9.4.26

அந்தப் பத்தாயிரம் ரூபாய் அப்புறம் என்ன ஆச்சு? சிம்லா சிக்கல்.

 

சப்தம் 
வெளியாகி ஒரு வருடத்தையும் தாண்டி  OTT க்கு வந்திருக்கும் சுவாரஸ்யமான படம்.  எனக்கு ஆதியைப் பிடிக்கும்.  சமீபத்தில்தான் அவர் நடித்த Drive பார்த்து ரசித்து பகிர்ந்திருந்தேன்.  நன்றாகச் செய்திருக்கிறார்.சில இடங்கள் எளிதாக யூகிக்க முடியும்படி இருந்தாலும் சில இடங்கள் பிரமாதம்.  அழகான கண்ணைக்கவரும் லொகேஷன்கள்.  

இதை பேய்ப்படம் என்று சொல்லலாமா?  ரொம்பத் தயங்கிய பிறகு ஓரளவுக்கு சொல்லலாம்.  சப்தம் என்பது படத்தின் அடிநாதம்.  அப்புறம் ப்ளாக் மேஜிக்.

நான் பழைய வீட்டிலிருந்து இந்த வீடு வரும் சமயம் ஒரு ஆர்டிக்கிள் படித்தேன்.  அதில் ஒரு பழைய பங்களாவில் அமானுஷ்ய நடமாட்டம் இருக்கும்,.  விசாரித்துப் பார்க்கையில் அது இறந்தவரின் ஆவி அல்ல, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரியவரும்.  அந்த இடத்தின் மீது அவர் கொண்ட பிரேமையால் அவர் தூங்கும்போது இரவுவுகளில் அவர் ஆன்மா இங்கு வந்து ஓரளவு மற்றவர் கண்ணுக்கு புகையாகத் தெரியும் உருவமாக நடமாடுகிறது.  அதைப் படித்தனான் நினைத்துக் கொண்டது இப்பவும் நினைவிருக்கிறது.   27 வருடங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து இந்த சொந்த வீட்டுக்கு வரும்போது அந்த பழைய வீட்டின் பாசம் என்னதான் வாடகை வீடாயிருந்தாலும் மனதில் இருக்கும் என்பதால் அப்புறம் அந்த வீட்டுக்கு குடி வருபவர் இரவில் எழுந்து வெளியே வந்தால் ஹாலில் சோபாவில் நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிடக்கூடும் என்று நினைத்துக் கொள்வேன்!

லட்சுமி மேனன், லைலா, சிம்ரன் என்று நட்சத்திரக் கூட்டம் படத்தில்..  "சிறிய சைஸ்" நகைச்சுவைக்கு ரெடின் கிங்ஸ்லி..  ஒரே மாதிரி டயலாக் டெலிவரி.

நிச்சயமாய் படம் ரசித்துப் பார்க்கலாம்.  நல்லவேளை கடைசிக் காட்சியில் ஒரு 'க்' வைத்து இரண்டாம் பாகத்துக்கெல்லாம் வழி செய்யவில்லை!

=======================================================================================  

ஃபேஸ்புக்கில் நண்பர் பகிர்ந்திருந்தது!


=============================================================================================

கதைகளில் கேரக்டர்களுக்கு பெயர் வைக்கும் வைபவம்    
கதைகள் எழுதும்போது அந்தந்த கேரக்டர்களுக்கு பெயர் வைப்பது ஒரு குட்டி சிரமம்.  துறுதுறு என்று சில பெயர்கள் தோன்றும்.  என்னைப்பொறுத்தவரை முதலில் தோன்றும் பெயர் பொருத்தமாகவே இருக்கும்.  ஏனெனில் கதையின் குணாதிசயங்களை நிர்ணயம் செய்தபின் அதற்குண்டான பெயர்தான் மனதில் தானாக சட்டெனத்  தோன்றும்.  அது பொதுவான பெயர்களும் இருக்கலாம்.  அல்லது நாம் பழகிய சில மனிதர்களின் குணாதிசயங்களை வைத்து சட்டென நம் மனதில் தோன்றும் பெயராகவும் இருக்கலாம்.  

இங்குதான் இன்னொரு சிரமமும் வருகிறது.  நாம் வைத்த பெயர்களில் நமக்குத் தெரிந்தவர் இருந்தால் நாம் வைத்திருக்கும் பெயரால் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று தோன்றும்.  அது மாதிரி சமயங்களில் பெயர் வைக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டும்.

சமீபத்தில் கூட பானுமதி ந எழுதிய ஒரு கதையின் பாத்திரத்தின் பெயர் பற்றி நான் அந்தப் பதிவில் கேட்டது நினைவிருக்கலாம்.  பெயர் சட்டென நினைவுக்கு வராவிட்டாலும்,  அவர் வைத்திருந்தது ஒரு வித்யாசமான பெயர்.  அதனால்தான் அதற்கு ஏதும் விசேஷக் காரணம் உண்டா என்று கேட்டிருந்தேன்.

சமீப காலங்களில் படத்துக்காக கதை எழுதுவதே இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகள் எழுதி விட்டேன்.  படம் கொடுத்த உடன் மனதில் தோன்றிய கதையை எழுதும்போது சட்டென பெயர் அந்த இடத்தில தானாக வந்து விழும்.  சில கதைகளில் கேரக்டர்களுக்கு நான் பெயர் வைப்பதேயில்லை!

=======================================================================================

கொரோனா கால டைவர்ஷன்கள் 




குழந்தையும் தெய்வமும்' என்கிற படத்தில் வரும் பாடல். டி எம் எஸ் - பி சுசீலா குரலில் வரும் பாடல் "அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஓர் கடிதம்..."
'பேசும் தெய்வம்' படத்தில் டி எம் எஸ் குரலில் வரும் பாடல் "நான் அனுப்புவது கடிதம் அல்ல..."
ஒரு சுவாரஸ்யம். மேலே உள்ளே இரண்டு பாடல்களுமே வாலி எழுதியது!
'சேரன் பாண்டியன்' என்று ஒரு படம். அதில் ஒரு பாடல். "காதல் கடிதம் வரைந்தேன்... " , மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடியது. சௌந்தர்யன் எழுத எஸ் ஏ ராஜ்குமார் இசை.
'காதல் கோட்டை' படம்.
தேவா இசையில் அகத்தியன் எழுதிய "நலம்.. நலமறிய ஆவல்..." எஸ் பி பாலசுப்ரமணியம் - அனுராதா ஸ்ரீராம் பாடியது.
'தேவா' என்று ஒரு படம். எஸ் பி பி குரலில் "ஒரு கடிதம் எழுதினேன்... என் உயிரை அனுப்பினேன்..." வாலி எழுதிய பாடல்!
'பல் பல் பல் தில் கே பாஸ்' (பல்லும், பாஸும் நீங்கள் நினைக்கும் அர்த்தம் அல்ல!) என்று ஒரு பாடல் ஹிந்தியில் உண்டு.
'பிளாக்மெயில்' என்கிற படத்தில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் கிஷோர் குரலில் அருமையான பாடல். தர்மேந்திரா எழுதிய லெட்டரை ராக்கி படிப்பதே பாடலாய்...
அஞ்சல் பெட்டி 520 என்று ஒரு படம். டி என் பாலு இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜா தேவி நடித்த படம். 1969 இல் வெளிவந்தது.
1970 இல் வெளிவந்தது 'தபால்காரன் தங்கை' திரைப்படம். ஜெமினியும் வாணிஸ்ரீயும் நடித்தது.
போஸ்ட்மாஸ்டர் பொன்னுசாமி என்று ஒரு படம் எடுத்திருக்கலாம்! எடுக்கவில்லை.
ஆனால் போர்ட்டர் பொன்னுசாமி என்று ஒரு படம் வந்தது. அதையும் நான் பார்த்துத் தொலைத்தது வேற விஷயம்.
இதிலேயே இன்னொரு சிந்தனை என்ன என்றால் போர்ட்டர் பற்றி தமிழில் வந்த ஒரே படம் போர்ட்டர் பொன்னுசாமிதான் என்று நினைக்கிறேன். அடியார் எடுத்து, நடித்தது. தேங்காய் சீனிவாசன் கதாநாயகன் என்று நினைவு. ஹிந்தியில் போர்ட்டர் சம்பந்தமாக அமிதாப் நடித்த 'கூலி' படம் வந்ததது!
இன்றைய வெட்டி ஆராய்ச்சி எதைப் பற்றி என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்! 2/4/20

வெட்டி 2020



====================================================================================

ஸ்ரீதரின் சுமாரான படங்களில் ஒன்று 'சௌந்தர்யமே வருக வருக..'  எம் எஸ் விஸ்வநாதனையும் இளையராஜாவையும் விட்டு பழைய விஜயபாஸ்கர் இசை.   அந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள்.  'இதோ என் காதலி கண்மணி' வாலியின் பாடல்கள். 80 ம் வருடம் வெளிவந்த படம்.  நான் சங்கர் கணேஷ் இசை என்று எண்ணி இருந்தேன்.  S P பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரலில் பாடல்கள்.


=======================================================================================

சொர்க்கத்தின் அருமையை
உணர
ஒரு நரகம்
தேவையாயிருக்கிறது... 
1/4/2013

வெயிலின்  கொடுமை
நிழலில் தெரியும்!

கைத்தொழில் ஒன்றை 
கற்றுக்கொள் 
படிப்பு எதுவும் ஏறலை 
ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் 
செய்யாமல் 
திருமணம் நடப்பது 
எளிதாமோ!

==============================================================================

இன்னும் அழகான இளமையான MGR...


சாகாவரம் பெற்ற கேரக்டர்கள்..  படம் பார்ப்பவர்கள் சட்டென பெயரைச் சொல்லி விடுவார்கள். ஒன்று... 


இரண்டு...



======================================================================

ஒரு கிரிக்கெட்டரின் உறவாக இருப்பதிலோ இருக்கும் சிரமங்களையும் சொல்கிறார்!


நான் ரேகாவை முதல் முதலாகப் பார்த்தது கல்லூரியில்தான். பார்த்தவுடனேயே அவள் அழகால் கவரப்பட்டேன்.  மிகுந்த நாணமும்  எளிமையும் கொண்டு விளங்கினாள்.  நேராகச்சென்று என் காதலை அவளிடம் வெளிப்படுத்த விரும்பவில்லை.   எங்காவது பயந்து விடப் போகிறாளே என்றுதான்.

எனவே அவளுக்குத் தெரிந்த என் நண்பன் ஒருவன் மூலம் அறிமுகம் செய்துகொண்டேன்.  என் காதல் படிப்படியாக முன்னேறியது.   அவளைச் சந்திக்க, பக்கத்திலுள்ள பல்வேறு உடுப்பி ஓட்டல்களுக்குச் செல்வேன்.  நடுத்தரக் குடும்பத்துக் காதவர்கள் அங்கு தானே சந்திக்க முடிகிறது!

அவள் கள் லூரியில் 'வாலி பால்' ளையாடுவாள்.  அவளுக்கு ஒரு 'ப்ளேஸர்' பரிசளித்தேன். அதில் அவன் மிகவும் எடுப்பாக இருந்தாள். அப்பரிசை என் காதலின் சின்னமாக ஏற்றுக் கொண்டாள். ஆயினும் திருமணத் துக்காக நாங்கள் நான்கு வருடம் காக்க வேண்டியிருந்தது.  ஏனெனில், அவன் பட்டப் படிப்பை முடிக்க வேண்டி இருந்தது. அதன் பிறகுதான் என்னை மாப்பிள்ளை கேட்க முறையாக அவள் பெற்றோர்களை அனுப்ப முடியும்.

பம்பாயில் நான் விளையாடிய ஒருரஞ்சி டெஸ்ட் மாட்சைக் கூட ரேகா 'மிஸ்' பண்ணியதில்லை.  ஒரு நல்ல இந்து மனைவியைப் போல, என் வெற்றியையும் தோல்விகளையும் சமமாகப் பாவிப்பாள். சொல்லப் போனால், எங்கள் திருமணம்  நடந்த புதிதில் பொறாமை பிடித்த பக்கத்து வீட்டுக்காரர்களின் கேலிகளையெல்லாம் அவள் தாங்கிக் கொள்ன வேண்டியிருந்தது. 

"சின்னச் சின்ன மாட்ககளிலெல்லாம் உன் கணவர் நன்றாக விளையாடுகிறார். டெஸ்ட் மாட்சுகளில் போயிடறாரு!" என்றெல்லாம் அவர்கள் சொன்னார்கள்.   ஆனால் அவள் இதையெல்லாம் என்னிடம் சொன்னதேயில்லை. 

நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் குழுவிற்குக் காப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறேன் என்று கூறியபோது அதை ரேகா நம்பவே இல்லை. ரேடியோவில் கேட்டுத்தான் அவள் பூரண நம்பிக்கை கொண்டாள்.
இந்த விளையாட்டில் ஏற்படும் வெற்றி. தோல்விகளைப் பற்றி அவளுக்குகுத் தெரியும். 

வெஸ்ட் இன்டீஸில் நான் விளையாடிய முதல் விளையாட் டில் தோற்றுப் போனதற்காக அவள் எவ்வனவோ கேலிகளையும் கிண்டல்களையும் ஏற்க வேண்டியிருந்தது. ஆனால் அவள் மனம் தளரவில்லை.

'கேப்டன்' வேலை எளிதல்ல என்று அவளுக்குத் தெரியும்.  பத்திரிகைகளில் வெளிவந்த 'கமென்ட்'களை மிக ஊன்றிப் படிப்பாள். உள்ளூர்ப் பத்திரிகைக்காரர்களின் நம்பிக்கையில்லா தன்மையை எண்ணி வருத்தப்படுவாள். எது நடக்குமோ அது நடந்துதான் தீரும்' என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது 

நான் விளையாட 'பாட்'டை எடுத்து விட்டால் அவள் மிகவும் அமைதியற்று விடுவான்.  நான் பதின்மூன்றைத் தாண்டிய பிறகு தான் சிறிது அமைதியுறுவாள். எங்கள் திருமணம் நடந்தது ஒரு பதின்மூன்றாம் தேதி. அவளுக்கு காமெண்ட்ரி கேட்சுவே பிடிக்காது.  அவள் ரேடியோவை 'ஆன்' பண்ணியதும் நான் தவறாமல் 'அவுட்' ஆகிவிடுகிறேனாம். நாங்கள் வெஸ்ட் இண்டீஸை வென்ற தினத்தில் இதுவரை எங்களைத் தாக்கி வந்தவர்களெல்லாம் என்னை 'ஓகோ' வென்று புகழ்ந்ததைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்ததாம்.

நாங்கள் 'ஓவலில்' விளையாடிக் கொண்டிருந்த போது அவள் என் தந்தையின் வீட்டில் இருந்தாள்.

அபிட் அலி கடைசி 'வின்னிங் ஸ்ட்ரோக்' அடிக்கும் வரை நாங்கள் ஜெயிப்போம் என்று அவன் நம்பவே இல்லையாம்,  ஒரு காப்டனின் மனைவிக்குரிய மகிழ்ச்சியுடன் மற்றவர்களின்  பாராட்டுகளை அவள் ஏற்றுக்கொண்டாள். 

மற்ற எவ்வா கிரிக்கெட்டர்களின் மனைவிகளைப் போலவே, ரேகாவும் என்னுடைய சுற்றுப்பயணங் களுக்குத் தன்னைத் தயார் செய்து வேண்டியிருக்கிறது.  முன்பெல்லாம் ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அவளுக்குக் கடிதம் எழுதி விடுவேன்.  வெண்ட் இன்டீஸிற்குக் காப்டனாகிப் போன பின்பு வார முடிவில் ஒரு பெரிய கடிதம் எழுதத்தான் முடிந்தது. இங்கிலாத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட போஸ்டல் ஸ்டிரைக் காரணமாக என் நலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவன் பத்திரிகைகளைத்தான் நம்பவேண்டி யிருந்தது.

ஒரு கிரிக்கெட் வீரனின் வாழ்வில் இது தவிர்க்க முடியாதது. நாளெல்லாம் விளையாடிக் கொண்டிருந்து விட்டு வரும் நாங்கள் ஒரு ட்ரிங்க்கைக் குடித்து விட்டு, எல்லோரும் வீட்டில் நலமாக இருப்பார்கள் என்று நம்பித்தான் காலம் கழிக்க வேண்டும். எனக்குத் தெரி த்த கிரிக்கெட் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு வழக்கமாக எழுதுவதையெல்லாம் எழுதி விட்டுக் கடைசியில் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' (I love you) என்று மூன்று முறை எழுதி விடுவார்.

ரேகா மிகவும் அமைதியானவள். பொறுமைசாலி, இந்த நாட் டிற்காக என்று வரை நான் விளையாடத் தகுதியுள்ளவனோ. அன்று வரை விளையாட என்னை அவள்
அனுமதிப்பாள். 

இல்லஸ்டிரேட்டட் லீகலியில் அஜீத் வடேகர்.

பிரேமா இருஷ்ணன் - தினமணி கதிர் 1970

================================================================================

பார்க்கும்போது நானும் ரசித்த வசனம் அது...

புதுக்கவிதையின் ஒரிஜினல் ஒரு கன்னடப்படம்.  அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சி.   இடைவேளையின்போது பிரிந்து விடும் கதா நாயகன் கதாநாயகி இடைவேளைக்குப் பின் ஒரு ஸ்கூல் காட்சியில் சந்திக்கிறார்கள் யதேச்சையாக.  நாயகி கையைப் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தை.  இருவராலும் பேச முடியவில்லை.  மௌனமாகக் கிடக்கிறார்கள்.  காட்சியில் டயலாக் கிடையாது.

பார்த்துக் கொண்டிருந்த பாலச்சந்தர் "விசு..   ..  பார்த்தியா.?  நீயா இருந்தா இங்கேயும் டயலாக் போட்டு சாகடிப்பியே" என்று சொல்லி இருந்திருக்கிறார்.

கேட்டுக்கொண்டிருந்த விசு சற்று மௌனத்துக்குப்பின் "டயலாக் போட்டாலும்  நல்லாயிருக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.  மணியடித்து படத்தை நிறுத்தி விட்ட கேபி விசுவுக்கு செம அர்ச்சனை செய்திருக்கிறார்.  அங்கு அப்போது ரஜினியும் இருந்திருக்கிறார்.

புதுக்கவிதை எடுக்கும் நேரம்..  அந்தக் காட்சி வரும்போது விசு ஒரு பேப்பரில் "இந்தக் காட்சிக்கு டயலாக்கே வேண்டாம் .  டயலாக் வச்சா  நான் செத்தேன்" என்று எழுதி அப்படியே எஸ் பி எம்மிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விட்டாராம்.

வேறு ஒரு படப்பிடிப்பில் விசு இருக்க, காலை 10.30 , மதியம் 1 மணி  என்று அந்த படப்பிடிப்பிலிருந்து விசுவைத் தேடி ஆள் வந்து கொண்டே இருந்ததாம்.  இவர் எவ்வளவு சொல்லி அனுப்பியும் கேட்காமல் ரஜினி அந்த நபரிடம் பழைய பின்கதை முழுக்கச் சொல்லிக் கேட்டும் இவர் டயலாக் எழுதித் தரவில்லை.      மூன்று மணிக்கும் ஆள் வந்தபோது  "அவர் டயலாக் கொடுக்காமல் இன்று பேக்கப் ஆகாது" என்று சொல்லி விட்டதாகச் சொன்னாராம்.   விசு சிகரெட் அட்டையில் எடுத்து எழுதிக் கொடுத்துவிட்டு அப்புறம் மறந்து விட்டாராம்.  

படத்தின் பிரிவியூ.  இவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்தக் காட்சியும் வந்தததாம்.  அப்போது இது நினைவுக்கு வர ரஜினியிடம் குனிந்து கொண்டே போய் "சேர்த்திருக்கிறீர்களா?" என்று கேட்க அவர் கட்டை விரலை உயர்திக் காட்டினாராம்.  

காதல் தோல்விக்குப் பின் ஜோதி ரஜினியிடம் 'பேசியது போதும், நான் கிளம்பவா' என்று கேட்பது போல  "நான் போகலாமா" என்று கேட்க, ரஜினி "அதுதான் ஏற்கெனவே போயிட்டியே" என்பாராம்.

குனிந்துகொண்டு முன்வரிசையில் அமர்ந்திருந்தார் விசு.

மறுபடியும் மணி அடித்து விட்டாராம் கேபி,  பயந்துபோய்ப் பார்த்தால் கேபி சொன்னாராம் "என்னடா...   டயலாக் எழுதினாலும் நல்லாயிருக்கு" என்றாராம்.  ரஜினி எழுந்து வந்து விசுவுக்கு கைகொடுத்து பாராட்டினாராம்.


=====================================================================================

அந்தப் பத்தாயிரம் ரூபாயை அப்புறம் என்னதான் செய்தார்களாம்?  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்தான் கேட்கவேண்டும்!



பூட்டோ தந்த பத்தாயிரம் ரூபாய் - சிம்லாவில் ஒரு சிக்கல் 

கடந்த ஜூன் மாதம். சிம்லா மகாநாடு நடைபெற்றதல்லவா? அப்போது, அதிபர் பூட்டோ, தன்னைக் கவனித்துக்கொண்ட அதிகாரி கள், செக்யூரிடி ஊழியர்கள். பணியாட்கள் ஆகியவர்களுக்கு இனாம் கொடுக்கும்படி சொல்லி பத்தாயிரம் ரூபாயை இமாசலப் பிரதேஷ் அரசிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஆனால் இதுவரை 'டிப்' பணம் யாருக்கும் தரப்பட வில்லையாம்!

யார், யார், அதிபர் பூட் டோவைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம், மாநில அரசினால்!

இப்போது புதுப் பிரச்னையும் முளைத்திருக்கிறது. இந்த எட்டு மாதத்தில் சேர்ந்திருக்கும் வட்டித் தொகையை என்ன செய்வது?

1970 தின். கதிர்.  வ .ரா 

=====================================================================================

ஆகாயம்தானே அழகான கூரை...


==================================================================================









இதில் என்ன ஜோக் என்று எனக்குப் புரியவில்லை.





ஜெர்மனியிலிருந்து தப்பி வந்த ஒரு யுத்தக்கைதி பிரெஞ்சு சர்க்கஸ்காரர் ஒருவரிடம் தம்மைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டார்.

 'இருக்கும் நிலயிலேயே. உம்மை நான் வேவைக்கு வைத்துக்கொண்டால் ஜெர்மன் ரகசியப் போலீசார்  உம்மைக் கண்டுபிடித்து விடுவார்கள்.  நீங்கள் ஒரு கொரில்லா (மனிதர்க குரங்கு) தோளை போர்த்திக்கொண்டு சர்க்கஸில் நடிப்பதாயிருந்தால் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்' என்றார் சர்க்கஸ்காரர்.

அப்படியே அந்தக் கைதியும் உண்மையான மனிதக்குரங்கைப் போல நடித்து வந்தார்.
 
ஒருநாள்  இரவு சர்க்கஸிலிருந்து சிங்கம் ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந் தது, அதைப் பார்த்ததும் அவர் தாம் குரங்கு வேடம் போட்டிருப்பதை மறந்து, "ஐயோ, சிங்கம்! சிங்கம்" என்று அலறிவிட்டார்!
சிங்கம் அதைப் பொருட் படுத்தாமல் அவர் அருகில் வந்து கேட்டது

"அட பைத்தியமே! ஏன் இப்படி அலறுகிறாய்? இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கும் யுத்தக்கைதி நீ ஒருத்தன் மட்டும்தானா?"

53 கருத்துகள்:

  1. கலர் நகைச்சுவைகள், படித்திருந்தபோதும் நன்றாக ரசிக்க முடிந்தது.

    அதற்குப் பிறகான நகைச்சுவைகள் ரொம்பவே சுமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   சந்தேகத்தோடேயே வெளியிட்டேன்.  தேவையானால் நீக்கி விடலாம் என்றுதான் கூடுதலாகவே சேர்த்தேன்.

      நீக்கு
  2. புதுக்கவிதை வசனம் நிகழ்வு சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அந்த பேட்டியில் விசுவின் குரல் கேட்டு அதிர்ந்து போனேன்.  அவர் குரல் இல்லை அது.  கேன்சரிலிருந்து மீண்டு வந்திருந்தார்.  

      அந்த ஒரு வரி வசனம் எனக்கு மிக மிக மிக மிக பிடிக்கும்.  அருமையா அந்த இடத்தில பொருந்தி இருக்கும்.

      நீக்கு
  3. அஜித் வடேகர்... காதல் கதை, மனைவியின் கஷ்டம்... இதுவரை படித்திராத்து.

    விராட் எஓஹ்லியின் மனைவி என்ன பாடு பட்டிருப்பாரோ... அவரைக் காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் கோஹ்லியின் கேரியர் கீழே இறங்கியது. அனுஷ்கா மைதானத்தில் இருந்தாலே கோஹ்லி இரட்டை இலக்கம்கூட அடிக்க மாட்டார் என்ற நிலை இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  சிதறும் கவனமா!  இப்படி ஒவ்வொரு கிரிக்கெட்டரும் தன் காதல் கதை சொன்னால் சுவாரஸ்யம்தான்!

      நீக்கு
    2. சிதறும் கவனமில்லை. கம்பெனி காசில் வாழ்க்கையை எஞ்சாய் செய்யத்தான்.

      நீக்கு
  4. இரண்டாவது படம் பீமாரசகுண்டுவா?

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம், ஆதி நல்லா நடிக்கிறார். ஈரத்திலும் நடித்திருந்தார் இல்லையா? அப்படத்தை சென்னையில் இருந்தப்ப உறவினர்களின் தயவில் பார்த்ததால் தெரிந்தது. மற்றும் சில க்ளிப்பிங்க்ஸ் அவர் நடித்திருந்த அரவான்? படம் முழுவதும் தெரியாது பார்த்ததில்லை, பார்த்ததில் ஒன்றிரண்டு சீன்ஸ் நல்லா நடித்திருந்தது தெரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  ஆர்தடாக்ஸா முதல்லேருந்து கிரமமா வர்றது நேக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!!!!   

      ஆமாம், அதே ஆதிதான்.  அரவான் கொஞ்சம் போர்.  கொஞ்ச நாள் முன்பு அவர் நடித்த 'டிரைவ்' படம் பார்த்த  அனுபவம் போட்டிருந்தேன், ஞாபகமிருக்கா?

      நீக்கு
    2. நான் முழுதும் அல்லது படித்தவரை, மனதில் முதலில் தங்குபவற்றிர்க்கு ஏற்றவாறு கருத்துகள் எழுதுவேன்.

      நீக்கு
    3. ok.. pk.. ஒரு பற்றவைக்கும் நரம்பில்தான் அப்படிச் சொன்னேன். :))

      நீக்கு
  6. ஒரு ஜூசுக்கு கேஸ் வரி போட்டதும் சமீபத்தில் நடந்ததே.

    பஹ்ரைனில் ஃப்ரைடு நூடுல்ஸ் வாங்கி நொந்துபோனது நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விராட்டி, பழைய சாதம் எல்லாம் விற்பனைக்கு வந்து விட்டது.  அதன் பெயரைப் பார்த்து கண்டு பிடிக்க முடிந்தால் சரி!

      நீக்கு
  7. ஆதியின் முதல் படம் ஏடாகூடம் (அமலாவுடன்?) என நினைவு. நல்ல நடிகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமலாவுடனா?  இல்லையே...  அமலா இவருக்கு சீனியர். முதல் படம் எது என்று நினைவில்லை.

      நீக்கு
  8. கவிதை ஈர்க்கவில்லை, ரொம்பத் தெரிந்த பழமொழி என்பதால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  தெரியாத பழமொழி சொன்னாலும் புரியாதே...  மேலும் அதற்கு நானெங்கே போவேன்!

      நீக்கு
  9. அப்பளம் - சிரித்துவிட்டேன். ஏனுங்க ஹோட்டலுக்கு போறப்ப புச்சா ஒரு ஐட்டம் பேரு கீதே...அது இன்னான்னு கேட்டுக்க வேணாம்? நான் கேட்டுக் கொண்டுவிடுவேன்!!!! சும்மா பேரில் மயங்கி - plant-based adaptations of classic comfort foods - ஆர்டர் செய்து அப்புறம் "அட ச்சே...நம்ம வீட்டுல்ல செய்யற பச்சை கறிகாய் சலாட்.....இதுக்கா இந்தப் பெயர்" என்று காசு மேல காசு போட்டு கொடுத்து....நன்றாக வழிந்துவிட்டு நொந்து வரவேண்டிவரும்! Old win in a new bottle! கேஸ்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. old wine in a new bottle!

      கீதா

      நீக்கு
    2. அது in a new Glass இல்லையோ?  ஆமாம், புதுப் புது பெயரகளில் விற்பனை செய்து குழப்புகிறார்கள்!

      நீக்கு
    3. ஓ! அந்த அளவுதான் தராங்கன்னு சொல்றீங்களா!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  10. இப்ப புதுசா, நாங்க மிக்ஸில அரைக்கறது இல்ல....உரல்ல, அம்மில தான் அரைச்சு செய்யறோம்னு, conventional அப்படினு ஒரு முற்றம் உள்ள வீடு போல ஒரு கட்டிடம் அங்கங்க அண்டா குண்டா எல்லாம் வைச்சு.... விலைய கூட்டி விற்பதும்....வாழ்க்கை முறையே மாறிவருகிறது. அது சரி இத்தனைக்கும் காசு கொடுக்கவும் மக்கள் இருப்பதைப் பார்க்கும் போது அட! நம்ம பொருளாதாரம் நல்லா வளர்ந்திருக்கோ? என்று நினைத்தால்....இங்கிருக்கும் ஏரிக்கரையில் இருக்கும் ஒரு குடிசைக் காலனி நினைவுக்கு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் புதுசா எதைப் பார்த்தாலும் வாங்கிப் பார்க்கும் மூடில் இருக்கிறார்கள்... பணப்புழக்கம் கொஞ்சம் அதிகம்தான்!

      நீக்கு
    2. பணப் புழக்கம் ரொம்பவே அதிகம். வீட்டுக்குத் தேவையான மசாலா பொடி முதற்கொண்டு ஆன்லைன் கம்பெனிகளிடம் வாங்கறாங்க. எதையும் நாம செஞ்சுப்போம்னு நினைக்கறதில்லை.

      நான் கும்பகோணம் போனால் மங்களாம்பிகா இட்லி மிபொடி பாக்கெட் வாங்குவேன். இந்தத் தடவை அவங்க சொன்னாங்க, ஆன்லைன்ல ஏகப்பட்ட ஆர்டர் குவியுது என.

      நீக்கு
    3. எனக்கென்னவோ மங்களாம்பிகாவில் பழைய சுவை இருப்பதாகத் தோன்றவில்லை.

      நீக்கு
  11. இங்குதான் இன்னொரு சிரமமும் வருகிறது. நாம் வைத்த பெயர்களில் நமக்குத் தெரிந்தவர் இருந்தால் நாம் வைத்திருக்கும் பெயரால் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று தோன்றும்//

    யெஸ் ஹைஃபைவ்! மீக்கும் ரொம்பத் தோன்றும். அது போல ரொம்ப வழக்கமான பெயர்களை வைப்பதும் ஏனோ என் மனதிற்கு ஒப்புடையதாய் இல்லை. நீங்கள் சொல்லிருப்பது போல் குணாதிசயங்களுக்கு ஏற்ப ஒரு பெயர் முதலில் நினைவுக்கு வந்துவிடும் ...அதையே வைத்தால் சில சமயம் கதை எழுதி வரும் போது அந்த ஓட்டத்தில் ச்சே இப்பெயர் பொருத்தமா இல்லையே என்றும் தோன்றியதுண்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  ஆனால் சமீபம் வரை  நீங்கள் நான் வைக்கும் பெயர்களை பார்த்திருக்கிறீர்கள்.  ஏதாவது தோன்றி இருக்கிறதா?

      நீக்கு
    2. ஒரு தடவை இங்க எழுதின ஒரு கதைல, இங்கு வரும் ஒரு எழுத்தாளரின் பேர் அமைந்து, அது வேண்டும் என்றே செய்ததா என அவர் கேட்கும் நிலைக்குப் போனது.

      நீக்கு
    3. அச்சச்சோ... யார் எழுதியது? நானா?

      நீக்கு
  12. பானுமதி ந கதையில் நீங்க கேட்டிருந்தது நல்லா நினைவு இருக்கு ஸ்ரீராம்.

    பெயர் சாகேத ராமன் என்று நினைவு. காரணம் சலமேலரா கீர்த்தனையை சாகேதராமன் பிறப்பதற்கு முன் அவன் அக்காவிற்கு வாத்தியார் வீணையில் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருட்ந்ததார் அன்று இரவு 3 மணிக்குப் பிறந்ததால் அதனால் அப்பெயர் என்று கதையில் வரும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சாகேத் ராமன்.  வேறு ஏதாவது பெயர் இருந்திருந்தால் கேட்டிருக்க மாட்டேன்.  விசேஷமான பெயர் என்பதால் கேட்கத் தோன்றியது.  இந்த என் கட்டுரையை இன்னும் விவரித்து எழுத எண்ணி இருந்தேன்.  நேரமின்மை காரணமாகவும், மற்ற அரட்டைகளுக்கும் இடம் கொடுக்கவும் சுருக்கி விட்டேன்!!!

      நீக்கு
  13. ​ரேடியோவில் கமென்டரி கேட்ட காலம். கேட்கும்போது மனக்கண்ணில் திரை நோட்டமாய் அனுபவித்த காலம். அந்த நாளும் வந்திடாதோ.... வடேகர் அணி தலைவன் பதவியை தக்க வைத்து கொண்ட காலம்.

    //இதில் என்ன ஜோக் என்று எனக்குப் புரியவில்லை.​// கொடுக்குற காசுக்கு சொட்டு கூட விடாமல் முறுக்கிப் பிழிந்து எடுக்கிறாராம்.
    //வெயிலின் கொடுமை
    நிழலில் தெரியும்!​// ஆமாம். தன்னுடைய நிழலில் தான் நிற்கமுடியாதபோது கட்டாயம் தெரியும். ஆனால் வெயிலின் அருமை சிம்லாவில் தெரியும். அங்கெ போனவர்களுக்கு. //

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC  ஸார்... 

      ஓ..  ஜோக் புரிந்தது! 

      தன் நிழலில் தான் நிற்க முடியாததைப் பற்றி நானும் முன்பு எழுதியிருந்தேன்!

      நீக்கு
  14. ஸ்ரீராம் நானும் பெயர் இல்லாமல் கதைகள் எழுதியதுண்டு! எபி யில்...தேவையே இல்லாமல் நகர்ந்துவிடும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நாம் எல்லோருமே எழுதி இருப்போம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. படத்துக்கான கதைகள் எனக்கும் உடனே வருகின்றன ஆனால் ஆரம்பத்தில் எழுதினேன் ஆனால் இப்ப எழுதவில்லை காரணம் நான் அந்தக் குழுவில் இல்லையே!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நலம் நலமறிய ஆவல் பாடல் நல்ல இசை..நல்ல ஹிட் பாடல் என்று நினைக்கிறேன் இருவருமே நல்லா பாடியிருப்பதும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லை கீதா.  அந்தப் பாடல் பற்றி ஏன் இங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே...

      நீக்கு
    2. சென்று மறுபடி பார்த்ததில் வெட்டி அரட்டையில் வந்தது என்று புரிந்தது!!!

      நீக்கு
  17. வெட்டி ஆராய்ச்சியில் ஒரு சில தெரிந்தது ஒரு சில தெரியாதவை. படங்களும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா சொல்லியிருக்கும் கண்மணி அன்போடு பாடல் நினைவுக்கு வந்தது. அப்புறம் கைக்குட்டைக் காதல் கடிதம்னு கண்ணுக்குள் நூறு நிலவா....

      கீதா

      நீக்கு
    2. ஆமாம். அப்புறம்தான் இப்படி சில பாடல்கள் நினைவுக்கு வந்தன!

      நீக்கு
  18. சொர்கம், நிழலின் அருமை இரண்டும் ஒரே பொருள் கொண்டது எனலாம் இல்லையா ஸ்ரீராம்?

    பொதுவாகப் பார்த்தீங்கனா இதன் உள் அர்த்தம் வாழ்வியலோடு பொருந்திய ஒன்று எனலாமோ? இளம் வயதில் உழைத்துவிட்டால் பின்னாளில் சுகமாக வாழலாம். சிலர் இளம் வயதில் உழைக்காமல் பின்னால் வருந்துபவர் உண்டு. உழைப்பு அறிவு இருந்தாலும் வருவதை நிர்வாகம் செய்யும் திறன் இருந்தால் பின்னாளில் நல்லதே. தன் கையே தனக்குதவி என்று வாழ்ந்திடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் பொருள் கொள்ளலாம்!

      நீக்கு
    2. பொதுவா பத்து வருடங்களுக்கு ஒரு முறை வாழ்க்கை மாறும்.சின்ன வயசுல செல்லமா வளர்றவங்க திருமணமாகி கஷ்டப்படறதும், உல்டாவும் நடக்கும். எப்போதுமே கஷ்டப்படறவங்க, வரம் வாங்கிட்டு வந்திருப்பாங்க.

      நீக்கு
    3. உதாரணத்தோடு விளக்கவும்!

      நீக்கு
  19. எத்தொழில் எதுவும்
    செய்யாமல்
    திருமணம் நடப்பது
    எளிதாமோ!//

    ஹாஹாஹா ஸ்ரீராம், அதெல்லாம் நடக்குதே சின்ன ஊர்களில், கிராமங்களில்...அப்புறம் கடன் குடி அது இதுன்னு....வாழ்க்கை சீரயழியவும் செய்கிறது.

    மூன்றும் தொடர்புடைய முதல் இரண்டும் கிட்டத்தட்ட நாம் கேட்டவை....மூன்றாவதோடு ஒரே பொருள் பொதிந்தவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது எதன் உல்ட்டா  என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

      நீக்கு
  20. இந்த எம் ஜி ஆர் படம் தானே முன்னர் வந்தது இல்லையோ?

    ஜஸ்டிஸ் ஜகன்நாதன்?

    ரசகுண்டு?

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!