16.1.26

ஐயோ அப்புறம் என்னாச்சு?

 

                                         ஐயோ அப்புறம் என்னாச்சு?

JKC 

அப்புறம் என்ன ஆச்சு என்ற எதிர்பார்ப்பு ஒரு தூண்டில் தான். ஒரு சங்கதியை, கதையை, கட்டுரையை சிறிது விவரித்து ஒரு சிறிய சஸ்பென்ஸ் கொடுத்து தூண்டில் போட்டு நிறுத்தினால், உடன் கேட்பவரோ, பார்ப்பவரோ “ஐயோ அப்புறம் என்ன ஆச்சு “ என்று ஆர்வத்துடன் கேட்பார். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாதாரணமான ஒன்று. கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும், தொலைக்காட்சி தொடர்களுக்கும் பொருந்தும் விதி.

இந்த தலைப்பில் வாசகர்களுக்கு ஒருவேண்டுகோள் விடுத்து பதிவிட்டு வாசகர் ஆர்வத்தை தூண்டலாம் என்பது எனது கருத்து.  நானே தொடங்கி வைக்கிறேன்.

இங்கு எனக்கு தினமும் தான் எதோ ஒரு விதத்தில் ….தோசை கல்லில் ஒட்டுது … முதல் எத்தனையோ நிகழ்வுகள் இந்த கேள்வியை எழுப்ப தோன்றும். ஆனால் சில நிகழ்வுகள் மிகவும் அச்சத்தினைத் தூண்டும். அப்படிப்பட்ட ஒன்று எனக்கு சமீபத்தில் நேர்ந்தது. அதை விவரிக்கிறேன்.

காலை ஆறு மணி. பாஸ் எப்போதும் போல் எழுந்து ஹால் கதவு, வீட்டு கதவு, கேட் கதவு திறந்து வாசல் தெளிக்க செல்லவேண்டும். முதலில் திறக்க வேண்டிய ஹால் கதவை திறக்க முடியவில்லை என்று என்னை எழுப்பினார். நானும் எழுந்து திறக்கப்பார்த்தேன். முடியவில்லை. 

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு? 

வீட்டில் இருந்து ரோடில் இறங்க மூன்று கதவுகளை திறக்க வேண்டும். காம்பௌண்ட் கேட், வெராண்டா கிரில், ஹால் மெயின் மரக்கதவு என்ற மூன்று கதவுகள். இரவு படுக்கப்போகும் முன் கேட், மற்றும் கிரில் கதவுகள் சாவி போட்டு திறக்க கூடிய பூட்டுகளால் பூட்டப்படும். ஹால் கதவு உள்ளிருந்து தாழ்ப்பாளால் அடைக்கப்படும். மேல் போல்ட், கீழ் போல்ட், மார்ட்டிஸ் லாக் சின்ன போல்ட் என்ற மூன்று போல்ட்டுகள்.

மார்ட்டிஸ் லாக் படம் இதோ
படம் உதவி ; இணையம்

இதில் சாவி போட்டு திறக்க, மற்றும் பூட்ட உள்ளது பெரிய போல்ட். சின்ன போல்ட் எப்போதும் பூட்டும் முறையிலேதான் இருக்கும். கதவை திறக்க வேண்டுமாயின் கைப்பிடியை பிடித்து கீழே தாழ்த்தி போல்டை உள்ளே இழுக்க வைத்து திறக்கவேண்டும். கைப்பிடியை கீழே அழுத்தினால் அது திரும்ப நேராக வர ஒரு ஸ்ப்ரிங் உள்ளது. அந்த ஸ்ப்ரிங் வேலை செய்யவில்லை. அதனால் சின்ன போல்ட் பூட்டிய முறையிலேயே இருந்தது. போல்டை உள்ளே இழுக்க முடியவில்லை. கதவைத் திறக்க முடியவில்லை.

சரி ஒரு காபி குடித்து விட்டு ஆலோசிப்போம் என்று அடுக்களையில் சென்று பாலைக் காய்ச்சி காபி கலந்து குடித்து ஆலோசித்தோம்.

வெளியில் செல்வதோ வெளியில் இருந்து உள்ளே வருவதோ பிரச்சினை இல்லை. அடுக்களையில் பின் வாசல் உண்டு. கேட் மற்றும் கிரில் பூட்டுகள் திறக்கவும் பிரச்சினை இல்லை. அடுத்த வீட்டில் டூப்ளிகேட் சாவி கொத்து உண்டு, (எங்கள் சாவி கொத்து வெராண்டாவில் மாட்டிக்கொண்டது). பிரச்சினை மெயின் ஹால் கதவை எப்படி திறப்பது என்பது மட்டுமே.

கடைசியாக ஒரு முறை திறக்க முயல்வோம் என திறப்பதற்கு கைப்பிடியை கீழே இறக்காமல் மேலே பிடித்து இழுக்க ஆச்சர்யமாக சின்ன போல்ட் உள்ளே சென்றது, கதவைத் திறக்க முடிந்தது. .

கடவுளுக்கு நன்றி.

தற்போது அந்த போல்ட்டை உள்ளே தள்ளி ஒரு முட்டு கொடுத்து வெளியே வராமல் இருக்க செல்லோடேப்பை ஒட்டி வைத்திருக்கிறோம். தச்சரை கூப்பிட வேண்டும். வேறு ஒரு கஷ்டம் என்னவென்றால் பூட்டை கழட்ட முடியுமா என்பது தான். பூட்டை கதவில் பொருத்திய ஸ்க்ரூ எல்லாம் தலை இல்லாமல் ஸ்க்ரூ டிரைவர் வைத்து திறக்க முடியாத நிலையில் உள்ளன.

இது போன்று ஏகப்பட்ட அப்புறம் என்னாச்சு சங்கதிகள் உள்ளன. ட்ரெயினில் அடிபட்டு சாக இருந்தது,  வீட்ல திருடன் வந்து திருடிப் போனது என்று சில திடுக்கிடும் சம்பவங்களும் உண்டு. சமயம் வாய்க்கும்போது அவற்றை எழுதுகிறேன்.

இதைப்பார்த்து எ பி வாசகர்கள் அவரவர்களுடைய என்ன ஆச்சு கதையை பதிவிடுவார்கள் என்று நம்புகிறேன். தொடரட்டும்.

==========================================================================================

JKC ஸார் மற்றவர்களும் இந்த 'அப்புறம் என்ன ஆச்சு'வை தொடரலாம் என்று சொல்லி இருக்கிறார்.  உங்களுக்கும் இதுபோல பகிர விஷயங்கள் இல்லாமலா இருக்கும்!  

அது இருக்கட்டும்..  இந்த 'அப்புறம் என்ன ஆச்சு'வில் ஒரு ஜோக்ஸ் ஸீரீஸ் உண்டு. உங்களுக்கும் தெரியும்.  ஆபீஸில் தூங்கும் ஜோக் போல இதுவும் தொடர், ப்ளஸ் சிரஞ்சீவி! எப்படி என்று உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்.. உங்களுக்கும் ஞாபகம் வந்துவிடும்..

"மாமியாரை தோசை மாவு வாங்க கடைக்கு அனுப்பினேன்..   அவங்க மேல பஸ் மோதிவிட்டது.."

"ஐயைய்யோ..  அப்புறம் என்ன ஆச்சு?"

"அப்புறம் என்ன..   நல்லவேளையா வீட்டில் கொஞ்சம் ரவா இருந்தது..  உப்புமா கிண்டினேன்.."

==========================================================================================



தினமணியிலிருந்து திருடியது...



புதுடில்லி, ஜன. 8 - அரசியல் சட்டத்தின் 19வது ஷரத்தில் உத்தரவாதம்

தரப்பட்டுள்ள 7 சுதந்திரங்களை” வலியுறுத்த கோர்ட்டுக்குச் செல்லும் உரிமையை அவசர நிலைமைக் காலத்தில் நிறுத்திவைத்து ராஷ்டிரபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல் சட்டத்தின் 19-வது ஷரத்தினால் உத்தரவாதம் தரப்பட்டுள்ள "7 சுதந்திரங்கள்" வருமாறு:-


(1) பேச்சு, எழுத்து சுதந்திரம்.

(2) ஆயுதங்களின்றி அமைதியாக கூட்டம் கூடும் உரிமை.

(3) சங்கங்கள், யூனியன்கள் அமைக்கும் உரிமை.

(4) இந்திய பிரதேசத்தில் தாராளமாக நடமாடும் உரிமை.

(5) இந்திய பிரதேசத்தில் எப்பகுதியிலும் தங்கி வசிக்கும் உரிமை.

(6) சொத்துக்களை வாங்க, விற்க, வைத்திருக்க உரிமை.

(7) தொழில், வர்த்தகம், ஜீவனோபாயம் நடத்தும் உரிமை.

அரசியல் சட்டத்தின் 14, 21, 22வது ஷரத்துகள் உத்தரவாதம் தந்துள்ள உரிமைகளை அவசர நிலைமை காலத்துக்கு நிறுத்திவைத்து கடந்த ஆண்டு ஜூன் 27 (ஆம் தேதி) ராஷ்டிரபதி உத்தரவு பிறப்பித்தார்.

இன்று ராஷ்டிரபதி பிறப்பித்த உத்தரவின் சாராம்சம் வருமாறு:

"அரசியல் சட்டத்தின் 19வது ஷரத்து உத்தரவாதமளிக்கும் உரிமைகளை
வலியுறுத்த எந்த நபரும் கோர்ட் ஏறுவதற்கு உள்ள உரிமையும். மேற்குறித்த உரிமைகளை வலியுறுத்த கோர்ட்டில் உள்ள நடவடிக்கைகளும் அரசியல் சட்டத்தின் 352(1) ஷரத்துப்படி 1971 டிசம்பர் 3 (ஆம் தேதி) மற்றும் 1975, ஜூன் 25 (ஆம் தேதி) பிராகடனமான அவசர நிலைமை அமலில் உள்ள காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட, அரசியல் சட்டத்தின் 359(1) ஷரத்து அளிக்கும் அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம், ராஷ்டிரபதி இதன்மூலம் உத்தரவு பிறப்பிக்கிறார்.

இந்த உத்தாரவு இந்திய பிரதேச முழுதிலும் செல்லுபடியாகும்".

நன்றி தினமணி 

============================================================================================



வாணலியில் வார்த்துப் பாரு
தோசை பிடிச்சுப் போகும்
வெங்காயத்தைத் தூவிப் பாரு
சுவையும் பிடிச்சுப் போகும்
எண்ணெய் ஊற்றி திருப்பிப் பாரு
Shape பிடிச்சுப் போகும்
புட்டு புட்டு வாயில் போட
தோசை உள்ள போகும்
என்று நான் பாடியது வாணலிக்குக் கேட்டு விட்டது போல... இறுகப் பிடித்துக் கொண்டு விட்டது - பாட்டை அல்ல, தோசையை. ( எந்தப் பாட்டை நான் உல்ட்டா செய்திருக்கிறேன், தெரியுமா ?!)
நான்தான் ப(பா)டாதபாடு பட்டேன்! தோசையை. திருப்பிப் போடக்கூட விட மாட்டேன் என்று ஒரே அடம்.
வார்க்காத தோசையை வார்க்க வந்தாய்
பாடாத பாட்டினையே பாடி வந்தாய்
எடுக்காமல் நீயும்தான் வாடி நின்றாய்
மிடுக்காக நானும்தான் பார்த்து நின்றேன்
மிடுக்காக நானும்தான் பார்த்து நின்றேன்
என்று வாணலி மெல்லிய குரலில் பாடியது!
முன்பெல்லாம் தாளிக்கும் கரண்டியில் கூட தோசை மாவை ஊற்றி சாப்பிட்டதுண்டு.
ஏன், ஒரு மாதத்துக்கு முன்னால் கூட வாணலியில் வார்த்தபோது சரியாகத்தான் வந்தது. இப்போது யார் மேல் தப்பு என்று தெரியவில்லை. தட்டு போட்டு மூடினாலும் எடுக்க வரவில்லை!
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சுற்றிக் குற்றமில்லை
மாவு செய்த குற்றமடி
உளுந்து செய்த குற்றமடி
உளுந்து செய்த குற்றமடி
என்று வாணலி பாடி கொண்டிருந்தது எனக்கு மட்டும் கேட்டது!

FaceBook கில் அது என்ன வாணலியா, வானொலியா என்று கேட்டிருந்தார்
பகவான்ஜி!

===============================================================================

ரீல்ஸ் பிட் பகிர்ந்தால் சைஸ் சற்று பெரிதாகத்தான் வருகிறது. இதில் கங்குலி ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாக சொல்லும் கருத்து எனக்கு பிடித்திருந்தது.

நாம் நினைப்பதைதான், நமக்கு பிடித்ததைதான் அடுத்தவர்களும் செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்கள் செய்வது பெரும்பான்மையான சமயங்களில் சரியாக இருக்கலாம். நம் வழி சரியில்லாததாக இருக்கலாம். நமக்கும் இது மாதிரி அனுபவங்கள் நிறைய இருந்திருக்கும். அலுவலகங்களிலோ.. வீட்டிலோ.. வெளியிடங்களிலோ...

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இதை கங்குலி தவிர வேறு யாரேனும் பேசி இருப்பார்களா என்பதும் சந்தேகம்.

=====================================================================================

அபூர்வ ராகங்கள்; நாகேஷ் 

சமீபத்தில் நாகேஷ் இந்தப் படத்தில் பேசும் "ஒரு சின்னக் கல்லை கண்ணுக்கு பக்கத்துல வச்சு பார்த்தா" வசனத்துக்காக தேடினேன்.  பிடித்த வசனம் என்ன என்று திரு ஆரண்யபோவாஸ் நடத்தும்  seven o clock வாட்ஸாப் குழுமத்தில் கேட்டிருந்தார்.  அதற்கு தேடியபோது அதைத்தவிர மற்றவை கிடைத்தன.  நாகேஷ் ஒரு அற்புதம்.  கே பாலச்சந்தருக்கு நாகேஷுக்கு அண்டவே சிலகாலம் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு சிலகாலம் கேபி படத்தில் நாகேஷ் இடம்பெறாமல் இருந்தார்.  அவர் மறுபடி கேபி படத்தில் நடித்தது இந்தப் படத்தில்தான்.  என்ன நடிப்புடா சாமி..   நடிப்பு அசுரர்.

குறித்து வைத்திருந்த சில வசனங்களும், காட்சியும்!  "வேர் இஸ் மை ஸீட்} என்று அவர் மேஜரை மிரட்டுவாடாஹிப் பாருங்கள்! 

நான் ரேஸுக்கு போறதில்லை...  எதுக்கு போகணும்...  நாலு குதிரை ஓடினா நாற்பதாயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கறீங்க..  அந்த நாற்பதாயிரம் பேரே ஓடினாலும் ஒரு குதிரை உட்கார்ந்து பார்க்குதா?

ஏய் யார்றா நீ..  புள்ளத்தாச்சியை தூக்கற மாதிரி தூக்கறே..   கடைக்காரன் அப்பவே சொன்னான்..  சாப்பிட்ட அரைமணி நேரத்துல சொய்ங்னு மேல போயிடுவேன்னு...

என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளுக்கு அப்பா என் மகனுக்கு மாமனார். இது நாகேஷ் பேசும் வசனம் இல்லாவிடினும் ரசித்த வசனம்.

பாவம் ஸார் பைரவி...  அவங்க கவலையை மறக்க நாம குடிப்போமா...  பிகாஸ் அவங்க குடிக்க மாட்டாங்க...


=================================================================================================

இந்த அளவில் இன்றைய வெள்ளியை மங்களம் பாடி நிறைவு செய்து விடலாமா?


43 கருத்துகள்:

  1. இன்றைய வெள்ளி... புதுமை... இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   கரும்பாய் இனிக்கிறது முதல் பாராட்டு!

      நீக்கு
  2. டெம்ப்ளெட் மாறும்போது பதிவு, பொதுவான வியாழன் பதிவுபோல, இன்று என்னவாயிருக்கும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

    அப்புறம் என்னாச்சு பகுதி நன்று. பிறவற்றிர்க்கும் பிறகு வந்து கருத்திடணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா வாங்க நெல்லை... அப்புறம் என்ன ஆச்சு பகுதிக்கு உங்களுக்கும் ஏதாவது அனுபவம் இருந்தால் எழுதி அனுப்புங்க

      நீக்கு
  3. காலை வணக்கம், சகோ(தர சகோதரிகளே)!

    பதிலளிநீக்கு
  4. தோசைக்கு இடதுபுறம் உள்ள படத்தைப்பார்த்து, இவர் எதற்கு, அதுவும் கொஞ்சம் வாடிப்போன christmas cactus ஃபோட்டோ போட்டிருக்கிறார் என்று யோசித்தேன். அப்புறம் அவரவர் இஷ்டம் என்று சமாதானமும் சொல்லிக்கொண்டேன் :-)
    For comparison, try this:
    https://www.denverilluminations.com/_cms/resources/blogPics/christmas-cactus.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கொடுத்துள்ள லிங்க் என்னவென்று பிறகு சென்று பார்க்கிறேன். கணினியில் கருத்துக்களையிட மறுபடி மறுபடி போராடிவிட்டு இப்போது மொபைல் வழியாக பதில்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதுவே வெங்கட் தளத்திலும், கீதா தளத்திலும் பின்னூட்டம் சென்று விட்டது .இங்கு முதல் பின்னூட்டத்திற்கு அப்புறம் மறுபடி பின்னூட்டம் போட தளம் அனுமதிக்க மாட்டேன் என்கிறது!! பிறகு முயலவும் பிறகு முயலவும் என்கிறது.

      நீக்கு
    2. போராடிப்பார்க்கும் அளவுக்கு அந்த லிங்க் முக்கியமில்லை

      நீக்கு
    3. ஆனாலும் அப்புறம் பார்த்து வைக்கிறேன்!!

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    அனைவருக்கும் மாட்டுப் பொங்கல், மற்றும் உழவர் திருநாள், மற்றும் கணுப்பொங்கல் நல்வாழ்த்துகள் . நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி விடியல் வித்தியாசமான முறையில் அருமை. வாணலியின் பாடல்களுடன் தொகுப்பு புதுமையாக உள்ளது. கதவு, வாணலி போன்றவற்றின் போராட்டம் அவைகளும் "நாங்கள் ஒன்றும் ஜடமல்ல" என சிந்திக்கத் தொடங்கி விட்டனவோ என எண்ண வைக்கிறது.

    எங்கள் வீட்டிலும் கதவின் லாக்குகள் பூட்டுகள் இப்படி போராட்டம் செய்த பல சம்பவங்களை இன்றைய முதல் பகுதி நினைவுக்கு கொண்டு வந்தன. அதற்கான ஜோக் அருமை. படித்த நினைவு உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசத்தை ரசித்ததற்கு நன்றி. நான் இணைத்திருக்கும் ஜோக் அதற்கான ஜோக் இல்லை. இந்த மாதிரி வார்த்தைக்கு இப்படி ஒரு சீரிஸ் போல வந்து கொண்டிருந்தது என்று சொல்லி இருக்கிறேன்!! உங்கள் அனுபவங்கள் ஏதும் இருந்தாலும் எழுதி அனுப்புங்கள்.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்தை ஏன் நீக்கினீர்கள் என்று எனக்குப் புரிகிறது. TVM...!!

      நீக்கு
  8. எங்கள் உறவில் ஒரு பெண்மணி மிகவும் திட்டமிட்டு எல்லா வேலைகளும் செய்வார். ஞாயிறு வீடு ஒட்டடை அடிப்பது, திங்கள், புதன்,சனி பாத்ரூம் சுத்தம் செய்வது, வியாழன் குளிர்சாதன பெட்டி சுத்தம் செய்வது இப்படி. ஆனால் ஞாயிறு அன்று ஒட்டடை அடித்து விட்டு, நெரம் இருக்கே பாத்ரூமையும் அலம்பி விடலாம், என்று அதை முடித்து விடுவார். புதனில் செய்ய வேண்டிய வேலையை செவ்வாய் அன்றே முடித்து விடுவார். அதைப்போல நீங்களும் எல்லாவர்றையும் ப்ரீபோண்ட் செய்கிறீர்கள். ஏற்கனவே கிழமை குழப்பத்தில் இருக்கும் நான் இன்னும் குழம்பிப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ...பானு அக்கா! உங்கள் காலண்டராக எங்கள் ப்ளாக்கை தான் உபயோகிக்கிறீர்களா? கொஞ்ச நாளில் பழகி போகும் ... அதாவது இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று!!

      நீக்கு
  9. அப்புறம் என்ன ஆச்சு? என்று கூற என்னிடம் நிறைய விஷயங்கள் உண்டு. அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு, சாவியை எடுத்துக் கொள்ளாமல் நான் வெளியே சென்றுவிட கதவை திறக்க முடியாமல் தவித்த தருணத்தை ஏர்கனவே என்னுடைய பிளாகில் பகிர்ந்திருக்கிறேன்.
    https://draft.blogger.com/blog/post/edit/7491406889898573533/2330557709720080072

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    வெள்ளியில் மாற்றங்கள்... நன்று.

    அப்புறம் என்ன ஆச்சு - ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியான சம்பவங்கள். ஸ்வாரஸ்யமாக தொடங்கியிருக்கிறது. ஒரு சில விஷயங்கள் எங்கள் வீட்டில் நடந்தவையும் முன்பு எங்கள் வலைப்பூவில் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.

    நாகேஷ் - அசகாயச சூரர். அப்படி ஒருவரை இனிமேல் நிச்சயம் பார்க்க முடியாது.

    சௌரவ் கங்குலி இந்த நிகழ்வு குறித்து இன்னும் சில கருத்துரையாடல்களிலும் சொல்லியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சொன்ன விஷயம் சிறப்பான ஒன்று தான்.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் ... வணக்கம். சௌரவ் இதுபோல நிறைய பேசியிருக்கிறார். எடுத்து வைத்திருக்கிறேன். நாகேஷ் பற்றி சொல்லவும் வேண்டுமோ!

      நீக்கு
  11. தினமும் பிளாக்கை முதலில் வாசித்துவிடும் என் அக்கா சசி அவர் நினைவில் இருக்கும். நாகேஷ் வசனம் ஒன்றை நினைவுகூர்ந்தார். "கத்தி நல்லா வெட்டுதா என்று கழுத்தையா வெட்டிப் பார்க்க முடியும்?" என்று கேட்பாராம். படம் முத்துச்சிப்பி.

    பதிலளிநீக்கு
  12. கருத்து போட டெஸ்டிங் என் ஐடியிலிருந்து....மைக் டெஸ்டிங்.....காதுல விழுதான்னு சொல்லுங்க....நானும் கண்டுபிடிச்சுடுவேன்!!!! இந்தக் கருத்தை ப்ளாகர் போட்டுவிட்டதுனா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  எனக்கும் வேற மாதிரி பிரச்னை.  இப்போ சரியாயிருக்குன்னு நினைக்கறேன்!

      நீக்கு
  13. பதில்கள்
    1. சரணம் முருகா

      வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  14. ஹே...ஹே....போட்டுவிட்டது!!!

    பதிவின் புதிய வடிவம் சூப்பர் ஸ்ரீராம். நல்லாருக்கு. இது மனதில் பதியணும்....இனி நான் மொபைலில் கணினியில் கிழமை போட்டு வைச்சுக்கணும்னு!!!ஹிஹிஹிஹி

    என்ன? எபி தான் எனக்கு கிழமை டெஸ்டிங் ப்ளாக்....இல்லைனா நேக்கு டே அண்ட் டேட் குழப்பம் குழப்பம்!! கேலண்டர் பார்க்கும் பழக்கமே இல்லாம கணினியில் டேட் இருக்கும்தான் ஆனால் நாள் இருக்காதே!...

    முன்ன வெங்கட்ஜி தளமும் அப்படித்தான் பெரும்பாலும்...இப்ப அங்கும் மாற்றங்கள் அவர் பிஸி என்பதால்.

    நானும் எங்கள் தளத்தில் புதுசா மாற்றம் கொண்டு வரலாமான்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் யோசிச்சுக்கிட்டிருக்கேன்......அப்படி முன்ன சில்லு சில்லாய்ன்னு தொடங்கி...நீங்க கூட புதுசா நல்லாருக்குன்னு சொன்னீங்க ஆனா பதிவு போடுவதே இப்ப பெரும்பாடாய் மாறியதில்....ஆடிக்கொன்னு அமாவாசைக்கு ஒன்று என்று.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழனும், வெள்ளியும் இப்படிதான் இருக்கும் என்று வகைப்படுத்த முடியாமல் இருக்கும் என்று எனக்கே தோன்றுகிறது.  பார்ப்போம்.  தேர் ஒரு நிலைக்கு வரட்டும்!

      நீக்கு
    2. ஹாஹாஹா....மீக்கும் அப்படியே

      கீதா

      நீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. மறுபடியும் முதல்லேருந்தா?!! 

      சரணம் முருகா.. 

      வாங்க செல்வாண்ணா வணக்கம்.

      நீக்கு
  17. அப்புறம் என்ன ஆச்சு?

    இதே போல எங்க வீட்டில் நடந்ததை கிட்டத்தட்ட கதையாகவே எங்கள் தளத்தில் போட்டிருந்தேன் வீட்டின் வெளிக்கதவு வெளியில் லாக் ஆனது பற்றி. காலையில் திறக்க முடியாமல்....மணிச்சித்திரத் தாழ் தாள் திறவாய் என்று...

    பல விஷயங்கள் இப்படி நடப்பதுண்டே!! எல்லார் வீட்டிலும்..

    நீங்க கூட உங்க வீட்டு காலிங் பெல் இரவில் அடித்தது பற்றி...எழுதியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  புதிய அனுபவங்கள் எதுவும் இருந்தால் எழுதி அனுப்புங்களேன்...

      நீக்கு
    2. பார்க்கிறேன் ஸ்ரீராம். நினைவில் இருக்கா என்று புரட்டிப் பார்க்க வேண்டும்!

      கீதா

      நீக்கு
  18. ஜெ கே அண்ணா நல்லாருக்கு...இப்படி நீங்க சொல்லும் போது கடைசில நீங்க என்ன செய்தீங்கன்னு சொன்னீங்க பாருங்க கதவை திறக்க...அப்படி மத்தவங்களுக்கும் அட இப்படிச் செய்து பார்க்கலாமே என்று தோன்றும். நல்ல ஐடியா...பூட்டு பற்றிய விவரங்களும் கொடுத்ததும் நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப திகில் இல்லை..  ஏனெனில் வீட்டுக்குள் புழங்க மாற்று வழிகள் இருந்ததால்!

      நீக்கு
  19. கங்குலி சேவாக் பற்றிச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். இங்கிலாந்துடனான டெஸ்ட் மேட்சில், 400+ எடுக்கவேண்டும் 4 செஷனில் என நினைவு் சேவாக் அதி வேகமாக விளையாடி நாலாம் நாள் கடைசியில் 100க்கு மேல் அடித்தார். மறுநாள் இந்தியா வென்றபோது, கேப்டன் தோனி, சேவாக் இப்படி மின்னல் வேகத்தில் ஆடாமல் டீம் எண்ணியபடி விளையாடியிருந்தால் இந்த டைஸ்டை டிரா செய்திருப்போம், வெற்றிக்கு சேவாக்கின் வேகம்தான் காரணம் என்று சொன்னார்.

    சேவாக் வேகமாக அடித்து அதனால் ஒற்றை இலக்கில் அவுட் ஆகி, மற்றவர்களும் சொதப்பி நாம் தோற்க நேரிடலாம். அப்போதும் கேப்டன், விளையாடியவரின் நோக்கத்தை மாத்திரமே பார்ப்பார் என எண்ணுகிறேன்.

    இதுபற்றி நினைக்கும்போது என் அனுபவம் நினைவுக்கு வருது. எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. கோர்ட் ஏறத் தடை... இந்தச் செய்தியைத் திருடி வெளியிடும்போது, எந்த வருடம், யார் பிரமர், யார் ஜனாதிபதி என்ற விவரத்தோடு வெளியிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம் அந்த தினமணிச் செய்தி, தேதி, குழப்புதே. இப்ப எப்போது அது மீண்டும் அமலுக்கு வந்தது?

    சென்ற ஜூன்? அல்லது இந்த ஜனுவரியா?

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!