வியாழனுக்கும் வெள்ளிக்கும் வித்தியாசம் கொண்டு வர போன வெள்ளிக்கிழமை கொண்டுவந்த மாற்றம் வியாபித்து வியாழனுக்கும் வந்துவிட்டது!
வாசகர்கள் வாசித்து யோசித்து கருத்து உரைக்கவும்!
அவ்வப்போது ஆங்காங்கே காணக் கிடைக்கும் வித்தியாசமான சுவாரஸ்ய தகவல்களை சேமித்து வைப்பது என் வழக்கம்.
சமீபத்தில் அப்படி சேமித்த ஒன்று இதோ:
உலகியல் ஜோதிடம்
1937 முதல் 2057 வரையிலான 120 வருட கால உலகியல் ஜோதிட பதிவு
1937 முதல் 67 வரை மேஷ ராசி செவ்வாய் ராஜாவாகவும்
1967 முதல் 1997 வரை ரிஷப ராசி அதிபர் சுக்ராச்சாரியார் ராஜாவாகவும்
1997 முதல் 2027 வரையிலான தற்போதைய காலகட்டத்தில் மிதுன ராசியின் அதிபர் புதன் பகவானும் ராஜாவாகவும்
2027 முதல் 2057 வரையிலான 30 வருட காலமும் கடக ராசியின் அதிபர் சந்திர பகவான் ராஜாவாகவும்
பலன்கள் நடக்க உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்
இது நெடிய நீண்ட பதிவு உலகியல் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் கால புருஷ தத்துவத்தின் படி முதல் ராசியான மேஷம் முதல் மீனம் வரையிலான தனது 30 வருட சுற்றுக்கு ஒரு ராசியினையும், அதன் அதிபரையும் தலைவராக ஏற்று கொண்டு சுற்றுகிறார்
இந்த முப்பது வருட காலகட்டத்தில் அந்த ராசியின் பலனை மட்டுமே அதிகமாக நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார்
ஏனென்றால் அவர் தலைமையேற்று நடத்துகின்றார் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்த அம்சமாகும். இது கால சக்கர கிரகங்களின் நியதி :
1937 முதல் 1967 வரை சனி பகவான் மேஷ ராசியின் அதிபர்
செவ்வாயை தலைவராக ஏற்று தனது முப்பது வருட சுற்றினை தொடங்கினார்
இந்த காலகட்டத்தில் தலைவராக ஏற்று கொண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து அவரின்காரகத்துவத்தை நிறைவேற்ற மட்டுமே கடமைபட்டுள்ளவர் சனி பகவான், என்பதை புரிந்து கொள்க
செவ்வாய் பகவான் - ஒரு போர் வீரன்
வீரம் என்ற காரகத்துவம்மூலமாக தனது பெருமையை உலகிற்கு தெரியபடுத்துவார்
சனி பகவானுக்கு, செவ்வாய் கடும் பகை கிரகம் என்பதாலும்,
மேஷ ராசியின் வீட்டில் சனி நீசம் பெறுவதால், 1937-to 1967 வரையிலான 30 வருட காலங்கள் சனி என்ற மக்கள் காரகன் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்
முதலாளிக்குகீழ் தொழிலாளி ஒத்துழைக்க மறுத்தால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது
சனி என்ற தொழிலாளி மேஷத்தில் நீசம் பெற்றுஒத்துழைக்க மறுத்ததன் விளைவாக, செவ்வாய் என்ற முதலாளி என்னால் முடியாத என்று தனக்குரிய வீரத்துடன் கால சக்கரத்தை தொடர...
1939 ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இரண்டாம் உலக போர் தொடங்கி 1945 ஆண்டு வரை நடந்தது
உலகம் முழுவதிலும் 1937 முதல் 1967 வரை தனது காரகத்து வமான
ராணுவ வீரர்கள் என்ற செவ்வாயின் வீரத்தை உலகுக்கு நிருபித்து காட்டினார் இந்த செவ்வாய் பகவான் ...
செவ்வாய் தனது பூமி காரகன் என்பதால் நிலத்தின் மேல் தனது ஆதிபத்தியத்தை மனிதர்களுக்கு அதிகமாக ஏற்படுத்தி தனது காரகத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டார்
1967 மேஷம் வந்த சனி 1997 மீனம் வரை சுற்றிய 30 வருட சுற்றுக்கு சுற்றுக்கு தலைமை ஏற்றவர் அசுர குரு தலைவர் சுக்ராசாரியார் என்ற சுக்ர பகவான்
ஆதிபத்தியம் பெற்ற ராசிகள்
ரிஷபம்/மற்றும் துலாம், ஆகும்
1967 முதல்97 வரை இந்த முப்பது வருட காலம் முதல் 15 வருடம் ரிஷப ராசியின் ஆதிபத்தியம் அதிகமாக இருக்கும் அடுத்த 15 வருட காலம் துலாம் ராசியின் ஆதிபத்தியம் அதிகமாக இருக்கும்
சனிக்கு பிடித்த நண்பர் என்பதால் இந்த 30 வருட காலத்தில் தனது காரகத்துவத்தை நிலை நாட்டினார்
சுக்ர பகவான் காலபுருஷ ராசியின் இரண்டாவது வீடும், தனம், குடும்பத்தினை குறிக்க கூடிய ரிஷப ராசியின் அதிபர் என்பதால்
1967-முதல் 97 - வரை மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை
இன்று கூட நாம் அனைவரும் அந்த கூட்டு குடும்ப வாழ்க்கையை நினைத்து ஏங்குவோம்
அப்படி பட்ட அழகிய கூட்டு குடும்ப வாழ்க்கையை தந்தார் சுக்ராசாரியார்,
அந்தக் குடும்பத்திலும் பெரும்பான்மையான மனிதர்கள் அன்று இரண்டு திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்திருப்பார்கள்
மேலும் தனது அடுத்த முக்கிய காரகத்து வமான
ஆடல், பாடல், இசை - இத்துறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தார்,
நாடகமாக இருந்ததை சினிமா என்ற நவீனமாக மாற்றினார்
67 - முதல் 97 வரை பெரும்பான்மையான மக்களின் பொழுது போக்கு என்பது சினிமா என்பது மட்டும் ஆகும்
அடுத்ததாக தனது ஆதிபத்தியம் பெற்ற நடிகர்களை அரசியலில் ஈடுபடுத்தி அரசியல் அதிகாரத்தையும் தனதாக மாற்றி காட்டினார்
தனது ஆதிபத்தியம் பெற்ற சினிமா நடிகர்களை, கடவுளாக கொண்டாட சனி என்ற மக்கள் காரகனை பயன்படுத்தி கொண்டார்
ரிஷப ராசியின் சின்னம்
காளை மாடு என்பதால் அன்று அதிகபட்ச மக்களின் போக்குவரத்து
மாட்டு வண்டிதான் மேலும் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவதால் சிறு தானிய உணவு வகைகளை மக்கள் அதிகமாக உண்டனர்
மேலும் பால் பொருட்கள் தயிர் மோர் நெய் பிரதான உணவாக இருந்தது
பெரும்பான்மையான மக்களின் ஆசையும் , லட்சியமும் மாட்டு வண்டிதான் என்பது குறிப்பிடதக்கது
உங்களுக்கு ஓர் சந்தேகம் எழலாம் அந்த காலகட்டத்தில் மற்ற ராசிகளின் பலன்கள் நடைபெறவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம் நடந்தது ஆனால் சுக்ராச்சாரியாரின் ஆதிபத்தியமே மற்றும் காரகத்துவமே அந்த 30 வருட காலத்தில் அதிகமாக வலுப்பெற்று முன்னிலை வகித்தது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை
ஒரு விஷயத்தை கவனித்து பாருங்கள் துலாம் ராசியில் அரசு வேலையை குறிக்கக்கூடிய சூரிய பகவான் நீசம் பெறுவார் ஆகியால் அந்த காலகட்டத்தில் அரசு வேலைக்கு செல்வதையே பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்று அரசு வேலையே எள்ளி நகையாக செய்தார் இந்த சுக்ராச்சாரியார்
எனது அடுத்த பதிவாக தொலைத்தொடர்பு மூலமாக உலகத்தையே தனது காரகத்துவம் பெற்ற கைவிரல் என்ற உள்ளங்கையில் வைத்திருக்கும் புதன் பகவானின்
1997-முதல் 2027 வரை
மேஷம் முதல் மீனம் வரை
சனி பகவான் சுற்றிய 30 வருட சுற்றுக்கு தலைமை ஏற்றவர் மிதுன ராசியின் அதிபர் புதன் பகவான்
இன்று தொலை தொடர்பு மூலமாக உலகத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கும் புதன் பகவான் தான் தற்போதைய 30 வருட சுற்றி தலைமையேற்று தனது காரகத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்
ஆம் இரு வீட்டுக்கு சொந்தமான புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் பலன்களை தற்போதைய நடந்து கொண்டிருக்கும் 30 வருட காலத்தில் கொடுத்து கொண்டுள்ளார் அதிலும்
குறிப்பாக மிதுன ராசியின் பலன்களை முதல் 15 வருடங்களிலும் கன்னி ராசியின் பலன்களை பிற்பாதி 15 வருடங்களிலும் நிறைவேற்றிக் கொண்டு உள்ளார் எப்படி புதன் என்றாலே வியாபாரம் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏற்ப
1991 முதல் இந்தியா உலக வியாபாரிகளுக்கான கதவுகளை இந்திய அரசாங்கம் திறந்து விட்டது அதாவது கார்ப்பரேட் துறை வந்தது தொலைத்தொடர்பில் பெரும் புதுமையும் பெரும்பான்மையான மக்களுக்கு டிவி செல்போன் என அனைத்தும் சென்றடைந்தது
புதனின் இன்னொரு காரகத்துவம் கல்வி அதுவும் அரசாங்கம் நடத்தி வந்த கல்வியை தனியார் துறையின் மூலமாக நடத்தி வைத்து அதிலும் தனது வியாபார யுக்தியை நிலை நிறுத்தினார்
இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கல்வி காரகம் குருவிடம் இருந்த கல்வியை தனது வியாபார புத்தியில் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றிக் காட்டினார்
அனைத்து தொழில்களிலும் முதலீடு போடாத கமிஷன் அதாவது தரகு மூலமாக பணம் பார்த்தார் நிலம் விற்றால் அவருக்கு கமிஷன் தற்போதைய காலகட்டத்தில் தான் நடந்தது நடந்து கொண்டுள்ளது
பெண்பார்க்கும் தரகர்களுக்கும் நாம் கமிஷன் கொடுக்க வேண்டும் மேட்ரிமோனி திருமண தகவல் மையம் தற்போதைய காலகட்டத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க
இந்த கலியுக வியாபாரி புதன் பகவான் 2012 முதல் 2027 வரை தனது மற்றொரு வீடான கன்னி ராசியின் பலன்களை மேலோட்டமாக புதன் பகவான் நிறைவேற்றுகின்றார் எப்படி என்றால்
கால புருஷ தத்துவத்தின் படி ஆறாம் வீடான கன்னி ராசி எதிரி நோய் கடன் என்ற மூன்று ஆதிபத்தியம் கொண்டது இக்காலகட்டத்தில் நமது மக்களிடையே கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து விட்டதை காணலாம்
அதுவும் வங்கி துறையின் மூலமாக பணம் வாங்குபவர்கள் தற்போதைய காலகட்டத்தில் அதிகம் மேலும் நோய் புதிது புதிதாக வருகின்றது
நேற்று டெங்கு இன்று கொரோனா என மக்களை வாட்டி வதைக்கின்றது
புதன் பகவானின் இந்த சுற்று 2027 ஆம் வருடத்துடன் முடிவடைகின்றது அடுத்ததாக 2027 முதல் 2057 வரையிலான 30 வருட சனி பகவானின் சுற்றுக்கு தலைமை ஏற்பவர் கால புருஷனின் நான்காம் பாவகமான சந்திர பகவான் கடகம் நீர் ராசி நீரின் காரகத்துவத்தில் சரராசி அதாவது மிக வேகமான ராசி சுப ராசி காற்றாற்று வெள்ளம் ஆறுகளை குறிக்கக் கூடியது
கடக ராசி கடக ராசியில் உள்ள புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் சூரியகுல ஸ்ரீ ராமச்சந்திரன் அதனால தான் இந்த காலகட்டத்தில் அவருக்கு அயோத்தியில் கோயில் கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஸ்ரீ ராமச்சந்திர பகவானே வழிபடும் காலம் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்து நதிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை செயல்படுத்த திட்டம் வகுக்கப்படும்
கப்பல் வழி போக்குவரத்தில் பெரும் மாற்றம் முன்னேற்றம் பிரம்மாண்டம் ஏற்படும் நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகள் இணைக்கப்பட்டு அதில் போக்குவரத்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கப்பலில் சரக்குகள் கையாளப்படும்
நீர் நிலைகளை சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றும் காலம் அடுத்த முப்பது வருட காலம் உதாரணமாக மேட்டூர் காவிரி நதிக்கரையில் இருந்து கொள்ளிடம் வரையிலான நீர் வழித்தடத்தில் படகு போக்குவரத்து நடைபெறும்
கேரளாவில் உள்ள ஆலப்புழா போன்று படகு உல்லாச விடுதிகள் நாடு எங்கிலும் மிகுந்த வரவேற்ப்பை பெறும் சனி பகவானுக்கு பிடிக்காத சந்திரன் இந்த காலகட்டத்தில் சனியின் ஆதிபத்தியமான நிலக்கரியினை முடிவுக்கு கொண்டு வருவார் அதாவது மாசு ஏற்படாத சூரிய சக்தி மின்சாரம் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்படும் சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் பெரும் முன்னேற்றம்
கடக ராசி என்பது தாய்மையை குறிக்க கூடியது எம்பெருமான் சிவனின் துணைவி தாயார் பார்வதியை குடிக்க கூடியது பெண் தெய்வ வழிபாடு மேலோங்கும் மிகுந்த சிறப்பை பெறும் பத்ரகாளியம்மன் திருவுருவங்கள் பிரம்மாண்டமாக ஏற்படுத்தப்படும் முருகப் பெருமானை குறிக்கும் செவ்வாய் பகவான் இந்த ராசியில் நீசம் பெறுவதால் முருகப் பெருமானின் விஸ்வரூப சிலைகளில் அவதாரம் பெருகும்
மருத்துவத்துறையில் கண் சம்பந்தப்பட்ட துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் இந்த காலகட்டத்தில் குருடர்களை இருக்க மாட்டார்கள் பிறப்பால் குருடர்களாக பிறந்தாலும் அவர்களுக்கு பார்வை கிடைக்கும் எப்படி என்கின்றீர்களா?
சந்திரன் இடது கண்ணிற்கு அதிபதி சூரியன் வலது கண்ணிற்கு அதிபதி அடுத்து முப்பது வருடங்களில் கண் தானம் செய்வதில் அனைத்து மக்களும் ஆர்வம் காட்டுவார்கள் விழிப்புணர்வு ஏற்படும் மேலும் செயற்கை கண் தயாரிக்கப்படும்
சந்திரன் தனது காரகத்துவத்தை நிறைவேற்றிய தீருவார் மருத்துவத்துறையில் அடுத்ததாக சந்திரன் தாய்மைக்கு அதிபதியாக வருவதால் முதன்மை சுவர் குருபகவான் இந்த ராசியில் உச்சம் பெறுவதால் அனைத்து பெண்களும்
தாய்மை ஸ்தானத்தை அடைந்தே தீருவார்கள் எப்படி என்றால் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை அங்கீகரிக்கப்பட்டு சட்டம் இயற்றப்படும் இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன் செவ்வாய் இந்த ராசியில் நீசம் பெறுவதால் செவ்வாய் என்பது பெண்களுக்கு கணவர்களைகுறிக்க கூடியது ஆண்களை குறிக்க கூடியதாக இருப்பதினால்
நடிகை நயன்தாரா சிவன் தம்பதிகள் எவ்வாறு குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அதுபோல் ஒரு காலம் வருகின்றது
ஆண்கள் இல்லாமல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம் வர இருக்கின்றது சற்று அதிர்ச்சியாகதான் இந்த செய்தி உங்களுக்கு அமையும் ஆனால் விதி வலியது
ஏனென்றால் செவ்வாய் நீசம் என்பதால் இந்த சம்பவங்கள் நடக்கும்
கனரக வண்டி வாகனங்களான லாரி பஸ் மற்றும் பொக்லின் போன்ற வண்டிகளை பெண்கள் மிகவும் சாமர்த்தியமாக இயக்குவார்கள்.
கால புருஷனின் நான்காம் பாவகம் என்பது இயந்திர பாவமாக இருக்கும் மனிதர்கள் இயந்திரங்களை நம்பக்கூடிய காலமாக இது வருகிறது
வண்டி வாகனத்திற்கு காரணமாக கடகம் வருவதால் மின்சார வண்டிகள் அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு பெரும்
வீட்டிற்கு காரகமாக மற்றும் வளர்ப்பு மிருகங்களுக்கும் காரணமாக நான்காம் பாவகம் வருவதால் நீர் வசதி உள்ள தோட்ட வீடுகளில் மக்கள் அதிகமாக வசிப்பதை விரும்புவர்
ஆடு மாடு நாய் என வளர்ப்பும் மிருகங்களை வளர்ப்பதில் மக்களுக்கு அதிக ஆர்வம் வரும்
அடுத்ததாக
2057 முதல் 87 வரை முப்பது வருட சுற்றிற்கு தலைமை ஏற்பவர் சூரிய பகவான்
இப்படி ஒவ்வொரு ராசிக்கும் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுஷ் மகரம் கும்பம் மீனம் என ஒவ்வொரு ராசியும் 30 வருட சுற்றுக்களை முடிக்கும்
1937 முதல் 2297 வரையிலான 12 ராசிகளின் தலா முப்பது வருட சுற்றின் 360 வருட காலத்திற்கும் ஒருவர் தலைமை ஏற்றுக் கொண்டு உள்ளார்
அவர் யார் என்றால் தனுசு ராசி அதிபர் குரு பகவான் அவர்தான் இந்த 360 வருட கால சுற்றுக்கு மகாராஜாவாக செயல்படுகின்றார்
தனுசு ராசியின் சின்னம் வில் அம்பு ஆகையால்தான் தற்போதைய காலகட்டத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட ராமர் கோயில் ஆனது தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது
மேலும் தனுசு ராசி வில் அம்பு ராசி என்பதால் ஆயுதம் சின்னமாகக் கொண்ட ராசி என்பதால்.......
போர்ஆயுதங்கள் மூலமாக சண்டைகள் அதிகமாக நடைபெறும் காலகட்டமாக உள்ளது ......
அதுவும் தனுசு ராசி நெருப்பு ராசி என்பதாலும் உபய நெருப்பு என்பதாலும் தற்போதைய காலகட்டத்தில் போர்களில் நெருப்புடன் கூடிய ஆயுதங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.......
அதாவது அதிக அளவு நெருப்புகளை கக்கக்கூடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது......
மேலும் எமது உலகியல் ஜோதிட ஆய்விற்கு எனது யூடியூப் சேனலில் linkகமெண்டில் கொடுத்துள்ளேன் வாய்ப்பு இருந்தால் பார்க்கவும்
9789574603
இந்தப் பதிவை இங்கே வெளியிட்ட தனுசு ராசி ஆசிரியரை நோக்கி எல்லோரும் கருத்து அம்பு எய்து அவரைத் துரத்தவும்!
= = = = = = = = = = = = =
* ஒருவேளை இதனால்தான் நடிகர் தனுஷ் (செந்தமிழில் தனுசு! ) புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளாரோ !
= = = = = = = = =
'சொன்னால் நம்பமாட்டீர்கள்' - புத்தகத்தில் சின்ன அண்ணாமலை எழுதியுள்ளது :
கல்கியைக் கண்டேன்!
தேவகோட்டைக்கு ஒரு சமயம் ராஜாஜி வந்திருந்தார். ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது கூட்டங்களில் பேச வேண்டுமென்ற மோகம் எனக்கு அதிகமாக இருந்த நேரம். ஹரிஜன ரங்கண்ணாவைக் கெஞ்சி ராஜாஜி வரும் கூட்டத்தில் பேச அனுமதி வாங்கிக் கொண்டேன். ஆனால் ராஜாஜி கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.
நான் ராஜாஜியைப் பற்றி ஆனந்தவிகடனில் வந்த கட்டுரையை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். நான் பேச ஆரம்பித்ததும் நல்ல வேளையாக ராஜாஜி வந்துவிட்டார். ஒரே கரகோஷம். எனக்கு உதறல் எடுத்தது. ஆனால் ராஜாஜி அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்து "தைரியமாகப் பேசு" என்றார்.
நான் மளமளவென்று ராஜாஜியைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்ததைப் பேசினேன். சபையோர்கள் ஒவ்வொரு கருத்துக்கும் கரகோஷம் செய்து உற்சாக ஒலி எழுப்பினார்கள். பேசி முடிந்ததும் ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு, வணங்கினேன்.
ராஜாஜி என் தலையைத் தொட்டு "நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்" என்று சொல்லி ஆசி கூறினார். ராஜாஜி மிக புத்தி கூர்மையுள்ளவரல்லவா? அதனால் நான் மனப்பாடம் செய்ததைக் கண்டு பிடித்து விட்டார்.
நான் கலக்கத்துடன் அவருக்குப் பின்புறம் போய் அமர்ந்தேன். எனக்கு அருகிலிருந்த ஒருவர் என்னைப் பார்த்து, ரொம்ப நன்றாகப் பேசினீர்கள், இதையெல்லாம் எதில் படித்தீர்கள்? என்று கேட்டாரே ஒரு கேள்வி. எனக்கு வெல வெலத்து விட்டது "ஏன்?" என்று கேட்டேன்.
"இல்லை. இதை நானும் எதிலோ படித்த மாதிரி இருக்கிறது" என்றார். சரி இனி இவரிடம் மறைக்கக்கூடாதென்று, ஆனந்த விகடனில் இருந்து என்றேன்.
"யார் எழுதியது தெரியுமா?" என்றார்.
"கல்கி" எழுதியது என்றேன் நான். "கல்கியைத் தெரியுமா?" என்றார் அவர். "தெரியாது நான் பாத்ததில்லை என்றேன்."
"பார்த்தால் என்ன செய்வீர்கள்?" என்றார் அவர். 'பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டுமென்று இருக்கிறேன்" என்றேன்.
"சரி அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க" என்றார்.
"ஏன்" என்றேன். நான்தான் அந்தக் 'கல்கி' என்றாரே பார்க்கலாம்.
எனக்கு சந்தோஷ மிகுதியால் மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. அவர் கைகளைப் பற்றி-பிடித்து என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். என் ஆனந்தக் கண்ணீர் அவர் திருக்கரங்களை நனைத்தது. நான் அவர்மீது வைத்திருந்த அன்பைக் கண்டு அவர் உருகிவிட்டார். அன்று தொடர்ந்த எங்கள் அன்பு இன்றளவும் என் இதயத்தில் பசுமையாக இருந்து வருகிறது.
= = = = = = = = = = =
How to stop worrying and start living - டேல் கார்னகி புத்தகத்தின் தமிழ் வடிவத்திலிருந்து முதல் இரண்டு பகுதிகளின் இரத்தினச் சுருக்கம். புத்தகத்தில் மேலும் பல பகுதிகள் உள்ளன. PDF வேண்டுவோர் எனக்கு செய்தி அனுப்பவும் அல்லது கருத்துரையில் பதியவும்.
= = = = = = =
முல்லா கதைகள் புத்தகத்திலிருந்து ஒரு கதை.
முல்லாவின் அறிவாற்றல்.
முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது.
அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.
முல்லா வந்து வணங்கி நின்றார்.
"முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கில் ஏற்றப்படுவீர் என்றார் மன்னன்.
முல்லா உண்மை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் அவர் உயிருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலமையை எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்று சபையோர் அவரையே கவனித்தனர்.
முல்லா மன்னனை நோக்கி "மன்னர் அவர்களே தாங்கள் என்னை தூக்கில் போடப்போகிறீர்கள" என்று பதற்றம் ஏதுமின்றிக் கூறினார்.
அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.
முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும்.
முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போடவேண்டும். தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முவ்லா மன்னனைத் திக்குமுக்காடச் செய்து விட்டார்.
அவரது அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.
= = = = = = = =
ஒருதரம் சொன்னால் போதும்!
= = = = = = = =
இதெல்லாம் ஒரு கவிதையா!
கற்பனையில் வந்தமர்ந்த
கன்னியிடம் கொடுத்தேன்
என் கவிதையை.
பார்த்தவள் கேட்டாள்
நல்ல கவிதையை
முன்னே பின்னே
பார்த்தது உண்டா?
அவளைச் சுற்றி வந்தேன்
பார்த்துவிட்டேன் என்றேன்.
= = = = = = =




ஶ்ரீராமும் கேஜிஜி பகிர்ந்த ஜோதிட விஷயங்களை நன்றாகப் படித்துவிட்டதால், இந்தக் காலகட்டத்தில் எல்லோருக்கும் கண் பார்வை மிக நன்றாக இருக்கும் என நம்பி, படிக்க முடியாதளவில் நகைச்சுவையை ஸ்கேன் பண்ணிப் போட்டிருக்கிறார். இதிலேயே ஜோதிடம் பலிக்கவில்லையே என்று யோசிக்கிறளன்.
பதிலளிநீக்கு:))) சரியாகத் தெரியவில்லையா?
நீக்குஒரே குரூப்பாக செயல்பட்டவர்களை விட எதிரும் புதிருமாக கருத்து கொண்டவர்களைப் பற்றி எழுதியிருந்தால் வாசிப்பவர்களுக்குப் புதுப்புதுப் தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஸ்ரீராமாக இருந்திருந்தால்
பதிலளிநீக்குகல்கியும் தி.ஜானகிராமனும் என்று தேர்ந்தெடுத்திருப்பார்.
நல்ல பாயிண்ட்.
நீக்குபெண்ணை ஏன் கவிதை என்று வர்ணிக்கிறார்கள்? பெரும்பாலும் இரண்டையும் புரிந்துகொள்வது மிக்க் கடினம் என்பதாலா?
பதிலளிநீக்குபுதன் கேள்வியா?
நீக்குசின்ன அண்ணாமலை, கல்கி பற்றிய பகுதி வியப்பு. இப்படி நடந்திருக்குமா என்று.
பதிலளிநீக்குகம்யூனிகேஷன் நல்ல நிலையில் இருக்கும் இக்காலத்தில், இவர்தான் இந்த நடிகருக்கு செக்யூரிட்டி என்பதுகூட எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
ஆமாம்.
நீக்குந்தி நீர் இணைப்பு.... ரொம்பவே அதீதமாகத் தோன்றுகிறது. இருக்கும் ந்தியிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற இயலாது. வெறும் பரந்தூர் விமான நிலையமே ஏழு ஆண்டுகளுக்கு மேலா இழுத்துக்கிட்டுக் கிடக்கிறது.
பதிலளிநீக்குஜோசியம்தானே... படித்துவிட்டு மறந்துவிடலாம்.
அதே, அதே!
நீக்குகவலைப்படுவதை நிறுத்தி வாழ்வது எப்படி? கருத்துகள் சொல்வதற்கு யாவும் எளிய. இந்தப் புத்தகத்தை முழுமையாக பொறுமையாகப் படிக்க முடியுமா? படித்தாலும் கடைபிடிக்க முடியுமா? கடைபிடிக்காவிட்டால், குற்ற உணர்ச்சி ஏற்படாதா என்ற கவலைகள் வந்துவிட்டன, புத்தகத்தைப் படிக்காமலேயே.
பதிலளிநீக்கு:)))
நீக்குஇன்றைய AI, கூகுளாண்டவர் தேடல் போன்றவைகளை புதன் கேள்வி பதிலுக்கு நீங்கள் துணையாகக் கொள்ளலாம். ஜோதிட சமாச்சாரங்களை விட நம்பகரமானது. நேற்றைய புதன் வாசித்த அனுபவம் இது.
பதிலளிநீக்குஅட! புதன் பதிவு வாசித்தீர்களா!
நீக்குஆனந்த விகடனில் இவர்கள் சந்தித்தால்?--/என்ற தலைப்பில் அந்த நாட்களில் ஒரு பகுதி உண்டு. எதிரும் புதிருமான இருவர் சந்திக்கும் பொழுது என்ன பேசிப்பார்கள் என்று யூகித்து எழுதுவதில் சுவாரஸ்யம் உண்டு.
நீக்குஎபி-யில் கூட இந்த மாதிரி முயற்சி செய்யலாம்.
வெவ்வேறு துறை சார்ந்த இரண்டு தொழிலதிபர்கள் சந்திக்கிற மாதிரி கற்பனை காட்சியாய் எழுதித்தான் பாருங்களேன். அவர்கள் பெயர்கள் கூட ஒரே எழுத்தில் ஆரம்பிக்காத அளவுக்கு இருவரும் எல்லாவகைகளிலும் வித்தியாசப்பட்டு இருந்தால் வாசிப்பிற்கு சுவையாக இருக்கும்.
வித்தியாச வியாழன்!
பதிலளிநீக்குஜோதிடம் ..முல்லா கதை போல இருக்கிறது.
நகைச்சுவை துணுக்குகளை படிக்க முடியவில்லை.
கவிதைக் காதலி.. good!
பாராட்டுக்கு நன்றி. குட்டுக்கும் நன்றி!
நீக்குமொபைலில் பதிவைப் படிப்பவர்கள், ஜோக் மீது கிளிக் செய்தால் அதை முழு திரையில் பார்த்துப் படிக்க முடியும்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குநீ...........ளமான பகிர்வு. :)
ஜோசியம் குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கொஞ்சம் மட்டுமே படித்தேன். தொடர்ந்து படிக்கப் பிடிக்கவில்லை.
காலி ராஜாஜி நிகழ்வு - நன்று.
இப்படி கல்கியை காலி செய்துவிட்டீர்களே! நியாயமா!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குஎல்லாவற்றையும் படித்துவிட்டேன் என்பது எனக்கே.. ஆச்சர்யமாயிருக்கிறது.
பதிலளிநீக்குஆனால், என்ன சொல்வது எனத் தெரியவில்லை!
பாராட்டாக எடுத்துக் கொள்கிறோம்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஒரு மாறுதலுக்காக சிறந்தது வியாழனா , வெள்ளியா என போட்டிகளுடன் சென்ற வெள்ளியில் ஆரம்பித்த சுற்று இந்த வியாழன் வரை நீடித்து, ஜோதிட ஆதாரங்களுடன் சிறப்பாக நகர்வது கண்டு மகிழ்வடைகிறேன். ஜோதிடங்கள் சில, பல சமயங்களில் உண்மையாகும்.
ஜோதிட அலசல் பகுதி படிக்க சுவாரஸயமாக இருந்தது. இரு தடவைகள் படித்தேன். சொல்வதெல்லாம் உண்மைதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஜோதிட பகுதியை வெளியிட்டவுடன் அடுத்ததாகவே "சொன்னால் நம்ப மாட்டீர்கள்" என சொல்லியிருக்க வேண்டாம். இருப்பினும், சின்ன அண்ணாமலை அவர்கள் தமக்கு பிடித்தமான கல்கி அவர்களை பொது இடத்தில் தீடிரென சந்தித்தது வியப்புதான். இதுவும் அவர்கள் கிரகங்களின் விகிதாசாரப்படி நடந்த ஒரு சுப நிகழ்வுதான்.
அது போல் முல்லா கதை சற்று குழப்பம். இறுதியில் தலை தப்பிய முல்லாவுக்கு பரிசுகள் கிடைத்தது அவரது ராஜயோகம்..பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகவிதை நன்றாக உள்ளது. ரசித்தேன்.
இப்போதெல்லாம் பழைய சம்பவங்களை நினைத்து கவலைப்படுவதற்கு கூட நேரமில்லாமல், நாட்கள் புதிய பிரச்சனைகளை கொண்டு வந்து நிறுத்துவதுடன் தானும் வேகமாக நகர்ந்து செல்வதுதான் மிக கவலையாக உள்ளது. கவலையை பற்றிய பகுதியையும் ரசித்துப் படித்தேன்.
நகைச்சுவைகள் நன்று. சற்று கலங்கலாக இருந்தாலும் எப்படியோ படித்து விட்டேன். என்னதான் திருட்டுப் போனாலும், பதட்டமின்றி எழுத்தாளருக்கே உரிய விமர்சனத்தை யார்தான் ரசிப்பார்கள்.? ஆம். முருகா என்று ஒருதரம் சொன்னாலே போதுமே.!!
இன்று கலவையாக (கவலை அல்ல.) தந்த பகுதிகள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது அதிசயமாக நானும் இன்று அனைத்தையும் சேர்ந்தாற் போல படித்து விட்டேன். (நாளை இவ்வாறு இயலுமா எனத் தெரியவில்லை.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தலைப்பும் அருமை. இதைச் சொல்ல நினைத்து விடுபட்டுப் போய் விட்டது. அது போல ஜோதிட பகுதி படிக்கும் போது எழுந்த எப்படியோ பாரதியாரின் "சிந்து நதியின் மிசை நிலவினிலே" கனவு பலித்தால் நன்றுதான். என்ற வரியையும் குறிப்பிட நினைத்து விடுபட்டு போய் விட்டது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம் எங்கே? மெடிக்கல் லீவா?
பதிலளிநீக்குநடந்த நடக்கப்போகும் காரியங்களை பட்டியலிட்ட ஜோசியப்பதிவை பாதி தான் பிடிக்க முடிந்தது. போர்.
ஒரு கேள்வி : நாளை டிரம்ப் என்ன பேசுவார், என்ன செய்வார் என்று எந்த ஜோசியராவது கூறமுடியுமா?
கட்டுரை ஜோக் கவிதை என்று வியாழன் உள்ளடக்கங்கள் இருந்தாலும் ஸ்ரீராம் தொகுத்தாற்ப் போல் இல்லை என்பது நன்றாக விளங்குகிறது. முக்கியமாக வீடியோ இல்லாதது.
//நல்ல கவிதையை
முன்னே பின்னே
பார்த்தது உண்டா? //
கவிதையா? கவிதாவா?
Jayakumar
முருகா சரணம்
பதிலளிநீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குசோசியப் பதிவுகளில் விருப்பம் இருப்பதில்லை...
பதிலளிநீக்குவில்லானுக்கு நீங்களும் நாணேற்றி விடுகின்றீர்களா?..
பதிலளிநீக்குவில்லான் = தனுசன்
பதிலளிநீக்கு