22.6.26

"திங்க"க்கிழமை  : கம்பு மாவு சேவை - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

 கம்பு மாவு சேவை

இந்த ரெசிப்பி பார்த்து பிடிச்சவங்க செஞ்சும் பார்க்கலாம். வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட நினைப்பவர்களுக்கு.

பிடிக்கலைனா கடந்திடலாம்!

கோமதிக்கா அவங்க கருத்தில் சொன்னபடி, சேவை / இடியாப்பம் மெஷின் பயன்படுத்துவதை காணொளி எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

கம்பு மாவு
கோதுமை மாவு (நான் சம்பா கோதுமை மாவுதான் பயன்படுத்துகிறேன். இனியவர்களுக்கு மற்ற கோதுமை மாவை விட கொஞ்சம் நல்லது என்பதால் 

கம்பு மாவு உங்களுக்குத் தேவையான அளவை எடுத்துக்கோங்க. நான் இங்கு 1 கப் மாவு தூக்கலாக - heaped - ஆக எடுத்துக் கொண்டேன். கம்பு மாவில் க்ளூட்டன் இல்லாததால் கொஞ்சம் உலர் தன்மை கொண்ட மாவு எனவே தேவைப்பட்டால் கூடவே 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவோ அல்லது 1/4 கப் கேழ்வரகு மாவோ எடுத்துக் கம்பு மாவோடு கலந்து கொள்ளலாம். நான் இம்முறை 2 டேபிள் ஸ்பூன் சம்பா கோதுமை மாவு (சம்பா கோதுமை மாவுதான் பயன்படுத்துகிறேன்) கலந்து கொண்டேன்.

சேவை என்றால் மாவை லைட்டாக வறுத்துக்கோங்க. அதாவது சூடு ஆனால் போதும். இப்படிச் செய்யாமலும் செய்யலாம்தான்.

1 1/2 கப் தண்ணீர்

ஒரு கப் மாவு + 2 மேசைக்கரண்டி கோதுமை மாவுக்கு 1 1/2 கப் தண்ணீர். என்ற அளவில், வாணலியில் விட்டு, தேவையான உப்பு போட்டு, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணையோ நல்லெண்ணையோ விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும் முன் 1 ஸ்பூன் அளவு மாவை அதில் கலந்து விடவும். இது கொதிக்கும் போது மொத்த மாவைப் போடும் போது கட்டி தட்டாமல் இருக்க உதவும். (காணொளியில் இருக்கும் பார்த்துக் கொள்ளலாம்)

தண்ணீர் கொதிக்கும் போது மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, நன்றாகக் கெட்டியாகத் திரட்டிவிடவும்.
  

அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, மாவை ஒரு மூடி போட்டு வைத்துவிட்டு கை பொறுக்கும் சூடு ஆனதும் மாவை நன்றாகப் பிசைய வேண்டும்.

அதிலிருந்து கொழுக்கட்டை செய்து ஆவியில் வேக வைத்து சேவை நாழியில் பிழிய  வேண்டும். இதோ வலப்பக்கம் இருக்கும் படத்தில் உள்ள மெஷின் பயன்படுத்திதான் நான் தற்போது பிழிந்தேன். 

சேவை ரெடி.

=========================================================================

இடியாப்பம்

இடியாப்பத்திற்கு - மாவை சற்று வாசனை வரும் வரை வறுத்துக்கோங்க. (சிவந்துவிட வேண்டாம்). 

மேலே சொன்னபடி மாவைக் கிளறி மூடி போட்டு வைத்துவிடுங்கள். (இரண்டிற்கும் இது பொதுதான். மேலே முதல் பகுதியில் கொடுத்திருக்கும் படங்கள்தான்)

கைப்பொறுக்கும் சூட்டில் மாவைப் பிசைந்து பிசைந்த மாவிலிருந்து உருண்டைகளாக அதாவது கொழுக்கட்டையாகச் செய்யவும்.

இடியாப்ப அச்சில் போட்டு முன்பெல்லாம் சேவை நாழியில் இடியாப்பத்திற்கும் பிழிவதுண்டு. இல்லைனா இடியாப்ப அச்சில் - சிலோனில் என் பாட்டி காலத்தில் வாங்கிய அச்சு என் வரை வந்திருக்கிறது. தற்போது சேவை நாழியின் கால்கள் உடைந்து போனதால் நான் விரும்பியபடி நாழி கிடைக்காததால் இந்த மெஷின் ஏதேச்சையாக அமைந்ததைச் சொல்லியிருந்தேன் இல்லையா....அதில்தான் இடியாப்ப தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்க வேண்டும். 


 இடியாப்பம் ஆவியில் வெந்தது வலப்புறம்


தேங்காய் சாதம் செய்வது போல் செய்த தேங்காய் இடியாப்பம் வலப்புறம்

இப்படி இடியாப்பம் பிழியும் போது ஒரு சுற்று பிழிந்துவிட்டு இடையில் தேங்காய்த் துருவல் தூவி அடுத்து இன்னொரு சுற்றும் பிழியலாம். நான் அன்று தேங்காய் போடவில்லை. காரணம் இடியாப்பம் பிழிந்து அதை தேங்காய் சாதம் செய்வது போல், தேங்காய் இடியாப்பம்  செய்ததால்.

இரு செய்முறைகளையும் ஒரே காணொளியாகக் கொடுத்திருக்கிறேன். காணொளி கீழே. 

13 கருத்துகள்:

  1. வித விதமா சேவைல கலக்கறீங்க. பாராட்டுகள்.

    எனக்கென்னவோ வெள்ளை நிறத்தில் சேவை இல்லைனா அவை இனிப்பு சேவைக்குத்தான் நல்லாருக்கும்னு தோணும். (ரஞ்சனி நாராயணன்ன் மேடம் வீட்டிற்கு ராகி சேவை ஒரு காலத்தில் கொண்டு வந்தது நினைவில் இருக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      ஆமா அது ஒரு காலம்!!!

      கீதா

      நீக்கு
  2. சேவைக்கும் இடியாப்பத்திற்கும் என்ன வேறுபாடு? இது கட்டாத நூல் கண்டு. அது பரத்திய நூல் கண்டு என்பது தவிர?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா உங்களுக்கு என்னை வம்புக்கு இழுக்கலைனா சாப்பாடு சாப்பிட்ட மாதிரியே இருக்காது!!!!!!!!!!!!!!!!!!!

      பாருங்க, நெல்லை இதுக்கு பல முறை இங்க விளக்கம் எல்லாம் கொடுத்தாச்சு. கடைசியா கமலா அக்கா கேட்டதற்குக் கொடுத்த நினைவு.

      போர் அடிச்சுப் பொச்சு. ஸோ no more விளக்கம்!!!!!!!!!ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. /இது கட்டாத நூல் கண்டு. அது பரத்திய நூல் கண்டு என்பது தவிர?/

      ஹா ஹா ஹா. "நூல்..!" அதனால்தான் "நூடுல்ஸ்" என்ற பெயரும் தற்காலத்தில் வந்ததோ.?

      சென்ற தடவை இடியாப்பம் விளக்கம் சகோதரி கீதாரெங்கன் தந்திருந்தார். (எங்கள் அம்மா வீட்டில் அடிக்கடி செய்வது, புகுந்த வீட்டில் சேவை செய்வது என கருத்தில் பேசினோம்..) சேவைக்கு பு. வீட்டில் மோர் குழம்பு மட்டும் கட்டாயம் உண்டு. எங்கள் அம்மா இருந்த போது, அம்மா வீட்டில் செய்த சேவை/ இடியாப்பங்கள் தேங்காய் சேவை, வெல்லச்சேவை, எலுமி சேவை, புளியோதரை சேவை, தயிர் சேவையென பல உருவங்கள் கண்டது.. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி சேவை மாற்றங்களை கண்டுணர்ந்து வந்தாகி விட்டது. ஆனாலும், இன்னமும் வீட்டில் அனைவருக்கும் "சேவை" செய்வதை நிறுத்த இயலவில்லை. :)) .

      நீக்கு
  3. நீங்க காண்பித்திருப்பது ஸ்பூன் மாதிரின்னா இருக்கு. கப் அளவு பெரிசு இல்லையா? படத்திற்காக அப்படிச் செய்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....முதல் படங்கள் - இரண்டாவது படங்கள் வித்தியாசம் தெரியலையாக்கும்?!! முதல் படங்கள் கப்....ரெண்டாவது படங்கள் ஸ்பூன்...நான் எடுத்த ஆங்கிளில் அப்படி வந்திருந்து, நெல்லை அம்புட்டுத்தான்!

      கீதா

      நீக்கு
  4. ​கம்பு சேமியா, ராகி சேமியா என்று ஆச்சி காரன் விக்குறான், வேணும் எண்டால் நம்பள் வாங்குறான்.
    ​இந்த சேமியா எல்லாம் half cooked. தண்ணீரில் 1 நிமிடம் ஊறவைத்து நீரை வடிகட்டி ஆவியில் வேகவைத்து தாளிக்க வேண்டும். நீரில் கழுவினால் கூடப்போதும். ஊறினால் தோசை மாவாகிவிடும்.
    பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கு அடியான் கம்பால் மற்றவரை அடிப்பான், அது தான் கம்பு சேவை என்று சொல்லலாம். ஹா ஹா.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா தெரியும் ஜெ கே அண்ணா, நீங்க அப்படிச் செய்வது. ஆமாம் அப்படி வாங்குவதை பாக்கெட்டில் கொடுத்திருக்கும் வழிமுறை எல்லாம் பின்பற்றாமல் நாமாகவே செஞ்சா நல்லாவே வரும்

      //பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கு அடியான் கம்பால் மற்றவரை அடிப்பான், அது தான் கம்பு சேவை என்று சொல்லலாம். ஹா ஹா.//

      சிரித்துவிட்டேன்!

      நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில், தங்களது தயாரிப்பான கம்பு மாவு சேவை, இடியாப்பம் அனைத்தும் படங்கள் செய்முறையுடன் அருமையாக வந்துள்ளது. நன்கு விளக்கமாக எழுதியுள்ளீர்கள். காணொளியும் சிறப்பாக உள்ளது. பார்த்துக் கொண்டேன். (சேவை நாழியையும்) என்னிடம் இரும்பு சேவை நாழி இருந்தது. அதில் பு. அரிசி ஊறவைத்து, அரைத்து கொழுக்கட்டைகள் போட்டு சேவை பிழிந்து வந்தேன். அது பல வீடுகள், ஊர்கள் மாறும் போது போயே போச்சு. இப்போது நான் தேன்குழல், ஓமப்பொடி பிழியும் கை நாழியில் செய்து வந்தேன். இப்போது (அதாவது தற்சமயமாக) அதுவும் முடியவில்லை. 3வி சேவை பாக்கெட் வாங்கி எப்போதாவது அப்படியே ஊறவைத்து விதவிதமான சேவைகளை பண்ணி .விடுகிறேன். (வயதாக, வயதாக சேவைகளின் மாற்றம்)

    நீங்கள் சிறுதானியங்களில் விதவிதமான சேவைகளை செய்கிறீர்கள். உங்கள் ,செய்முறைகளை, படங்களை பார்க்கும் போது எனக்கும் செய்து பார்க்கும் ஆசை வருகிறது. ஒருமுறை இவ்வாறு கம்பு மாவு வாங்கி என் கைச்செப்பிலேயே செய்து பார்க்கிறேன்.வருமா என்றுதான் தெரியவில்லை. பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடமும் இரும்பு சேவை நாழி இருந்தது, கமலாக்கா அது எப்படியோ வெளியில் போய் வீடு வந்து சேரவில்லை. பல வருடங்களுக்கு முன் அப்புறம் எவர்சில்வர்.ஹிண்டாலியமும் இருந்தது அது வீணாப் போனதும்தான் இப்ப பயன்படுத்துவது.

      நானும் நீங்க சொல்லும் முறையில்தான் சேவை செய்வது. தின்னவேலியாச்சே!

      //(வயதாக, வயதாக சேவைகளின் மாற்றம்)//

      ஹாஹாஹா நாம் செய்யும் "சேவை" களும் மாறத்தான் செய்கின்றன!

      வருகிறது. ஒருமுறை இவ்வாறு கம்பு மாவு வாங்கி என் கைச்செப்பிலேயே செய்து பார்க்கிறேன்.வருமா என்றுதான் தெரியவில்லை.//

      அக்கா, வரும்....ஆனால் மாவைக் கிளறி கொழுக்கட்டையாக வேக வைக்காமல், அதற்கு முன்பே பிழிந்து பாருங்கள் தட்டில் பிழிந்து அதன் பின் ஆவியில் வேக வைத்து...ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டைகளை கைச்சொப்பில் பிழிவது சிரமமாகிவிடும்.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!