வியாழன், 6 டிசம்பர், 2018

பாப்பூ....


கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பூஜை நாளில் வீட்டுக்கு வந்த குழந்தை பற்றி எழுதியிருந்தேன்.  இதுவும் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொண்ட விஷயம்தான்.  ஆனால் சற்றே வித்தியாசம் உண்டு.

வெளியூரில் இருந்த என் அக்கா பெண்ணும் அவள் கணவரும் தங்கள் ஒரே மகனை எங்கள் வீட்டில் விட்டு விட்டு ஷாப்பிங் சென்றார்கள்.  குழந்தைக்கு ஒன்றரை வயதிருக்கும் என்று நினைவு.  குஷி படம் வந்த புதிது.  'சீக்கிரம் வந்து விடுவீர்களா?' என்று திரும்பாத திரும்பக் கேட்டுக்கொண்டு அவர்களை அனுப்பினோம். 

அவள் பையனுக்கு எங்களைத் தெரியும், அறிமுகமுண்டு, பிடிக்கவும் பிடிக்கும் என்பதால் வந்த தைரியம்.

எல்லாம் நல்லாதாங்க போச்சு..    அவன் பாட்டுக்கு நாங்கள் கொடுத்த பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவதும், சற்றே தூங்குவதுமாக பொழுது போய்க்கொண்டிருந்தது.  அவர்கள் சொன்ன நேரமும் தாண்டிக் கொண்டிருந்தது.  இவன் பொறுமை இழக்கிறானோ என்கிற எண்ணமும் எங்களுக்குள் இருந்தது.

செல்போன் போன்றவை இல்லாத நேரம்.

அவன் கொஞ்சம் அழத்தொடங்க,  டீவியை ஆன் செய்து பாடல்கள் கேட்கச் செய்தோம்.அப்போது "ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்..."  பாட்டு ரொம்ப பேமஸ்.  அந்தப் பாடல் தொடங்கியது தொலைக்காட்சியில்.

கொஞ்ச நேரம் ஆகியிருக்கும், பையன் அழத்தொடங்கி விட்டான்.  டீவீயைப் பார்த்துப் பார்த்து அழவும் டீவியை அணைத்து விட்டோம்.  அழுகை இன்னும் பெரிதானது.   கொஞ்ச நேரத்துக்குள் திணறிப்போனோம்.  அவனை எப்படியும் சமாளிக்க முடியவில்லை.  நல்லவேளை சிறிது நேரத்தில் பெற்றோர் வந்துவிட அழுகை நின்றது.

அந்தத் திடீர் அழுகைக்குக்காரணம் பின்னர் தெரிந்தது.  பெற்றோர் அந்தப் பையனை "பாப்பூ" என்று கூப்பிடுவார்களாம்.  அந்தப் பாடலில் "பாப்பூ" என்று மறுபடி மறுபடி வந்ததும் குழந்தை அம்மா அப்பாவைத் தேடத் தொடங்கி விட்டான்.

எப்படியெல்லாம் சோதனை வருகிறது பாருங்கள்!


====================================================================================================

நேற்று கல்கி நினைவு தினம்.  கல்கி அவர்கள் 1954 இல் மறைந்ததும் விகடன் அட்டையில் அவர் படத்தைப் போட்டு பெருமை செய்தார் வாசன் அவர்கள்.
பின்னால் இதைப் பற்றி கல்கியின் புதல்வர்  கி. ராஜேந்திரன் எழுதும்போது இப்படி எழுதுகிறார்.  ========================================================================================================


இன்றைய செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி மனதை மிகவும் பாதித்தது.  பாஸிட்டிவ் செய்திக்காக மேய்ந்துகொண்டிருந்தபோது கிடைத்த ஒரு நெகட்டிவ் நியூஸ்.

ஈரோடு: வயது முதிர்ந்த தாயை, பஸ் ஸ்டாண்டில், மகன் பரிதவிக்க விட்டு சென்றான்.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில், இரண்டு நாட்களாக, மூதாட்டி ஒருவர், படுத்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த, குமாரசாமி மனைவி, பழனியம்மாள், 70, என, தெரிந்தது.பழனியம்மாள் அழுதபடி, போலீசாரிடம் கூறியதாவது:கணவர் இறந்த நிலையில், மகன் அர்ஜுனன், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பண்ணாரி அருகேயுள்ள, முதியோர் இல்லத்தில் சேர்த்தான். சில நாட்களாக, உடல்நிலை சரியில்லாமல், சாப்பிட முடியவில்லை. முதியோர் இல்ல நிர்வாகிகள், மகனுக்கு தகவல் தெரிவித்தனர். ஞாயிறு அன்று, மகன், வீட்டுக்கு அழைத்து செல்வதாகக் கூறி, இங்கு விட்டு சென்று விட்டான்.இவ்வாறு மூதாட்டி கூறினார்.'மகன் வீட்டுக்கு செல்கிறீர்களா...' என, கேட்ட போது, மறுத்த மூதாட்டி, மீண்டும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்படி, கூறினார். பஸ் ஸ்டாண்டில், டீ கடை நடத்தி வரும் கோபால் என்பவர், பழனியம்மாளை, பண்ணாரி அருகேயுள்ள, முதியோர் இல்லத்தில், நேற்று மதியம் சேர்த்தார்.


============================================================================================


ரஜினி அப்போது கொடுத்த பேட்டி...ரஜினியை நடிக்க வைத்துத் தயாரிக்கப்பட்ட பில்லா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதாவை அணுகினார்களாம்...


நன்றி இணையம் ================================================================================================================================


கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து  எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக எஸ் ரா அவர்களுக்கு சாகித்ய அகாதமி இருந்து வழங்கப்பட்டிருக்கிறது.


144 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா அவர்களே.. இன்னும் அலைகடலெனத் திரண்டு வர இருக்கும் அன்பு நெஞ்சங்களே அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. //அலைகடலெனத் திரண்டு வர இருக்கும் //

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  3. ஹா அஹ ஹா ஹா ஹா துரை அண்ணா !! அலைகடல்!!!


   கீதா

   நீக்கு
  4. வந்து வரவேற்ற அனைவருக்கும் இனி வரப்போகும் அன்பர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கம்.

   நீக்கு
 2. கதம்பம் அருமை....

  தமிழர் பெருமை ஓங்குக!...

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா எல்லாருக்கும் !

  கீதா

  பதிலளிநீக்கு
 4. பதிவுக்கு அப்புறம் வரேன் ஸ்ரீராம்.....கொஞ்சம் வேலைப்பளு

  கீதா

  பதிலளிநீக்கு
 5. இந்தப் பதிவு நேத்திக்கே வெளியாகிவிட்டதாக என்னோட டாஷ்போர்ட் சொல்லுதே. இது போங்கு ஆட்டம் இல்லையோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று தவறுதலாக தேதி சரி செய்யாமல் publish கொடுத்து விட்டேன். அப்புறம் உடனே அடுத்த நொடியே சுதாரிச்சுட்டேன்! அதுதான்!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா மீயும் கவனிச்சேன்ன்ன்ன் அது கெள அண்ணன் மேல இருந்த கோபத்திலதானே அப்பூடிப் பண்ணி அவரின் தலைப்பை உள்ளே போகப் பண்ணிட்டீங்க:) ஹா ஹா ஹா

   நீக்கு
  3. ஓ.. இப்படியும் ஒரு கலகம் இருக்கோ!!!

   நீக்கு
 6. ஜெயலலிதா, ரஜினி விஷயம் ஏற்கெனவே பலமுறை படிச்சது/கேட்டது. எஸ்.ரா. பத்தித் தான் 2 நாட்களாக எங்கே பார்த்தாலும். தேனம்மை அவரோடு படம் எடுத்துக் கொண்டு முகநூலில் பகிர்ந்திருந்தார். ரஜினி விஷயமும் படிச்சிருக்கேன். தாயைத் தவிக்க விட்ட மகன்கள் அதிகம் ஆகிக் கொண்டு வருகின்றனர். வாசன் பத்திக் கி.ராஜேந்திரன் சொன்னதும் படிச்சது தான். இஃகி, இஃகி, உங்க அக்கா பையர் விஷயம் தான் புத்தம்புதுசு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுங்க... ஏதோ ஒரு விஷயமாவது புதுசா இருக்கே...! அதற்காகத்தான் அதையும் போடுவது!

   நீக்கு
  2. ஹிஹிஹி, ஶ்ரீராமை வெறுப்பேத்திட்டேனோ? :))))))

   நீக்கு
  3. இல்லை அக்கா.. நானும் சாதாரணமாகத்தான் சொன்னேன். படித்தவையாய் இருப்பது சகஜம். கதம்பதில் ஏதோ ஒன்றாவது புதிதாக இருக்குமே...!

   நீக்கு
  4. ///eetha Sambasivam6 டிசம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:49
   ஹிஹிஹி, ஶ்ரீராமை வெறுப்பேத்திட்டேனோ//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
 7. சுவையான கதம்பம்....

  பாப்பூ.... :) சமாளிப்பது கஷ்டம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். நம் குழந்தை என்றாலே அம்மா இல்லாமல் சமாளிப்பது கஷ்டம்.

   நீக்கு
  2. அப்படி எல்லாம் இல்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதெல்லாம் பெரும்பாலான இளைஞர்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் சிறந்து விளங்குகின்றனர். அதுவும் அம்பேரிக்காவில் கேட்கவே வேண்டாம். தாய்க்கு உள்ள அதே பொறுப்பு சரிசமமாகத் தந்தைக்கும் உண்டு. குழந்தையைக் குளிப்பாட்டுவதில் இருந்து டயபர் மாற்றுவதில் இருந்து எல்லாமும் தந்தையும் செய்வார். பேபி சீட்டில் உட்கார வைத்துக் குழந்தையைச் சுமப்பதும் அநேகமாய்த் தந்தையின் பொறுப்பே! சீட்டே கனம். குழந்தையோடு சேர்த்துத் தூக்குவது சிரமம்! இதில் எல்லாம் எங்க மாப்பிள்ளை, பிள்ளை ஆகியோர் வெற்றிக் கம்பத்தை எட்டி விட்டார்கள். :)))))))) பையர் முதுகில் அல்லது மார்பகத்தில் உடலோடு சேர்த்துத் தூளி போன்ற அமைப்புள்ள துணியில் குழந்தையை வைத்துத் தூக்கிக் கொண்டு ஷாப்பிங் எல்லாம் செய்வார். கோயில்களுக்கும் அப்படியே செல்வார். இங்கே வந்தப்போவும் அப்படித்தான். இங்கே தான் அதெல்லாம் பழக்கம் இல்லையா? அதிசயமாப் பார்த்தார்கள்.

   நீக்கு
  3. குழந்தைக்கு ஆரம்பத்தில் இருந்தே அப்பா, அம்மா இருவரும் செய்வது அங்கெல்லாம் பழகி விடும். ஆகவே அம்மா வெளியே போனால் அப்பாவிடமும் அப்பா வெளியே போனால் அம்மாவிடமும் சமர்த்தாக இருந்துவிடும்.

   நீக்கு
  4. அமெரிக்காவில் இருக்கும் பழக்கம் இங்கு இல்லை என்பதே உண்மை. எனவே ஆச்சர்யத்தோடு பார்ப்பது மட்டுமில்லை, யாரும் பழகாமல் இருக்கிறார்கள்.

   //அம்மா வெளியே போனால் அப்பாவிடமும் அப்பா வெளியே போனால் அம்மாவிடமும்//

   என் தங்கை பேத்தி என்னிடம் வராமல் கடுப்பேற்றுகிறாள்!!!!

   நீக்கு
  5. ///என் தங்கை பேத்தி என்னிடம் வராமல் கடுப்பேற்றுகிறாள்!!!///

   என்னாதூஊஊ தங்கைக்கே பேத்தியோ?:) அஞ்சூஊஊஊஊ ஓடிக் கமோன்ன்ன்ன்ன்ன்:) ஶ்ரீராம் அஞ்டுவுக்கும் பேத்தி இருக்காமே இது நமக்குள் இருக்கட்டும் ஹா ஹா ஹா

   நீக்கு
  6. பாப்பூ விஷயத்தில் கீதாக்கா சொல்லியதை அப்படியே டிட்டோ செய்துடறேன்....

   ஸ்ரீராம் என் மகன் சின்னவனா இருந்தப்ப திருவனந்தபுரத்தில் எங்க வீடு க்ரஷ் போலத்தான் இருக்கும். அம்மாக்கள் பொதுவாக அங்கு எல்லோருமே வேலைக்குப் போயிடுவாங்க நம்ம ஊர்ப்பெண்கள் கூட கேரளா போய்ட்டா வேலைக்குப் போய்டுவாங்க பெரும்பாலும். அங்குள்ள பெண்கள் அப்ப்டி என்பதால். ஸோ மீ தான் வீட்டுல...எனவே லீவு நாட்களில் குழந்தைகள் என் பொறுப்புல இருக்கும். அப்புறமும் கூட பையன் வளர்ந்தப்புறம் கூட பாப்பாக்கள் நம்ம வீட்டுல கொண்டுவிட்டுடுவாங்க...கொஞ்ச நேரம் என்பார்கள் சில சமயம் கூடுதலாகவே இருக்கும். .சென்னையில் செகன்ட் டைம் மாறி வந்தப்பதான் யாரும் கொண்டு விட்டதில்லை...அது வரை வேறு வேறு ஊர்களில் இருந்தப்ப...என் பையனை அப்படி எங்கும் விட்டதில்லை. வெளியில் போக வேண்டும் என்றாலும் நானே இடுப்பில் வைத்துக் கொண்டு போய் வந்துடுவேன்...சோ சில கமென்ட்ஸ் வரும்....இரண்டு காது இருக்கே அப்புறம் அதன் பயன் என்ன? ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. ஸ்ரீராம் உங்க தங்கை பேத்திகிட்ட ஏதாவது தக்கினிக்கி யூஸ் பண்ணிப் பாருங்க...அவளுக்கு எது அட்ராக்ட் ஆவாள்னு பாத்து....வந்துருவா...

   கீதா

   நீக்கு
  8. என்னாதூஊஊ தங்கைக்கே பேத்தியோ?:) அஞ்சூஊஊஊஊ ஓடிக் கமோன்ன்ன்ன்ன்ன்:) ஶ்ரீராம் அஞ்டுவுக்கும் பேத்தி இருக்காமே இது நமக்குள் இருக்கட்டும் ஹா ஹா ஹா//

   அதிரா இது இம்புட்டு நாள் தெரியாதா...ஆ ஆ ஆ ஆ ஆ ஸ்ரீராம் நோட் திஸ் பாயின்ட்! ஹா ஹா ஹாஅ ஹா..
   ஸ்ரீராம் எம்புட்டு தடவை இங்க சொல்லியாச்சு தங்கை பேத்தி என்று...எல்லாருக்கும் தெரியுமாக்கும்....எல்லாருக்கும் தெரியும்ன்றது நமக்கு மட்டும் ஓகேயா...ஹா ஹா ஹாஅ ஹா

   கீதா

   நீக்கு
  9. //பையர் முதுகில் அல்லது மார்பகத்தில் உடலோடு சேர்த்துத் தூளி போன்ற அமைப்புள்ள துணியில் குழந்தையை வைத்துத் தூக்கிக் கொண்டு ஷாப்பிங் எல்லாம் செய்வார்.// இவையெல்லாம் இங்கேயும் வந்து விட்டன கீதா அக்கா. மால்களுக்குச் சென்று பாருங்கள் இளம் தாய் மற்றும் தந்தைமார்கள் இப்படி முதுகிலும், மாரிலும் குழந்தையை சுமந்து செல்வதை பார்க்கலாம். மேலும் இப்போதைய ஆண்கள் குழந்தை வளர்ப்பில் சம பங்கு வகிக்கிறார்கள்.

   நீக்கு
  10. பானுமதி! அம்பேரிக்காவிலேயே மால் என்றால் எனக்கு அலர்ஜி! ஓரமாய் ஓர் இடம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துட்டு அவங்களை எல்லாம் முடிச்சுக் கொண்டு வாங்கனு சொல்லிடுவேன். நான் இந்த ஷாப்பிங் விஷயத்தில் ரொம்பவே மோசம்! புடைவை எடுக்கப் போனால் கூட அரைமணி நேரம் தான். கிளம்பும் நேரம் தான் ஜாஸ்தியா இருக்கும். போகும்போதே கலர், டிசைன், என்ன ரகம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு போய்விடுவேன். ஆகவே அதில் கிடைச்சால் வாங்கிட்டு வந்துட்டே இருப்பேன். ஹிஹிஹி, என்னவோ சொல்லப் போக முழநீளம் ஆயிடுச்சு கருத்து! மாலுக்கெல்லாம் போகாததால் இதெல்லாம் இங்கே பார்த்தது இல்லை. மாலில் போய் வாங்க வேண்டியமாதிரி சாமான்கள் எதுவும் தேவை இருக்கவில்லையே! :))))

   நீக்கு
  11. கீதா ரெங்கன்... ம்ரியா அவள் பெயர். அவள் யாரோட மருமாள் பொண்ணு! என்னைவிட அதிக தக்கினிக்கி தெரிந்து வைத்திருக்கிறாள்...

   நீக்கு
 8. பாப்பூஊஊஊ. நல்ல தமாஷ்.
  பாவம் நீங்கள்.

  மகனால் கைவிடப்பட்ட தாய் வயிறு எப்படி நொந்ததோ.

  கல்கிக்கு விகடன் செய்த மரியாதை மிகவும் பாராட்டத்தக்கதுதான்.

  எல்லாவற்றுக்கும் பளீர் என்று பதில் சொல்லும் ஜெ அவர்கள் இப்பொழுது நடக்கும் சங்கதிகளுக்கு எப்படிப்
  பொங்கி இருப்பாரோ. பாவம்.
  ரஜினி செய்தி புதிது.
  இந்த வாரம் சுவாரஸ்யம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா... விஷயம் தெரிந்ததும் தமாஷ்! அதுவரை த்ரில்!

   எந்த அளவு நொந்திருந்தால் அந்தத் தாய் என்னை மகனிடம் விடவேண்டாம், அனாதை ஆசிரமத்திலேயே சேர்த்து விடுங்கள் என்று சொல்லி இருப்பார்?

   விகடன் கல்கிக்கு செய்த மரியாதை - அதுவும் அவர் விகடனை விட்டு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலானபோதும் - சிறப்புதான்.

   // இந்த வாரம் சுவாரஸ்யம்தான் //

   நன்றி அம்மா.

   நீக்கு
 9. எஸ் ரா அவர்களைப் பாராட்டணும்.

  ரஜினி வெளிப்படையா பேசுகிற ஆள்.

  ஜெ.வை தமிழர்களில் பெரும்பான்மையினர் மிஸ் செய்கிறார்கள்.

  தங்களோட குழந்தையைப் பார்த்துக்கறதே கஷ்டம். இதில் அடுத்தவர் குழந்தையை.... கஷ்டம்தான்

  கதம்பத்தை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஶ்ரீராமுக்குச் சொல்ற பதில் தான் உங்களுக்கும். ஆனால் கூடுதலாகவும், மாறுதலாகவும் இன்னொரு விஷயம். என்னோட சின்ன வயசில் எனக்குத் தோழர்கள், தோழிகள் எல்லாம் சிறுகுழந்தைகளே! அக்கம்பக்கத்துக் குழந்தைகளோடு தான் விளையாடுவேன். என் வயதை ஒத்த பெண்களோடு எல்லாம் விளையாடியதில்லை. அப்பா அனுமதிக்கவும் மாட்டார். அதைத் தவிரவும் தாத்தா வீட்டிற்குப் போனால் யாரானும் ஒரு சித்தியின் குழந்தை அல்லது மாமாக்களின் குழந்தை என்று தான் பொழுது போகும். அங்கே கூடுதலாகச் செய்யும் ஓர் விஷயம் என்னவெனில் என்னோட கசின்களோடு அங்கே தாராளமாய் விளையாடலாம். தாத்தா, பாட்டியோ, மாமாக்களோ, சித்திகளோ ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கூடவே அவங்க குழந்தைகளையும் பார்த்துப்போம். பார்த்துப்போம் என்றால் சும்மா விளையாட்டுக்காட்டுவது மட்டும் அல்ல! குழந்தையைக் குளிப்பாட்டுவதிலிருந்து எல்லாம். கழிவுகளைச் சுத்தம் செய்வது, மருந்து புகட்டுவது, நேரா நேரம் பால் பாட்டிலில் ஊற்றிக் கொடுப்பது என! தாய்ப்பால் சாப்பிடும் நேரம் தான் அவங்க குழந்தைகளை எடுத்துப்பாங்க! இரவு நேரம் அம்மாவோடு தூங்கும். என் ராசியோ என்னமோ இப்போவும் என்னை விட வயசில் சின்னவர்களே அநேகமாகத் தோழிகளாகவோ தோழர்களாகவோ இருக்காங்க!

   நீக்கு
  2. ஆனால் என் குழந்தைகளை யாரிடமும் விட்டதில்லை. விட்டால் ஓர் அரைமணி, ஒரு மணி நேரம், சாமான்கள் வாங்கவோ காய்கறிகள் வாங்கவோ கடைக்குப் போவதற்காகவோ, எலக்ட்ரிக் பில் கட்ட, ரேஷன் வாங்க என்று போனாலோ தான்! அதுவும் சின்னக் குழந்தை எனில் தூக்கிக் கொண்டு தான் போயாகணும். வீட்டில் விட்டுப் போக முடியாது!

   நீக்கு
  3. எஸ் ரா என்றாலே அவர் காவல் கோட்டம் பற்றி பேசியதும் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் வெளியிடப்பட்ட சமயம் பேசியதும் நினைவுக்கு வந்து விடுகின்றன!

   ரஜினி வெளிப்படையா பேசற ஆளா? அப்படியா?

   நன்றிநெல்லைத்தமிழன்.

   நீக்கு
  4. கீதா அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் பல விஷயங்கள் இன்றைய காலத்தில் செய்ய சான்ஸே இல்லாத செயல்கள்! அந்தக் காலம் பொற்காலம்.

   நீக்கு
  5. நாளைக்கு யோசிக்கும்போது இன்றைய காலம் பொற்காலமாத்தான் தெரியும் ஶ்ரீராம்:) இதைக் கண்டு பிடிக்க நீங்க ஞானி ஆகோணுமாக்கும் மீயைப்போல:)

   நீக்கு
  6. அதுவும் சரிதான் அதிரா... "நேற்று போல் இன்று இல்லை... இன்று போல் நாளையில்லை..." வரிகள் நினைவுக்கு வருகின்றன!

   நீக்கு
  7. ஸ்ரீராம் மீண்டும் கீதா அக்காவோடு ஹைஃபைவ்....எங்க கிராமத்துல ஊர்ல இருந்தப்பவும் அப்படித்தான் ஊரார் குழந்தைகளைத் தூக்கி, குளிப்பாட்டி விளையாடி என்று...

   ஆனால் அதிரா சொல்லியிருப்பது போல் அதே அதே இன்றைய காலம் எதிர்காலத்துக் குழந்தைகளுக்கு கோல்டன் டேஸ் கான் அப்படினு சொல்லிடுவாஅங்க...நீங்க இத நம்ம வீட்டுப் பெரியவங்கள்டருந்து பார்க்கலாம். என் பாட்டி சொல்லுவது அந்தக் காலம் போல வருமான்னு., அப்பா அம்மா மாமாக்கள் எல்லாம் சொல்லுவாங்க....அதே போல அந்தக் காலம் போல வருமான்னு அப்புறம் இப்ப நாங்க நம்ம தலைமுறை சொல்லறோம் அடுத்து நம் பிள்ளைகள் அவங்க அவங்க குழந்தைகளிடம் இப்படிச் சொல்லுவாங்க...

   நான் ஒரு சின்னதா ஒன்னு எழுதி வைச்சுருக்கேன் ஆனா இன்னும் பப்ளிஷ் பண்ணவே இல்லை வழக்கம் போல..

   தலைமுறை தலைமுறையாக/வாழையடி வாழையாக என்று பல தலைப்புகள் கொடுத்து ஹிஹிஹி

   என் அப்பா வை பாட்டி டேய் கண்ணா எல்லாம் எடுத்து வைச்சுண்டியா....என்று ஒவ்வொன்றாகக் கேட்பார். அப்பா என்னம்மா நான் சின்ன குழந்தையா என்ன ந்னு கேட்டு கோபத்துல போவார்.

   அடுத்து என் அப்பா என்னிடம் கன்செஷன் எடுத்துட்டியா, பேனாவுக்கு இங்க் போட்டியா...எட்ஸ்ற்றா எட்ஸ்ற்றா..அது சமீப காலம் வரை தொடர்ந்தது...வெளிய போகும் போது பை எடுத்தியா, உன் ஐடி கார்ட் எடுத்தியா பேங்க் புக் எடுத்தியா சில்லறை இருக்கா இப்படி...நான் என்னாப்பா நீ நான் என்ன இன்னும் எல்கேஜி பாப்பாவா ன்னு

   என் பையனிடம் நான் டேய் ...அதே பல்லவி அவனுக்கு ஏத்தாப்புல....அவன் பள்ளி படிக்கும் வரை பேசாமல் இருந்தவன் அப்புரம் என்னம்மா நீ நான் என்ன சின்ன பாப்பாவா என்று...

   கீதா

   நீக்கு
  8. தி/கீதா,நம்ம ரங்க்ஸ் எப்படி தெரியுமா? யார் வந்தாலும் அவங்க வரதுக்கு முன்னாடி ஃபோன் செய்யறச்சே ஆரம்பிச்சு இப்படி வாங்க, அந்த வாசல் தனி, எங்க வாசல் தனினு சொல்வதோடு இல்லாமல் லிஃப்ட் இருக்கு. 4 ஆம் நம்பரை அழுத்துங்க. மேலே வந்துடலாம் என்பார். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது நான் என் மனசுக்குள் சொல்லிக்கிறது) அவங்க கிளம்பும்போதும் இப்படித் தான் ஜாக்கிரதையாப் போயிட்டு வாங்க என்பதோடு நிற்காமல் லிஃப்டிலேயே போயிடுங்க! 0 எண்ணை அழுத்துங்க. கீழே க்ரவுன்ட் ஃப்லோர் வந்துடும் என்பார். அதே மாதிரி நாங்க வெளியே கிளம்பினாலும் என்னிடம் பால் தூக்கு மாட்டினியா, கதவை நல்லாப் பூட்டினியா, சாவி எங்கே? என்பதோடு இல்லாமல் கீழே இறங்கியதும் லெட்டர் பாக்ஸில் லெட்டர் இருக்கா பாரு என்பார். அதைத் தாண்டித் தான் போயாகணும். கண்ணில் படாமல் இருக்காது. இருந்தாலும் இவர் சொல்லுவார். இப்படி எல்லாத்துக்கும் சொல்லிட்டுச் சில சமயம் வாங்கிக் கட்டிப்பார்! :)))))))

   நீக்கு
  9. //கூடவே அவங்க குழந்தைகளையும் பார்த்துப்போம். பார்த்துப்போம் என்றால் சும்மா விளையாட்டுக்காட்டுவது மட்டும் அல்ல!// - இதெல்லாம் என் முந்தைய தலைமுறையோடு காணாமல் போயாச்சு. என்னோட தலைமுறைல அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை.

   //யார் வந்தாலும் அவங்க வரதுக்கு முன்னாடி ஃபோன் செய்யறச்சே ஆரம்பிச்சு// - எங்க அப்பாவும் இது மாதிரி விளக்கமாச் சொல்லுவார். நானும் விளக்கமாச் சொல்லுவேன். அது கேட்கும்போது கஷ்டமா இருக்கும், ஆனா நிச்சயம் உதவியா இருக்கும். சும்மா நல்ல குணங்களையெல்லாம் குறை சொல்லிக்கிட்டு.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (உங்கள் தகவலுக்காக... கோபு சாரும் இந்த மாதிரிதான் டீடெயிலாச் சொல்லுவார். இந்த இடத்தில் இறங்கி இப்படி ஆட்டோவைப் பிடிக்கணும், இவ்வளவு ஆகும் என்றெல்லாம். கேட்கும்போது கொஞ்சம் பொறுமை அவசியம். ஆனால் கவனமாக் கேட்டுக்கொண்டால் நமக்கு எந்தப் பிரச்சனையும் சந்தேகமும் இருக்காது. இதெல்லாம் பாராட்டத் தக்க குணங்கள்)

   நீக்கு
  10. // நான் ஒரு சின்னதா ஒன்னு எழுதி வைச்சுருக்கேன் ஆனா இன்னும் பப்ளிஷ் பண்ணவே இல்லை வழக்கம் போல..//

   கீதா.. சீக்கிரம் வெளியிடுங்க.. படிக்கலாம்!

   நீக்கு
  11. நெல்லை... இப்படி விளக்கமா பேசறதை நிறைய பேர் இப்போ விரும்புவதில்லை. குறிப்பாக இளைய தலைமுறை.

   நீக்கு
  12. ஹாஹாஹா :) நமக்கு இருந்த பொறுமை இளைய தலைமுறைக்கு இல்லை .

   நீக்கு
  13. இருக்கலாம் ஸ்ரீராம். நாம, அவங்க வழி தவறிடக்கூடாதே, மிஸ் பண்ணிடக்கூடாதே, தெளிவா வழி சொல்லுவோம்னு நினைப்போம். அவங்க, இதெல்லாம் நமக்கே தெரியும், இல்லைனா அங்கேயே கேட்டுத் தெரிஞ்சுப்போம், இதுக்கு எதுக்கு இவர் நம்மை 'சின்னக் குழந்தையா' நினைச்சுச் சொல்றார்னு நினைப்பாங்க.

   நாம பதின்ம வயசுல நினைத்த மாதிரிதானே இப்போ உள்ளவங்களும் நினைப்பாங்க. என்ன ஒண்ணு, அப்போ மனசுக்குள் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் கேட்டுக்கொண்டிருந்திருப்போம்... இப்போ முகத்துக்கு நேரேயே சொல்லிடறாங்க....

   நீக்கு
  14. இன்றைக்கு படித்துக்கொண்டிருந்தேன். அதனால்தான் இத்தனை நேரத்தில் எழுதறேன்...

   நீக்கு
  15. // இன்றைக்கு படித்துக்கொண்டிருந்தேன். அதனால்தான் இத்தனை நேரத்தில் எழுதறேன்... //

   என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள் என்று அறிய ஆர்வம்!

   நீக்கு
 10. கதம்பம் அருமை...

  எஸ் ரா அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 12. "பாப்பூ" என்று கூப்பிடுவார்களாம். அந்தப் பாடலில் "பாப்பூ" என்று மறுபடி மறுபடி வந்ததும் குழந்தை அம்மா அப்பாவைத் தேடாத தொடங்கி விட்டான்.//

  குழந்தையை குஷிபடுத்த குஷிபாட்டு போட்டு பெற்றோரை நினைக்கவைத்து விட்டீர்கள்.
  அனைத்து தகவல்களும் எனக்கு புதுசு படித்தேன் அனைத்தையும்.
  எஸ்.ரா. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குஷிப்பாட்டு அக்குழந்தைக்கு அகுஷிப் பாட்டு ஆகிவிட்டது!!! அந்தக் குழந்தை இப்போது பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறது!! நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 13. நல்லது செய்கிறோம் பேர்வழி என வெளிக்கிட்டு இப்பூடிப் பண்ணிப் போட்டீங்களே ஹா ஹா ஹா பாப்பூ க்குச் சொன்னேன்.
  இதுதான் நம் வாழ்க்கையில் பல தடவை நடந்து விடுகிறது, நல்லதுக்காகவே நினைச்சுப் பண்ணுவோம் ஆனா விதி விளையாட்டைக் காட்டி விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று என்னும் பழைய பாடல் நினைவிருக்கிறதா அதிரா?!!

   நீக்கு
 14. என்னாதூஊஉ 54 இல் கல்கி இறந்திட்டாரோ அவ்ளோ பழைய ஆளா அவர்.. நான் ஏதோ சமீபத்திலதான் காலமானார் என நினைச்சுக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாப் போச்சு போங்க! நீங்க தமிழிலே "டி"! அதை நாங்க நம்பணுமாக்கும்! யார் அந்தத் தமிழ் டீச்சர்? என் கையில் மாட்டட்டும்! அப்புறமா இருக்கு அவங்களுக்கு! :)))))))

   நீக்கு
  2. //என்னாதூஊஉ 54 இல் கல்கி இறந்திட்டாரோ அவ்ளோ பழைய ஆளா அவர்.. //

   ஹா.. ஹா... ஹா... ஜோக்தானே அதிரா? உங்களுக்கும் தெரியும்தானே?

   நீக்கு
  3. //யார் அந்தத் தமிழ் டீச்சர்? என் கையில் மாட்டட்டும்! அப்புறமா இருக்கு அவங்களுக்கு! :)))))))//

   ஹா.. ஹா.. ஹா... பழி ஓரிடம், பாவம் ஓரிடம்!

   நீக்கு
  4. கீசாக்கா என் டமில் டீட்சர் பிறந்ததே கல்கி இறந்த பின்புதானே:) அதுசெரி:) இதுக்கும் டி க்கும் என்ன சம்பந்தமாக்கும்:)... எங்கே என் செக்கைக் காணமே:)...
   ஆக்ஸுவலி நேக்கு டி ஸ்டார் கீசாக்கா .. மீதான் அடக்கி வாசிக்கிறேன் பிக்கோஸ் மீக்கு டற்பெருமை புய்க்காது:)...

   நீக்கு
  5. இல்ல ஶ்ரீராம் உண்மையாத்தான் அவர் இப்போ இல்லை என தெரியும் ஆனா இவ்ளோ ஏழியா போயிட்டார் என தெரியாது, உங்கள் எழுத்தைப் படிக்கும்போதுகூட பிறந்த ஆண்டை மாத்திச் சொல்றீங்களோ என திரும்ப படிச்சுப் பார்த்தேன் ...

   நீக்கு
  6. //உங்கள் எழுத்தைப் படிக்கும்போதுகூட பிறந்த ஆண்டை மாத்திச் சொல்றீங்களோ//

   அவர் பிறந்தது 1899. அது சரி.. அவர் புதுசு என்பது போல சொல்கிறீர்கள். ஆனால் அதே சமயம் நிஜமான புது எழுத்தாளர் எஸ் ரா பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!!!

   நீக்கு
  7. //என்னாதூஊஉ 54 இல் கல்கி இறந்திட்டாரோ அவ்ளோ பழைய ஆளா அவர்.. //

   ஹா.. ஹா... ஹா... ஜோக்தானே அதிரா? உங்களுக்கும் தெரியும்தானே?//

   ஹா ஹா ஹா ஸ்ரீராம்....மிஸ்ஸிங்க் ஏஞ்சல்!!!

   கீதா

   நீக்கு
  8. என்னாது? காந்தியைச் சுட்டுட்டாங்களா?

   நீக்கு
  9. எழுத்தாளர் ரா பற்றி எதுவும் புரியல்ல ஶ்ரீராம் அதனால்தான் பேசாமல் போனேன்...

   நீக்கு
  10. //ஆனா இவ்ளோ ஏழியா போயிட்டார் என தெரியாது, உங்கள் எழுத்தைப் படிக்கும்போதுகூட//

   அதிரா - பொன்னியின் செல்வன் நீங்க இப்போதான் சில வருடங்களுக்கு முன்னால் வாங்கினதால, கல்கி இன்னமும் இருக்கார்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க போலிருக்கு. நல்ல வேளை ஸ்ரீராம் எழுதினார். இல்லைனா, நீங்க அந்தப் புத்தகத்தை எழுத்துக்கூட்டிப் படிச்சு முடிக்கும்போது, அதாவது இன்னும் சில வருடங்கள் கழித்து, கல்கியோட ஆட்டோகிராப் வாங்கணும்னு நினைச்சுருப்பீங்க.

   நீக்கு
  11. ஹா ஹா ஹா பொன்னியின் செல்வனை நான் மறந்தாலும் நீங்க மறக்க விடமாட்டிங்க என்னை:).. எங்கின விட்டேன் எண்டே தெரியல்ல திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கோணும் ஹையோ ஹையோ:)..

   இல்ல எனக்கு கண்ணதாசன் அங்கிள் இல்லாமல் போயிட்டாரே எனத்தான் கவலை... அவரை நேரில் சந்திச்சு செல்பி எடுக்க பயங்கர ஆசை...:)

   நீக்கு
  12. அதிரா... கண்ணதாசன் வரலாறு முழுமையாப் படிக்கலை. ஒருவேளை ஸ்காட்லாந்துக்கு அவர் வந்திருப்பாரோ? நல்லா செக் பண்ணிப் பாருங்க. அப்படி இருந்தால், நதிக் கரையோர பெஞ்சில் நீங்கள் அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் (என்ன... அதுக்குள்ள இப்படி ஓடறீங்க...)

   நீக்கு
  13. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லைத்தமிழன் இது சொல்லவோ இன்னும் நித்திரை கொள்ளாமல் இருக்கிறீங்க:)... அவர் சென்னையிலதானாம் இன்னும் சுற்றுகிறார்:)...

   நீக்கு
 15. ஓ அந்த ஈரோடுக் கதை புதிசோ? இப்படித்தானேமுன்பு மெரீனாவில் ஒரு தாயை விட்டு விட்டுப் போனதாக செய்தி வந்துதே.... இதுக்கெல்லாம் காரணம் உண்மையில் ஆண்கள்(மகன்) தானா இல்லை வீட்டுக்கு வந்த மருமகளோ? என்ன கொடுமை, நினைக்கவே நெஞ்செல்லாம் என்னமோ பண்ணுதே...
  நாளைக்கு நமக்கும் வயசாகும் எனும் நினைப்பே இல்லாமல் பண்ணுகிறார்களே.. கடந்த காலத்தையும் நினைப்பதில்லை வருங்காலத்தையும் நினைப்பதில்லை சிலர்... இதுதான் முன் ஜென்மப் பலனோ:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா... இது புதுக்கதை.

   //இதுக்கெல்லாம் காரணம் உண்மையில் ஆண்கள்(மகன்) தானா இல்லை வீட்டுக்கு வந்த மருமகளோ? //

   விவாதத்துக்குரிய விஷயம். 50 - 50? இங்கேயும் விவாதிக்கலாம். அல்லது அவரவர் தளத்தில் புதிய பதிவுகளுக்கு வாய்ப்பு!

   நீக்கு
  2. இங்கே பொயிங்கியிருப்பேன் ஆனா முடியல்லியே , இனி வெளிக்கிடோணும் நேரமாகுது, ஏழியா முழிச்சிட்டமையால கொமெண்ட்ஸ் போட முடிஞ்சுது:)..

   நீக்கு
  3. ஶ்ரீராம், ஏற்கெனவே இதைக் குறித்து எழுதினேன். என்றாலும் திரும்பவும் எண்ணங்கள் அலைமோதுகின்றன. ஆனால் வேறே ஒரு வேலை கையில்.அதற்கான தகவல்கள் சேகரிப்பில் இருக்கேன். மத்தவங்க எழுதினாப் படிக்கலாம்.

   நீக்கு
  4. கீதா அக்கா.. ஒவ்வொருவரா எழுதுங்க... அரட்டை அடிக்கலாம்!

   நீக்கு
 16. இருக்கும்போது தெரியவில்லை எதுவும் ஆனால் இப்போ ஜெயலலிதா அவர்களைப் பார்க்க ஏனோ கவலையாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 17. தாயை இந்நிலையில் விட்டவனை நாளை இவனது மகனும் இதேநிலையில் விடுவான் இதுதான் விதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாபம்!

   ஆனால் கோபம்தான் வருகிறது இல்லையா கில்லர்ஜி?

   நன்றி.

   நீக்கு
  2. கோபம் வந்து ஒண்ணும் ஆகப்போவதில்லை ஒரு ஆயிரம் பேராவது மெரீனா இல குதிச்சு சூஊஊசைட்டூஉ பண்ணுவோம் வாங்கோ... கீசாக்காவையும் கையில பிடிச்சுக் கூட்டி வாறேன் இல்லை எனில் பாதியில எஸ்கேப் ஆகிடுவா:)

   நீக்கு
  3. ​எந்தப் போராட்டத்துக்கும் இனி மெரீனா பக்கமே போகக்கூடாது என்று நீதிமன்றம் கட்டளை போட்டிருக்கு!​!!!

   நீக்கு
  4. சரி தேம்ஸுக்கு பூஸார் நமக்கும் ரிக்கெட் போட்டு கூட்டிட்டுப் போய் ரீ சமோசா எல்லாம் வாங்கிக் கொடுத்து பூஸார் பார்த்துக் கொள்ள இருக்கும் போது ஸ்ரீராம் ஏன் கவ்லை போவாம் வாங்க...

   கீதா

   நீக்கு
  5. இந்த அதிரடிக்கு என்னைக் காவிரியிலோ இல்லாட்டி மெரினா சமுத்திரத்திலோ தள்ளணும் என்பதே குறி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

   நீக்கு
  6. ஹா ஹா ஹா அப்போ ஒரு சமாதானத்துக்கு வருவோம் கீதா:) காவிரிக்கே போயிடலாம்:)

   நீக்கு
  7. //அப்போ ஒரு சமாதானத்துக்கு வருவோம் கீதா:) காவிரிக்கே போயிடலாம்:)//

   அப்போ கீதாதான் இப்போ அதிராவுக்கு ரிக்கெட் போடணும்!!

   நீக்கு
 18. முதலில் எஸ் ரா அவர்களுக்கு வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 19. அந்த அம்மவைத் தவிக்க விட்டுப் போன பையன் ..ம்ம் என்னவோ போங்க...

  மனசு இப்ப்டியான செய்திகளைக் கேட்கும் போது என்னவோ செய்யுது...ஸ்ரீராம் இவர்கள் இப்ப்டி நடுத் தெருவில் விட்டுப் போறாங்கன்னாஅ.......கொஞ்சம் சொஃபஸ்டிகேட்டடா அம்மாவையோ அப்பாவையோ தனியாக அவங்க வீட்டில் விட்டு ஏதோ சாப்பாடும் ஏற்பாடு செஞ்சு பிள்ளைகள் எங்கேயோ இருக்காங்களே தங்களுடன் கொண்டு வைத்துக் கொள்ள முடியும் என்ற போதும்...

  மட்டுமல்ல இவர்கள் படுக்கையில் ஆகும் போது கூட என்னென்னமோ டெக்னாலஜி என்று வீடியோ போட்டு காட்டச் சொல்லுறாங்க கேமராவில்...ஆனால் அருகில் வந்து பார்த்து கொஞ்சமேனும் செய்யனும்னு நினைக்காம...பணம் மட்டும் கொடுத்து ....

  நட்டாற்றுக்கு இது தேவலாம் என்று தோன்றினாலும் என்னவோ மனம் கஷ்டப்படுகிறது ஸ்ரீராம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 20. எஸ் ராவின் சில தொடர்கள் அவ்வப்போது ஆவியில் படித்ததுண்டு. நிறைய வாசித்தது இல்லை என்றாலும் அவரது சில கட்டுரைகள் கட்டிப் போடும்...ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்...பிடிக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி/கீதா விகடன் பழைய முகத்தோடு வந்துட்டு இருக்கும்போது எஸ்.ரா.வின் கதைகள், கட்டுரைகள் அநேகமாய் வாரா வாரம் வந்தன. அப்போப் படிச்சது தான்! பயணக்கட்டுரைகள்! அதுவும் பயணத்தில் இரவு பற்றி அதில் மதுரை பத்தியும் ஒண்ணு அருமையா இருந்தது.

   நீக்கு
  2. எஸ் ரா எழுத்துகள் ஆரம்பத்தில் ரசித்திருக்கிறேன். அப்புறம் வாங்கி வைத்திருக்கும் சில புத்தகங்கள் இன்னும் படிக்கவில்லை!

   நீக்கு
  3. கிடைத்தால், எஸ்.ரா-வின் ’பனாரஸ்’ என்கிற சிறுகதையை வாசித்துப் பாருங்கள். இன்னும் இரண்டு வித்தியாசமான சிறுகதைகள் - தலைப்பு நினைவிலிருந்து தப்பிவிட்டது..

   நீக்கு
  4. இந்தக் களேபரத்தில் எஸ் ரா சம்பந்தமாக எழுத விட்டுப்போய்விட்டது அவரது சில நால்கள் படித்திருக்கிறேன். தேசாந்திரி போன்று. அருமையான நடை.அவர் பேச்சையும் காணொலியில் காட்டிருக்கிறேன். அவர் வத வத எழுத்துக்குச் சொந்தக்கார்ரல்ல. அனுபவங்கள் நம்மைக் கட்டிப்போட வைக்கும். மிகத் தகுதியானவர்.

   தமிழகத்தில் திராவிட அரசுகள் இருந்தால் அக்கப்போரில் தகுதியானவர்களுக்குக் கிடைத்திருக்காது. கன்னட, மலையாள இலக்கியவாதிகள் எவ்வளவு பாஇசுகள் பெற்றுள்ளனர், தமிழகத்தில் எவ்வளவு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டு மறைந்திருக்கின்றனர் என்று பாருங்கள்.

   நீக்கு
 21. தாயை தவிக்க விட்ட தனயனை நினைத்தால்.. என்ன மனிதர்களோ?..

  "என்னடா இது பாப்பூக்கு வந்த சோதனை..?"


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோஒ அப்படி இல்லை பானுமதி அக்கா... என்ன இது த்றீராமுக்கு வந்த சோதனை:).. அப்பூடிக் கேளுங்கோ:)..

   நீக்கு
  2. தாயைத் தவிக்க விட்ட தனயன்னு நம்பியாரை வச்சு ஒரு படம் வந்திருக்கோ!!! :P

   நீக்கு
  3. //என்ன இது த்றீராமுக்கு வந்த சோதனை:).//

   கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

   கர்ர்ர்ர்ர்ர்ர்.....

   நீக்கு
 22. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லும் நேரத்தில் அந்த புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று உறுதி அளிக்க விரும்புகிறேன். .

  பதிலளிநீக்கு
 23. ஜெஜெ, ரஜனி, கல்கி பற்றி ஆவி என்பது எல்லாமே எனக்கு செய்திகள் ஸ்ரீராம்....

  சரி எல்லோருக்கும்...நான் இன்று பயணம் ஸோ ....மீண்டும் சனியன்று சந்திப்போம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாது இது... போன ஊர்லயும் கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு. அனேகமா நாம ரயில்வே ஸ்டேஷன்லதான் சந்திக்க வாய்ப்பு இருக்கு போலிருக்கு

   நீக்கு
  2. எங்கின சந்திச்சாலும் ப்க்கென நெ தமிழனை செல்பி எடுக்கச் சொல்லி கீதாவின் சுவிஸ் எக்கவுண்டில ஒரு கோஓஓஓஒடி போட்டிருக்கிறேன் ஒரு கோஓஓஒடி:)...

   நீக்கு
  3. அதிரா நெல்லைத்தமிழனை செல்பி எடுக்கறதிலேயே இருக்காங்களே....!!!

   நீக்கு
  4. அதிரா... சிலர், தங்கை பேரன், அக்கா பேத்தி என்றெல்லாம் சொல்வதை வைத்து 'வயதானவர்' என்று நினைக்காதீர்கள். அவர் என்னைவிட 'பொடிப் பையன்', ஒரு 20-25 வயதாவது சிறியவராக இருப்பாரான்னு தெரியலை. நீங்க செல்ஃபி கேட்கவேண்டியது ஸ்ரீராமை. என்னை இல்லை. ஹா இக்கி இக்கி ஹா (இது எப்படி இருக்கு)

   நீக்கு
  5. ///அவர் என்னைவிட 'பொடிப் பையன்', ஒரு 20-25 வயதாவது சிறியவராக இருப்பாரான்னு தெரியலை.///
   ஹா ஹா ஹாகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இனி ஶ்ரீராம் இந்த ஜென்மத்தில தன் படமே போடாதமாதிரிப் பண்ணிட்டீங்களே:)....

   நெல்லைத் தமிழன் உங்கட படம் எங்களுக்கு வட்ஸப்பில வந்திருக்கு:) கோபு அண்ணன் அனுப்பினார்:)...
   ஹா ஹா ஹா உச்சிப் பிள்ளையார் வாசல்ல இருவரும் அடிச்சுப் புரளப்போகினம்:) நான் கச்சான் வறுத்தெடுத்துக் கொண்டுபோய்ப் புதினம் பார்க்கப்போறேன்ன்ன் எங்கிட்டயேவா பூஸோ கொக்கோ ஹா ஹா ஹா:)..

   நீக்கு
  6. //நீங்க செல்ஃபி கேட்கவேண்டியது ஸ்ரீராமை. என்னை இல்லை. ஹா இக்கி இக்கி //

   //இனி ஶ்ரீராம் இந்த ஜென்மத்தில தன் படமே போடாதமாதிரிப் பண்ணிட்டீங்களே:)..//


   இந்த ஆட்டத்துக்கு நான் வரலை!

   நீக்கு
 24. பில்லா படம் பற்றி தெரியாது. ஆனால், ரஜினி தான் ஜெயலலிதாவை முதன்முதலாக சந்தித்ததை பற்றி ஒரு முறை கூறியிருந்தார். டைரக்டர் ஸ்ரீதர், தன்னுடைய படத்தில் ரஜினியை கதாநாயகனாகவும், ஜெயலலிதாவை கதாநாயகியாகவும் போட்டு ஒரு படம் எடுக்க நினைத்திருந்தாராம். அது விஷயமாக பேச ரஜினியை ஜெயலலிதாவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றாராம். ஜெயலலிதா ரஜினியோடு பேசவே இல்லையாம். அது ஸ்ரீதருக்கு தர்மசங்கடமாக போய்விட ஜெயலலிதாவிடம்,"அம்மு, இவர்தான் நம்ம ஹீரோ"என்று அறிமுகம் செய்தாராம். உடனே,ஜெ."ஓ அப்படியா? நான் யாரோ அசிஸ்டெண்ட் டைரக்டர் என்று நினைத்தேன்" என்று கூறி விட்டு சகஜமாக பேச ஆரம்பித்தாராம். சற்று நேரத்தில் ரஜினிக்கு வேறு வேலை இருந்ததால் விடை பெற்றுக் கொண்டாராம். அவரை வாசல் வரை வந்து விடை கொடுத்தாராம் ஜெ. ரஜினியிடம் அப்போது ஸ்கூட்டர்தான் இருந்ததாம், அதனால் கொஞ்சம் அவமானமாக கூட உணர்ந்தாராம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா என்னா இது அஞ்சுட சித்தப்பாவுக்கு வந்த ஓதனை பானுமதி அக்கா:)... ரஜனி அங்கிள் சொல்லியிருக்கிறார் ஜே அவர்கள் சூட்டிங் முடிஞ்சு வெளியே வரும்போது தான் வெளியே நின்று பார்த்து ரசிப்பாராம் பின்பு அவவோடயே நடிச்சதெனில்... கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனும் இப்படித்தானே...

   நீக்கு
  2. பானு அக்கா.. எங்கே வாசிக்கறீங்க இதெல்லாம்? புதிய தகவல்! சுவாரஸ்யமாவும் இருந்தது.

   மேலே ரஜினி ஒருமாதிரி அலைந்த நாட்கள் பற்றி எழுதி இருந்ததைப் பகிர்ந்திருக்கேன்.. அதை யாரும் படிக்கவில்லையா?

   நீக்கு
  3. இதெல்லாம் அவர் கண்ணுக்கு போய் அவருக்கு 96 படத்தை காட்டின மாதிரி இருக்காது ???????? பாவம் சித்தி
   நானா பாப்பூ மேட்டர் மட்டுமே படிச்சேன் மற்றதை படிச்சிட்டு வர்றேன்

   நீக்கு
  4. அவர் அரசியல்ல தொபுக்கடீர்னு குதிக்கப் போறாராம்... இதெல்லாம் எங்கே படிக்கப் போறார்?!!!

   நீக்கு
  5. அப்போ நான் முந்தி எழுதிப்போட்ட லெட்டர் அவர் கைக்கு கிடைக்கலை போல் :) சரி இன்னொன்னு எழுதிருவோம்

   நீக்கு
  6. ஓ லெட்டர் வேற எழுதி இருக்கீங்களா? 'அந்த'ப் பதிவுதானே?

   நீக்கு
 25. குழந்தைகளை கவனித்தால் எழுத ஆயிரம்சமாச்சாரங்கள் இருக்கும்கதம்பம் சுவாரசியம்

  பதிலளிநீக்கு
 26. ஹாஹஆ :)
  //எப்படியெல்லாம் சோதனை வருகிறது பாருங்கள்!//
  முன்பும் ஒரு குட்டி லாப்டாப்பெல்லாம் தட்டி விளையாடுச்சி இல்லையா ? இன்னொரு வாண்டு கனவிலும் ஜல்ஜல் னு வந்ததும் சொல்லியிருக்கீங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... கனவு ஜல்ஜல் எது என்று ஞாபகம் இல்லையே... இன்னொன்றுநினைவிருக்கிறது!

   நீக்கு
  2. https://engalblog.blogspot.com/2016/11/blog-post_3.html

   நீக்கு
  3. எனக்கு வந்த அதிகாலை கனவில் :) தான் ரெண்டு மழலைகள் சலங்கை சத்தம் அதை நான் ஜல் ஜலனிட்டேன்

   நீக்கு
  4. ஏஞ்சல்... உங்கள் நினைவுத்திறன் எப்பவுமே என்னை ஆச்சரியப்படுத்தும். இபபவும். நானே கொஞ்சம் புதுசா அந்தப் பதிவைப் படித்தேன்!!! அதைவிட ஆச்சர்யம் நீங்கள் வேகமாக அந்தப் பதிவைத் தேடி எடுத்தது...

   நீக்கு
  5. ஹாஹா :) தாங்க்ஸ் ...2016 நவம்பர் என்று நினைவு .அதை வச்சே தேடினேன்
   அதில் விவா பத்தி கூட சொல்லியிருந்தேன் :)

   நீக்கு
 27. வாவ் !! ராஜா என்பார் மந்திரி என்பார் !! என்ன ஒரு பாட்டு இல்லியா ..புவனா ஒரு கேள்விக்குறி படப்பாடல் தானே வெளிநாட்டுக்கு புறப்படுமுன் விசா கிடைச்சதும் அம்மாவோட கடைசியா பார்த்த படம் .. )அம்மாவுக்காக

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா ஸ்ரீராம் நாம் சித்தப்பாவை கட்டாயம் பாராட்டணும் ..ஒளிவு மறைவில்லாம நேர்மையா ஒத்துக்கிட்டாரே தான் கலாட்டா பண்ணதை ..அவே மட்டுமில்ல அங்கிள் கமலும் அப்டித்தான்

   நீக்கு
 28. எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
  எஸ் ரா ..ஜெமோ தி ஜா எல்லாரையும் ஒரு காலத்தில் தேடி படிச்சேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன, தி,ஜா வையும் இவர்களோடு சேர்க்கிறீர்கள்? ...கர்ர்ர்ர்ர்...!

   நீக்கு
  2. இன்னும் நிறையபேர் விடு பட்டது :) நடுவில் வீடு க்ளீனிங் ...

   எல்லாரையும் படிப்பேன் அதிகம் தி.ஜா ,பாலகுமாரன் புக்ஸ் கிடைச்சது :) எல்லாம் இங்கே லண்டன் லைப்ரரியில்தான்

   நீக்கு
  3. 2006 க்கு அப்புறம் தான் எஸ்ரா ஜெமோ தெரியும் ..ஆனா தி ஜா எப்பவோ தெரியும் அம்மா புக்ஸ் கலெக்ஷனில்

   நீக்கு
 29. தாயை தவிக்கவிட்ட ஜென்மங்கள் :( வேதனை .
  இவர்களுக்கெல்லாம் மனசாட்ச்சி /மனம் என்று ஒன்று இருக்கா ?

  பதிலளிநீக்கு
 30. கல்கி மறைந்த செய்தி அறிவிப்பு, தொடர்ந்து வாசன் அவர்கள் மேற்கொண்ட திருத்தங்கள். குஷியில் பாப்பு பாடலும் குழந்தையும். எஸ்.ரா வுக்கு சாகித்திய அகாடமி விருது என்பது இந்த ஆண்டின் இனிப்பான செய்தி. எல்லாப் பதிவுகளும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 31. கதம்பம் சுவாரஸ்யம். அந்த அம்மாவை நினைத்தால் :(

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!