14.7.26

சின்னஞ்சிறுகதை  :  மூன்று பெண்கள்  :  பானுமதி வெங்கடேஸ்வரன் 

 

மூன்று பெண்கள்

பானுமதி வெங்கடேஸ்வரன்

அந்த மூன்று பெண்களும் வேலையை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள்.


மல்லிகாவும், எஸ்தரும் முன்னால் நடக்க, பின்னால் வந்த மரியம், “என்னடி பேசிட்டே போறீங்க? சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க மாட்டீங்களா?” என்றாள்.

“நாமதான் நடக்கறோம், வேற என்ன நடக்குதாம்?” எஸ்தர் நக்கலாக கேட்டாள்.

இதுதான் நீ கவனிக்கற லட்சணம்! மூணு நாளா நானும் பாக்கறேன், அங்கன ஒரு காரு தெனமும் வந்து நிக்குது..”

“ஏன்கா பீச்சுனா நூறு காரு வரும், போகும், அதுல என்ன இருக்கு?”

“பீச்சுக்கு வரும் காருக்கெல்லாம் நம்ம குப்பத்தாண்ட என்ன வேலை? இதுல என்னமோ இருக்கு”

“உன்க்கு எல்லாமே சந்தேகம்” மல்லிகா சிரித்தாள். ஆனால் அன்று இரவு தன் கணவனிடம் சொன்னாள்.

மறுநாள் அந்த கார் வந்து நின்றதும், மீனவ குப்பத்து ஆண்கள் ஆறு பேர்கள் அந்த வண்டியை சூழ்ந்து கொண்டனர். வண்டி ஓட்டி வெலவெலத்து இறங்கினார். அவர் பயத்தோடு ஏதோ சொல்ல, பின் சீட்டிலிருந்த பிரபல சினிமா நடிகை விினோதா இறங்க, எல்லோரும் திகைத்து, பிரமித்தார்கள்.

“மேடம், நீங்களா..?”

“ஆமாம், என்னோட அடுத்த படத்தில் மீனவ குப்ப பெண்ணாக நடிக்கிறேன்,

அதுக்காக உங்க பெண்களை அப்சர்வ் பண்ணத்தான் தினமும் இங்க வரேன்”

“அதுக்கென்ன மேடம், தாராளமா வாங்க, உங்களுக்கு இல்லாததா? ஏன் ஓரமா உக்காந்து வேடிக்க பாக்கறீங்க? வாங்க எங்க வீட்டுக்கு” என்று வினோதாவை அழைத்துச் சென்றார்கள்.

========================================================================================

எப்போதோ படித்தது...

*அந்நிய நாட்டு அரசன் பீ ர்பாலை விருந்துக்கு அழைத்தான். தன் அரண்மனையைச் சுற்றிக் காட்டினான். அவனுக்கு அக்பரைக்  கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அதனால் கழிப்பிடத்தில் அக்பரின் படத்தை மாட்டி வைத்திருந்தான். 

'பார்த்தீரா பீர்யால்? உமது அரசனுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறேன்பாருங்கள்' என்று கிண்டலாகக் கேட்டான்.

பீர்பால் அமைதியாகச் சொன்னார் "சரியான இடத்தில்தான் அக்பரின் படத்தை மாட்டி இருககிறீர் உமக்கு மலச்சிக்கல்.  அக்பரின் படத்தைப் பாரத்தாலே உமக்கு பயம் ஏற்பட்டு வயிற்றைக் கலக்கும் மலம் கழிப்பது சுலபமாக இருக்கும். ஆகவே எமது மன்னர் படம் உமது அரண்மனையின் கழிப்பிடத்தில் இருப்பதே முறை".


)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


இளையபாரதி கவிதைகள் :


நேரில் பேசியதைப் போல் 
பின்னால் 
இல்லை மனிதர்கள். 
புத்தகத்தில் படித்ததைப் 
போல் 
இல்லை வாழ்க்கை.


நதி அறியுமோ 
நதி மூலம்?




வாழ்வதற்காக 
செத்துக் கொண்டிருக்கிறோம். 
சாவதற்காக 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மலர் உதிர்த்து சருகாகும் 
மறுபடியும் பூவாகும்.

========================================================================================


 மேலே உள்ள இரண்டுமே 1991 சுபமங்களா இதழிலிருந்து...

67 கருத்துகள்:

  1. "....அதுக்காக உங்க பெண்களை அப்சர்வ். "
    ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  2. தூரத்திலிருந்து அப்சர்வ் செய்து நடிக்கப்போகிறாரா? பரவாயில்லையே

    நடிகை வினோதாவை பேய்க்கதையில் நடிக்கக் கூப்பிட்டால் என்ன செய்வார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்லே குந்திகினு 'அப்சர்வ்' பண்ணறதை விட வெளியுலகில் கைகளை வீசி, கலந்துரையாடி சிரித்தும், சிணுங்கியும் அவர்கள் இயல்பா பழகிக் களிக்கிற பார்த்து அதையே தன் நடிப்பில் வினோதா பிரதிபலிக்கிறது
      உருப்படியான கற்றலாய் இருக்கும் இல்லையா?

      நீக்கு
    2. மேலே சொன்ன இந்தக் காரணத்தைச் சொல்லி வினோதா அவர்கள் சொல்வதை மறுத்திருந்தால் இன்னும் சிறப்பாகக் களை கட்டியிருக்குமில்லையா, நெல்லை?

      நீக்கு
    3. @நெல்லை: நல்ல கேள்வி. நாதஸ்வர வித்வானாக நடிப்பதற்காக சிவாஜி கணேசன் எம்.பி.எம்.சேதுராமன், எம்.பி.எம். பொன்னுசாமி சகோதரர்களை தன் பண்ணை வீட்டிற்கு வரவழைத்து அவர்களை வாசிக்கச் சொல்லி அப்ஸர்வ் செய்துதான் நடித்தாராம். அது மட்டுமல்ல, வியட்நாம் வீடு, கௌரவம், திருவருட்செல்வர் படத்தில் அப்பர் பாத்திரம் போன்ற பல வேடங்களை செய்ய அப்ஸ்ர்வேஷன்தான் உதவியிருக்கிறது. அதே சிவாஜி கணேசன் கர்ணனாக, ராஜ ராஜ சோழனாக நடிக்க யாரை அப்ஸர்வ் செய்தார்?. கருத்துக்கு நன்றி. கொஞ்சம் யோசித்தால் இப்படிப்பட்ட விடலைத்தனமான கேள்விகள் வராது. நன்றி.

      நீக்கு
    4. @ஜீ.வி. சார்: கதையின் முடிவில் வினோதாவை மீனவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள், பழகுவாள். மேலும் ஒரு பிரபல நடிகை ஒரு குப்பத்திற்குச் சென்று பழுகுவது அத்தனை சுலபமா? நன்றி.

      நீக்கு
    5. @ஜீ.வீ. சார்: ஒரு 20 வரி கதையில் எவ்வளவு எழுத முடியும்? அதனால்தான் எனக்கு 20 வரி கதைகள் பிடிப்பதில்லை. கதைக்குள் நாம் நுழையும் முன் முடிந்து விடும். இது ஒரு முயற்ச்சி அவ்வளவே.

      நீக்கு
    6. நீங்கள் சொல்வது சரி. இதுவே நீளம்.
      நேற்றைய பிரபல எழுத்தாளர்கள் கூட இன்று ஒரு பக்க கதைலள் எழுதுவது அவர் தங்கழ்ல் எழுத்து வன்மையை தங்களுக்குத் தாங்களே குறுக்கிக் கொண்டது போல எனக்குத் தோன்றும்

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வாண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜ் சகோதரரே. வாழ்க வளமுடன். நல்ல ஆரோக்கியத்தை உங்களுக்கு இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் சிறக்கட்டும்.

      நீக்கு
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்... இனிமேல் கதை எழுத ஆரம்பியுங்கள்.

      நீக்கு
    4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி துரை செல்வராஜ் அவர்களுக்கு. ஆரோக்கியம் முற்றிலும் சீராகிப் பழைய மாதிரி வாழத் தொடங்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜ் சார்!. உங்களுக்கு ஆரோக்கியமான, நீண்ட ஆயுளை நல்க இறைவனை வேண்டுகிறேன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சின்ன கதை நன்றாக உள்ளது. கவனித்து அதன்படி நடிக்க வேண்டுமென்ற அந்த நடிகையின் திறமையை பாராட்டுவோம்.

    பீர்பாலின் புத்திசாலித்தனமான பேச்சு அருமை.

    கவிதைகளை ரசித்தேன். இடையில் வரும் அந்த நதியின் மனப்பக்குவம் நமக்கும் வந்தால் முதல், கடைசி கவிதையின் வரிகளை துச்சமாக்கி நகர்ந்து விடலாம். மூன்றுமே அருமை. வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைய பாரதி ஓகே. அந்த 3 பெண்கள் என்றதும் சாதாரணமா என்னமோ, ஏதோனு நினைக்கத் தோணும். ஆனால் எழுதி இருப்பவர் பானுமதி என்பதால் கிட்டத்தட்ட இப்படி ஒன்றைத் தான் எதிர்பார்த்திருந்தேன். நடிகையின் ஆர்வம் இயல்பான ஒன்றே.

      நீக்கு
    2. @கமலா ஹரிஹரன்: நன்றி

      நீக்கு
    3. @கீதா சாம்பசிவம்: கருத்துக்கு நன்றி

      நீக்கு
  6. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க நலமாக பல்லாண்டுகள்.

      நீக்கு
  7. இந்தக் கவிதையையே திருப்பிப் போட்டால்?..

    பின்னால்
    இருப்பதைப் போல
    நேரில் பேசுவதில்லை
    மனிதர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாளும்
      எல்லா நேரமும்
      ஒரேமாதிரி பேசுவதில்லை 
      மனிதர்கள்

      இப்படி கூட எழுதலாம் இல்லை?!

      நீக்கு
    2. அப்போ இடக்கரடக்கலுக்கு அர்த்தமே இருக்காதே

      நீக்கு
    3. இடக்கரடல் என்றால். ?

      நீக்கு
    4. இடக்கரடல் என்றால்.?

      நீக்கு
    5. நக்கல் செய்வது நையாண்டி செய்வது மறைமுகமாக

      நீக்கு
    6. ஓ.. அப்படியா.? இதுவரை இந்த வார்த்தையை கேள்விப்பட்டதில்லை. இப்போது அர்த்தம் தெரிந்து கொண்டேன். நன்றி.

      நீக்கு
    7. பேசுவதை அடிக்கடி மாற்றினாலும் சரியாக இருக்காதே! நேரில் ஒண்ணு, பின்னால் ஒண்ணுனு எப்படிப் பேசறது?

      நீக்கு
    8. இடக்கரடக்கல் என்றால் நக்கல், நையாண்டி கிடையாது. சபையில், பல பேர்களுக்கு முன்னால் சொல்லக் கூடாததை நாசூக்காக தெரிவிப்பது. உதாரணமாக டாய்லெட் போக வேண்டும் என்பதை, லண்டன் அல்லது ஃபாரின் போக வேண்டும் என்போமே? அப்படி.

      நீக்கு
  8. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்பின் கமலா ஹரிஹரன் அவர்களது பிரார்த்தனைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்பின் அண்ணா ஜீவி அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. (தொடர்ச்சி)
    வாழ்க்கையில்
    இருப்பது போலப்
    புத்தகத்தில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஒன்று இந்த பாணியில்..

      அறிவுரை சொல்பவர்கள்
      அப்படி
      நடப்பதில்லை

      நீக்கு
    2. அறிவுரைகள்
      சொல்வதற்குதான்
      சுலபம்.
      அதை
      கடைப்பிடிப்பது
      கடினம்.
      கடினத்தை
      சுலபம்
      வெற்றி கொள்வது
      அதிசயமாகிப் போகிறது.

      நீக்கு
    3. ஸூப்பர் கமலா அக்கா.

      நீக்கு
  11. ​//நதி அறியுமோ
    நதி மூலம்?//
    ஆனால்
    சால்மன் மீன் அறியும்.
    //மலர் உதிர்த்து சருகாகும்
    மறுபடியும் பூவாகும்.//

    மலர் சருகாய் உதிரும்.
    காய் ஒன்று அங்கு தோன்றும்.
    வாழ்க்கை வாழ்வது
    நம் பிள்ளைகளுக்கே.
    /
    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. //தேரில் பேசியதைப் போல் // நேராக்கவும்.

    பதிலளிநீக்கு
  13. செவ்வாய்க்கிழமையை சுவாரசியமாக மாற்றுவது எப்படி? இந்தக் கேள்விக்கு கௌதமன் சார் நாளைக்கே பதில் சொல்லுவாரோ? :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் புதன் கிழமை பதிவை இன்னும் சுவாரசியமாக ஆக்குவது எப்படீ என்ற யோசனையில், இருக்கார்

      அது சரி நிறைய சிந்திக்க நேரம் இருக்கும் கீசா மேடம், துரை செல்வராஜ் சார் போன்றோர் கதைகள் எழுதி அனுப்பினால் வெளியிட மாட்டேன்னாசொல்றார்?

      நீக்கு
    2. எனது தட்டச்சுப் பணியில் சற்றே சுணக்கம்
      ஏற்பட்டு விட்டது...

      காரணம் உடல் நிலை...

      நீக்கு
    3. செவ்வாய்க்கிழமைகள் சுவாரசியமாக இல்லை என்று சொல்கிறீர்களா கீதா அக்கா?

      நீக்கு
  14. இளையபாரதிப் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் நல் வாழ்த்துகள் அன்பு தம்பி துரை செல்வராஜுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வாழ்த்துரைக்கு
      நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  16. அன்பு பானுவின் சின்னக் கதை சுவாரஸ்யம். கண்முன்னே நடப்பது போலக் கதை.அவரவர் கூட்டை விட்டு வெளியே வந்தால் தான் உலகே தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  17. ஏதாவது பொருள் இருக்குமா என்று தேடி
    முடியும் வாழ்க்கைக்கு
    நோய் விடை சொல்கிறது.
    நான் இல்லாவிட்டால் நீ சுகம்.

    பதிலளிநீக்கு
  18. படத்திற்கான கதை நன்று.

    பீர்பால் கதை சிறப்பு.

    கவிதைகள் மனதை தொட்டன.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  20. பானுமதி வெங்கடேஸ்வரன் சின்னஞ்சிறு கதை அருமை.
    எளிய மக்களின்பயம், அவர்களின் உபசரிப்பு எல்லாம் அழகாய் சொன்ன கதை. படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  21. எப்போதோ படித்தது

    இளையபாரதி கவிதைகள்

    பகிர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  22. சகோ துரை செல்வராஜூ அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு
      நெஞ்சார்ந்த நன்றி

      நீக்கு
  23. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு
    நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  24. வாழ்க வளமுடன் நேற்று பதிவு போட்டேன், காட்டவில்லையே !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!