ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிஷம் ஆடிப்போக வச்ச இந்த "லூக் மூர்" கதையை, சொல்றேன் கேளுங்க.
நம்ம கதையோட ஹீரோ லூக் மூர், ஆஸ்திரேலியாவுல இருக்குற ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பையன். 2010-ல அவனுக்கு 22 வயசுதான். கையில ஒரு வேலையும் கிடையாது, கவர்மெண்ட் தர்ற வேலையில்லா பட்டதாரி உதவித்தொகையை வச்சுதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தான்.
இவனுக்கு சிட்னில இருக்குற செயின்ட் ஜார்ஜ் (St. George) பேங்க்ல ஒரு அக்கவுண்ட் இருந்துச்சு. அதுல ஒரு சின்ன தப்பு நடந்துச்சு பாருங்க, அங்கதான் கதையே ஆரம்பிக்குது
லூக் தன்னோட அக்கவுண்ட்ல இருந்து காசு எடுக்கும்போது கவனிச்சான், அவன் அக்கவுண்ட்ல பேலன்ஸே இல்லைனாலும் ஏடிஎம் மெஷின் காசை கக்கிகிட்டே இருந்துச்சு.
என்னடா இது வம்பா போச்சுன்னு ஒருநாள் ஒரு சின்ன டெஸ்ட் பண்ணான். ஒரு 5000 டாலர் லோன் கட்ட வேண்டி இருந்துச்சு, சரி வருதான்னு பார்த்தா... "டக்"குன்னு பேமெண்ட் ஆயிடுச்சு
பேங்க் அக்கவுண்ட் மைனஸ்ல போனாலும், பேங்க் அதை தடுத்து நிறுத்தவே இல்லை.
ராஜா......ராஜாதி ராஜா.. இந்த லூக் மூர் ராஜா
"கையில காசு.. வாயில தோசை"ன்ற கதையா, லூக் தன்னோட அன்லிமிடெட் ஆட்டத்தை ஆரம்பிச்சான். அந்த 22 வயசுப் பையனுக்கு அப்போ தலைகால் புரியல.
எடுத்த உடனே ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர்ற ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) கார் ஒன்னு, மஸராட்டி (Maserati) கார் ஒன்னு, அப்புறம் ஒரு ஹூண்டாய் கார்னு விதவிதமா வாங்கிக் குவிச்சான்.
ஊர் சுத்துறதுல இவனுக்கு ஒரு தனி ஆர்வம். தாய்லாந்துக்கு பிளைட் ஏறிப் போய், அங்க இருக்குற விலை உயர்ந்த ஹோட்டல்ல தங்கி, ஒவ்வொரு நைட்டும் கிளப், பார்ட்டின்னு பணத்தை தண்ணியா செலவு பண்ணான்.
மைக்கேல் ஜோர்டான் கையெழுத்துப் போட்ட டீ-ஷர்ட், உலகப் புகழ்பெற்ற பிக்காஸோவோட டிராயிங்ஸ், பாப் மார்லியோட அரிய பொருட்கள்னு எதையும் விட்டு வைக்கல. அவனோட வீடு ஒரு "அதிசய பொருட்காட்சி சாலை" மாதிரியே மாறிடுச்சு.
சந்தேகம் வரலையா?
ஊர்க்காரங்க எல்லாம் "டேய், ஏதுடா இவ்வளவு காசு?"ன்னு கேட்டப்போ, "மச்சான், எனக்கு லாட்டரில பல கோடி அடிச்சிருக்குடா"ன்னு சொல்லி எல்லாத்தையும் நம்ப வச்சுட்டான். இப்படியே ரெண்டு வருஷத்துல சுமார் 2.1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்புல கிட்டத்தட்ட 17 கோடி!) காலி பண்ணான்.
2012, டிசம்பர் 12-ஆம் தேதி. லூக் தன் வீட்டுல ஜாலியா இருக்கும்போது ஜன்னல்ல யாரோ தட்டுற சத்தம் கேட்டுச்சு. பார்த்தா.. போலீஸ் "கதவைத் திற, இல்லன்னா உடைப்போம்"னு கத்துனாங்க.அப்போதான் லூக்குக்கு புரிஞ்சது, "சிங்கம் சிக்கிக்கிச்சு"ன்னு.
பேங்க் காரங்க ரெண்டு வருஷம் கழிச்சு கணக்கை செக் பண்ணப்போதான், ஒருத்தன் நம்மள வச்சு செஞ்சுருக்கான்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
கிளைமாக்ஸ்
முதல்ல கோர்ட் இவனுக்கு 4 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்துச்சு. அஞ்சு மாசம் உள்ளேயும் இருந்தான். ஆனா, நம்ம ஆளு அங்கயும் ஒரு புத்திசாலித்தனம் பண்ணான். மேல்முறையீடு செஞ்சப்போ, அவனோட வக்கீல் ஒரு பாயிண்ட்டை சொன்னாரு: "அவன் ஒன்னும் பேங்க்ல கொள்ளையடிக்கல, இல்ல யாருடைய அக்கவுண்ட்டையும் ஹேக் பண்ணல. பேங்க் தான் தப்பா பணத்தை எடுக்க வழி கொடுத்துச்சு, இவன் அதைப் பயன்படுத்திக்கிட்டான்.
இதுல என்ன தப்பு?"ன்னு வாதிட்டாங்க.
சட்டத்துல இருந்த அந்த ஒரு சின்ன ஓட்டையால, கோர்ட் அவனை விடுவிச்சிருச்சு
ஆனா, அரசாங்கம் அவன் வாங்குன எல்லா கார், பெயிண்டிங்ஸ் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிடுச்சு.
இப்போ என்ன பண்றாரு?
தன்னோட கேஸ்ல ஜெயிச்சதுக்கு அப்புறம், இப்போ லூக் மூர் ஒரு கிரிமினல் லாயர் (Criminal Lawyer) ஆகுறதுக்காக படிச்சுக்கிட்டு இருக்காரு.
"அந்த ரெண்டு வருஷம் ராஜா மாதிரி வாழ்ந்ததை என்னால மறக்க முடியாது, ஆனா இப்போ நிம்மதியா தூங்குறேன்"னு சொல்றாரு.
நீதி:
அடுத்தவன் காசுக்கு ஆசைப்பட்டா ஆப்பு கன்பார்ம்
ஆனா லூக் மூர் மாதிரி அதிர்ஷ்டமும், அறிவும் இருந்தா தப்பிச்சும் வரலாம். ஆனா எல்லாரும் லூக் மூர் ஆக முடியாதுல்ல
பாலாஜி ஸ்ரீனிவாசன்
ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிஷம் ஆடிப்போக வச்ச இந்த "லூக் மூர்" கதையை, சொல்றேன் கேளுங்க.
நம்ம கதையோட ஹீரோ லூக் மூர், ஆஸ்திரேலியாவுல இருக்குற ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பையன். 2010-ல அவனுக்கு 22 வயசுதான். கையில ஒரு வேலையும் கிடையாது, கவர்மெண்ட் தர்ற வேலையில்லா பட்டதாரி உதவித்தொகையை வச்சுதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தான்.
இவனுக்கு சிட்னில இருக்குற செயின்ட் ஜார்ஜ் (St. George) பேங்க்ல ஒரு அக்கவுண்ட் இருந்துச்சு. அதுல ஒரு சின்ன தப்பு நடந்துச்சு பாருங்க, அங்கதான் கதையே ஆரம்பிக்குது
லூக் தன்னோட அக்கவுண்ட்ல இருந்து காசு எடுக்கும்போது கவனிச்சான், அவன் அக்கவுண்ட்ல பேலன்ஸே இல்லைனாலும் ஏடிஎம் மெஷின் காசை கக்கிகிட்டே இருந்துச்சு.
என்னடா இது வம்பா போச்சுன்னு ஒருநாள் ஒரு சின்ன டெஸ்ட் பண்ணான். ஒரு 5000 டாலர் லோன் கட்ட வேண்டி இருந்துச்சு, சரி வருதான்னு பார்த்தா... "டக்"குன்னு பேமெண்ட் ஆயிடுச்சு
பேங்க் அக்கவுண்ட் மைனஸ்ல போனாலும், பேங்க் அதை தடுத்து நிறுத்தவே இல்லை.
ராஜா......ராஜாதி ராஜா.. இந்த லூக் மூர் ராஜா
"கையில காசு.. வாயில தோசை"ன்ற கதையா, லூக் தன்னோட அன்லிமிடெட் ஆட்டத்தை ஆரம்பிச்சான். அந்த 22 வயசுப் பையனுக்கு அப்போ தலைகால் புரியல.
எடுத்த உடனே ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர்ற ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) கார் ஒன்னு, மஸராட்டி (Maserati) கார் ஒன்னு, அப்புறம் ஒரு ஹூண்டாய் கார்னு விதவிதமா வாங்கிக் குவிச்சான்.
ஊர் சுத்துறதுல இவனுக்கு ஒரு தனி ஆர்வம். தாய்லாந்துக்கு பிளைட் ஏறிப் போய், அங்க இருக்குற விலை உயர்ந்த ஹோட்டல்ல தங்கி, ஒவ்வொரு நைட்டும் கிளப், பார்ட்டின்னு பணத்தை தண்ணியா செலவு பண்ணான்.
மைக்கேல் ஜோர்டான் கையெழுத்துப் போட்ட டீ-ஷர்ட், உலகப் புகழ்பெற்ற பிக்காஸோவோட டிராயிங்ஸ், பாப் மார்லியோட அரிய பொருட்கள்னு எதையும் விட்டு வைக்கல. அவனோட வீடு ஒரு "அதிசய பொருட்காட்சி சாலை" மாதிரியே மாறிடுச்சு.
சந்தேகம் வரலையா?
ஊர்க்காரங்க எல்லாம் "டேய், ஏதுடா இவ்வளவு காசு?"ன்னு கேட்டப்போ, "மச்சான், எனக்கு லாட்டரில பல கோடி அடிச்சிருக்குடா"ன்னு சொல்லி எல்லாத்தையும் நம்ப வச்சுட்டான். இப்படியே ரெண்டு வருஷத்துல சுமார் 2.1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்புல கிட்டத்தட்ட 17 கோடி!) காலி பண்ணான்.
2012, டிசம்பர் 12-ஆம் தேதி. லூக் தன் வீட்டுல ஜாலியா இருக்கும்போது ஜன்னல்ல யாரோ தட்டுற சத்தம் கேட்டுச்சு. பார்த்தா.. போலீஸ் "கதவைத் திற, இல்லன்னா உடைப்போம்"னு கத்துனாங்க.
அப்போதான் லூக்குக்கு புரிஞ்சது, "சிங்கம் சிக்கிக்கிச்சு"ன்னு.
பேங்க் காரங்க ரெண்டு வருஷம் கழிச்சு கணக்கை செக் பண்ணப்போதான், ஒருத்தன் நம்மள வச்சு செஞ்சுருக்கான்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
கிளைமாக்ஸ்
முதல்ல கோர்ட் இவனுக்கு 4 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்துச்சு. அஞ்சு மாசம் உள்ளேயும் இருந்தான். ஆனா, நம்ம ஆளு அங்கயும் ஒரு புத்திசாலித்தனம் பண்ணான். மேல்முறையீடு செஞ்சப்போ, அவனோட வக்கீல் ஒரு பாயிண்ட்டை சொன்னாரு: "அவன் ஒன்னும் பேங்க்ல கொள்ளையடிக்கல, இல்ல யாருடைய அக்கவுண்ட்டையும் ஹேக் பண்ணல. பேங்க் தான் தப்பா பணத்தை எடுக்க வழி கொடுத்துச்சு, இவன் அதைப் பயன்படுத்திக்கிட்டான்.
இதுல என்ன தப்பு?"ன்னு வாதிட்டாங்க.
சட்டத்துல இருந்த அந்த ஒரு சின்ன ஓட்டையால, கோர்ட் அவனை விடுவிச்சிருச்சு
ஆனா, அரசாங்கம் அவன் வாங்குன எல்லா கார், பெயிண்டிங்ஸ் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிடுச்சு.
இப்போ என்ன பண்றாரு?
தன்னோட கேஸ்ல ஜெயிச்சதுக்கு அப்புறம், இப்போ லூக் மூர் ஒரு கிரிமினல் லாயர் (Criminal Lawyer) ஆகுறதுக்காக படிச்சுக்கிட்டு இருக்காரு.
"அந்த ரெண்டு வருஷம் ராஜா மாதிரி வாழ்ந்ததை என்னால மறக்க முடியாது, ஆனா இப்போ நிம்மதியா தூங்குறேன்"னு சொல்றாரு.
நீதி:
அடுத்தவன் காசுக்கு ஆசைப்பட்டா ஆப்பு கன்பார்ம்
ஆனா லூக் மூர் மாதிரி அதிர்ஷ்டமும், அறிவும் இருந்தா தப்பிச்சும் வரலாம். ஆனா எல்லாரும் லூக் மூர் ஆக முடியாதுல்ல
பாலாஜி ஸ்ரீனிவாசன்

லுக் மூர் கதை அதிர்ஷ்டம்தான். அதுக்காக இரண்டு தடவை வெளியிடணுமா?
பதிலளிநீக்குகடைசி வரை 'ஸாலா..'க்கு என்ன அர்த்தம்ன்னு தெரியப்படுத்தவே இல்லை, பாருங்கள்.. ஹிந்தித் திணிப்பு எரிச்சலில் புரியாதும் போயிருக்கலாம். அந்த AI படம் தத் ரூப்
பதிலளிநீக்குதத்ரூபம். கற்பனையில் சிறுகதை அட்டகாசமாக் உருவாகி கொண்டிருந்த நேர்த்தியிலேயே கெடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
நீக்குநட்பு என்பது தனி... அந்த உணர்வு மனதில் எப்போதும் இருக்கும்.
பதிலளிநீக்குகுடும்பச் சூழ்நிலையால் காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் இருந்தாலும், வெளிப்படவேண்டிய சமயத்தில் பீறிட்டெழும்.
கதை நன்றாக இருந்தது
ஸ்ரீராம் முதலில் ரொம்ப ஸாரி சொல்லிக் கொள்கிறேன். நீங்க நேத்து மாலையில் இப்படத்திற்குக் கதை கேட்டதால், மனதில் தோன்றினாலும் உடனே எழுதிக் கொடுக்க முடியவில்லை. கால அவகாசம் எனக்குக் கொஞ்சம் வேண்டும். அதுவும் தற்போது மனம் மிகவும் மெதுவாக வேலை செய்கிறது எனவே....வீட்டு வேலை, வீடியோ மேக்கிங், வலைப்பக்கம் கருத்துகள், என்/எங்கள் பதிவுகள்எல்லாவற்றையும் சமாளிக்க முடியவில்லை. மனம் மெதுவாகிவிட்டதால். அதைச் சரி செய்து கொண்டு வலைப்பக்கம் வரலாம் என்ற எண்ணம்.
பதிலளிநீக்குஎன்னால் கொடுக்க முடியவில்லையே என்னாச்சு என்று பார்க்க வந்தால் உங்கள் படைப்பு. டக்குனு உங்களுக்கு எழுத வந்ததற்குப் பாராட்டுகள் ஸ்ரீராம். கதை நன்றாக இருக்கிறது. குறுகிய கால அவகாசத்தில் எழுதுவது என்பது மிகப் பெரிய கலை. எனக்குக் கைவராத கலை. அதுவும் தற்போது.
Positive end தற்போதைய நிலவரத்தை வைத்து. நானும் கிட்டத்தட்ட இது போலதான் யோசித்தது.
ஒர் ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது.
இடையில் நீங்க ஒரு படம் பத்தி எழுதிய நினைவு, இமயமலைக்குப் போவாங்களே வயதான பிறகு நட்புகள் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு...ஒரு நட்புக் குழு அமிதாப்பச்சன் ஹீரோ...அது கொஞ்சம் நினைவுக்கு வந்தது
ரொம்ப அலசிக் காயப் போடலை ஓகேவா ஸ்ரீராம்.
கோரா பார்ட் இரு முறை வந்திருக்கு. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை.
மீண்டும் ஒரு ஸாரி சொல்லிக் கொள்கிறேன் ஸ்ரீராம். எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. நேரமேலாண்மையைச் சரி செய்ய...இல்லைனா ரொம்ப அழுத்தம் உருவாகிறது.
கீதா
லக் அடிக்கறது கூட ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி இரண்டு தடவை அடிக்குமா, என்ன?... :))
பதிலளிநீக்குநட்புகளுக்கும் ...ப்ளீஸ் உங்க பதிவுகளுக்கு வரலைன்னு என்னைத் தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். நம்புகிறேன்.
பதிலளிநீக்குஉறவுகள் வருகை. அவங்க என்னை ப்ளாக் அது இதுன்னு இருக்கக் கூடாது நாங்க வரப்ப என்று என்னிடம் சொல்லி. ஏற்கனவே நான் எழுதலை, வலைப்பக்கம் வரலை ....
மனம் கொஞ்சம் மெதுவாகச் செயல்பட்டால் ஓரிரு வேலைகளில்தான் கவனம் செலுத்த முடிகிறது. எல்லாம் மெனேஜ் செய்வது கடினமாகிவிடும். குறைகள் மேலோங்கும். நேர்மறைகள் கண்ணில் படாது, எல்லாமே எதிர்மறையாகத் தோன்றும். குறைகளே வரும் போது எண்ணங்கள் தாறுமாறாகும். மனம் புலம்பத் தொடங்கும்.. அது வெளிப்படத் தொடங்கும் எண்ணங்களில் நம் செயல்களில். எனவே சின்ன சோர்வு வந்தாலும் உடனே அதைச் சரி செய்ய வேண்டும். எப்படி நம் உடல் நலனைக் கவனிக்க வேண்டுமோ அப்படி மன நலனும். அது நன்றாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும். அந்த ப்ராஸஸில்தான் நான் இருக்கிறேன். எனவே கொஞ்சம் எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. கொஞ்சம் பொருத்துக்கோங்க ப்ளீஸ் ஓகேவா...
கீதா