9.2.26

"திங்க"க்கிழமை  : ஒரு எளிய மதிய உணவு - JKC  ரெஸிப்பி

 

ஒரு எளிய மதிய உணவு.

காய் கலந்த வரு சோறு (Veg Fried Rice)

 

காய்களை பொரியல் செய்து கலந்த சாதம் செய்வது போல் பிரட்டி எடுத்தால் பிரைட் ரைஸ் என்று நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. Fried rice  க்கு சாஸ் வகை தேவை. மேலும் இதை நல்ல high flame இல் தயாரித்து சூடாக சாப்பிடவேண்டும்.

இன்றைய செய்முறைக்கு எடுத்துக்கொண்ட காய் சாஸ் பட்டியல்.

கேரட், பீன்ஸ், காப்ஸிகம், பட்டாணி, (பச்சை பட்டாணி இல்லாததால் ஊறவைத்து வேகவைத்த காய்ந்த பட்டாணி), கேபேஜ்.

காய்கள் நறுக்கியபின்

செய்முறை.

பாசுமதி அரிசி ஒரு டம்ளர் உலையில் இட்டு கஞ்சி வடித்து சோறாக எடுத்து கொள்ளவும். சிலர் குக்கரில் கஞ்சி வடிக்காமலும் சோறாக்கிக் கொள்வர்.

பட்டாணி பீன்ஸ் இரண்டையும் சிறிது நேரம் அடுப்பில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் வேக வைத்துக்கொள்ளவும்

பின்னர் அடுப்பில் வோக் அல்லது சீனி சட்டியை வைத்து சிறிது எண்ணையில் high flame இல் காய்கள் போட்டு நன்றாக வதக்கவும். ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ், அரை ஸ்பூன் சோயா சாஸ் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும். பின்னர் சோறை இக்கலவையில் போட்டு சிறிது மிளகு பொடியும் சேர்த்து டாஸ் செய்யவும். விருப்பம் இருந்தால் வாசனைக்கு ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கலாம்.  

சூடு ஆறும்முன் பரிமாறவும்.

தொட்டுக்கொள்ள வெங்காயம் பூண்டு சேர்த்து ரோஸ்ட் செய்த பேபி உருளை ரோஸ்ட்.

பப்படம்

தயிர் வெங்காயம்.

பேபி உருளை ரோஸ்ட்.

உருளை கிழங்கில் நெல்லிக்காய் அளவு சைசில் சிறு சிறு கிழங்குகள் கிடைக்கும். இவை வேகவைத்தால் மொழுக் மொழுக் என்று இருக்கும். பெரிய கிழங்குகள் போன்று மாவாகாது.

கிழங்குகளை வேகவைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டி மிளகுபொடி அல்லது மிளகாய் பொடி, வெங்காயம், பூண்டு, உப்பு  சேர்த்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் நெடி போக பிரட்டி எடுத்தால் உருளை ரோஸ்ட் தயார்.

Fried rice இல் சீனி, MSG என்கிற அஜினோ மோட்டோ சேர்க்கவில்லை. அது சேர்த்தால் தான் சைனீஸ் ருசி கிடைக்கும்.

ஈடுபாடுடன் செய்யும் எந்த உணவும் அது கஞ்சியானாலும் சரி சாப்பிடக் கூடிய பக்குவத்தில் கிடைக்கும். ஏனோ தானோ என்று கவனியாமல் செய்தால் குப்பைக்குத்தான் போகும்.

14 கருத்துகள்:

  1. வறுத்த சாதம் Fried rice ஏனோ என் விருப்ப உணவல்ல. இதனை நான் சாப்பிடுவதில்லை (எனக்கு அதற்குப் பல வாய்ப்புகள் வெளி நாட்டில் வந்திருக்கின்றன)

    பேபி உருளைக்கிழங்கு. சமீபத்தில் ஆந்திரா சித்தூர் கோய்விட்டுத் திரும்பும் வழியில் கிலோ 20 ரூ என்று இரண்டு கிலோ வாங்கினேன். அடிக்கடி அதனைச் செய்து சாப்பிடுகிறேன். நேற்றுக்கூட, சேவை, வெந்தயக்கீரை குழம்பு, பேபி உருளை காரக் கறி, அதற்கு முந்தைய நாள் வெண்டை கிச்சடி, சாதம், பேபி உருளை ரோஸ்ட் என்று சாப்பிட்டேன். வெகு ருசி.

    இந்த சாஸ்களில் நான் உபயோகிப்பது பஜ்ஜிக்குத் தொட்டுக்கொள்ள (மாத்திரம்) டொமடோ கெச்சப். இல்லாவிட்டால் பீட்சாவுக்கு கெச்சப். வேற சாஸ் எதையும் உபயோகிப்பதில்லை, பசங்க பல சாஸ்களை உபயோகித்தபோதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ட்ரடிஷனல் அல்லாது பல வெஜி உணவுகளையும் தவிர்க்கிறீர்கள். சைவம் என்று தெரிந்தபின் அவற்றை உண்ணுவதில் பாதகம் இல்லை என்று உணரநதால் பயணங்களின் போது கஷ்டப்பட தேவை இல்லை. இது அடியேனுடைய கருத்து, அறிவுரை அல்ல.

      நீக்கு
    2. ஜெயகுமார் சார்... நான் உணவு முறைகளை மாற்றிக்கொள்வதில்லை. புது உணவு பழக அல்லது முயற்சிக்க பல நேரங்களில் பத்து வருடங்களுக்கு மேல் ஆகும். பாஸ்தா, நூடுல்ஸ், பானிபூரி... போன்றவற்றின் பக்கம் இன்னும் போகவில்லை. ஒரு சமயம் துபாயில் ஒரு பெரிய கம்பெனிக்குப் போயிருந்தபோது அவர்கள் நான் இந்தியன் என்பதால் என்னைக் கூட்டிக்கொண்டு பெரிய இந்திய ரெஸ்டாரன்ட் சென்று தஹி பூரி எனக்கு ஆர்டர் செய்தார்கள். வேண்டாம் எனச் சொல்ல முடியாத நிலை. சாப்பிட்டுப் பார்த்தால் சூப்பராக இருந்தது. அன்றிலிருந்து எப்போதாவது தஹி பூரி சாப்பிடுவேன். பசங்களுக்காக என் மனைவி பாவ் பாஜி அவங்க சின்ன வயதாக இருக்கும்போதிலிருந்து செய்வார். நான் சாப்பிட்டதில்லை. அப்புறம் பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் டேஸ்ட் பார்த்தபோது ரொம்பவே பிடித்திருந்தது. இதைப்பற்றி ஒரு தொடரில் எழுதுகிறேன்.

      நீக்கு
  2. காய் கலந்த வரு சோறு அல்ல

    காய் கலந்த வறு சோறு என்பதே சரி

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்

    1. ​வணக்கம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      Jayakumar

      நீக்கு
  4. இயன்ற அளவு ரசாயனங்களைத்
    தவிர்த்தல் நலம்...

    பதிலளிநீக்கு
  5. https://tamilandvedas.com/ தளத்தை சைடு பாரில் உட்படுத்த ஸ்ரீராமிற்கு பரிந்துரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லண்டன் ஸ்வாமிநாதனா? இப்போவும் எழுதுகிறார் என அறிந்து மகிழ்ச்சி. முன்னால் 2009, 10,11 ஆம் ஆண்டுகளில் மின் தமிழில் வெகு தீவிரமாக ஈடுபாட்டுடன் வேலை செய்தபோது அநேக வாத, விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கார். பின்னர் திடீரென வருகை நின்று விட்டது. சில மாதங்களில் நாங்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தோம். சிலர் முற்றிலும் விலக என்னளவில் மடல்கள் மட்டுமே பெற்றுக் கொண்டு வருகிறேன். அதுவும் சுவாரசியமாகவோ, பலன் மிக்கதோ அல்ல. எப்போதாவது ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ஏதேனும் எழுதுவார்.

      நீக்கு
  6. ஜெ கே அண்ணா, அடி பொளி!

    இன்று நம் வீட்டில் வறு சோறு இல்லை...புலாவ். ஆனால் வெந்தய கீரை, காய்கள் கலந்த புலாவ்.

    சேனையை இப்படியும் செய்வதுண்டு. நல்லாருக்கு சேனை வறுவல்.

    சிப்ஸ் என்று சேனையை வாழைக்காய் சிப்ஸ் செய்வது போன்று சீவி எண்ணையில் பொரித்தும் செய்வதுண்டு. கல்யாணச் சாப்பாட்டில் அப்படித்தான் போடுறாங்க.

    நீங்க செஞ்சுருக்கும் சேனை வறுவலும் நல்லா இருக்கு துண்டுகள் ஈவனாக.

    அப்படியே ஒரு பார்சல் அனுப்பிடுங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நெல்லை, உங்களின் இரு பதிவுகளும் நிதானமாக வாசித்துவிட்டு வருகிறேன். கமென்ட் கொடுக்கிறேன். அது கொஞ்சம் நிதானமாக வாசிக்கவேண்டியவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ... இப்போ நிதானமில்லாம இருக்கீங்களா? காலம் கலிகாலமா இருக்கே ஹா ஹா ஹா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!