1. கீழே உள்ள படங்களுக்குள் என்ன சம்பந்தம்?
2.
என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்த பொழுது குமுதத்தை புரட்டினேன்(நான்
இந்த வாராந்தரிகளை வாங்குவதை நிறுத்தி கொஞ்ச வருடங்களாகி விட்டன). அதில்
சுஜாதாவின் தொடரில் தமிழில் எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு வீ ட்டுப்பாடம் கொடுத்திருந்தார். ஒற்றை எழுத்து வார்த்தை ஒன்பது கூறுங்கள் பார்க்கலாம் என்று.. நான் முயற்சி செய்தேன், ஐந்து வார்த்தைகள்தான் தேறின. நீங்கள் முயலுங்கள். கூகுள் பக்கம் போகக் கூடாது.
3. சில பிரபலங்களின் சிறு வயது படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் என்று கண்டு பிடியுங்கள்.
நன்றி!
அன்புடன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
தமிழ்மணத்தில் வாக்களிக்க சுட்டி
விடை சொன்னதும் வந்து பார்த்துக்கறேன். :)
பதிலளிநீக்குவிடைகளைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குதம +1
shah rukh khan and virat kohli தெரியுது.
பதிலளிநீக்குசுலபமாக பத்துக்கு மேல் சொல்லிவிடலாம். அனால் ஒற்றை எழுத்து வீட்டுப் பாடத்தினால் என்ன பலன் என்று சுஜாதா சொல்லியிருப்பாரென்று நம்புவோம். (ஏனென்ன்று கேட்கவா முடியும்?).
பதிலளிநீக்குபோனால் போகுது, இன்னும் போணி ஆகலையே இரண்டாவதுக்கு மட்டும் முடிஞ்ச பதில். ஆ=பசு, தீ=நெருப்பு, நா= நாக்கு கா= காப்பாய், மை= கண் மை, பேனாவோட மை, ஆச்சா? யோசிக்கிறேன்.
பதிலளிநீக்கு1. சைனீஸ் வருடங்களின் பெயராக, எலி, பன்றி, குரங்கு,குதிரை ஆகியவை உள்ளன.
பதிலளிநீக்கு2. நீ, வா, போ-செல், சா-இறந்து போ, கா-காப்பாற்று, வை, கோ-பசு, பா, பூ, ஆ-பசு, பை, கை, மா-மாமரம்/பழம், மை-கண்ணுக்கிடும் மை, சே.. இன்னும் யோசிக்கிறேன்.
த ம
அட, நம்ம கை! அதுவும் ஒற்றை எழுத்துத் தானே, பொருள் சொல்ல வேண்டாம்! கோ=அரசன், பூ இதுக்குப் பொருள் வேண்டுமா? நீ, வை, வா! போ! ஈ கூட ஒற்றை எழுத்துத் தான்! ஓ விளிச்சொல்! மா என்று மாமரத்தையும் ஒற்றை எழுத்தில் சொல்லலாம். அம்மாடி, போதும், அப்புறமா வரேன், :)
பதிலளிநீக்குஙே! அதுக்குள்ளே இத்தனை போணியா????????????????????????????????????
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநிறைய பதில் வந்துருக்கே....
பதிலளிநீக்குத.ம. +1
zodiac signs of chinese calendar?
பதிலளிநீக்குபூ தீ ஆ பா தா போ நீ வா மை வை கை மா நா கா சா
அவளிடம் காதல் கொண்ட அவன், அவளது மை இட்டக் கண்களில் மயங்கி பூ போன்றவள் என்று வர்ணித்து வா நீ, தா உன் மனதை என்று பா எழுதிக் கொடுக்க தூ என்று சொல்லி போ நீ! சா! என்று தீ வார்த்தைகளை அவளது நா கக்கிட அவன் ஓ! என்று சொன்னாலும், ஆ! என்று வருந்தி கை கூப்பி, மா மரத்தின் அடியில் இருந்த ஈ மொய்த்துக் கொண்டிருந்த ஊர் தெய்வத்தைப் பார்த்து உலகின் கோ வே! கா! என்று வேண்டினான்.
சுஜாதா எதற்காகச் சொன்னார் என்று தெரியாட்டாலும் அவர் சொன்ன வீட்டுப் பாடத்தை இப்படியோ என்று நினைத்து ..ஹிஹிஹிஹிஹி. இங்கு பல விற்பன்னர்கள் இருக்கிறார்கள்....
அதற்கு அடுத்த படங்களை மீண்டும் பார்த்து யாராக இருக்கும் என்று யோசித்து மீண்டும் வருகிறேன்...
கீதா
கீதா அக்காவும், நெல்லை தமிழனும் தாமதமாக வர வேண்டும் என்று கூறியிருக்கலாம்,🙄
பதிலளிநீக்குzodiac signs of chinese calendar?// சமீபத்தில் இப்படிப் படங்கள் கொடுத்து என்ன தொடர்பு என்று எங்கள் உறவு வாட்சப் குழுவில் கேட்கப்பட்டதால்.... அப்போது அறிந்ததை இங்கும் அப்படித்தான் இருக்குமோ என்று சொல்லிட்டேன்...இல்லைனா இப்படி யோசித்திருப்பேனானு??!!! நோ சான்ஸ் ஹிஹிஹிஹி....
பதிலளிநீக்குகீதா
விடை சொல்வோமான்னு யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா அக்காவும், நெல்லை தமிழனும் தாமதமாக வர வேண்டும் என்று கூறியிருக்கலாம்,🙄// கரீக்டுதான்....ஆனா பானுக்கா கூவத்தின் மேல சத்தியமா நான்..நான்....நானாத்தேன் விடை சொல்லிருக்கேன்!!! நெ த கிட்டயோ கீதாக்கா கிட்டயோ டீல் போடலை!!ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
4 வது படம் தெலுகு ரிப்போர்ட்டர்னு தெரியறதுநால அது தெலுங்கு தேசம்னு ஊகம் ஆனா யார்னு தெரியலை...
பதிலளிநீக்குகீதா
அ (8 ஐக்குறிக்கும்)
பதிலளிநீக்குதை (மாதம் )
மற்றும் பல ஓரெழுத்துச்சொற்களை (எனக்குத்தெரிந்த சொற்களை) பலர் சொல்லிவிட்டனர்.
எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திருந்த தகவல்படி ஓரெழுத்துச்சொல் தமிழில் 42 உள்ளதாக அறிகிறேன்.
நீக்குஅதை அப்படியே இங்கு. Copy and paste செய்ய வேண்டாமென நினைக்கிறேன்
எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திருந்த தகவல்படி ஓரெழுத்துச்சொல் தமிழில் 42 உள்ளதாக அறிகிறேன்.
நீக்குஅதை அப்படியே இங்கு. Copy and paste செய்ய வேண்டாமென நினைக்கிறேன்
3. நாலாவது படம் காஜல் அகர்வால்
பதிலளிநீக்கு2. தீ, கூ (கூவு அல்லது கூவுதல்), தை (தைத்துவிடு அல்லது தையல்-பெண், மாதம்), நீ, சீ, தூ, வ-தமிழ் எண்கள் நிறையச் சொல்லலாம். வ என்றால் quarter
கௌ- பசு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்.
எந்த கீதா அக்கா? நான் முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடையே சொல்லலியே! இரண்டாம் கேள்விக்குப் பாதி சொல்றச்சே ரங்க்ஸ் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) காஃபி வேணும்னு கூப்பிட்டுட்டார்! முழுக்கச் சொல்லவே இல்லை! அதுக்குள்ளே தில்லையகத்து கீதா ரங்கன் வந்து (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாத்தையும் சொல்லிட்டாங்க! ஆனாலும் பொற்கிழி எனக்குத்தான். நெ.த.வையெல்லாம் கணக்கில் எடுத்துக்காதீங்க! :)))))
பதிலளிநீக்குஇந்த அர்த்தத்துல யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதா - தாவு அல்லது தாவுதல். உதாரணம் தாமரை- தாவுகின்ற மான் என்று அர்த்தம்
ஈ- பிறருக்குக் கொடுத்தல். (கீ.சா. Flyனு நினைச்சிருப்பாங்க) ஈதல் இசைபட வாழ்தல்
இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்கும். கா வா வா கந்தா வா எனை கா வா வேலவா- காக்க வருவாய் என்ற அர்த்தம்.
இன்னும் இருக்கிறது. போதும்
யோசிச்சா மூளை செலவாகிடும்.. ஓட்டு போட்டுட்டு போறேன்
பதிலளிநீக்கு3. Virat kohli
பதிலளிநீக்குRahul Dravid
Shahrukh khan
Kajal Agarwal
2. ஓரெழுத்தொரு மொழிகள்
பதிலளிநீக்குஆ ஈ ஐ ஓ
கா தா பா மா வா சீ தீ பீ
தூ பூ
சே கை தை பை மை வை
கோ போ
படித்தேன்!த ம 9
பதிலளிநீக்குநல்ல போட்டி. பதில்களை பார்த்துக் கொண்டேன். நன்றி
பதிலளிநீக்குஅதுக்குள்ளே தில்லையகத்து கீதா ரங்கன் வந்து (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாத்தையும் சொல்லிட்டாங்க! ஆனாலும் பொற்கிழி எனக்குத்தான். நெ.த.வையெல்லாம் கணக்கில் எடுத்துக்காதீங்க! :)))))//
பதிலளிநீக்குஹஹஹ் கீதாக்கா நான் என்னத்த சொல்லிட்டேன் மூணாவது கேள்வி எனக்குத் தெரியவே தெரியாது!!! பரவால்ல பரவால்ல பொற்கிழி உங்களுக்கே!!! நெ த க்கும் உங்களுக்கும் தான் போட்டி நெ த இன்னும் சொல்லிட்டே இருக்கார் நிறைய ஒற்றை எழுத்து வார்த்தைகள்!! ஸோ அவரோட டீல் போடுங்க ஹிஹிஹி
கீதா
கௌ- பசு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்.// அஹ்ஹாஹஹ் நெ த இது எனக்கும் டக்னு தோணிச்சு!!!! ஹைஃபைவ்!!!!
பதிலளிநீக்குகீதா
எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திருந்த தகவல்படி ஓரெழுத்துச்சொல் தமிழில் 42 உள்ளதாக அறிகிறேன்.
பதிலளிநீக்குஅதை அப்படியே இங்கு. Copy and paste செய்ய வேண்டாமென நினைக்கிறேன்.
On getting concurrence from Sri.KGG sir I am posting the next comment.
நீக்குதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
பதிலளிநீக்குஅ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
இந்த ஓரெழுத்துச் சொல்குறித்து நான் என் பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன் தஞ்சையம்பதி துரை செல்வராஜு சரியாக எழுதி இருந்த நினைவு
பதிலளிநீக்குபெரியவங்க எழுதிட்டாங்க ஒற்றைச் சொல் நான் எழுதினாலும் காப்பி என்ற பெயர் எனக்கெதற்கு
பதிலளிநீக்குபுதிர் விடைகள் தெரிந்து கொள்ள ஆசை. ஓட்டு அளித்து விட்டேன். பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குச்சே! ரெணு நா மெதுவா வந்தா அதுக்குள்ள எல்லாரும் பதில் சொல்லிடறாங்க. அதனால இனிமே /
பதிலளிநீக்குஎப்பவுமே இப்படித்தான் வர உத்தேசம்!