சப்தம்
வெளியாகி ஒரு வருடத்தையும் தாண்டி OTT க்கு வந்திருக்கும் சுவாரஸ்யமான படம். எனக்கு ஆதியைப் பிடிக்கும். சமீபத்தில்தான் அவர் நடித்த Drive பார்த்து ரசித்து பகிர்ந்திருந்தேன். நன்றாகச் செய்திருக்கிறார்.சில இடங்கள் எளிதாக யூகிக்க முடியும்படி இருந்தாலும் சில இடங்கள் பிரமாதம். அழகான கண்ணைக்கவரும் லொகேஷன்கள்.
இதை பேய்ப்படம் என்று சொல்லலாமா? ரொம்பத் தயங்கிய பிறகு ஓரளவுக்கு சொல்லலாம். சப்தம் என்பது படத்தின் அடிநாதம். அப்புறம் ப்ளாக் மேஜிக்.
நான் பழைய வீட்டிலிருந்து இந்த வீடு வரும் சமயம் ஒரு ஆர்டிக்கிள் படித்தேன். அதில் ஒரு பழைய பங்களாவில் அமானுஷ்ய நடமாட்டம் இருக்கும்,. விசாரித்துப் பார்க்கையில் அது இறந்தவரின் ஆவி அல்ல, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரியவரும். அந்த இடத்தின் மீது அவர் கொண்ட பிரேமையால் அவர் தூங்கும்போது இரவுவுகளில் அவர் ஆன்மா இங்கு வந்து ஓரளவு மற்றவர் கண்ணுக்கு புகையாகத் தெரியும் உருவமாக நடமாடுகிறது. அதைப் படித்தனான் நினைத்துக் கொண்டது இப்பவும் நினைவிருக்கிறது. 27 வருடங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து இந்த சொந்த வீட்டுக்கு வரும்போது அந்த பழைய வீட்டின் பாசம் என்னதான் வாடகை வீடாயிருந்தாலும் மனதில் இருக்கும் என்பதால் அப்புறம் அந்த வீட்டுக்கு குடி வருபவர் இரவில் எழுந்து வெளியே வந்தால் ஹாலில் சோபாவில் நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிடக்கூடும் என்று நினைத்துக் கொள்வேன்!

லட்சுமி மேனன், லைலா, சிம்ரன் என்று நட்சத்திரக் கூட்டம் படத்தில்.. "சிறிய சைஸ்" நகைச்சுவைக்கு ரெடின் கிங்ஸ்லி.. ஒரே மாதிரி டயலாக் டெலிவரி.
நிச்சயமாய் படம் ரசித்துப் பார்க்கலாம். நல்லவேளை கடைசிக் காட்சியில் ஒரு 'க்' வைத்து இரண்டாம் பாகத்துக்கெல்லாம் வழி செய்யவில்லை!
=======================================================================================
ஃபேஸ்புக்கில் நண்பர் பகிர்ந்திருந்தது!
கதைகளில் கேரக்டர்களுக்கு பெயர் வைக்கும் வைபவம்
கதைகள் எழுதும்போது அந்தந்த கேரக்டர்களுக்கு பெயர் வைப்பது ஒரு குட்டி சிரமம். துறுதுறு என்று சில பெயர்கள் தோன்றும். என்னைப்பொறுத்தவரை முதலில் தோன்றும் பெயர் பொருத்தமாகவே இருக்கும். ஏனெனில் கதையின் குணாதிசயங்களை நிர்ணயம் செய்தபின் அதற்குண்டான பெயர்தான் மனதில் தானாக சட்டெனத் தோன்றும். அது பொதுவான பெயர்களும் இருக்கலாம். அல்லது நாம் பழகிய சில மனிதர்களின் குணாதிசயங்களை வைத் து சட்டென நம் மனதில் தோன்றும் பெயராகவும் இருக்கலாம்.
இங்குதான் இன்னொரு சிரமமும் வருகிறது. நாம் வைத்த பெயர்களில் நமக்குத் தெரிந்தவர் இருந்தால் நாம் வைத்திருக்கும் பெயரால் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று தோன்றும். அது மாதிரி சமயங்களில் பெயர் வைக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டும்.
சமீபத்தில் கூட பானுமதி ந எழுதிய ஒரு கதையின் பாத்திரத்தின் பெயர் பற்றி நான் அந்தப் பதிவில் கேட்டது நினைவிருக்கலாம். பெயர் சட்டென நினைவுக்கு வராவிட்டாலும், அவர் வைத்திருந்தது ஒரு வித்யாசமான பெயர். அதனால்தான் அதற்கு ஏதும் விசேஷக் காரணம் உண்டா என்று கேட்டிருந்தேன்.
சமீப காலங்களில் படத்துக்காக கதை எழுதுவதே இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகள் எழுதி விட்டேன். படம் கொடுத்த உடன் மனதில் தோன்றிய கதையை எழுதும்போது சட்டென பெயர் அந்த இடத்தில தானாக வந்து விழும். சில கதைகளில் கேரக்டர்களுக்கு நான் பெயர் வைப்பதேயில்லை!
=======================================================================================
கொரோனா கால டைவர்ஷன்கள்
குழந்தையும் தெய்வமும்' என்கிற படத்தில் வரும் பாடல். டி எம் எஸ் - பி சுசீலா குரலில் வரும் பாடல் "அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஓர் கடிதம்..."
'பேசும் தெய்வம்' படத்தில் டி எம் எஸ் குரலில் வரும் பாடல் "நான் அனுப்புவது கடிதம் அல்ல..."
ஒரு சுவாரஸ்யம். மேலே உள்ளே இரண்டு பாடல்களுமே வாலி எழுதியது!
'சேரன் பாண்டியன்' என்று ஒரு படம். அதில் ஒரு பாடல். "காதல் கடிதம் வரைந்தேன்... " , மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடியது. சௌந்தர்யன் எழுத எஸ் ஏ ராஜ்குமார் இசை.
'காதல் கோட்டை' படம்.
தேவா இசையில் அகத்தியன் எழுதிய "நலம்.. நலமறிய ஆவல்..." எஸ் பி பாலசுப்ரமணியம் - அனுராதா ஸ்ரீராம் பாடியது.
'தேவா' என்று ஒரு படம். எஸ் பி பி குரலில் "ஒரு கடிதம் எழுதினேன்... என் உயிரை அனுப்பினேன்..." வாலி எழுதிய பாடல்!
'பல் பல் பல் தில் கே பாஸ்' (பல்லும், பாஸும் நீங்கள் நினைக்கும் அர்த்தம் அல்ல!) என்று ஒரு பாடல் ஹிந்தியில் உண்டு.
'பிளாக்மெயில்' என்கிற படத்தில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் கிஷோர் குரலில் அருமையான பாடல். தர்மேந்திரா எழுதிய லெட்டரை ராக்கி படிப்பதே பாடலாய்...
அஞ்சல் பெட்டி 520 என்று ஒரு படம். டி என் பாலு இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜா தேவி நடித்த படம். 1969 இல் வெளிவந்தது.
1970 இல் வெளிவந்தது 'தபால்காரன் தங்கை' திரைப்படம். ஜெமினியும் வாணிஸ்ரீயும் நடித்தது.
போஸ்ட்மாஸ்டர் பொன்னுசாமி என்று ஒரு படம் எடுத்திருக்கலாம்! எடுக்கவில்லை.
ஆனால் போர்ட்டர் பொன்னுசாமி என்று ஒரு படம் வந்தது. அதையும் நான் பார்த்துத் தொலைத்தது வேற விஷயம்.
இதிலேயே இன்னொரு சிந்தனை என்ன என்றால் போர்ட்டர் பற்றி தமிழில் வந்த ஒரே படம் போர்ட்டர் பொன்னுசாமிதான் என்று நினைக்கிறேன். அடியார் எடுத்து, நடித்தது. தேங்காய் சீனிவாசன் கதாநாயகன் என்று நினைவு. ஹிந்தியில் போர்ட்டர் சம்பந்தமாக அமிதாப் நடித்த 'கூலி' படம் வந்ததது!
இன்றைய வெட்டி ஆராய்ச்சி எதைப் பற்றி என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்! 2/4/20
வெட்டி 2020
====================================================================================
ஸ்ரீதரின் சுமாரான படங்களில் ஒன்று 'சௌந்தர்யமே வருக வருக..' எம் எஸ் விஸ்வநாதனையும் இளையராஜாவையும் விட்டு பழைய விஜயபாஸ்கர் இசை. அந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள். 'இதோ என் காதலி கண்மணி' வாலியின் பாடல்கள். 80 ம் வருடம் வெளிவந்த படம். நான் சங்கர் கணேஷ் இசை என்று எண்ணி இருந்தேன். S P பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரலில் பாடல்கள்.
=======================================================================================
சொர்க்கத்தின் அருமையை
உணர
ஒரு நரகம்
தேவையாயிருக்கிறது...
1/4/2013
வெயிலின் கொடுமை
நிழலில் தெரியும்!
கைத்தொழில் ஒன்றை
கற்றுக்கொள்
படிப்பு எதுவும் ஏறலை
ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும்
செய்யாமல்
திருமணம் நடப்பது
எளிதாமோ!
==============================================================================
இன்னும் அழகான இளமையான MGR...
சாகாவரம் பெற்ற கேரக்டர்கள்.. படம் பார்ப்பவர்கள் சட்டென பெயரைச் சொல்லி விடுவார்கள். ஒன்று...
இரண்டு...
======================================================================
ஒரு கிரிக்கெட்டரின் உறவாக இருப்பதிலோ இருக்கும் சிரமங்களையும் சொல்கிறார்!
நான் ரேகாவை முதல் முதலாகப் பார்த்தது கல்லூரியில்தான். பார்த்தவுடனேயே அவள் அழகால் கவரப்பட்டேன். மிகுந்த நாணமும் எளிமையும் கொண்டு விளங்கினாள். நேராகச்சென்று என் காதலை அவளிடம் வெளிப்படுத்த விரும்பவில்லை. எங்காவது பயந்து விடப் போகிறாளே என்றுதான்.
எனவே அவளுக்குத் தெரிந்த என் நண்பன் ஒருவன் மூலம் அறிமுகம் செய்துகொண்டேன். என் காதல் படிப்படியாக முன்னேறியது. அவளைச் சந்திக்க, பக்கத்திலுள்ள பல்வேறு உடுப்பி ஓட்டல்களுக்குச் செல்வேன். நடுத்தரக் குடும்பத்துக் காதவர்கள் அங்கு தானே சந்திக்க முடிகிறது!
அவள் கள் லூரியில் 'வாலி பால்' ளையாடுவாள். அவளுக்கு ஒரு 'ப்ளேஸர்' பரிசளித்தேன். அதில் அவன் மிகவும் எடுப்பாக இருந்தாள். அப்பரிசை என் காதலின் சின்னமாக ஏற்றுக் கொண்டாள். ஆயினும் திருமணத் துக்காக நாங்கள் நான்கு வருடம் காக்க வேண்டியிருந்தது. ஏனெனில், அவன் பட்டப் படிப்பை முடிக்க வேண்டி இருந்தது. அதன் பிறகுதான் என்னை மாப்பிள்ளை கேட்க முறையாக அவள் பெற்றோர்களை அனுப்ப முடியும்.
பம்பாயில் நான் விளையாடிய ஒருரஞ்சி டெஸ்ட் மாட்சைக் கூட ரேகா 'மிஸ்' பண்ணியதில்லை. ஒரு நல்ல இந்து மனைவியைப் போல, என் வெற்றியையும் தோல்விகளையும் சமமாகப் பாவிப்பாள். சொல்லப் போனால், எங்கள் திருமணம் நடந்த புதிதில் பொறாமை பிடித்த பக்கத்து வீட்டுக்காரர்களின் கேலிகளையெல்லாம் அவள் தாங்கிக் கொள்ன வேண்டியிருந்தது.
"சின்னச் சின்ன மாட்ககளிலெல்லாம் உன் கணவர் நன்றாக விளையாடுகிறார். டெஸ்ட் மாட்சுகளில் போயிடறாரு!" என்றெல்லாம் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவள் இதையெல்லாம் என்னிடம் சொன்னதேயில்லை.
நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் குழுவிற்குக் காப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறேன் என்று கூறியபோது அதை ரேகா நம்பவே இல்லை. ரேடியோவில் கேட்டுத்தான் அவள் பூரண நம்பிக்கை கொண்டாள்.
இந்த விளையாட்டில் ஏற்படும் வெற்றி. தோல்விகளைப் பற்றி அவளுக்குகுத் தெரியும்.
இந்த விளையாட்டில் ஏற்படும் வெற்றி. தோல்விகளைப் பற்றி அவளுக்குகுத் தெரியும்.
வெஸ்ட் இன்டீஸில் நான் விளையாடிய முதல் விளையாட் டில் தோற்றுப் போனதற்காக அவள் எவ்வனவோ கேலிகளையும் கிண்டல்களையும் ஏற்க வேண்டியிருந்தது. ஆனால் அவள் மனம் தளரவில்லை.
'கேப்டன்' வேலை எளிதல்ல என்று அவளுக்குத் தெரியும். பத்திரிகைகளில் வெளிவந்த 'கமென்ட்'களை மிக ஊன்றிப் படிப்பாள். உள்ளூர்ப் பத்திரிகைக்காரர்களின் நம்பிக்கையில்லா தன்மையை எண்ணி வருத்தப்படுவாள். எது நடக்குமோ அது நடந்துதான் தீரும்' என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது
நான் விளையாட 'பாட்'டை எடுத்து விட்டால் அவள் மிகவும் அமைதியற்று விடுவான். நான் பதின்மூன்றைத் தாண்டிய பிறகு தான் சிறிது அமைதியுறுவாள். எங்கள் திருமணம் நடந்தது ஒரு பதின்மூன்றாம் தேதி. அவளுக்கு காமெண்ட்ரி கேட்சுவே பிடிக்காது. அவள் ரேடியோவை 'ஆன்' பண்ணியதும் நான் தவறாமல் 'அவுட்' ஆகிவிடுகிறேனாம். நாங்கள் வெஸ்ட் இண்டீஸை வென்ற தினத்தில் இதுவரை எங்களைத் தாக்கி வந்தவர்களெல்லாம் என்னை 'ஓகோ' வென்று புகழ்ந்ததைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்ததாம்.
நாங்கள் 'ஓவலில்' விளையாடிக் கொண்டிருந்த போது அவள் என் தந்தையின் வீட்டில் இருந்தாள்.
அபிட் அலி கடைசி 'வின்னிங் ஸ்ட்ரோக்' அடிக்கும் வரை நாங்கள் ஜெயிப்போம் என்று அவன் நம்பவே இல்லையாம், ஒரு காப்டனின் மனைவிக்குரிய மகிழ்ச்சியுடன் மற்றவர்களின் பாராட்டுகளை அவள் ஏற்றுக்கொண்டாள்.
மற்ற எவ்வா கிரிக்கெட்டர்களின் மனைவிகளைப் போலவே, ரேகாவும் என்னுடைய சுற்றுப்பயணங் களுக்குத் தன்னைத் தயார் செய்து வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அவளுக்குக் கடிதம் எழுதி விடுவேன். வெண்ட் இன்டீஸிற்குக் காப்டனாகிப் போன பின்பு வார முடிவில் ஒரு பெரிய கடிதம் எழுதத்தான் முடிந்தது. இங்கிலாத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட போஸ்டல் ஸ்டிரைக் காரணமாக என் நலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவன் பத்திரிகைகளைத்தான் நம்பவேண்டி யிருந்தது.
ஒரு கிரிக்கெட் வீரனின் வாழ்வில் இது தவிர்க்க முடியாதது. நாளெல்லாம் விளையாடிக் கொண்டிருந்து விட்டு வரும் நாங்கள் ஒரு ட்ரிங்க்கைக் குடித்து விட்டு, எல்லோரும் வீட்டில் நலமாக இருப்பார்கள் என்று நம்பித்தான் காலம் கழிக்க வேண்டும். எனக்குத் தெரி த்த கிரிக்கெட் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு வழக்கமாக எழுதுவதையெல்லாம் எழுதி விட்டுக் கடைசியில் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' (I love you) என்று மூன்று முறை எழுதி விடுவார்.
ரேகா மிகவும் அமைதியானவள். பொறுமைசாலி, இந்த நாட் டிற்காக என்று வரை நான் விளையாடத் தகுதியுள்ளவனோ. அன்று வரை விளையாட என்னை அவள்
அனுமதிப்பாள்.
இல்லஸ்டிரேட்டட் லீகலியில் அஜீத் வடேகர்.
பிரேமா இருஷ்ணன் - தினமணி கதிர் 1970
================================================================================
பார்க்கும்போது நானும் ரசித்த வசனம் அது...
புதுக்கவிதையின் ஒரிஜினல் ஒரு கன்னடப்படம். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காட்சி. இடைவேளையின்போது பிரிந்து விடும் கதா நாயகன் கதாநாயகி இடைவேளைக்குப் பின் ஒரு ஸ்கூல் காட்சியில் சந்திக்கிறார்கள் யதேச்சையாக. நாயகி கையைப் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தை. இருவராலும் பேச முடியவில்லை. மௌனமாகக் கிடக்கிறார்கள். காட்சியில் டயலாக் கிடையாது.
பார்த்துக் கொண்டிருந்த பாலச்சந்தர் "விசு.. .. பார்த்தியா.? நீயா இருந்தா இங்கேயும் டயலாக் போட்டு சாகடிப்பியே" என்று சொல்லி இருந்திருக்கிறார்.
கேட்டுக்கொண்டிருந்த விசு சற்று மௌனத்துக்குப்பின் "டயலாக் போட்டாலும் நல்லாயிருக்கும்" என்று சொல்லி இருக்கிறார். மணியடித்து படத்தை நிறுத்தி விட்ட கேபி விசுவுக்கு செம அர்ச்சனை செய்திருக்கிறார். அங்கு அப்போது ரஜினியும் இருந்திருக்கிறார்.
புதுக்கவிதை எடுக்கும் நேரம்.. அந்தக் காட்சி வரும்போது விசு ஒரு பேப்பரில் "இந்தக் காட்சிக்கு டயலாக்கே வேண்டாம் . டயலாக் வச்சா நான் செத்தேன்" என்று எழுதி அப்படியே எஸ் பி எம்மிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விட்டாராம்.
வேறு ஒரு படப்பிடிப்பில் விசு இருக்க, காலை 10.30 , மதியம் 1 மணி என்று அந்த படப்பிடிப்பிலிருந்து விசுவைத் தேடி ஆள் வந்து கொண்டே இருந்ததாம். இவர் எவ்வளவு சொல்லி அனுப்பியும் கேட்காமல் ரஜினி அந்த நபரிடம் பழைய பின்கதை முழுக்கச் சொல்லிக் கேட்டும் இவர் டயலாக் எழுதித் தரவில்லை. மூன்று மணிக்கும் ஆள் வந்தபோது
"அவர் டயலாக் கொடுக்காமல் இன்று பேக்கப் ஆகாது" என்று சொல்லி விட்டதாகச் சொன்னாராம். விசு சிகரெட் அட்டையில் எடுத்து எழுதிக் கொடுத்துவிட்டு அப்புறம் மறந்து விட்டாராம்.
படத்தின் பிரிவியூ.
இவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்தக் காட்சியும் வந்தததாம். அப்போது இது நினைவுக்கு வர ரஜினியிடம் குனிந்து கொண்டே போய் "சேர்த்திருக்கிறீர்களா?" என்று கேட்க அவர் கட்டை விரலை உயர்திக் காட்டினாராம்.
காதல் தோல்விக்குப் பின் ஜோதி ரஜினியிடம் 'பேசியது போதும், நான் கிளம்பவா' என்று கேட்பது போல "நான் போகலாமா" என்று கேட்க, ரஜினி "அதுதான் ஏற்கெனவே போயிட்டியே" என்பாராம்.
குனிந்துகொண்டு முன்வரிசையில் அமர்ந்திருந்தார் விசு.
மறுபடியும் மணி அடித்து விட்டாராம் கேபி, பயந்துபோய்ப் பார்த்தால் கேபி சொன்னாராம் "என்னடா... டயலாக் எழுதினாலும் நல்லாயிருக்கு" என்றாராம். ரஜினி எழுந்து வந்து விசுவுக்கு கைகொடுத்து பாராட்டினாராம்.
=====================================================================================
அந்தப் பத்தாயிரம் ரூபாயை அப்புறம் என்னதான் செய்தார்களாம்? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்தான் கேட்கவேண்டும்!
பூட்டோ தந்த பத்தாயிரம் ரூபாய் - சிம்லாவில் ஒரு சிக்கல்
கடந்த ஜூன் மாதம். சிம்லா மகாநாடு நடைபெற்றதல்லவா? அப்போது, அதிபர் பூட்டோ, தன்னைக் கவனித்துக்கொண்ட அதிகாரி கள், செக்யூரிடி ஊழியர்கள். பணியாட்கள் ஆகியவர்களுக்கு இனாம் கொடுக்கும்படி சொல்லி பத்தாயிரம் ரூபாயை இமாசலப் பிரதேஷ் அரசிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் இதுவரை 'டிப்' பணம் யாருக்கும் தரப்பட வில்லையாம்!
யார், யார், அதிபர் பூட் டோவைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம், மாநில அரசினால்!
இப்போது புதுப் பிரச்னையும் முளைத்திருக்கிறது. இந்த எட்டு மாதத்தில் சேர்ந்திருக்கும் வட்டித் தொகையை என்ன செய்வது?
1970 தின். கதிர். வ .ரா
=====================================================================================
ஆகாயம்தானே அழகான கூரை...
==================================================================================
இதில் என்ன ஜோக் என்று எனக்குப் புரியவில்லை.
'இருக்கும் நிலயிலேயே. உம்மை நான் வேவைக்கு வைத்துக்கொண்டால் ஜெர்மன் ரகசியப் போலீசார் உம்மைக் கண்டுபிடித்து விடுவார்கள். நீங்கள் ஒரு கொரில்லா (மனிதர்க குரங்கு) தோளை போர்த்திக்கொண்டு சர்க்கஸில் நடிப்பதாயிருந்தால் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்' என்றார் சர்க்கஸ்காரர்.
அப்படியே அந்தக் கைதியும் உண்மையான மனிதக்குரங்கைப் போல நடித்து வந்தார்.
ஒருநாள் இரவு சர்க்கஸிலிருந்து சிங்கம் ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந் தது, அதைப் பார்த்ததும் அவர் தாம் குரங்கு வேடம் போட்டிருப்பதை மறந்து, "ஐயோ, சிங்கம்! சிங்கம்" என்று அலறிவிட்டார்!
சிங்கம் அதைப் பொருட் படுத்தாமல் அவர் அருகில் வந்து கேட்டது
சிங்கம் அதைப் பொருட் படுத்தாமல் அவர் அருகில் வந்து கேட்டது
"அட பைத்தியமே! ஏன் இப்படி அலறுகிறாய்? இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கும் யுத்தக்கைதி நீ ஒருத்தன் மட்டும்தானா?"

























கலர் நகைச்சுவைகள், படித்திருந்தபோதும் நன்றாக ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குஅதற்குப் பிறகான நகைச்சுவைகள் ரொம்பவே சுமார்.
வாங்க நெல்லை.. சந்தேகத்தோடேயே வெளியிட்டேன். தேவையானால் நீக்கி விடலாம் என்றுதான் கூடுதலாகவே சேர்த்தேன்.
நீக்குபுதுக்கவிதை வசனம் நிகழ்வு சுவாரசியம்.
பதிலளிநீக்குஆமாம், அந்த பேட்டியில் விசுவின் குரல் கேட்டு அதிர்ந்து போனேன். அவர் குரல் இல்லை அது. கேன்சரிலிருந்து மீண்டு வந்திருந்தார்.
நீக்குஅந்த ஒரு வரி வசனம் எனக்கு மிக மிக மிக மிக பிடிக்கும். அருமையா அந்த இடத்தில பொருந்தி இருக்கும்.
அஜித் வடேகர்... காதல் கதை, மனைவியின் கஷ்டம்... இதுவரை படித்திராத்து.
பதிலளிநீக்குவிராட் எஓஹ்லியின் மனைவி என்ன பாடு பட்டிருப்பாரோ... அவரைக் காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் கோஹ்லியின் கேரியர் கீழே இறங்கியது. அனுஷ்கா மைதானத்தில் இருந்தாலே கோஹ்லி இரட்டை இலக்கம்கூட அடிக்க மாட்டார் என்ற நிலை இருந்தது.
ஹா.. ஹா.. ஹா.. சிதறும் கவனமா! இப்படி ஒவ்வொரு கிரிக்கெட்டரும் தன் காதல் கதை சொன்னால் சுவாரஸ்யம்தான்!
நீக்குசிதறும் கவனமில்லை. கம்பெனி காசில் வாழ்க்கையை எஞ்சாய் செய்யத்தான்.
நீக்கு:))
நீக்குஇரண்டாவது படம் பீமாரசகுண்டுவா?
பதிலளிநீக்குபீமா இல்லை ரசகுண்டு!
நீக்குஅதான் ஜெயராஜ் முத்திரை தெரியுதே!
நீக்குஸ்ரீராம், ஆதி நல்லா நடிக்கிறார். ஈரத்திலும் நடித்திருந்தார் இல்லையா? அப்படத்தை சென்னையில் இருந்தப்ப உறவினர்களின் தயவில் பார்த்ததால் தெரிந்தது. மற்றும் சில க்ளிப்பிங்க்ஸ் அவர் நடித்திருந்த அரவான்? படம் முழுவதும் தெரியாது பார்த்ததில்லை, பார்த்ததில் ஒன்றிரண்டு சீன்ஸ் நல்லா நடித்திருந்தது தெரிந்தது.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா... ஆர்தடாக்ஸா முதல்லேருந்து கிரமமா வர்றது நேக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!!!!
நீக்குஆமாம், அதே ஆதிதான். அரவான் கொஞ்சம் போர். கொஞ்ச நாள் முன்பு அவர் நடித்த 'டிரைவ்' படம் பார்த்த அனுபவம் போட்டிருந்தேன், ஞாபகமிருக்கா?
நான் முழுதும் அல்லது படித்தவரை, மனதில் முதலில் தங்குபவற்றிர்க்கு ஏற்றவாறு கருத்துகள் எழுதுவேன்.
நீக்குok.. pk.. ஒரு பற்றவைக்கும் நரம்பில்தான் அப்படிச் சொன்னேன். :))
நீக்குவாங்க கீதா... ஆர்தடாக்ஸா முதல்லேருந்து கிரமமா வர்றது நேக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!!!! //
நீக்குஹாஹாஹா... ஸ்ரீராம், முழு பதிவும் ஒரே சமயத்தில் உட்கார்ந்து பார்ப்பது வாசிப்பது சிரமம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்பதால் ஒவ்வொரு பகுதியாக இடையிடையே பார்த்து கமென்ட்!!
எல்லாம் கவர் செய்துவிட்டேன்னு நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!
கீதா
இன்னும் முதலில் ஸ்ரீராம் போட்டிருக்கும் விமரிசனத்துக்குப் பதில் சொல்லலை. யார் இந்த ஆதி? சிரிக்காமல் சொல்லுங்க. அவர் நடிச்ச ஏதேனும் பிரபலப்படங்கள்? கேபிள் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்னால் சென்னை தூர்தர்ஷனில் தினம் பகல் பனிரண்டு மணிக்கு சுஜாதாவின் கொலையுதிர்காலம் தொடராக வந்துட்டு இருந்தது. அதில் கணேஷ், வசந்த் வருவார்கள். வசந்தாக அதில் ஆதிராஜ் என்னும் சின்னத் திரை நடிகர் நடித்திருப்பார். எனக்கு அவர் நினைவு வந்தது, பின்னர் அவரே ராஜ் டிவியிலும் பல தொடர்களில் வந்திருந்தார்.
நீக்குஒரு ஜூசுக்கு கேஸ் வரி போட்டதும் சமீபத்தில் நடந்ததே.
பதிலளிநீக்குபஹ்ரைனில் ஃப்ரைடு நூடுல்ஸ் வாங்கி நொந்துபோனது நினைவுக்கு வருது
விராட்டி, பழைய சாதம் எல்லாம் விற்பனைக்கு வந்து விட்டது. அதன் பெயரைப் பார்த்து கண்டு பிடிக்க முடிந்தால் சரி!
நீக்குஆதியின் முதல் படம் ஏடாகூடம் (அமலாவுடன்?) என நினைவு. நல்ல நடிகர்.
பதிலளிநீக்குஅமலாவுடனா? இல்லையே... அமலா இவருக்கு சீனியர். முதல் படம் எது என்று நினைவில்லை.
நீக்குகவிதை ஈர்க்கவில்லை, ரொம்பத் தெரிந்த பழமொழி என்பதால்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. தெரியாத பழமொழி சொன்னாலும் புரியாதே... மேலும் அதற்கு நானெங்கே போவேன்!
நீக்குஅப்பளம் - சிரித்துவிட்டேன். ஏனுங்க ஹோட்டலுக்கு போறப்ப புச்சா ஒரு ஐட்டம் பேரு கீதே...அது இன்னான்னு கேட்டுக்க வேணாம்? நான் கேட்டுக் கொண்டுவிடுவேன்!!!! சும்மா பேரில் மயங்கி - plant-based adaptations of classic comfort foods - ஆர்டர் செய்து அப்புறம் "அட ச்சே...நம்ம வீட்டுல்ல செய்யற பச்சை கறிகாய் சலாட்.....இதுக்கா இந்தப் பெயர்" என்று காசு மேல காசு போட்டு கொடுத்து....நன்றாக வழிந்துவிட்டு நொந்து வரவேண்டிவரும்! Old win in a new bottle! கேஸ்தான்
பதிலளிநீக்குகீதா
old wine in a new bottle!
நீக்குகீதா
அது in a new Glass இல்லையோ? ஆமாம், புதுப் புது பெயரகளில் விற்பனை செய்து குழப்புகிறார்கள்!
நீக்குஓ! அந்த அளவுதான் தராங்கன்னு சொல்றீங்களா!!! ஹாஹாஹா
நீக்குகீதா
இப்ப புதுசா, நாங்க மிக்ஸில அரைக்கறது இல்ல....உரல்ல, அம்மில தான் அரைச்சு செய்யறோம்னு, conventional அப்படினு ஒரு முற்றம் உள்ள வீடு போல ஒரு கட்டிடம் அங்கங்க அண்டா குண்டா எல்லாம் வைச்சு.... விலைய கூட்டி விற்பதும்....வாழ்க்கை முறையே மாறிவருகிறது. அது சரி இத்தனைக்கும் காசு கொடுக்கவும் மக்கள் இருப்பதைப் பார்க்கும் போது அட! நம்ம பொருளாதாரம் நல்லா வளர்ந்திருக்கோ? என்று நினைத்தால்....இங்கிருக்கும் ஏரிக்கரையில் இருக்கும் ஒரு குடிசைக் காலனி நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குகீதா
மக்கள் புதுசா எதைப் பார்த்தாலும் வாங்கிப் பார்க்கும் மூடில் இருக்கிறார்கள்... பணப்புழக்கம் கொஞ்சம் அதிகம்தான்!
நீக்குபணப் புழக்கம் ரொம்பவே அதிகம். வீட்டுக்குத் தேவையான மசாலா பொடி முதற்கொண்டு ஆன்லைன் கம்பெனிகளிடம் வாங்கறாங்க. எதையும் நாம செஞ்சுப்போம்னு நினைக்கறதில்லை.
நீக்குநான் கும்பகோணம் போனால் மங்களாம்பிகா இட்லி மிபொடி பாக்கெட் வாங்குவேன். இந்தத் தடவை அவங்க சொன்னாங்க, ஆன்லைன்ல ஏகப்பட்ட ஆர்டர் குவியுது என.
எனக்கென்னவோ மங்களாம்பிகாவில் பழைய சுவை இருப்பதாகத் தோன்றவில்லை.
நீக்குமுன்னால் இருந்தவரின் பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் கும்பகோணத்திலேயே இன்னொரு தெருவிலே மெஸ் வைச்சு நடத்தறாங்க. குறிப்பிட்ட நேரம் வரை தான் சாப்பாடு கிடைக்கும். முன்னாடியே சொல்லிட்டுப் போகணும். இவங்களைப் பத்தி முன்னரே சொல்லி இருந்தேன். காமாட்சி ஜோசியர் தெருனு நினைக்கிறேன். ஓட்டல் கை மாறிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஒன்றிரண்டு சர்வர்கள் மட்டும் பழைய ஆட்கள் இருந்தனர் வாடிக்கையாளர்கள் அவங்களைப் பார்த்துட்டு வருவாங்க என்னும் எண்ணத்தில் நு நினைக்கிறேன். நாங்க அங்கே போவதை நிறுத்திப் பல வருடங்கள் ஆச்சு. இப்போக் கும்பகோணம் போயே ஐந்தாறு வருடங்கள்.
நீக்குஇங்குதான் இன்னொரு சிரமமும் வருகிறது. நாம் வைத்த பெயர்களில் நமக்குத் தெரிந்தவர் இருந்தால் நாம் வைத்திருக்கும் பெயரால் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று தோன்றும்//
பதிலளிநீக்குயெஸ் ஹைஃபைவ்! மீக்கும் ரொம்பத் தோன்றும். அது போல ரொம்ப வழக்கமான பெயர்களை வைப்பதும் ஏனோ என் மனதிற்கு ஒப்புடையதாய் இல்லை. நீங்கள் சொல்லிருப்பது போல் குணாதிசயங்களுக்கு ஏற்ப ஒரு பெயர் முதலில் நினைவுக்கு வந்துவிடும் ...அதையே வைத்தால் சில சமயம் கதை எழுதி வரும் போது அந்த ஓட்டத்தில் ச்சே இப்பெயர் பொருத்தமா இல்லையே என்றும் தோன்றியதுண்டு!
கீதா
அதேதான். ஆனால் சமீபம் வரை நீங்கள் நான் வைக்கும் பெயர்களை பார்த்திருக்கிறீர்கள். ஏதாவது தோன்றி இருக்கிறதா?
நீக்குஒரு தடவை இங்க எழுதின ஒரு கதைல, இங்கு வரும் ஒரு எழுத்தாளரின் பேர் அமைந்து, அது வேண்டும் என்றே செய்ததா என அவர் கேட்கும் நிலைக்குப் போனது.
நீக்குஅச்சச்சோ... யார் எழுதியது? நானா?
நீக்குநான். என் நண்பனுக்கும் எனக்கும் நடந்த அனுபவத்தை அதீதமாக்கி எழுதியது.
நீக்குஅப்படியா? படிச்சதே இல்லையே?
நீக்குபானுமதி ந கதையில் நீங்க கேட்டிருந்தது நல்லா நினைவு இருக்கு ஸ்ரீராம்.
பதிலளிநீக்குபெயர் சாகேத ராமன் என்று நினைவு. காரணம் சலமேலரா கீர்த்தனையை சாகேதராமன் பிறப்பதற்கு முன் அவன் அக்காவிற்கு வாத்தியார் வீணையில் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருட்ந்ததார் அன்று இரவு 3 மணிக்குப் பிறந்ததால் அதனால் அப்பெயர் என்று கதையில் வரும்
கீதா
ஆமாம். சாகேத் ராமன். வேறு ஏதாவது பெயர் இருந்திருந்தால் கேட்டிருக்க மாட்டேன். விசேஷமான பெயர் என்பதால் கேட்கத் தோன்றியது. இந்த என் கட்டுரையை இன்னும் விவரித்து எழுத எண்ணி இருந்தேன். நேரமின்மை காரணமாகவும், மற்ற அரட்டைகளுக்கும் இடம் கொடுக்கவும் சுருக்கி விட்டேன்!!!
நீக்குரேடியோவில் கமென்டரி கேட்ட காலம். கேட்கும்போது மனக்கண்ணில் திரை நோட்டமாய் அனுபவித்த காலம். அந்த நாளும் வந்திடாதோ.... வடேகர் அணி தலைவன் பதவியை தக்க வைத்து கொண்ட காலம்.
பதிலளிநீக்கு//இதில் என்ன ஜோக் என்று எனக்குப் புரியவில்லை.// கொடுக்குற காசுக்கு சொட்டு கூட விடாமல் முறுக்கிப் பிழிந்து எடுக்கிறாராம்.
//வெயிலின் கொடுமை
நிழலில் தெரியும்!// ஆமாம். தன்னுடைய நிழலில் தான் நிற்கமுடியாதபோது கட்டாயம் தெரியும். ஆனால் வெயிலின் அருமை சிம்லாவில் தெரியும். அங்கெ போனவர்களுக்கு. //
Jayakumar
வாங்க JKC ஸார்...
நீக்குஓ.. ஜோக் புரிந்தது!
தன் நிழலில் தான் நிற்க முடியாததைப் பற்றி நானும் முன்பு எழுதியிருந்தேன்!
ஆமாம், முறுக்கிப் பிழிந்து எடுப்பது இப்போதைய பெட்ரோல், டீசல் பற்றாக்குறைக்குப் பொருந்தி வரும் ஜோக். நான் அதைக் கவனிக்க மறந்திருக்கேன்.
நீக்குஸ்ரீராம் நானும் பெயர் இல்லாமல் கதைகள் எழுதியதுண்டு! எபி யில்...தேவையே இல்லாமல் நகர்ந்துவிடும்!
பதிலளிநீக்குகீதா
ஆமாம். நாம் எல்லோருமே எழுதி இருப்போம் என்று நினைக்கிறேன்.
நீக்குபடத்துக்கான கதைகள் எனக்கும் உடனே வருகின்றன ஆனால் ஆரம்பத்தில் எழுதினேன் ஆனால் இப்ப எழுதவில்லை காரணம் நான் அந்தக் குழுவில் இல்லையே!
பதிலளிநீக்குகீதா
தெரியுமே...
நீக்குநலம் நலமறிய ஆவல் பாடல் நல்ல இசை..நல்ல ஹிட் பாடல் என்று நினைக்கிறேன் இருவருமே நல்லா பாடியிருப்பதும்...
பதிலளிநீக்குகீதா
புரியவில்லை கீதா. அந்தப் பாடல் பற்றி ஏன் இங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே...
நீக்குசென்று மறுபடி பார்த்ததில் வெட்டி அரட்டையில் வந்தது என்று புரிந்தது!!!
நீக்குவெட்டி ஆராய்ச்சியில் ஒரு சில தெரிந்தது ஒரு சில தெரியாதவை. படங்களும் தான்.
பதிலளிநீக்குகீதா
பானுக்கா சொல்லியிருக்கும் கண்மணி அன்போடு பாடல் நினைவுக்கு வந்தது. அப்புறம் கைக்குட்டைக் காதல் கடிதம்னு கண்ணுக்குள் நூறு நிலவா....
நீக்குகீதா
ஆமாம். அப்புறம்தான் இப்படி சில பாடல்கள் நினைவுக்கு வந்தன!
நீக்குசொர்கம், நிழலின் அருமை இரண்டும் ஒரே பொருள் கொண்டது எனலாம் இல்லையா ஸ்ரீராம்?
பதிலளிநீக்குபொதுவாகப் பார்த்தீங்கனா இதன் உள் அர்த்தம் வாழ்வியலோடு பொருந்திய ஒன்று எனலாமோ? இளம் வயதில் உழைத்துவிட்டால் பின்னாளில் சுகமாக வாழலாம். சிலர் இளம் வயதில் உழைக்காமல் பின்னால் வருந்துபவர் உண்டு. உழைப்பு அறிவு இருந்தாலும் வருவதை நிர்வாகம் செய்யும் திறன் இருந்தால் பின்னாளில் நல்லதே. தன் கையே தனக்குதவி என்று வாழ்ந்திடலாம்.
கீதா
அப்படியும் பொருள் கொள்ளலாம்!
நீக்குபொதுவா பத்து வருடங்களுக்கு ஒரு முறை வாழ்க்கை மாறும்.சின்ன வயசுல செல்லமா வளர்றவங்க திருமணமாகி கஷ்டப்படறதும், உல்டாவும் நடக்கும். எப்போதுமே கஷ்டப்படறவங்க, வரம் வாங்கிட்டு வந்திருப்பாங்க.
நீக்குஉதாரணத்தோடு விளக்கவும்!
நீக்கு//எப்போதுமே கஷ்டப்படறவங்க, வரம் வாங்கிட்டு வந்திருப்பாங்க// What to say? :(
நீக்குஎத்தொழில் எதுவும்
பதிலளிநீக்குசெய்யாமல்
திருமணம் நடப்பது
எளிதாமோ!//
ஹாஹாஹா ஸ்ரீராம், அதெல்லாம் நடக்குதே சின்ன ஊர்களில், கிராமங்களில்...அப்புறம் கடன் குடி அது இதுன்னு....வாழ்க்கை சீரயழியவும் செய்கிறது.
மூன்றும் தொடர்புடைய முதல் இரண்டும் கிட்டத்தட்ட நாம் கேட்டவை....மூன்றாவதோடு ஒரே பொருள் பொதிந்தவை.
கீதா
மூன்றாவது எதன் உல்ட்டா என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
நீக்குஇந்த எம் ஜி ஆர் படம் தானே முன்னர் வந்தது இல்லையோ?
பதிலளிநீக்குஜஸ்டிஸ் ஜகன்நாதன்?
ரசகுண்டு?
கீதா
எம் ஜி ஆர் படம் இப்ப சமீபத்துல ஷேர் செய்துட்டேனா என்ன? அப்படி செய்தா உடனே என்கிட்டே இருக்கற ஸ்டாக்கை அழிச்சுடுவேன். நீக்கி விடவா?
நீக்குகேரக்டர்ல ஒண்ணு ரைட்டு, ஒண்ணு தப்பு!!
கிரிக்கெட்டர் வடேகர் அவர்களின் கதை சுவாரசியம். இது வரை அறியாத ஒன்று. புகழில் இருக்கும் எல்லாருடைய மனைவிகளுக்கும் சரி, கணவன்மார்களுக்கும் சரி (மனைவி புகழில்) கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் என்று நினைத்ததுண்டு. மனைவிகளுக்கு ஒருவிதம் என்றால் கணவன்மார்களுக்கு இன்னொருவிதம். மனைவி புகழின் உச்சத்தில் இருந்தால் கணவனுக்கும் மனைவிக்கும் ஈகோ க்ளாஷ் வராமல் இருக்கும் அளவு நல்ல புரிதல் இருந்தால் மனைவியை ஊக்கப்படுத்தும் கணவன் இருந்தால் வாழ்க்கை ஓடிவிடும்.
பதிலளிநீக்குகீதா
இவர்கள் புரிதலுள்ள தம்பதியர் என தெரிகிறது!
நீக்குஆமாம், ஸ்ரீராம்
நீக்குகீதா
வசனம் பற்றிய நிகழ்வும் அவர் சொன்னதில் தெரிந்தது.
பதிலளிநீக்குரொம்ப ஆப்ட் அண்ட் அந்தக் காட்சிக்கு நறுக்குனு short and புதுக்கவிதைக்கு ஏற்ப கொஞ்சம் கவித்துவமான வசனம். ரொம்பப் பிடித்தது
கீதா
விசு வின் இந்தப் பேட்டி கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். விசுவின் குரல் ஆச்சரியம்...எப்படிக் கணீர்னு அழுத்தமா இருக்கும்...இல்லையா? கேன்சர் என்றதும் அப்பதான் தெரிந்தது. புதுக்கவிதை படம் பத்தி தெரியாதா? இந்த
நீக்குஇதுதான் கருத்தின் ஆரம்பம். அந்த ஐடி போட மறுத்ததால் இந்த ஐடிக்கு வந்து போட அதைக் காப்பி பேஸ்ட் செய்யறப்ப பகுதிதான் காப்பி ஆயிருந்திருக்கு. நான் அதைக் கவனிக்காமல் இங்க போட்டுட்டு!!! ஹிஹிஹி
கீதா
ஆமாம். வசனம் அவ்வளவு 'பச்' என்று மனதில் பதியும். விசுவின் குரல் மட்டும் கேட்டால் அவர்தான் பேசுகிறார் என்றே நம்ப முடியாது.
நீக்குஇப்ப அந்தப் பத்தாயிரம் எம்மாம் பெரிசா ஆகிருக்கும் இல்லையா?
பதிலளிநீக்குஅட! அப்ப டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் இல்லைனா அப்ப பூட்டோதான் அந்தக் கலாச்சாரத்தைத் தொடங்கியவரோ?
கீதா
May be அவரும்...!!
நீக்குஎல்லாத்திலேயும் ஊழல்!
நீக்குபாட்டு கேட்டுவிட்டு வருகிறேன். 10 மணிக்குப் பிறகுதான் எனக்கு நல்லகாலம் பிறக்கும்!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா... பத்து மணிக்கு நான் பத்திரிகை வேலையாகவும் பல் ஆஸ்பத்திரிக்கும் கிளம்புகிறேன்!
நீக்குநல்ல காலம் பிறக்குது ஜோக் ஏற்கனவே வந்துவிட்ட நினைவு. இது இங்கு எபியில்.
பதிலளிநீக்குஅதே போல புடவை ஜோக்கும் - இங்கா அல்லது குழுவிலா? புடவை ஜோக் இப்ப பார்த்தாலும் புன்சிரிப்புதன. எப்பவும் இப்பவும், ஏன் தேவலோகத்துக்கே கூடப் பொருந்தும்!!!!!!!!
கிழமைகளை கிரகத்தின் பெயரைச்சொல்லி பிஸி என்ற ஜோக் ரொம்ப ரசித்தேன்1
பாதிக்கப்பட்டவன் ஜோக்கும்...
ஸ்வீட் அம்புட்டு பழசு போல! ஆனால் நிஜமாகவே ஸ்வீட் கடைகளைப் பார்க்கறப்ப தோன்றும் இத்தனையும் செல்வழியுமா? இல்லைனா என்ன செய்வாங்க எப்பவும் இதே போலதானே இருக்கின்றன என்று.
பெட்டியிலிருந்த பணம் புதுப்புடவைக்குள் ஒளிஞ்சுருக்குன்னு அந்த அப்பாவி கணவனுக்குத் தெரியலை போல!!
கீதா
விதி கொடிது!!!! செம ஜோக்!
பதிலளிநீக்குகீதா
மெக்கானிக் ஸ்விட்ச் ஜோக்கும் இங்கா குழுவிலா...பார்த்த நினைவு. ஆனா செமையா யோசிச்சிருக்காங்கப்பா!!!
பதிலளிநீக்குஸ்ரீராம், எனக்கும் அந்த ஜோக் புரியவில்லை நீங்களும் புரியவில்லை என்று சொல்லியிருக்கும் அதே ஜோக்...
பாய் மரக்கப்பல்!!!!!!!!
கடவுள் சிலை - கொஞ்சம் புன்சிரிப்பு!
யுத்த கைதி - யூகிக்க முடிந்துவிட்டது! இது உண்மையாக இருந்திருக்குமா இல்லையோ ஆனால் எப்படி எல்லாம் மக்கள் அவதிப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கீதா
அஜித் வடேகரின் பேட்டிக் கட்டுரையில் எக்கச்சக்கமான எழுத்துப் பிழைகள். கருத்துப் பிழைகள். :( யாராவது பார்த்திருப்பாங்க தான். இருந்தாலும் கண்ணில் பட்டதால் இதை முதலில் சொல்லிடறேன். வடேகரெல்லாம் எழுபதுகளில் விளையாடும்போது எங்க மின்வாரிய அலுவலகம் அருகே இருந்த தெருவில் அப்போது இருந்த பிரபலமான ஓட்டலில் கிரிக்கெட் வீரர்கள் தங்குவார்கள். அந்தத் தெருவிலேயே அவங்களைப் பார்க்க ஒரே கூட்டமாக இருக்கும். கன்னிமரா ஓட்டலோ? சரியா நினைவில் இல்லை.
பதிலளிநீக்குவெட்டி ஆராய்ச்சி ஓகே. உங்கள் கவிதையில் இந்த முறை கவிதைத்துவம் தெரியலை. வெறும் உரைநடையை மடக்கிப் போட்டாப்போல் இருக்கு. சாகாவரம் பெற்ற காரக்டர்கள் படங்கள், மற்றும் கதைகளின் நாயக, நாயகியருக்குப் பெயர் சூட்டும் வைபவம் எல்லாம் நல்லாய் இருக்கு. ஸ்ரீதரின் டைரக்ஷனில் இப்படி ஒரு படம் வந்திருந்தது தெரியவே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குமிளகு அப்பளம் பற்றி முன்னரே வேறே எதிலோ படிச்சுட்டேன். ஆனால் முகநூலில் இல்லை.
பதிலளிநீக்குஅடுத்த பாடலோ, காட்சியோ தெரியாத ஒன்று.
நகைச்சுவைத் துணுக்கில் தாணு வரைஞ்ச இந்த விகடன் அட்டைப்படத்தோடு கூடிய பைன்டிங் ஏதோ ஒரு தொடர்கதை பைன்டிங்கில் சித்தப்பா வீட்டில் இருந்தது. அந்தக் காலக் குமுதத்தில் (குமுதம் ஆரம்பித்த நாட்களில் குமாரி என்னும் பெயரில் ஒரு கார்ட்டூன் தொடர் குமாரி எனப் போட்டு தாணு என்னும் கையெழுத்தோடு வந்து கொண்டிருந்தது.) புடைவைக்காரர் ஜோக்கைப் பல வடிவங்களில் பார்த்துப் படிச்சாச்சு.
ஜெயில் கைதியும் படிச்சதே. ஹிஹிஹி, அந்தக் கால விகடன் விகடன் தான் உண்மையாவே. :)) நகைச்சுவைத் துனுக்குகள் பக்கம் பகிர்வு படிக்காத ஒன்று. அதிலும் கடைசியில் கணவன் கெஞ்சுவது ஹெஹெஹெ
ஸ்விட்ச் போர்ட் ஜோக்கைப் பல முறை படிச்சாச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பெட்ரோல் நிரப்பும்போது வாயில் சிகரெட்டா? அதான் அந்த வண்டிக்காரர் நடுங்கறார். பையர் நிஜம்மாவே கெட்டிக்காரர் தான் போல. பாய்மரக்கப்பல் தெரிஞ்சிருக்கே.
திருட்டிலும் ஒரு நியாயமா? தேவை தான். நடிகை பயப்படும் ஜோக் அந்த நைஞ்ச பேப்பரைப் போல அரதப் பழசு. கடைசி மனிதக்குரங்கும் சிங்கமும் பல முறை சிரிப்பு மூட்ட முயன்று தோற்றவைதான்.