வெள்ளி, 31 மே, 2019

வெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வாழ்க்கை தவறி நின்னா கேளு

முப்பத்தி ஒரு வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம்.  அப்போதைக்கு ப்ளாக்பஸ்டர் மூவி!

1988 இல் வந்தது.  என் தங்கை கல்யாணி.  எழுதித் தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, இசையமைத்து ஒளிப்பதிவு செய்து நடித்து இருப்பவர் டி.  ராஜேந்தர்.  பாடவும் செய்வார்.  இதில் பாடவில்லை!இந்தப் படத்தில் அறியப்படாதவராக ஒரு காட்சியில் வடிவேலு வந்து போவாராம்!டி ஆர், எழுத்தில் இசையில் ஒருதலை ராகம் பாடல்கள் எல்லாமே (கூடையிலே கருவாடு தவிர!) எனக்குப் பிடிக்கும்.  அதற்குப் பின் சில பாடல்கள் இவர் இசையில் பிடிக்கும்.  அதில் ஒன்று இந்தப் பாடல்.முக்கியமாக எஸ்பிபியின் குரலுக்காகவே பிடிக்கும் என்றும் சொல்லலாம்.  அப்புறம் அந்த டியூன்.  ஒரு இனிமையான ஹம்மிங் உடன் பாடலைத் தொடங்குகிறார் எஸ் பி பாலசுப்ரமணியம்.  டி ஆர் பாடல்களில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் சந்தங்களில் வழிய வழிய வரிகளைத் திணிப்பதுதான்!  ஆனால் ஒருதலை ராகம் படத்தில் வரும் குழந்தை பாடும் தாலாட்டெல்லாம் மிக அருமையான பாடல் ப்ளஸ் வரிகள்.இந்தப் படத்தில் குழந்தையாக வருவது சிம்பு!  ஆனால் முடிந்த வரை காட்சி இல்லாமல் பாடலைப் பகிர முயற்சிக்கிறேன்.  ஆ...   காட்சியில்லாமல் பாடல் கிடைத்துவிட்டது.முன்பெல்லாம் நான் எஸ் பி பி பாடும் வரிகள் வரை கேட்டு விட்டு பாடலை அணைத்துவிடுவேன்!  அவர் பாடும் சரணங்களில் இருக்கும் ஓரளவு நயம் சித்ரா பாடும் வரிகளில் இல்லை என்பது என் எண்ணம்.  ஆனாலும் அதை ஈடுகட்டி விடுகிறது சித்ராவின் குரல்.

அருமையான ஒரு தாலாட்டு.

தோள்மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு 
தாய்போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு 
நிலவக்கேட்டா புடிச்சித் தருவேன் மாமன் 
உலகக்கேட்டா வாங்கித்தருவேன் மாமன் 

மண்ணுக்குதிரை அவனை நம்பி வாழ்க்கை என்னும் 
ஆற்றில் இறங்க அம்மா நெனச்சாடா  - உன் 
மாமன் தடுத்தேண்டா 
வார்த்தை மீறிப் போனாப்பாரு வாழ்க்கை தவறி நின்னா கேளு 
மனசு பொறுக்கலடா என் மானம் தடுக்குதடா 
தங்கரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ 
முத்துச்சரமே தூங்காயோ முல்லைவனமே தூங்காயோ 

நெருப்பத் தொட்டா சுடும் என்று 
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும் 
மீறித் தொட்டேன் நான் கதறி அழுதேன் நான் 

ஓடிவந்து அண்ணன் பார்க்கும் தவற மறந்து மருந்து போடும் 
இப்ப நெருப்பத் தொட்டேன் அதைப் பார்க்க யாரும் இல்லை 

தோள்மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு 
தாய்நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு 


நிலவக்கேட்டா வாங்கித் தருவேன் மாமன் 
உலகக்கேட்டா வாங்கித்தருவேன் மாமன் 

தங்கரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ 
முத்துச்சரமே தூங்காயோ முல்லைவனமே தூங்காயோ 


138 கருத்துகள்:

 1. இனிய கால வணக்கம் எல்லோருக்கும்

  லிட்டில்ஸ்டார் படம்??!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவேற்ற துரைக்கும், வரவேற்கும் நண்பர்களுக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். துரையை நேற்றுப் பார்க்க முடியலை! அல்லது நேற்றைய கூட்டத்தில் காணாமல் போயிட்டாரானும் தெரியலை!

   நீக்கு
 4. டி ராஜேந்தர் படம்னா கண்டிப்பா எல்லாமே அவராதான் இருக்கும்...இசை, பாடல், நடிச்சுனு...பாட்டும் பாடிடுவார். இதுல இல்லைனு நீங்க சொல்லிட்டீங்க...!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஒருதலை ராகம் படத்தின் பாடல் வரிகள் கவியரசைத் திரும்பிப் பார்க்க வைத்தவை...

  வைகையில்லா மதுரை இது..
  மீனாட்சியைத் தேடுது!...

  அதற்கப்புறம் பல பாடல்கள்...
  செயற்கைக் கை கொண்டு சிலை வடித்ததைப் போல...

  ஆனாலும் மக்கள் ரசித்தார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒருதலை ராகம் படத்தின் பாடல் வரிகள் கவியரசைத் திரும்பிப் பார்க்க வைத்தவை...//

   அடேங்கப்பா... அப்படியா?

   ஆனால் அந்தப் படத்தில் வரும் பாடல்களின் வரிகள் நிஜமாகவே ரசிக்கும்படியிருக்கும்.

   நீக்கு
 6. சிம்பு..
  அப்படிந்னா என்னங்க அர்த்தம்?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா....ஹா... ஹா... அழகான சிலம்பரசன்ங்கிற பெயரை செல்...லமா சுருக்.......கிக் கூடப்பிடறாங்களாம்!

   நீக்கு
  2. அப்படீல்லாம் இல்லை துரை செல்வராஜு சார்.... அவர் பெண்களுக்கு 'வம்பு' என்பதால் இயற்கையே அவர் பெயரை 'சிம்பு' என்று மாற்றிவிட்டது..ஹாஹா.

   நீக்கு
 7. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  ஸ்ரீராம் மிக அருமையான பாடல். அழகான வார்த்தைகள்.

  SPB குரல் என்ன ஒரு இனிமை.
  தங்க ரதமே தூங்காயோ.
  தாழம் மடலே தூங்காயோ.
  தூக்கமே வருகிறது/

  நன்றி மா. இனிய பாடல்.மனதை மீட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை (மாலை) வணக்கம் வல்லிம்மா..

   ஆமாம்.. SPB குரலால்தான் பாடல் இன்னுமினிமை!

   நீக்கு
 8. மூங்கிலை இரண்டு, நாலு ஆறு எட்டாகப் பிளந்து சீவி எடுக்கப்படும் பட்டைக்கு சிம்பு என்று நம்ம ஊர் பக்கம் சொல்வழக்கு...

  சேட்டைகள் அடங்காமல் மரங்களில் ஏறி விழுந்து கைகால்களை முறித்துக் கொண்டால் பெரியவர்கள் சொல்வார்கள்..

  பாபநாசத்துக்கு கூட்டிப் போய் சிம்பு வெச்சுக் கட்டணும்!.... - என்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... ஆமாம்...!

   சிம்பு ஆராய்ச்சி இருக்கட்டும்... இந்தப் பாட்டு எப்படி!!!!!!!

   நீக்கு
  2. என்னாங்க இந்த எளநியில
   தண்ணியே இல்லை...ன்ன மாதிரி

   அந்த இணைப்பில் பாட்டு வரலையே!...

   நீக்கு
  3. பாட்டு எனக்கு வேலை செய்கிறதே...

   வெகு யாராவது பாடல்லகேட்டார்களா, கேட்காமலேயே கமெண்ட்ஸா தெரியவில்லை.

   யாராவது சொன்னால் தெரியும்.

   நீக்கு
  4. நான் பாட்டு கேட்டேன் ஸ்ரீராம்.

   நீக்கு
  5. நன்றி கோமதி அக்கா...

   அப்போ பாடல் லிங்க் வேலை செய்கிறது.ஓகே ஓகே...

   துரை செல்வராஜூ சாருக்குதான் ஏதோ பிரச்னை.

   நீக்கு
  6. சரிதான்....

   யூ ட்யூப் புதுப்பிக்கச் சொல்கிறது..
   கேலக்ஸியோ இடம் இல்லை .. என்கிறது...

   நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
  7. ஓகே ஓகே

   நன்றி துரை ஸார்.

   நீக்கு
 9. ஒருதலை ராகம் அப்போ செம ஹிட்ல...

  எங்க ஹோலிக்ராஸ் காலேஜ்ல ஏதோ ஒரு சமயத்துல போட்டாங்க அதிசயமா. ஆனா பாத்தீங்கனா எங்க காலேஜ்ல நான் படிச்சப்ப போட்ட மூணு படத்துல ரெண்டு டி ஆரோடது....இதுவும் அப்புறம் ரயில் பயணங்களில்...

  அப்புறம் நான் காலேஜ் முடிக்கற சமயம் வைதேகி காத்திருந்தாள். இதுல என்னன்னா எனக்கு சோகப் படமே அவ்வளவா பார்க்க முடியாது.. ஸோ மூணுமே கொஞ்சம் பார்த்துட்டு எழுந்து வெளிய வந்துட்டேன்...ஆனா பாட்டு மட்டும் நல்லா கேட்கும்...வெளியில் உட்கார்ந்திருந்தாலும்...

  எங்க காலேஜுக்கும் டீ ஆருக்கும் என்ன டீலோ ஹா ஹா ஹாஹ்......ஒரு வேளை அவர் படங்கள் ல அப்போ பெண்களை ரொம்ப ஆபசமா காட்டமாட்டார்ன்றதுனால இருக்குமோ!!!!? தெரியலை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு தலை ராகம் பாடல்களின் வெற்றிக்கும் படத்தின் வெற்றிக்கும் அப்போது இன்னொருவரும் சொந்தம் கொண்டாடினார். அவர் இசையமைத்து ஒரு படமும் வெளிவந்தது. படம் பெயர் நினைவில்லை. "அவளொரு மோகன ராகம்... எனைவிட்டுத் தனியே பிரிந்திட்ட போதும்.." என்கிற வரிகளில் தொண்டைக்கும் பாடல். SPB!

   நீக்கு
 10. ஸ்ரீராம் வெயர் ஆர் யு??!!!!!!!!!! கொஞ்சம் எபி மேடைக்கு வந்து முகம் காட்டி அட்டெண்டென்ஸ் வைச்சுட்டுப் போங்க....இல்லைனா பெஞ்ச் இல்ல டேபிள் மேல ஏத்தி நிக்க வைச்சுருவோம்..

  நலம் தானே?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்துட்டேன்... வந்துட்டேன்...

   வந்துட்டேன் கீதா...

   ஒரு சதாபிஷேக விசேஷத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!

   நீக்கு
 11. ஒரு தலை ராகம் அன்று இந்தியாவின் மாபெரும் தங்கத்தில் (மதுரை) வருடங்கள் கடந்து ஓடிய படம்.

  டி.ஆர் எப்பொழுதுமே பாடகர்களிடம் சரியாக வேலை வாங்கி விடுவார். இது எனக்கு அவரிடம் பிடித்த விசயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் எங்கள் தஞ்சாவூர்க்காரர் ஜி!!!

   நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  2. மாயவரம்தான்... தஞ்சாவூர்ப்பக்கம்தானே!!! காவிரி பாயும் ஊர்!!!

   நீக்கு
  3. ஹா.. ஹா.. மாயவரத்துக்காரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. தேவகோட்டை ஜி, உங்கள் எதிர்ப்பார்ப்பு போல் வந்து விட்டேன், ஸ்ரீராமிடம் கேள்வியும் கேட்டு விட்டேன் .

   நீக்கு
  6. எல்லா ஊருக்கும் சிறப்பிருப்பது போல எங்க ஸ்கொட்லாந்து லண்டன்லருந்தும் ஒரு பாடலாசிரியர் சிங்கர் உருவாவார் விரைவில் :)

   நீக்கு
  7. ஆஹா நல்ல செய்தி.
   அது யார் தெரிந்து கொள்ள ஆவல் ஏஞ்சல்.

   நீக்கு
  8. //ஒரு பாடலாசிரியர் சிங்கர் உருவாவார் விரைவில் :)//
   அஞ்சு மீக்கு ஒரே ஷை ஷையா வருதூஊஊஊஊ:))

   நீக்கு
  9. ஹா... ஹா...ஹா...

   வாய்ப்பு எங்களுக்கா? உங்களுக்கா?

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  நல்ல பாடல். டைட்டிலே அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் படம் எனக்கூறுகிறது. இந்தப்படம் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் படத்தை தொலைக் காட்சியில் பார்த்தேனா என்பது கூட நினைவில்லை. பார்த்த மாதிரியும் இருக்கிறது. இவரின் சில படங்கள் அப்படியொரு குழப்பம்..சிம்பு இதில்தான் அறிமுகமோ? குழந்தை நட்சத்திரமாக வரும் போதே கொஞ்சம் அதிகப்படியாக உணர்ச்சி பூர்வமான நடிப்பு அவருடையது. எஸ்.பி.பியின் அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   உடல்நிலை தேவலாமா?

   உங்கள் குழப்பம் எனக்கும் உண்டு. இவரின் படங்களில் எது எந்தப் படம் என்கிற குழப்பம்! எலலவற்றிலும் ஒரே மாதிரி தாடி. மீசை. மண்டை நிறைய முடியுடன் வருவாரா... இன்னும் குழப்பம்! ஹா.. ஹா.. ஹா...

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   தாங்கள் விஷேசத்திற்கு செல்லும் அவசரத்திலும பதிலளித்தமைக்கும், நலம் விசாரித்தமைக்கும் மிக்க நன்றி.
   இன்று உடல்நலம் பரவாயில்லை.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. பாடல் கேட்டு இருக்கிறேன். இனிமையான சோகபாடல்.
  படம் பார்த்தது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் படம் பார்த்ததில்லை கோமதி அக்கா. நான்பார்த்த அவரின் ஒரே படம் ஒருதலை ராகம் மட்டுமே! அதுவே பாடல்கள் கவர்ந்த அளவு படம் கவரவில்லை!

   நீக்கு
 15. ஒருதலை ராகத்தில் ஏதாவது ஒரு பாடல் என்றால் - களை கட்டியிருக்கும்..

  தோள் மீது தாலாட்ட... - என்று,
  தாலாட்டும் வரிகளைத் தவிர்த்து
  மற்றவை கொட்டைப் பாக்கு இடிப்பதைப் போல.....

  நான் குழம்பு வைக்கச் சொன்னேன்...
  அவ குழப்பி வெச்சிட்டுப் போய்ட்டா!...

  நான் பன்னீர் தெளிக்கச் சொன்னேன்..
  அவ வெந்நீர் ஊத்திட்டுப் போய்ட்டா!..

  - இது எப்படிங்க இருக்கு!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அது அவர் ஸ்பெஷல். ஆனால்பாடல் எஸ் பி பி குரலில் இனிமையாக இருக்கும்!

   நீக்கு
  2. SPB குரலில் இனிமை....

   அதுதான் ... அதே தான்!...

   நீக்கு
 16. அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. 88 ஆம் ஆண்டில் தான் மறுபடி ராஜஸ்தான் போனோம். இந்தப் படத்தை விட இதில் வரும் ஒரு பாட்டு, "நான் ஒரு ராசியில்லா ராஜா!" என்னும் பாடல் தான் அடிக்கடி கேட்டிருக்கேன் என்பதோடு அந்தக் காட்சியில் இந்தப் பாடலுக்காக நடித்தவரும் இந்தப் பாடலைப் படித்தவரும் அதன் பின்னர் வாய்ப்புக்களை இழந்து விட்டதாகச் சொல்லுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படத்தில் அல்ல, அது ஒரு தலை ராகத்தில்.

   நீக்கு
 18. டி.ராஜேந்தரைத் தொலைக்காட்சியில் பார்க்கக் கூட எனக்கு அவ்வளவாக விருப்பம் இருந்தது இல்லை. அவர் பாடி, நடித்து, இயக்கிய எந்தப் படமும் இன்று வரை பார்த்தது இல்லை. அவர் மகன் நடித்த படங்களும் பார்த்தது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுத்து வைத்தவர் நீங்கள்!....

   நீக்கு
  2. ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் அப்புறம்
   மைதிலி என்னைக் காதலி...

   மை எ கா கூட
   அந்த அமலாவுக்காக!..

   அதுக்கு அப்புறம் அவ்வளவு தான்..

   அந்த சிம்புவோட படம் ஏதோ ஒன்னு...

   பார்த்துட்டு நாக்கைக் பிடுங்கிக் கொள்ளும்படி ஆயிற்று...

   அப்பா நடிகைகளைத் தொடாமல் நடித்தவர் என்பார்கள்...

   அவருடைய மகனோ...

   நீக்கு
  3. ஒரு ஹோப்லெஸ் பாடியை வச்சுக்கிட்டு ஆனாலும் அவர் உள்ளத்தில் சின்னப் பையனாக ஃபீல் பண்ணி அவர் வெட்கமில்லாமல் தாளம் போட்டுப் பாடுவது, ஆடுவது எல்லாமே அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்.

   நீக்கு
  4. அப்பா தொட்டு நடித்ததில்லை. மகன் தொடாமல் விட்டதில்லை!!!

   நீக்கு
  5. துரை ஸார். அந்தப்படத்தில் அமலா....

   அதைவிட மற்ற படங்களில்...

   நீக்கு
  6. கீதா அக்கா... ராஜேந்தர் படம் நானும் பார்த்ததில்லை.

   நீக்கு
  7. //அப்பா தொட்டு நடித்ததில்லை. மகன் தொடாமல் விட்டதில்லை!!!// - ராதிகா, பாரதிராஜாவிடம், 'உங்க மகனை வைத்து படம் எடுத்து பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. பேசாம அவனுக்கு கல்யாணம் பண்ணிவைங்க' என்றார். காரணம் உங்களுக்குப் புரியும். பாரதிராஜா பையனும் இந்தமாதிரிதான்.

   நீக்கு
  8. மனோஜ் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் புதிது பானு அக்கா!

   நீக்கு
  9. மன்னிக்கவும் தகவல் சொல்லியிருப்பது நெல்லை!

   நீக்கு
  10. புத்தகத்தில் படித்தது ஸ்ரீராம்.... தாஜ்மஹால் படத்தைப் பற்றியும் ஒன்று படித்தேன். ஆனா பாருங்க, கிசுகிசு நம்பற மாதிரியே இருக்கும். ஒருவேளை பொய்யா இருந்தால், 'பாவம்' நமக்குத்தானே என்பதால் இங்கு சொல்லலை..

   நீக்கு
  11. ஜீவி ஸார் படிச்சா "இதை எல்லாம் நம்பறீங்கள்"ம்பார்!!

   நீக்கு
 19. நேற்று ஜெயராஜ் படம் எனக்குப் பிடிக்காது என்று சொல்லி இருந்ததற்கு பானுமதி ப்ரொபோர்ஷன் பற்றி எழுதி இருந்த நினைவு. அங்கே தேட முடியலை. அதனால் பதில் கொடுக்கலை. என்னைப் பொறுத்தவரையிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எஸ்.ராஜம், நடராஜ், மாருதி, கோபுலு, மணியம், மணியம் செல்வன், ஓவியர் ராஜூ, மாலி போன்றோரின் படங்களில் வருவது போல் ஜெயராஜின் படங்களில் தெரிவதில்லை. ஓர் வெறுமை தென்படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் ஓவியங்களும் சிறப்பாக இருக்கும். இவர் ஓவியங்களும் சிறப்பாக இருக்கும். :)))

   நீக்கு
  2. கீசா மேடம்... நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் என்றபோதும் என்னுள் இருக்கும் பதின்ம வயசுப் பையன், அதை மறுக்கிறான். கவர்ச்சியா இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரி வரைபவர் ஜெ மட்டும்தான். மற்றவங்க ஓவியங்கள் நன்றாக வரைவார்கள். மாருதி அவர்கள் வரையும் முகங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். 'கவர்ச்சி'ன்னா, ஓவியர் ஜெ மட்டும்தான். என்ன அவரிடம் வெரைட்டி அதிகமாகக் கிடையாது. அதே பெண், வித வித டிரெஸ்களில்....

   நீக்கு
  3. கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் ஜெயராஜின் ஓவியங்களில்! அதே அந்தக் கால ஓவியர் ராஜூவின் படங்களில் நாம் அந்தக் குறிப்பிட்ட நிகழ்விலே நேரடியாகப் பார்க்கும் உணர்வு வரும். விகடன் அட்டைப்பட நகைச்சுவைகள் உட்பட. கோபுலுவிடமும், தாணுவிடமும் இதைப் பார்க்கலாம்.

   நீக்கு
 20. அதே போல் நெ.த.வும் காலணிகளைப் பற்றிச் சொல்லி இருக்கார். சுமார் 2000 ஆம் ஆண்டில் இருந்தே நான் இந்த எம்சிஆர் எனப்படும் காலணிகளைத் தான் பயன்படுத்தி வருகிறேன். முன்னெல்லாம் சென்னை ஜார்ஜ் டவுனில் இப்போதும் இருக்கும் மொத்த மருந்து விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் (தெருப்பெயர் மறந்துட்டேன்.) ஓர் குறிப்பிட்ட கடையில் போய்க் கால் அளவு கொடுத்துச் செய்யச் சொல்லிவிட்டு வருவோம். ஸோல் மட்டும் வெளிநாட்டு இறக்குமதி! இரண்டு வாங்கிப்பேன். வீட்டுக்கு ஒன்று, வெளியில் ஒன்று. வீட்டில் போட்டுக் கொண்டு நடக்க முடியலை. சமைக்கும்போதும் மற்ற வேலைகள் செய்யும்போதும் செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்தால் சமயங்களில் வழுக்கி விழும் அபாயம் இருந்தது என்பதோடு அல்லாமல், சில, பல முறைகள் கீழே விழுந்து எக்கச்சக்கமாய் அடியும் பட்டிருக்கிறது. ஆகவே வீட்டில் செருப்பு கிடையாது. இப்போதெல்லாம் இங்கே சென்னையில் வாங்கினாப்போல் செருப்புக் கிடைப்பது இல்லை என்பதால் காதியில் எம்சிஆர் செருப்புத் தான் வாங்கறேன். ஆலோசனை சொன்ன நெல்லைத் தமிழருக்கு நன்றி.பதிவுக்கு சம்பந்தம் இல்லாத இந்தக் கருத்தை இங்கே பதிவிட்டதற்கு எ.ப்.குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். Thank You one and all.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்று.. நன்று..
   பயனுள்ள கருத்துரை...

   நீக்கு
  2. என் பாஸ் கூட சிலநாட்கள் எம்சிஆர் உபயோகித்தார். ஆனால் இப்போது இல்லை.

   நீக்கு
  3. எம்.சி.ஆருக்குப் பதில் எம்.சி.பி வந்திருக்கிறது. அதைத்தான் நான் உபயோகப்படுத்துகிறேன். எனக்கு கால் ரொம்ப வழுக்கும் தன்மை உள்ளது. கொஞ்சம் தண்ணீர்னாலும் வழுக்கிடும். அதனால ரொம்ப ஜாக்கிரதையா நடப்பேன். கொஞ்சம் எங்கயாவது வீட்டைத் துடைத்தாலும் காயும் வரை நான் நகருவதில்லை.

   இந்தச் செருப்பு யார் போட்டுக்கணும்னா, இரவு படுத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்துக்கும்போது காலை தரையில் வைக்கமுடியாமல் வலித்தால் அதற்கான நிவாரணி.

   நீங்க படித்தீர்களோ என்று சந்தேகப்பட்டேன் (ஏனென்றால் 200+ போச்சுன்னா எதை யார் எழுதினான்னே கண்டுபிடிக்க முடியாது). நன்றி.

   நீக்கு
  4. அட! ஆமாம்,எம்சிபி தான், என்னிடம் இருந்ததும். இப்போ அதிகம் இங்கே கிடைக்கிறதில்லை. அம்பத்தூரில் ஒருத்தர் எனக்காகத் தயாரிக்கச் செய்து வாங்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். இப்போ அங்கே அந்தக் கடையே இல்லை! உங்களுக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் கால் வழுக்கும். அதுவும் ஃப்ளாட் செருப்புன்னா கட்டாயம் வழுக்கும். நான் வீட்டிலேயே கீழே விழுந்து எக்ஸ்ரே, ஆர்த்தோ சிகிச்சை வரை போயிருக்கேன். எங்க குடும்ப டாக்டர் சொல்லுவார், உங்க எலும்புகளெல்லாம் பிஸ்கட் மாதிரி! நொறுங்கிடும், கீழே விழாமல் இருக்கும்வரை உங்களுக்கு நல்லது என! அதையும் மீறித்தான் நான் விழுந்து எழுந்து கொண்டிருக்கேன்.

   நீக்கு
  5. // இரவு படுத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்துக்கும்போது காலை தரையில் வைக்கமுடியாமல் வலித்தால் அதற்கான நிவாரணி. // calcaneal spur!!!!!!! ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். 20 வருஷம் முன்னாடி. அப்போத் தான் பெண்ணின் கல்யாணம் வேறே! அதோடு தான் எல்லாமும் செய்ய வேண்டி இருந்தது. அப்போத் தான் செருப்பு அறிமுகம்.

   நீக்கு
  6. //calcaneal spur!// - இது சரியாப்போச்சா, எவ்வளவு நாள் ஆச்சு, என்ன மாதிரி செஞ்சு இதனை சால்வ் பண்ணினீங்கன்னு நான் உங்கள்ட தனியா கேட்டுக்கறேன்.

   //எல்லோருக்கும் கால் வழுக்கும்// - எனக்கு இந்த ஃபோபியா ரொம்ப ஜாஸ்தி. வழுக்கி விழுந்து அதுனால பெட் ரெஸ்ட் இல்லை எலும்பு முறிவு இதைப்பற்றியெல்லாம் ரொம்பப் படிச்சிருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அதுனால, தரைல தண்ணி விட்டிருந்தாங்கன்னா, நான் ரொம்ப அலெர்ட் ஆயிடுவேன்.

   நீக்கு
  7. பயமுறுத்தறீங்கப்பா....!

   நீக்கு
 21. நானொரு ராசியில்லா ராஜா... ந்னு ராஜேந்தரோட பாட்டை நீங்க பாடியிருக்கக் கூடாதுன்னு,

  TMS கிட்டே கொழுத்திப் போட்டார்கள்...

  அந்த சமயத்துல அவர் சசிரேகாவுடன் சேர்ந்து இன்னொரு மகா சோகப் பாடலைப் பாடியிருந்தார்....

  இப்போ எதைத் தொட்டாலும் ஜெர்ம்.. கிருமி.. என்று சொல்லி விளம்பரங்கள் துடிப்பது போல..

  அப்போதும் இருந்தது...

  நீங்க அப்படிப் பாடியிருக்கப்படாது..
  நீங்க இப்படி நடிச்சிருக்கப்படாது..
  அவனை நடிக்க விட்டுருக்கக் கூடாது..
  உங்கள அவன் சாப்பிட்டுட்டான்...

  - என்றெல்லாம் அல்லக்கைகள்...

  இது இப்படி இருக்க
  TMS அவர்கள் பாடாத சோகப்பாடல்களா?..

  மகிழம்பூ என்ற படத்தில் ஒரு பாடல்..
  வாய்ப்பு இருந்தால் கேட்டுப் பாருங்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. TMS சசிரேகா இணைந்து பாடியதா? அது என்ன பாடல்? ஆனாலும் அறமில்லாச் சொற்களை உபயோகித்துப் பாடினால் எதிர்விளைவு ஏற்படும் என்றும் பார்த்திருக்கிறோமே!

   மகிழம்பூ... என்ன பாடல் என்று பார்க்கிறேன். கேட்டிருப்பேன். மகிழம்பூ என்றால் எனக்கு புகழ்பெற்ற சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது!!!

   நீக்கு
  2. இல்லை துரை செல்வராஜு சார்.. டி.எம்.எஸ்ஸே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் (அவன் இந்த மாதிரி பாட்டை என்னைப் பாடவைத்து என் கேரியரையே க்ளோஸ் பண்ணிட்டான் என்றே சொல்லியிருக்கிறார்). 'அறச் சொற்களின்' விளைவுகளைக் கண்டு நானும் ரொம்ப பயப்படுவேன். அதுனாலதான் சில பாடல்களைப் பாடவே மாட்டேன், கேட்கவும் மாட்டேன் பிடிக்கும் என்றபோதும்.

   நீக்கு
  3. 'ராசியில்லா ராஜா' பாடலைவிட, டி.எம்.எஸ்ஸை வருத்திய விஷயம் "என் கதை முடியும் நேரமிது என்பதைச் சொல்லும் ராகம் இது" என்ற பாடல், அதே படத்தில். அதுதான் அவருடைய திரையுலக பயணத்தை முடித்தது (பிறகு உழவன் என்ற படத்தில் எல்லாப் பாடல்களையும் பாடிய போதிலும்)

   நீக்கு
  4. இந்தப் பாடலைத்தான் தேடினேன்..
   சட்டென நினைவுக்கு வரவில்லை...

   நீக்கு
  5. அல்லக்கைகள் அப்படி கொளுத்திப் போட்ட பிறகு தான் டிஎம்எஸ் இப்படி நினைக்கவும் பேசவும் செய்தார்....

   நீக்கு
  6. ஒரு தடவை சென்னையிலிருந்து மும்பைக்கு முதல் வகுப்பில் (எகானமி ஃபுல். நிறைய தடவை பிரயாணித்ததால் எனக்கு முதல் வகுப்புக்கு ப்ரொமோட் பண்ணினாங்க..நமக்கேது அவ்வளவு காசு) பிரயாணித்தபோது, பாதைவிட்டு அடுத்த இரண்டு சீட்டில் டி.எம்.எஸ்ஸும் அவர் மகனும் பிரயாணித்தார்கள். பேசியிருக்கலாம், படமெடுத்திருக்கலாம்....ஆனால் இரண்டும் செய்யவில்லை (அப்போது கூச்சமாக இருந்திருக்கும்). டி.எம்.எஸ். மற்றும் எம்.எஸ்.வி தங்கள் தொழிலின்போது காசு அதிகமாகக் கேட்கவில்லை என நினைக்கிறேன். டிமாண்ட் பண்ணியிருந்தால் இன்னும் சம்பாதித்திருக்கலாம்.

   நீக்கு
  7. TMS, MSV நிறைய ஏமாந்தார்கள் என்று எங்கேயோ படித்திருக்கிறேன்.
   ஆனால் நல்ல காம்பினேஷன். எத்தனை பாடல்கள் வெற்றி பெற்றன.
   ராசியில்லா ராஜா அபத்தம். கேட்கும் போதே மனத்தைப் பிசையும்.
   எத்தனையோ தத்துவப் பாடல்கள் பாடி இருக்கிறாரே.வீடு வரை உறவு.,
   சட்டி சுட்டதடா. இவை எல்லாம் நான் என்ற சொல்லோடு ஆரம்பிக்காத
   பாடல்கள்.

   நீக்கு
 22. ஸ்ரீராம் - நான் +2 படித்தபோது எங்க ஹாஸ்டலில் 'ஒருதலை ராகம்' படப் பாடல்தான் நிறைய தடவை போடுவார்கள். எனக்கு அந்தப் பாடல்கள் எல்லாம் மனப்பாடம். நான் அதில் எல்லாப் பாடல்களுமே பாடுவேன். வாசமில்லா மலரிது பாடலை அப்போதைய போட்டியில் என் நண்பன் பாடி, முதல் பரிசைப் பெற்றான் (நான் இரண்டாம் பரிசு... இத்தனைக்கும் அவன் சுமாராகத்தான் பாடுவான். பாடல் புதுசு என்பதால் அவனுக்கு பரிசு கிடைத்தது என்று எனக்கு நான் சொல்லிக்கொண்டேன். நான் பாடிய பாடல் 'கலைமகள் கைப் பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ" - ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... நீங்கள் பாடுவீர்களா? அடடே... அடடே...

   நீங்கள் பெண்குரல் பாடலைத் தெரிவு செய்து பாடியது கூட காரணமாக இருக்கலாம்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் நெல்லை பல சமயம் கருத்தில் சொல்லிருக்கார் நான் பாடுவே பாடுவேன் அப்படினு...பாருங்க பல முறை சொல்லியும் இப்பத்தான் கண்ணுல பட்டுருக்கு ஹா ஹா ஹாஹ் ஆ வடிவேலு ஸ்டைல்ல நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்..ஸ்டைல்ல நானும் பாடுவேன் நானும் பாடுவேன்னு நெல்லை கத்தி சொல்லிருக்கணுமோ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. நெல்லை நீங்க ரெண்டாவது பரிசு வாங்கினது குலாப்ஜாமூன் விளம்பரம் போல இல்லைதானே!!!!!!!!

   சரி சரி ஜோக்ஸ் அபார்ட் நீங்க கதை எழுதும் போது அதுல ஹீரோ பாடுவது போல நீங்க ஒரு பாட்டு பாடி பதியலாமே இங்கு...

   கீதா

   நீக்கு
  4. @கீதா ரங்கன் - "குலாப்ஜாமூன் விளம்பரம்" - நல்ல உதாரணமே உங்களுக்குக் கொடுக்கத் தெரியலை. 1000 மில்லி மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டுபேர் ஓடி இரண்டாவதாக வந்தது மாதிரி இல்லைதானே... என்றுதானே கேட்டிருக்கணும்?

   எனக்கு ஊக்கம் கொடுக்க ஆள் கிடையாது. திறமையை ஆதரிக்க ஆள் கிடையாது. எங்க அப்பா (எனக்கு ரொம்பப் பிடிக்கும்) என்னை, 'எப்போப் பார்த்தாலும் வரைஞ்சுக்கிட்டு'ன்னு திட்டுவார். பாடறதையும் ஆதரிக்கமாட்டார். படிக்கணும்னு மட்டும்தான் சொல்லுவார். பொதுவா நான் நல்லா வரைவேன், பாடுவேன், எதுலயும் துணிந்து இறங்குவேன். யாரும் கிண்டல் பண்ணினா கவலைப்படமாட்டேன். ஆனா, ராகம், தாளம்லாம் ஒண்ணுமே தெரியாது.

   இப்போ ரெண்டு திறமைகளும் இல்லை.

   அதிருக்கட்டும். ரெண்டாவது பரிசா எனக்கு அப்போதான் மார்க்கெட்டில் புதிதாக வந்த பெட் பாட்டில் கொடுத்தாங்க. ஆனா அப்போ குவாலிட்டி சரியில்லை போலிருக்கு (79). அன்னைக்கு இரவு, ஹாஸ்டல்ல சூடான தண்ணீர் வாங்கி அதில் விட்டேன். (நமக்கு அவ்வளவுதான் மூளை). பாட்டில் நெளிந்துவிட்டது. ஹாஹா.

   நீக்கு
  5. //நீங்க ஒரு பாட்டு பாடி பதியலாமே இங்கு...// - சுத்தம்..... உங்களுக்காக ஒரு சாணக்கிய நீதி சொல்றேன். பேசாம அமைதியா இருந்தாலே மற்றவர்கள் 'இவர்கிட்ட என்ன என்ன திறமைகள் இருக்கோ' அப்படின்னு கொஞ்சம் யோசனையோடவே இருப்பாங்க. சும்மா எப்போப் பார்த்தாலும் பேசிக்கிட்டே இருந்தால், 'இவ்வளவுதானா இவனுக்குத் தெரியும்' அப்படீன்னு நினைச்சுடுவாங்க. ஹாஹா.

   நீக்கு
  6. முன்பு எங்கள் தலத்தில் நம் பதிவர்கள் வல்லிம்மா உட்பட பாடியிருக்கிறார்கள் தெரியுமோ?

   நீக்கு
 23. கூடையில கருவாடு - மிக ஃபேமஸ் ஆன பாட்டு. எனக்கும் பிடித்தமானது. ஜான் ஆப்ரஹாம் (என்று ஞாபகம்), டி.ஆரின் திறமையை தன் திறமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு டி.ஆர். அவருடைய திறமையை நிரூபித்தார். மைதிலி என்னைக் காதலி படம் நான் பி.ஜி இரண்டாம் வருடத்தில் பார்த்தது. மிகுந்த திறமை சாலி. நல்லவர். இவரது 'நல்ல தனத்துக்கு' ஒரு உதாரணம் இங்க கொடுக்க முடியாது (மும்தாஜ் சம்பந்தப்பட்டது).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் பாடகர் ஜாலி ஆப்ரஹாமுடன் குழப்பிக் கொள்கிறீர்கள் நெல்லை. அவர் ஜென்ஸியின் சகோதரர் என்று ஞாபகம். "அவளொரு மோகன ராகம்" பாடல் இசை யார் என்று பாருங்கள்.. அவர்தான். க

   நீக்கு
  2. சாரி....இ.எம். இப்ராஹிம் என்பவர். அவர்தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் (என்று போட்டுக்கொண்டவர்).

   நீக்கு
  3. ....... என்பவர்...

   நான் காலையிலேயே சொல்ல நினைத்தேன்...

   நமக்கு எதற்கு ஊர் வம்பு என்று இருந்து விட்டேன்....

   நீக்கு
 24. அருமையான தாலாட்டு பாடல்... சுகமான சோகம்...!

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீராம் ரொம்ப வருஷத்துக்கப்புறம் கேட்கறேன் இந்தப் பாட்டு. மறந்தே போன பாட்டு...

  சூப்பர் பாட்டு. ஆரம்பமே அசத்தலான இசை. எஸ்பிபி செம குரல்....அதுலயும் வார்த்தை மீறிப் போனா பாரு அந்த லைன்ஸ் பாடும் போது செம....

  நல்ல ட்யூன்...patho மூட் தான் ஆனா இசை செமையா போட்டுருக்கார் டி ஆர்.

  நல்ல திறமையானவர் தான் டி ஆர்.

  ரசித்தேன் ஸ்ரீராம் அதுவும் சரணம் செம ஸ்டார்ட்டிங்க்..

  சின்னக் குயிலும் பரவால்ல...வாய்ஸ் என்ன ஸ்வீட் இல்ல?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு கீதா ரங்கன்....

   இந்தப் பாட்டில் மத்யமாவதி ராகத்தில் மலயமாருதம் அந்த இடத்துல கலந்துருக்கு என்பீர்களே... டி.ராஜேந்தர், என்ன ராகம்னே கண்டுபிடிக்க முடியாத அளவு இந்தப் பாடல் போட்டிருக்காரா?

   நீக்கு
  2. //இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு கீதா ரங்கன்....

   இந்தப் பாட்டில் மத்யமாவதி ராகத்தில் மலயமாருதம் அந்த இடத்துல கலந்துருக்கு என்பீர்களே.//

   ஹா ஹ ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன்

   //டி.ராஜேந்தர், என்ன ராகம்னே கண்டுபிடிக்க முடியாத அளவு இந்தப் பாடல் போட்டிருக்காரா?//

   ஹா ஹா ஹா ஹையோ நெல்லை....சிரிச்சு முடில..

   நெல்லை இந்தப் பாட்டு என்றில்லை சினிமாவில் பல பாடல்கள் டக்கென்று என்னால் ராகம் கண்டு கண்டுபிடிக்க முடியாது. சினிமாவில் ஒரு சில பாடல்களே ஒரே ராகத்தில் அமைந்திருக்கும். சில பாடல்கள் அந்த ராகத்தின் ஸ்வரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் ஸ்வரங்களைத் தொட்டுச் செல்லும் அல்லது டிவியேட் செய்துவிட்டு வரும்...அது சில சமயங்களில் பொருத்தமாகவும் அமையும். அப்படி டிவியேட் செய்யும் போது டக்கென்று கண்டுபிடிக்க முடியாது. ரெண்டாவது பல பாடல்களும் ஏதோ ஒரு ராகத்தில் அமைந்திருந்தாலும் சினிமாவுக்கு என்று போடுவதால் அது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

   கர்நாடக இசைக்கச்சேரியில் அப்படி ஒரு ராகத்தின் ஸ்வரங்களில் பக்கத்து ஸ்வரத்தை டச் செய்துவிட்டால் அவ்வளவுதான் செம க்ரிட்டிக்கல் ரெவ்யூ வரும். அதையே ஸ்வரபேதம் என்ற ஒரு முறைப்படி ஒரு ராகத்தின் ஒரு ஸ்வரத்தின் ஸ்தானத்தை கொஞ்சம் மாற்றி வேறொரு ஸ்வர ஸ்தானத்தில் ஆரம்பித்து மற்றொரு ராகத்தைத் தொட்டு அப்படிப் பல ராகங்களைக் கோர்த்துப் பாடி இறுதியில் தொடங்கிய ராகத்துக்கு வருவது என்பது மிகப் பெரிய கலை...ஆனால் அதையும் கரெக்டாகச் செய்ய வேண்டும்.

   ஆனால் சினிமா இசையில் அப்படி எந்த கட்டுக் கோப்பும் கிடையாது. ஸ்வர நோட்ஸ் குரலுக்கு, இசைக்கருவிகளுக்கு (இசைக்கருவியில் அப்படிச் செய்வது கொஞ்சம் எளிது என்று எனக்குத் தோன்றும்..) என்று மாற்றிப் போட்டு டிவியேட் செய்தும் என்ன வேண்டுமானாலும் விளையாடலாம். கேட்க நன்றாக இருந்தால் போதும்...

   இங்கு டி ஆர் நன்றாகவே போட்டிருக்கார் நெல்லை...நெஜமாவே நல்ல திறமை இருக்கு அவரிடம் .....இளையராஜாவின் மெட்டு போலவே இருக்கு..

   கீதா

   நீக்கு
  3. உங்களுக்கு இசையில் நல்ல திறமை கீதா ரங்கன்.... எனக்கு சில சமயம் தோணும்...உங்க திறமையை வெளிக்கொண்டு வருவதற்காகவே, நல்ல ஃபேமஸ் பாடல்கள்லாம் விட்டுட்டு, கொஞ்சம் கேள்விப்படாத பாடலா ஸ்ரீராம் செலெக்ட் பண்ணறாரோன்னு... இன்னைக்குக் கூடப் பாருங்க, அவருடைய அலைவரிசையிலேயே 'கூடையில கருவாடு' பாடலைப் போட்டிருக்கலாம். என்ன அருமையான தாளக்கட்டு அந்தப் பாட்டு. அதைப்போய் பிடிக்கலைன்னு சொல்லிட்டாரே. எனக்கு அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஓரளவு வரிகளோடு நினைவில் இருக்கு.

   நீக்கு
  4. டி.ஆர் நிஜமாகவே நல்ல திறமை சாலி என்றுதான் திரையுவகத்தினர் கூறுவார்கள். நடிகை ஶ்ரீவித்யா கூட ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இத்தனை திறமைசாலியான டி.ஆர் மற்றவர்களோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும், கூட்டிலிருந்து வெளியே வர வேண்டும்" என்று கூறியிருந்தார். அவர் மகனும் திறமைசாலிதான்.

   நீக்கு
  5. என்னைப்போலவே ரசித்திருப்பதற்கு நன்றி கீதா. மகிழ்ச்சி.

   நீக்கு
  6. டி ஆர் வெளிப்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் பானு அக்கா. உதாரணமாக கிளிஞ்சல்கள். அப்புறம் ஒரு சுரேஷ் நதியா படம்.

   நீக்கு
 26. கணினி ரொம்ப படுத்துகிறது. ஒவ்வொரு முறை இங்கு வந்து கருத்து போட ஓப்பன் செய்ததும் கணினி படுத்துவிடுகிறது....அப்புறம் வீடியோ போட முடியலை. உடனே படுத்துவிடுகிறது

  அதனால பாட்டை மொபைல்ல கேட்டேன்....கேட்டுக் கொண்டே இங்கு கருத்து...

  டீ ஆர் க்கு எப்படி இப்படி அழ்கான இசை போட முடிகிறது என்று வியந்ததுண்டு....வியக்கிறேன் ஸ்ரீராம்.

  இந்தப் பாட்டுல கூட எங்கேயும் டிவியேட் ஆகவே இல்லை...பாருங்க...இடையில் அழகான கர்நாட்டிக் பிட்..

  அவர் இசை நன்றாக இருந்த அளவு படங்கள் இல்லை என்றே தோன்றும். எல்லாம் ஒரே கதை....வசனங்கள்...கொஞ்சம் பார்த்ததெ போர் அதுவும் அப்போதே...ஒரு தலைராகம் கொஞ்சம் பார்த்ததுமே வந்துவிட்டேன் வெளியே அதே போலத்தான் ரயில் பயணங்களில்...காதல்/தங்கை பாசம் தவிர வேறு எதுவுமே அவருக்கு எடுக்கத் தெரியாதா என்று தோன்றும்.

  வியப்பான விஷயம் அவர் இசை. இசையமைப்பது என்பது அத்தனை எளிதல்ல. நல்ல திறமைதான் அவருக்கு. சும்மா மெட்டு போட்டு டேபிளில் தாளம் தட்டினால் மட்டும் போதாதே. இசைக்கருவிகளுக்கும் ஒவ்வொரு கருவிக்கும் என்ன இசைக்க வேண்டும் என்று நோட்ஸ் கொடுக்கணுமே.!!!!!!! அவர் முறையான இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டவரா என்றெல்லாம் தெரியவில்லை...

  முறையான பயிற்சி இல்லை என்றாலும் மெட்டு போட்டு தாளம் போட்டுவிடலாம்...அதற்கு பிறவியிலேயே இசை அறிவு, திறமை இருக்கலாம். ஆனால் இசைக் கோர்வை, இசை அமைப்பு என்பது பெரிய விஷயம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டி ஆரின் சில திறமைகள் உண்மையிலேயே வியப்பூட்டுபவை.

   நீக்கு
 27. டி.ஆர் படங்களில் நான் பார்த்தது ஒரு தலைராகம் மட்டுமே. அப்போது மிகவும் வித்தியாசமான படமாக அது இருந்தது. அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த உஷா(பின்னாளில் ராஜேந்தர் மனைவியானார்) பிரமாதமாக நடித்திருப்பார்.
  கி.போ.ரயில் படத்திலும் அவர் நடிப்பு நன்றாக இருக்கும். நல்ல திறமைசாலியான அவரை வீட்டிற்குள் முடக்கிப்போட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் ஒரு தலைராகம் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சங்கராபரணமும் இதுவும் ஒரே சமயம் வெளியானது. அதைப்பார்த்து விட்டு இதைப் பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை! நான் அப்போது தஞ்சையில் இருந்தேன்.

   நீக்கு
 28. நளினி, அமலா போன்றவர்கள் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். வேறு யாராவது உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜீவ் இவரால் அறிமுகப்படுத்தப் பட்டவர்தானோ? ரவீந்தர்?

   நீக்கு
  2. காலைலயே சொன்னேனே... மும்தாஜ் (நிச்சயமா டி.ஆர் அறிமுகம்), ஜீவிதா போன்றவர்களும் இவர் அறிமுகம்தான்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. ஜீவிதா? சந்தேகமா இருக்கு!

   நீக்கு
 29. மிக இனிமையான பாடல் தாலாட்டுவது போலிருக்கு .சிம்பு சின்னத்தில் கியூட் பேபி இல்லையா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூடையில கருவாடு பாட்டு எனக்கும் பிடிக்கும். இசையும் தாளமும் நன்றாக இருக்கும்.
   வெறுமே கேட்டால் போதும்.
   அந்த தயாரிப்பாளர் இப்ரஹீம் அப்புறம் என்ன ஆனார் தெரியவில்லை.

   ஜெ..........படங்களும் சுஜாதா சாரும் இணைந்து சரித்திரம் படைத்தார்கள்.
   வளைவுகளும் வாசகங்களும் ஜெ..யின் பணி.
   மற்றபடி உணர்ச்சிகளுக்கு இடம் இருக்காது.
   கோபுலு சார், ஸ்ரீதர்,ராஜு,மாயா,மாருதி,சாரதி இவர்களின் சித்திரங்கள் நேரில் பேசுவது
   போல இருக்கும். அதுவும் கோபுலு சார் பற்றி சொல்லவே வேண்டாம்.

   நீக்கு
  2. //ஜெ..........படங்களும் சுஜாதா சாரும் இணைந்து சரித்திரம் படைத்தார்கள்.
   வளைவுகளும் வாசகங்களும் ஜெ..யின் பணி.
   மற்றபடி உணர்ச்சிகளுக்கு இடம் இருக்காது// 100% சரி. கீதா அக்கா குறிப்பிட்டிருப்பவர்கள் க்ளாஸ். ஜெ மாஸ். ஆனால் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அவரை வளர்த்து விட்டது சாவி.
   ஒரு விஷயத்தை மறுக்க முடியாது. ஒரு பெண் மிகவும் அழகு என்பதை சொல்ல ரவிவர்மா பிக்சர் என்பார்கள், அதன் பிறகு ஜெயராஜ் படம் என்றுதான் சொல்வார்கள்.

   நீக்கு
  3. கூடையிலே கருவாடு பாடல் ரசிக்கலாம். எப்போதும் அல்ல.

   // வளைவுகளும் வாசகங்களும் //

   ஆம்... ஜெயராஜின் டிஷர்ட் வாசகங்கள் ரொம்பப் பிரபலம்.

   நீக்கு
 30. அடுத்த இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் பிஸி. வர முடிகிறதா பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 31. ஆ மீதான் இங்கின 105 ஊஊஊஊஊஉ:))..

  டி ஆர், எழுத்தில் இசையில் ஒருதலை ராகம் பாடல்கள் எல்லாமே (கூடையிலே கருவாடு உட்பட:)!) எனக்குப் பிடிக்கும். அதில் படமும் பாடல்களும் அணு அணுவாகப் பிடிக்கும்... அதில் நடிப்பவர் விஜயன் அவர்களாமே.. நான் வேறு யாரோ என நினைச்சிருந்தேன்... அப்படத்தில் அவரைப் பிடிச்சது ஆனா மற்றப்படத்தில் வெறுத்துப் போச்சு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு தலை ராகம் படத்தில் நடித்திருந்தது விஜயன் இல்லை சங்கர். அநத படத்தில் சந்திரசேகர் நடிப்பு குறிப்பிடும்படி இருக்கும்.

   நீக்கு
  2. வாங்க அதிரா... இதில் (ஒரு தலை ராகம்) கதாநாயகியாக நடித்தவர் ரூபா!

   நீக்கு
  3. ஓ நான் அபூர்வராகட்த்தைப் போட்டுக் குழப்பிட்டேனோ:))

   நீக்கு
 32. பச்சைக்கிளி நீ உறங்கு அழகிய பாட்டு.. கேட்டுக் கொண்டே இருக்கலாம்... படம் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்ன். பார்த்ததாக இல்லை ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்ன பாட்டு அதிரா?

   நீக்கு
  2. நான் சொல்லல :) ஸ்கொட்லான்ட் கவிதாயினியின் தற்சமயம் எழுதிக்கொண்டு நிற்கும் பாடல் இது விரைவில் டீஸல் சேசே டீசர் எதிர்ப்பாருங்க .மேடம் மாநாடுக்கு எழுதி அனுப்பிய பாடல் வரிதான் அது

   நீக்கு
  3. ஓ... இதைத்தான் பாடப்போகிறாரா?

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ...என் பச்சைக்கிளி நீ உறங்கு... எனத்தானே வருது அதில்.. அது பிடிச்சிருந்தது அதைச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா...

   நீக்கு
 33. ஒருதலைராகம், ஒரு தாயின் சபதம், தங்கைக்கோர் கீதம், மைதிலி என்னைக் காதலி என் தங்கை கல்யாணி என்று நிறைய மியுசிகல் ஹிட் கொடுத்தவர் டி.ராஜேந்தர். என் தங்கை கல்யாணியில் நீங்கள் தந்த இந்த பாடல் எனக்கும் பிடிக்கும். என் தங்கை கல்யாணிக்கு பின்னர் டி. ராஜேந்தர் படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை. புது மாற்றங்களுக்கு அவர் மாறாமல் பழைய பாணியிலே தொடர்ந்தது காரணமாயிருக்கலாம்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!