Friday, April 12, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130412

               


                       
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்
           
காய்ச்சின பாலு தரேன்;
கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்;
வெய்யிலிலே போக வேண்டாம்
           
காய்ச்சின பாலும் வேண்டாம்;
கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து,
ஒரு நொடியில் திரும்பிடுவேன்
           
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே
           
யமுனா நதிக் கரையில்
எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால்
கலங்கிடுவாய் கண்மணியே
             
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?
கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால்
கண்ட துண்டம் செய்திடுவேன்
         
கோவர்த்தன கிரியில்
கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால்
கலங்கிடுவாய் கண்மணியே
         
காட்டு மிருகமெல்லாம்
என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால்
வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
         
பாசமுள்ள நந்தகோபர்
பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா
என்னுடைய கண்மணியே
 
பாலருடன் வீதியிலே
பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே
ஓடி வந்து நின்றிடுவேன்.  

                        
ஒரே ஒரு கேள்வி:   பாடலை இயற்றியவர் யார்? 

(வாசகர்களும் கேள்விகள் கேட்கலாம், இந்த வீடியோ, பாடல் சம்பந்தமாக.)  
                    

                     

28 comments:

வல்லிசிம்ஹன் said...

மொத்த குடும்பத்துக்கும் பிடித்த பாடல். பேரன்கள் இந்தப் பாட்டை பாட்டியின் மடியில் உட்கார்ந்துதான் கேட்பார்கள்.

மற்றபடி யார் இயற்றினார்கள்னு கேட்டால். தெரியாது சார். பென்ச் மேல வேணா நிக்கறேன். கொஞ்சம் குட்டி பென்சாகப் போடுங்கோ:)
அருணா சாயிராமின் முகத்தில் விழித்தால் அன்று நல்ல நாள்தான்.

வெங்கட் நாகராஜ் said...

காலையில் இன்று நல்ல பதிவுகளாகவே படித்து இன்புற்றேன்... நல்ல பாடல். நன்றி.....

Daddy said...

ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்.. சஹானா ராகம்..

ஹிஹி.. கூகுள் பண்ணிக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சேனாக்கும் :)

சீமாச்சு...

kg gouthaman said...

சஹானா ராகம் என்பது தவறு. குறிஞ்சி ராகம். ஊ வெ சு என்பது சரி.

சீமாச்சு.. said...

ஒரிஜினலா அவர் எழுதினது சஹானா ராகம்னு சொன்னேன் :)

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் அருமை... நன்றி...

Geetha Sambasivam said...

புதிர்ப் போட்டியிலே விடையை உடனே வெளியிடும் வழக்கத்தை வன்மையாகக் கண்டித்துவிட்டு இந்தப் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

middleclassmadhavi said...

migavum rasiththen! nanri

sury Siva said...

U get a reply here online
http://www.youtube.com/watch?v=YXzZmVZiVaA
subbu thatha.

rajalakshmi paramasivam said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டிருப்பேனோ தெரியாது. உங்கள் உபயத்தில் இன்னுமொரு முறை.
இத்துடன் " விஷமக்கார கண்ணன் " பாட்டும் அதுவும் திருமதி அருணா சாயிராம் தான் பாடியது.

ஆனால் எழுதியது யார்? தெரியலையே.........

kmr.krishnan said...

இது எந்தராகம், சஹானாவா?,குறிஞ்சியா?யதுகுலகாம்போதியா? என்ற கவலையெல்லாம் படாமல், யாதவ குல மக்கள் சித்ரா பவுர்ண‌மி அன்று முழு இரவும் ஸ்ரீநிவாச பெருமாள் உலாவரும் போது கிட்டி அடித்துக் கொண்டு காலில் சலங்கையுடன் குதித்துக் குதித்துக் கும்மி அடிப்பதையும் கோலாட்டம் அடிப்பதையும் காணக் கண் கோடி வேண்டும்.இந்தக் கோலாகலம் நடக்குமிடம் கருங்குளம். மலையிலிருந்து பெருமாள் இறங்கி வந்து பக்தர்களுடன் சல்லாபிக்கும் அழகே அழகு. கருங்குளம் மலைக்கோவில் நெல்லை திருச்செந்தூர்
சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முந்தின ஸ்டாப்.

இப்பாடல் அதைப் போன்ற நாட்டார் மக்களுக்கான பாடல். சங்கீத வித்வான்க‌ளுக்கானது அல்ல.

விஷமக்காரக்கண்ணனும் ஊத்துக்காடு வெஙடசுப்பையர் தான்

ராமலக்ஷ்மி said...

அருமையான பாடல்.

பதிலும் கிடைத்து விட்டது.

பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

அருணாசாய்ராம் அவர்கள் பாடும் இந்தபாடல் எனக்கு மிகவும் பிடித்தது.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
அடிக்கடி கேட்பேன்.

Ranjani Narayanan said...

Kmr. Krishnan சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்.
'சங்கீத வித்வான்களுக்கானது அல்ல.


அப்பாதுரை said...

பிரமாதம். இப்பொழுது தான் கேட்கிறேன். ஊத்துக்காடு எழுதியதென்றால் உபரி பெருமைக்கான ஒரு சின்ன உரிமையை எடுத்துக் கொள்கிறேன்.

பாடியவர் யார்?
கதனகுதூகலம் போலத் தெரிகிறதே? சஹானாவா? (சுப்பு சார் எங்கே?)

beautiful. beautiful. thanks.

அப்பாதுரை said...

மிருதங்கம் வாசிப்பவருக்கு எத்தனை முடி! ஆகா!

அப்பாதுரை said...

இந்த வருடத்து சிறந்த பதிவு என்ற சான்றிதழை வழங்குகிறேன்.

அப்பாதுரை said...

குறிஞ்சியா? நன்றி கௌதமன்.

அப்பாதுரை said...

நன்றி kmr.krishnan. கருங்குளம் ட்ரிப் அடித்தே ஆகவேண்டும். நீங்கள் எழுதியதைப் படித்ததும் தீர்மானித்துவிட்டேன்.

அப்பாதுரை said...

சங்கீத வித்வான்களுக்கானது அல்லவா? ஏன்? எழுதியவரே சங்கீத வித்வான் தானே?

அப்பாதுரை said...

மெட்டும் பாடுகிறவரின் குரலும் அருகே இழுக்கிறது - அவ்வபோது தெரியும் பல் மட்டும் பயமுறுத்தித் தள்ளுகிறது. இவரென்றில்லை சாஸ்திரிய/கர்னாடக சங்கீதம் பாடுகிறவர்கள் சரியாகப் பல் தேய்க்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வரும். எத்தனையோ காஸ்மெடிக் தீர்வுகள் இருக்கின்றனவே? பொதுவில் பல் காட்ட நேரிடும் என்றால் கவனமாக இருக்க வேண்டாமோ?

அப்பாதுரை said...

பாசமுள்ள என்பதை பச்சமுள்ள என்று பாடுகிறாரே?

kg gouthaman said...

பாடுபவர் அருணா சாய்ராம்.

kg gouthaman said...

அப்பாதுரை சார்! மிருதங்கம் வாசிப்பவர், பிரபல பாடகி டி கே பட்டம்மாளின் தம்பியாகிய பிரபல பாடகர் டி கே ஜெயராமனின் புதல்வர், ஜெ வைத்யநாதன்.

kaliaperumalpuducherry said...

நல்லதொரு பாடல்.

வல்லிசிம்ஹன் said...

துரை!!!!!! அது பாசம் இல்லை. பட்சம்.
எத்தனையோ குழந்தைகள் வெயிலில் அலைந்தாலும் நந்தகோபர் கண்டுக்க மாட்டாராம். கண்ணனுக்குத் தீங்கு வந்துவிடும் என்று பயம். அதனால் அவனிடம் பட்சம் ஜாஸ்தி. பார்பட்சம்னு சொல்ல மாட்டோமா.

அப்பாதுரை said...

நன்றி வல்லிசிம்ஹன். சொல்தேர்வு புரிந்து பாட்டை இன்னும் பிரமிக்க வைத்தது.

பட்சமுள்ள என்பதை பாசமுள்ளனு மாத்தி பொருளை இம்சைப்படுத்திட்டாங்களே எங்கள் காரங்க! :)

HVL said...

எனக்கு பிடித்த பாட்டு!

இதே போல விஷமகார கண்ணன் பொல்லாத விஷமகார கண்ணன். . .

அந்த பாட்டு கூட இதே அளவிற்கு பிடிக்கும்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!