கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதால் யாருக்கு நன்மை? எதற்காக அதிகரிக்க வேண்டும்? நீங்கள் ஏதாவது நன்மையை அவர்களிடமிருந்து இதுவரை பெற்றிருக்கிறீர்களா?
# தொகுதி மிகப் பெரியதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அதில் உள்ள பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். ஜனத்தொகை கம்மியாக இருக்கும் போது அப்படி இருந்திருப்பது நியாயம்தான் ஆனால் இப்பொழுது மக்கள் தொகை பெருகிவிட்டது. தேவைகளும் பெருகியிருக்கும். ஒரு தொகுதியில் என்ன மாதிரியான தொழில்களை கொண்டு வரலாம் என்பது போன்ற பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தானே சொல்ல வேண்டும்.
எந்த நாளும் நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ நேரடியாக ஒரு தனி நபருக்கோ குடும்பத்துக்கோ பிரச்சனைகளை தீர்த்து வைப்பது என்பது அசாத்தியம் தான்.
அந்தக் காலத்தில் மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்கள் சரிவர இருக்கின்றனவா தங்கள் தொகுதிக்கு நியாயம் கிடைக்குமா என்று பார்ப்பது மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான வேலையாக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டது.
2. நாம் இந்த இலவசத்தை வாங்கக்கூடாது, இது நமக்கானது அல்ல என்று நினைத்து, ரேஷன் கார்டுக்குக் கொடுக்கும் 2000 ரூபாய், இலவச தொலைக்காட்சி, மிக்சி போன்றவற்றை வாங்காமல் தவிர்த்திருக்கிறீர்களா?
# இந்த 2000 எல்லாம் நான் வாங்கியது கிடையாது. உண்மையில் பல நாட்களுக்கு என்னிடம் ரேஷன் கார்டே இல்லை. ஆதார் வருவதற்கு முன்னால் ரேஷன் கார்டு தான் வாக்காளர் அடையாளத்திற்கு அடிப்படை ஆதாரமாக கொள்ளப்பட்டதால் ரொம்ப சிரமப்பட்டு வாங்கினேன்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல மிக்சி ஃபேன் கிரைண்டர் போன்ற விஷயங்கள் எங்கள் மேல் திணிக்கப்பட்டன. அதை வீட்டு வேலை செய்பவருக்கும் அறிந்த வேறு சிலருக்கும் கொடுத்து விட்டோம்.
& நான் ஓட்டுப் போட ஆரம்பித்த நாளிலிருந்து சென்னையில் இருந்த 40 வருட காலத்திலும் எந்த இலவசப் பொருளையோ அல்லது இலவசங்களையோ வாங்கியது கிடையாது.
3. அப்போ இந்த உடுப்பி ஹோட்டல்ல சாம்பார் வடை போடுவான் பாரு, பேப்பர் ரோஸ்டுன்னா அந்த ஹோட்டலுக்குத்தான் போகணும் ... என்றெல்லாம் நாம் சொல்கிறோமே.. அந்த ருசி இப்போது இல்லாததன் காரணம் என்ன?
# இடுபொருட்கள் தரம் குறைந்து போனதுதான் முக்கியமான காரணம். அதுபோக லாபம் கருதி சின்ன சின்ன தந்திரங்கள் செய்து உணவு பண்டங்களை விற்கிறார்கள். இதுவும் ஒரு காரணம்.
& ஒருவேளை நமக்கு பசி இருந்த காலங்களில் அவை ருசியாகவும், பசி இல்லாத இந்தக் காலங்களில் அந்த அளவு ருசி இல்லாததாகவும் தோன்றுகிறதோ?
4. பொதுவா கதம்ப சாதம் (லெமென் ரைஸ், தேங்காய் சாதம், புளியோதரை போன்று), இட்லி போன்றவைகளைக் கண்டு நமக்கு அடுத்த தலைமுறை ஓடுவதன் காரணம் என்ன? நூடுல்ஸ் பாஸ்தா பீட்சாவில் ஆர்வம் கொள்வதன் காரணம் என்ன?
# மாற்றத்தை விரும்புவது பேஷன் ஆகிவிட்டது. விளம்பர யுகத்தில் பல பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தும் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனையாகின்றன.
5. கதை அம்சமுள்ள திரைப்படங்கள், நல்ல நகைச்சுவை, அருமையான மெலோடியஸ் பாடல்கள்-அவைகளைத் தந்த இசையமைப்பாளர்கள்.. இவைகளை அனுபவித்த கடைசித் தலைமுறை நாம்தான் என்று சொல்லமுடியுமா?
# சொல்லலாம். ஆனாலும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மிக மிகச் சொற்பம். இப்போதைய படங்களில் எனக்கு எரிச்சலை தூண்டுவது பயங்கரமான வன்முறைக் காட்சிகள், மலிவான நகைச்சுவை.
= = = = = = = = = =
படமும், பதமும்.
ஹாரி பாட்டர் (Harry Potter) நாவல் எழுதப்பட்டு 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக கனடாவில் இருக்கும்,( உலகெங்கிலும்?) Tim Hortons உணவு விடுதிகளில் ஹாரி பாட்டர் கதையில் எந்தெந்த நிறங்களில் வீடுகள் குறிப்பிடப் பட்டிருக்கிறதோ அந்தந்த நிறங்களில் டோனெட்டுகளையும், குளிர் பானங்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
எனக்கு டோனெட் பிடிக்காமல்தான் இருந்தது, இங்கு வந்ததும் பிடித்து விட்டது.
நெல்லைத்தமிழன் :
( சென்ற வாரப் பதிவில் கீதா சாம்பசிவம் மேடம் கேட்ட ஜெல்லி மீன்களை (படம்தான் !!) சுடச்சுட அனுப்பிவிட்டார் நெ த )
நாங்க பஹ்ரைன்ல இருந்தபோது எங்க டிபார்ட்மெண்ட் மாத்திரம் இரண்டு நாட்களுக்கு ஹவார் தீவுகள் (ஹவாய் இல்லை. பஹ்ரைன்லேர்ந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஹவார் தீவு) சென்றிருந்தோம். அங்க தங்கறதுக்கு சாப்பிட என்று ஒரு பேக்கேஜ். போட்டில்தான் அந்த தீவுக்குப் போக முடியும். கால நிலையைப் பொறுத்து, சில சமயங்களில் கடலில் ஏகப்பட்ட ஜெல்லி மீன்கள் இருக்கும் என்று எழுதியிருந்தேன். இதுதான் அந்த ஜெல்லி மீன். நீங்க நிறைய சேனல்கள்ல பார்த்திருக்கலாம். உயிருள்ளவை. சில நேரங்கள்ல கரையோரமா இருக்கும்போது சட் என்று Tideனிலால் நீர் குறைந்தால், கரையில் இவை கிடக்கும். வெறும் காலில் பட்டது என்றால் அரிக்கும். கெட்டியா இருக்கும் சாதக் கஞ்சி மாதிரி இருக்கும்.
( கடவுளே - இனிமே சாதம் வடிச்ச கஞ்சியைப் பார்த்தாலே .. ஹக் .. )
சில நேரங்கள்ள ஆயிரக்கணக்கா பார்க்கலாம். இந்தப் படத்திலேயும் நிறைய தெரியும். படகின் இரண்டு பக்கமும் தண்ணீர்ல ஜெல்லி மீன்களைப் பார்க்கலாம். சில நேரங்களில் கடலின் வெப்பம் காரணமாகவோ இல்லை வேறு காரணமாகவோ இப்படி அளவுக்கதிகமான ஜெல்லி மீன்கள் வந்துவிடும். குடை மாதிரி அவை நீஞ்சும். மீன்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர அவை உணவுக்கானவை அல்ல. சில வெரைட்டிகள் நிறைய விஷத் தன்மை கொண்டவை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றைக் காணலாம்.
இந்தப் படத்துல ஜெல்லி மீன் நன்றாகத் தெரியும். அது நீஞ்சும் அழகே நல்லா இருக்கும். இதற்காக என்னுடைய புகைப்படக் கடலைத் தேடினபோது எத்தனையோ நினைவுகள். ஒரு நாள் எழுதணும், படங்களுடன் பகிரணும். வாய்ப்பு வருதா என்று பார்ப்போம்.
= = = = = = = = = = =
KGG பக்கம் :
சரோஜாதேவி தொடர் கதை
சென்ற வாரம் - சுட்டி : பகுதி 12 : " நாநாவின் திட்டம் : MCEL 02 "
இனி
இந்த வாரப் பகுதி.
பகுதி 13 : பாவனா டீச்சர் !




டோனட்டை பிடிக்காமல் இருந்ததா? ஆச்சர்யம்தான். பஹ்ரைனில் வித வித டோனட்டுகள் நிறைய கடைகளில் (இதற்காக உள்ள ஸ்பெஷலைஸ்ட் கடைகள்) கிடைக்கும். பசங்களுக்கு மினி டோனட் பிடிக்கும். எனக்கு, ஜாம்லாம் வைத்த பலவித டோனட் பிடிக்கும்.
பதிலளிநீக்குஅடிக்கடிலாம் வாங்கித் தரமாட்டேன். மாதம் ஒரு தடவை என்றாலே அதிகம்தான். காரணம் பசங்களுக்கு எடை போட்டுவிடும், ஹெல்த்துக்கு நல்லதல்ல என்ற பயம்தான்.
ஆப்பிள்கள் காய்த்துத் தொங்கும்போது ஹிமாச்சல் பிரதேஷுக்குச் சுற்றுலா போகணும், அப்போ பறித்த ஆப்பிள்களைச் சாப்பிடணும் என்றெல்லாம் ஆசை. எப்போ வாய்ப்பு அமையுமோ.
பதிலளிநீக்குஎனக்கு மரங்களை, அதிலும் காய், பழ மரங்களை வெட்டினால் பிடிக்காது. எங்கள் வீட்டில் இருந்த ஆறு வித வித மாமரங்களையும் தம்பி வீடு கட்ட வெட்டியது எனக்கு ரொம்பவே வருத்தம்.
துளசி டீச்சரின் தொடரில், அவர் தற்போது இருக்கும் வீட்டைக் கட்டும்போதுஆப்பிள் மரங்களை வெட்டிவிட்டோம் என எழுதியதைப் படித்தபோது, அட்டா இப்படிப் பண்ணிட்டாங்களே என நினைத்தேன்.
பாவனா, தமன்னா அனுக்கா... ஏஐ இவர்கள் சாயலில் படங்கள் கொடுக்கலை போல
பதிலளிநீக்கு