தொலைபேசியை எடுத்து, "ஹலோ" என்றேன்.
மறுமுனையில் பேசிய குரல், தொலைபேசி யார் பெயரில் பதிவாகி இருக்கிறதோ, அவர் பெயரைச் சொல்லி, 'அவர் இருக்கிறாரா' என்று கேட்டது.
'இல்லை.'
'அவருடைய அலைபேசி எண் கொடுப்பீர்களா?'
'மாட்டேன்.'
'ஏன்?'
'தெரியாது.'
'எப்போ வருவார்?'
'தெரியாது.'
'நீங்க யாரு?'
'தெரியா ...... இல்லை நான் அவருக்கு தூரத்து உறவு.'
'எவ்வளவு தூரம்?'
'முன்னூற்று நாற்பத்து ஒன்று கிலோ மீட்டர்!'
'உங்கள் பெயர் என்ன?'
'குப்புசாமி.'
'சரி, மிஸ்டர் குப்புசாமி, உங்களுக்கு எங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட் பிளான் பற்றி சொல்லட்டுமா?'
'வேண்டாம்.'
'ஏன்?'
'எனக்கு வருமானமே கிடையாது.'
'அப்போ எப்பிடி சாப்பிடுகிறீர்கள்?'
'கையாலதான்!'
மறு முனையில் பேசிக் கொண்டிருந்த குரல், மேலும் சம்பாஷணையை எப்படித் தொடர்வது என்று தெரியாமல், திகைத்து, இணைப்பை துண்டித்தார்கள்.
********* ***********
ஸ்ரீராமை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
'ஹலோ? ஸ்ரீராம் எங்கே?'
'ஆமாம். '
'அவர் ஆபீசில் ஆடிட் என்று சொல்லி காலையில் சீக்கிரமே கிளம்பிப் போயிருக்கிறார். '
'அலைபேசி கொண்டு செல்லவில்லையா?'
'எடுத்துக்கிட்டுப் போயிருக்கார்.'
'ஆனால் நான் கால் பண்ணினால், அலைபேசி சுவிட்ச் ஆஃப செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வருகின்றது?'
'ஆமாம். ஆடிட் நேரத்தில் அலைபேசியை ஆஃப் செய்து வைத்துவிடுவார். '
'ஓ? அப்போ சரி. எப்பவாவது அவர் வீட்டுக்கு கால் செய்தால், ஏகாம்பரம் பற்றி என்னிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிடு.'
'யாரு மாமா ஏகாம்பரம்?'
'கூகிள் ஏகாம்பரம் என்று சொன்னால், அவருக்குத் தெரியும்.'
'சரி.'
***************** ******************* ***************
மீண்டும் தொலைபேசி ர்ர்ர் ரிங் ரர்ர்ர்ர் ரிங்.
எடுத்தேன்.
'ஹலோ?'
'ஹலோ!'
மறுமுனையில் ஹலோ சொன்ன குரல், இதற்கு முன்பு பேசிய உபத்திரவ அழைப்பில் பேசிய குரல் போலவே இருந்தது.
'ஹலோ, நான் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனக்கு வருமானமே கிடையாது; என்னால் எங்கும் ஒரு பைசா கூட போடமுடியாது. இருந்தாலும் என்னால் சாப்பிட முடியும். கைகளாலும் சாப்பிடுவேன், ஸ்பூனாலும் சாப்பிடுவேன். போதுமா?'
'மாமா என்ன ஆச்சு உங்களுக்கு? இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?'
பேசியவர், ஸ்ரீராமின் தூரத்து சொந்தம். (ஹி ஹி - ஆமாம் தூரத்தில் வசிக்கின்ற சகோதரர்!)
'ஓ! நீங்களா!'
'ஆமாம்.'
'என்ன விஷயம்?'
'மாமா - உங்களுக்கு ஏற்காடு ஏகாம்பரம் என்று யாரையாவது தெரியுமா?'
'எனக்குத் தெரிந்தது எல்லாம் கூகிள் ஏகாம்பரம்தான். அதுவும் இன்று காலையில்தான்.அது போகட்டும், ஏற்காடு ஏகாம்பரம் யாரு?'
'அப்படி ஒருவர் சற்று நேரம் முன்பு எனக்கு போன் செய்தார்.'
'என்ன சொன்னார்?'
"இன்னும் ஒரு மணி நேரத்திற்குள், அவர் சொல்கிற இடத்திற்கு சொல்கிற அமவுண்ட் கொண்டு வந்து கொடுத்தால், ஸ்ரீராமை வீட்டுக்கு அனுப்புவோம். இல்லையேல் அவரை பல்லாவரம் பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் சிறை வைத்துவிடுவோம்" என்றார்.
(முக்கியக் குறிப்பு: இந்தக் கதையில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் -------------)


