வியாழன், 4 பிப்ரவரி, 2010

தொலைத்ததும் ... கிடைத்ததும்!

இந்த வாரம் தினகரன் ஆன்மீகச் சிறப்பிதழில் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் ஆலயம் பற்றி சிறப்பு செய்திகள். இழந்த பொருள்களைத் திரும்பிப் பெறும் சக்தி மிக்க மந்திரம் ... என்றெல்லாம் கேட்டுக்கொண்டே தூங்கிப் போனேன். 


சனிக்கிழமை, வழக்கமான வாராந்தர சந்திப்புகள், கூட்டுப் பிரார்த்தனை இவற்றுக்கு நடுவில் அறிவு ஜீவியின் வருகையும் சேர்ந்தது.  குழந்தைகள் வழக்கம் போல் அவரிடம் போய் பாட்டரி டிஸ்சார்ஜ் ஆனதால் வேலை செய்வதை நிறுத்திவிட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் தொடங்கி, அதிகம் சார்ஜ் செய்யப்பட்டு உப்பிப் போன செல் ஃபோன் பாட்டரி வரை எல்லாவற்றையும் காட்டி ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். 



மாமா தினகரன் ஆன்மிகச் சிறப்பிதழுடன் ஆஜரானார். " இழந்த பொருள்களைத் திரும்பிப் பெறுவதற்கு இந்த மந்திரத்தை சொன்னால் பொருள் இழந்தவரிடம் திரும்பிவிடுமாமே ?"   "சரி, நான் முதலில் சொல்ல மற்ற எல்லோரும் திரும்பி சொல்லுங்கள். இந்த வாரம் முதல் நாம் இழந்த பொருள் என்ன என்னவெல்லாம் திரும்பி வருகிறது என்று பார்ப்போம்" என்றார் அறிவு. எல்லோரும் அப்படியே அவர் சொல்லச் சொல்லத் திரும்பி சொன்னோம். பலன் ...?  அடுத்த வாரம் வரை பொறுத்திருங்களேன். யார் யாருக்கு என்னென்ன நடந்தது அல்லது திரும்பி வந்தது என்று கேட்டுச் சொல்கிறேன்.

10 கருத்துகள்:

  1. முன்னொருகாலத்திலே (போன மாசாத்த தான் சொல்லுறேன்), என்னுடை பதிவை படித்து பின்னூட்டம் போட்ட சில நண்பர்கள் கொஞ்ச நாளா காணாம போயிட்டாங்க..(பின்னூட்டம் போடலையே.. அப்ப இதானே அர்த்தம்).
    மீண்டும் கிடைக்கனும்னு வேண்டிகிட்டு, இந்த மந்திரத்த சொல்லப் போறேன்.
    'எங்களுக்கு' (உங்களுக்குத்தான்) நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அந்தப் படத்தில் "எங்கள் Dog" என்பதற்கு பதில் "எங்கள் blog" என்றெழுதி விட்டீரோ?

    பதிலளிநீக்கு
  3. :)). ஓஹோ. நாக்குட்டி காணாம போச்சோ!

    பதிலளிநீக்கு
  4. நியாபக மறதியாக எங்கேயாவது வைத்து விட்டு தேடிக் கொண்டே இருக்கும் பொருட்கள் உடனே கிடைத்தாலும் நன்றாக இருக்கும்:)! எவ்வளவு நேரம் மிச்சமாகும்:(?

    பதிலளிநீக்கு
  5. இன்னிக்கு காணாம்ம போனதுக்கு மந்திரம்னு சொல்வீங்க. பிறகு செல்வம் சேர்றதுக்கான மந்திரம் னு ஒன்றை சொல்லிட்டு வேலைக்கு போகாம்ம மந்திரத்தையே சொல்லிட்டு உக்காந்திட்டீங்கன்னா என்ன பண்றது.

    பதிலளிநீக்கு
  6. manthiram thanthiram arumai . kitaththathu enraal en itukaiyil karuththitavum . kaththirukkiren atleast neengkalaavathu kitaipeerkal enru.

    பதிலளிநீக்கு
  7. நான் தொலையாத ஒண்ணை மறக்காத ஒண்ணைத் தேடுறேன்.
    இந்த மந்திரம் சரியா வருமா ஸ்ரீராம் ?

    பதிலளிநீக்கு
  8. ஏதோவொரு படத்தில் கௌண்டமணியும், செந்திலும், வடிவேலுவும் திருவிழாவில் தொலைந்தபோனவர்களை தேடி தருகிறேன் என்று ஒரு ஆளிடம் அவன் மனைவியை ஒப்படைத்தது போல் இல்லாமல் இருந்தா சரிதான் !

    பதிலளிநீக்கு
  9. //நான் தொலையாத ஒண்ணை மறக்காத ஒண்ணைத் தேடுறேன்.//
    அப்ப நீங்க இருட்டுல தேடிண்டு இருக்கீங்க ஹேமா. வேண்டாம், தடுக்கிதான் விழுவீங்க. வெளிச்சத்துக்கு வாங்க. எல்லாமே, கண்ணுக்கு தெளிவா புலப்படும். தேடுவதும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!