அரசபி, ஜிஜிரர, த்னித்கா, குகாகுஷ், மாந்மாரா, - - - -
அள்ள அள்ள அதிகமாகும், எடுக்க எடுக்கப் பெரிதாகும்......எது?
குழப்ப மேனேஜர் இந்த மாதம் பதினைந்தாம் தேதி காரியதரிசிக் குமுதாவை நினைவூட்டச் சொன்ன நாள்..." நாளை மறுநாளுக்கு அடுத்த மாதம் நான்கு நாள் முன்பு முந்தின வாரம் நினைவூட்டவும்" என்ன தேதி?
கீழே உள்ள வெற்றிடங்களை வரிசையில் உள்ள எண்களை ஒருமுறை மட்டும் உபயோகித்து விடை கொண்டு வரவும்... 3,7,8,9,12
( _ + _ - _ ) X _ Divided by _ = 1
எனக்கு நாலெழுத்து.
இலையில் முதலாக இருக்கும் நான் இல்லையிலும் இருக்கிறேன்.
சொந்தத்தில் இரண்டாவதாக இருந்தாலும் பந்தத்தில் இருக்கிறேன் பாசத்தில் இல்லை.
திருடனில் முதல்வன் மூன்றாவதானாலும் பொருளில் ஒன்றுமில்லை.
யார் என்று தெரிந்ததா முதல் நான்காவதாக, நியாயமாக இரண்டாவதாக!
'அபூர்வ'ப் புதிர் : "என்னுடைய மனைவி யாருக்கு மகளோ, அவருடைய மருமகனின் அப்பா இவருக்குத் தாத்தா. எனக்கும் அவருக்கும் என்ன உறவு?
விடைகள் பின்னூட்டமாக...
இது சின்னப்பிள்ளைக்கே சின்னப்பிள்ளத்தனமா இருக்கு...
பதிலளிநீக்குர்த் ர்ஜ் ஆக இருக்கும். நட்சத்திரங்களின் பெயர் வரிசை.
பதிலளிநீக்குஅள்ள அள்ள அதிகமாவது ஊற்று நீர்.
அள்ள அள்ள பெரிதாவது பள்ளம்.
எண் புதிர் விடுவிக்க பொறுமை இல்லை.
கூட்டிக் கழித்தால் 21 நாள் கழித்து என்று ஆகும்.
நாலெழுத்து புதிர் இந்தியா
உறவு அப்பா பிள்ளை
ஒன்று: அடுத்தது : ஐயோ ஓடு - பைத்தியம்!
பதிலளிநீக்குஇரண்டு: அள்ள அள்ள அதிகமாகும், எடுக்க எடுக்க பெரிதாகும் -- ஊழல் கதைகள்.
மூன்று : குமுதா வேலையை ராஜினாமா பண்ணிட்டு - இந்தப் பைத்தியக்கார பாசிடமிருந்து ஓடிவிட்டார்!
நான்கு : நான்கெழுத்தில் என் நாடிருக்கும்!
ஐந்து : என்னுடைய மனைவி யாருக்கு மகளோ ... ஒருவேளை என்னுடைய தந்தையின், ஒன்றுவிட்ட சம்பந்தியின் - மாப்பிளையின் வாரிசோ? எனக்கு பல மைத்துனிகள் இருந்தால் ...
நீங்களே சொல்லுங்க....திரும்ப வரேன்.
பதிலளிநீக்குதூக்கம் தூக்கமா வருது.இவ்வளவும் யோசிக்க எவ்வளவு நேரம் வேணும் !கஸ்டமான கணக்கெல்லாம் தாறீங்க ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஸ்ரீராம் - உங்க பதில்களை சின்னப் புள்ளைங்க தினம் அன்னிக்கி சொல்லிடுங்க! நவம்பர் பதினான்கு - குழந்தைகள் தினம்!
பதிலளிநீக்குகுமுதா : சரி சார் நினைவூட்டுகிறேன் - ஆனா அதுக்கு ஒருநாள் முன்னாடி - எனக்கு நீங்க இதை மறுபடியும் நினைவூட்டிடுங்க!
பதிலளிநீக்கு