வியாழன் பதிவுக்கும், வெள்ளி பதிவுக்கும் வித்தியாசம் காண்பது சிரமமாக இருக்கிறது என்று பல வாசகர்கள் அபிப்பிராயப்பட்டதால், ஸ்ரீராம், இந்த வெள்ளிப் பதிவை தயாரிக்கும் வேலையை எனக்குக் கொடுத்துவிட்டார்.
இன்று ஆடி வெள்ளி - இந்த வருடத்து கடைசி ஆடி வெள்ளி.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அந்தக் காலத்தில் என் மனைவி விரதம் இருந்து கொண்டாடியது உண்டு.
ஆடிவெள்ளி - சிறப்புகள் :
- அம்மனின் அவதாரம்: உலகத்தில் அமைதியை நிலைநாட்ட அன்னை பராசக்தி பல வடிவங்களில் (மாரிமுத்து, காளி, கன்னியம்மன்) பூமிக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
- நோய் நீக்கும் வழிபாடு: ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசும். இதனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். முற்காலத்தில் நோய்களைத் தவிர்க்க அம்மனை வேண்டி கூழ் வார்த்தல் மற்றும் மூலிகைக் கஞ்சி வழங்கினர்.
- பெண்களின் பிரார்த்தனை: கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், குடும்ப வளம் பெருகவும் விரதம் இருக்கின்றனர். நிற்க!
நான் முதன் முதலில் வீடியோ பிளேயர் வாங்கிய சமயத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் : ஆடிவெள்ளி.
அந்தப் படத்தின் புத்தம் புதிய காபி அலுவலக குழு மூலம் எனக்குக் கிடைத்தது.
அந்தப் படத்தையும் அதில் வரும் பாடல்களையும் அப்போது மிகவும் இரசித்துப் பார்த்தேன். புது பிளேயர், புது அனுபவம்! இன்றும் மறக்க முடியவில்லை - அந்தப் படமும் பாடல்களும்.
தகவல்கள் :
| இயக்கம் | ராம நாராயணன் |
|---|---|
| தயாரிப்பு | என்.ராதா |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | சீதா நிழல்கள் ரவி |
| வெளியீடு | 1990 |
| ஓட்டம் | 160 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே:
1)
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன்
மரகத மூக்குத்தி
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
சங்கம் வெச்ச
பாண்டியனின் செல்லப் பொண்ணு
சொக்கனுக்குக் காத்திருக்கும்
சொக்கப் பொண்ணு
தெப்பம் போல் அம்மாடியோ
தண்ணீரில் தள்ளாடுது
அடியே பவள கொடியே
பருத்திச் செடியே மேனி சுகமா
குளிக்கும் திருப்பாவை நானும்தான்
களிக்கும் நாளல்லவா
எனக்கும் துணையாக மீனும்தான்
இருக்கும் நதியல்லவா
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன்
மரகத மூக்குத்தி
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
கள்ளழகர் தங்கச்சிதான்
மெல்ல மெல்ல கூச்சமின்றி
நீச்சலிட்டு துள்ள துள்ள
எண்ணம்தான் என்னென்னவோ
வண்ணங்கள் கொண்டாடுது
மயிலே மாலை வெயிலே
சோலைக் குயிலே மோகம் வருதா
விளக்க முடியாமல்
ஏதேதோ மயக்கம் உருவாகுது
மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும்
மனதில் கொதிப்பேறுது
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன்
மரகத மூக்குத்தி
வண்ண விழியழகி
வாசக் குழலழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே
மஞ்சக் குளிக்கையிலே காவல்
பிள்ளையாருதான்
என் மனைவி பெயர் மீனாக்ஷி என்பதால் இந்தப் பாடலை அடிக்கடி பாடி, அவரை கேலி செய்தது உண்டு!
2)
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் :
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் :
நீதானே ஒரு ஆண் யானை
பெண்பிள்ளை போலே அழக்கூடாதய்யா
இடிச்சாலும் புயல் அடிச்சாலும்
ஆகாயம் மண்ணில் விழக் கூடாதய்யா
பெண் :
ரெண்டு பேரும் வேண்டுவோம் அம்மனிடம்தான்
நிச்சயமா வாங்கலாம் நல்ல வரந்தான்
ஆத்தா கண்ணு பாத்தா துன்பம் தானா விலகும்
பாரு இங்கு பாரு இன்பம் பூவா மலரும்
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் :
நாள்தோறும் அன்பு தேனூறும்
பூவாட்டம் இங்கே எங்க அம்மா மனம்
யாராச்சும் துன்பம் ஏதாச்சும்
பட்டாலே போதும் அது வாடிவிடும்
பெண் :
என் பெத்த தாய் மனம் சொக்கத்தங்கம்தான்
எப்பொழுதும் சேர்ந்திடும் அத்த பக்கம்தான்
சோகம் விட்டு போக நல்ல காலம் வரலாம்
சேதி நல்ல சேதி நம்ம காதில் விழலாம்
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் :
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் :
நீதானே ஒரு ஆண் யானை
பெண்பிள்ளை போலே அழக்கூடாதய்யா
இடிச்சாலும் புயல் அடிச்சாலும்
ஆகாயம் மண்ணில் விழக் கூடாதய்யா
பெண் :
ரெண்டு பேரும் வேண்டுவோம் அம்மனிடம்தான்
நிச்சயமா வாங்கலாம் நல்ல வரந்தான்
ஆத்தா கண்ணு பாத்தா துன்பம் தானா விலகும்
பாரு இங்கு பாரு இன்பம் பூவா மலரும்
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் :
நாள்தோறும் அன்பு தேனூறும்
பூவாட்டம் இங்கே எங்க அம்மா மனம்
யாராச்சும் துன்பம் ஏதாச்சும்
பட்டாலே போதும் அது வாடிவிடும்
பெண் :
என் பெத்த தாய் மனம் சொக்கத்தங்கம்தான்
எப்பொழுதும் சேர்ந்திடும் அத்த பக்கம்தான்
சோகம் விட்டு போக நல்ல காலம் வரலாம்
சேதி நல்ல சேதி நம்ம காதில் விழலாம்
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் :
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
நான் சொன்னதை கேட்காமல் எதிர்த்துப் பேசினால், நான் இந்தப் பாடலைப் பாடி மனைவியை சிரிக்கவைத்தது உண்டு.
= = = = = =
அடுத்து நவராத்திரி படத்திலிருந்து நான் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்து இரசிக்கும் ஒரு காட்சி : இரண்டு திலகங்களின் அற்புத நடிப்பு. இன்றைய பதிவு பிடித்திருந்ததா?
நன்றி.
= = = =
பதிவின் ஆரம்பத்திலேயே 'எனக்கு'க்கு சொந்தமானவர் யாரென்று கித்தாப்பாக சொல்லி இருக்கலாம். அது யாரென்ற யோசனையிலேயே வாசித்தது மனதில் படியாது அழும்பு பிடித்தது.
பதிலளிநீக்கு