா! நீங்கள் பெரிய ஞானி கீதா.. வாங்க...
நெல்லைஜி, ஓணான் தெரியும். யாரும் அதற்கு பயப்படமாட்டார்கள். கரட்டான் ஓணான் என்றால் என்ன?
நீக்குஓணான் கமா. கரட்டான்... அது ஓணானைவிட ஒல்லியா கொஞ்சம் கருப்பா இருக்கும், ஓணான் மாதிரியே
நீக்குஹாஹாஹா ஸ்ரீராம்....சிரித்துவிட்டேன்
நீக்குகரட்டான் அதேதான் நெல்லை சொல்வது ஒல்லியா இருக்கும் உடம்பே நல்லா வளையும்
கீதா
//பாம்பு வருமா கரட்டான் ஓணான் வருமான்னு மனம் படபடக்குமே.// இதுக்கு எதுக்குக்காட்டுக்கு மலையடிவாரத்துக்குனு போகணும்? நாங்கல்லாம் கூடவே வாழ்ந்திருக்கோமே. எங்களோட அவையும் எங்க வீட்டிலே இருந்திருக்குங்களே! அதிலும் பாம்பார் சொல்லவே வேண்டாம். எப்போ வேணாலும் எட்டிப்பார்ப்பார்.
நீக்குகரட்டான் நானும் பார்த்திருக்கேன்னுதான் நினைக்கறேன். நானும் இத்தனை ஜீவராசியுடனும் இருந்திருக்கிறேனே..!
நீக்குமௌன த்யானம் #4
பதிலளிநீக்குஇரண்டு பழைய நண்பிகள் சந்தித்தனர்.
"உன் கணவர் இன்னும் வேலையில்லாமல்தான் இருக்காரா?"
"இல்ல, இல்ல, இப்போ அப்டியில்ல."
"தேவலையே. இப்போ அவர் என்ன செய்றார்?"
"இப்போ அவர் அடிக்கடி தியானம் செய்றார்."
"தியானமா! அது என்ன?"
"எனக்குச் சரியாத தெரியல, ஆனா சும்மா உக்கார்ந்திருக்கறதை விட இது பரவாயில்ல!"
ஹா ஹா ஹா... சும்மா இருப்பது என்றால் என்ன?
நீக்குதிவாமா உங்க கருத்து பார்த்து சிரித்துவிட்டேன்
நீக்குநெல்லை அது ரொம்ப கஷ்டம் கேட்டேளா...மிகப் பெரிய தத்துவம்!
கீதா
தியானம் என்பது விழித்துக் கொண்டே உறங்குவது!
நீக்குசும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை சில துறவிகள் சொல்லி இருப்பதாக ஞாபகம். ஏதோ படத்தில் செந்திலோ, வடிவேலுவோ கூட சொல்லி இருக்கிறார்! மனம் உறங்கும் நாளெல்லாம் வந்தால் நான் சிவனுக்கு அடுத்த மூன்றாவது இடத்தை பிடித்து விடுவேனாக்கும்! நாம் தூங்கும்போது கூட மனம் தூங்குவதில்லை.
இமயமலைக்குப் போயிருந்தப்ப அதையும் நதிகளையும் பார்த்த பிரமிப்பில், வாய் பிளந்து அப்புறம் மூடி மனதுக்குள் பரவசமடைந்து.....intermittent விரதம் போல மௌனம் ப்ளஸ் சாப்பாடு (அது வேற ஒண்ணுமில்லைங்க பிரயாணம் செஞ்சப்ப நல்ல ஹோட்டல் வேணுமில்ல? அது இல்லைவழியில்!!!!!) ஆனால் பிரமிப்பில் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் வாவ் போட்டுக் கொண்டு மௌனமாக....அது ஒரு அழகான தருணம்!!!
பதிலளிநீக்குஊருக்கு வந்த பிறகு, உண்ணா விரதம் இருந்து பார்ப்போமேன்னு இருந்தா நடைப்பயிற்சி போனப்ப, சர்க்கரை அளவு குறைந்துவிட்டது! உடம்பு வெலவெலத்து.....ஏற்கனவே கட்டுப்பாடான சாப்பாடா...ஸோ...அதன் பிறகு இருப்பதில்லை.
மௌன விரதம் வீட்டில் சாத்தியப்படவில்லை. ஆனால் பல சமயங்களில் நம்மை அறியாமல் இருந்ததுண்டே!!!!!!!!!!!!!!!!!!! கோபம், வருத்தம்...என்று அதுவும் நல்லதாக இருந்தது வார்த்தைகள் வெளியில் வந்து விழாது பாருங்க!!! ஹாஹாஹாஹா....
கீதா
ஒரு பரவச நிலைக்கு வருவதற்குதான் இவையெல்லாம் தேவை என்று நினைத்தால் பழைய 'தம்ஸ் அப்' விளம்பரத்தில்வந்தது போல நான் இப்போதே அந்த நிலை அடிக்கடி அடைகிறேன்!!
நீக்கு//இமயமலைக்குப் போயிருந்தப்ப அதையும் நதிகளையும் பார்த்த பிரமிப்பில், வாய் பிளந்து அப்புறம் மூடி மனதுக்குள் பரவசமடைந்து...// நாச்சியாரே, காலடி ஆச்சார்யரும் சீடர்களும் முதன்முதல் இமயமலை அடைந்தபோது, சீடர்களின் reaction அச்சு அசல் உங்களுடையதே, apparently! 'இத்தனை அழகா, இவ்வளவு அழகு சாத்யமா' என்று சொல்லிச்சொல்லி மாய்ந்து போனார்களாம். ஆச்சார்யர், 'அப்பா, இந்த அழகு அங்கே வெளியில் இல்லை, உனக்குள்ளே இருப்பதுதான்' என்று உணரவைத்தாராம்!! 'சத்யம், சிவம், சுந்தரம்' பற்றி பின் எப்போதாவது பார்ப்போம் :-)
நீக்கு//'தம்ஸ் அப்' விளம்பரத்தில்வந்தது போல நான் இப்போதே அந்த நிலை அடிக்கடி அடைகிறேன்!!// இங்க நம்மாளு சிவமூலிகை, ப்ரஹ்மபத்ரம் இதெல்லாம் ஆரம்பிச்சுட்டார்! ஆன்மீகம் ஆரம்பிக்கறதுக்குள்ள இதெல்லாம் சம்ப்ரமமா வந்துடுது போல! ;-) ;-)
நீக்குநீங்க அந்த விளம்பரம் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்!
நீக்குதிவாமா, முதன் முறை போனபோது என்ன ஃபீலிங்கோ அதேதான் இரண்டாவது முறை போனப்பவும். இனி போனாலும் கூட அதேதான். எனக்கு ரொம்பப் பிடித்த இடங்கள்...மலைகள், நதிகள், அருவிகள் இயற்கை...அதில் இமயமலை சிலிர்க்க வைக்கும் ஒன்று/...
நீக்கு//ஆச்சார்யர், 'அப்பா, இந்த அழகு அங்கே வெளியில் இல்லை, உனக்குள்ளே இருப்பதுதான்' என்று உணரவைத்தாராம்!! '//
உண்மை அதுதான். வெளியில்தான் தேடுகிறோம்...அதனால்தான் எனக்கு இந்தத் தத்துவம் ரொம்பப் பிடித்த ஒன்று. ஆனா பாருங்க பிடிச்சாலும் அது எவ்வளவு கஷ்டம் இல்ல? புன்பற்றுவது!
கீதா
புன்பற்றுவது - பின்பற்றுவது.
நீக்குகீதா
//நீங்க அந்த விளம்பரம் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்!// Yes.
நீக்கு//இந்தத் தத்துவம் ரொம்பப் பிடித்த ஒன்று// தத்வம் என்றில்லை. யதார்த்தம். (இயற்கை மட்டுமல்ல எந்த விதமான) அழகையும் ரசிப்பது ஆண்டவன் தரிசனமே!!! ஆத்திகனும் நாத்திகனும் இணையும் அற்புத புள்ளிகளில் இதுவும் ஒன்று! மெய் மறந்து, சொல் அற, மனம் அழிந்து ப்ரமித்து நின்றால், அது ஆத்ம தரிசனத்தின் sample!!! ஆத்ம தரிசனத்திற்கு மதம் தேவை இல்லை.
நீக்குஉண்மை. விஞ்ஞானமும் கடவுளும் ஏதோ ஒரு புள்ளியில் என்றோ ஒருநாள் இணைவார்கள் என்று சுஜாதா சொல்லி இருந்தார்!
நீக்குவாய்வழி பேசாவிட்டாலும் மனம் மௌனமாக இருக்க வேண்டுமே!!!!! ஆ ஆ ஆ ஆ இதை சொல்லிவிட்டேனே இங்கு! சரி இதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டேன்!!!!!!!!!!!!!! ஸ்ரீராமிற்குப் புரியும்!!!
பதிலளிநீக்குகீதா
மௌன விரத்த்தின் உண்மையான அர்த்தம் மனம் பேசாமை. தியானத்தின் வழி அது
நீக்குயெஸ் நெல்லை....அதை நான் வேறு ஒன்றில் பயன்படுத்தியிருக்கேன் நெல்லை அதனால் இங்கு அதைப் பத்தி பேசலை
நீக்குகீதா
மனம் மௌனமாக இருக்க வேண்டுமா? முடியுமா அது!
நீக்கு// மௌன விரத்த்தின் உண்மையான அர்த்தம் மனம் பேசாமை. தியானத்தின் வழி அது //
சாத்தியமே இல்லை நெல்லை. துறவிகளுக்கும் சாத்தியமில்லா நிலை. அட்லெஸ்ட் இறைவனையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். பற்றிக்கொள்ள ஒரு பற்றுகோல் தேவை.
பற்றுக பற்றற்றார் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு!
//சாத்தியமே இல்லை நெல்லை.//சத்தியமாக சாத்தியம்.
நீக்குஎளிய எடுத்துக்காட்டு:
ரொம்ப எளிய மனிதர்கள் கூட அதிர்ச்சியின்போது விழிப்பு நிலையில் திக்ப்ரமை பிடித்தாற்போல உறைந்து நிற்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே? உங்களுக்கே இந்த அனுபவம் இருக்கக்கூடும். stupified, stultified, stunned, dazed, amazed, shocked, bewildered, and astonished - ஆங்கிலேயனே இவ்வளவு சொல்கிறான்.
அதுவும் முனிவர்களின் மனமடங்குதலும் ஒன்றா என்றால், கால அளவில்தான் வித்யாசம். of course, முன்னது involuntary, பின்னது voluntary/deliberate.
பதஞ்சலி யோக சூத்ரம் யோக: சித்த வ்ரித்தி நிரோத: என்றுதான் துவங்குகிறது, வாத்யாரே! சித்த வ்ரித்தி என்றால் எண்ணங்கள்; நிரோத் தெரியாதவர்கள் நம் தலைமுறையில் உண்டா என்ன? சம்ஸ்க்ர்த நிரோதம்தான் தமிழில் நிறுத்தம்.
நான் தான் கரெக்ட். தூங்கும்போதெல்லாம் தியானம் செய்கிறேன். தியானம் செய்யும்போதெல்லாம் தூங்குகிறேன்.
நீக்குசோலி சுத்தம், jkc சாரே! :-)
நீக்குஅந்தநிலை வருவது நமக்கெல்லாம்.. சரி.. எனக்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஓங்கி ஒரு போடு போட்டு மயக்கத்தில் வைத்திருந்தால்தான் உண்டு!! இப்பப்பவே பாருங்க என் அல்பமனம் ஸ்லோகத்தை நிரோத்னு படிக்குது!
நீக்குஸ்ரீராம் என்னையும் உங்க லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க!!!!
நீக்குஆனா எனக்குப் பக்தி கூடக் கிடையாது. கோவிலுக்குப் போனால் கூட பக்திப்பரவசம் ம்ஹூம்... ஆனா மலைகளையும் நதிகளையும் அதுவும் இமயமலையை அதன் பனிச்சிகரங்களைப் பார்த்தால் அதுக்கு மேல இன்னா கீதுப்பான்னு தோன்றும். அந்த ஆழ் அமைதி...கூடவே வேறு பல விஷயங்கள் உண்டு லிஸ்டில்.
ஆ! மேலே திவாமாண்ணா சொன்ன சங்கரரின் வரிகள் வருதே...அதெல்லாம் முடியாதுப்பா நாங்க பார்த்து ரசித்தே தீருவோம்...
கீதா
நாம் நமது நான்காவது ஜென்மத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் கீதா.. இன்னும் இரண்டு ஜென்மங்கள் தாண்டி மூன்றாவது பிறவியில் இதெல்லாம் தமக்கு லபிக்கலாம்!
நீக்குவிரதம் என்று சொல்லிக் கொண்டு அன்று பாசிப்பருப்பு வெல்லம் போட்டக் கஞ்சி, உப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி என்று சாப்பிடுவது விரதத்தோடு சேர்த்தி அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து.
பதிலளிநீக்குஏனென்றால் அவை நன்றாகக் கலோரியை பார்த்துக் கொள்ளும். பசி எழாது.
கீதா
அவனவன் அரிசியை உடைத்து சாதமாகச் சாப்பிட்டால் விரத்த்துக்கு பங்கமில்லைனு நினைக்கறாங்க. என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் மட்டுமே அருந்தி இருப்பதுதான் விரதம்.
நீக்குபாலும் பழமும், போர்ன்விட்டா, காஃபி, போன்றவை வித்தியாசமான டயட்டில் இருக்கிறேன் என்று சொல்ல உதவும். உடனே, வச்சா குடுமி சரைச்சா மொட்டையா எனக் கேட்காதீர்கள். நான் சொன்ன விரத்த்துக்கான பாதை இது.
நெல்லை நான் கேட்க மாட்டேன். நீங்க சொல்றதுதான் என் தனிப்பட்டக் கருத்தும்
நீக்குகீதா
எதையாவது சாப்பிட்டு விட்டோ, ஒருவேளை உணவு எடுத்துக் கொண்டேன் என்றோ விரதம் இருப்பதில் எனக்கும் சம்மதமில்லை கீதா...
நீக்குநெல்லை உண்மையில் அன்று தண்ணீர் கூட அருந்தவில்லை நான். ஆனால் பாருங்க பாஸ் வற்புறுத்தி இரண்டு காஃபி, ஒரு டீ கொடுத்து விட்டார். விரத பங்கம்! மகன்கள் என் விரதத்துக்கு பயங்கர எதிர்ப்பு. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று வைத்துக் கொண்டு இது தேவையா என்று! சீக்கிரமே காஃபி டீ இல்லாத விரதத்தை மேற்கொள்வேன் என்று உளமார நெஞ்சார மனமார உறுதி கூறுகிறேன்.. ஆனால்..
//மகன்கள் என் விரதத்துக்கு பயங்கர எதிர்ப்பு. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று வைத்துக் கொண்டு இது தேவையா என்று! // நான் உங்கள் மகன்கள் பக்கம்; not that it matters to you :-) சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லாவிடில் தாராளமாய் இருக்கலாம்; நல்லதும் கூட.
நீக்குஆற்றோரமாய்தான் நிற்கிறேன். அதாவது பார்டர் லெவல்!
நீக்குஸ்ரீராம் நீங்க சொல்லியிருபப்து தெரியும்....நீங்க உறுதியானவர் என்று!
நீக்குகீதா
விரதம் இருப்பதெனில் மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் சின்னக் குழந்தைகள் முதல் விரதம் இருக்கும். எச்சில் கூட முழுங்காமல், "ம்" என்னும் சப்தம் கூட வெளிவராமல் கண்களாலேயே பேசிக் கொண்டு/பதில் சொல்லிக் கொண்டு நவராத்திரி பத்து நாட்கள், சாதுர்மாஸ்ய விரதம் நான்கு மாதங்கள் என இருப்பார்கள். அதை மிஞ்சி வேறே எங்கும் பார்த்தது இல்லை. நம்ம ஊரில் சொந்தக்காரங்க சிலர் சிவபூஜை செய்வதால் வெளிச் சமையல், மற்றவர் சமைப்பது, அவங்க கொடுப்பதைச் சாப்பிடுவதுனு ஏத்துக்க மாட்டாங்க. இப்போல்லாம் அப்படியான மனிதர்களைத் தேடித் தான் பிடிக்கணும்.
நீக்கு//எச்சில் கூட முழுங்காமல், "ம்" என்னும் சப்தம் கூட வெளிவராமல் கண்களாலேயே பேசிக் கொண்டு/பதில் சொல்லிக் கொண்டு நவராத்திரி பத்து நாட்கள், சாதுர்மாஸ்ய விரதம் நான்கு மாதங்கள் // பகலில் உண்ணாமல் என்று சொல்ல வருகிறீர்களா?
நீக்குபொதுவாக, தண்ணீர் குடிக்காமல் இருக்கும் தொடர் உண்ணாவிரதம் உடல் ரீதியாக நல்லதில்லை. ஆபத்தாகவும் முடியலாம். தொடர் உண்ணாவிரதம நீருடன்இருப்பதானால், electrolyte balance முக்யம். குறைந்தது, உப்பும் அதை சமன் செய்ய பொட்டாசியமும் தேவை.
//விரதம் என்று சொல்லிக் கொண்டு அன்று பாசிப்பருப்பு வெல்லம் போட்டக் கஞ்சி, உப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி என்று சாப்பிடுவது விரதத்தோடு சேர்த்தி அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து.// உடல் நலம் இல்லாதவர்களுக்கு, மனக்கட்டுப்பாட்டிற்கு (சுவையான உணவில் நாட்டம் குறைய) உதவக்கூடும், perhaps
நீக்குபொதுவாகவே உடைத்த அரிசி விரதத்துக்கு உதவும் என்பார்கள். அரிசியை உடைத்துச் சாப்பிடுவது விரத நாட்களுக்கு உகந்தது. அதோடு பாசிப்பருப்ப்பு,ம், வெல்லமும் சேரும்போது உடலுக்குத் தேவையான நடமாடும் சக்தியை அது கொடுக்கும். ஆகவே தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்க முடியாதவர்கள் இப்படி எடுத்துக்கலாம் என்பதும் விரதத்தின் ஓர் விதி. உப்பும் அப்படித் தான். உடலில் சக்தி சேரவே உப்பும், சர்க்கரை/வெல்லம் சேர்க்கப்படுகிறது. குறிப்பா விரத நாட்களில். ரொம்பவே ஆசாரமான சிலர் தினசரி நிவேதனத்தில் உப்புச் சேர்த்துப் பண்ணுவது அரிது. சிராத்தம் அன்றும் சில வீடுகளில் உப்பைத் தனியாக வைப்பார்கள். உப்பு கடலில் இருந்து விளைவதால் ஆசாரக்குறைவு. அதுவே சந்தா நமக் போன்ற மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படும் உப்பெனில் அன்னிக்கு ஆசாரக்காரங்க அதைச் சேர்த்துப்பாங்க. வட மாநிலங்களில் ஆசாரம் மிகுந்த அனைவரும் பயன்படுத்துவது இந்தப் பாறை உப்பைத் தான். பெரும்பாலான கோயில்களில் பிரசாதங்களில் இதைத் தான் சேர்ப்பார்கள். என் அப்பாவின் சித்தி எது சமைச்சாலும் உப்புச் சேர்க்காமல் சமைச்சுட்டுக் கீழே இறக்கியானதும் இந்தப் பாறை உப்பைப் பொடி செய்து தூவிக் கொண்டு சாப்பிடுவார்கள்.
நீக்குஎதையாவது சாப்பிடுவது என்பதையே விரத நாட்களில் தவிர்க்க நினைக்கிறேன். ஒரு தைரியத்துக்குதான் கடவுள் பெயரைச் சொல்லி விரதம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். கட்டுப்பாட்டுக்கு பிடித்துக்கொள்ள ஒரு பற்றுகோல்.
நீக்குஎன்னாங்கடா இது இன்று ப்ளாகர் ஒவ்வொரு கருத்து போடும் போதும், ரெஃப்ரெஷ் செய்யச் சொல்லுது! போட மாட்டேங்குது...
பதிலளிநீக்குட்ராஃபிக் ஜாம் போல....போடவே மாட்டேங்குது ரொம்ப டைம் எடுக்கிறது. வேலைகள் முடித்துவிட்டு வருகிறேன். பொங்கல் வேலைனு இல்லை மற்ற வேலைகள்...
எபியில் மட்டும்தான் திடீரென்று கருத்து வழங்க முடியலை. வெங்கட்ஜி, கோமதிக்கா தளத்தில் முடிகிறது.
கீதா
ஆ! என் ஐடியிலிருந்துதான் பிரச்சனையாகிறது திடீரென்று இங்கு மட்டும்,,
நீக்குஇப்ப பாருங்க அந்தக் கருத்துவந்துவிட்டது
கீதா
எனக்கும் சமயங்களில் மற்ற தளங்களில் இப்படி ஆனதுண்டு கீதா.. இன்று நான் எழுந்ததே லேட் என்பதால் இனிதான் மற்ற தளங்கள் செல்ல வேண்டும். குளிக்க வேண்டும், தர்ப்பணம் செய்ய வேண்டும், காய் நறுக்கிக் கொடுக்க வேண்டும்... கடமைகள்.. கடமைகள்... எங்கே துறவுக்கு போவது!
நீக்கு//என்னாங்கடா இது// மன்னிச்சிக்கோங்க, நாச்சியாரே! வையாதீங்க; பாவம்லா நாங்க.
நீக்குஹாஹாஹா...திவமா .....
நீக்குகீதா
//எங்கே துறவுக்கு போவது!// தோட்டம், துரவு, இந்த மாதிரி இருக்குமோ?
நீக்குதிடீரென்று எந்தத் தளத்திலும் என் ஐடி வேலை செய்ய மாட்டேங்குதே
பதிலளிநீக்குகீதா
ஆ...
நீக்குஆனால் இங்கு கமெண்ட் வந்திருக்கிறதே...
ஸ்ரீராம் நல்லா பாருங்க......புதிய ஐடிலருந்து முதல்ல வந்துச்சு ஆனால் திடீர்னு மக்கர் பண்ணியது. பாருங்க அடுத்த கமென்ட்ஸ் எல்லாம் ப்ளாகர் ஐடி இல்லேனா என் பழைய ஐடிலருந்து வந்திருக்கும்,.
நீக்குஇப்ப மீண்டும் என் புதிய ஐடிலருந்து முயற்சி.....
யாருக்கு வேண்டிக்கணும்னு சொல்லுங்க கருத்து வெளியாவதற்கு...பரிகாரம்? கூகுள் ஆண்டவருக்கா!!!?
இப்ப மீண்டும் புது ஐடி முமுயற்சி செய்து போகலை...ரீ ஸ்டார்ட் செஞ்சு பார்த்தும் பயனில்லை...ஐடி ஓப்பன் ஆகுது ஆனா ப்ளாகரில் எங்கும் போட முடியலை
ஸொ மீண்டும் என் பழைய ஐடிலருந்து!!! அதுவும் எங்கள் தளத்தில் இணைத்து இருப்பதால் துளசிபெயரில் வருது
கீதா
காலை திடீரென என் கணினி தானாகவே ஷட் டவுன் ஆகிக் கொண்டிருந்தது. மறுபடி மறுபடி முயன்றதில் கீபோர்ட்தான் கல்ப்ரிட் என்று தெரிந்தது. பேட்டரியைக் கழற்றி துடைத்து காய வைத்து மீண்டிருக்கிறேன்!
நீக்கு20 வயது தம்பி - கவிதை செம....சூப்பர் ஸ்ரீராம்! ரொம்ப அழகு என் பாராட்டுகளையும் சொல்லிவிடுங்கள்!
பதிலளிநீக்கு20 - வயது தம்பி// ம்ம்ம்ம்ம் சொல்லிக்கங்க சொல்லிக்கங்க!!!!
துரை அண்ணா தளத்தில் பகிர்ந்திருக்கும் உங்க கவிதை முயற்சியையும் ரசித்தேன் ஸ்ரீராம். நல்லா எழுதியிருக்கீங்க.
இலக்கணம் அறியேன்....ஆயினும் பொருளையும் ரைமிங்கையும் ரசித்தேன், ஸ்ரீராம்
கீதா
நன்றி கீதா.. நான் எழுதுவது எந்த இலக்கணத்திலும் வராது. எந்த கட்டுக்குள்ளும் அடங்காது "கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி என்று மனதுக்குள் SPB பாடுகிறார்! சும்மா தோன்றுவதை அப்படியே மனவரிகளை மடக்கிப் போடுவேன். அவ்வளவுதான், JKC யும் சொல்வார் பாருங்க!
நீக்கு"சாட்டை கையில் கொண்டு" பாடலை முதன் முறையாகக் கேட்கின்றேன் இது ஒரு பாப்புலர் பாடல் என்று போன வாரம் கூறியிருந்தீர்கள் .... நினைவிருக்கின்றது. ஏனோ ஒரு முறை கூடக் கேட்ட ஞாபகம் இல்லை. சீர்காழியின் குரல் ரவிச்சந்திரனுக்கு செட்டாக வில்லை என்பது என் அபிப்ராயம்.
பதிலளிநீக்குதலையில் கூடையுடன் நடக்கும் அம்மணி அங்கமுத்துதானே? அந்தக்கால சிவாஜி, எம்ஜியார் படங்களில் சிறு வேடங்களில் வந்து விடுவார். பெண்களில் இவரும் ஆண்களில் உசிலை மணியும் அவர்களின் "கன பாடிக்க்காகவே" சிறு வேடங்களில் வந்து விடுவார்கள். இந்தக் காலத்தில் அதையெல்லாம் "பாடி ஷேம்" என்று சொல்லி விடுவார்கள்
வாங்க சூர்யா... ஆமாம் அவர் அங்கமுத்துதான். சொல்ல நினைத்து மறந்து போனேன். இவர் பேயறை வைத்து ஆனால் காட்சியில் அவர் இல்லாமல் ஒரு பாடல் இருக்கு தெரியுமோ...
நீக்குசீர்காழி குரல் அவருக்கு செட் ஆகவில்லைதான். ஆனால் பாடலை தனியாக ரசிக்கலாம்! அல்லது அவர் வாயசைப்பை, முகத்தைப் பார்க்காமல் ரசிக்கலாம்!
அங்கமுத்து, உசிலைமணி வரிசையில் பகோடா காதரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
"அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்" பாடலைக் குறிப்பிடுகிறீர்களா? நாகேஷ் ட்ரெயினில் கோஷ்டியோடு பாடுவது போல் வரும். அந்தக் காலத்தில் ஸ்கூலில் ரொம்பப் பாப்புலர் பாடல்.
நீக்குஅதேதான்... பொதுவாகவே எனக்கு நாகேஷ் டான்ஸ் பிடிக்கும். தங்கைக்காக படத்தில் டைப்பிஸ்ட் கோபு குழுவோடு நாகேஷ் போடும் கெட்ட ஆட்டம் அது!
நீக்குபகோடா காதர் கண்டிப்பாக அந்த லிஸ்டில் சேர்க்கவேண்டியவர்தான். இன்னும் இரண்டு பேர் அந்த லிஸ்டில் வருவார்கள்...பெயர் தெரியவில்லை. ஒருவர் அந்த தனுஷ்/பாக்யராஜ் படத்தில் வருவார்.
நீக்குநீலுவா? இடிச்சப்புளி செல்வராஜ் குண்டுமணி யாராவதா?
நீக்கு//இவர் பேயறை// பதிவிலே தான் எழுத்துப் பிழைகள்னு நினைச்சா இங்கேயும் பேயறை அறைஞ்சுட்டீங்களே!! :))))
நீக்குநீலுவா? // He is no more. long ago, I think
நீக்கு// தான் எழுத்துப் பிழைகள்னு நினைச்சா இங்கேயும் பேயறை அறைஞ்சுட்டீங்களே!! :)))) //
நீக்குஹா. ஹா.. ஹா... அவசரம்! நீலு நோ மோராக இருந்தால் என்ன... அவராக இருக்குமோ என்று நினைத்தேன். அவர் அதற்கும் முன்னாலேயே நோ மோரா?
பொங்கல் அன்று பதிவு ஒரு சிறப்பு மலராக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்து ஏமாந்தேன். இப்படியா இரண்டு வாரம் மௌன விரதம் பூண்டு மற்றவர்களை எழுத வைத்து திரும்ப வந்து சினிமா மலராக பொங்கல் அன்று வெளியிடுவதை கண்டிக்கிறேன்.
பதிலளிநீக்குசா கந்தசாமியின் நாரண துரைக்கண்ணன் பற்றிய குறிப்பு மட்டும் விதிவிலக்கு.
தனித்தன்மை வாய்ந்த வியாழனின் ருசி வேண்டும் வரட்டும்.
Jayakumar
வாங்க JKC ஸார்..என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்... யோசிக்கிறேன்..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநன்றி வசிஷ்டரே.. (அவ்வ்.....)
நீக்கு/1987 ஆம் ஆம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சூளைமேட்டில் வசித்து வந்த அவரைக் காண சைக்கிளில் சென்றேன். வா என்று வரவேற்றார். பாரதிதாசனைப் பார்க்கப் போகிறேன்/
பதிலளிநீக்குபாரதிதாசன் அறுபதுகளிலேயே காலமாகி விட்டரே! தேதிகளில் ஏதோ குழப்பம்
ஆம். குழப்பம். 37 ஆக இருக்குமோ... மறுபடி எடுத்துப் பார்க்க வேண்டும்.
நீக்குI was about to tell.
நீக்குசிறப்பான பதிவு இன்று. உங்கள் நெட்ஃப்ளிக்ஸ்/பிரைம் சிபாரிசுகளைக் குறித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி.. நன்றி...
நீக்குஅதே சமயம் நினைத்தாலே இனிக்கும் வசனம் நினைவுக்கு வருகிறது! புட்பால் கிரௌண்டில் ரஜினி கமலின் காதோர முடியை ஒதுக்கி காதில் பேசும் வசனம்! இங்கு கொஞ்சம் மாற்றி போட்டுக்கொள்ள வேண்டும்!
"நினைத்தாலே இனிக்கும்" படத்தை இரண்டு மூன்று தடவை பார்த்திருந்தாலும் வசனமெல்லாம் நினைவில் இல்லை. என்ன என்று நீங்களே சொல்லி விடுங்கள்
நீக்குJKC ஸார் சரியில்லை என்கிறார். நீங்கள் சிறப்பு என்கிறீர்கள்.. இதில் எது சரி.. என்பது நாம் மாற்றிக் கொள்ளும் டயலாக்!
நீக்குரோஜாக் கவிதையிலும் "ஒரு தலை ராகம்" "வாசமில்லா மலரிது" வசந்தாவை தேடுது.
பதிலளிநீக்குமாலையில் பாடும் ராகம். வசந்தாவை மாலையில் தேடுதோ..
நீக்குஉங்களுடைய முதல் .....லி வசந்தா என்று யூகித்திட்டேன். தவறா? 😃
நீக்குJayakumar
இல்லை. அவள் பெயர் அப்ஸரா அ மாலு
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ரோஜா கவிதைகள் அருமை. "ரோஜா மலரே ராஜகுமாரி" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. பழைய இறைசார்ந்த பாடல் பாணியில் உங்கள் கவியும் அருமை. ரசித்தேன். இறைவனும் கண்டிப்பாக ரசித்திருப்பார் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா காப்பாத்து.. வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி செல்வாண்ணா... உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குபதிவு இன்னும் நிறைய இருக்கு ஸ்ரீராம் பார்க்க பின்னர் வரேன்
பதிலளிநீக்குகீதா
பின்னூட்டங்கள் இருநூறைத்தாண்டினால் சாதா கண்களுக்குத் தெரியாது என்பதும் பிரச்னை! நேற்றும் 200 வந்து விட்டது!
நீக்குகருப்பு வெள்ளையில் காட்சிகளைப் பார்ப்பதும் ஒரு சுகம் தான்.
பதிலளிநீக்குபாட்டும் காட்சியும் நல்லாருக்கு. பாடல் இதுவரை கேட்டதில்லை. பொங்கலுக்கான பாடல்! மாட்டுவண்டி கிராமத்துக் காட்சிகளைச் சொன்னேன். அது போல அந்தக் காலத்து ரயில்.
பாடல் வரிகள் சூப்பர். மோட்டார் சைக்கிள் எல்லாம் என் பின்னாடிதான்...போட்டி வைச்சா நான் தான் போவேன் முன்னாடி என்று பாடலில் வரும் வரிகள் அட! என்று ரசித்தேன் அதுக்கு ஏற்றாற்போல் வேகமான இசை.
கீதா
அந்த துள்ளிசை... அது மட்டுமில்லாமல் சீர்காழியின் குரல் எம்மாம் உசரத்துக்கு போகுது பாருங்க...
நீக்குநீங்களும் அந்த வரியை கோட் செய்திருக்கீங்க!!!
பதிலளிநீக்குஅதுக்குப் பின்னர் சொல்லியிருக்கும் உங்க கருத்தில் எனக்கும் ஒருவன் ஒருவன் முதலாளி நினைவுக்கு வந்தது. ஓரம் போ நினைவுக்கு வரவில்லை...
இப்பதான் முதல் முறையாகக் கேட்கிறேன் ஸ்ரீராம் இப்பாடலை. ரசித்துக் கேட்டேன் காட்சிகளோடு
கீதா
__/\__
நீக்குமுதல் பாடலில் கருப்பு வெள்ளைனா இரண்டாவது பாடல் ஈஸ்ட்மன் கலர்! இந்தப் பாட்டும் கேட்டதில்லை. மாட்டு வண்டிப் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமாகிடுச்சு.
பதிலளிநீக்குஇதிலும் காட்சிகள் ரயில்வே கேட்....ரயிலில் பெண்ணைத் தேடுவது!!!!
நல்லாருக்கு இடையில் வசனங்கள். வழியில் கேட்கும் கேள்விகளுக்குப் பாடல் வழி பதில்கள்!! சூப்பர்!
கீதா
__/\__
நீக்குமேஜர் படம் எடுத்திருக்கிறார் என்பது எங்கேயோ கேட்ட நினைவு இது அவர் டைரக்ஷன் என்பது இப்பதான் தெரியும்...."கீதா உனக்கு இப்படி ஒரு படம் இருக்குன்னே தெரியாது இதுல என்ன பெரிசா இப்பதான் தெரியும்னு!!!!" மைன்ட் வாய்ஸ்!
பதிலளிநீக்குகீதா
அந்த ஒரு நிமிடம் கூட மேஜர் இயக்கம்தான். சில படங்கள் இயக்கி இருக்கிறார். புகழ்பெற்ற கல்தூண் அவர்தான்!!
நீக்குவேதாந்த நிறுவனர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? செய்தில போய்ப் பார்த்தா தெரியுமோ? பார்க்க வேண்டும்
பதிலளிநீக்குரத்தப் பிரிவும் அதனுடனான செய்தியும் புதியது. அது சரி எப்படி உலகம் முழுக்க எடுத்தாங்களா? மூன்று பேர்னு எப்படிச் சொல்கிறார்கள்?
கீதா
கேட்டிருப்பார்கள், அலசி இருப்பார்கள்.. என்னவோ போங்க.. சொல்றாங்க நம்பறோம்!
நீக்குதர்மேந்திரா செய்தியும் பார்த்தாச்சு. ஆங்கில வெர்ஷன் கூகுள் மொழிபெயர்ப்பு என்றும் தெரிகிறது!
பதிலளிநீக்குகீதா
May be..
நீக்குநெட்ஃப்ளிக்ஸ் - ஓடிடி = நான் ரொம்ப பின் தங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!!! நோ நெட்ஃப்ளிக்ஸ்.....நோ டிவி.......எனவே கலந்துரையாட முடியாமல்....
பதிலளிநீக்குகீதா
ஒரு பக்கம் பார்த்தால் நிறைய மிஸ் செய்கிறீர்கள்தான். இன்னொரு பக்கம் பார்த்தால் நிம்மதி!
நீக்குஇன்றைய வியாழன் பதிவு நல்லா இருந்தது. பாடலைத் தவிர வேறு புதுமை புகுத்தலை. ரசிக்க முடிந்தது
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குசோதனை முயற்சிகளை வியாழனுக்காக ஒதுக்கி விட்டீர்களோ? ரசிக்க முடிகிறது. கவிதைகள் சிறப்பு!
பதிலளிநீக்குநானும் ஏகாதசி விரதம் இருந்து பார்த்தேன். ஏகாதசி அன்றுதான் சோதனையாக திருமணங்கள் வரும். அதை உறுதியோடு கடந்தேன். ஆனால் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மறுநாள் படபடவென்று வந்து விடும். குழந்தைகளும், அக்காக்களும் திட்டி, ஏகாதசி விரதத்தை கைவிட சொல்லி விட்டார்கள்.
சில பேரால் இப்படி பசி தாங்க முடியாமல் போகிறது. பாஸ் கூட அப்படிதான். விரதம் இருக்காமல் இருப்பதே நல்லது. வாங்க பானு அக்கா.
நீக்குடிரைவ் பார்த்தேன், அவ்வளவாக கவரவில்லை. தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன் என்று ஒரு சீரியல் பார்க்கிறேன். சுமார் ரகம்தான். கஸ்டம்ஸ் பற்றி ஒரு ஹிந்தி சீரியல் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவரவர் ரசனையைப் பொறுத்து!
நீக்குநாரண துரைக்கண்ணன் பற்றிய பகுதி ரசித்தேன். தகவல்கள்! நினைவுகளைப் பகிர்நு கொள்பவர் யார்? ஸ்ரீராம்? எனக்கு தான் யார் என்பது புரிபடவில்லையோ?
பதிலளிநீக்குகீதா
Saa.Kandhasamy
நீக்குகீதா அக்கா சொல்லி இருக்காங்க பாருங்க.. கட்டுரையின் முடிவில் அவர் பெயர் இருக்கிறது. JKC ஸாரும் குறிப்பிட்டிருக்கிறார்.
நீக்குஷாட்/சீன் - ஜோக் நல்லா சிந்திச்சுப் போட்டிருக்கிறார் கார்ட்டூன்...யார் என்று இடப்பக்கம் கீழே சரியாகத் தெரியவில்லை!
பதிலளிநீக்குஓ எல்லாமே சினிமா ஜோக்ஸ்!!! எல்லாமே நல்லாருக்கு. ரசித்தேன்..புன்சிரிப்போடு.
கீதா
__/\__
நீக்குரதத்தின் க்ளீஈனர்!!!!!! சிரித்துவிட்டேன்!
பதிலளிநீக்குகீதா
:-))
நீக்குநாரண துரைக்கண்ணன் பர்றிய பதிவில் லோட்டாவில் காபி வந்தது என்பதற்கு பதில் கோட்டாவில் காபி வந்தது என்று இருக்கிறது.
பதிலளிநீக்குஜோக்குகளில் சிலவற்றை படித்த நினைவு.
ஆஹா.. தேடிப்பார்த்து திருத்த முயல்கிறேன்!
நீக்குமீண்டும் ஒரு சோதனை முயற்சி என் புது ஐடியிலிருந்து கருத்து வருகிறதா என்று...
பதிலளிநீக்குகீதா
(Y)
நீக்குஆ! வந்துவிட்டது,
பதிலளிநீக்குகீதா
(Y) (Y)
நீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குரோஜாக் கவிதையும் படமும் அழகு. ஜோக்ஸ் ரசனை.
மிகுதி பின்தான் படிக்கவேண்டும். வருகிறேன்.
வாங்க மாதேவி. வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஏகாதசி விரதம் பதிவும் , மெளனவிரத பதிவும் அருமை.
பதிலளிநீக்குநானும் 15 வருடம் விடாமல் மெளன விரதம் இருந்தேன்.
இப்போது மெளன விரதமிருந்தால் வாட்ஸ் அப் போனில் பேசுபவர்களுக்கு டைப் செய்து பதில் அளிக்கலாம்.
முன்புஎல்லாம் டெலிபோனில்பேசும் போது பதில் அளிக்க முடியாது.
தெரிந்தவர்கள், உறவுகளிடம் போனில் விஷயத்தை சொல்லுங்கள் கேட்டுக் கொள்கிறேன் என்று போனில் இரண்டு தட்டு தட்டினால் கேட்டு கொண்டேன் என்று அர்த்தம் என்று சொல்லி வைத்து இருந்தேன்.
அப்புறம் கார்ட்லெஸ் போன் வந்த பின் கீழ்வீட்டுக்கு எடுத்து போவேன் அவர்கள் அக்கா இன்று மெளனவிரதம் என்ன சொல்லவேண்டுமோ சொல்லுங்கள் அக்கா கேட்டுக் கொள்வார்கள் என்பார்கள். அப்புறம் நான் எழுதி காட்டுவதை அவர்களிடம் சொல்வார்கள்.
இப்படியாக என் மெளன விரதம் தொடர்ந்தது .
இரண்டு பதிவுகள் போட்டு இருக்கிறேன் என்மெளன விரத அனுபவங்களை பற்றி.
ஆஹா.. நானும் இதே முறைகளைதான் பின்பற்றினேன் / கிறேன்!
நீக்கு//கூடாரவல்லி அன்று காலை குளித்தபின்தான் பேசினேன்! காலை டிஃபன் சாப்பிடாமல் கூடாரவல்லி சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன்.
பதிலளிநீக்குவரும் சனிக்கிழமை 'கணு' என்பதால் 'உ வி', 'மௌ வி' இருக்க முடியாது!//
நானும் சனிக்கிழமைதான் மெளன விரதம் இருந்தேன் சனிக்கிழமை காலை 4.30 க்கு ஆரம்பித்தால் ஞாயிறு காலை 4.30 க்கு தான் பேசுவேன்.
பதிவில் தவறாக சொல்லி இருக்கிறேன். கணு நாளை. சனிக்கிழமை என்ன செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை!
நீக்குகணுப்பொடி வைப்பது வெள்ளியன்று இல்லையோ? ஸ்ரீராம் சனிக்கிழமைனு சொல்றாரே? got the answer.
நீக்குஉங்கள் ரோஜா கவிதைகள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதிருப்பெருந்துறையுறை சிவபெருமான் கவைதை அருமை.
காதல் ஜோதியில் சீர்காழி பாடிய பாடலை மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேரேயும் சாரின் கல்லூரிக்கு வந்து பாடின போது பாடி கைதட்டல்களை பெற்றார் என்று சார் சொன்னார்கள் .
நன்றி பாராட்டுக்கு. சீர்காழி அப்போது நேரிலும் வந்து பாடினாரா? இசை இல்லாமல் கேட்க ஒரு மாதிரி இருந்திருக்கும்!
நீக்குஇன்று நீ நாளை நான் படத்தில் நல்ல பாடல் இருக்கிறது ஜானகி அவர்கள் பாடல் நன்றாக இருக்கும். "பொன்வானம் பன்னீர் தூவது இன் நேரம்"
பதிலளிநீக்குஆமாம். அதனுடன் கூட தலைவர் குரலில் "தாழம்பூவே கண்ணுறங்கு" பாடலும்!
நீக்குஹேமமாலினி வெளியிட்ட பதிவு மற்ரும் பல பகிர்வுகளை படித்தேன்.
பதிலளிநீக்குநகைச்சுவைகள் அருமை.
.
நன்றி கோமதி அக்கா.
நீக்கு