நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 23
தன்னுடைய ஆச்சார்யராகக் கொள்ளத்தக்க திருக்கச்சி நம்பியின் உச்சிஷ்டம் தனக்குக் கிடைக்கக் கொடுத்துவைக்கவில்லையே, அவருடைய பெருமையை நம் தேவியார் அறிந்துகொள்ளவில்லையே என்று வருந்தினார் இளையாழ்வார்.
இது நடந்த மற்றைய நாளில், இளையாழ்வார், திருக்கச்சி நம்பியின் மட த்திற்கு எழுந்தருளி, “அடியேன் சில நினைவுகளைக் கொண்டிருக்கிறேன். அவற்றிர்க்கான விடைகளை தேவரீர் பெருமாளிடம் விண்ணப்பம் செய்து அடியேனுக்குப் பெற்றுத்தர வேண்டும்” என்று சொன்னார்.
திருக்கச்சி நம்பி அன்று இரவு பெருமாளுக்கு திருவாலவட்டம் சேவித்துக்கொண்டிருந்தார். நேரம் கழிந்தபிறகும் கைங்கர்யத்தை நிறுத்தவில்லை. தேவப்பெருமாளும், ஏதோ என்னிடம் சொல்லத் துடிப்பது போலத் தெரிகிறதே என்று கேட்க, திருக்கச்சி நம்பியும், ‘இளையாழ்வார் சில நினைவுகளை நினைத்தேன் அதற்கான விடைகளை தேவரீரிடம் கேட்டு வரவேணும் என்று சொல்லியிருக்கிறார். அவற்றை நீங்கள்தாம் அருளிச்செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து நின்றார்.
அதைக் கேட்ட தேவப்பெருமாள், “அவர் நம்மிடம் மிக்க அன்பு உடையவர். நம் எண்ணங்களைப் பின்பற்றிச் செல்பவர். நாம் கல்விக்காக சாந்தீபனியிடம் கற்றதைப் போல, சாத்திரங்களில் வல்லவரான இளையாழ்வார் உம்மை அனுப்பி நம்மிடம் கேட்கிறார். அவ்வளவுதான் என்று சொல்லி,
பரதத்வம் நாமே; பே4த3மே த3ர்சநம்; உபாயமும் ப்ரபத்தியே; அந்திம நினைவும் வேண்டாம்; சரீர முடிவில் மோக்ஷம்; பெரிய நம்பியை ஆஶ்ரயிப்பது” என்ற இந்த ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார்.
மறுநாள் விடியற்காலையில் திருக்கச்சி நம்பியும் இந்த ஆறு வார்த்தைகளை இளையாழ்வாரிடம் தெரிவித்து, இவையோ உம் மனதில் இருந்தவை என்று கேட்க, ஆம் என்று அவர் பதிலளித்தார். பெருமாளுடைய திருவுள்ளமும் இவருடைய எண்ணமும் ஒன்றாயிருந்ததைக் கண்டு திருக்கச்சி நம்பிக்கு மிகவும் சந்தோஷம்.
அந்தச் சமயத்தில், திருவரங்கத்தில் ஆளவந்தாரிடமிருந்த பெரியோர்கள் எல்லோரும் திரண்டு பெரிய நம்பியை அணுகி, இனி யார் வைணவ தரிசனத்தின் தலைவர் என்று கேட்க, பெரிய நம்பியும், ஆளவந்தாரின் விசேஷ அனுக்ரஹம் செய்ததும், அவருடைய திருவிரல்கள் நிமிர்ந்த ஏற்றமும் உங்களுக்கு மறந்துவிட்டதா? ஆளவந்தாரின் அனுக்ரஹம் நிச்சயம் பொய்யாகாது என்றார். அதைக்கேட்ட அந்தப் பெரியோர்கள், அப்படியானால், தேவரீர் இன்னமும் ஒரு முறை காஞ்சீபுரம் சென்று இளையாழ்வாரை வைணவ தரிசனத்துக்கு தலைவராகும்படிச் செய்து அவரை திருவரங்கத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
பெரிய நம்பி இதன் பொருட்டு திருவரங்கத்திலிருந்து காஞ்சீபுரம் நோக்கிப் பயணமானார். இடையில் மதுராந்தகத்தில் ஏரிகாத்த பெருமாள் கோயிலில் ஓய்வெடுத்தார். இதற்கிடையில், திருக்கச்சி நம்பி, தேவப்பெருமாளிடமிருந்து பெற்ற ஆறு வார்த்தைகளின் பிரகாரம், பெரிய நம்பியைத் தன் ஆச்சார்யராக ஏற்க வேண்டும் என்று நினைத்து திருவரங்கம் நோக்கிப் பயணமானார். இடையில் மதுராந்தகம் ஏரிகாத்த பெருமாள் கோயிலில் எதிர்பாராது பெரியநம்பி எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அவருடைய திருவடியில் பணிந்து நின்றார்.
பெரிய நம்பி மிக்க அன்புடன் இளையாழ்வாரை மார்போடு அணைத்துக் கொண்டார். அடியேனுக்கு இப்போதே இதத்தை உபதேசிக்கவேண்டும் என்று இளையாழ்வார் வேண்டிக்கொண்டார். அதற்கு திருக்கச்சி நம்பி, பேரருளாளர் சன்னிதியில் திருவிலச்சினை பிரசாதித்து த்வயத்தின் அரும்பொருளை உபதேசிக்கிறோம் என்று சொன்னார்.
அடியேனுக்கு இப்போதே உபதேசிக்கவேண்டும். கால தாமத த்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை முன்பு ஆளவந்தார் விஷயத்தில் அனுபவித்த து போதாதோ என்று சொல்ல, அங்கே ஏரிகாத்த பெருமாள் கோயிலில் மகிழ மரத்து அடியில் இளையாழ்வாருக்கு தன் ஆச்சார்யரான ஆளவந்தாரை மனதில் நிறுத்தி திருவிலச்சினை பிரசாதித்து த்வய மந்திரத்தை உபதேசித்தார். இராமன், தன்னுடைய திருவடிகளை பரதனுக்கு அளித்த தைப் போல, என்னைக் கொண்டு தன்னுடைய திருவடிகளை ஆளவந்தார் உமக்கு அளித்தருளினார் என்றார். (அதாவது தான் உங்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்திருந்தாலும் உம்முடைய ஆச்சார்யர் ஆளவந்தார் என்று அர்த்தம். ஆளவந்தாரின் திருவடிகளாகவே வாழ்ந்தவர் பெரிய நம்பி என்பதால் இளையாழ்வாருக்கு நேரே ஆச்சார்யார் ஆளவந்தார்) அதனால் நம் தரிசனம் ஆளவந்தாருக்குப் பிறகு தொடரும்படிச் செய்தாயிற்று என்று மனம் மகிழ்ந்தார்.
பிறகு இருவரும் சேர்ந்து காஞ்சீபுரம் பேரருளாளனைச் சேவிக்கச் சென்றனர். பெரிய நம்பி கோயிலுக்கு வந்த தைக் கேள்விப்பட்டு திருக்கசி நம்பி எதிரே வந்து பெரியநம்பியை சாஷ்டாங்கமாக வணங்கினார் (தண்டன் சமர்ப்பித்து, எல்லா அங்கங்களும் தரையில் படும்படி வணங்கினார் என்று அர்த்தம்) பிறகு இளையாழ்வார், தன் தேவிகளுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணவேண்டும் என்று வேண்டினார்.
பின்பு பெரிய நம்பியைத் தன் இல்லத்தில் உணவு உண்ணச் சொல்லி, பிறகு தானும் உண்டார். (உச்சிஷ்டம்… நினைவிருக்கிறதா? அதற்காகத்தான் இந்த விவரம்)
மறுநாள், தன்னுடைய திருமாளிகையில் மேற்பகுதியில் (முதல் மாடி) பெரியநம்பி தன் குடும்பத்துடன் வசிப்பதற்காகத் தயார் செய்து அவருக்குத் தேவையான பொருட்களும் கொடுத்து அங்கேயே தங்கியிருக்க வேண்டினார். அடுத்த ஆறு மாதங்களில் பெரிய நம்பி இளையாழ்வாருக்கு, நாலாயிர திவ்யப் பிரபந்த த்தில் மூன்று ஆயிரங்களையும் தரிசன அர்த்தங்களுடன் (அதாவது மிக விவரமாக) உபதேசித்தார். இப்படி இளையாழ்வாருக்கு மூன்று ஆயிரங்களின் உபதேசம் ஆளவந்தாரின் ஒரு சீடரான பெரிய நம்பி மூலமாக வந்து சேர்ந்தது.
இது ஒரு புறம் இருக்க, பேரருளாளன், இளையாழ்வாருக்குச் சொன்ன ஆறு வார்த்தைகளின் பொருள் என்ன?
பரதத்வம் நாமே – நாராயணனே உயர்ந்த தத்துவம். அதாவது நாமே பரம்பொருள்
பே4த3மே த3ர்சநம்; - ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு
உபாயமும் ப்ரபத்தியே; - மோட்சத்தை அடைவதற்கு மிகச் சிறந்த வழி பிரபத்தியே, அதாவது சரணாகதி
அந்திம நினைவும் வேண்டாம்; சரணாகதி செய்தவர்களுக்கு இறக்கும் தருவாயில் என்னை நினைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. (பொதுவான நம்பிக்கை, இறக்கும் தருவாயில் என்ன நினைக்கிறோமோ அதன்படியே நம் அடுத்த பிறவி அமையும். உதாரணமாக, மானை நினைத்துக்கொண்டே இறந்தால் அடுத்த பிறவி மான் பிறவியாக அமையும்)
சரீர முடிவில் மோக்ஷம்; - சரணாகதி செய்தவர்கள் இந்தப் பிறவியின் முடிவில் மோட்சம் அடைவார்கள்.
பெரிய நம்பியை ஆஶ்ரயிப்பது – பெரிய நம்பியை உமது ஆச்சார்யராகக் கொள்ளவும்
இதுபோல திருக்கச்சி நம்பிக்கும் ஒரு சமயத்தில் தேவப் பெருமாள் ஏழு உபதேசங்களைக் கூறியதாகப் படித்தேன். அவையாவன,
கருடனை தியானிப்பது மூலம், வேதங்களின் சாரத்தை அறிந்துகொள்ள இயலும். (இது பற்றிய செய்தியை முன்னமேயே எழுதியிருக்கிறேன். ஏன் கொடிமரத்தின் அருகில் மாத்திரம் விழுந்து சேவிக்கிறோம், அதைத் தாண்டி கோயிலின் எந்த இட த்திலும் விழுந்து சேவிப்பதில்லை என்று. கொடிமரத்தின் உச்சியில் கருடன் சிலை, மூலவர் சன்னிதி நோக்கி இருக்கும், சிறிய வடிவில்)
பகவத் கைங்கர்யங்களை விட பாகவதர்களுக்கு (அதாவது இறைவனின் அடியார்களுக்கு) தொண்டு செய்வது மிகவும் சிறப்பானது. இறைவனை அடைய இது எளிய வழி
தன் முயற்சி மூலம் இறைவனின் அருளைப் பெற இயலாது. (சுய முயற்சியான, கடினமான யோக முறைகள் மற்றும் சடங்குகள் மாத்திரம் போதுமானதல்ல. இது மிகவும் கடினமான வழி. என்னால் எதையும் செய்ய இயலாது, நீயே கதி என்று இறைவனைச் சரணடைவதால் மாத்திரமே இறைவனின் அருளைப் பெற இயலும் என்று அர்த்தம்)
ஸ்ரீவைஷ்ணவர்களை (அதாவது வைணவ மதத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்களை), நமக்குச் சமமாக எண்ணாமல் நம்மை விட உயர்ந்தவர்களாகக் கொள்ள வேண்டும். (இதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. இறைவனை மனதில் நிறுத்தி அவனுக்கு விருப்பமான செயல்களையே செய்பவர்கள், நம்மைவிட மேம்பட்டவர்கள் என்று நினைக்கவேண்டும்)
ஸ்ரீவைஷ்ணவர்களை அவர்களது ஜாதியை முன்னிட்டு உயர்வு தாழ்வு பார்ப்பது மிகத் தவறானது.
நல்ல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டும்
ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடி தீர்த்தம் பிரசாதத்திற்குச் சமம்.
இதற்கு அப்புறம்தான் திருக்கச்சி நம்பி, திருவரங்கம் சென்று ஆளவந்தாரின் சீடராக மாறினார். வைணவ குரு பரம்பரை பற்றி எழுதும்போது வைணவர்கள் என்று சொல் வரத்தான் செய்யும். இருந்தாலும் நாம் உட்கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சைவ மதத்தை ஒழுகுபவர்கள், சைவ குரவர்கள், ஆச்சார்யர்கள், சைவ சமயப் பெரியோர்களை மேலே கூறியுள்ளபடி, தம்மை விட மிக உயர்ந்தவர்களாகக் கருத வேண்டும். அவர்களது குலத்தைப் பார்க்கக் கூடாது.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சார்யார், வடகலை சம்ப்ரதாயத்தின் ஆச்சார்யராகக் கருதப்படுகிறார் (தென்னாச்சார்யார்களுக்கு ஸ்வாமி மணவாள மாமுனிகள்) வேதாந்த தேசிகர், காஞ்சீபுரத்தில் தூப்புல் என்ற இட த்தில் அவதரித்தவர். அவருடைய வரலாற்றையும் இந்த த் தொடரின் பார்ப்போம். அவர் கிபி 1268 முதல் 1369 வரை வாழ்ந்தவர். அவர் பல பிரபந்தங்கள் ஸ்லோகங்கள் இயற்றியுள்ளார். (நூற்றுக்கும் மேற்பட்டவை). திருவாய்மொழிக்கு லட்சம் படியுள்ள விளக்கவுரையும் எழுதினார் அது லுப்தமாகிவிட்ட து (அழிந்துவிட்து) என்பர். அவரை ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் (எல்லாக் கலைகளிலும் வல்லவர்), கவி தர்க்கிக கேசரி – கவிஞர்களுக்குள், தர்க்கவாதிகளுக்குள் சிங்கம் போன்றவர் என்று பல பட்டங்களுடன் அழைப்பர். அவருடைய தேசிக ஸ்தோத்திரத்தில், நியாச தசகம் என்ற ஒரு ஸ்தோத்திரம் உண்டு. நாம் சரணாகதி த த்துவத்தைப் பற்றி நிறையவே பேசியிருப்பதால், நியாச தசகம் என்ற பத்து ஸ்லோகங்களுள் ஓரிரண்டை இன்று பார்ப்போம்.
अहम् ; मत् - रक्षण - भरो ; मत् - रक्षण - फलम् , तथा |
न मम: ; श्री - पते: ,एव ; इति , आत्मानम् , निक्षिपेत् , बुध: ||
அஹம் மத் ரக்ஷண ப3ரோ மத் ரக்ஷண ப2லம் த தா2
ந மம ஸ்ரீ பதே ஏவ இதி ஆத்மானம் நிக்ஷிபேத் பு3த4:
பொருள்: விஷயம் அறிந்தவன், தன்னுடைய ஆத்மா மற்றும் தன் ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு, அப்படிக் காத்ததினால் ஏற்படும் பலன் எல்லாமே தனக்கு உரியது அல்ல, அந்தத் திருமகள் கேள்வனுக்கே உரியது என்று அறிந்து தனது ஆத்மாவை எம்பெருமானிடம் சமர்ப்பிப்பான்.
விளக்கம்: புத:-விஷயம் அறிந்தவன், ஸ்ரீ பதே-திருமகள் கேள்வன், ரக்ஷண-காக்கும்
न्यस्यावम , अकिञ्चन: ; श्रीमान् ! अनुकूल: ; अन्य - वर्जित: |
विश्वास - प्रार्थना - पूर्वम् ; आत्म - रक्षा - भरम् , त्वयि ||
ந்யஸ்யாம் , அகிஞ்சன: ; ஸ்ரீமான் ! அனுகூல: ; அந்ய - வர்ஜித: ; |
விச்வாஸ – பிரார்த்த2னா - பூர்வம் ; ஆத்ம - ரக்ஷா – ப4ரம் , த்வயி ||
பொருள்: திருமகள் நாதனே… என்னிடம் ஒரு கொள்முதலுமில்லை. அப்படிப்பட்ட நான், உனக்கு அனுகூலமாயும், அனுகூலமில்லாத மற்றவற்றை விலக்கி, முழுமையான நம்பிக்கை உள்ள பிரார்த்தனையின் மூலம், என் ஆத்மாவைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
விளக்கம்: ஸ்ரீமான் – திருமகள் நாதன். அகிஞ்சன:- ஒன்றும் இல்லாதவன், விச்வாஸ-முழு நம்பிக்கையுடன்
श्रीमन् ! अभीष्ट - वरद ! त्वाम् , अस्मि , शरणम् - गत: |
एतत् , देह - अवसाने , माम् , त्वत् - पादम्, प्रापय ! स्वयम ||
ஸ்ரீமன் அபீ4ஷ்ட வரத3 த்வாம் அஸ்மி ஶரணம் க3த:
ஏத த் தே3ஹ அவஸானே மாம் த்வத் பாத3ம் ப்ராபய ஸ்வயம்
பொருள்: திருமகள் நாதனே, வேண்டிய வரங்களை அருளுபவனே, உன்னைச் சரணடைந்தவனாக நான் இருக்கிறேன். என் உயிர், இந்த உடலைப் பிரிந்தவுடன், நீயாகவே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வாயாக
விளக்கம்: அபீஷ்ட வரத- வேண்டும் வரங்களைத் தருபவன், தேக அவஸானே-தேகத்தை விட்டுப் பிரியும்போது, ஸ்வயம்-நீயாகவே
ஏரி காத்த ராமர் கோயில், மதுரா
மதுராந்தகம் ஏரி காத்த இராமர் கோயில் மூலவர். (கருணாகரப் பெருமாள்)
இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடந்த மகிழ மரத்தடி மண்டபம். மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோயில்.
பெரிய நம்பிகள் இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தல். இராமானுஜர் மற்றும் பெரிய நம்பிகள் சன்னிதி.
இராமானுஜருக்கு சங்கு சக்கர இலச்சினை வைக்க பெரிய நம்பி உபயோகப்படுத்திய அச்சு, மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் உற்சவ விக்ரஹம், தூப்புல். தூப்புல் விளக்கொளி பெருமாள் கோயில். இடது புறம் தெரிவது வேதாந்த தேசிகரின் இல்லம். அங்கு சந்நிதி அமைத்திருக்கிறார்கள்.
அடுத்த வாரம் தொடர்வோம்...
======================================================================================
நான் படிச்ச கதை - JKC
சீதா பிராட்டியின் கடிதங்கள்
ஆசிரியர் குமுதினி
ஆசிரியர் : குமுதினி (1905-1986). குமுதம் பத்திரிகைக்கும் இந்தப் பெயருக்கும்
சம்பந்தமில்லை. இயற் பெயர் ரங்கநாயகி. ரவீந்திரநாத் தாகூரின் நாவலான 'யோக யோக்' கதையின் கதாநாயகி பெயரான ‘குமுதினி’ யை புனைபெயராகச் சூட்டிக்கொண்டார். பெற்றோர்
ஸ்ரீனிவாச ஆச்சாரியார், லட்சுமி அம்மாள். ஸ்ரீரங்கம் பிறந்த ஊர். தந்தை நீதிபதியாக
இருந்தார். 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச அய்யங்காரை மணந்தார். அதன் பின் தீவிர
காங்கிரஸ் ஆதரவாளர் ஆனார். திருச்சி சேவாசங்கம் என்னும் சமூகசேவை அமைப்பை
உருவாக்கினார். காந்திய வழியில் பணியாற்றும் அந்த அமைப்பு இப்போதும் தொடர்கிறது.
காந்தி குமுதினிக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறார்.
என்னுரை.
சிறுகதைகள் என்ற கதை சொல்லும் முறை இலக்கிய
மதிப்பை அடைந்து தனிப்பிரிவாகத் திலங்கிய காலம். அப்போதைய வார, மாத
பத்திரிகைகளும், வீட்டிலிருந்து ஓயாது சமையல் முதலிய பணிகளை செய்து களைத்த
அடுப்பூதும் பெண்களுக்கு சிறுகதைகள் மூலம் படிப்பறிவு புகட்டிய காலம். 20ஆம்
நூற்றாண்டின் துவக்கம். பெண் எழுத்தாளர்கள் பலர் பிரபலமாக இருந்த காலம். அத்தகைய
காலகட்டத்தில் எழுதி புகழ் பெற்றவர் குமுதினி, கல்கியால் மெச்சப்பட்டவர்,
விகடன் சிறுகதை போட்டிக்கு நடுவராக
இருந்தவர், பயணக் கட்டுரை என்ற தனி தொடர் கட்டுரைப் பிரிவை தோற்றியவர் என்று
சிறப்பு பெற்றவர்.
தமிழ்த் தாத்தா உ வே சா, மற்றும்
மூதறிஞர் ராஜாஜி அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு பரிச்சயம்
கொண்டிருந்தவர், (பெண்கள் அந்நியர் முன் வராத காலம் அது) பிரபந்த பாசுரங்களை
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவுக்கு பாண்டித்யம் பெற்றவர். (நம்மாழ்வாரின் 100
பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.)
இங்கு தரப்பட்டுள்ள ‘சீதாப்
பிராட்டியாரின் கடிதத்தை’ கடிதம் என்று கொள்வதா? கதை என்று கொள்வதா? கட்டுரை என்று
கொள்வதா? என்று ஒரு சிறிய குழப்பம் ஏற்படுகிறது. காரணம் இது வெளியான காலத்தில்
“சரித்திரம்” என்ற கதை சொல்லும் பாணியில் தான் சிறுகதைகள் வெளிவந்தன. இப்போக்கை
முதலில் மாற்றியவர் புதுமைப் பித்தன் மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்கள் எனலாம்.
இக்கதை 1900களின் முற்பகுதியில்
வாழ்ந்த அடுக்களை பெண்களின் சொல்லாடல்களில், அவர்கள் மனம் திறந்து பேசினால் எப்படி
இருக்குமோ அதே நடையில், வடமொழி, தமிழ் கலப்புடன் புராண சீதா பிராட்டி அம்மையார்
எழுதுவது போன்று எழுதப்பட்டுள்ளது. இது
ஒரு புதிய முற்போக்கு முயற்சி. அதுவே இதன் சிறப்பு. மற்றபடி கதை என்று ஒன்று தனியே
இல்லை.
சிறுகதை இலக்கியம் என்பது 80
வருடங்களுக்கு முன் எவ்வாறு மொழி , நடை இவற்றால் வித்தியாசமாய் இருந்தது என்பதைக்
காட்டவும், பெண்களின் புடவை/ஆடை மோகம்
என்றுமே அடங்கவில்லை என்பதையும் உணர்த்தவே
இக்கதை இங்கு தரப்படுகிறது.
சீதையும் ராமனும் வனவாசம்
செய்யப் புறப்படுகிறார்கள். இந்த ஒரு வரி தான் கதை. ராமன் காட்டுக்கு போகும்
முன்னரே தீபாவளி பண்டிகை இருந்திருக்கிறது என்பதாக கதை மூலம் அறியலாம். ஆக ராமன்
காட்டிலிருந்து திரும்புவதை நகரை தீபங்களால் அலங்கரித்து மக்கள் தீபாவளி
கொண்டாடினார்கள் என்பது சரியில்லை என்று புலனாகிறது.
கடைசியில்
//பெண்களெல்லாருமே
வனவாசத்துக்குப் போனால் எவ்வளவு நலம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் கவலையில்
பாதி குறைந்துவிடும்.//
ஆஹா …. இந்த கடைசி punch யோசிக்க
வைக்கிறது……. சுஜாதாவின் சாயல்.
கதையின் சுட்டி
=======>சீதாப்பிராட்டியின்_கடிதங்கள் <========
சீதா பிராட்டியின் கடிதங்கள்
மிதிலாதிபதியான ஜனகரின்
பட்டமகிஷிக்கு அயோத்தியிலிருந்து சீதாதேவி எழுதி விடுத்த கடிதம்.
அம்மாவுக்கு அநேக தண்டனிட்டு
அடியாள் சீதை வணக்கத்துடன் விக்ஞாபித்துக் கொள்வது.. உபயகுசலோபரி.. நீ அனுப்பின
ஆட்களும் ரதமும் வந்தன. தீபாவளிக்கு எங்கள் எல்லோரையும் மிதிலைக்கு வரவேண்டுமென்று
நீ ஆக்ஞாபித்ததாகத் தூதுவன் கூறினான். இங்கே நிகழ்வதெல்லாம் அறிந்தால் அவ்விதம்
நாங்கள் வருவது எவ்வளவு சிரமமான செய்கையென்று உணர்வாய். மாமனாரவர்கள் சதாகாலமும்
‘மாண்டவியின் மாமியார் கைகேயி தேவி’யின் கிருகத்திலேயே இருக்கிறார். என்
மாமியாருக்கு ‘அசாத்தியக் கோபம்’. அதை வெளியே காண்பிக்காமல் பூஜையிலும் பிராம்மண
போஜனத்திலும் இறங்கியிருக்கிறார். விடியற்காலயிலேயே எழுந்து ஸ்நாநம் செய்துவிட்டு
அவருக்கு உதவி செய்யவேண்டியதாக இருக்கிறது. நாள் முழுதும் வேலை. சற்றும் ஓய்வு
கிடையாது.
கலியாணமாகி வந்ததுமே மைத்துனர்
பரதரை அவர் மாமா வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். சத்ருக்கனர் விஷயம்
தெரிந்ததுதான், அண்ணாவின் பின் ‘வால்’. அவர்கள் திரும்பிவந்து, நாங்கள் எல்லோரும்
அனுமதி பெற்றுக் கொண்டு மிதிலைக்குப் புறப்பட்டால் தீபாவளிக்கு வந்து சேர முடியுமோ
என்னவோ தெரியாது. சந்தேகமாயிருக்கிறது.
எல்லாம் யோசித்ததில் தீபாவளியை
அயோத்தியிலேயே கழிப்பது உத்தமம் என்று உன் மாப்பிள்ளை தீர்மானித்திருக்கிறார்.
இதைப் பற்றி மாமனாரவர்களிடமிருந்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வரும்.
எங்களுக்குப் பீதாம்பரங்களை
இங்கே அனுப்பு. உன் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பட்டுதான் பிடிக்கிறது. ஆகையால் அதையே
வாங்கி அனுப்பவும். இங்கே எங்கள் மாப்பிள்ளை ருச்யசிருங்கருக்குத் தீபாவளிக்காக
ஒரு புதுமாதிரி சுவர்ண கங்கணம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. அந்த
மாதிரி உன் பெரிய மாப்பிள்ளைக்கு ஒன்று அனுப்பு. இதைக் கொண்டு வரும் ஆட்களுடன்
அவ்வித வேலை தெரிந்த தட்டான் ஒருவனைக் கூட்டியனுப்பியிருக்கிறேன். இந்த விஷயம்
‘நான் எழுதினதாகத் தெரியவேண்டாம்’.
எனக்கு சிந்தூர வர்ணப் புடவை
தயாரித்திருப்பதாக எழுதியிருக்கிறாய். இங்கே அயோத்தியில் எல்லாரும் ரொம்ப
நாகரீகமாக துணி உடுத்துகிறார்கள். யவன தேசத்து வர்த்தகர்கள் கொண்டுவரும்
பீதாம்பரங்களாம். கரை சின்னதாகப் போட்டு மிக நேர்த்தியாயிருக்கின்றன. நாத்தனார்
சாந்தை நீலாம்பர வர்ணத்தில் ஒன்று உடுத்தியிருந்தாள். எனக்கு அது மாதிரி
வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது. நீ எனக்குக் கலியாணத்தின்போது வாங்கிக்
கொடுத்த புடவைகளுக்கெல்லாம் கரை அதிக அகலம். அவைகளை இப்போது எனக்கு உடுத்துவதற்கே
எனக்கு வெட்கமாக இருக்கிறது. எல்லாரும் பரிகாசம் செய்கிறார்கள். அந்த மாதிரி
வாங்கி அனுப்பாதே. பூஜ்யரான தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.
விநயத்துடன் இங்ஙனம்
சீதை
2
அம்மாவிற்கு விக்ஞாபனம்.
க்ஷேமம். உனக்குக் கடிதம் எழுதிய பிறகு நாத்தனார் சாந்தையைப் பார்த்தேன். நீலாம்பர
வர்ணம் ஸ்திரமாக இருப்பதில்லையாம். ‘வெளுத்து’ விடுகிறதாம். ஆகையால் எனக்கு அந்த
வர்ணத்தில் பீதாம்பரம் வேண்டாம். முதலில் உத்தேசித்தவிதம் சிந்தூரவர்ணப் புடவையையே
அனுப்பு. அல்லது தாம்பர வர்ணத்தில் ‘வெளுக்காமலிருக்கும்’ என்ற உத்தரவாதத்துடன்
பீதாம்பரம் அகப்பட்டால் வாங்கியனுப்பவும். ஒருமுறை உடுத்திய வர்ணத்தையே திரும்பத்
திரும்ப உடுத்துவதென்றால் அலுப்பாயிருக்கிறது. உன் சௌகரியப்படி செய். நான் தொந்திரவு
கொடுக்கவிரும்பவில்லை. நீலாம்பர வர்ணம் மட்டும் வாங்காதே..
அடியாள் சீதை
3
அம்மாவிற்கு விக்ஞாபனம்.
க்ஷேமம். திடீரென்று மாமனாரவர்களுக்கு யோசனை தோன்றியிருக்கிறது. உன்
மாப்பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாகச் சொல்கிறார். பந்தலில் உங்கள்
ஆசீர்வாதத்துடன் புடவை வைக்கவேண்டுமே.. எந்த மாதிரி அனுப்புகிறாய்? நவமல்லி வர்ணம்
நன்றாயிருக்குமா. பந்தலில் வைப்பதாகையால் நன்றாயிருக்கவேண்டும். ‘மான் புள்ளிகள்’
மாதிரி வேலைப்பாடு செய்த புடவைகள் சட்டென்று அகப்படுமா? அல்லது முன்னால் சொல்லிப்
போடச் சொன்னால் மட்டும் கிடைக்குமா? குயில் வர்ணம் மயில் வர்ணமெல்லாம்
மாமியாரவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. வ்யாக்ரவர்ணம் வேஷம் போட்டாற் போலிருக்கும்.
என்ன செய்யப் போகிறாயோ, எனக்குத் தெரியவில்லை. ‘இந்தப் புடவைகளைப் பற்றிச்
சிந்தித்துச் சிந்தித்து என் மூளை கலக்கமடைந்துவிட்டது’. ஒரு ‘தீர்மானத்திற்கும்
வரமுடியவில்லை’. உசிதப்படி செய்.
உன் பிரிய சீதை.
குறிப்பு:
அல்லது தீபாவளிப் புடவை,
பட்டாபிஷேகப் புடவை இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய புடவையாக வாங்கி அனுப்பு.
4
அம்மாவிற்கு,
ஒரு புடவையும் அனுப்பவேண்டாம்.
‘எல்லாம் தீர்ந்துவிட்டது’. நாங்கள் வனவாசம் செய்யப் போகிறோம். பரதருக்குத்தான்
பட்டாபிஷேகம். இதைக் கொண்டு வருவபவன் எல்லா விவரமும் சொல்வான். எனக்கு ஒரே ஒரு
‘மரவுரி’தான் இருக்கிறது. காட்டில் மழையில் நனைந்துவிட்டால் கட்டிக் கொள்ள வேறு
கிடையாது. ஆகையால் முடிந்தால் ஒரு மரவுரி அனுப்பு. சௌகரியப்பட்டால் வெத்தலும்
அப்பளமும் அனுப்பு. உன் அப்பளந்தான் நன்றாயிருக்கிறதென்று மாப்பிள்ளை சொன்னார்.
நாங்கள் சித்ரகூடத்திற்குப் போகிறோம். இது ஒருவருக்கும் தெரியவேண்டாம். அவசரம்.
சீதை
குறிப்பு:
இனி புடவைகள் வர்ணத்தைப் பற்றி
சிந்திக்கவேண்டாம். எனக்கு மனதில் அதிக நிம்மதி ஏற்பட்டிருக்கிறது.
பெண்களெல்லாருமே வனவாசத்துக்குப் போனால் எவ்வளவு நலம் என்று தோன்றுகிறது.
வாழ்க்கையின் கவலையில் பாதி குறைந்துவிடும்.
சீதை
நன்றி: https://s-pasupathy.blogspot.com/ – குமுதினி
(ரங்கநாயகி)யின் இந்தக் கதை விகடன் தீபாவளி மலர் ஒன்றில் வந்தது என்பது என்
நினைவு.
ஆசிரியர் பற்றிய மேல் விவரங்களுக்கு ========>தமிழ் விக்கி
=========> என் கணேசன்
=========> தமிழ் ஆன்லைன்
=========> சொல்வனம்
ப்ரபத்தி - சரணாகதி என்பது மிகப் பெரிய தத்துவம். இந்த நிலையைப் பெறுவது என்பது அத்தனை எளிதல்ல. நாம் என்னதான் சரணாகதி எல்லாத்தையும் அவன் கிட்ட விட்டுவிட வேண்டும், என்று சொன்னாலும் அடுத்த நிமிடம் மனம் அலையத் தொடங்கும். புலம்பத் தொடங்கும். எதை எதையோ தேடத் தொடங்கும். அப்படி முழு நம்பிக்கை வைத்து அதில் சின்ன சலனமும் இல்லைனா, நாம் align அதாவது ஒன்றிவிடுகிறோம்.
பதிலளிநீக்குஹையோ நாம எவ்வளவோ பிரார்த்திக்கிறோம் ஆனா நடக்கலை என்றால் அந்த நம்பிக்கையில் எங்கோ நூலிழை அறுந்திருக்கு. இது என் தனிப்பட்டக் கருத்து. முழு நம்பிக்கை...unconditional faith and love. எவ்வளவு கஷ்டம் ல...
கீதா
வாங்க கீதா மங்கன் க்கா... எந்தச் செயலுக்கும் முழு விசுவாசம் வேண்டும். அப்படி இருந்தும் கிடைக்கவில்லை என்றால் ப்ராப்தம் இல்லை என எண்ணும் மனம் கைவரப் பெறணும். இது கோடியில் ஒருவருக்குத்தான் அமையும்.
நீக்குஇப்பகுதியில் வரும் பெரியவர்களின் உரையாடல்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். அந்த ஒரு சப்ஜெக்ட் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை பாருங்க.
பதிலளிநீக்குஉச்சிஷ்டம்… நினைவிருக்கிறதா? அதற்காகத்தான் இந்த விவரம்) //
நினைவிருக்கு. அந்த சம்பவம்.
முழு நம்பிக்கையுடன் சரணாகதி என்ற நிலையை அடைந்துவிட்டால் அந்திம சமயத்தில் வேறு எதுவும் நினைவுக்கு வராது....அதுவும் அவங்க எல்லாம் இதே நினைவில்தானே பயணிக்கிறார்கள் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்...
நம்மைப் போன்ற சாதாரணர் அல்லவே!! எத்தனை சிந்தனைகளில் நாம் உலாவுகிறோம்!
படங்களும் விவரங்களும் பார்த்துக் கொண்டேன் நெல்லை. ஏரி காத்த கோவில் போயிருக்கிறேன் ஆனால் இந்த மகிழமரத்தடி மண்டபம் பார்த்தேனா ம்ம் நினைவில்லை இல்லை இப்படித் தெரிந்து பார்க்கலையோ என்றும் தோன்றுது
கீதா
அந்த மாதிரி படங்களைப் பகிர்வது அடுத்த முறை செல்லும்போது, முனைந்து காண ஏதுவாயிருக்கும் என்பதால்தான்.
நீக்குஉணர்வை எண்ணத்தை ஒன்றச் செய்வது ஆபூர்வப் பிறவிகளுக்கே சாத்தியம்.
உள் மனமும் வெளி மனமும் ஒன்றாகப் பயணிப்பது ரொம்ப உயர்வான ஆனால் அடைய மிகவும் கஷ்டமான நிலை. இது மனம் சார்ந்த படிப்பிலும் உண்டு, தத்துவத்திலும் சொல்லப்படுவது. எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பது என்பது. நீங்க சொல்றாப்ல அது அபூர்வப் பிறவிகளுக்குதான் சாத்தியம்
நீக்குகீதா
குமுதினி ஆசிரியரின் பெயர் பரிச்சய நினைவு இருக்கு ஆனால் கதைகள் வாசித்ததில்லை.
பதிலளிநீக்குகதையை வாசித்துச் சிரித்துவிட்டேன். நல்ல கற்பனை ஆசிரியருக்கு. மறைமுகமாகப் பெண்களின் மன நிலையை வைத்து எழுதியிருக்கிறார். விதிவிலக்குகள் இருக்கிறார்கள்.
ஆனால் ஏன் இப்படிப் பெண்களும் புடவை மோகமும் என்று காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இப்படி நிறைய ஜோக்குகளும் உண்டே!
கீதா
ஜெ கே அண்ணா, இக்கதையை வைத்து தீபாவளி எல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. இது authentic version இல்லையே. இது கதாசிரியரின் கற்பனை, நாம் கொண்டாடுவதை வைத்து அவ்வளவே. எனவே அதைச் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குகுமுதினி ஆசிரியரைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். நல்ல புலமை.
இதுவும் ஒரு வகை கதைதான். கதை என்பதே புனைவுதானே. கடித இலக்கிய வகைக் கதை எனலாமே!
சுஜாதாவின் சாயல் - அது சரிதான் ஆனால் இவர் சுஜாதாவுக்கும் முற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கதை இல்லையா...
பொதுவாகவே அம்மாவும் பெண்களும் பேசிக் கொள்வது இணக்கமாக இருப்பது என்று சொல்லப்படுவதுதான்.
எத்தனையோ வீடுகளில் இது குடும்பத்தைப் பிரிக்கவும் செய்திருக்கிறது.
கீதா
ஆனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. அதாவது அம்மா பெண் இணக்கம் பகிர்ந்து கொள்வது என்றான அனுபவம் இல்லை.
பதிலளிநீக்குகீதா
குட்டிப் பெண்ணா என்ன என்ன சுட்டித்தனம் பண்ணுனீங்களோ, அவங்கள்டதான் கேட்கணும்.
நீக்குஎனக்கு எப்போதுமே ஆச்சர்யத்தை உண்டாக்குவது, தன் குழந்தைகளிடையே வேற்றுமை பாராட்டும் பெற்றோர். இது, ஆன்மாக்கள் ஒவ்வொன்றும் தனித் தனி. கர்மவினைகளால் நமக்கு சந்ததிகளோ, பெற்றோர்களோ அமைகின்றன என உறுதிப்படுத்துகிறது.
ஹாஹாஹா.....அதெல்லாம் காரணமில்லை நெல்லை. இப்படிப் பாரபட்சம் பார்ப்பது எல்லாம் முந்தய ஜெனரேஷன் வரைதான். நாங்க வளர்ந்தது கூட்டுக் குடும்பம். எங்க பெற்றோருடன் புரிதல் இருக்கும்? இல்லை அவங்க நம்ம கிட்ட தனிப்பட்டரீதியில் புழங்க முடியுமா? நெவர். அவங்க மட்டுமில்லை வீட்டில் உள்ள பெரியவங்களுமே நிறைய பாரபட்சம் பார்த்தாங்க. ஆனா நாங்கள் எங்களுக்குள்ள நல்ல புரிதல் கொண்டதால் இப்பவும் நாங்க புரிதலில் இருக்கிறோம்.
நீக்குகுழந்தைகளை ஒரே போல பார்க்க முடியும். ஆனால் ஒரு சில விஷயங்களில் மட்டும்....அதாவது இரு குழந்தைகளில் ஒன்று கொஞ்சம் கஷ்டப்படுதுன்னு வைங்க. அதுக்கு ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுக்கணும் அப்ப மற்ற குழந்தைக்குக் கொஞ்சம் அதைப் புரிய வைத்துவிட்டால் போதும். அது போல பின்னால் ஒரு குழந்தை கஷ்டத்தில் இருந்தாலும் இதேதான். குழந்தைகளுக்கிடையில் சிறு வயதிலிருந்தே அந்தப் புரிதலையும் ஒற்றுமையையும் தூவ வேண்டியது பெற்றோர்.
அது போல குழந்தைகள் ஆண் பெண் என்றால் இருவரின் செயல்பாடுகளும் வெவ்வேறாகத்தான் இருக்கும் பெண் குழந்தைகள் கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் ஆண் குழந்தைகள் டக்கென்று கடந்து செல்பவர்களாகவும் யதார்த்தமாகவும் இருப்பாங்க. இதைப் புரிந்து கொண்டு இருவருக்கும் அன்பைப் காட்டலாம்.
கீதா
கடித இலக்கியம் வகையில் வரும் சிறுகதை. நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎழுதப்பட்ட காலகட்டத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்திருக்கும். கல்கி பத்திரிகைக்கு ஏற்ற கதை.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார். செவ்வாயல் கதைகள் எழுதுவதில்லையே. கீதா ரங்கன் க்கா, ஏஐ உதவியுடன் கதைகளுக்கு கிராமியச் சூழலில் அழகழகான படங்களை, தாவணி போட்ட கிளிகளைத் தரத் தயாராக இருக்கிறார்.
நீக்குஹாஹாஹா.....இந்த லொள்ளுக்குக் குறைச்சலில்லை, நெல்லைக்கு!!!!!!!
நீக்குகீதா
நெல்லை அவர்களது பணி சிறப்பு..
பதிலளிநீக்குஹரி ஓம்
மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குபகவத் கைங்கர்யங்களை விட பாகவதர்களுக்கு (அதாவது இறைவனின் அடியார்களுக்கு) தொண்டு செய்வது மிகவும் சிறப்பானது. இறைவனை அடைய இது எளிய வழி...
பதிலளிநீக்குசிறப்பு..
இதையே எல்லா பாரதீய சமயங்களும் வற்புறுத்துகின்றன. வைணவம், பாகவத அபசாரம், பகவத் அபசாரத்தைவிட நமக்குக் கெடுதல்களை விளைவிக்கும் என்கிறது.
நீக்குஇந்த வாரம் என்ன வைணவ சிறப்பு சனியா? கதை உட்பட வைணவம் ஓங்கி ஒலிக்கிறதே?
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்.. ஜெயகுமார் சாரைத்தான் கேட்கணும் இந்தக் கதையைத் தேர்வு செய்ததற்கு.
நீக்குவாரம் ஒரு பாசுரம் பகுதியில் எளிமையாக எழுதுகிறார் என்று பாராட்டிக் கொண்டிருந்தேன், இன்று புரிந்து கொள்ள கடினமான வைணவர்களுக்கே உரிய வார்த்தை பிரயோகங்கள்.
பதிலளிநீக்குஇந்த வாரம் அப்படி அமைந்துவிட்டது. நான் தினமும் சேவிக்கும் நியாஸ தசகத்தைப் பகிரணும் என்று தோன்றிவிட்டது.
நீக்குமதுராந்தகம் சென்று ஏரிகாத்த ராமரை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், உங்கள் மூலம் இன்று ஒரு வகை தரிசனம், என்று நேரில் செல்வேனோ..? தெரியவில்லை.
பதிலளிநீக்குஏரிகாத்த ராமர் கோயில் ஏகாந்தமாக இருக்கும் வார நாட்களில். கண்டிப்பாக அந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
நீக்குஏரி காத்த ராமர் கோவில் பார்க்கும் ஆசை எனக்கும் நெடு நாட்களாக உண்டு. இன்றி தாண்டி செல்கிறோம்... பார்க்க முடியவில்லை.
நீக்குஅதேபோல பெரம்பலூரில் மூன்று கோவில்கள், விருத்தாச்சலம் கோவில் ஆகியவையும்...
நீக்குவாங்க ஶ்ரீராம். இன்னும் ஶ்ரீபெரும்பூதூர், மதுராந்தகம் உங்களை அழைக்கவில்லையா? திருநின்றவூர் கோயில் பின்புறமும் ஒரு ஏரி காத்த ராமர் கோயில் உண்டு.
நீக்குதிருச்சி பெரம்பலூரில் என்ன அந்த மூன்று கோயில்கள்? விருத்தாச்சலம் என்றதும் விஜயகாந்த் இரண்டு கட்சிகளையும் மீறி வெற்றி பெற்று கெத்து காண்பித்தது நினைவுக்கு வருது. ஆனை எட்டு அடின்னா குட்டி நூறடி தாண்டி, விஷ்க் அங்கிளைக் கவிழ்த்து விட்டுடுச்சு
நீக்குவிருத்தாசலத்தில் சிவன் கோயில், பழமையான கோயிலாயிற்றே. சுந்தரர் விருத்தகிரீசுவரரையும் விருத்தாம்பாளையும் பாட மறுக்க அவசரம் அவசரமாக பாலாம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுப்பின்னர் சுந்தரர் பாடினார் என்பார்கள். விருத்தாசலம் முருகன் கோயில் ஒண்ணு மிகவும் பிரபலம். நாங்க இரு முறை போனோம். முதல் தடவை பிராது எழுத. இரண்டாம் முறை பிராது எழுதியதில் பிரச்னை தீர்ந்ததுக்கு.அது எந்தக் கோயில்னு நினைவிலே வரலை. :( இப்போல்லாம் இப்படி அடிக்கடி மறதி வருது. :(
நீக்குபெரம்பலூரில் எனக்குத் தெரிஞ்சு மதுரகாளி அம்மன் கோயில் தான் பலருக்கும் குலதெய்வம்.மற்ற இரு கோயில்கள் தெரியலை. மதுரகாளி அம்மனைத் திங்கட்கிழமை அன்று பார்க்கலாம் என்பார்கள். அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது.
நீக்கு//இப்போல்லாம் இப்படி அடிக்கடி மறதி வருது.// திரும்பத் திரும்ப மனக்கண்ணில் கொண்டுவரணும் என்று நினைக்கிறேன். எனக்கும் சில நேரங்களில் மறந்துவிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது.
நீக்கு/மதுரகாளி அம்மன் கோயில் தான் பலருக்கும் குலதெய்வம்.// நீங்க சொன்னப்பறம்தான் என் அண்ணனின் நெருங்கிய சொந்தத்திற்கும் மதுரகாளீ அம்மன் கோயில்தான் குலதெய்வக் கோயில். மெயின் ரோட்டிலேயே இருக்கு என்பார்.
நீக்கு@கீதா அக்கா: விருத்தாசலத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முருகன் கோவில் கொளஞ்சியப்பர் கோவில். அந்த கோவிலைப்பற்றி நான் என் வலைப்பூவில்(blog) எழுதியிருக்கிறேன்.
நீக்குகுமுதினி அவர்களின் கதையின் நடை மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. ரிஷ்யசிருங்கரின் மனைவி சாந்தா(ஈந்த கதையில் சாந்தை என்று குறிப்பிடுகிறார்) தசரதருக்கும், கௌசல்யாவுக்கும் பிறந்த பெண் என்பதும் அந்தக் குழந்தையை தசரதர் தன் தோழரான அங்கதேச மன்னன் ரோமபாதனுக்கு தத்து கொடுத்தார் என்பதும் பலருக்கு தெரியாத விஷயம்.
பதிலளிநீக்கு//இங்கே எங்கள் மாப்பிள்ளை ருச்யசிருங்கருக்குத் தீபாவளிக்காக ஒரு புதுமாதிரி சுவர்ண கங்கணம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. அந்த மாதிரி உன் பெரிய மாப்பிள்ளைக்கு ஒன்று அனுப்பு.// ஹா ஹா ஹா! ரசித்தேன். நிகழ்கால பெண்ணைப் போல சீதையையும் கற்பனை செய்திருக்கிறார். அவரும், கௌசல்யாவும் அரச் குடும்பத்தினர்கள், அவர்கள் ஏன் சமைக்க வேண்டும்? அவர்கள் இட்ட பணியை செய்ய நூறு பணியாளர்கள் இருக்க மாட்டார்களா?
பதிலளிநீக்குஅப்படி அரசகுமாரிகள் அரசிகள் இருந்ததால்தான் அரசர்கள் அவர்களிடம் அதீத அன்பு செலுத்தவில்லையா? மனைவி தான் சமைக்கும் உணவின் ருசி மூலமாக கணவனின் மனத்தில் இடம் பிடிக்கிறாள் என்றுதானேசொல்கிறார்கள்?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஇன்றைய குரு பரம்பரை ஸ்லோகங்கள் விளக்கங்கள் என அனைத்தும் மிக அருமையாக உள்ளது. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
/பொருள்: திருமகள் நாதனே, வேண்டிய வரங்களை அருளுபவனே, உன்னைச் சரணடைந்தவனாக நான் இருக்கிறேன். என் உயிர், இந்த உடலைப் பிரிந்தவுடன், நீயாகவே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்வாயாக
தன் முயற்சி மூலம் இறைவனை அடைய முடியாது.சுய முயற்சியான, கடினமான யோக முறைகள் மற்றும் சடங்குகள் மாத்திரம் போதுமானதல்ல. இது மிகவும் கடினமான வழி. என்னால் எதையும் செய்ய இயலாது, நீயே கதி என்று இறைவனைச் சரணடைவதால் மாத்திரமே இறைவனின் அருளைப் பெற இயலும் என்று அர்த்தம்) /
சத்தியமான வார்த்தைகள். இதைப் போன்ற வரிகளை படிக்கையில் மனது பூரண சந்தோஷத்தை அடைகிறது. இதை உணர்ந்து அவனிடம் நம்மை, சரணாகதி மூலம் அர்ப்பணித்து விட்டால், அதன்மூலம் பெறும் சந்தோஷத்தை அளவிடவே இயலாது.
நன்றாக விபரமாக எழுதியுள்ளீர்கள். படிக்கப்படிக்க மனதுக்குள் பக்திப்பரவசம் வருகிறது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஏரிகாத்த ராமர் கோவிலை இரயிலில் தி. லி யிலிருந்து சென்னை செல்லும் போது பார்த்துள்ளேன். இன்னமும் கோவிலுக்குச் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. இன்று ராமரின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். 🙏 நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
க ஹ மேடம்... உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்ச்சி.
நீக்குஒரு நாள் அந்தக் கோயில் தரிசனம் உங்களுக்கு வாய்க்க வேண்டும். அப்படியே ஶ்ரீபெரும்பூதூர் கேசவப் பெருமாள் கோயில் இராமானுஜர் சன்னிதியும். அங்குள்ள இராமானுஜர் உற்சவ விக்ரஹம் இராமானுஜரே தாம் உகந்த திருமேனி. அதை கோயிலில் வைத்த ஒரு சில நாட்களில் அவர் மறைந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் என்னுடன் வேலை பார்த்த கனகவல்லி என்னும் பெண்ணுக்குச் சொந்த ஊர். அவர் கல்யாணம் அங்கே தான் பண்ணினார்கள். அப்போத் தான் முதல் முதலாக ஐயங்கார்கள் கல்யாணத்தில் மணமகளுக்கு ஆண்டாள் கொண்டை போடுவதை அறிந்து கொண்டேன். அப்போவும் கோயிலுக்குப் போனோம். பின்னரும் போயிருக்கோம். ஆனால் ராஜீவுக்கு முடிவு நேர்ந்தப்புறமா அந்தப் பக்கமே போனதில்லை.
நீக்குநான் ராஜீவுக்கு முடிவு நேர்ந்தபிறகு அமைக்கப்பட்ட அந்த நினைவுப்பகுதிக்குச் சென்றிருக்கிறேன். இப்போ சூப்பராக இருந்தாலும் அன்று அது பனங்காட்டுப் பகுதி. எப்படித்தான் முன்னாள் பிரதமர் பிரச்சாரம் செய்ய அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ காங்கிரஸ் கயவர்கள்.
நீக்குபெண்ணுக்கு தாலி முடியும் சமயம் ஆண்டாள் கொண்டை. மாப்பிள்ளைக்கு முந்தின நாள் மஞ்சள் நீரில் நனைத்துக் காயப்போட்டுவைத்த மஞ்சள் வேஷ்டி.
இன்னமும் ஸ்ரீ பெரும்புதூர் கேசவபெருமாள் கோவில் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளவில்லை. ஆனால், நாங்கள் சென்ற வருடம் மேல்கோட்டை செல்லும் சந்தர்ப்பம் இறைவன் அருளால் கிடைத்தது. அங்கு ஸ்ரீ ராமானுஜரின் தமருகந்த திருமேனி தரிசனத்தை அவரருளால் பெற்று வந்தோம். மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. அதுபோல் ஸ்ரீ அரங்கத்தில், அவரின் தானான திருமேனி தரிசனமும் கிடைத்தது. எல்லாம் இறைவன் செயல். இறையருள் இல்லாவிடில் நம்மால் எந்த கோவிலுக்கும் செல்ல முயற்சித்தாலும், அது நடக்காது. நன்றி.
நீக்குசரணாகதி - அவன் அருளாலே அவன் தாள் பணிந்து...
பதிலளிநீக்குமிகவும் உயர்ந்ததொரு விஷயம். எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை இந்த மனப்பக்குவம். பக்குவம் அடைந்து விட்டால் எதுவுமே பெரிய விஷயமில்லை! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று இருப்பதும் அப்படியே!
சிறப்பான விளக்கங்கள். முடிந்தால் இந்தத் தொடரினை நூலாகக்கூட வெளியிடலாம்.
வாங்க தில்லி வெங்கட். சிவபுராண வரியை நல்லா கொடுத்திருக்கீங்க. அவன் நினைத்தால்தான் நமக்கு அவன் நினைவே வரும்.
நீக்குஅது அரிதான விஷயம் என்பதால் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தொடர் முடிந்தபிறகு தட்டிக் கொட்டிச் சரிப்படுத்தினால் உங்களைத்தான் அணுகணும், மின்னூலாக்கணும்னா. நன்றி
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை
கதை எழுதும் நிலையில் தற்சமயம் நான்
இல்லை...
எல்லாம் சரியாகும் துரை செல்வராஜு சார். மனம் தளர வேண்டாம். எப்போதும் இந்த மாதிரி ஏதேனும் ஒரு டாஸ்கில் ஆழ்ந்தால் உடல் தன்னாலேயே சரியாவதை உணரலாம்.
நீக்குஇன்று தஞ்சையில் 27 கருடசேவை...
பதிலளிநீக்குஉடல் நலக் கோளாறால் வெளியில்
செல்லவில்லை
எனக்கு இந்த 27 கருடசேவைக்கு வரணும் என்று எண்ணம். நீங்களும் கூட இருந்தால் எல்லாப் பெருமாளையும் தரிசனம் செய்யலாம். பார்ப்போம்.
நீக்குநெல்லையின் எழுத்து வர வர மெருஏறிக் கொண்டு வருகிறது. மிகவும் ஆழ்ந்து ஒன்றிப் போய் எழுதுவதோடு நமக்கும் அப்படியே உணரவும் வைக்கிறார். இந்த வாரம் ஆன்மிக தத்துவ விசார வாரமாக ஆகி விட்டது. மிக்க நன்றி நெல்லை.
பதிலளிநீக்குபடங்கள் ஏஐ படங்கள் இல்லையே? நன்றாக இருக்கிறது. இந்த இலச்சினைகளை எனக்குத் தெரிந்த நண்பர் குடும்பத்தில் அவரும் அவர் மனைவியும் ஆசாரியரால் போட்டுக் கொண்ட போது பார்த்திருக்கோம். மகிழ மரத்தடி மண்டபம் எங்க ஓசிபிஎம் உயர்நிலைப்பள்ளியின் மகிழமரத்தடியை நினைவூட்டுகிறது. அதன் கீழே உட்கார்ந்து தான் நாங்க மதிய உணவைச் சாப்பிடுவோம். பஞ்ச சம்ஸ்காரம் செய்வதையும் காட்டி அருளிய நெல்லைக்கு நன்றி.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... நான் ஏஐ படங்களை உபயோகப்படுத்துவதில்லை. நான் சென்றிருந்தபோது எடுத்த படங்களையே பெரும்பாலும் உபயோகிப்பேன். விட்டுப்போனதை இணையத்தில் தேடி, பொருத்தமாக உபயோகிக்கப் பார்க்கிறேன்.
நீக்குஇந்த இலச்சினை, இராமானுஜருக்காக உபயோகித்தது. அந்தக் கோயிலிலேயே இருக்கிறது.
ஒவ்வொரு ஆச்சார்யரும் இந்த மாதிரி இலச்சினைகள் வைத்திருப்பார்கள்.
பள்ளிக்காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிடும் நினைவே தனி..
காலையில் எட்டேமுக்காலுக்கு வீட்டுக்கு வந்தோம். வந்ததில் இருந்து பலவேலைகள். ஒவ்வொன்றாகச் சரி செய்ய வேண்டியது எல்லாம் இருந்தன. அவற்றை எல்லாம் சரி செய்து கொண்டு வருகிறேன். இன்னமும் வாஷிங் மெஷினும், ஏசியும் பாக்கி இருக்கு. இரு மெக்கானிக்குகளும் மதியத்தில் வருவதாகச் சொல்லி இருக்காங்க.
பதிலளிநீக்குநினைத்தேன். வீட்டை ஒழுங்கு செய்யவே சில நாட்கள் ஆகிவிடும். என் உறவினர் ஒருவர், அமெரிக்கா கிளம்புவதற்கு முன்பு, சோபா மற்றும் பல இடங்களையும் துணியால் போர்த்திவிட்டுச் செல்வார்.
நீக்குவெயில் நல்லா இருக்கா திருவரங்கத்துல?
இன்றைய பாசுரங்கள் விளக்கங்கள் கண்டோம்.
பதிலளிநீக்குசரணாகதி தத்துவம் நல்ல விளக்கம் .
ஏரிகாத்த ராமரை தரிசனம் செய்தோம். படங்களும் கண்டோம்.
கதை வித்தியாசமாக இருந்தது.
,/// எனக்கு இந்த 27 கருடசேவைக்கு வரணும் என்று
பதிலளிநீக்குஎண்ணம்.///
அடுத்த வருடம் வைகாசியில்...
தகவல் தெரிவிக்கின்றேன்..
தங்கள் அன்பினுக்கு நன்றி...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைப் பகிர்வும் நன்றாக உள்ளது. யதேச்சையாக சென்ற வாரத்தில் இக்கதையை (சீதாதேவி தன் அன்னைக்கு எழுதும் மடல் கடிதங்களை) படித்தேன். தெய்வத்தின் மறு உருவமாக இருந்தாலும், அன்னைக்கும் பெண்ணிற்கும் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் இக்கடிதங்கள் மனதிற்கு படிக்கும் போதே மகிழ்வாக இருந்தது. ஆசிரியர் நன்றாக எழுதியுள்ளார். இவரின் கதைகளையும் முன்பு படித்த நினைவு உள்ளது. ஆனால் எந்தக்கதை என இப்போது குறிப்பிடத் தெரியவில்லை. இப்போது இங்கும் மடல்களை படித்தேன். ரசித்தேன். சிறப்பான பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கடைசிப் படம், தூப்புல் விளக்கொளி பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. கோயில் அமைந்திருக்கும் தெருவே விளக்கொளி பெருமாள் கோயில் தெரு என்று அழைக்கப்பட்டு இன்று மருவி விளக்கடி பெருமாள் கோயில் தெரு ஆகியிருக்கிறது.
பதிலளிநீக்குஇன்றைய தெரு அமைப்பில் நீண்ட தெருவின் ஆரம்பப் பகுதியில் உள்ளடங்கியிருப்பதாக கோயில் அமைந்திருக்கிறது.