reasons for not opting for Aadhaar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
reasons for not opting for Aadhaar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.7.13

ஆதாரம் என்றும் நீதானே!


மொத்தம் வாக்களித்தவர்கள்: 55

வாங்கிவிட்டேன் என்று கூறியவர்கள்: 11

வாங்கிவிடுவேன் என்று கூறியவர்கள்: 26

தேவை இல்லை என்று கூறியவர்கள்: 3

வேறு நாடு என்றவர்கள்:                        5

@#$%%^&&&@ என்றவர்கள்:                  10 

ஐந்தாவது ஆப்ஷன் என்ன என்று யாராவது கேட்பார்கள் என்று நினைத்தேன். 

முதலில் நான் என்ன நினைத்து, அந்த ஐந்தாவது ஆப்ஷன் கொடுத்தேன் என்று கூறிவிடுகின்றேன். 

#1 மேலே கூறப்பட்டுள்ள நான்கு ஆப்ஷன்களும் தங்களுக்கு சரியாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு. 

#2 None of the above என்று மார்க் செய்ய நினைப்பவர்கள். 

#3 தமிழ் தெரியாதவர்கள் ஆனால் ஓட்டு அளிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். 

#4 யார் என்ன பதிவு இட்டாலும் - அங்கே வந்து யாரையாவது திட்டுபவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த ஆப்ஷன் உதவும்(!) என்று நினைத்தேன். 

#5 வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதை கூறுபவர்கள் இங்கே கூறலாம். 

ஐந்தாவது ஆப்ஷனில் ஓட்டு அளித்தவரில் ஒருவர் மாதவன். அவர் முக நூலில், தான் முதலில் ரேஷன் கார்டு வாங்கவேண்டும் - அதனால் ஆப்ஷன் ஐந்தை தேர்ந்தெடுத்தேன் என்று கூறியிருந்தார் (என்று நினைக்கிறேன்!) 

கடைசியாக நான் கேட்பது : 'தேவை இல்லை' என்று கூறியவர்களும், ஆப்ஷன் ஐந்தைத் தேர்ந்தெடுத்தவர்களும், ஓட்டு போடாமல் விட்டவர்களும், இங்கே, பின்னூட்டத்தில் தேர்ந்தெடுத்ததின் / ஓட்டு போடாததன் காரணத்தை கூறவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். 

முழு விவரங்கள் கிடைத்ததும் அவற்றை அப்படியே அண்ணன், நந்தன் நிலேகனி அவர்களுக்கு எங்கள் ப்ளாக் சார்பாக அனுப்பி வைக்கின்றேன். 

நன்றி.

வணக்கம்!