1) திரௌபதிக்கு உடையளித்த கிருஷ்ணன் அந்தக் காலம். தனியொருவராய் 400க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் இந்தக் காலக் கிருஷ்ணன் பற்றித் தெரிந்து கொள்ள...
2) படிப்பில்லாமல் குடிசைவாழ்க் குழந்தைகள் சமூகவிரோதிகளாகும் அபாயத்தைத் தடுக்க, 22 குழந்தைகளுடன் தொடங்கி, இன்று 250 குழந்தைகளுக்கு கல்வியும் மதிய உணவும் இலவசமாகவே கொடுத்து வரும் முத்துகிருஷ்ணன்.
3) 'டயல் ஃபார் ப்ளட்' என்ற வாசகத்துடன் டி ஷர்ட் அணிந்திருக்கும் 27 வயது தருமபுரி இளைஞர் பற்றி விகடனில் செய்தி. அங்கு இந்தியன் பில்லர்ஸ் என்று இதற்காகவே பிரத்தியேக கால் சென்டர் நடத்தி வரும் வினோத் அமைப்பில் இதுவரை சுமார் 20,000 பேர் இரத்ததானமும், 218 பேர் கண் தானமும் செய்திருக்கிறார்களாம். ரத்த தானத்துக்குச் செய்யும் தொலைபேசிக் கட்டணத்தைத் தாங்கத்தான் அரசாங்க உதவியை நாடுகிறார் வினோத். அவர் கேட்பது ஒரு டோல் ஃப்ரீ நம்பர். இவரது தொலைபேசி எண் 9488848222. ரத்ததானம் செய்ய விரும்புவோர் இந்த தளத்துக்குச் சென்று பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
4) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபிரான்சிஸ் ஃபாண்டன் பெயரில் இயங்கும் இதய-மார்பு மருத்துவ நிபுணர்களுக்கு என ஏற்படுத்திய EUROPEAN ASSOCIATION FOR CRDIO THORASIC SURGERY (EACTS) உலகம் முழுதும் உள்ள இத்தகைய மருத்துவர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கும் 'ஃபிராண்டன் பிரைஸ்' விருதைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் சென்னையைச் சேர்ந்த சௌம்யா ரமணன். இவர் சென்னை முகப்பேரில் உள்ள டாக்டர் கே எம் செரியன் ஹார்ட் ஃபவுண்டேஷனில் ஃ பிரான்டியர் ஹெல்ப்லைன் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்.

5) இவரல்லவோ மனிதர்
6) பெரிய நிறுவனம் என்று தயக்கம் பாராமல், நேரம் கெடுமே என்று சுணக்கம் பாராமல், நியாயத்துக்காக தைரியமாகப் போராடிய மெல்லிசைக்குழு நடத்தி வரும் ஸ்ருதி பாலாஜி பற்றிய செய்தி இட்லி வடையில்.

7) கடல் சுழலில் மாட்டிய தனது நண்பர்களைக் காப்பாற்றிய பள்ளி மாணவன் ரிஷி பற்றி அறிய...
8) கடமையைச் செய்ய பயப்படாத துணிச்சல் பெண் சுகி பிரேமலா பற்றி... இந்த வருடம் முதல்வரிடமிருந்து 'கல்பனா சாவ்லா' விருது பெற்றவர் இவர்.
9) கர்நாடக அமைச்சர் ஒருவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது அதிவேகத்தில் அவரது குழுவைத் தாண்டிச் சென்ற 7 பேர்கள் அடங்கிய கார் ஒன்று சற்று தூரத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததையும், அதிலிருந்த ஒருவர் உதவி கேட்டு ஜன்னல் வழியே கை நீட்டிக் கதறுவதையும் பார்த்து அமைச்சர் வண்டியை நிறுத்தி, அவரது ஓட்டுனர் (ரவிச்சந்திரன் என்று படித்த நினைவு) நீரில் குதித்துக் காரில் இருந்தோரைக் காப்பாற்ற, அமைச்சர் அருகிலிருந்த அதிகாரிகளுக்குத் தொலைபேசி, இவர்களுக்கு உதவ ஆவன செய்தாராம். பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆபத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றிய ஓட்டுனரின் செயல் பாராட்டுக்குரியது.
10) இயலாமை, முடியாது என்ற சொல்லையே மறக்கச் செய்த சக்கரநாற்காலியில் ஒரு சாதனையாளர்.





