20.9.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள்:: இதுவரை பார்த்தது பகுதி 2 : நெல்லைத்தமிழன்

 

நாம் சென்ற வாரத்திலிருந்து,  2025 ஜனவரி முதல் ஞாயிறு அன்று என்ன என்ன கோயில்களைப் பார்த்தோம் என்பதைப் பார்த்துவருகிறோம்.

தஞ்சை பெருவுடையார் கோயில் மற்றும் கடைசியாக இராஜராஜ சோழனின் பள்ளிப்படையைப் பார்த்தற்குப் பிறகு தஞ்சை அரண்மனையைப் பார்த்தோம். அங்கிருக்கும் கலைச் சிற்பங்கள், சரஸ்வதி மஹால்,  தஞ்சை தரணியில் பல்வேறு இடங்களில் கிடைத்த சிற்பங்களைத் தொகுப்பாக வைத்திருந்தது, மற்றும் தஞ்சை அரண்மனை தர்பார் போன்றவற்றையும் கண்டோம்.

அதன் பிறகு, மிகப் பழைமையான தாழமங்கை கோயிலைப் பற்றிப் பார்த்தோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோயில் இப்போது சிறிய கோயிலாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆற்றின் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்கள் அழிந்துபட்டன என்பதையும் பார்த்தோம்.

Thanjavur Maratha Palace Thanjavur Maratha Palace thanjavur stock pictures, royalty-free photos & images

தஞ்சை அரண்மனை மற்றும் கலைக் கருவூலம்.

 

தஞ்சை அரண்மனை – சரஸ்வதி மஹால். இந்த ஓலைச்சுவடிகளைத் தவிர, நிறைய ஓலைச்சுவடிகள் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்க இயலவில்லை. கண்டிப்பாக நாம் பார்க்கவேண்டிய இடம் இது. இங்குள்ள ஓலைச்சுவடிகளை அச்சில் கொண்டு வந்திருக்கிறார்கள் (பல சுவடிகளை). அதில் ஒன்று நான் ஆர்வமுடன் வாங்கிய   புத்தகம் ‘திருவாய்மொழி வாசகமாலை’ (இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன் என்றால் பதிவு வெகுவாக நீண்டுவிடும்)

சப்த கன்னியர், தஞ்சை அரண்மனை கலைக் கருவூலம். இந்தச் சிலைகள் என்னைக் கவர்ந்தன. ஒன்றுக்கு மேற்பட்டு இந்த மாதிரி பெண் சிலைகள் செய்யும்போது முகம் மற்றும் அவயவங்கள் ஒரே மாதிரி அமைந்துவிடக் கூடாது. நன்றாக கவனித்துச் செய்துள்ளனர்.

தஞ்சை அரண்மனை – உலோகச் சிலைக் கூடம். 

தாழமங்கை சந்திரமௌலீஸ்வரர் கோயில்

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்,  ராஜராஜேஸ்வரி அம்மன் – தாழமங்கை. 

தாழமங்கை கோயிலுக்குப் பிறகு, சிற்பங்களால் உலகப் புகழ் பெற்ற புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலைப் பார்த்தோம். சிறிய கோயில் என்றாலும் இங்கு இருக்கும் சிற்பங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. அரையடி உயரமே உள்ள இடத்திலும் நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கும் அளவு திறமை வாந்தவர்களாக தஞ்சை தரணி சிற்பிகள் இருந்தார்கள் என்பதற்கான சான்று இது.  தமிழ்நாட்டில் இராமர், இராமாயணம் போன்றவைகளே கிடையாது என்று சொல்லும் சிலருக்காக இங்கு புராணங்களையே அடிப்படையாக வைத்து பல்வேறு சிற்பங்களை வடித்திருக்கிறார்கள் என்பதைப் படங்களுடன் எழுதினோம்.

A stone building with a door

AI-generated content may be incorrect.

புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில். 

A stone carving of a hindu god

AI-generated content may be incorrect. A statue of a person in a green dress

AI-generated content may be incorrect.

உலகப் புகழ் பெற்ற விநாயகர் சிற்பம், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில். மகிஷாசுர மர்தினி. இவள் வரம் வேண்டுபவர்களுக்கு வரத்தை அள்ளிக்கொடுப்பவள். இவளைப்போன்றே இன்னும் இரண்டு தேவிகள் இருக்கின்றனர். ஒன்று திருநாகேசுவரத்திலும் இன்னொன்று பட்டீஸ்வரத்திலும். இந்த மூன்று துர்க்கை வடிவங்களையும் ஒரே சிற்பிதான் செதுக்கினான் எனச் சொல்கின்றனர்.

புள்ளமங்கை ஆலந்துறையார். 

புள்ளமங்கைக்குப் பிறகு சோழ சாம்ராஜ்ஜியத்தின் மூன்று முக்கியக் கோயில்களில் ஒன்றான, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்வரத்தைக் கண்டோம்.

A stone structure with a pyramid in the background

AI-generated content may be incorrect.

கங்கைகொண்ட சோழபுரம்,  கங்கைகொண்ட சோழீச்வரம். 

 

கருவறைக்கு முன் உள்ள சிற்பத் தொகுதி

கருவறை துவாரபாலகர்கள். 

கங்கைகொண்ட சோழீச்வரர். 

கங்கைகொண்ட சோழபுரம் சோழீச்வரம் கோயிலைப் பார்த்த பிறகு இராஜேந்திர சோழனின் அரண்மனை ஒரு காலத்தில் இருந்த மாளிகை மேடு என்ற இடத்தைப் பார்த்தோம்  முன்பிருந்த அரண்மனை பாண்டிய மன்னனால் முழுவதுமாக அழிக்கப்பட்டு தரை மட்டமாக ஆக்கப்பட்டது. சமீப காலங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டு அங்கு என்ன மாதிரியான அமைப்பு இருந்தது என்று ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டதைப் பகிர்ந்திருந்தேன். அப்படியே, அதன் எதிரில் இருந்த சிற்பக் கூடத்தையும் அங்கிருந்த சிற்பங்களையும் பார்த்தோம்.

கங்கைகொண்ட சோழபுரம் – மாளிகை மேடு (அரண்மனை இருந்த இடம்)

அரண்மனைப் பகுதி சிற்பக் கூடம் – கங்கைகொண்ட சோழபுரம். 

பராந்தகன் காலக் கல்வெட்டு. 

கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த மாளிகை மேடு பகுதி மற்றும் அதன் அருகில் இருந்த சிற்பக் கூடத்தைப் பார்த்துவிட்டு நாம் சென்ற இடம் அங்கிருந்து இரண்டு கிமீ துரத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் இருந்த பள்ளிகொண்ட பெருமாள் கோயில். இது நாதமுனிகள் காலத்திற்கும் முற்பட்டது.

பள்ளிகொண்ட பெருமாள் – நெல்லிக்குப்பம், கங்கைகொண்ட சோழபுரம். 

ஸ்ரீமந் நாதமுனிகள் வழிபட்ட ரங்கநாதர், பள்ளிகொண்ட பெருமாள் கோயில். 

பள்ளிகொண்ட பெருமாள் கோயிலுக்குப் பிறகு நாம் பார்த்த து, வைணவ வரலாற்றில், நாலாயிர திவ்யப் பிரபந்தம் கிடைப்பதற்குக் காரணமான நாதமுனிகள் பிறந்த காட்டுமன்னார் கோயில். அங்கிருக்கும் வீரநாராயணர் கோயிலைப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் நாதமுனிகள் திருவரசுவையும் கண்டோம். அதற்குப் பின், திருக்குருகைக் காவலப்பர் தியானத்தில் அமர்ந்து பிறகு உயிர் நீத்த அவரது திருவரசு அமைந்த பகுதியையும், அதனையொட்டியுள்ள வீரநாராயணப் பெருமாள் கோயிலையும் பார்த்தோம்.

வீரநாராயணப் பெருமாள் கோயில் காட்டுமன்னார். 

வீரநாராயணப் பெருமாள் என்கிற மன்னனார். காட்டுமன்னார் கோயில்

நாதமுனிகள் திருவரசு, கங்கைகொண்ட சோழபுரம். 

திருக்குருகைக் காவலப்பர் வீரநாராயணப் பெருமாள் கோயில். வலது பக்கத்தில் சிமெண்ட் பூசப்பட்ட தரையாகக் காட்சியளிப்பதுதான் திருக்குருகைக்காவலப்பருடைய திருவரசு என்று ஒருவர் எனக்குச் சொன்னார். முன்னால் சிதிலமடைந்துகிடந்த இப்பகுதியை தற்போது மேடிட்டு வைத்துள்ளார்கள் என்றார்.

இந்தக் கோயில்களின் தரிசனத்திற்குப் பிறகு, நாம் நெல்லைப் பகுதியில் உள்ள ராஜேந்திர விண்ணகரம் எனப்பட்ட மன்னார்கோயிலுக்கும், அதில் இருக்கும் குலசேகர ஆழ்வார் சன்னிதிக்கும் சென்றோம். அதையொட்டி சேரர் வரலாற்றையும் ஓரளவு பார்த்தோம். அதன் பிறகு அந்தப் பகுதியிலேயே சில கிமீ தூரத்தில் இருக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயிலையும் பிறகு அதைத் தொடர்ந்து பிரம்மதேசம் சோமஸ்கந்தர் கோயிலையும் தரிசனம் செய்தோம், அங்கிருக்கும் சிற்பங்களையும் பார்த்தோம்.

கடைசியாக கர்நாடகாவில் மத்தியரங்கம் எனப்படும் பகுதியில் உள்ள சோமஸ்கந்தர் கோயிலையும் பார்த்தோம்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் பிறகு பார்த்த கோயில்கள் சமீப வாரங்களில் எழுதப்பட்டவை என்பதால் அவற்றின் படங்களை இங்கு பகிரவில்லை.

இவ்வாறு ஓரளவு சோழ சாம்ராஜ்யம் சம்பந்தப்பட்ட பல கோயில்களை உலா வந்தோம்.  இடையில் சேரர் வரலாற்றையும் கண்டோம்.

இனி கோயில் உலாவிற்கு சிறிய இடைவேளை விட்டுவிட்டு, வேறு ஒரு தொடரைப் பார்ப்போம். அதுவரை தொடர்ந்து இணைந்திருங்கள்.

= = = = = = = = = = = =

18 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. உலகப்புகழ்பெற்ற என்று ஆரம்பிக்கும் பாராவில் சில திருத்தங்கள்:

    விநாயகர் என்ற பெருமானின் பெயரில் காணும் எழுத்துப்பிழை.
    மகிஷாசுரமர்தினி -- மகிஷாசுரமர்த்தினி
    இவள் வரம் வேண்டும். -- இவர் வரம் வேண்டும்
    அள்ளிக் கொடுப்பவள். -- அள்ளிக் கொடுப்பவர்
    இவளைப் போன்றே. -- இவரைப் போன்றே
    இரண்டு தேவிகள் -- இரண்டு தேவியர்
    ஒன்று -- ஒருவர்
    இன்னொன்று. -- இன்னொருவர்
    வடிவங்களையும். -- திரு உருவங்களையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார். இறைவி இறைவனை அவள் அவன் எனக் குறிப்பிடுவது வழக்கம்தான். மற்ற பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி

      நீக்கு
  3. //தமிழ் நாட்டில். இராமர், இராமாயணம் ----- பல்வேறு சிற்பங்களை வடித்திருக்கின்றனர்..//
    ஏன் இத்தகைய அரிய கலைஞானம் வடபுலத்தில் காணக்கிடைப்பதில்லை?
    குறிப்பாக தெய்வத்திருவுருங்களை கல்லில் வடிக்கும் பழக்கம் ஏன் அங்கு பரவவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். உங்களுக்கு கும்பகோணம் காந்தி பூங்காவில் இப்போ நடைபயிற்சி முடித்தவுடன் பதிலெழுதறேன்

      வடபுலத்தில் கோயில்கள் அதன் செல்வங்கள் தொடர்ந்த படையெடுப்புகளால் அழித்தொழிக்கப்பட்டன. சிற்பங்கள் உண்டு பகிர்கிறேன்

      நீக்கு
  4. திருத்தம்: (படக்குறிப்பில்)
    அருவறைக்கு கமுன் --- கருவறைக்கு முன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படிக்கும்போது கண்ணில் படுவதை நான் திருத்தி விடுவேன்.  அதுபோல இந்த விநாயகர், கருவறையை திருத்தி விட்ட்டேன்.  ஒன்று ஒருவர் எல்லாம் ,மாற்றவில்லை!   

      நீக்கு
    2. சரி.. நெல்லை திருத்தச் சொன்னதும் திருத்தி விடுங்கள்.

      நீக்கு
  5. இதுவரை பார்த்தவற்றை இப்படி ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தது எப்படி?  பிளாக்கில் வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தா?  அல்லது நீங்கள் அனுப்பியவற்றை வரிசைப்படுத்தியா?  நல்ல வேலை.  அதுவரை இணைந்திருங்கள் என்று ரேடியோ ஒலிபரப்பு போல சொல்லி இருப்பது புன்னகையை வரசவழைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். அடுத்து வேறு டாப்பிக் ஆரம்பிக்குமுன் திரும்பிப் பார்க்கும் ஒரு முயற்சி. என் எழுத்திலிருந்து தொகுத்தது

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கோவில் பகிர்வு நல்ல தொகுப்பு. இந்த மாதிரி கடந்தவற்றை நினைவாக ஒரு தொகுப்பாக தொகுப்பதற்கும் ஒரு திறமை, பொறுமை வேண்டும். நீங்கள் சொல்லச் சொல்ல எனக்குள்ளும் நாம் அந்தந்த கோவில்களை பார்த்ததும், அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்ததும், சேர, சோழர்கள் வரலாற்றை படித்ததும் நினைவுக்குள் வருகின்றன. உங்கள் தயவில் பல கோவில்களைப் பற்றி விரிவாக படித்துப் பார்வையிட்டோம் .உங்களின் அற்புதமான இந்த முயற்சிகளுக்கு உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இனித் தொடர்வது கோவில் சுற்றுலாவா? இல்லை வேறு எங்கேனும் சென்றவிடங்களா? எப்படியும் உங்களது அருமையான எழுத்துக்களை தொடர்ந்து நாங்கள் வருவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அனுப்பினேன் என நினைவில்லை. பாலக்காட்டு பயணமோ என நினைக்கிறேன். சனி ஞாயிறு இரண்டுக்கும் நவம்பர் முதல் வாரம் வரை அனுப்பிவிட்டேன் என நினைவு

      நீக்கு
  8. // இந்த மூன்று துர்க்கை வடிவங்களையும் ஒரே சிற்பிதான் செதுக்கினான் எனச் சொல்கின்றனர். //

    யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில புத்தகங்களில் (அவற்றை எழுதிய ஆசிரியர்கள்

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவிலும் இடம் பெற்ற இறைவனார்களை தரிசித்துக் கொண்டேன் காட்டு மன்னார் கோவில் பூதேவி, ஸ்ரீ தேவி தம்பதி சமேதராக காட்சி தந்த வீர நாராயண பெருமாள், கிடந்த கோலத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் வழிப்பட்ட பள்ளி கொண்ட பெருமாள்,கங்கைகொண்ட சோழீச்வரம், .தாழமங்கை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன், புள்ளமங்கை ஆலந்துறையார்,என அனைவரையும் கண்குளிர கண்டு தரிசித்துக் கொண்டேன். கண் கவர் பிரம்மாண்டமான கோவில் கோபுர தரிசனங்களும் கிடைத்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!