சென்ற வாரப்பகுதியில் ராஜேந்திர சோழன் தன்னுடைய மூன்றாம் ஆட்சிக்காலத்துக்குள் வென்ற பகுதிகளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
ஈழத்தில் இதற்கு முன்பு, வடபகுதியை சோழர்கள் கைப்பற்றி, சோழப் படைத் தலைவன் பொறுப்பில் இருந்தது. தென் பகுதியில் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் ஆட்சி செய்துவந்தான். அவன், வடபகுதியைக் கைப்பற்றி முழு இலங்கையையும் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்றபோது, ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்று, அவர்களை வென்று, முழு இலங்கையையும் சோழர்கள் ஆதிக்கத்தில் கொண்டுவந்தான். ஐந்தாம் மகிந்தன் தஞ்சாவூருக்குச் சிறையெடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கழித்து மறைந்தான் என சோழர் வரலாறு சொல்கிறது (கிபி 1029ல்). ஈழ வரலாறான மஹாவம்சம், தோற்றோடிய ஐந்தாம் மகிந்தன் காட்டுக்குள் சென்றுவிட்டான் என்று சொல்கிறது. இந்தப் போர் 1017-1018ல் நடைபெற்றிருந்திருக்கவேண்டும். ஈழ அரசனுக்கு உரிய மணிமுடி, மனைவியர்க்கும் உள்ள மணிமுடி, அணிகலன்கள் போன்றவற்றையும், அதற்கு முன்னால் பாண்டிய மன்னன் கொடுத்து வைத்திருந்த ரத்னஹாரத்தையும் கைப்பற்றி சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்தான். (ஆமாம்.. இவையெல்லாம் எங்கே போயின?)
மஹிந்தனது மகன் இரகசியமாக ஈழத்தில் வளர்க்கப்பட்டான். தந்தை இறந்தது கேட்டு, 1029ல் அவன் முதலாம் விக்கிரமபாகு என்ற பெயரில் சுமார் 12 வருடங்கள் இலங்கையின் ருஹண பகுதியை (இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி) ஆண்டுவந்தான். இந்த ருஹண பகுதியைத்தான் ரோஹண என்று வரலாறு குறிப்பிடுகிறது.
இலங்கையின் சமீபத்தைய சரித்திரம் தெரிந்தவர்களுக்கு ரோஹண விஜயவீர என்ற பெயர் பரிச்சயமாக இருக்கும். இவர்தான் 1960களில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியை ஆரம்பித்து சிங்கள பேரினவாதத்திற்கான கட்சியாக அடையாளப்படுத்தியிருந்தார். ஜேவிபி, விடுதலைப் புலிகள் என்றெல்லாம் ஆராய ஆரம்பித்தால் நாம் எங்கோ பாதை மாறிப் போய்விடுவோம்.
இராஜேந்திரன், பாண்டிய நாட்டின் தொடர்ந்த சிறுசிறு கலகங்களால் (மணிமுடிக்குரியவர்கள் கலகம் விளைவித்தனர்), அதன் மீது மீண்டும் போர் தொடுத்து, தன் மகனான சுந்தரச் சோழனை அந்தப் பகுதிக்குத் தலைவனாக நியமித்தான். பிறகு சேர நாட்டின்மீதும் படையெடுத்துச் சென்று அவர்களை அடக்கினான். இராஜராஜ சோழன் காலத்திலேயே பாண்டிய நாடும் சேர நாடும் சோழர்களுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஆங்காங்கு ஏற்பட்ட கலகம் காரணமாக, முழு அமைதியைக் கொண்டுவர இந்தப் படையெடுப்பு நடந்திருக்கலாம். ராஜேந்திரனது மூன்றாம் ஆட்சியாண்டிலேயே மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டியிருந்தானாம் (இதெல்லாம் இப்போ எங்கப்பா?)
பிறகு 1021ல் (அதாவது அரசனாகி 9ம் ஆண்டில்) இரட்டபாடி மற்றும் சாளுக்கியத்தின் மீது போரிட்டு வென்றான்.
இராஜேந்திரனின் பதினொன்றாம் ஆட்சி காலத்தில் (1023), கங்கையை நோக்கி தன் படையை அனுப்பினான். அந்தப் படை, பல மன்னர்களை வென்று, கடைசியில் வங்க நாட்டு மஹிபாலனையும் தோற்கடித்து, பல்வேறு திறைகளையும், கங்கையிலிருந்து பொன் குடங்களில் நீரையும் சேகரித்து வந்ததாம். அதனை வைத்துத்தான் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இடத்தையே காட்டைச் சீர்படுத்தி உருவாக்கினான் என்று பார்த்தோம். கல்வெட்டுகள் கூறும் நாடுகளும், மன்னர்களும் வரலாற்றில் இடம் பெற்றவர்களே. அந்தப் படையெடுப்பின்போது கங்கைக்கரையிலிருந்த சிவபிராமணர்களை தஞ்சைப் பகுதிக்குக் கொண்டுவந்ததும், சேனையில் இருந்த தென்னாட்டவன் வங்காளப் பகுதியில் தங்கி, அவன் வழி வந்த சாமந்த சேனன் என்பான் வங்காளத்தில் சேன மரபின் முதல் அரசனானான் என்று வரலாறு தெரிவிக்கிறது. (இதைப்படித்துவிட்டு மம்தா பேகம் திராவிட பாரம்பர்யம்தான் என்று ஆரம்பித்துவிடப்போகிறார்கள்)
இவனது பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, இராஜேந்திரன் கடாரம் வென்றான் என்று சொல்கிறது. ஸ்ரீவிஜயம் (இது சுமத்ரா தீவுகள் அமைந்த இடம். கிழக்கு-மேற்கு வாணிப வழிக்கு நடுவில் இருந்தது), அதையடுத்து கடாரம் (இது மலேயா தீபகற்பத்தின் கெடா என்ற இடம் என்று சொல்கின்றனர். தற்போது அந்த இடம் கெடா என்றே அழைக்கப்படுகிறது), மாயிருடிங்கம், இலங்காசோகம், மலையூர் என பல மலேயாத் தீபகற்பத்தின் பகுதிகளை வென்றிருக்கிறான். நிக்கோபார் தீவுகளையும் வென்றிருக்கிறான். இவை எல்லாமே ஸ்ரீவிஜயத்திற்குச் சொந்தமான இடங்களாக இருந்திருக்கவேண்டும்.
இந்த மாதிரி போர்களையும், வென்ற இடங்களையும் படிக்கும்போது, எனக்கு அவற்றை எப்படி சோழப் பேரரசின் கீழ் கொண்டுவந்திருக்க முடியும் என்று தோன்றியது. எப்போதும் உள்ளூர் மக்களே பெரும்பான்மையாக இருக்கமுடியும். வெளியிலிருந்து சிறு படைகளைக் கொண்டு வென்றாலும், அந்த நாடுகளை முழுமையாகக் கைப்பற்றுவது என்பது நடக்கும் சாத்தியம் குறைவு. ராஜேந்திரனால் நியமிக்கப்பட்ட சேனைத் தலைவனோ இல்லை தக்க ஒருவனோ அந்த இடங்களை பல காலம் தங்களின் கீழ் வைத்திருந்திருக்க இயலாது. ஆனால் தாங்கள் ஆள ஆரம்பித்த சமயங்களில் தங்கள் கலைகளைப் பரவச் செய்திருக்க முடியும். அதுபோல புராணங்கள் இதிஹாசங்கள் போன்றவையும் பரவியிருக்கவேண்டும். அதற்கு ஏற்றபடி வென்ற இடங்களுக்கு அந்தணர்களையும் அழைத்துச் சென்றிருந்திருக்கவேண்டும் (அதனால்தான் இந்தோநேஷியாவில் கணபதி மற்றும் இந்து சமய வழிபாடுகளும், தாய்லாந்தின் மன்னர் பதவியேற்பின்போது திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதும் வழி வழியாகத் தொடர்ந்திருக்கின்றன)
இந்தச் செய்தியைப் பற்றி முன்னர் நான் படித்தபோது ரொம்பவே பெருமிதமாக இருந்தது. தாய்லாந்து நாட்டின் அரச முடிசூட்டு விழா மற்றும் முக்கியமான விழாக்களில் பாரம்பர்யமாக திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களைப் பாடுகிறார்கள் என்றால், அது சோழர் காலத்திலிருந்து இருக்கும் வழக்கம் என்பதில் சந்தேகம் ஏது? தற்காலத்தில் மொழித் திரிபுகளால், இதனை, ‘திரிம்பவாய்-திரிபவாய்’ என்ற சடங்காக நடத்துகிறார்கள். இந்த இந்து-தமிழ் கலாச்சார மரபு இன்றும் பாதுகாக்கப்படுகிறது. மன்னர் பதவியேற்பின்போது, நடராஜர் மற்றும் பெருமாள் சிலைகளுக்கு முன்பு ஹோமம் நடத்தப்பட்டு இந்தப் பாடல்களை தமிழ்-கிரந்த எழுத்துக்களில் ஓதப்படுகின்றனவாம்.
இதனை எழுதும்போது தாய்லாந்திலும் இந்தோநேஷியாவிலும் பார்த்த கோயில்கள், சிற்பங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அங்கு சந்தித்த சில பெண்கள் (ஒரு இடத்தில் எங்கள் குழுவிற்காக அவர்களுடைய நடனத்தை ஏற்பாடு செய்திருந்தனர், இயற்கையான கடற்கரைப் பகுதியில்….அதுபோல அவங்க, இராமாயணம் பற்றி அதன் கதை மாந்தர்கள் பற்றி ஆச்சர்யத்துடன் தங்களுக்குத் தெரியும் என்று சொல்லியதும், அந்த நாட்டிலிருந்து வருகிறேன் என்றது அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியதும் என் நினைவில் இருக்கிறது. படம் போடாட்டி நம்ப மாட்டீங்க போலிருக்கே.)
இராமாயணக் காட்சி – நான்கு
சாலைகளின் நடுவே
பாலித் தீவில் கோயில்களின் நுழைவாயில்கள் (நந்தி தெரிகின்றாரா?)
இந்திய இதிஹாச பாத்திரங்கள், எங்கெங்கும் பிள்ளையார் சிலை.
ஆடல் கலையே தேவன் தந்தது. தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
இதற்கு
மேல் எழுத ஆரம்பித்தால் கதை எங்கோ கிளை பிரியும். நமக்குத் தெரியவேண்டியது, சோழர் காலத்தில்தான்
தமிழக மற்றும் பாரதீயக் கலைகள் இந்தோநேஷியா மற்றும் தாய்லாந்திற்குச் சென்றது. அந்த கலாச்சாரம் இன்னமும்
தொடர்கிறது என்பதுதான். இனி கங்கைகொண்ட சோழீச்வரம் படங்களைப்
பார்ப்போம்.
எல்லோரும் தஞ்சை பெரியகோயில் வாயிற்காப்போன் சிலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலே உள்ளது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வாயிற்காப்போன் சிலை. பாம்பின் வாயில் யானை. கால்கள் இடையில் சிங்கம். ஆனால் வாயிற்காப்போன் எவ்வளவு பெரியவன், பிரம்மாண்டவன் என்று காட்ட இப்படிச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனாலும் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிற்பத்தின் அழகு கம்பீரம் நுணுக்கம் இதில் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
இன்றைக்குப் பகிர்ந்துள்ள படங்களை
ரசித்தீர்களா?
அடுத்த
வாரம் தொடர்வோமா?
அதற்கு முன்னால் பாண்டிய மன்ன ன் கொடுத்து வைத்திருந்த ரத்னஹாரத்தையும் கைப்பற்றி சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்தான். (ஆமாம்.. இவையெல்லாம் எங்கே போயின?)//
பதிலளிநீக்குஹாஹாஹா நெல்லை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களே!!!! பல யூகங்களுக்கு உள்ளாகும் ஒன்று.
இப்ப உள்ளபடி காலம்னா என்னென்ன நடந்திருக்கும்னு பாருங்க. இல்ல?
கீதா
வாங்க கீதா ரங்கன். பல தங்க விக்ரஹங்கள், கோபுரத்தில் வேயப்பட்டிருந்த தங்கத் தகடு போன்ற பலவும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியும்.
நீக்குஇந்தக் காலத்தில் சமீபத்தில் சபரிமலை தங்கத் தகடு திருட்டு நாம் அறிந்ததுதானே
இவர்தான் 1960களில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியை ஆரம்பித்து சிங்கள பேரினவாத த்திற்கான கட்சியாக அடையாளப்படுத்தியிருந்தார். ஜேவிபி, விடுதலைப் புலிகள் என்றெல்லாம் ஆராய ஆரம்பித்தால் நாம் எங்கோ பாதை மாறிப் போய்விடுவோம்.//
பதிலளிநீக்குஅப்பா மற்றும் தாத்தா என்னென்னவோ இது பத்தி பேசியிருக்காங்க ஆனா பேர் மட்டும்தான் ஏதோ காதுல விழுந்தாப்ல ....மத்தபடி ம்ஹூம்.
ராஜேந்திரனது மூன்றாம் ஆட்சியாண்டிலேயே மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டியிருந்தானாம் (இதெல்லாம் இப்போ எங்கப்பா?)//
ஓ! புதிய தகவல். அதானே எங்க போச்சு? எப்படி இப்படி மாறுகின்றன? எப்படிக் கை மாறும்?
கீதா
நூறு வருடங்களுக்கு உள்ளாகவே மதுரையில் சிதைந்த மதிள்கள் இருந்தன. நகரைச் சுற்றி பாதுகாப்பாகச் செயல்பட்டவை. அவற்றை இடித்துத் தள்ளிவிட்டோம்.
நீக்குபாரிசில் ரோமன் காலத்தைய மதிளை, தற்போது கடையாக அமைந்திருந்தாலும் கடைக்குள் பாதுகாத்து வருவதை படமாகப் பெஇர்கிறேன்.
வடக்கும் தெற்கும் கலந்திருக்கிறதே கங்கைகொண்டதனால்.
பதிலளிநீக்குகொஞ்சம் கொஞ்சம் வரலாறு பாடத்தில் படித்த நினைவு நிழலாக வருது. கடாரம் வென்றான் பகுதி.
எனக்கும் தோன்றியதுண்டு நெல்ல, கடல் கடந்து இப்படி வெல்வதை எப்படி ஆண்டிருப்பாங்கன்னு. இப்ப கூட நம்ம கீழ இருக்கும் சில தீவுகள் பத்தி எந்த செய்தியும் வருவதில்லையே என்று சில வருஷங்கள் முன்ன இணையத்தில் பார்த்தப்ப, 2024 ல அந்தமான்ல இப்போதைய இந்திய தேசிய கட்சி எம் பி இருக்காராம். திமுக வும் அங்கு உண்டாம் அதிமுகவும். எப்படி கையாள்வாங்கன்னு தோன்றியது.
லக்ஷதீப்ல தமிழ்நாடு கட்சிகள் இல்லை. அந்து தேசிய கட்சிகள் போல
கீதா
(அதனால்தான் இந்தோநேஷியாவில் கணபதி மற்றும் இந்து சமய வழிபாடுகளும், தாய்லாந்தின் மன்னர் பதவியேற்பின்போது திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதும் வழி வழியாகத் தொடர்ந்திருக்கின்றன)//
பதிலளிநீக்குஉண்டென்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் தாய்லாந்து போய் வந்த உறவினர் சொன்னது அங்கு கிட்டத்தட்ட நம்மூர் போலவே நிறைய இருக்கின்றன என்று. ஒரு தனி தீவில் (படகில் போக வேண்டும்) பெயர் மறந்து போச்சு, அங்கு கேரள மாநில கோயில் போன்றேவாம். படம் கூட அனுப்பிருந்தாள். சேவ் பண்ணி வைச்சேனா என்று மறந்து போச்சு.
கீதா
கோவில் அமைப்பு நம்மூர் கோல இல்லை. கேரள தறவாடுகளில் உள்ளேயே இருக்கும் கோயிலைப் போன்று அங்கு உண்டு. படங்கள் பகிர்கிறேன்.
நீக்குபடங்கள் சூப்பர், நெல்லை. இந்த மாதிரி பிள்ளையார் சிலையும் என் உறவினர் அனுப்பிருந்தர்.
பதிலளிநீக்குதாய்லாந்திலிருந்து இங்கு வந்து ஹிஹிஹிஹி அந்தப் படங்கள் குறிப்பா அந்த மரம், வண்டியில் கம்புகள் படத்துக்குப் பிறகு இருக்கும் சிற்பங்கள் செம.
நான் கவனித்தது, இப்ப உள்ள திரைப்பட நடிகைகள், லைம் லைட்டில் இருப்பவங்க புகைப்படங்களுக்கு இப்படித்தான் போஸ் கொடுக்கிறார்கள். ஒரு காலை குறுக்காக முன் வைத்து கைகளை இப்படி வைத்து ஒரு கையை குறுக்காக வைத்திருக்கும் காலின் தொடை மீது வைத்துக் கொண்டு!!!! எனக்கு இந்தச் சிற்பங்களைப் பார்த்தப்ப ரொம்ப ஆச்சரியம் வந்தது.
கீதா
அதுவும் அப்படிக் கராஸாக காலை வைக்காமல் இருந்தால் தலையை சாய்த்து ஒயிலாக அந்தக் கடைசி சிற்பம் இருக்கே அப்படி. ஹையோ ரொம்பவே ஆச்சரியபப்ட்டுப் போகிறேன். அந்தக் காலத்துல எப்படி இவ்வளவு அழகா வடிவமைச்சிருக்காங்கன்னு!
பதிலளிநீக்குஅப்ப இவங்க எல்லாம் இப்படியான சிற்பங்களைப் பார்த்துதான் இப்படி போஸ் கொடுக்கறாங்களோ இல்லை இதற்குன்னே இப்படி பயிற்சி கொடுப்பாங்க போல....மாடெல்களுக்கும். இப்பதான் எலலத்துக்கும் இருக்கிறதே பயிற்சின்னு ஒரு துறை.
கீதா
இதில் ஒரு சிற்பம் வித்தியாசமாக....!!!! அது இறை வடிவமா என்று தெரியவில்லை. ஆனால் என் அப்படி வடிவமைச்சாங்கன்னு யோசனை.
பதிலளிநீக்குமேலே உள்ளது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வாயிற்காப்போன் சிலை. பாம்பின் வாயில் யானை. கால்கள் இடையில் சிங்கம்.//
மேலே என்றதும் எங்கன்னு தேடினேன் அப்புறம் கீழ இருப்பது தெரிந்தது.
எலலப் படங்களும் வழக்கம் போல் விவரங்களும் நல்லாருக்கு நெல்லை
கீதா
சமீபத்தில் களவாடப்படும் நகைகளையும், சிலைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை! திருட்டு போய்விட்டது என்பதே கூட தெரியாது.. இதில் ராஜராஜசோழன் காலத்து ஹாரங்களை எங்கே தேட? என் எஸ் கிருஷ்ணன் குரலில் பாடவேண்டியதுதான்!
பதிலளிநீக்கு"எங்கே தேடுவேன்.. நான் எங்கே தேடுவேன்.."
// மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டியிருந்தானாம் (இதெல்லாம் இப்போ எங்கப்பா?) //
பதிலளிநீக்குஅது வேற மதுரையோ...?
மம்தா பேகம் என்று வேண்டுமென்றேதான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் போல.. பானர்ஜி என்று மாற்ற வேண்டாமே....?
பதிலளிநீக்கு