வியாழன், 2 ஜூன், 2022

எண்ணெய் பாட்டிலும் என்னப்பன் முருகனும்

 இந்த முருகன் படம் இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது.  ரொம்பப் பழைய படம்தான்.  எவ்வளவு பழைய படம்?


சொல்கிறேன்.

இதை இரண்டுமுறை என் சிறுபிராயத்தில் உடைத்திருக்கிறேன். ஒருமுறை அதை சுவரில் மாட்டுவதற்காக அப்பா அப்போதுதான் ஏதோ சரிசெய்து வைத்திருந்தபோது...  

அம்மா கேட்டதால் எண்ணெய் கையில் கொண்டு வந்தேன். வழியும் எண்ணெயுடன் கவனமாகத்தான் நடந்தேன்.  அப்பா அங்கு டேபிளில் அமர்ந்துகொண்டு எழுதிக் கொண்டிருந்தார்.  தினசரி அவர் எழுதிய .அளவுகளுக்கு அந்தக் காலத்தில் எல்லாப் பத்திரிகையும் இவர் எழுத்துகளால் நிறைந்து, புதிய பத்திரிகையை தொடங்கி இருக்கவேண்டும்.  ஆனால் அப்படி எல்லாம்  நடக்காதது அவர் துரதிருஷ்டமா, பத்திரிகைகளின் (துர்) அதிர்ஷ்டமா தெரியாது.  வாசகர்களுக்கு இழப்பு!

சொல்ல வந்ததை விட்டு இரண்டு பாதை மாறி இருக்கிறேன், நினைவில் இருக்கிறது.  முதலில் எண்ணெய்க்கு வருகிறேன்.  எங்கள் வீட்டில் அப்போது ஹார்லிக்ஸ் பாட்டிலில்தான் வைத்திருப்போம்.  எண்ணெய் கசிந்து வழுக்கும்படிதான் இருக்கும் அது.  சாப்பிடும்போது சாதத்துக்கோ, இட்லி மிளகாய்ப்பொடிக்கோ போட்டுக் கொள்ள எடுக்கும்போதே கீழே போட்டு உடைக்கும் வழக்கம் எங்களுக்கு இருந்தது.  அப்புறம் ரொம்ப காலத்துக்கு அப்புறம் அதை ஒரு அலுமினிய தூக்கில் வைத்தார்கள் என்று ஞாபகம்.
படம் : நன்றி, இணையம்.
டேபிளில் அமர்ந்து 'பேட்' வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த அப்பா என்னைத் திரும்பிப் பார்த்தார்.  கண்ணாடி பாட்டிலில் நான் எண்ணெய் கொண்டு வருவதைப் பார்த்தார்.   பதட்டமானார்.

என்ன பதட்டம் என்கிறீர்களா?  

இப்போதைய உயரத்துடன் என்னை அங்கு கற்பனை பண்ணிப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.  நாடா வைத்த டிராயருடன் சிறு உருவமாக நினைத்துப் பார்த்தால் விபரீதம் புரியும்.  ஏனெனில் நம் மனது, நாம் அறிந்த உருவத்தைதான் நம்  காட்டும் அப்படி அது காட்டும் பிம்பத்தைதானே படிக்கும் காட்சியில் கட்டமைத்துக் கொள்ளும்?!  (ஒரு இலக்கிய வாசனை அடிக்குது இல்லே?!)

"டேய்...  டேய்...  பார்த்துடா...  உன் கையில எவண்டா கொடுத்தான் இதை?" என்று ஹை டெசிபலில் அலறினார்.  அவர் என்றைக்கு லோ டெசிபலில் திட்டி இருக்கிறார்?

அதுவரை கவனமாக வந்த நான், அவர் குரலினால் கலவரப்பட்டு (கவனிக்கவும், கவரப்பட்டு அல்ல)  ஹார்லிக்ஸ் பாட்டிலைத் தவறவிட்டேன்.  எண்ணெய் கீழே ஓட, அப்படி ஓடிய எண்ணெயே, வேகமாக நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்த ஆவேச அப்பாவிடமிருந்து என்னை தப்பி ஓடவிடாமல் செய்தது.  நான் வழுக்கி விழுந்த இடம் முருகனுக்கு அருகில்.  அவராவது காத்தாரா என்னை!  அப்பா வந்து என் டிராயர் நாடாவைப் பிடித்து அப்படியே தூக்கி போட்ட வகையில் முருகன் படம் நழுவி கீழே விழ, அதன் கண்ணாடி மறுபடி உடைந்தது.  

அதோடு பாட்டில் கண்ணாடியா, முருகன் படக் கண்ணாடி சில்லா என்று என்று தெரியாமல் ஒன்று என் காலை பதம் பார்த்து ரத்தமும் வந்ததது. 

மேலே நான் சொல்லி இருக்கும் முருகன் படம் இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது.  எனக்குத் திருமணம் ஆனதும் அதை நான் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.

இந்த முருகன் படத்தின் பழமை பற்றி என் மகன்களிடமும் நண்பர்களிடமும் சொல்லும்போது ஆச்சரியப்படுவார்கள்.

"தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன்" என்று சொல்வார்கள்.  அபப்டியே செய்வார்களோ?!  செய்தார் அப்பா அன்று(ம்)!  

சீக்கிரமே அவருக்கு மறுபடியும் அந்த வாய்ப்பு வந்தது.  அந்த வாய்ப்பை நானே அவருக்கு வழங்கினேன்.

அது பற்றி எழுதத்தான் வந்தேன்.  

**

அதை ஹோட்டல் என்று சொல்ல மாட்டோம்.  கேன்டீன் என்று அழைப்பார்கள்.   பொதுவான இடங்களில் இருந்தால் ஹோட்டல்.  கல்லூரியிலோ, அலுவலகங்களில் இருந்தால் கேன்டீன்!  இது மருத்துவ மாணவர்களுக்காக தஞ்சை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்தது.

தஞ்சை மேம்பாலத்திலிருந்து திரும்பி கணபதிபுரம், எல் ஐ சி காலனி, மங்கலநகர், ஈஸ்வரி நகர் தாண்டி வல்லம் செல்லும் சாலையில் மருத்துவக்கல்லூரி காம்பௌண்ட் வரும்.  அதற்குள் திரும்பினால் கொஞ்ச தூரம் சென்றதும் முந்திரி மரங்களால் ஆன பஸ்ஸ்டாப் வரும்.  எதிரே மருத்துவக்கல்லோரி லேப்.  அங்கிருந்து மக்களை இறக்கி, ஏற்றிக் கிளம்பும் பஸ் இன்னொரு கேட் வழியாக மறுபடி மெயின் ரோடைப் பிடித்து வளைந்து செல்லும்.

நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கினால் லேப் தாண்டி இடதுபுறம் திரும்பி சென்றால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஒரு    வழியே வீட்டுக்குச் செல்லலாம்.  நிறைய சமயங்களில் அங்கு முட்கள் போட்டு அடைத்து விடுவார்கள்.  அது முந்திரிபபழம் காய்க்கும் காலம்.

அதுவே நேராகச் சென்றால் கேன்டீன் வரும்.  அதையும் தாண்டிச் சென்றால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் - அதற்கு பாரடைஸ் - என்று பெயர் - செல்லும் வழியில் நடுவிலேயே இடதுபுறம் திரும்பி உள்ளே நடந்தால், இருபுறமும் முந்திரி மரங்கள் சூழ்ந்திருக்க, நடுவே ஒற்றையடிப் பாதை வழியே  குடியிருப்பை அடையலாம்.  இங்கும் முந்திரி பழம் இருக்கும் காலங்களில் முள் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள்.  ஓரத்தில் வழி செய்து சென்று வருவோம்.

ஆங்காங்கே உயரமான பரண் கட்டி அதில் காவலாளிகள் அமர்ந்திருப்பர், யாராவது முந்திரிப்பழம் திருடுகிறார்களா என்று பார்க்க.  அதாவது, அவர்கள் காவல் இருப்பது முந்திரிப் பழத்துக்காக  அல்ல, முந்திரிக்கொட்டைக்காக.  காஸ்ட்லி பாருங்கள்..

நாங்கள் அங்குள்ள குடியிருப்பில் இருப்பவர்கள் என்பதால் எங்களை அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.  அவ்வப்போது வந்து எங்களிடமிருந்து குடிநீரும், 'வெஞ்சனமு'ம் வாங்கி கொள்வார்கள்.  அதனால் எங்களுக்கு ஒரு சலுகை உண்டு.  பழம் வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம்.  ஆனால் முந்திரிக் கொட்டையை அங்கேயே திருகி மரத்தடியில் போட்டு விட வேண்டும்.

அந்த கேன்டீன் எங்களின் மனங்கவர் பிரதேசமாக இருந்தது என்று சொல்லி இருக்கிறேன்.  அங்கேயே சாப்பிட்டாலும், மந்தார இலையில் கட்டி பார்சல் வாங்கி வந்தாலும் அந்த பூரி கிழங்கின் வாசனை இன்னும் மனதில் நிற்கிறது.  அந்த வாசனை, அந்த ருசி ஏன் இப்போது இல்லை?!  மனசுதான் காரணம்!

இந்நாளில் அல்லது 'நடு'நாளில் (!)  பரோட்டா போல அந்நாளில் பூரி கிழங்கு.  கடைக்கு சாப்பிடச் சென்றால் பூரி மசால் சாப்பிடாமல் வருவதில்லை.

"மந்தார இலை படம் கிடைக்கவில்லை பாஸ்!"

ஒரு பூரிக்காக, அல்லது உங்களுக்கு பிடித்த உணவுக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?   நான் செய்தேன்.  ரொம்பப் பெரிதாக எதுவும் கற்பனை செய்ய வேண்டாம்.  முடியிழந்தேன்! மொட்டை போட்டேன்.  பெரிய விஷயமா இது என்கிறீர்களா?  அந்த வயதில் இதெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத சமாச்சாரங்கள்.  மேலும் இதற்கெல்லாம் விசேஷ அர்த்தம் கண்டுபிடிக்க ஒரு பாட்டியும் இருந்தார்கள்.

[அடுத்த வாரம் தொடரட்டுமா ]
=============================================================================================================

படிக்க முடிகிறதா?  கொஞ்சம்தான் முடிகிறது.  1905 ல் வெளிவந்த பத்திரிகை!===================================================================================================================


உளவியல் ஆலோசகர் ரேகா சுதர்சன்: இந்தியாவில் கர்ப்பிணியாக இருப்பது ஒரு வரம். என்ன தான் தனிக் குடும்ப வாழ்க்கை முறை அதிகமாயிட்டாலும், நாம் இன்னும் உறவுகளோட அரவணைப்புல தான் வாழறோம். சில ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியா போயிருந்தேன். அங்கே பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல, கைக்குழந்தையை வெச்சிக்கிட்டு, ஒரு அம்மா 'கவுன்டர்'ல பணம் கட்ட நின்னுட்டு இருந்தாங்க. 

அந்தக் குழந்தை பிறந்து, 10 நாள் தான் ஆகுது. மூத்த குழந்தையை வீட்ல விட்டுட்டு, இவங்க பச்சைக் குழந்தையோட கடைக்கு வந்து, வரிசையில நிக்கிறாங்க. ஆஸ்திரேலியா மட்டுமில்ல; நிறைய வளர்ந்த நாடுகள்ல, பிரசவமான பெண்களுக்கு இங்கே இருக்கிற மாதிரி சலுகைகள் கிடைக்காது. 

இங்கே, அஞ்சு மாசம் ஒரு வேலையும் செய்யாம, 'ரெஸ்ட்' எடுக்கலாம். குடும்பத்துல யாரோ ஒருத்தர் உங்களைப் பார்த்துப்பாங்க. அதனால, 'நான் என்ன பால் கொடுக்கிற மிஷினா?'ன்னு சில பெண்கள் கோபப்படறதுல, எந்த பிரயோஜனமும் இல்லை.

இன்றைய ஆண்களை, பாராட்டத்தான் வேணும். முன்பெல்லாம், மனைவி கர்ப்பமா இருக்காங்கன்னு சொல்வாங்க. இப்ப, 'நாங்க கர்ப்பமா இருக்கோம்'னு தான் சொல்றாங்க. 

ஆனா அந்த அக்கறை, 'டெலிவரி' யோட முடிஞ்சிடக் கூடாது. டெலிவரி ஆன உடனே, பெண்கள் பொறுப்பான அம்மாவா மாறிடுவாங்கன்னு நினைக்காதீங்க. மனைவியை, 'ரிலாக்ஸா' இருக்க விடுங்க. அவங்க குழந்தைக்குப் பாலுாட்டும் காலம் முடியற வரைக்கும், நீங்க மற்ற எல்லா வேலையையும் பாருங்க. ஒரு குடும்பம் ஆரோக்கியமா இருக்கணும்னா, ஒரு பெண் ஆரோக்கியமா இருந்தாத்தான் முடியும். 

அதனால், பெண்களின் 'வெல்னெஸ்' ரொம்ப முக்கியம். ஒரு நோய் வந்த பின், உடலை கவனிக்க ஆரம்பிக்கணும்னு இருக்காம, ஒரு லைப் ஸ்டைல் மாற்றமா, உடற்பயிற்சி, ஜாகிங்னு தினமும் எதாவது செஞ்சிக்கிட்டே இருக்கணும்.முப்பது வயதைக் கடந்து விட்டாலே, நம்மோட உடல் வளர்ச்சி குறைஞ்சிடும். செரிக்கும் தன்மை குறைஞ்சிடும். 

இதை அதிகரிக்கணும்னா நீங்க, 'ஆக்டிவ்'வா ஏதாவது ஒரு விஷயம் செஞ்சு தான் ஆகணும். உட்கார்ந்துக்கிட்டே இருக்கற வேலையாக இருந்தா, அப்பப்போ, 10 நிமிடம் எழுந்து நடங்க; 'லிப்ட்' பயன்படுத்தாம படிக்கட்டைப் பயன்படுத்துங்க. 'மைண்ட்புல் ஈட்டிங்'னு சொல்வாங்க. நாம என்ன சாப்பிடறோமோ அதை அறிஞ்சு சாப்பிடறது. மூணு கப் சாதத்துக்குப் பதிலா, ரெண்டு கப் சாதம்; ஒரு கப் காய்கறி எடுத்துக்கோங்க. ஆண்களும் கூட இதை முயற்சி பண்ணலாம். எந்த வயசிலேயும் இதை செய்யலாம்.

- தினமலர் எடுத்துக் போட்டதிலிருந்து -
============================================================================================================

அபாய செல்ஃபியும், ஆர்வ செல்ஃபியும்!  படங்களுக்கு இணையத்துக்கு நன்றி!

இந்த செல்ஃபிக்கு 


இந்த செல்ஃபி தேவலாம்!


============================================================================================================

மற்ற பதினோரு செய்யுள்களை, அதற்குண்டான பொருள்களையும் அறிய ஆர்வமிருந்தால் இங்கு சென்று படிக்கவும்.

============================================================================================================

ஜோக்ஸ்...


==============================================================================================================

பூரி கதை பாதியில நிற்குது...   மீதியை அடுத்த வாரம் சொல்லிக்கலாம்..  குழந்தையா மாறியதுல கவிதை சொல்ல முடியலைன்னு சொல்லிக்கலாம்..  வா...  

175 கருத்துகள்:

 1. வழக்கத்தை விட வித்தியாசமான கதம்பம். நானும் ஹார்லிக்ஸ் பாட்டில்களை உடைத்திருக்கிறேன். 
  பாஹே மொழிகள் எங்கே ?
  பூரியெல்லாம் ஒரு வாரம் வைத்திருக்க முடியுமா என்ன? சுட சுட சாப்பிட்டால் தான். 
  விவேக சிந்தாமணி ஆசிரியர் யார்? 
  சுழலும் கட்டில் பரவாயில்லை. 
  அவசரமாக தயார் செய்யப்பட்ட வியாழன் பதிவு!
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதில் வித்தியாசம் என்று சொன்னால் பரவாயில்லை!  பாஹே மொழிகள் சிலர் ஏற்கெனவே படித்திருந்ததாலும், வரவேற்பைப் பெறாததாலும், முக்கியமாக புத்தகத்தை எங்கோ வைத்து விட்டதாலும் (!) இந்த வாரம் காணோம்!  பூரி புதுசா போட்டுக்கலாம்!  விசி ஆசிரியர் அதில் போடவில்லை போல..  அவசரமாக தயார் செய்யவில்லை ஆயினும்....


   நன்றி JC ஸார்..

   நீக்கு
  2. சாதாரணமாக நிகழ் காலத்தில் தான் கதம்பம் துவங்கும். சென்றது, கண்டது, கேட்டது இப்படி. ஆனால் இந்தக் கதம்பம் கடந்த பழைய காலத்தில் நடந்ததை வைத்து துடங்குகிறது. தினமலரில் இருந்து எடுத்தவை பொசிட்டிவ் செய்திகளாக சனிக்கிழமைதான் வரும். மேலும் போட்டோக்கள் (செல்பீ) உங்களுடையது அல்ல. 

    Jayakumar

   நீக்கு
  3. :>))

   பள்ளி நினைவுகள் பற்றி சில பதிவுகளுக்கு முன்னர் ஏதோ எழுதும்போது இன்னும் கொஞ்சம் விஸ்தரித்திருக்கலாமோ என்று நீங்களும், கீதா ரங்கனும் கேட்டதுதான் இந்த விபரீதத்துக்கு காரணம் JC சார்...!!

   நீக்கு
  4. இன்னும் கொஞ்சம் விஸ்தரித்திருக்கலாமோ என்று நீங்களும், கீதா ரங்கனும் கேட்டதுதான் இந்த விபரீதத்துக்கு காரணம் JC சார்...!!//

   ஹையா! நினைவிருக்கே எனக்கு.......பாருங்க இப்படி ஒரு அழகான பதிவு விரிந்திருக்கிறது!!!!! ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம். சொல்லப் போனால் அப்போது நீங்கள் எழுதியது தொடர்வீங்கன்னும் நினைச்சேன்..

   கீதா

   நீக்கு
  5. அப்போது நான் என்ன எழுதினேன் என்று நினைவில்லையே... அழகான பதிவு என்று சொன்னதற்கு நன்றி. ஹிஹிஹி...

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   அன்பைப் பேணுவோம்.

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆரோக்யம் நிறை வாழ்வு நமக்கு இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

   நீக்கு
 6. நக்ஷத்திர கிரிக்கெட்டும் நட்சத்திர ஃபுட்பாலும்.:)

  பதிலளிநீக்கு
 7. ,//அந்த வாய்ப்பை நானே அவருக்கு வழங்கினேன்.//

  ஹா.. ஹா.. ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வயதில் இதெல்லாம் புதுசா, லட்சியமா என்ன!  நன்றி ஜி.

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 9. தண்ணீ சுட்டதடா. ஸ்டார் குளித்ததடா:)

  பதிலளிநீக்கு
 10. சுத்து சுத்து சுத்துது பாரு இங்கே.ஆஹா.!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூரி கிழங்கு எப்பொழுதும் பிடிக்கும்.
   படம் அருமை.


   ''அந்த கேன்டீன் எங்களின் மனங்கவர் பிரதேசமாக இருந்தது என்று சொல்லி இருக்கிறேன். அங்கேயே சாப்பிட்டாலும், மந்தார இலையில் கட்டி பார்சல் வாங்கி வந்தாலும் அந்த பூரி கிழங்கின் வாசனை இன்னும் மனதில் நிற்கிறது. அந்த வாசனை, அந்த ருசி ஏன் இப்போது இல்லை?! மனசுதான் காரணம்!''

   எல்லோருக்கும் இளமைக்காலத்தில் இது மாதிரி
   ஒரு ஹோட்டல் இருக்கும். திருமங்கலம் மீனாக்ஷி பவன் மாதிரி.

   நீக்கு
  2. முதல் அபிப்ராயம்தான் மனதில் எப்போதும் நிற்கும்.  அதுவும் இளமைக்கால அனுபவங்கள் / நினைவுகள் என்றால் பசுமரத்தாணி!

   நீக்கு
  3. ஆனால் ஸ்ரீராம்...இப்போது ஏன் அவை ருசிப்பதில்லை? நம்பி பெருமையா நம்ம பசங்களையும் கூட்டிக்கொண்டு செல்லும்போது பல்லிளித்துவிடுகிறதே... மதுரை ஸ்டேஷன் வெளியில் கற்பகம் போன்று? இன்னும் காலேஜ் ஹவுஸ் செல்லவில்லை. சென்றால் ஏமாற்றம் நிச்சயம்.

   நீக்கு
  4. நெல்லை நம் மனசுஒரு காரணம் ....மற்றொன்று, நீங்க சின்னப்பையனா இருந்தப்ப பூரி போட்ட மாமாவா இப்பவும் பூரி போட்டுக் கொண்டிருப்பார்?!!!! (பூரினா பூரி மட்டும் இல்லை பொதுவாகவே)

   அடுத்து, குழந்தைகளின் சுவையும் நம் சுவையும் வேறு....ஒவ்வொருவரின் சுவையுமே வேறாச்சே.

   கீதா

   நீக்கு
  5. அந்தப் பண்டம் நாக்கு அப்போதுதான் முதன் முதலில் அறிமுகமாகிறது.  எனவே அந்த சுவை பிடித்து விடுகிறது!  பின்னர் பல்சுவைகளைக் கண்டபிறகு அபிப்ராயங்களில் மாற்றம் வருகிறது!  சிறுவயதில் நாம் பெரிய ஹால் என்று நினைத்திருப்போம்.  உயரமான மரம் என்று ஞாபகத்தில் வைத்திருப்போம்.  இப்போது சென்று அதே இடங்களை, மரங்களை பார்த்தால் அப்படித் தோன்றாது!

   நீக்கு
  6. //உயரமான மரம் என்று ஞாபகத்தில் வைத்திருப்போம். இப்போது சென்று அதே இடங்களை, மரங்களை பார்த்தால் அப்படித் தோன்றாது!// - 8ம் வகுப்பு படித்த தாளவாடி என்ற ஊருக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். 40+ வருடங்களில், நாங்கள் வாழ்ந்திருந்த வீட்டை என்னால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை, மனைவிக்குக் காட்ட முடியவில்லை. தூரம் என்று நினைத்த இடங்களெல்லாம் சட் சட் என்று வந்துவிட்டன. ஆனால் நான் படித்த ஸ்கூல் (மிகப் பெரியது) அதே போலத்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, பரமக்குடி, பூலான்குறிச்சி போன்ற ஊர்களுக்குச் சென்றுபார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

   நீக்கு
  7. பள்ளிகள் பெரியதாகத்தான் இருக்கும்.  நீங்கள் சொல்லி இருப்பது போல அன்று வெகு தூரம் என்று எண்ணிய இடமெல்லாம் சட்டென வந்து விடும் என்பது தஞ்சையைப் பொறுத்தவரை நானும் கண்டது!

   நீக்கு
 11. //டேய்... டேய்... பார்த்துடா... உன் கையில எவண்டா கொடுத்தான் இதை?" என்று ஹை டெசிபலில் அலறினார்.//

  அப்பா இப்படி பயமுறுத்தி இருக்க வேண்டாம். பார்த்து பத்திரமாக கொண்டுவா என்றால் பதட்டபடாமல் பத்திரமாய் எடுத்து வந்து இருப்பீர்கள். அவர் பதட்டம் உங்களிடம் வந்து விட்டது.

  முருகன் "யாம் இருக்க பயம் ஏன் "என்று இருக்கிறார் அவரை துணைக்கு அழைக்கவில்லையா நீங்கள்?

  முருகன் பழைய படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது (என்) அப்பா ஸ்பெஷல்!  முருகன் இஷ்ட தெய்வமானது இதற்கெல்லாம் நெடுநாட்களுக்கு பின்!

   நீக்கு
 12. இந்த முந்திரிப் பழ விவகாரம் எல்லாம் நமக்கும் அத்துப்படி.. பழத்தைப் பறித்துக் கொள்ளலாம்.. முந்திக் கொண்டிருக்கும் குந்திரிக் கொட்டையை மட்டும் அங்கேயே போட்டு விட வேண்டும்.. கூடாரம் மாதிரி கவிழ்ந்திருக்கும் முந்திரி மரத்திற்குக் கீழ் பற்பல கதைகள்.. என்ன ஒரு பயம் கட்டை விரல் கனத்துக்கு சிவப்பு நிறத்தில் அலைந்து கொண்டிருக்கும் பூரான்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப்புக்குட்டியும் உண்டு.  ஆனால் இதை எல்லாம் விட நான் பயப்படுவது அந்த முட்களுக்குதான்.  அவர்கள் பாதுகாப்புக்கான போட்ட அந்த முட்கள் நெடுநாட்களுக்கு ஆங்காங்கே இருந்து எங்கள் காலை பதம்பார்க்கும்.

   நீக்கு
 13. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். அனைவரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 14. பெரியவா இந்த விகடகவி போன்ற சொற்களைப் பற்றி
  எழுதிய அருள் பதிவைப் படித்திருக்கிறேன்.

  அனைத்தும் அமுத மொழிகள். பாலின்ரோம் மிகச் சுவையான

  சப்ஜெக்ட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எண்ணெய் பாட்டில் படு பயங்கரப் பதிவாக இருக்கிறதே .
   ஒரு சின்னக் கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாதோ.
   அதற்கு அடி வாங்கினீர்களா. என்ன அனியாயம் ஸ்ரீராம்.:(

   கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.
   ரொம்பக் கோபக்காரரோ உங்க அப்பா.

   நீக்கு
  2. //பெரியவா இந்த விகடகவி போன்ற சொற்களைப் பற்றி
   எழுதிய அருள் பதிவைப் படித்திருக்கிறேன்.//

   சுட்டி கொடுத்திருக்கிறேன் - மற்ற பகுதிகளை படிக்க..

   நீக்கு
  3. //ஒரு சின்னக் கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாதோ.
   அதற்கு அடி வாங்கினீர்களா. என்ன அனியாயம் ஸ்ரீராம்.:(//

   முன்னாலேயே சொல்லக் கூடாதோ அம்மா!!!!!

   //ரொம்பக் கோபக்காரரோ உங்க அப்பா.//

   ஆம்.  ஆம்...

   நீக்கு
 15. எங்க அப்பாவும் இப்படித்தான் அடிப்பார். சொல்லப் போனால் கீழே தள்ளிட்டு மிதித்திருக்கார். அம்மா தான் கவலைப்படுவார். எசகு பிசகாக அடிபடப் போறதே என்று.

  பதிலளிநீக்கு
 16. ஹார்லிக்ஸ் நிறைய வாங்கி பாட்டில்கள் இருந்தாலும் அதில் சாமான்களோ/எண்ணெயோ போட்டு வைச்சதில்லை. ஒன்றிரண்டு பாட்டில்களை அவசரத்துக்கு வைச்சுக்கொண்டு பாக்கியை வாசலில் வரும் பாட்டில் சேகரிப்பவரிடம் போட்டுவிடுவார்கள். அப்போல்லாம் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் வரை விலை போகும். அதே போல் பழைய பேப்பரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டில் தூக்கில் எண்ணெய் வைத்திருப்பதும் உண்டு. அப்போது என்னவோ ஹார்லிக்ஸ் பாட்டில்! என் விதி!

   நீக்கு
 17. உளவியல் ஆலோசகர் ரேகா சுதர்சன் பகிர்வு அருமை.
  மற்ற பகிர்வுகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. எண்ணெயெல்லாம் எங்க வீட்டில் ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் வைப்பாங்க. அதிலிருந்து மொண்டு எடுக்க ஒரு நீண்ட கரண்டியும் அதைக் கொட்டி வைக்க ஒரு அலுமினியம் ஜாடியும் அலுமினியம் முட்டையும் உண்டு. அதில் தான் அன்றாடப் புழக்கத்துக்கு எடுத்துப்பாங்க. ஜாடி அதற்கென இருக்கும் இடத்தில் அங்கேயே நிலையாக வீற்றிருக்கும். அப்போல்லாம் எண்ணெய் சொம்பு கணக்கு. ஒரு சொம்பு, இரண்டு சொம்பு எனச் சொல்லுவாங்க. அது என்ன கணக்குனு எனக்குப் புரிந்ததில்லை. (என்னவோ கணக்கில் சகுந்தலா தேவி மாதிரித் தான் நினைப்பு) இஃகி,இஃகி,இஃகி/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பீங்கான் ஜாடியா?  அதுவும் ஆபத்தாச்சே..  நல்லவேளை அதை நகர்த்துவதில்லை!

   நீக்கு
  2. பெரிய ஜாடி. அந்தக் காலங்களில் மாவடு போட்டு வைச்சிருப்பாங்களே பார்த்திருக்கீங்களா? அது மாதிரி அம்மாவிடம் 3 ஜாடிகள் உண்டு. ஒண்ணு மாவடுவுக்கெனத் தனியா இருக்கும். மற்றவை நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய்.

   நீக்கு
  3. எங்கள் வீட்டிலும் மூன்று இருந்தது.  அதில் ஒன்று மேலேஓரமெல்லாம் உடைந்திருக்கும்.  ஆனாலும் மூட முடியும்.  அப்புறம் அவை என்ன ஆயின என்று நினைவில்லை.

   நீக்கு
  4. எங்கள் வீட்டிலும் பீங்கான் ஜாடியில் தான் எண்ணை அது போல உப்பும் புளியும். அப்புறம் எண்ணை எலலம் அலுமினிய தூக்கு அதன் பின் எவர்சில்வர் ஆகியது.

   இப்ப நம் வீட்டில் நிறைய பாட்டில்களில் சாமான்கல், ப்ளஸ் எவர்சில்வர் டப்பாக்கள், பீங்கா ஜாடிகள் மூடி அதனொடு சேர்ந்தாப்பல உள்ளதில் உப்பு புளி...

   கீதா

   கீதா

   நீக்கு
  5. ஆனால் எண்ணெயை நாங்கள் பீங்கான் ஜாடியில் வைத்ததில்லை.

   நீக்கு
  6. அப்போல்லாம் வெள்ளைப் பீங்கான் பாத்திரங்கள் புழக்கத்தில் உண்டு. குமுட்டி அடுப்பி காஃபிக்கு டிகாக்‌ஷன் போடும்போது அந்தப் பீங்கான் பாத்திரத்தில் தான் வெந்நீர் போடுவார்கள். அதே போல் நாங்க தேநீர் தயாரிக்கவும் அந்தப் பீங்கான் பாத்திரங்களையும் குமுட்டி அடுப்பையும் தான் பல ஆண்டுகள் பயன் படுத்தி இருக்கோம். எவர்சில்வரின் பயன்பாடு அப்போல்லாம் ரொம்பக் குறைச்சல்.

   நீக்கு
 19. விவேக சூடாமணி என அவசரத்தில் புரிந்து கொண்டுவிட்டேன். அப்புறமாத்தான் அது ஆதிசங்கரரோடதேனு நினைவு வந்தது. விவேக சிந்தாமணியும் பார்த்திருக்கேன் தாத்தா தயவிலே. ஜோக்கெல்லாம் அரதப் பழசு. மனோ தத்துவ ஆலோசகர் சொன்னதை நான் நெருங்கிய ஓர் உறவிடம் நானாக யோசித்ததில் சொல்லிவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 20. யாமாமாநீ பாடகி சௌம்யா பாடிக் கேட்கணும். பாடும் முன்னால் ஓர் அருமையான விளக்கமும் கொடுப்பார். அவரும் சித்திரவீணை ரவிகிரணுமாகச் சேர்ந்து இந்தத் தமிழ்ப்பாடல்களின் பண், கர்நாடக சங்கீதத்தின் ராகங்கள் ஆகியவை குறித்துச் செய்த ஆராய்ச்சி அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​யார் பாடியுமே கேட்டதில்லை.

   நீக்கு
  2. அட? ஆச்சரியமா இருக்கே! மதுரைக்கு அப்புறமா நான் எங்கேயும் கச்சேரிகளுக்குனு போனதில்லை. ஆனாலும் வானொலி/தொலைக்காட்சி தயவில் நிறையவே கேட்டிருக்கேன். சௌம்யாவின் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பு நிகழ்ச்சியாகப் பொதிகையில் சில ஆண்டுகள் (சுமார் 20 வருடம்?) முன்னர் ஒளிபரப்பினார்கள். மறு ஒளிபரப்பும் வந்திருக்கு.

   நீக்கு
  3. அட? நீங்களே கேட்டதில்லையா? மதுரையில் இருந்தவரைக்கும் சங்கீதக் கச்சேரிகள் ஶ்ரீராமநவமியின் போதும் நவராத்திரியின் போதும் (கோயில் ஆடிவீதியில் நடக்கும்) அடிக்கடி போவோம். கேட்டிருக்கோம். ஆனால் இதெல்லாம் சமீப காலங்களில் ஏற்பட்டவை. சௌம்யாவின் இந்த நிகழ்ச்சி ஏதோ சிறப்பு நிகழ்ச்சியாகப் பொதிகையில் சுமார் 20(?) ஆண்டுகள் முன்னர் ஒளிபரப்பினார்கள். மறு ஒளிபரப்பும் செய்திருக்காங்க. எம்.பி.ஶ்ரீநிவாசனின் நிகழ்ச்சி, கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் இசை நிகழ்ச்சி எனத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பேன். இப்போல்லாம் தொலைக்காட்சியிலேயே உட்காருவது இல்லை.

   நீக்கு
  4. நான் இப்போது மறுபடி சமீப காலமாக தொலைக்காட்சிக்கு முன் சற்று உட்காருகிறேன்.  கணினி ஸ்பீக்கர்ஸ் சரி இல்லாததால் விருப்பமான பாடல்களை அதில் கேட்கிறேன்.  மேலும் சில உருப்படாத  படங்களும் பார்க்கிறேன்!

   நீக்கு
 21. இந்தப் பூரி கிழங்கெல்லாம் அந்த நாட்களில் ஓட்டலில் வாங்கிச் சாப்பிட்டதே இல்லை. ஆங்கில வருடப் பிறப்பன்னிக்கு அப்பா ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றாலும் அவர் என்ன வாங்கித் தராரோ அதான். :) அம்மா வீட்டிலேயே பூரியெல்லாம் பண்ணிடுவார். சப்பாத்தி அரிதாகத் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி...  நீங்கள் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறேன் என்று சொன்னால் நிஜமாகவே ஆச்சர்யபட்டிருப்பேன்!  அப்போதெல்லாம் எங்கள் மாமாக்களாகட்டும், தாத்தா ஆகட்டும்...  ஹோட்டலுக்கு போனாலே அவர்கள் சொல்லும் ஆர்டர் இரண்டு இட்லி ஒரு தோசைதான்!  ரெகுலரா, மாறாமல்!

   நீக்கு
  2. ஹிஹிஹி, கல்யாணம் ஆனப்புறமாப் போகாத ஓட்டல் இல்லை. அதிலும் நம்ம ரங்க்ஸ் "பட்ஸ்" ஓட்டலாகத் தேடிக் கொண்டு போவார். :)

   நீக்கு
  3. தாம்பரம் பட்ஸ் ஓட்டல் தொண்ணூறுகளில் செம சுவை.  தேடிப்போய் சாப்பிட்டதுண்டு.

   நீக்கு
  4. ஸ்ரீராம் பட்ஸ் ஹோட்டல் என்றது என் நினைவுக்கு வருகிறது

   தி நகர் பாண்டிபஜாரில் வெங்கடேஷ் பட் அவரின் அப்பா துர்காபவன் அங்குதான் நடத்திவந்ததாக அவர் சொல்லியிருக்கிறாரே. அங்கு யாரேனும் போன அனுபவம் உண்டா?

   கீதா

   நீக்கு
  5. வெங்கடேஷ் பட்டின் அப்பா தேனாம்பேட்டையில் துர்கா பவன் வைத்திருந்தார். நம்ம ரங்க்ஸ் அங்கே அவங்க சென்னை அலுவலகத்தில் சில நாட்கள் இருந்தப்போப் பல சமயங்கள் அங்கே டிஃபன் வாங்கிச் சாப்பிட்டதாய்ச் சொல்லி இருக்கார். இப்போவும் வெங்கடேஷ் பட்டின் நிகழ்ச்சியில் அவர் அப்பா வரும்போது சொல்லுவார். இவங்க ஓட்டலில் எல்லாமே நன்றாக இருக்கும் என்று.

   நீக்கு
  6. "சில நாட்கள்"/ சில மாதங்கள் என வந்திருக்கணும்.

   நீக்கு
  7. தாம்பரம் பட்ஸ் ஓட்டலுக்குக் குழந்தைகளைக் கூடக் கூட்டிப் போயிருக்கோம். அதே போல் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே வால்டாக்ஸ் ரோடில் இருந்த சென்ட்ரல் லாட்ஜும். ஒரிஜினலாக நன்றாக இருந்த ஓட்டல் பல கைகள் மாறி விட்டது மதுரை காலேஜ் ஹவுஸ் போல்.

   நீக்கு
 22. தஞ்சாவூர் ஜங்ஷனில் இருந்து வல்லம் வரைக்குமான இருப்புப் பாதை அன்றைய மெல்லிளங்காதலர்களுக்கு சரணாலயம்.. வல்லத்தின் செம்மண் குவாரிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாதை மருத்துவக் கல்லூரியின் பின் பக்கமாகச் செல்லும்..

  அந்தப் பாதை மேம்படுத்தப்பட்டு புதுக்கோட்டை - மதுரை வரைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.. அரசியல் அமைப்புகள் கண்டு கொள்ள வில்லை.. நூறாண்டுகள் கடந்த கனவாகப் போயிற்று..

  அந்த இருப்புப் பாதை மேம்படுத்தப் பட்டிருந்தால் தஞ்சையின் இதயப் பகுதியாகிய இங்கு போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைந்திருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், இருப்புப்பாதை பார்த்திருக்கிறேன்.  எங்கள் வீட்டின் பின்பகுதி வழியே சென்றால் சரபோஜி கல்லூரி வரும்!  அப்போதெல்லாம் பெரிய நெரிசலான போக்குவரத்து இருந்து பார்த்ததில்லை.  நானே பள்ளிக்கு அண்ணனின் நண்பரின் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று வந்திருக்கிறேன்.  பாவம், அந்த சைக்கிளை நானே தான் வருடக்கணக்கில் வைத்திருந்தேன்!

   நீக்கு
 23. செல்ஃபி படங்கள் எங்கிருந்து எடுத்தவை?

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. (கவிதை மிஸ்ஸிங். பரவாயில்லை.. அதற்காக அந்தச் சிறு குழந்தையை ஒன்றும் சொல்வதற்கில்லை. :))

  முருகன் தரிசனம். உங்கள் பதிவிலும், சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் பதிவிலும், காலை எழுந்தவுடன் இறையருள் கிடைத்தது. அனைவருக்கும் அது என்றும் நீடித்திருக்க முருகனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட...  நானும் முருகன் படம் போட்டிருக்கிறேன் என்பதை நானே மறந்திருக்கிறேன்!  கவிதைக்கு குழந்தையின் மனதைப் புரிந்து கொண்டதற்கும் நன்றி.

   நீக்கு
 25. இந்த முருகன் படம் தாத்தா வீட்டில் உண்டு. அவங்களுக்குக் குலதெய்வம் முருகன் தான். இந்தப் படத்தையும் வேலையும் வைத்துத் தான் தாத்தா அன்றாடம் பூஜை செய்வார். வேல் பூஜை முடிந்து தாத்தா சாப்பிடும்போது மதியம் ஒரு மணி ஆகிவிடும். பாட்டியும் அதுவரை உட்கார்ந்திருப்பார். தாத்தா சாப்பிட்டு முடிந்ததும் அதே இலையில் தான் சாப்பிடுவார். இது தாத்தா உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை நடந்தது. கடைசி நாட்களில் தாத்தா படுத்த படுக்கை என்பதால் திரவ ஆகாரம் தான். பாட்டியும் அந்த மிச்சத்தைத் தான் குடித்தார். அபூர்வ ஆனால் அதிசய ஒற்றுமைத் தம்பதிகள். ஐந்து பெண்கள்/நாலு பிள்ளைகள்.எவரிடமும் கோபப்பட்டே நான் பார்த்ததில்லை. பேரன், பேத்திகளான நாங்கள் உள்பட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியான முருகன் படம் வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று சில (வழக்கம்போல) சொன்னார்கள்.  கோவணத்துடன் முருகன் படம் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.  இந்த முருகன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  இந்த போஸில் என் இளையவனை சிறு குழந்தையில் புகைப்படம் எடுத்திருக்கிறேன்!

   தாத்தா பாட்டி வாழ்க்கை முறை நெகிழ்ச்சி.  இந்தக் காலத்தில் அப்படி எல்லாம் பார்ப்பது அபூர்வம்.

   நீக்கு
 26. முருகன் படம் அழகு. பயமில்லாத வாழ்வை அவனே அளிக்க வேண்டும். நீங்கள்
  அந்தப் படத்தை இவ்வளவு நாட்களாகப்
  பாதுகாத்திருப்பது அருமை ஸ்ரீராம்.


  கந்தன் திரு நீறு போல அவன் கருணைப் பார்வையும் அமிர்தம்.

  ரேகா அவர்களின் எழுத்து மனதுக்கு இதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகனே அழகன்தானே அம்மா!  அந்தப் படத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 27. இந்த செல்ஃபி கொடுமை இங்கே உயிர்களைப் பலி வாங்குகிறது.
  இன்னும் திருந்தவில்லை மனிதர்கள்.

  அனைத்துப் பகுதிகளும் அருமை. பகவத் சங்கல்பத்தில் காலை பார்க்கலாம்.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா...  பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்து பதில் சொன்னதற்கு....  எப்போதுமே உங்கள் முதல் தெரிவு ஜோக்ஸ் என்று பார்த்திருக்கிறேன்!

   நீக்கு
  2. பழைய ஜோக்ஸ் மிக ரசிப்பேன் மா.

   நீக்கு
 28. ஹார்லிக்ஸ் பாட்டில் எண்ணெய்... பெரிய டவுசர்... பூரி கிழங்கு... அப்பாவின் கோபம் (வரவைக்கும்படியான அறியாமல் செய்யும் சேட்டைகள்)... மனதை எங்கோ கொண்டுபோக வைத்துவிடுகிறீர்கள். ரசிக்கும் எழுத்து. அடுத்த பகுதி வரும்வரை இது நினைவில் இருக்கணும். ஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவில் இல்லா விட்டால் சொல்லுங்க...  இதற்கெல்லாம் சுட்டி கொடுக்க வேணாம்னு பார்த்தேன்!! :))

   நீக்கு
 29. வியாழன் பதிவுகள் பழைய நினைவுகளைக் கிளறி விட்டாலும் இன்றைய பதிவு வேறு விதம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன விதம் என்று சொன்னால் சந்தோஷமாயிருக்கும்ல...

   நீக்கு
 30. இந்த முருகன் படத்தின் கீழ்தானே யாமிருக்க பயமேன் கேப்ஷன் இருக்கும். ஒருவேளை அப்போது இல்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம். இந்த படத்தில் ஆதியிலிருந்தே நின் அந்த வரிகளை பார்த்ததில்லை!

   நீக்கு
 31. ஒரு கிலோமீட்டர் நடந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் நல்லெண்ணெய் வாங்கிக்கொண்டுவந்து, பை, வீட்டுப் படிகளில் ஏறும்போது நல்ல உயரமாகத் தூக்காத்தால் பாட்டிலின் அடி படிகளுல் பட்டு டக்கென உடைந்ததற்கு, நியாயமாக ஹார்லிக்ஸ் பாட்டில் தயாரித்தவனைத்தான் குறைசொல்ல வேண்டும். எங்க அப்பா அப்போது அடித்தாரா என்று நினைவில்லை. பொதுவா கவனக் குறைவிற்கு அல்லது தவறுதலா நடப்பதற்கு அவர் கோபம்தான் படுவார். வால் தனத்திற்கும் சேட்டைகளுக்கும் ஸ்கேலில் அடி கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... உயரமான பையில் வைத்து படியில்/தரையில் மோதி உடைந்த அனுபவம் எனக்கும் உண்டு. உங்கள் அப்பா பொறுமைசாலி போல...

   நீக்கு
 32. எங்க அப்பா வீடு (அதாவது பெரியப்பா..அங்குதான் பாட்டியும் இருந்தார்).. ரொம்பவே ஆசாரம். கோவில் பிரசாதம் கோவிலில் வாங்கிக் கொள்வதைத்தவிர வெளியே எங்கேயும் சாப்பிடமுடியாது. ஆனால் அம்மாவின் வீட்டில் மாமாக்கள், பேப்பர் ரோஸ்ட் சந்திரவிலாஸ் போன்றவற்றிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுவார்கள் (எனக்கும் கிடைக்கும்)

  திருநெவேலியில் சாப்பிட்ட பூரிக்கிழங்கு, 88ல் சென்னையில் சாப்பிட்ட சரவணபவன் உணவு மனதிலேயே ருசியை ஏற்படுத்துவதற்கு மனசுதான் காரணம். சரியாச் சொல்லியிருக்கீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை, அந்த வகையான ஆச்சாரங்களில் நான் மாட்டவில்லை!

   நீக்கு
  2. ஆனால் பேப்பர் ரோஸ்ட் போன்றவை அங்கேயே சாப்பிட்டால்தான் சுவை.  வரவழைத்து சாப்பிட்டால் தொளதொளவென்றாகிவிடும்!

   நீக்கு
  3. //அந்த வகையான ஆச்சாரங்களில் நான் மாட்டவில்லை// - இது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம் (மனதளவில்). எனக்கு இன்றும் பிறர் வீட்டில் சாப்பிடப் பிடிக்காது (யாராக இருந்தாலும். அப்படியே நான் சாப்பிட்டாலும் ரொம்பவே காம்ப்ரமைஸ் செய்துகொண்டு மனதில் உள்ளதை வெளிக்காட்டாமல் சாப்பிடுவேன்). சாப்பிட்டாலும் தவறு செய்துவிட்டதைப் போலவே மனசு சொல்லும். ஆனால் ஹோட்டலில் சாப்பிடும்போது இந்த உணர்வு வராது. பஹ்ரைனில் என் அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் இதனைச் சொல்லியிருக்கிறேன் (அவர்கள் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிடக்கூடாது என்பதற்காக).

   நீக்கு
  4. ஆம்.  சிலர் இதை மனசூன்யம் என்பார்கள்.  என் பாஸ் கூட உங்களை மாதிரிதான்.

   நீக்கு
  5. நெல்லை சொல்லி இருப்பதைப் படித்தால் அந்தக் காலத்தில் எஸ்.வி.வி. வெங்காயம் சாப்பிட்ட கதை பற்றி எழுதி இருக்கும் கட்டுரை நினைவில் வருகிறது.

   நீக்கு
 33. முந்திரிப் பழம் என்பதை நான் இளவயதில் அறிந்ததே கிடையாது. 24 வயதுக்கு மேல்தான் தாம்பரம் மார்க்கெட்டில் வாசனை நுகர்ந்த அதிசயித்திருக்கிறேன். சாப்பிட்ட நினைவு இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சாப்பிட மாட்டேன்.  அதைச்  சாப்பிட்டால் தொண்டை கரகரவென்று அறுக்கத்தொடங்கி விடும்.

   நீக்கு
 34. பெண்களின் வெல்னெஸ் பற்றி படுபாவிப்பயல் இப்போதானே நியூஸ் போடறான். எனக்கு அப்போ இதுபற்றி அறிவே இருந்ததில்லையே. ஏன் மனைவி ரொம்ப ஒல்லியாகிறாள், பழங்கள் வாங்கிக்கொடுக்கணும், இதை இதை வாங்கித்தரணும் என்றெல்லாம் (எல்லாம் வாங்கும் வசதி வாய்ப்பு இருந்தகோது) தெரியவில்லையே. பிற்காலத்தில் சரளமாக மாமனாரிடம் பேசத் தெரிந்த எனக்கு இவற்றைப்பற்றியெல்ஙாம் அவரிடம் கேட்டிருக்கலாம் எனத் தோன்றவேயில்லை. இதைப்பற்றி வகுப்புகள் எடுத்திருக்கக்கூடாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னிடம் முதலிலேயே கேட்டிந்ருந்தால் இதை அனுப்பி இருப்பேனே...!

   நீக்கு
 35. முதல் ஜோக் கமல் படக் காட்சியை நினைவூட்டுமு. சுழலும் படுக்கை பாடல் என்று. இரண்டாம் ஜோக் சமீபத்தில் பத்ரியில் குளித்த தப்த குண்டத்தை நினைவுபடுத்துது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தப்த்த குண்டம் பார்த்தேன்.  ஆனால் குளிக்கவில்லை!

   நீக்கு
 36. கோபக்கார அப்பா.... என் பசங்கள்டயும் நான் இப்படி நடந்திருக்கிறேன்... மனதுக்கு வருத்தம்தான். நேரத்துக்கு பஸ் ஸ்டாப்புக்கு அவங்க போகலைனா (எல்லாம் 8ம் வகுப்பு வரைக்கும்) ரொம்ப டென்ஷனாயிடுவேன். அவங்க மனதில் இருக்கும் (இருந்தால்) நினைவுகளை எப்படி அழிப்பது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டு சாத்து சாது என்று சாத்தி விட்டு, உடம்புக்கு வந்ததும் இரவெல்லாம் அருகிலேயே உட்கார்ந்து தடவிக் கொடுப்பார்!

   நீக்கு
 37. வணக்கம் சகோதரரே

  அடாடா... ஒரு எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து தங்களுக்கு உங்கள் அப்பாவிடமிருந்து நல்ல அடிகள் வாங்கித் தந்திருப்பது மன வருத்தத்தை தருகிறது. எண்ணெய் பாட்டில் எப்போதுமே வழுக்கிதான் விடும். எங்கள் பிறந்த வீட்டிலும் இப்படி சில பாட்டில்களில் எண்ணெய் உண்டு. கோவிலுக்கு எடுத்துச் சென்று எண்ணெய் ஊற்ற.. தினமும் தலைப்பூச்சுக்கு தே. எண்ணை என.. அந்த சமயத்தில் சுவரில் சாய்ந்திருக்கும் முருகன் கூட தங்களை ஓடி வந்து அரவணைக்கவில்லையே... கொடுமைதான்... ஒருவேளை அதற்குதான் அவரும் ஓடி வந்திருக்கிறாரோ என்னவோ? அன்றைய நினைவுகள் சில இப்படித்தான் பசுமையாக மனதுக்குள் இருந்து விடுகிறது. நல்ல விபரமாக நினைவு வைத்திருக்கிறீர்கள். தலைப்பு நன்றாக உள்ளது.

  இந்த மாதிரி படம் எங்கள் பிறந்த வீட்டிலும் இருந்த நினைவு. எங்கள் அப்பாவும் ஒரு போட்டோ பிரியர். கூடத்தை தாண்டி அடுத்து இருக்கும் ஒரு பெரிய அறையில் மேல் நாலுபக்க சுவர் முழுக்க விதவிதமான இறைவன்கள் போட்டோதான். வீட்டுக்கு ஆண்டுக்கு இரு தடவை வெள்ளை அடிக்கும் போது அதை கழற்றி சுத்தம் செய்யும் பணியில் நாங்களும் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் உடல் விதிர்விதிர்த்துப் போகும். பக்தியினால் அல்ல... தப்பித்தவறி கீழே போட்டு விட்டால் அந்தந்த கடவுளே காக்க வரமாட்டாரே என்ற எச்சரிக்கை உணர்வால்தான்.... ஹா ஹா ஹா.

  தங்கள் வார்த்தைகளை கற்பனை செய்ததில் எங்கள் இளவயதுகள் நினைவுக்குள் வந்தன. எங்கள் வீட்டில் அம்மா அடித்ததில்லை . ஆனால் அவர்கள் போடும் சத்தத்தில் நாங்கள் அரண்டு விடுவோம். அதற்கு அப்பா அடித்து விடுவரோ என்ற பயத்திலேயே எப்போதுமே எச்சரிக்கை மணி உள்ளுக்குள் அடித்துக் கொண்டேயிருக்கும். நான் சிறு வயதில் நிறைய தடவைகள் கீழே விழுந்து விழுப்புண்கள் வாங்கியுள்ளேன். ஒவ்வொரு தடவையும், கீழே விழுந்த ரத்த காயங்களின் வலியை விட அம்மா, அப்பா சத்தம் போடும் காட்சிதான் முதலில் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். தலையில், நெற்றியிலிருந்து ஒழுகும் ரத்தத்தை துடைத்தபடி வீராங்கனையாக வீட்டுக்குள் வந்தது நினைவுக்குள் வருகிறது.

  நல்ல நினைவுகள். அடுத்தும் முருகன் ஏன் உங்களை காக்க வரவில்லை எனத் தெரிந்து கொள்ள வரும் வியாழன் வரை காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் அப்பா அவர்கள் பேசாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்து, எல்லாம் மனைவி பார்த்துக்கொள்வாள் என்று விட்டுவிட்டிருந்தால், அப்பாவின் நினைவு ஸ்ரீராமுக்கு பசுமரத்தாணி போல பதிந்திருக்குமா? எனக்கும் அப்பாவைப் பற்றி நினைக்கும்போது முதலில் வருவது கணக்கு ஒழுங்காகப் போடாததால் என் தொடையில் கிள்ளினதும், வம்பு பண்ணினபோது ஸ்கேலில் அடிவாங்கினதும்தான். இப்போவும் அந்த நினைவு வரும்போது புன்னகைத்துக்கொள்வேன் (பசங்கள்ட, டே.. நான் ரொம்ப டிஸிப்பிளினாக்கும். வெச்ச இடத்தில் வெச்சது இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து குளித்து ரெடியாகிடுவேன் என்றெல்லாம் சொல்லிக்கும்போது, அப்பா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ என்று நினைத்துக்கொள்வேன்)

   நீக்கு
  2. முருகனும் நானும் அந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் க்ளோஸ் ஆனோம் கமலா அக்கா.  ஆனாலும் முருகன் இதெல்லாம் உன் கர்மவிதி என்று விட்டு விட்டான் போல...  கர்மம்!  நானும் ஒன்றும் கேட்டதில்லை!

   //அப்போதெல்லாம் உடல் விதிர்விதிர்த்துப் போகும். பக்தியினால் அல்ல../

   படிக்கும்போதே புரிந்தது!  அதே நிலைதானே நானும் இருந்தேன்!
   என் அம்மா எனக்கெல்லாம் ரொம்ப ஆதரவு.  திட்ட மாட்டார், அடிக்க மாட்டார்.  அந்த அம்மா கூட ஒருமுறை குப்பையைப் பெருக்குவோமே அந்தப் பொருளால் என்னை அது உதிர்ந்து போகும் அளவு அடித்தார்.  ஆனால் இதெல்லாமே எனக்கு துன்பமான நினைவாய் மனதில் இல்லை.  புன்னகைக்க வைக்கும் நிகழ்வுதான்!

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   பொதுவாக அம்மா, அப்பா இருவரின் கண்டிப்புக்களுக்கு பின்னாடி அவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்புதான் அதற்கு பிரதானமாக இருக்கும். ஆனால் நாம் புரிந்து கொள்ளத்தான் சற்று தாமதமாகிறது. புரிந்த பின் அவர்களின் கண்டிப்பான சொற்கள் வருத்தத்தை ஏற்ப்படுத்தாது. நன்றி.

   /ஸ்ரீராம் அப்பா அவர்கள் பேசாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்து, எல்லாம் மனைவி பார்த்துக்கொள்வாள் என்று விட்டுவிட்டிருந்தால், அப்பாவின் நினைவு ஸ்ரீராமுக்கு பசுமரத்தாணி போல பதிந்திருக்குமா? /

   உண்மைதான். நெல்லைத் தமிழர் சகோதரரே.

   அப்பாவின் கண்டிப்பும், அனுசரணையும், குடும்பத்தில் ஒருங்கே இருந்தது அந்த காலத்தில். இப்போது எண்ணெய் வாங்குவதிலிருந்து, அதை பயன்படுத்துவதிலிருந்து தப்பித் தவறி கீழே கொட்டும் பொறுப்பு முழுக்க அப்பாவையே சார்ந்தது. அதனால் அதைப்பற்றி கவலைப்பட யாருமில்லை. :)))

   நீக்கு
  4. நான் எழுதி இருக்கும் விவரங்க மூலம் அப்பா கொஞ்சம் கோபக்காரர் என்று அர்த்தம் வந்திருக்கும்.  கோபக்காரர்தான்.  அதே அளவு அன்பும் வைத்திருந்தார்!

   நீக்கு
 38. வணக்கம் சகோதரரே

  காலை மணி எட்டுக்குள் எண்பது கருத்துக்கள். எல்லாம் தங்களது நினைவின் தொடர்பாக எண்ணெய் பாட்டில் தந்த அனைவரது நினைவுகளும், என்னப்பன் முருகனின் கருணையுந்தான். முருகா சரணம். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதில் சொல்வதிலேயே கருத்துக் பெட்டி நிரம்பி விடுகிறது!

   நீக்கு
 39. யாமிருக்கப் பயமென் என்று சொல்லும் என்னப்பனே முருகா! உன் காலடியில் சரணடைந்த அந்தக் குட்டிப் பயலைக் காத்திருந்திருக்கக் கூடாதோ? பாவம் அந்தக் குழந்தை சரியாகத்தானே குப்பியைப் பிடித்துக் கொண்டு வந்தது. அப்பா கத்தினால் குழந்தை நடுங்காதோ? தவறே செய்யாத குழந்தைக்குத் தண்டனையா? இது உனக்கே அடுக்குமா? நீ எங்கே பேசப் போகிறாய்!! ஹூம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாடா...    ஆதரவுக்குரல்...    அபப்டிக் கேளுங்க கீதா..   ஆனால் அப்போது அங்கு வந்து நின்று நீங்கள் கேட்டிருந்தால் ...  காலி!

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா....உங்களோடு சேர்ந்து எனக்கும் கிடைத்திருக்கும் இல்லையா!!! பரவால்ல நட்புக்காக அடி வாங்கினா தப்பில்லைன்ற கட்சியாக்கும்!!!

   கீதா

   நீக்கு
  3. யோசித்துப் பார்த்தால் பள்ளிப்பருவத்தில் என் நண்பர்கள் என் அப்பாவிடம் நின்று பேசியதே இல்லை!

   நீக்கு
 40. நீ மட்டும் குட்டிப் பயலாய் இருந்த போது உன் அப்பாவிடம் வாதாடினாயே! ஏன் உன்னால் அந்தக் குட்டிப் பயலை அடியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. உன்னை நினைக்கும் அந்தக் குட்டிப் பயலை நினைத்து மனசு சங்கடமாகிவிட்டது. முருகா உன் கூட கா!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டிப்பயல் கண்கள் கலங்க நன்றி சொல்கிறான்!

   நீக்கு
 41. உனக்கு என்ன தான்பா வேணும்...?

  உன் லேலையை மட்டும் ஓழுங்கா ஒழுக்கமா செய், மிச்சத்தை நான் பாத்துகிறேன்... சரியாப்பா...?

  சொன்னா கேட்கவே மாட்டியா..?

  என் மேலேயே சந்தேகமா...?


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேச்சே..  நான் சந்தேகம்லாம் படவில்லை DD...   நம் எழுத்து அப்படி!

   நீக்கு
  2. உங்களைச் சொல்லவில்லை... முருகன் என்னிடம் பேசுவதாக ஒரு தொடர் போல் எழுதியிருந்தேன்...

   முருகனின் முகம் பார்க்கும் போது, பல கேள்விகள் கேட்பது போல, நேரிலே பேசுவது போல... காலையில் நிறைய வரிகள் எழுதினேன்... திருக்குறளில் "ஆறு" இடங்களில் வரும் தெய்வம் வரையிலும்...! ஆனால் கருத்துரை "வெளியிடு" சொடுக்கியவுடன்... காணாம்... ம்...

   அற்புதமான முருகன்... வெறும் படம் என்று சொல்ல மனம் வரவில்லை... நன்றி...

   நீக்கு
 42. முடியல...

  கருத்துரைப் பெட்டி செய்யும் அக்கிரமத்தை...!

  எழுதின முருகன் எண்ணங்களும் முடியல...

  கருத்துரைப் பெட்டி (Settings) அமைப்பு Full Page மாத்தணும் போல...

  முருகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரை பெட்டி, பெட்டியாக வேண்டுமென்றால், Pop-up Window சரியான தேர்வு...   → → Comments → → Select Pop-up Window →

   நீக்கு
  2. விளக்கமாக :-

   *Click*

   Dashboard → *Settings* → Comments → *Comment location* → Select Pop-up Window → *Save*

   நீக்கு
  3. KGG தான் முடிவு எடுக்க வேண்டும்!

   நீக்கு
 43. முந்திரிபபழம்//

  எங்கள் ஊரில் கொல்லாம்பழம் என்று சொல்வோம். நான் படித்த கல்லூரியில் காடு போன்று கொல்லாம்பழம் மரங்கள் இருட்டடித்து அடர்த்தியாக இருக்கும். நிறைய சாப்பிட்டதுண்டு. சில கொஞ்சம் தொண்டையை அரிப்பது போல் இருக்கும். ஆனால் நல்ல பழங்கள் இருந்தால் நல்ல இனிப்பாக இருக்கும். எங்கள் மதிய நேரம் சாப்பாடு முதல், நாடகம் பேச்சுப்போட்டி க்கான பயிற்சி முன்னோட்டம் எல்லாம் அங்குதான் நடக்கும். கிளைகள் தரையோடு படர்ந்து தடியாஅகவும் இருக்குமா அதில் எல்லாம் உட்கார்ந்து அந்த இனிய நாட்கள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...   கொல்லாம்பழம் என்று அழைப்பார்களா!  நான் அதைக் கடித்து சாறு உறிந்து பார்த்து விட்டு வேஸ்ட் செய்து விடுவேன்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் பெரும்பாலும் அப்படித்தானே சாப்பிட்டது. அதில் சாறுதான் மற்றதுஎல்லாம் அது ஒரு சவுக் சவுக்கென்று தானே இருக்கும்

   கீதா

   நீக்கு
  3. ஆம். ஆனால் இந்தப் பழம் என் இளைய சகோதரிக்கு மிகவும் பிடிக்கும்.

   நீக்கு
 44. அந்த வாசனை, அந்த ருசி ஏன் இப்போது இல்லை?! மனசுதான் காரணம்!//

  டிட்டோ!!!

  ஹோட்டல் போவதே அபூர்வமாகிவிட்டது. அப்படிப் போக நேர்ந்தால் பூரிக் கிழங்கு அதுவும் திருநெல்வேலி என்றால் கண்டிப்பாகப் பூரிக் கிழங்குதான் சாப்பிட நினைப்பேன். இப்ப நீங்க சொல்லியிருக்கும் படமும் வேற போட்டிருக்கீங்க அந்த கேண்டீனில் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதே!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ வர்ற பூரி எல்லாம் அந்த வாசனை கொண்டிருப்பதில்லை. மந்தார இலை மட்டும் காரணம் அல்ல.

   நீக்கு
 45. இரு பகுதிகள் தொடரும் போட்டிருக்கீங்க. அடுத்த வாரம். ஆ!

  பத்திரிகை விவேகசிந்தாமணி - முதலில் ஏதோ பஞ்சாங்கம் என்று நினைத்துவிட்டேன் ஹாஹாஹாஹா என்றாலும் வித்தியாசமாக உள்ளடக்கம் கூட அட்டைப்படத்திலேயே வந்திருக்கிறதே. கொஞ்சம் வாசிக்க முடிந்தது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ இரண்டு வியாழன்களுக்கு கவலை இல்லை.  அடுத்த பாட்டை அப்புறம் பார்ப்போம்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் நீங்கள் எவ்வளவு தொடர்ந்து இப்பகுதியை எழுதினாலும் சுவாரசியம்தான். நான் 'ஆ' சொன்னது வேறு காரணம். சொல்கிறேன்.

   கீதா

   நீக்கு
  3. அடுத்த வாரமா என்பது பிரிந்து வாரம் ஆ என்று நிற்கிறதோ!

   நீக்கு
 46. அந்த உளவியல் மருத்துவர் சொன்னதுக்கு அப்படியே எதிர்ப்பதமாகத்தான் எனக்கு. நானேதான் தனியாகக் கையாள வேண்டியிருந்தது. சிசேரியன் என்பதால் 15 நாட்கள் மட்டுமே அதன் பின் குழந்தையின் துணிகள் எல்லாம் நானே துவைத்த்து...பிறந்தவீட்டில் இருந்தது குறைவு....40 நாள் கூட ஆகவில்லை குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்று பில் கட்டுவது எல்லாம் தனியாகத்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ் கூட அப்படித்தான்.

   நீக்கு
  2. பாருங்க ஸ்ரீராம்... இங்கயும் தனியா கையாள்பவர்கள் இருக்காங்க....

   கீதா

   நீக்கு
 47. முதல் செல்ஃபி நிஜமாவேவா...விமானத்திலிருந்து இப்படி வெளியே நீட்ட முடியுமா என்ன? ஜன்னல் திறந்து.

  இரண்டாவது பரவாயில்லைதான் ஆனாலும் என்ன செல்ஃபியோ...அட போங்கப்பா..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // விமானத்திலிருந்து இப்படி வெளியே நீட்ட முடியுமா என்ன? ஜன்னல் திறந்து. //

   எனக்கும் அந்த சந்தேகம்!

   நீக்கு
 48. யாமாமா - நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டும். அப்பகுதியும் சென்று வாசிக்கிறேன். "ஞான"சம்பந்தர்!! இதையும் ரசித்து வாசித்தேன் பொருள் புரியாவிட்டாலும்.

  கீதா  பதிலளிநீக்கு
 49. மூன்று ஜோக்ஸும் சிரித்துவிட்டேன். நடிகைகலின் அட்ராசிட்டிஸ்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 50. பாடல் 10 // புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! //

  பக்தி இலக்கியங்கள் இப்படித்தான்...!

  திருக்குறள் தவிர வேறு ஒரு அற நூல் எவ்வுலகிலும் இல்லை...

  முருகா...!

  பதிலளிநீக்கு
 51. அப்பாவிடம், அந்தச் சிறிய வயதில் அடி வாங்கியது வருத்தமான விஷயம். இது போன்றவை எல்லாம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்தான் பெரும்பான்மையோருக்கு. நீங்கள் வளர்ந்த பின் அப்பா தன் கோபத்தை நினைத்துச் சொல்லியிருக்கிறாரா?

  நான் எந்த உணவகம் சென்றாலும் பெரும்பாலும் சாப்பிடுவது தோசை. ரோஸ்ட்.

  நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அறிய ஆவல். முதல் பகுதியும் சொல்ல வந்தது இன்னும் முடியவில்லை போல இருக்கிறதே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளஸிஜி..   எனக்கு வருத்தமெல்லாம் கிடையாது!

   நீக்கு
 52. இப்படியும் செல்ஃபிக்கள். இப்போதெல்லாம் பெரியவர்களும் எடுப்பதைப் பார்க்கிறேன். ஆனால் எனக்குக் கைவரவில்லை. இப்போதைய உலகைப் பார்க்கும் போது நானெல்லாம் அவுட் டேட்டட் என்றே தோன்றுகிறது. இதை நேற்று கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

  பெண்களின் உடல் நலம் மிகவும் முக்கியம். நிறைய உதவுவது உண்டு, முதல் பிரசவகாலத்திலிருந்தே. அடுக்களைப் பணிகளில் எப்போதேனும். அதைத் தவிர மற்றவற்றில் உதவுவதுண்டு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 53. இங்கு முந்திரிப்பழம்/கொல்லாம்பழம் சிறிய தோட்டம் உண்டு. அது நிலமாகத்தான் வாங்கியது ஆனால் அதில் முந்திரி/கொல்லாம்பழ மரங்கள் இருந்ததால் அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து பழங்களைப் பறித்துச் சாப்பிடுவதுண்டு. முந்திரிக் கொட்டைகளை வீட்டுப் பயன்பாட்டிற்கு. அப்படித் தட்டும் போது வாய்க்கும் போவதுண்டு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​சமயங்களில் முந்திரிப்பழத்தை அரிந்து (கொஞ்சம் நாராய் இருக்கும்)  உப்பு தூவி கூட சாப்பிடுவார்கள்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் நான் சாப்பிட்டதுண்டு அந்த ச் சாறு சில சமயம் தொண்டையை அரிக்கும் ஒரு மாதிரி...அதனால் சேர்த்துச் சுவைத்ததுண்டு. அது நாரா?!! ஆ பீசா வில் மேலே இருக்கும் மொஜாரில்லா சீஸ் உருக்கிய பின் சவுக்கென்று இருக்குமே அப்படி இருப்பதாக எனக்குத் தோன்றும்!!!!!

   கீதா

   நீக்கு
 54. ஸ்ரீராம்ஜி, இப்பதிவில் சிறிய பிராயத்து நினைவுகள் என்பதால் கவிதை இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள் அடுத்த பதிவில் வளர்ந்த பருவம் வரும் கூடவே கவிதையும் வரும் என்று தெரிகிறது.

  நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாமே ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ..   இப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறதா அடுத்த வாரம்?!!

   நீக்கு
 55. இந்த முருகன் படம் எங்கள் மாமா வீட்டில் இருந்தது.
  எண்ணை போத்தல் உடைத்ததற்கா அடி விழுந்தது. நான் சிறுவயதில் பழுக்காத ஈச்சம் பழத்தை தரும்படி கேட்க பழுத்த பின்பு தருவதாக அப்பா சொன்னார் அப்பொழுது மரத்தாலான வட்டக் கதிரையுள் அமர்ந்திருந்தேன் கதிரையை உடைப்பேன் என காலால் உதைக்க உள் சட்டம் வெடித்தது அதற்குத்தான் முதலும் கடைசியுமாக தடியால் ஒரு அடி போட்டார் அப்பா.
  ஜோக்ஸ் ரசனை. சுற்றும் கட்டில் ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த முருகன் படம் எங்கள் மாமா வீட்டில் இருந்தது.//

   இல்லை, இது கடையிலிருந்து வாங்கியதிலிருந்து எங்கள் வீட்டில்தான் இருக்கிறது!!

   அப்பாவிடம் ஆதி வாங்காத குழந்தைகள் உண்டா என்றால்....   உண்டு...   எங்க தாத்தா யாரையுமே அடிச்சதில்லையாக்கும்...   கேஜிஜியைக் கேட்டுப் பாருங்க...

   நீக்கு
  2. //அப்பாவிடம் ஆதி வாங்காத//

   அடி வாங்காத

   நீக்கு
 56. என் மாமியார், குழந்தைகளை அடிப்பதையே வெறுப்பவர். திட்டவே மாட்டார். திட்டினா அவங்க மனசு சுருங்கிவிடும் என்றே சொல்லுவார். அவருக்கு என் கோபத்தை (குழந்தைகளிடம் நான் காட்டும் கோபத்தை)க் கண்டு கொஞ்சம் வருத்தம்தான் (பசங்க சின்னவங்களாக இருந்தபோது). ஆனாலும் நான் பையனிடத்தில் கொஞ்சம் சாஃப்டாகத்தான் இருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதெல்லாம் யாருமே குழந்தைகளை பெரும்பாலும் அடிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

   நீக்கு
 57. எண்ணெய், ஹார்லிக்ஸ் , அப்பா, அடிக்கு உதவிய முருகன்! அப்பப்பா.. அது ஒரு காலம். இருந்தாலும் முருகன் பத்திரமா இருக்கார் என்பதில் சந்தோஷம்.

  இந்த முருகன் படத்தை அந்தக்கால ப்ரைவேட் பஸ்களில் பார்த்திருக்கிறேன். பாசஞ்சரெல்லாம் ஒழுங்கா டிக்கட் வாங்கிட்டாங்களான்னு பார்த்துக்கொண்டே இருப்பார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா...ஹா...   டிக்கெட் செக்கர்!   நான் பஸ்ஸில் பார்த்த நினைவு இல்லை.

   நீக்கு
 58. வணக்கம் சகோதரரே

  இன்றைய பிற பகுதிகளும் அருமை. பழைய பஞ்சாங்க விபரங்கள், மற்றும் தெரியாத விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன். பெண்களின் பிரசவ காலத்திற்குப் பின் அவர்களின் உடல் நிலைப் பற்றி உளவியல் ஆலோசகர் ரேகா சுதர்சன் அவர்களின் கட்டுரை நன்றாக உள்ளது. செல்ஃபி போட்டோக்கள் நன்றாக உள்ளது. முதல் படம் விமானம் பறக்காமல் இருக்கும் போது எடுத்து ரசித்திருப்பார் போலும். மதன் .ஜோக்ஸ் அனைத்தையும் ரசித்தேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 59. என் மகளின் மூத்த மகள் பிறந்த தேதி 15.7.15, நேரம் பகல் 1:21. பிறந்த பொழுது அவள் எடை 2.62 kg. மருத்துவமனையில் என் மகளுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் 161. பாலின்ட்ரோம் பற்றி படித்ததும் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
  என் பெரிய அக்காவின் பேத்தி பிறந்த தினம் 05.05.05!

  பானுமதி வெங்கடேஸ்வரன்

  பதிலளிநீக்கு
 60. சிறப்பான கதம்பம். ஹார்லிக்ஸ் பாட்டில் உடைந்தது, அடி வாங்கியது என அனுபவங்கள்..... எனக்கும் உண்டு.

  பதிவின் மற்ற பகுதிகள் ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா..   உங்களுக்கும் அந்த அனுபவங்கள் உண்டா?   

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!