நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
23.10.26
சொல்லவா.. கதை சொல்லவா.. நடந்த கதை சொல்லவா...
ஆம்புலன்ஸ் கதையைச் சொன்ன கையோடு இன்னொரு கதையும் சொல்லி விடுகிறேன். இது ஒருவேளை உங்களுக்கும் உபயோகமாயிருக்கலாம். அல்லது நீங்களும் அனுபவித்திருக்கலாம்.
வளைகாப்பு சீமந்தம் முடிந்த கையோடு ( இந்த கூகுளில் kaiyodu என்று அடித்துப் பாருங்களேன்.. கையேடு என்றுதான் முதல் ஆப்ஷன் கொடுக்கும். சுந்தர் பிச்சையிடம் சொல்ல வேண்டும்) மாமியார் உடல்நிலை சற்றே சீர்கேடு அடைந்தது. மூச்சு இறைத்தது. களைப்பானார். எதற்கும் இருக்கட்டும் என்று ஏரியாவில் இருந்த அந்த மல்ட்டிஸ்பெஷாலிட்டி (பெயரே கொடுக்கவில்லை என்பதால் 'பெயர் மாற்றப்பட்டுள்ளது' என்று எச்சரிக்கை கொடுக்கவில்லை! ஹிஹிஹி) ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம்.
அங்குதான் மாமியாரின் அன்புக்குரிய ஆஸ்தான (பெண்) மருத்துவர் இருந்தார். அவர் எதிர்பார்த்த மாதிரியே அட்மிஷன் போட்டு விட்டார். சென்ற செப்டம்பர் மாதம் இவரைப் பார்த்தபோது மாமியாரின் இதயம் 25%தான் வேலை செய்வதால் பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி இருந்தார். இப்போது இன்னமும் க்ஷீண நிலையில் இருப்பதாகச் சொன்னார்.
அது என்ன மாயமோ தெரியல, மர்மமோ புரியல... அதுவரைக்கும் ஒழுங்காய் இருந்த மாமியாரின் ஆக்சிஜன் லெவல் அட்மிஷன் என்று இரண்டாவது மாடியில் இருந்த ஒரு அறைக்கு அவரை அழைத்துச் சென்றதும் டப்பென இறங்கத் தொடங்கியது. 30,89,88,84,85, என்று 70 வரை வந்து ஆட்டம் காட்டியது. போதாதா?
மாட்டு ஆக்சிஜனை..
மல்ட்டி என்று ஆரம்பித்தாலே மனம் மல்ட்டிநேஷனல் என்று வார்த்தையை ஃபில் அப் செய்கிறது!
இந்த மல்ட்டிஸ்பெஷாலிட்டி என்று போட்டுக் கொள்ளும் மருத்துவமனைகளை பயங்கர ரெய்ட் விடவேண்டும். கணவன் மனைவியாகவோ, இரண்டு நண்பர்களாகவோ ஒரு இடத்தைப் பிடித்து வாடகைக்கு அமர்ந்து மருத்துவம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கொஞ்ச நாளில் முதலில் உள்ளேயே ஒரு பார்மஸி அமைத்துக் கொள்வார்கள். அடுத்ததாக ஒரு சிறு அறை ஒதுக்கி இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி ஊசி போட ஏற்பாடு செய்வார்கள். இதன்பிறகு வருபவர்கள் அனைவருக்கும் ஊசி உண்டு! அவர்கள் எழுதும் மாத்திரைகள் 70% அவர்கள் பார்மசியில்தான் கிடைக்கும்!
மெல்ல மெல்ல எஸ்டாப்ளிஷ் ஆனவுடன் அந்த இடத்தை விலைக்கு வாங்குவார்கள். அல்லது அருகிலேயே ஒரு இடம்! உள் நோயாளியாக தங்கும் வசதிக்கு மூன்று நான்கு குகைகள் போல டஞ்சன்கள் தயாராகும். ரிஸப்ஷன் மேஜை முன்னதாகவே முன்னே வந்திருக்கும். அங்கு இரண்டு பேரிளம் பெண்கள் மேக்கப்புடன் காட்சி தருவார்கள்.
இதெல்லாம் நாங்கள் சென்ற மல்ட்டிஸ்பெஷாலிட்டிக்கும் பொருந்தும். படிப்படியாக அதன் வளர்ச்சியை நாங்கள் பார்த்து வந்தோம். ஆரம்பம் முதல் அங்கு சென்றுகொண்டும் இருந்தோம். அங்கு வந்து சென்ற பிசியோதெரபிஸ்ட் அருகிலேயே இடம்பிடித்து பிசியோதெரபி க்ளினிக் தொடங்கினார்.
ஆல் செட்! மேடம் வெற்றிகரமாக உண்மையிலேயே நல்லபடியாக பிரசவம் பார்த்து பேர்வாங்கினார்.
'சரி,, இதுல என்ன பிரச்சனைன்னு கேக்கற உங்க மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்குது..
என் சிறு வயதில் கடலூரில் நூலகத்திற்குப் போய், பெரும்பாலும் இங்கிலாந்து அமெரிக்க நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் நிறைய படித்துப் பார்ப்பேன்.
விரைவில் வேலை கிடைத்து நீலகிரியில் வாழ்க்கை தொடர்ந்தது. அங்கு ஒரு நண்பருக்கு அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பேனா நண்பராக இருந்தார். என் நண்பர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் அமெரிக்காவில் இருந்து பிரபல பத்திரிகைகளை கப்பல் மூலம் இவருக்கு அனுப்புவார். அந்தக் காலத்தில் இது சாத்தியமாக வேண்டும் என்றால் அனுப்புகிறவர் பெரிய பணக்காரராக இருக்க வேண்டும். மாதம் ஒரு முறை சுமார் 3 கிலோ பத்திரிகைகள் வரும். நண்பரோடு சேர்ந்து நானும் சிறந்த வார மாத சஞ்சிகைகளை ஆர்வமாகப் படிப்பேன்.
அந்த சமயம் இந்திய அமெரிக்க நட்புறவுக் கழகம் என்று ஒன்று தொடங்கப்பட்டு இந்திய அமெரிக்கர்கள் இடையே பேனா நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவரவர் வயது விருப்பம் இவற்றுக்கிணங்க ஒத்த கருத்து உள்ளவர்களை நண்பர்கள் ஆக்கி வைத்தார்கள். எனக்கும் என் வயது உள்ள ஒரு அமெரிக்கப் பெண்மணி நண்பியாகக் கிடைத்தார். அவரோடு வாரம் ஒரு முறை அவரவர் நாட்டு வழக்கங்கள் வாழ்க்கை முறைகள் இலக்கியம் இப்படி எல்லாம் பலவாறாகப் பேசி வந்தோம்.
என் கடிதத்தைப் பார்த்து " நீங்கள் இவ்வளவு நன்றாக ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இந்தியா என்றால் நாங்கள் இங்கு அது ஒரு அதிகம் முன்னேறாத நாடு, வீதிகள் முழுதும் பாம்பாட்டிகளும் குரங்காட்டிகளும் நிறைந்து இருப்பார்கள் என்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் " என்று எழுதி இருந்தார். எனக்கு ஒரே ரோசமாக இருந்தது. நம் பெருமைகளைப் பற்றி அவருக்கு மீண்டும் மீண்டும் வழக்கமாக எழுதிக் கொண்டு வந்தேன். நடுவே நடுவே அமெரிக்காவைப் பற்றி அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு எவ்வளவு நிறையத் தெரியும் என்பதையும் சாமர்த்தியமாக புகுத்திக் கொண்டிருந்தேன். அவரும் எல்லாவற்றையும் மிகவும் ரசித்துப் படித்து பதில் எழுதிக் கொண்டிருந்தார்.
எனக்கு புகைப்பட ஆர்வம் உண்டு என்று நான் சொல்லித் தெரிந்துகொண்ட அவர் திடீரென்று எனக்கு ஒரு எளிய கேமரா , அதோடு பத்து ரோல் பிலிம், சுமார் 60 ஃப்ளாஷ் பல்புகள் என்று அனுப்பி வைத்து என்னைத் திகைக்க வைத்தார். இதற்குத் தகுந்த பதில் மரியாதை செய்யும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லாததால் , அந்த கடிதப் போக்குவரத்தையே நிறுத்திக் கொண்டேன்.
எனது நண்பர் அவருடைய அமெரிக்க நண்பருக்கு அவ்வப்போது பட்டுப்புடவை பித்தளை விக்ரகம் போன்ற பொருத்தமான பரிசுகளை அனுப்பி வந்தார். அவர்கள் நட்பு பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
இந்த நண்பரிடம் ஒரு விசித்திரமான வழக்கம் இருந்தது. பவுடர் பேஸ்ட் போன்ற எந்தப் பொருளானாலும் அதை சில நாட்களுக்கு உபயோகித்து விட்டு, " சே ! இதை உபயோகித்து அலுத்துவிட்டது " என்று வாசலில் எறிந்து விடுவார். அவருடன் இது பற்றி விவாதம் செய்து இப்படி விரயம் செய்யலாமா என்று கேட்டபோது " எனக்கு போர் அடித்தால் நான் என்ன செய்யட்டும் ? வேண்டுமானால் நீங்கள் அதை எடுத்துக்கொண்டு போங்கள் " என்று என்னிடம் கொடுத்து விடுவார். பல நாட்களுக்கு நான் பேஸ்ட் பவுடர் மாதிரி பொருள்கள் வாங்காமலே இப்படி ஓசியில் சமாளித்து இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பேஸ்புக் வாட்ஸ் அப் மாதிரி வசதிகள் வந்திருக்கும் போது வெளிநாட்டு நண்பர்கள் இருந்தால் மிகவும் சுவாரஸ்யமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பத்திரிக்கைகள் படிப்பது இலக்கிய ரசனை எல்லாம் தேய்ந்து போனது போலவே நண்பர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கமும் தேய்ந்து தான் போயிருக்கிறது. எதுவானாலும் 5 அல்லது 10 நிமிஷங்களுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கஷ்டமாக ஆகிப்போன காலம்.
முடிப்பதற்கு முன்னால் என் அமெரிக்கப் பேனா நண்பி எழுதிய ஒரு செய்தியை சொல்லி முடிக்கிறேன். " நேற்று ஜனாதிபதி கென்னடியின் கொலைக்குக் காரணமான பெரிய பணக்காரர் ஒருவருடன் லிப்டில் பயணித்தேன். அந்த சமயத்தில் நான் அனுபவித்த என் மன உணர்வுகளை தெளிவாக சொல்லுவது கஷ்டம். "
1938ஆம் ஆண்டிலேயே அவர் கவிதை எழுதத் தொடங்கி யிருந்தாலும் 60-ன் இடையிலும் 70-ன் இடையிலும் மீண்டும் 80-ன் இடையிலும்தான் அதிகமும் எழுதினார் என்று தெரி கிறது. இதற்கிடையில் வளர்ந்து வந்த புதுக்கவிதைக்கு விமர்சகராகவும் மாறத் தொடங்கினார்.
இந்த விமர்சனப் பார்வையில் எழுத்து என்ற பத்திரிகையின் மூலம் தெரியவந்த பல கவிஞர்களை அவர் ஏற்க மறுத்தார், பிச்சமூர்த்தியின் கவிதைகளில் அவருக்குப் பலமான சந்தேகம் தோன்றியது. ஒருசமயம் பிச்சமூர்த்தியின் கவிதையை ஏற்கத் தயக்கமும், ஒருசமயம் அதுவும் ஏற்புடையதுதான் என்ற அரைகுறை யான ஒப்புதலும் அவருக்கு இருந்து வந்தது. புதுக்கவிதை தொடக்ககால இயக்கத்துக்கு (இதை 1960-ன் தொடக்கம் என்றே கொள்ள வேண்டும். தமிழில் புதுக்கவிதைக்கு நூறாண்டுக்கு மேலான வரலாறு காட்ட முடியும்.
ஆனால் 1860இல் இரண்டொருவர், 1910-15இல் பாரதி என்று தனித்தனிக் கவிஞர்களின் ஆதர்சமாக இருந்து 1960இல்தான் பல கவிஞர்கள் கவிஞர்களின் பொதுநோக்காகப் புதுக்கவிதை மலர்ந்தது) உந்துதலாக பிச்சமூர்த்தி இருந்தார் என்ற அளவிலே அவருக்கு இடம் என்று க.நா.சு. முடிவுக்கு வந்தார். எழுத்துக் கவிஞர்களிலே பலரையும் அவர் பொருட்படுத்த வேண்டியவர்கள் அல்லர் என்று தள்ளியது, காலம் சரி என்று ஒப்புக்கொண்டு விட்டது.
இவர்களுக்குப் பதிலாக ஷண்முக சுப்பையா, சுந்தர ராமசாமி, நகுலன் ஆகியோரைப் புதுக் கவிஞர்களாக அவர் நினைத்தார். இந்த மூன்று பேரில் ஷண்முக சுப்பையா எழுதுவது நின்று போக அவருக்குக் கொடுத்த இடத்தைக் க.நா.சு. குறைத்துவிட்டார்.
அதே போல சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளைக் குறித்த கண்ணோட்டமே அவருக்கு மாறி விட்டது. பிரமுகராகும் முயற்சிக்குக் கருவியாக கவிதையை யும், நாவலையும் பயன்படுத்துகிறார் என்றும், அவர் எழுத்து obtuse ஆக இருக்கிறது என்றும் கருதினார்.
எனது கவிதை களில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டென்றாலும் நகுலனையே முக்கியமாகக் குறிப்பிட்டார். முந்தைய சகாப்தங்களில் என்னையும் நகுலனையுமே அவர் எடுத்துக் கொண் டாலும் பின்பு வந்த கவிஞர்களில் பிரம்மராஜன், விக்ரமாதித்யன், சுகி ஆகியோரின் கவிதைகளில் அவர் ஈடுபாடு காட்டினார். ஆனால் அவருக்கு ஆத்மாநாமின் கவிதைகள் பிடிபடவில்லை. நா.காமராசன், மு. மேத்தா மற்றும் வைரமுத்து ஆகியவர்களின் கவிதைகளை அவர் வெறுத்தார் என்றே சொல்லவேண்டும். ஆனால் தற்பொழுது உள்ள கவிஞர்களில் பதினைந்து கவிஞர்களாவது அவருடைய கருத்துப்படி இன்றைய கவிதை இலக்கியத்தைப் படைக்கிறார்கள் என்று சொல்லலாம்.
க.நா.சு.வின் கவிதைகளில் பல, பழைய மற்றும் புதிய இலக்கியக் கோட்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமையக் கூடும். புதுக்கவிதையின் மூத்த ஆசிரியர்களில் அவருடைய இடம் உறுதியானது. ஆனால் இந்த உறுதியை அவரது விமர்சனத் தோற்றமே பெரிதும் பாதிக்கிறது. சகல தரப்பின ரும் எதிரியாகத் தன்னைப் பாவிக்கும்படி அவர் செய்து கொண்டார். அவரை வெளியிட விரும்பாதவர்களின் தொகையை அவர் கூட்டிக் கொண்டார்.
பிறருக்கு உகக்காததைச்
சொன்னவருக் கென்று
ஒருதனி நரகம் உண்டென்றால்
அங்குதான் நான்போவேன்
அங்குள்ளவருக்கும்
உகக்காததைச் சொல்ல
எனக்குத் தெரியும். அங்
கிருந்து எங்கு போவேனோ
தெரியாது.
இந்தக் கவிதையில் க.நா.சு. தன்னைப் பற்றிய உண்மை யைத் தெரிவிக்கிறார். அந்த உண்மை உகக்காததைச் சொல்வதில் தன்னையும் மீறிய விதி போன்ற நிர்ப்பந்தம் தனக்கிருந்ததை அவர் உணர்ந்ததுதான். இந்தப் பண்பு அவரை முகஸ்துதி செய்யவோ விட்டுக் கொடுக்கவோ அனு மதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காலத்தவருக்கு உகக் காததைச் சொன்னவரே தவிர எதிர்காலத்தவருக்கல்ல. எதிர் காலத்தவர்கள் அதாவது அவரால் நேரிலோ மறைவாகவோ பாதிக்கப்பட்ட கருத்து ஊட்டம் இல்லாமல் முதலாவதாகப் படிப்பவர்கள் அவரது கவிதைகளை விரும்புவார்கள். அவரது கவிதையின் எளிமையையும், பட்டுப்போன்ற அதன் சருமத் தையும், கருத்தாழம் என்பதற்கு மாறான உணர்வாழத்தை யும் அவர்கள் உணர்வார்கள்.
க.நா.சு.வின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் ஞானச்சேரி பாராட்டுக்குரியதாகும். ஏனெனில் அவரை வெளியிடுவது வியாபாரம் அல்ல.
14-3-1989
ஞானக்கூத்தன்
க நா சு கவிதை இரண்டு
மின்னல் கீற்று
புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்.
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் -ஆஹா! இன்பம்!
-ஆஹா! ஆஹா!
சட்டச்சட! பத்துத் தூற்றல்கள்
பத்தே பத்துத் தூற்றல் தான் பின்னர் புழுதியைக் கிளறிய
காற்று விசிற மழை ஓடி நகர்ந்து விட்டது கரியவானம்
கீற்று என்னைத் தேடிற்று
பிளந்து கொண்டு கோடை மின்னல்
கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடைமின் கீற்று
என்னைத் தொட்டிருக்கும்; உலகை
தினசரிச் செய்திகள் அற்றிருக்கும்; அழித்திருக்கும்; தூற்றல் இன்பம்
மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்; புழுதி
மாலைமதியில் வந்த சுஜாதாவின் நாவல் விபரீத கோட்பாடு. வெளிவந்தவுடன் சுடச்சுட நான் வாங்கிப் படித்த நாவல். அதற்கு வந்த வாசகர் கடிதங்கள் அதற்கு அடுத்த மாலைமதியில் வெளியாகின.. அவை..
- 'விபரீதக் கோட்பாடு' படித்தேன். முடிவை முன்ன தாகவே ஊகிக்க முடியாதபடி இவ்வளவு சுவையாக, அருமை யாக ஒரு துப்பறியும் கதையை எழுத சுஜாதாவால் டுமே (மட்டுமே அண்டர்லைன்) முடியும்.
பரப்பாடி பா.து. தனபால்.
- கதையெங்கும் "செக்ஸ்' பரவலாகப் புகுந்து விளையாடியிருக்கிறது. A சர்டிபி கேட் கொடுத்திருக்க வேண்டிய நாவல். திருப்பூர் ஏ. ஈஸ்வரன்
- ஒரே மூச்சில் படித்து முடித்த போதிலும் நினைவில் நிலைக்கவில்லையே, ஏன்? நெய்வேலி-3. எஸ். கிருஷ்ணமூர்த்தி
- அபத்தமான கற்பனை! ஆனால் என்ன அழகான வருணனை! எழுத்துக்களிலே வீணை மீட்டும் தனித்திறன் சுஜாதாவின் விரல்களுக்கே.... சேலம் பா. சௌந்தர்ராஜன்
- தன்னால் உப்புச் சப்பில்லாத கதையையும் எழுத முடியும் என்று 'விபரீதக் கோட்பாட்டின்' மூலம் நிரூபித்திருக்கிறார் சுஜாதா. திருப்பூர்-2 மு. நடராஜன்
- சுஜாதாவின் கற்பனை என்று எண்ணத் தோன்றாமல் எங்கோ ஒரு கும்பல் உண்மையாகவே இப்படி இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்குள். மிலிநேன் கே. நடராஜன்,
- இன்ட்டரஸ்டிங் காகக் கதை ஆரம்பித்து, இருபது அம்ச திட்டத்தில் முடித்திருப் பது சுஜாதாவின் சாமர்த்தியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. குரோம்பேட்டை ஜி. நாகராஜன்
- ப்ரதிமா சம்மதித்தா லும், கையெழுத்துப் போட்டாலும், விவாகரத்து செய்து விட முடியாது. சட்டபூர்வ மாகக் கோர்ட்டில் டிகிரி வாங்கினால்தான் செல்லும். இந்த விஷயம் சுஜாதாவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் லாயர் கணேஷுக்குக்கூடத் தெரியாமல் போய்விட்டது ஆச்சரியம்தான். ஊஞ்சலூர் கு. செங்கோட்டையன்,
- 'நேபாளம் சென்றுவந்தேன்' கட்டுரை பள்ளிக்கூட கடிதங்கள் மாணவனின் கட்டுரைபோல் எழுதப்பட்டிருந்தது. பெங்களூர் எஸ். பாபு.
- நேபாளப் பயணக் கட் டுரை அழகாக, கச்சிதமாய் அமைந்துள்ளது. பொள்ளாச்சி எஸ்.கிருஷ்ணசாமி.
- பழமையானயான பயனான செய்திகளைத் தரும் பி.ஸ்ரீ.க்குப் பாராட்டுதல்கள். நாகமங்கலம் ஏ.பாலசுப்பிரமணியம்
பழைய தினமணி கதிர் இதழிலிருந்து. அப்போதெல்லாம் தினமணி கதிர் சற்றே பெரிய சைஸில்தான் வரும். இந்த சைஸ் புத்தகத்தில்தான் சுஜாதாவின் வானமென்னும் வீதியிலே, ஜேகே போன்ற கதைகள் வந்தன!
எம். ஜி.
ஆர். பதில்!
வி.
செல்வராஜ், வேலூர்.
கே:பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு
தங்கள் மனத்தைக் கவர்ந்த தலைவர் யார்?
ப:அவரேதான்.
கே:நீங்கள் துன்பம் வரும்போது
ஆண்டவனை நினைக்கிறீர்களா? அல்லது அன்னையை நினைக்கிறீர்களா?
ப:ஆண்டவன் என்னைவிட்டுப்
பிரிந்திருந்தால்தானே, அந்த நேரத்தில் மட்டும் நினைப்பதற்கு. அவர்தான் என்
அன்னையின் உருவத்தில் என் இதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கிறாரே.
டி. ஜி.
இராமமூர்த்தி, கும்பகோணம்.
கே:உங்களைப் பற்றி இதுவரை
திட்டிப் பேசாத ஒருவர் திட்டிப் பேசி விட்டால் (அப்படி ஒருவர் பேசிவிட்டார், ஆகையால்
கேட்கிறேன்) அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
ப: முதலில் என்னிடம் என்ன குறை
புதிதாக உண்டாயிற்று என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார்
என்று சிந்திப்பேன்.
கே:நீங்கள் நடிக்கும் படத்திற்குத் தங்களுக்கேற்ற
கதை, நீங்கள் விரும்புகின்ற மாற்றம் இவைகளைச் செய்தால்தான் நடிப்பேன் என்று
நீங்கள் கூறுவதாகச் சொல்கிறார்களே! இது உண்மையா?
ப: அப்படிச் சொன்னால் அது தவறு என்று
நீங்கள் கருதுகிறீர்களா?
டி. அகமத்
பாபு, ஊட்டி.
கே:மதுரை மாநகர் - இதுபற்றி ஏதாவது
கூறுங்கள்.
ப: தமிழகத்தின் வீறு கொண்ட சமீப
காலத்திய வரலாற்றில் நல்ல திருப்பங்களை முன்னோடியாக இருந்து நிறைவேற்றுவது மதுரை
மாநகரம்.
கே:மனம் மலையென உயர மார்க்கம் உண்டா?
ப: மலை என்பது இந்த அண்டத்தில்
மிகச்சிறிய ஒன்று. அண்டத்தைவிடப் பெரியது மனம். வேண்டுமென்றால் எந்தெந்த அளவுக்குக்
குறைத்துக் கொள்ளலாம் என்று கேளுங்கள்.
எம்.
ஆறுமுகம், பி.எஸ்ஸி., பாளையங்கோட்டை.
கே:அரசியலில் நீங்கள் வெற்றி என்று
கருதுவது எது?
ப: எந்த நாட்டு அரசியலில்? 'இது
போன்ற கேள்விகளைக் கேட்கும்போது தெளிவாகக் கேட்டால் நல்லது...'
கே:புதிய மாளிகை கட்ட விரும்புகிறவன்
ஏற்கனவே அங்குள்ள மண்குடிசையை அகற்றித்தானே ஆக வேண்டும்?
ப: அந்த மாளிகை அந்த மண்
குடிசைக்காரனுக்குச் சொந்தமாக இருந்தால், அகற்றினால் என்ன?
கே:விசுவநாதனின் இசையில் மயங்கியவரா தாங்கள்? இல்லை, உங்கள் நடிப்பில் அவர் மயங்கியவரா?
ப: கலையில் நாங்கள் இருவரும்
மயங்கியிருக்கிறோம்.
கே:சிலர் தம் காலடிகளில் சிதறிக்
கிடக்கும் முத்துக்களை நோக்காது, வானிலுள்ள விண்மீன்களை எண்ணுவதேன்?
ப: முத்துக்கள் தம்மை விலை பேசும்
வசதி படைத்தவர்களின் பண மதிப்புக்கேற்பக் கைமாறி விடுகின்றன. விண்மீன்கள் அப்படியல்ல;
தூரத்திலிருந்து யாரும் ரசிக்கலாம்; ஆனால் யாருக்கும் சொந்தமல்ல.
கே. பி.
வசந்தா பி. ஏ., சிவகாசி.
கே:மக்கள் செல்வம் இல்லாதவர்கள் மன
நிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்க வாழ முடியுமா?
ப: மற்றவர்களைவிட அதிகமாக இன்பத்தோடு
வாழ முடியும்.
கே:தங்களுக்கு 'பத்மஸ்ரீ' பட்டம்
கொடுக்க முன்வந்து, நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?
ப: உண்மை.
கேசி, பொள்ளாச்சி.
கே:உங்கள் படத்தைப் பார்க்க வந்து
வேண்டுமென்றே குழப்பம் செய்பவர்களுக்குத் உங்கள் பதில் என்ன?
ப: அவர்களை மன்னித்துவிடுங்கள்.
ஏனெனில் என்னை வைத்துப் படமெடுத்தவர்களுக்கு அவர்களுடைய பணமும் வந்து சேர்கிறது
அல்லவா? அதில் ஒரு துளியாவது எனக்கு வந்து சேர்ந்திருக்கும் அல்லவா?
கே:பொன்மனச் செம்மலே! தங்களைக்
கலையுலகின் அண்ணா என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
ப: மாட்டேன். என்னைவிட வயதில்
மூத்தவர்கள் கலையுலகில் இருக்கிறார்கள்.
ஜெயகாந்தனின் ஆளுமை.. ஆளுமை என்று சொல்லலாமா தெரியவில்லை. அவர் சொல்வதைப் பார்க்கும்போது அராஜகம் என்று மனதில் தோன்றியது!! ஆனால் தமிழருவி மணியன் அப்படிச் சொல்கிறார். பாராட்டுகிறார். சுவாரஸ்யம்தான்.
ஆஷா - Z5 - ஒரிஜியினால் மலையாளம் - தமிழில் வசனம் கிடைக்கிறது.
வங்கியில் தன் டர்னுக்காகக் காத்திருக்கும் ஆஷா (ஊர்வசி) அவர் எண் அழைக்கப்படும்போது போனில் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பெண் கவுண்ட்டரை அணுகுகிறாள். சினம் ஏறுகிறது ஆஷாவுக்கு. டெலிபோனை நிறுத்தி கவுண்ட்டர் அருகே வந்து அந்தப் பெண்ணையும், கவுண்ட்டரில் இருக்கும் பெண்ணையும் வசைபாடுகிறார். வாக்குவாதத்தை இறுதியில் கடுப்பாகி அந்த டோக்கனைக் கிழித்துப் தூரப்போட்டு விட்டு வெளியேறுகிறார்.
இந்தக் காட்சியே போதும் ஆஷாவின் குணம் அறிய. தன் பெண்ணோடு காரில் வரும்போது ஏடாகூடமாக ஓட்டி, இவள் மீது மோதாமல் இருக்க பின்னால் வந்த டெம்ப்போ ஓட்டுநர் ஜோஜு ஜார்ஜ் வண்டியை ஒடித்து மரத்தில் மோதி, இறங்கி வந்து, ஊர்வசியைத் திட்ட, ஈகோ ஏறுகிறது ஊர்வசிக்கு. அவன்மேல்தான் தப்பு என்று அநியாயமாகச் சொல்லி போலீசில் புகார் செய்கிறார்.
அவர் பெண்ணுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் வாக்குவாதத்தில் மகள் அவரை 'பைத்தியம்.. பைத்தியம்' என்று திட்டிவிட்டு வெளியேறிவிட, இரவு முழுவதும் மகள் திரும்பிவர காத்திருக்கிறார். செய்தி வருகிறது விபத்து என்று. ஓடுகிறார். தொடர் உரையாடலில் அவளை அங்கு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தது ஜோஜுதான் என்று அறிந்து மருத்துவரிடம் மன்றாடி மகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்து பார்த்து, உறவு நடந்திருக்கிறது என்று அறிந்து ஜோஜூவை பழிவாங்க புறப்படுகிறார்.
சாமர்த்தியமாக பேசி இருவரையும் அதாவது ஜோஜுவையும் அவன் உதவியாளனையும் தன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்து விஷ உணவு கொடுக்க, உதவியாளன் இறந்து விட, ஜோஜு அதிர்ஷ்டவசமாக தப்பித்து விடுகிறான். யார் தன்னைக் கடத்தியது என்று அவன் அறிந்து ஊர்வசியிடம் கோபப்படுகிறான். தான் அவள் மகளை ஒன்றும் செய்யவில்லை என்றும், வழியில் நின்று போன அவள் வண்டியை தான் சரி செய்ய முயலும்போது, அவள்தான் பயந்து ஓடி விபத்தில் மாட்ட, தான்தான் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகக் கூறுகிறான். ஊர்வசிக்கும் பின்னர் மகளுடன் பேசும்போது அது உண்மை என்று தெரிகிறது. மகள் அவள் காதலனுடன் சந்தோஷமாக இருந்ததைச் சொல்கிறாள். ஆனாலும் அவள் ஜோஜுவை ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கிறாள். அவனை அவள் பண்ணை வீடு போன்ற ஓரிடத்தில் கைகால்களை கட்டி அசைய விடாமல் வைத்திருக்கிறாள். அப்படியே உணவு கொடுக்கிறாள்.
என்ன ஆகிறது என்பதுதான் 'ஆஷா' வின் கதை. ஊர்வசி பிரமாதமாக நடித்திருக்கிறார். பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.
எனக்கு விஜயகுமாரியைப் பிடிக்காது. ஓவர் ஆக்ஷன் என்று தோன்றும். ஆனால் இந்தப் பாட்டு.. ஆஹா...
படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று குழம்பிக்கொண்டிருந்த M சரவணன் சிக்னலில் நிற்கையில் பெரிய பச்சை விளக்கைக் கண்டு இம்ப்ரெஸ் ஆகி, இயக்குனர் பீம்சிங்கிடம் சொல்லி , அதையே தலைப்பாக வைத்தாராம். முதலில் எடுக்கப்பட்ட காட்சிகளில் AVM செட்டியாருக்கு அவ்வளவு விருப்பமில்லாமல் இருக்க ரீஷூட் செய்தார்களாம். 1964 ஆம் ஆண்டு வெளியான 'பச்சைவிளக்கு' படத்தில் கண்ணதாசன் எழுதிய 'வாராதிருப்பாரோ' பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் TMS சுசீலாம்மா குரலில் சுகமான பாடல்...
சுபம்தான். பார்க்கலாம். ஊர்வசியின் வித்தியாசமான கேரக்டர் அமைப்பு. நாம் இது மாதிரி மனிதர்களை அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். ஆனால் அவர்களை வைத்து இப்படி கதை பண்ண முடியுமா என்று யோசித்திருக்கிறார் இயக்குனர்!
தமிழருவி மணியனுக்கு சிவாஜி, எம் ஜி ஆர், ஜயகாந்தன் என்று அவர்களின் நல்லதையே சொல்லுவார். கொஞ்ச நேரம் கழித்துப் போரடிக்கும். ஜயகாந்தன் தன்னை பாரதிக்கு மேல் என்று சொன்னதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன் அவரின் சில கதைகள் மிக மிகப் பிடிக்கும்.
தமிழருவி மணியன் பேச்சு கேட்டிருக்கிறேன். சில நியாயங்களை உணர்ச்சி பொங்க எடுத்துக் கூறுவார். சாய் தீபக்குக்கும் முன்னாலேயே இவர் சில நியாயங்களை பேசி இருக்கிறார்!
நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு அப்படி குறையாக எல்லாம் அப்போது தெரியவில்லை. இப்போதும் சுவாரஸ்யமாகப் படிக்கலாம். அதில் வரும் அந்த மாமனார் "காபி ஒரு தேவபானம்" என்பார். சுஜாதா அந்த அத்தியாயத்தை இப்படி முடிப்பார் "தேவபானம் சூடாக ஆறியிருந்தது!"
மன சாட்சியம் ருசியாக இருக்கிறது. சிஃபி.காம் இல் தோழ தோழிகளைச் சேர்த்துக் கொண்டது நிநைவுக்கு வருகிறது. சட்டென்று ராமந் ஜியின் பேனா நட்பு விட்டுப் போனது சகஜமாக இருக்கிறது. நாங்கள் எழுதிக் கொள்ளும் போது படங்கள் கிடையாது. வயது தெரியாது. பெண்ணா ஆணா தெரியாது:))))))
நடந்த கதை சொன்னது நன்றாக இருக்கிறது. சின்னதாக தொழில் நடத்தி முன்னேறி இருக்கிறார்கள் என்றால் கைராசிதானே !மாமியாரின் அன்புக்குரிய ஆஸ்தான மருத்துவரால் நல்ல படியாக குணம் ஆகி வீடு வந்து இருப்பது மகிழ்ச்சி.
//அங்கு வந்து சென்ற பிசியோதெரபிஸ்ட் அருகிலேயே இடம்பிடித்து பிசியோதெரபி க்ளினிக் தொடங்கினார்.//
எல்லாம் நம்மால்தான். பிசியோதெரபி நம்மை நம்மை நடமாட வைக்கிறார். நம்மால் அவருக்கும், அவரால் நமக்கு நல்லது நடக்கிறது அல்லவா .
மனசாட்சியத்தில் சார் பழைய காலங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதுவது நன்றாக இருக்கிறது. என் அண்ணனுக்கு பேனா தோழி இருந்தார். என் அண்ணனின் பள்ளி காலத்தில்.(1970) இப்போ உறவுகளுக்கு இடையே கடித போக்குவரத்து கிடையாது. கடிதம் எழுத இப்போது உள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் போல் உள்ளது.
அந்த காலத்தில் எல்லா நண்பர்களுக்கு மதிப்பு மிக மிக அதிகம். எப்போது கடிதம் வரும் என்று காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் உடனே பதில் எழுதி விடுவோம். அமெரிக்காவுக்கு பிரபல எழுத வேண்டும் என்றால் ஸ்டாம்ப் நிறைய ஒட்ட வேண்டும் ஆனால் அந்த சமயத்தில் அது பெரிய சுமையாகத் தெரியவில்லை.
உண்மை. அன்புக்கு உரியவர்களிடமிருந்து கடிதம் வருவதை எதிர்ப்பார்த்து காத்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது. உடன் பதில், அதற்கு பதில் கடிதம் என்று தொடர்ந்த பந்தங்கள்.
ஸ்ரீராம்... இதில் நீங்கள் மிஸ் செய்யும் முக்கியமான செய்தி உண்டு. இப்போ தகவல் தொடர்பு எவ்வளவு அதிகமாக இருந்தாலும், நம் செய்திகளில் அன்னியோன்னியம், அன்பு, அக்கறை என்று எதுவுமே கிடையாது. வெறும் குட்மார்னிங், குட்நைட் மெசேஜை ஃபார்வர்ட் பண்ணுவதன் மூலம், உங்களை மறக்கலை என்று நாம் தெரிவிக்கிறோம். ஆனால் அப்போது நம் கம்யூனிகேஷனில் உணர்வும் அக்கறையும் இருந்தது என்று நினைக்கிறேன்.
கேஜிஒய் சார், வல்லிம்மா, கோமதி அரசு மேடம், கீசா மேடம் போன்றோர் விளக்கலாம். (தவறிருந்தால்)
//நம் செய்திகளில் அன்னியோன்னியம், அன்பு, அக்கறை என்று எதுவுமே கிடையாது. வெறும் குட்மார்னிங், குட்நைட் மெசேஜை ஃபார்வர்ட் பண்ணுவதன் மூலம், உங்களை மறக்கலை என்று நாம் தெரிவிக்கிறோம். ஆனால் அப்போது நம் கம்யூனிகேஷனில் உணர்வும் அக்கறையும் இருந்தது என்று நினைக்கிறேன்//
அப்படியும் சொல்லி விட முடியாது. எவ்வளவு பணிகள் அதற்கு இடையில் நமக்கு ஒரு குட்மார்னிங்க், குட் நைட் போடுபவர்கள் இருக்கிறார்கள். சிலர் கண்டு கொள்ள மாட்டார்கள்.
நான் தினம் சூரியன் போட்டு "வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "போடுவேன் மலர்கள் படம் போட்டு வாழ்க வளமுடன் என்பேன். போட கொஞ்சம் நேரம் ஆனால் போன் செய்து அக்கறையாக கேட்கும் , உறவுகளும், நட்புகளும் இருக்கிறார்கள் . கண்டு கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.
நலந்தான். கடந்த இரண்டொரு நாட்கள் வழக்கம் போல வீட்டு வேலைகள் அதிகம். அதனால் வழக்கம் போல உடல் அலுப்பும் அதிகம். நேற்றெல்லாம் தூங்கி, தூங்கி அலுப்பை போக்கி கொண்டேன். அதனால் தொடர்ந்து இரண்டொரு நாட்கள் வலைத்தளம் வரவில்லை. மன்னிக்கவும். என்னைக்காணாது தேடிய நட்புள்ளங்களுக்கு நன்றி.
எனக்கும் அப்துல் ரகுமான் மேத்தா இவர்கள் எழுதிய பல கவிதைகள் பிடிக்கும். ஆனால் மிகப் பெரும்பாலான புதுக்கவிதைகள் சலிப்பும் விரக்தியும் நிறைந்ததாகவே இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. இலக்கண வரம்புகளை மீறாமல் கவிதை எழுதும் சாமர்த்தியம் இல்லாததால் மட்டுமே புதுக்கவிதையாக எழுதுகிறார்களோ என்று நான் ரொம்ப நாள் நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் சரியான விஷயம் அல்ல என்பது பின்னர் புரிய வந்தது.
நீங்கள் சொல்வது என் விஷயத்தில் சரியாக இருக்கலாம். நான் எழுதுவது எந்த இலக்கணத்தில் வராது. மடக்கிப் போடும் மனவரிகள்தான்! தபூ சங்கர் பார்த்திபன் போன்றோர் விரக்தி இல்லாத கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். இயற்கை, காதல் இப்படி...
கண்ணதாசனை விட்டால் எனக்குப்பிடிச்ச கவிஞர் என்றால் அது கவிக்கோ தான். ஆனந்த விகடன் விகடனாகவே வந்து கொண்டிருந்த சமயம் வாரா வாரம் அவருடைய கவிதை அதில் முதல் பத்துப்பக்கங்களுக்குள் வந்திருக்கும். அப்போ நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நினைவு. அலுவலகத்தில் நூலகத்தில் விகடன் வாங்கினதும் முதல்லே என்னிடம் தான் கொடுப்பார் அதை நிர்வகித்த நண்பர். முதலில் நானும் கவிக்கோவின் கவிதையைத் தான் புரட்டிப் படிச்சிருக்கேன். "பெண்" என்னும் தலைப்பிலே அவர் பெண்ணின் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுதிய கவிதைகளை மிஞ்சி இன்று வரை வேறே யாரும் எழுதினதில்லை.
மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்டில் க நா சு அவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரோடு இரண்டொரு நிமிஷம் பேசிக் கொண்டிருந்தேன். உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட நேர்மையாளர். ஏராளமாகப் படித்தவர். விருப்பு வெறுப்பு பார்க்காமல் விமர்சனம் செய்பவர் என்பதே அவரைப் பற்றிய எனது அபிப்பிராயம்.
அதற்கு அடுத்த ஜெனரேஷனாக ஈமெயில் மூலம் ஒரு நண்பி, இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து நெதர்லேன்ட் போன்ற ஐரோப்பிய நாட் டில் வாழ்க்கையை ஆரம்பித்தவர், தொடர்பு பல மாதங்கள் இருந்தது நினைவுக்கு வருகிறது
சென்னையில் நவம்பர் 10க்குப் பிறகு மூன்று கடுமையான மழைச் சேதங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிவது ஆளுநர் ஆட்சி பல துறைகளில் போராட்டம் டிசம்பருக்குள் நடக்கும் பிறகு விலைவாசி விண்ணைத் தொடும் என ஜோஸ்யர் ப்ரெடிக்ஷனைப் படித்தேன்
என்னுடைய கருத்து.... மரபுக் கவிதைகள் எழுதத் தெரியாமல், வார்த்தைகளை மடித்து எழுதி கவிதை என்று சொல்பவர்கள் அதிகரித்துவிட்டனர். சில கவிதைகளே (புதுக்) உள்ளத்தைத் தொடும், ஏதேனும் பொறி இருக்கும்.
இன்றைய வெள்ளி சிதறல்கள் எப்போதும் போல நன்றாக உள்ளது. அது போலவே நேற்றைய வியாழன் கதம்பமும், எல்லா பகுதிகளும், அதற்கு வந்த கருத்துக்களும் மிக அமர்க்களமாக இருந்தது.
அதில் உங்கள் பேத்திக்கான கவிதை அருமை. பிஞ்சு குழந்தையை கொஞ்சும் போது உண்டாகும் சந்தோஷமே அலாதியானது. அதை எங்களுக்கு வார்த்தைகளால் விவரித்த உங்கள் சந்தோஷ தருணங்களும், உங்கள் எழுத்தாற்றலும் எங்களுக்கும் மகிழ்வை உண்டாக்கியது. குழந்தைக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள். ஆசிகள்.
இன்றைய எண்ணங்களான தங்களின் முதல் பகுதியும் நன்றாக உள்ளது. நிறைய விஷயங்களை அனுமானித்து, அனுபவித்து எழுதியுள்ளீர்கள். உங்கள் மாமியார் இப்போது எப்படியிருக்கிறார்.? அவர் பூரணமாக நலமாகி வர என் பிரார்த்தனைகள். வீட்டில் குழந்தையுடன், (பேத்தியை பத்திரமாக கவனித்துக் கொள்வது) நேரம் சரியாகப் போவது, ஆஸ்பத்திரிக்கு உங்கள் மாமியாரை கவனிக்கச் செல்வதென உங்கள் ஒரு நாளைய வேலைகளை என்னால் உணர முடிகிறது. இறைவன் நல்ல உடல்/மனத்தெம்பை உங்கள் அனைவருக்கும் தரவும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.
இன்றைய மனசாட்சியம் பகுதியும் சுவாரஸ்யமாக இருந்தது. அப்போதெல்லாம் பேனா நண்பர்கள் பற்றி இலங்கை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன். நானும் என் அண்ணாவும் இதைப்பற்றி பேசிக் கொள்வாம் . அவ்வளவுதான்.! ஆனால்,அப்படி கடிதங்கள் எழுத வீட்டில் அனுமதி கிடையாது. கடிதங்கள் எழுவது எனக்கும் சிறு வயதிலிருந்தே பிடித்தமானது. ஆனால், அப்போது ஐவராக இருந்த எங்கள் பிறந்த வீட்டு உறவில் யாரும் பிரிந்து வெளியூர்களுக்குச் சென்றதில்லை. எங்கள் மன்னி வந்த பின் அவர்களின் பிறந்த வீட்டுக்கு அவர் சென்ற போது, அப்பேற்பட்ட சந்தர்ப்பங்கள் வந்த போது, பக்கம்பக்கமாக கடிதங்கள் எழுதி என் ஆசையை தணித்துக் கொண்டேன்.அவர்களும் உடனே பதிலுக்கு எழுதி என்னை சந்தோஷ படுத்துவார்கள். பின் எங்களுக்கு திருமணமானவுடன் சென்னையிலிருந்து பிறந்த வீட்டுக்கு அம்மா, அப்பா, பாட்டி, அண்ணா, மன்னி என அனைவருக்கும் தனித்தனியாக என் கடிதங்கள் எழுதும் ஆசை தொடர்ந்தது.
இப்போதும் அதன் தாக்கமோ என்னவோ, பதிவிலும் நெடும் கருத்தாக தந்து உங்களையெல்லாம் போரடிக்கிறேன். (அதை எதிர்த்து நீங்கள் அனைவரும் போராடி னாலும், நான் நிறுத்துவதாக இல்லை. :)))).) இன்றைய மனசாட்சியம் தில் கடிதப் பகிர்வை கண்டதும் எனக்கும் மனதிலுள்ள நினைவுகள் மலர்ந்து விட்டன. (சற்று மிகையாகவே) தினமும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சகோதரர் திரு. ராமன் அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.
கவிதை ரசித்ததற்கு நன்றி. குழந்தைக்கான ஆசிகளுக்கு நன்றி.
உங்கள் கருத்துகள் போர் அடிப்பதில்லை. அவை எங்களுக்கான பரிசுகள். அதாவது எழுதுபவர்களுக்கான பரிசுகள். உங்கள் கருத்து, கீதா ரெங்கன், கீதா அக்கா, மஞ்சுபாஷிணி ஆகியோரின் கருத்துகள் எப்போதுமே விரிவாக சுவாரஸ்யமாக இருக்கும்.
//பிஞ்சு குழந்தையை கொஞ்சும் போது உண்டாகும் சந்தோஷமே அலாதியானது. // எதனால் இந்த உணர்வு? இருவர் உணர்வைப் பகிரும்போது ஏற்படும் சந்தோஷத்தைவிட, ஒருவர் மாத்திரமே உணர்வைப் பகிரும்போது ஏன் அதிக சந்தோஷம் அடைகிறோம்?
/எதனால் இந்த உணர்வு? இருவர் உணர்வைப் பகிரும்போது ஏற்படும் சந்தோஷத்தைவிட, ஒருவர் மாத்திரமே உணர்வைப் பகிரும்போது ஏன் அதிக சந்தோஷம் அடைகிறோம்?/
நம் வீட்டு குழந்தையை மனம் நிறைந்து நாம் கொஞ்சும் போது நம் நெருங்கிய உறவுகளை குழந்தை எளிதில் புரிந்து கொள்ளும். முகம் பார்க்கத் தொடங்கும் அந்த காலகட்டத்தில் குழந்தை நம் உறவை உணரும் போது அதனால்தான் அது பிறர் தூக்கும் போது அழுது, லேசாக சிணுங்கிபடி நம்மிடமே வர விரும்புகிறது. நம் கைகளின் சுகம் அதற்கு பழகி விடும். தன் அம்மா என்றால் கேட்கவே வேண்டாம். தாயின் அன்பை மட்டும முழுதாக விரும்பும்.
சமையலும் சாப்பாடும் தான். இன்னிக்குக் காலம்பர எழுந்துக்க, குளிக்கனு நேரம் ஆச்சு. அதோடு பையரும் மருமகளும் க்ரோசரி வாங்கப் போனதாலே என்னோட சமையலைச் சீக்கிரம் முடிச்சுண்டா அவங்க வந்ததும் அவங்களுக்குச் சாப்பாடு பண்ணிக்க முடியும். அதான். அவங்க வெங்காயம், பூண்டு சேர்ப்பாங்க. எனக்கு வெங்காயம், பூண்டு மட்டும் இல்லாமல் கூடவே புளி, பருப்பு கூடாது. ஆகவே நானே தக்காளிச்சாறில் மிளகு, ஜீரகப் பொடி போட்டு சூப் மாதிரி பண்ணிப்பேன். ஏதேனும் ஒரு கறி, அல்லது கூட்டு. அதனுடன் சாப்பிட்டுவிடுவேன். காலையில் ப்ரெடெல்லாம் எடுத்துக்கறதில்லை. சாயந்திரம் மருமகள் ஏதானும் பண்ணுவாள். தோசை, அடை, உப்புமா, சேவை(ரெடிமேட் தான்)அநேகமாச் சப்பாத்தி, சப்ஜினு. ஆகவே மாலைக்குச் சாப்பாடு ஓடிடும். தக்காளி கூடச் சேர்க்காமல் கோடம் புளி போட்டுச் சாப்பிடச் சொல்றார் மருத்துவர். கூடவே கேரளாவின் ஸ்ட்யூ மாதிரிப் பண்ணிச் சாப்பிடுங்கறார். அதில் கொஞ்சமானும் மசாலா சாமான்கள், பட்டை, சோம்பாவது சேர்க்கணும். எனக்கு அது ஒத்துக்காது. ஆகவே சும்மாக் கொஞ்சமா ரசப்பொடி போட்டுக் கூட்டு மாதிரிப் பண்ணிட்டுத் தேங்காய்ப்பூவை மேலே தூவிட்டுத் தாளிச்சுப்பேன். ஏதோ ஒண்ணு வயித்தை ரொப்பிக்கணும். :)))))
தமிழின் மதிக்கத் தகுந்த இரு இலக்கிய விமரிசகர்கள் என க.நா.சு மற்றும் வெ.சா ஆகியோரையே குறிப்பிடுவேன். இருவரும் நிறைய படைப்பு மதிப்பீடுகள் செய்திருக்கிறார்கள். இலக்கிய விமரிசினம் தந்திருக்கிறார்கள். புரிந்துகொண்டோர் அன்றுமில்லை.. இன்றுமில்லை.
இவர்கள் இருவருக்கும் ’இலக்கிய விமரிசகர்’ என்ற முத்திரை குத்தப்பட்டிருந்ததால், இவர்களது படைப்புலகத்தை ‘மற்றவர்களும்’ கண்டுகொள்ளவில்லை!
ஏகாந்தன், க.நா.சு.வைத் தனிப்பட்ட முறையிலும் தெரியும். அவர் மனைவி என் கணவர் வழியில் நெருங்கிய சொந்தம். அவர்கள் பெண் தான் பிரபலமான பாரதி மணி தாத்தாவின் மனைவி. நான் அவருடன் முகநூல் நண்பியாக இருந்தப்போ அவர் நான் யார் என்பதைப் புரிந்து கொண்டார் என்பதை அவர் கொடுத்த சில பதில்களில் இருந்து தெரிந்து கொண்டேன். சித்தப்பா (அசோகமித்திரன்) வீட்டில் க.நா.சு.வைப் பார்த்திருக்கேன். அப்போவே ரொம்பப் பெரியவர் என்பதால் ஜாஸ்தி பேசினதில்லை.
வெங்கட் ஸ்வாமிநாதன் "பெண்"களூரில் தான் இருந்தார். மின் தமிழில் "வடக்கு வாசல் பெண்ணேஸ்வரன்" மூலம் சேர்க்கப்பட்டார் என நினைக்கிறேன். முதலில் அவர் குழுமத்தில் ஒட்டவே இல்லை. ஏதோ வருவார்; தயங்கித் தயங்கி ஓரிரு கருத்துகளைச் சொல்லுவார். பின்னர் பெண்ணேஸ்வரனும் குழுவில் சேர்ந்தப்புறமாக் கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஆனாலும் அவருக்கு இயக்குநர் ஸ்ரீதரையும், நடிகர் திலகத்தையும் சுத்தமாய்ப் பிடிக்கவே பிடிக்காது. அவர்கள் இருவரையும் பத்தி அவர் கிண்டலாக எழுதி இருப்பதைப் படித்தால் இங்கே பலருக்கும் கோபம் வரும். அவருடைய இந்த விமரிசனக் கட்டுரைகள் எல்லாமும் என் மூலமாகத் தட்டச்சுச் செய்யப்பட்டு தமிழ் ஹெரிடேஜ் ஃபவுன்டேஷன்ஸின் டிஜிடல் நூலகமான "மரபு விக்கி" யில் சேர்க்கப்பட்டன என்பதை லக்ஷத்துத் தொண்ணூறாயிரமாவது முறையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையும் அடைகின்றேன். ஒன்றிரண்டை இங்கே எடுத்துப் போடலாம்னு போனால், ம்ஹூம், கதவை இழுத்து மூடிட்டோம்னு இப்போதைய நிர்வாகி சொல்லி விட்டார் மறைமுகமாக.
அவங்கல்லாம் தனி திராவிடத் தமிழர்கள் என்பதால் நாம் எதுவும் கேட்டுக்க முடியாது. நானும் ஐந்தாறு வருஷங்களாக முயன்று பார்த்தும் மரபு விக்கிப் பக்கம் போகவே முடியலை. உத்தமம் என்று ஒரு குழுமம் இருந்தது பலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழ் எழுத்து உருக்கள், யூனிகோட் தமிழ் எழுத்துனு எல்லாமும் அதன் மூலமாகவே அங்கே பலவிதமான ஆய்வுகள் தமிழ் எழுத்துக்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அது இருக்கா இல்லையானு தெரியலை. லினக்ஸும் அப்படித்தான். லினக்ஸுக்காகவும் வேலை செய்திருக்கேன். இப்போல்லாம் அது பத்திப் பேச்சே இல்லை. :(
அவருடைய இந்த விமரிசனக் கட்டுரைகள் எல்லாமும் என் மூலமாகத் தட்டச்சுச் செய்யப்பட்டு தமிழ் ஹெரிடேஜ் ஃபவுன்டேஷன்ஸின் டிஜிடல் நூலகமான "மரபு விக்கி" யில் சேர்க்கப்பட்டன என்பதை லக்ஷத்துத் தொண்ணூறாயிரமாவது முறையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையும் அடைகின்றேன். ஒன்றிரண்டை இங்கே எடுத்துப் போடலாம்னு போனால், ம்ஹூம், கதவை இழுத்து மூடிட்டோம்னு இப்போதைய நிர்வாகி சொல்லி விட்டார் மறைமுகமாக.
இன்றைய இதர பகுதிகளும் அருமையாக இருந்தது நான் மதியம் அசதியில் தூங்கி விட்டேன். அதனால் உடனே வர இயலவில்லை.
சுஜாதா அவர்களின் மாலைமதியில் வந்த கதைக்கு வாசகர்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளது. நான் அம்மா வீட்டில் இருந்த போது மாலைமதி கண்டிப்பாக அண்ணா வாங்கித் தந்து படித்துள்ளேன். அதில் இந்தக்கதையும் படித்திருக்கிறேனோ என்பது நினைவில் இல்லை. கதையின் தலைப்பு படித்த மாதிரி உள்ளது.
மக்கள் திலகம் அவர்களின் பதில்களை ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு கேள்விகளுக்கும் நேர்மையாக பதில்களை தந்துள்ளார்கள்.
கவிதைகள் அருமை ரசித்தேன்.
ஓடிடியில் நீங்கள் பார்த்த படத்தின் விமர்சனம் நன்றாக உள்ளது. ஊர்வசி நடிப்பு எனக்கும் பிடிக்கும். இந்தப் படம் பார்க்க முயற்சிக்கிறேன். பார்த்து விட்டு சொல்கிறேன்.
இறுதியில்" வாராதிருப்பாரோ" என்ற பாடலும் எனக்குப் பிடித்தமானது. ஜோடியின் இருவரின் நடிப்பும் கொஞ்சம் அழுத்தமானவைதான். அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும் வளமுடன் இருக்க இறைவன் அருள்வான்.
பதிலளிநீக்குவாங்க அம்மா.. வணக்கம். இறைவன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
நீக்குவாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணன் அவன். எங்கள் சிங்கத்துக்கு மிகப் பிடித்த பாடல். படமும் அருமையான படம்.
பதிலளிநீக்குஆஹா சிங்கத்துக்கும் பிடித்த பாடலா? இந்தப் பாடலில் TMS ஐ விட சுசீலாம்மாதான் நன்றாகக் பாடி இருக்கிறார் என்று தோன்றும்.
நீக்குஆமாம். என்ன ஒரு காந்தக் குரல் அவருக்கு.
நீக்குஊர்வசியின் படமா. கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். குழப்பங்கள் தீர்ந்து சுபமானால் எல்லாப் படமும் பார்க்கலாம்.
பதிலளிநீக்குசுபம்தான். பார்க்கலாம். ஊர்வசியின் வித்தியாசமான கேரக்டர் அமைப்பு. நாம் இது மாதிரி மனிதர்களை அன்றாட வாழ்வில் சந்தித்திருப்போம். ஆனால் அவர்களை வைத்து இப்படி கதை பண்ண முடியுமா என்று யோசித்திருக்கிறார் இயக்குனர்!
நீக்குஉண்மை.
நீக்குதமிழருவி மணியனுக்கு சிவாஜி, எம் ஜி ஆர், ஜயகாந்தன் என்று அவர்களின் நல்லதையே சொல்லுவார். கொஞ்ச நேரம் கழித்துப் போரடிக்கும். ஜயகாந்தன் தன்னை பாரதிக்கு மேல் என்று சொன்னதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன் அவரின் சில கதைகள் மிக மிகப் பிடிக்கும்.
பதிலளிநீக்குதமிழருவி மணியன் பேச்சு கேட்டிருக்கிறேன். சில நியாயங்களை உணர்ச்சி பொங்க எடுத்துக் கூறுவார். சாய் தீபக்குக்கும் முன்னாலேயே இவர் சில நியாயங்களை பேசி இருக்கிறார்!
நீக்குதமிழருவி மணியன் அவர்கள் சமூக நெறியில் சிந்திக்கும் எங்களைப் போன்றவர்களின் தலைமுறை. சாயி தீபக் இளம்வயது.வக்கீல் வேற. வெகு சுவாரஸ்யம்.
நீக்குஎம் ஜி ஆர் அவர்களின் கேள்விக்கான பதில்கள் மிக அருமை. அவரே தான் பதில் சொல்லி இருப்பார்.
பதிலளிநீக்குபொதுமக்கள் கேள்விகளுக்கான MGR பதில்களை அவரேதான் சொல்லி இருக்கிறார் என்பதற்கு அந்த பதிலிலேயே நிரூபணம் இருக்கிறது. பாணியும் கருத்தும்!
நீக்குவிபரீதக் கோட்பாடு , சுஜாதா என்ற யானைக்கும் அடி சறுக்குமோ என்று யோசிக்க வைத்தது.
பதிலளிநீக்குநான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு அப்படி குறையாக எல்லாம் அப்போது தெரியவில்லை. இப்போதும் சுவாரஸ்யமாகப் படிக்கலாம். அதில் வரும் அந்த மாமனார் "காபி ஒரு தேவபானம்" என்பார். சுஜாதா அந்த அத்தியாயத்தை இப்படி முடிப்பார் "தேவபானம் சூடாக ஆறியிருந்தது!"
நீக்குஆஹா. சுஜாதாவை நான் விமர்சிக்கவில்லை ஶ்ரீராம்:))))
நீக்குமன சாட்சியம் ருசியாக இருக்கிறது. சிஃபி.காம் இல் தோழ தோழிகளைச் சேர்த்துக் கொண்டது நிநைவுக்கு வருகிறது. சட்டென்று ராமந் ஜியின் பேனா நட்பு விட்டுப் போனது சகஜமாக இருக்கிறது. நாங்கள் எழுதிக் கொள்ளும் போது படங்கள் கிடையாது. வயது தெரியாது. பெண்ணா ஆணா தெரியாது:))))))
பதிலளிநீக்குஎனக்கு இந்த அனுபவம் இல்லை!
நீக்குஎனது அமெரிக்க பேனா நண்பர் ஒரு பெண் - இளம்பெண் . நல்ல அழகியும் கூட.
நீக்குஆ....!
நீக்கு//இளம்பெண் . நல்ல அழகியும் கூட.// ஹா ஹா.... இதில் ஏதோ இழந்தது போன்ற த்வனி தெரிகிறதே
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குநடந்த கதை சொன்னது நன்றாக இருக்கிறது. சின்னதாக தொழில் நடத்தி முன்னேறி இருக்கிறார்கள் என்றால் கைராசிதானே !மாமியாரின் அன்புக்குரிய ஆஸ்தான மருத்துவரால் நல்ல படியாக குணம் ஆகி வீடு வந்து இருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு//அங்கு வந்து சென்ற பிசியோதெரபிஸ்ட் அருகிலேயே இடம்பிடித்து பிசியோதெரபி க்ளினிக் தொடங்கினார்.//
எல்லாம் நம்மால்தான். பிசியோதெரபி நம்மை நம்மை நடமாட வைக்கிறார். நம்மால் அவருக்கும், அவரால் நமக்கு நல்லது நடக்கிறது அல்லவா .
அது என்னவோ உண்மைதான். மாமியார் அங்கிருந்து வீடு திரும்பவில்லை... சொல்கிறேன்.
நீக்குமனசாட்சியத்தில் சார் பழைய காலங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதுவது நன்றாக இருக்கிறது. என் அண்ணனுக்கு பேனா தோழி இருந்தார். என் அண்ணனின் பள்ளி காலத்தில்.(1970)
பதிலளிநீக்குஇப்போ உறவுகளுக்கு இடையே கடித போக்குவரத்து கிடையாது. கடிதம் எழுத இப்போது உள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் போல் உள்ளது.
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி. உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். விபரமாக பதிவை படித்து விட்டு வருகிறேன்.
நீக்குஅந்த காலத்தில் எல்லா நண்பர்களுக்கு மதிப்பு மிக மிக அதிகம். எப்போது கடிதம் வரும் என்று காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் உடனே பதில் எழுதி விடுவோம். அமெரிக்காவுக்கு பிரபல எழுத வேண்டும் என்றால் ஸ்டாம்ப் நிறைய ஒட்ட வேண்டும் ஆனால் அந்த சமயத்தில் அது பெரிய சுமையாகத் தெரியவில்லை.
நீக்குஉண்மை. அன்புக்கு உரியவர்களிடமிருந்து கடிதம் வருவதை எதிர்ப்பார்த்து காத்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது. உடன் பதில், அதற்கு பதில் கடிதம் என்று தொடர்ந்த பந்தங்கள்.
நீக்குஅப்போது தகவல் தொடருபுக்கு வேறு வசதிகள், கருவிகள் இல்லை. பொழுதுபோக்கும் இல்லை..
நீக்குஸ்ரீராம்... இதில் நீங்கள் மிஸ் செய்யும் முக்கியமான செய்தி உண்டு. இப்போ தகவல் தொடர்பு எவ்வளவு அதிகமாக இருந்தாலும், நம் செய்திகளில் அன்னியோன்னியம், அன்பு, அக்கறை என்று எதுவுமே கிடையாது. வெறும் குட்மார்னிங், குட்நைட் மெசேஜை ஃபார்வர்ட் பண்ணுவதன் மூலம், உங்களை மறக்கலை என்று நாம் தெரிவிக்கிறோம். ஆனால் அப்போது நம் கம்யூனிகேஷனில் உணர்வும் அக்கறையும் இருந்தது என்று நினைக்கிறேன்.
நீக்குகேஜிஒய் சார், வல்லிம்மா, கோமதி அரசு மேடம், கீசா மேடம் போன்றோர் விளக்கலாம். (தவறிருந்தால்)
நூற்றுக்கு நூறு சரியான கருத்து நெல்லை. இப்போது யாருக்குமே யாரிடமும் நெருக்கமோ, பாசமோ இல்லை என்பதே உண்மை.
நீக்குஆமாம். பாதி சரிதான். ஆனால் உண்மையான உணர்வுகள் நம்முள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்த ஜெனெரேஷனுக்கு அக்கறை இருக்கிறது. நேரம் குறைவாக இருக்கலாம்.
நீக்கு//நம் செய்திகளில் அன்னியோன்னியம், அன்பு, அக்கறை என்று எதுவுமே கிடையாது. வெறும் குட்மார்னிங், குட்நைட் மெசேஜை ஃபார்வர்ட் பண்ணுவதன் மூலம், உங்களை மறக்கலை என்று நாம் தெரிவிக்கிறோம். ஆனால் அப்போது நம் கம்யூனிகேஷனில் உணர்வும் அக்கறையும் இருந்தது என்று நினைக்கிறேன்//
நீக்குஅப்படியும் சொல்லி விட முடியாது. எவ்வளவு பணிகள் அதற்கு இடையில் நமக்கு ஒரு குட்மார்னிங்க், குட் நைட் போடுபவர்கள் இருக்கிறார்கள். சிலர் கண்டு கொள்ள மாட்டார்கள்.
நான் தினம் சூரியன் போட்டு "வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "போடுவேன் மலர்கள் படம் போட்டு வாழ்க வளமுடன் என்பேன்.
போட கொஞ்சம் நேரம் ஆனால் போன் செய்து அக்கறையாக கேட்கும் , உறவுகளும், நட்புகளும் இருக்கிறார்கள் .
கண்டு கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க வாங்க கமலா அக்கா... வணக்கம். நலம்தானே?
நீக்குநலந்தான். கடந்த இரண்டொரு நாட்கள் வழக்கம் போல வீட்டு வேலைகள் அதிகம். அதனால் வழக்கம் போல உடல் அலுப்பும் அதிகம். நேற்றெல்லாம் தூங்கி, தூங்கி அலுப்பை போக்கி கொண்டேன். அதனால் தொடர்ந்து இரண்டொரு நாட்கள் வலைத்தளம் வரவில்லை. மன்னிக்கவும். என்னைக்காணாது தேடிய நட்புள்ளங்களுக்கு நன்றி.
நீக்குபுத்தொளியுடன் வந்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!
நீக்குஇங்கும் அப்படித்தான் நவராத்திரி முடிந்தவுடன் அலுப்பு . தூங்கி தூங்கிதான் அலுப்பை போக்கி கொண்டோம், நானும் சம்பந்தி அம்மாவும்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குவாழ்க நலம்
பதிலளிநீக்குநலமே நாடுவோம்.
நீக்கு/// இப்போ உறவுகளுக்கு இடையே கடித போக்குவரத்து கிடையாது. கடிதம் எழுத இப்போது உள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் போல் உள்ளது.///
பதிலளிநீக்குகோமதிஅரசு அவர்களது கருத்து சிறப்பு...
வார்த்தைகளையும் சுருக்கி சுருக்கெழுத்துகளில் உணர்வுகளை, கருத்துகளை வெளிப்படுத்தும் முறை வேறு வந்துள்ளது!
நீக்குமீதிக்கு நாளை வருகிறேன்
நீக்குக நா சுப்ரமணியத்தின் கவிதைகள் பற்றி ஞானக்கூத்தன்.
பதிலளிநீக்கு1958 ஆம் ஆண்டு வந்த கவிதைகள் நன்றாக இருக்கிறது.
வாசகர் கடிதங்கள் பகிர்வு புதுமை நன்றாக இருக்கிறது.
எம். ஜி. ஆர். பதில்கள் நன்றாக இருக்கிறது, அன்னையின் மேல் உள்ள பாசம் தெரியும் இந்த பதில் அருமை.
உண்மையில் என்னைப்பொறுத்தவரை க நா சுவின் கவிதைகள் கவிதை போலவே இல்லை! அவர் மற்றவர் கவிதைகளை அங்கீகரிப்பதில்லையாம்!
நீக்குவெகு சிலவற்றைத் தவிர புதுக்கவிதைகள் என்பது எனக்கு அதிகம் சுவாரஸ்யமாகப்பட்டதில்லை. இந்த விஷயத்தில் நான் சோ ராமசாமியின் ஆதரவாளன்.
பதிலளிநீக்குஎன்னமோ எனக்கு அதில் ஒரு ஈடுபாடு சிறுவயதிலேயே விழுந்து விட்டது. நான் முதலில் படித்த புதுக்கவிதை மு மேத்தா.
நீக்குஎனக்கும் அப்துல் ரகுமான் மேத்தா இவர்கள் எழுதிய பல கவிதைகள் பிடிக்கும். ஆனால் மிகப் பெரும்பாலான புதுக்கவிதைகள் சலிப்பும் விரக்தியும் நிறைந்ததாகவே இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. இலக்கண வரம்புகளை மீறாமல் கவிதை எழுதும் சாமர்த்தியம் இல்லாததால் மட்டுமே புதுக்கவிதையாக எழுதுகிறார்களோ என்று நான் ரொம்ப நாள் நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் சரியான விஷயம் அல்ல என்பது பின்னர் புரிய வந்தது.
நீக்குநீங்கள் சொல்வது என் விஷயத்தில் சரியாக இருக்கலாம். நான் எழுதுவது எந்த இலக்கணத்தில் வராது. மடக்கிப் போடும் மனவரிகள்தான்! தபூ சங்கர் பார்த்திபன் போன்றோர் விரக்தி இல்லாத கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். இயற்கை, காதல் இப்படி...
நீக்குகண்ணதாசனை விட்டால் எனக்குப்பிடிச்ச கவிஞர் என்றால் அது கவிக்கோ தான். ஆனந்த விகடன் விகடனாகவே வந்து கொண்டிருந்த சமயம் வாரா வாரம் அவருடைய கவிதை அதில் முதல் பத்துப்பக்கங்களுக்குள் வந்திருக்கும். அப்போ நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நினைவு. அலுவலகத்தில் நூலகத்தில் விகடன் வாங்கினதும் முதல்லே என்னிடம் தான் கொடுப்பார் அதை நிர்வகித்த நண்பர். முதலில் நானும் கவிக்கோவின் கவிதையைத் தான் புரட்டிப் படிச்சிருக்கேன். "பெண்" என்னும் தலைப்பிலே அவர் பெண்ணின் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுதிய கவிதைகளை மிஞ்சி இன்று வரை வேறே யாரும் எழுதினதில்லை.
நீக்குமவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்டில் க நா சு அவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரோடு இரண்டொரு நிமிஷம் பேசிக் கொண்டிருந்தேன். உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்ட நேர்மையாளர். ஏராளமாகப் படித்தவர். விருப்பு வெறுப்பு பார்க்காமல் விமர்சனம் செய்பவர் என்பதே அவரைப் பற்றிய எனது அபிப்பிராயம்.
பதிலளிநீக்குஅவர் பற்றிய கருத்து சரி. ஆனால் அவர் கவிதை? எனக்கு அதை ரசிக்கும் அளவு ஞானம் இல்லை. ஒருவேளை நான் சற்றே தரம் குறைந்த கவிதைகளுக்கு பழகி விட்டேனோ?!
நீக்குஎனக்கும் அந்த ஞானம் இல்லை என்றே நினைக்கிறேன் . எனவே இதற்கு மறுமொழி சொல்ல நான் லாயக்கில்லை.
நீக்குபேனா நண்பர்கள் சுவாரசியமான பகுதி
பதிலளிநீக்குஅதற்கு அடுத்த ஜெனரேஷனாக ஈமெயில் மூலம் ஒரு நண்பி, இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து நெதர்லேன்ட் போன்ற ஐரோப்பிய நாட் டில் வாழ்க்கையை ஆரம்பித்தவர், தொடர்பு பல மாதங்கள் இருந்தது நினைவுக்கு வருகிறது
அட நான் எப்படி இதை மிஸ் செய்தேன்!
நீக்குமிக்க நன்றி. எனக்கு இ மெயிலில் நண்பர்கள் இருந்ததில்லை.
நீக்குவாசகர் கடிதங்களில் குமுதத்தில் வெளியாவது சுவாரசியமாக இருக்கும்
பதிலளிநீக்குவேணுமென்றே திட்டுவார்கள்.
நீக்குசென்னையில் நவம்பர் 10க்குப் பிறகு மூன்று கடுமையான மழைச் சேதங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிவது ஆளுநர் ஆட்சி பல துறைகளில் போராட்டம் டிசம்பருக்குள் நடக்கும் பிறகு விலைவாசி விண்ணைத் தொடும் என ஜோஸ்யர் ப்ரெடிக்ஷனைப் படித்தேன்
பதிலளிநீக்குயாரு நம்ம அகத்திய ஜோசியரா?
நீக்குதமிழ்நாட்டுக்கு மட்டும் தானா ?
நீக்குஇலவசங்களை எல்லாரும் வழங்கினால் விளைவுகள் விபரீதமாகத்தானே இருக்கும்? அது பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ஒருவேளை, படிப்பவரின் மனப்பாங்குக்கு ஏற்றபடி அர்த்தம் செய்து கொள்ளக் கூடியது தான் புதுக்கவிதையின் இலக்கணமாக இருக்குமோ என்னவோ.
பதிலளிநீக்குஅது கண்ணதாசன் கவிதை உட்பட எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஏதோ ஒருவகையில் நம்மோடு அது ஒன்றிப்போகும்.
நீக்குஎன்னுடைய கருத்து.... மரபுக் கவிதைகள் எழுதத் தெரியாமல், வார்த்தைகளை மடித்து எழுதி கவிதை என்று சொல்பவர்கள் அதிகரித்துவிட்டனர். சில கவிதைகளே (புதுக்) உள்ளத்தைத் தொடும், ஏதேனும் பொறி இருக்கும்.
நீக்குஉண்மை. உண்மையிலும் உண்மை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி சிதறல்கள் எப்போதும் போல நன்றாக உள்ளது. அது போலவே நேற்றைய வியாழன் கதம்பமும், எல்லா பகுதிகளும், அதற்கு வந்த கருத்துக்களும் மிக அமர்க்களமாக இருந்தது.
அதில் உங்கள் பேத்திக்கான கவிதை அருமை. பிஞ்சு குழந்தையை கொஞ்சும் போது உண்டாகும் சந்தோஷமே அலாதியானது. அதை எங்களுக்கு வார்த்தைகளால் விவரித்த உங்கள் சந்தோஷ தருணங்களும், உங்கள் எழுத்தாற்றலும் எங்களுக்கும் மகிழ்வை உண்டாக்கியது. குழந்தைக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள். ஆசிகள்.
இன்றைய எண்ணங்களான தங்களின் முதல் பகுதியும் நன்றாக உள்ளது. நிறைய விஷயங்களை அனுமானித்து, அனுபவித்து எழுதியுள்ளீர்கள். உங்கள் மாமியார் இப்போது எப்படியிருக்கிறார்.? அவர் பூரணமாக நலமாகி வர என் பிரார்த்தனைகள். வீட்டில் குழந்தையுடன், (பேத்தியை பத்திரமாக கவனித்துக் கொள்வது) நேரம் சரியாகப் போவது, ஆஸ்பத்திரிக்கு உங்கள் மாமியாரை கவனிக்கச் செல்வதென உங்கள் ஒரு நாளைய வேலைகளை என்னால் உணர முடிகிறது. இறைவன் நல்ல உடல்/மனத்தெம்பை உங்கள் அனைவருக்கும் தரவும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.
இன்றைய மனசாட்சியம் பகுதியும் சுவாரஸ்யமாக இருந்தது. அப்போதெல்லாம் பேனா நண்பர்கள் பற்றி இலங்கை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன். நானும் என் அண்ணாவும் இதைப்பற்றி பேசிக் கொள்வாம் . அவ்வளவுதான்.! ஆனால்,அப்படி கடிதங்கள் எழுத வீட்டில் அனுமதி கிடையாது. கடிதங்கள் எழுவது எனக்கும் சிறு வயதிலிருந்தே பிடித்தமானது. ஆனால், அப்போது ஐவராக இருந்த எங்கள் பிறந்த வீட்டு உறவில் யாரும் பிரிந்து வெளியூர்களுக்குச் சென்றதில்லை. எங்கள் மன்னி வந்த பின் அவர்களின் பிறந்த வீட்டுக்கு அவர் சென்ற போது, அப்பேற்பட்ட சந்தர்ப்பங்கள் வந்த போது, பக்கம்பக்கமாக கடிதங்கள் எழுதி என் ஆசையை தணித்துக் கொண்டேன்.அவர்களும் உடனே பதிலுக்கு எழுதி என்னை சந்தோஷ படுத்துவார்கள். பின் எங்களுக்கு திருமணமானவுடன் சென்னையிலிருந்து பிறந்த வீட்டுக்கு அம்மா, அப்பா, பாட்டி, அண்ணா, மன்னி என அனைவருக்கும் தனித்தனியாக என் கடிதங்கள் எழுதும் ஆசை தொடர்ந்தது.
இப்போதும் அதன் தாக்கமோ என்னவோ, பதிவிலும் நெடும் கருத்தாக தந்து உங்களையெல்லாம் போரடிக்கிறேன். (அதை எதிர்த்து நீங்கள் அனைவரும் போராடி னாலும், நான் நிறுத்துவதாக இல்லை. :)))).) இன்றைய மனசாட்சியம் தில் கடிதப் பகிர்வை கண்டதும் எனக்கும் மனதிலுள்ள நினைவுகள் மலர்ந்து விட்டன. (சற்று மிகையாகவே) தினமும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சகோதரர் திரு. ராமன் அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கவிதை ரசித்ததற்கு நன்றி. குழந்தைக்கான ஆசிகளுக்கு நன்றி.
நீக்குஉங்கள் கருத்துகள் போர் அடிப்பதில்லை. அவை எங்களுக்கான பரிசுகள். அதாவது எழுதுபவர்களுக்கான பரிசுகள். உங்கள் கருத்து, கீதா ரெங்கன், கீதா அக்கா, மஞ்சுபாஷிணி ஆகியோரின் கருத்துகள் எப்போதுமே விரிவாக சுவாரஸ்யமாக இருக்கும்.
//பிஞ்சு குழந்தையை கொஞ்சும் போது உண்டாகும் சந்தோஷமே அலாதியானது. // எதனால் இந்த உணர்வு? இருவர் உணர்வைப் பகிரும்போது ஏற்படும் சந்தோஷத்தைவிட, ஒருவர் மாத்திரமே உணர்வைப் பகிரும்போது ஏன் அதிக சந்தோஷம் அடைகிறோம்?
நீக்குஏன்?
நீக்குகுழந்தையின் முகத்தைப் பார்த்தால் கோடி துக்கம் போகும் என்பார்கள்.
நீக்குதங்கள் அன்பான கருத்துக்கு நன்றி ஸ்ரீராம் சகோதரரே.
நீக்கு/எதனால் இந்த உணர்வு? இருவர் உணர்வைப் பகிரும்போது ஏற்படும் சந்தோஷத்தைவிட, ஒருவர் மாத்திரமே உணர்வைப் பகிரும்போது ஏன் அதிக சந்தோஷம் அடைகிறோம்?/
நம் வீட்டு குழந்தையை மனம் நிறைந்து நாம் கொஞ்சும் போது நம் நெருங்கிய உறவுகளை குழந்தை எளிதில் புரிந்து கொள்ளும். முகம் பார்க்கத் தொடங்கும் அந்த காலகட்டத்தில் குழந்தை நம் உறவை உணரும் போது அதனால்தான் அது பிறர் தூக்கும் போது அழுது, லேசாக சிணுங்கிபடி நம்மிடமே வர விரும்புகிறது. நம் கைகளின் சுகம் அதற்கு பழகி விடும். தன் அம்மா என்றால் கேட்கவே வேண்டாம். தாயின் அன்பை மட்டும முழுதாக விரும்பும்.
வரேன் அப்புறம்மா. இப்போ வேலை இருக்கு.
பதிலளிநீக்குஇன்னிக்கி என்னவாக்கும் வேலை?.
நீக்குசமையலும் சாப்பாடும் தான். இன்னிக்குக் காலம்பர எழுந்துக்க, குளிக்கனு நேரம் ஆச்சு. அதோடு பையரும் மருமகளும் க்ரோசரி வாங்கப் போனதாலே என்னோட சமையலைச் சீக்கிரம் முடிச்சுண்டா அவங்க வந்ததும் அவங்களுக்குச் சாப்பாடு பண்ணிக்க முடியும். அதான். அவங்க வெங்காயம், பூண்டு சேர்ப்பாங்க. எனக்கு வெங்காயம், பூண்டு மட்டும் இல்லாமல் கூடவே புளி, பருப்பு கூடாது. ஆகவே நானே தக்காளிச்சாறில் மிளகு, ஜீரகப் பொடி போட்டு சூப் மாதிரி பண்ணிப்பேன். ஏதேனும் ஒரு கறி, அல்லது கூட்டு. அதனுடன் சாப்பிட்டுவிடுவேன். காலையில் ப்ரெடெல்லாம் எடுத்துக்கறதில்லை. சாயந்திரம் மருமகள் ஏதானும் பண்ணுவாள். தோசை, அடை, உப்புமா, சேவை(ரெடிமேட் தான்)அநேகமாச் சப்பாத்தி, சப்ஜினு. ஆகவே மாலைக்குச் சாப்பாடு ஓடிடும். தக்காளி கூடச் சேர்க்காமல் கோடம் புளி போட்டுச் சாப்பிடச் சொல்றார் மருத்துவர். கூடவே கேரளாவின் ஸ்ட்யூ மாதிரிப் பண்ணிச் சாப்பிடுங்கறார். அதில் கொஞ்சமானும் மசாலா சாமான்கள், பட்டை, சோம்பாவது சேர்க்கணும். எனக்கு அது ஒத்துக்காது. ஆகவே சும்மாக் கொஞ்சமா ரசப்பொடி போட்டுக் கூட்டு மாதிரிப் பண்ணிட்டுத் தேங்காய்ப்பூவை மேலே தூவிட்டுத் தாளிச்சுப்பேன். ஏதோ ஒண்ணு வயித்தை ரொப்பிக்கணும். :)))))
நீக்குஓஹோ.. அங்கே வெள்ளிக்கிழமை வார விடுப்பா?
நீக்குyessu.
நீக்குதனியார் மருத்துவ மனைகள் பலதும் பணத்தை முன்னோக்காக கொண்டு நடப்பவையே.
பதிலளிநீக்குமனசாட்சியம் அன்றைய கால பேனா நண்பர்கள் தொடர்பை நினைவு படுத்துகிறது.
// தனியார் மருத்துவ மனைகள் பலதும் பணத்தை முன்னோக்காக கொண்டு நடப்பவையே.//
நீக்குஅதுவும் அநியாயமாய்....
நன்றி மாதேவி.
தமிழின் மதிக்கத் தகுந்த இரு இலக்கிய விமரிசகர்கள் என க.நா.சு மற்றும் வெ.சா ஆகியோரையே குறிப்பிடுவேன். இருவரும் நிறைய படைப்பு மதிப்பீடுகள் செய்திருக்கிறார்கள். இலக்கிய விமரிசினம் தந்திருக்கிறார்கள். புரிந்துகொண்டோர் அன்றுமில்லை.. இன்றுமில்லை.
பதிலளிநீக்குஇவர்கள் இருவருக்கும் ’இலக்கிய விமரிசகர்’ என்ற முத்திரை குத்தப்பட்டிருந்ததால், இவர்களது படைப்புலகத்தை ‘மற்றவர்களும்’ கண்டுகொள்ளவில்லை!
இலக்கிய விமர்சகர்களால் சுவையான இலக்கிய படைப்புக்களை கொடுக்க முடியாதோ...
நீக்குஏகாந்தன், க.நா.சு.வைத் தனிப்பட்ட முறையிலும் தெரியும். அவர் மனைவி என் கணவர் வழியில் நெருங்கிய சொந்தம். அவர்கள் பெண் தான் பிரபலமான பாரதி மணி தாத்தாவின் மனைவி. நான் அவருடன் முகநூல் நண்பியாக இருந்தப்போ அவர் நான் யார் என்பதைப் புரிந்து கொண்டார் என்பதை அவர் கொடுத்த சில பதில்களில் இருந்து தெரிந்து கொண்டேன். சித்தப்பா (அசோகமித்திரன்) வீட்டில் க.நா.சு.வைப் பார்த்திருக்கேன். அப்போவே ரொம்பப் பெரியவர் என்பதால் ஜாஸ்தி பேசினதில்லை.
பதிலளிநீக்குவெங்கட் ஸ்வாமிநாதன் "பெண்"களூரில் தான் இருந்தார். மின் தமிழில் "வடக்கு வாசல் பெண்ணேஸ்வரன்" மூலம் சேர்க்கப்பட்டார் என நினைக்கிறேன். முதலில் அவர் குழுமத்தில் ஒட்டவே இல்லை. ஏதோ வருவார்; தயங்கித் தயங்கி ஓரிரு கருத்துகளைச் சொல்லுவார். பின்னர் பெண்ணேஸ்வரனும் குழுவில் சேர்ந்தப்புறமாக் கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஆனாலும் அவருக்கு இயக்குநர் ஸ்ரீதரையும், நடிகர் திலகத்தையும் சுத்தமாய்ப் பிடிக்கவே பிடிக்காது. அவர்கள் இருவரையும் பத்தி அவர் கிண்டலாக எழுதி இருப்பதைப் படித்தால் இங்கே பலருக்கும் கோபம் வரும். அவருடைய இந்த விமரிசனக் கட்டுரைகள் எல்லாமும் என் மூலமாகத் தட்டச்சுச் செய்யப்பட்டு தமிழ் ஹெரிடேஜ் ஃபவுன்டேஷன்ஸின் டிஜிடல் நூலகமான "மரபு விக்கி" யில் சேர்க்கப்பட்டன என்பதை லக்ஷத்துத் தொண்ணூறாயிரமாவது முறையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையும் அடைகின்றேன். ஒன்றிரண்டை இங்கே எடுத்துப் போடலாம்னு போனால், ம்ஹூம், கதவை இழுத்து மூடிட்டோம்னு இப்போதைய நிர்வாகி சொல்லி விட்டார் மறைமுகமாக.
அவங்கல்லாம் தனி திராவிடத் தமிழர்கள் என்பதால் நாம் எதுவும் கேட்டுக்க முடியாது. நானும் ஐந்தாறு வருஷங்களாக முயன்று பார்த்தும் மரபு விக்கிப் பக்கம் போகவே முடியலை. உத்தமம் என்று ஒரு குழுமம் இருந்தது பலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழ் எழுத்து உருக்கள், யூனிகோட் தமிழ் எழுத்துனு எல்லாமும் அதன் மூலமாகவே அங்கே பலவிதமான ஆய்வுகள் தமிழ் எழுத்துக்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அது இருக்கா இல்லையானு தெரியலை. லினக்ஸும் அப்படித்தான். லினக்ஸுக்காகவும் வேலை செய்திருக்கேன். இப்போல்லாம் அது பத்திப் பேச்சே இல்லை. :(
மின் தமிழில் நீங்கள் ஏகப்பட்ட சேவைகள் பாராட்டும் வண்ணம் செய்திருக்கிறீர்கள் என்று தெரியும். கூகுள் பிளஸ்சில் வெ சா பதிவுகள் சில பார்த்த நினைவு.
நீக்குஅவருடைய இந்த விமரிசனக் கட்டுரைகள் எல்லாமும் என் மூலமாகத் தட்டச்சுச் செய்யப்பட்டு தமிழ் ஹெரிடேஜ் ஃபவுன்டேஷன்ஸின் டிஜிடல் நூலகமான "மரபு விக்கி" யில் சேர்க்கப்பட்டன என்பதை லக்ஷத்துத் தொண்ணூறாயிரமாவது முறையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையும் அடைகின்றேன். ஒன்றிரண்டை இங்கே எடுத்துப் போடலாம்னு போனால், ம்ஹூம், கதவை இழுத்து மூடிட்டோம்னு இப்போதைய நிர்வாகி சொல்லி விட்டார் மறைமுகமாக.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய இதர பகுதிகளும் அருமையாக இருந்தது நான் மதியம் அசதியில் தூங்கி விட்டேன். அதனால் உடனே வர இயலவில்லை.
சுஜாதா அவர்களின் மாலைமதியில் வந்த கதைக்கு வாசகர்களின் கருத்துக்கள் நன்றாக உள்ளது. நான் அம்மா வீட்டில் இருந்த போது மாலைமதி கண்டிப்பாக அண்ணா வாங்கித் தந்து படித்துள்ளேன். அதில் இந்தக்கதையும் படித்திருக்கிறேனோ என்பது நினைவில் இல்லை. கதையின் தலைப்பு படித்த மாதிரி உள்ளது.
மக்கள் திலகம் அவர்களின் பதில்களை ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு கேள்விகளுக்கும் நேர்மையாக பதில்களை தந்துள்ளார்கள்.
கவிதைகள் அருமை ரசித்தேன்.
ஓடிடியில் நீங்கள் பார்த்த படத்தின் விமர்சனம் நன்றாக உள்ளது. ஊர்வசி நடிப்பு எனக்கும் பிடிக்கும். இந்தப் படம் பார்க்க முயற்சிக்கிறேன். பார்த்து விட்டு சொல்கிறேன்.
இறுதியில்" வாராதிருப்பாரோ" என்ற பாடலும் எனக்குப் பிடித்தமானது. ஜோடியின் இருவரின் நடிப்பும் கொஞ்சம் அழுத்தமானவைதான். அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.