how to get more with less. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
how to get more with less. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.5.10

சுட்டிப் பயல்

சுரேஷுக்கு அப்பொழுது ஐந்து வயதிருக்கும்.  இன்னும் பள்ளி செல்ல ஆரம்பிக்கவில்லை. வீட்டில் பம்ப் ரிப்பேர்.  பிளம்பர் வந்து வேலை செய்து கொண்டிருந்தார். பழைய ரெசிப்ரோகேடிங் ரக பம்ப்.

பிளம்பர் செய்யும் வேலைகளை எல்லாம் ஓர் ஓரமாக நின்று நன்று கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ், ஓரிரண்டு முறை அவர் கழட்டிக் கழட்டி மாட்டுவதைப் பார்த்ததும், தனக்குத் தானே ஏதோ பேசிக் கொள்வது போல் தோன்றியது.  

சற்று அருகில் போய் என்னதான் சொல்கிறான் என்று கவனித்துக் கேட்டால், "மேலே இருக்கிற சதுர நட்டைக் கழட்டனும்.  பிறகு பக்கெட்டிலிருந்து ஒன்று இல்லேனா இரண்டு குவளை தண்ணீர் ஊத்தணும். பின் நூல் கயிறு எடுத்து நட்டு மேல் சுற்றி விட்டு, திரும்ப எல்லாத்தையும் மாட்டணும்.  பிறகு சுவிட்ச் போட்டால் நாம் ஊத்தினதை விட அதிகம் தண்ணீர் வருதுன்னா .... தண்ணிக்குப் பதிலா "தம்ஸ் அப்" ஊத்தினா எல்லோரும்  நிறைய தமஸ் அப் வரும். அப்போ எல்லாரும் நிறைய தமஸ் அப் குடிக்கலாம் இல்லையா?" பையனின் கற்பனை வளம் எப்படி ? 

உங்க ஊருல குடிநீர் வாரியம் எதற்காவது தலைவர் பதவி காலியாக இருந்தால் எங்களுக்குச் சொல்லுங்கள். சுரேஷை அனுப்புகின்றோம்.