இந்த வாரம் தினகரன் ஆன்மீகச் சிறப்பிதழில் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் ஆலயம் பற்றி சிறப்பு செய்திகள். இழந்த பொருள்களைத் திரும்பிப் பெறும் சக்தி மிக்க மந்திரம் ... என்றெல்லாம் கேட்டுக்கொண்டே தூங்கிப் போனேன்.
சனிக்கிழமை, வழக்கமான வாராந்தர சந்திப்புகள், கூட்டுப் பிரார்த்தனை இவற்றுக்கு நடுவில் அறிவு ஜீவியின் வருகையும் சேர்ந்தது. குழந்தைகள் வழக்கம் போல் அவரிடம் போய் பாட்டரி டிஸ்சார்ஜ் ஆனதால் வேலை செய்வதை நிறுத்திவிட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் தொடங்கி, அதிகம் சார்ஜ் செய்யப்பட்டு உப்பிப் போன செல் ஃபோன் பாட்டரி வரை எல்லாவற்றையும் காட்டி ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மாமா தினகரன் ஆன்மிகச் சிறப்பிதழுடன் ஆஜரானார். " இழந்த பொருள்களைத் திரும்பிப் பெறுவதற்கு இந்த மந்திரத்தை சொன்னால் பொருள் இழந்தவரிடம் திரும்பிவிடுமாமே ?" "சரி, நான் முதலில் சொல்ல மற்ற எல்லோரும் திரும்பி சொல்லுங்கள். இந்த வாரம் முதல் நாம் இழந்த பொருள் என்ன என்னவெல்லாம் திரும்பி வருகிறது என்று பார்ப்போம்" என்றார் அறிவு. எல்லோரும் அப்படியே அவர் சொல்லச் சொல்லத் திரும்பி சொன்னோம். பலன் ...? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்களேன். யார் யாருக்கு என்னென்ன நடந்தது அல்லது திரும்பி வந்தது என்று கேட்டுச் சொல்கிறேன்.