கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
டி.ஆர்.பி. ரேட்டிங் என்றால் என்ன? அதை எப்படி கண்டறிகிறார்கள்?
# டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் என்பதே டி ஆர் பி. (TRP)
எந்த நிகழ்ச்சி எவ்வளவு பார்க்கிறார்கள் என்பதை அளவிட்டு பதிவு செய்து கொள்ளும் விசேஷ தொலைக்காட்சி பெட்டிகளை பொருத்தமான பல வீடுகளில் பொருத்தி வைத்து அது தரும் விவரங்களின் அடிப்படையில் மக்கள் எதை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அளவிடுகிறார்கள். இதுவும் தேர்தலுக்கு முன்னர் கருத்துக்கணிப்பு சொல்வது போலத்தான். கருத்துக்கணிப்புக்கு மக்களை அணுகி கேள்வி கேட்க வேண்டும். டிஆர்பிக்கு கருவிகளை தகவல்களை தந்து விடுகின்றன.
& டாடா பிளே வழியாக தொலைக்காட்சி சானல்களைப் பார்க்கும்போது சில நேரங்களில் திரையில் 1500 A 02 - என்பது போன்ற சில இலக்கங்கள் தெரியும். இது நாம் எந்த சானல் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள லோக்கல் சர்வீஸ் புரவைடர் அனுப்பும் சங்கேத இலக்கமாக இருக்குமோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் உறுதியாக சொல்வதற்கு இல்லை!
முகநூல் மூலம் அறிமுகமாகி நன்றாக சில நாட்கள் பழகிக் கொண்டிருந்துவிட்டு, தொடர்பு விட்டு பல நாட்களாகி, திடீரென்று,போன் செய்து,"ஃபேஸ் புக்கில் உன் போஸ்ட் படித்தேன்" என்று கூறி அந்த போஸ்டைப் பற்றி எதுவும் பேசாமல் என்னென்னவோ பேசி விட்டு போனை வைத்தால் என்ன தோன்றும்?
# நட்பு புதுப்பிக்கப்பட்டுவிட்டதே என்ற மகிழ்ச்சி தோன்றும். நமது பதிவுகளுக்கு மனதில் இயல்பான ஒரு கருத்து தோன்றும் போது நமது பதிவை படிப்பவர் அதைப் பதிவு செய்கிறார். கருத்து தெரிவிப்பது என்பது ஏதோ அரசர்களுக்கு கப்பம் கட்டுவது போல் நண்பர் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு கருத்து தெரிவித்துதான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை அல்லவா!
& 1) அவர் நம்மை மறந்துவிடவில்லை / அல்லது மறைந்துவிடவில்லை என்று சந்தோஷம் வரும்.
2) அவருடைய நட்பில் நாம் தொடர்கிறோம், நம்முடன் பேச, பகிர்ந்துகொள்ள உரிய தகவல் கிடைக்கும்போது நம்முடன் தொடர்புகொள்கிறார் என்ற சந்தோஷம்.
நெல்லைத்தமிழன் :
1 இளமைக் காலத்தில் காதல் உணர்வு ஆண்களுக்குத்தான் வருமா? இல்லை பெண்களுக்கும் அந்த உணர்வு உண்டா?
# இதற்கு பெண்கள்தான் பதில் தர வேண்டும். எனினும் எல்லா உணர்ச்சிகளும் இருபாலருக்கும் பொது என்றாலும், அதன் தீவிரம் ஆண்களுக்கு அதிகம் என்று சொல்லலாமா ?
& ஆட்சேபணை இல்லை என்றால் நம் வாசகிகள் இதற்கு கருத்துரை பதியலாம்.
2.உங்களுக்கு நாமே நம் மனைவியைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வந்திருக்கிறதா? (காதல் திருமணம் செய்திருந்தால், நம் பெற்றோரையே நமக்கான பெண்ணைப் பார்க்கச் சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்திருக்கிறதா?)
# எனக்கு அந்த மாதிரி எண்ணம் வரும் சூழ்நிலை அமையவில்லை. மண வாழ்க்கையில் குறைகள் இருந்தால் அப்படித் தோன்றுவது இயல்புதான்.
& அப்படி எல்லாம் தோன்றியது இல்லை. விதி வலியது. கடவுள் அமைத்து வைத்த மேடை. எல்லாம் அவன் செயல்.
3.நம்முடைய ஆர்வம் எதிலுமே நிலையாக இருக்காததன் காரணம் என்ன? பிளாக்குகளில் எழுதி எழுதி, மற்றவர்கள் எழுதியதைப் படித்துப் படித்து மாய்ந்தவர்கள் பிறகு ஒரு காலத்தில் முற்றிலுமாக விலகிவிட்டதால் இந்தக் கேள்வி எழுகிறது.
# ஆர்வம் ஏதோ ஒன்றில் நிலையாக மாறாமல் இருக்க முழு ஈடுபாடு, ஒருவிதமான வெறி இருக்க வேண்டும். அது இல்லாது போனால் நாளடைவில் தேய்ந்து மறந்துதான் போகும்.
4.எழுத்தாளனுக்கு எப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது? சில எழுத்தாளர்கள் மயில் முட்டை இடுவது போல அபூர்வமாக படைப்புகளை உருவாக்குவதும், சில எழுத்தாளர்கள் கோழி முட்டையிடுவது போல நிறைய படைப்புகளை உருவாக்குவதன் காரணம் என்ன?
# வருமானத்திற்காக எழுதுகிறவர்கள் நிறைய எழுதி நிறைய சம்பாதிக்க முயல்கிறார்கள். ஏதோ ஒரு விஷயம் மனதில் கிளர்ந்து எழுந்து வெளிப்படத் துடிக்கும் போது, அதை எழுதுவது தான் உண்மையாக நிற்கிற எழுத்து. அந்தக் கிளர்ச்சி எல்லோருக்கும் வாராவாரம் அல்லது மாதாமாதம் என்று தேதி வைத்துக் கொண்டு வராது அல்லவா.
எழுத்தாளனின் உண்மையான உணர்வும் ஆழமான பார்வையும் அவன் எழுத்திற்கு ஒரு புது பரிமாணத்தைக் கொடுக்கின்றன. அப்படியில்லாமல் பிழைப்பிற்கு எழுதுவதில் இந்த சிறப்புக்கள் காணப்படமாட்டா.
5.வறுமையில் இருந்தால்தான் புலமை செழிக்குமா? பணம் கொழித்தாலும் செழிப்பான படைப்புகளை ஒருவரால் தர இயலுமா?
# நல்ல படைப்புக்கு வறுமை ஒரு முதலீடல்ல. உணர்வின் ஆழம் மட்டுமே எழுத்தின் தரத்தை உறுதி செய்கிறது.
& "சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்!" என்பது ஏ பி நாகராஜன் வசனம்! உண்மையா என்று தெரியாது!
= = = = = = = = =
படமும், பதமும் :
நெல்லைத்தமிழன் :
அரபு நாடுகளில் உரிமையாளர் இஷ்டப்படி செங்கல் அடுக்கின மாதிரி கட்டிடங்கள் கட்டிவிட முடியாது. ஒவ்வொரு நாடும் நாட்டின் அழகைக் கருத்தில் கொண்டு, வித்தியாசமான டிசைன்களுடன் கூடிய கட்டிடத்தையே அனுமதிக்கிறது. கத்தாரில் உள்ள பெரிய கட்டிடங்களை இந்தப் புகைப்படத்தில் எடுத்திருக்கிறேன். பாருங்க..ஒவ்வொரு கட்டிடமும் வித்தியாசமாக இருக்கிறதா?
இந்த மாதிரி கட்டிடங்கள் அந்தப் பகுதிக்கே அழகு சேர்க்கின்றன அல்லவா? வெறும்ன மைசூர்பாக்கை அடுக்கி வைத்த மாதிரி உயரமான பில்டிங்லாம் இருந்தால் அந்த அழகு இருக்காது. இன்னும் வித்தியாசமான கட்டிடங்களின் புகைப்படங்களை ஒரு தடவை தொடரில் பதிவிடுகிறேன்.
= = = = = = = = = =
ஸ்ரீராம் :
KGG பக்கம் :
சரோஜாதேவி தொடர் கதை
சென்ற வாரம் - சுட்டி : பகுதி 17 : வருவாய் வரும் வழிகள்
இனி
இந்த வாரப் பகுதி.
பகுதி 18:
பாவனா : "இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இருந்து நமக்கு விண்ணப்பங்கள் வந்தன. பல தரப்பட்ட திறமைகள், ஆர்வங்கள், நேர்வழியில் சம்பாதிக்க யோசனைகள் - இன்னும் எவ்வளவோ வகை வகையான விண்ணப்பங்கள். எல்லாவற்றையும் திரட்டி ஒரு knowledge bank data ஃபைல் உருவாக்கினோம். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை பனானா எண்டர்பிரைஸஸ் உறுப்பினராக சேர்த்துக்கொண்டு அவருக்கு உறுப்பினர் எண் கொடுத்தோம். இதில் முக்கியமான ஒரு துறை - சமூகத்தில் அநியாயமாக பணம் சம்பாதிப்பவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து அவர்களை தண்டிப்பது - என்பதில் பலருக்கும் இருந்த ஆர்வம். நாங்கள் இதை ஒரு திட்டம் மூலம் செயல்படுத்த ஆரம்பம் செய்தோம். "
பாபா : " அது என்ன திட்டம்?"
பாவனா : " உதாரணமாக 'அ' என்கிற பணமுதலையிடம் கணக்கில் வராத பணம் / நகைகள் போன்றவை உள்ளன என்ற விவரம் நம்முடைய BE உறுப்பினர் தருகிறார். அவர் informer. அந்த தகவலை நாங்கள் தகவல் சரிதானா என்று சரி பார்த்து கன்பர்ம் செய்ய அங்கு உள்ள மற்ற உறுப்பினர் (confirmer) ஒருவருக்கு அனுப்புவோம். தகவல் சரிதான் என்று தெரிந்ததும், பணமுதலை பற்றிய விவரங்கள் அந்த மாநிலத்திற்கு சம்பந்தமில்லாத வேறு மாநில BE உறுப்பினர் பெயரில் சம்பந்தப்பட்ட துறை அமலாக்க துறை, அல்லது வருமான வரி துறை போன்ற துறைகளுக்கோ அல்லது NIA விற்கு அனுப்பிவைப்போம். பனானா எண்டர்பிரைஸஸ் மூலம் வருகின்ற தகவல்கள் நம்பகமானவை என்ற விஷயம் - குறிப்பாக நாநா மீது நம்பிக்கை கொண்ட அதிகாரிகள் அந்த அலுவலகங்களில் உண்டு. அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை அல்லது அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை raid செய்து, கணக்கில் வராத பணம், பொருள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அரசாங்கத்தில் ஒப்படைப்பார்கள். கண்டுபிடிக்கப்பட்ட பணம் மதிப்பு ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பியவர் பெயருக்கு உரிய சதவிகிதம் பரிசு வரும். அவர் அதை பனானா எண்டர்பிரைஸஸுக்கு தெரிவிப்பார். நாம் சொல்லுகின்ற விகிதத்தில் பணம், சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். "
பாபா : " சூப்பர் திட்டம்! யாரைப் பற்றிய தகவல், யார் எங்கிருந்து அனுப்பினார்கள் என்று யாருக்கும் தெரியாது. கணக்கில் வராத பணம் பிடிக்கப்படுகிறது. பரிசுத் தொகை பகிர்ந்துகொள்ளப் படுகிறது!"
பாவனா : " நம்ம BE யில் உறுப்பினராக சேர்ந்தவர்கள் சிலருக்கு பங்குசந்தை மற்றும் ம்யூச்சுவல் ஃபண்ட் ஆர்வம் இருந்தது. அவர்களுக்காக SMITA ( Stock Market and International Trading Analyzer என்று ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கினோம். அது கொடுக்கின்ற டிப்ஸ் எல்லாவற்றையும் ஆர்வலர்களுக்கு அனுப்பி அதன்மூலம் அவர்கள் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்தோம். ஆனா இந்த 'துருப்பு' கிழவர் வந்ததிலிருந்து அந்தத் துறையில் சந்தை எப்பொழுது எந்த திசையில் திரும்பும் என்று தெரியாமல் நம்ம SMITA இப்போ எல்லாம் மௌன விரதம் அனுஷ்டிக்கிறது! நான் சொன்னவை எல்லாம் நம்ம BE யின் சில செயல்பாடுகள். இன்னும் நிறைய projects உள்ளன"
*** **** *****
நாநா : " ஆனந்திடமிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அவனுக்கு யாரோ ஒரு வீடியோ அனுப்பியுள்ளார்கள். அதைப் பார்த்து, அது பற்றி விவரங்கள் ஆராய்ந்து தனக்கு அனுப்பும்படி கேட்டுள்ளான். "
பாபா : " என்ன வீடியோ ?"
" கம்ப்யூட்டர் திரையில் போடுகிறேன். நாம் பார்ப்போம். "
வீடியோவைப் பார்த்த இருவரும் திடுக்கிட்டார்கள். அது வீணாவுக்கும் வேறு யாரோ ஒருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வைக் காட்டிய வீடியோ.
(தொடரும்)


அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் வளமாக நலமாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம். வாங்கோ, வாங்கோ!
நீக்குகேள்வி இளமைக் காலத்தில் பெண்களுக்கும் காதல் வருமா??? இது சரியான கேள்வி இல்லையே:)))) காதல் இல்லாத பருவமே இருக்காது என்று சொல்வேன். அது ஒரு ஈர்ப்பு தானே. என்னுடைய சிறிய வயதில் அத்தை, மாமா உறவுகளில் நிறைய நடந்ததைப் பார்த்திருக்கிறேன். பிரிவதையும் பார்த்திருக்கிறேன். சில காதல்கள் திருமணங்களிலும் முடியும்.
பதிலளிநீக்குநல்ல கருத்துரை. நன்றி.
நீக்குபீன்ஸ் படமும் கற்பனையும் ஹாஹாஹா.
பதிலளிநீக்குஸ்ரீ சார்பில் நன்றி.
நீக்குஅரபு நாடுகளில் கட்டிடக்கலை வெகுவாக வளர்ந்திருப்பதை 2004லிருந்தே பார்த்து வருகிறேன். இப்போது ஜகார்த்தாவிலும் இது போலக் கட்டிடங்கள் வருகின்றன. துபாய் போன்ற பாலைவன மணலில் இது போலக் கட்டுவதுதான் மகா ஆச்சரியம்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழனின் கத்தாரில் உள்ள பெரிய கட்டிடங்கள் அழகு.
ஸ்ரீராம் அனுப்பிய படங்களும் வரிகளும் அருமை.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குகதை நன்றாக போகிறது பாவனாவின் திட்டங்கள் அருமை.
பதிலளிநீக்குஇன்னும் நிறைய projects உள்ளன"//
இன்னும்நிறைய திட்டங்கள் வைத்து இருக்கிறார் போலவே பாவனா .
//வீடியோவைப் பார்த்த இருவரும் திடுக்கிட்டார்கள். அது வீணாவுக்கும் வேறு யாரோ ஒருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வைக் காட்டிய வீடியோ. //
இது என்ன புது குழப்பம்?
அதானே... யார் அந்த வீடியோவை அனுப்பியவர்?
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரணம்
நீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குவாழ்க.
நீக்குபுலவனிடம் செல்வம் இருந்தால் - உள்ளங்கைத்தேனே என்று ஆகி விடுவான்...
பதிலளிநீக்கு????
நீக்குஉள்ளங்கைத்தேனே...
பதிலளிநீக்குபற்பல அர்த்தங்கள் இதற்குள்
சிலவற்றைக் கூறினால் மகிழ்ச்சி அடைவோம்.
நீக்கு