Monday, April 15, 2013

'காலங்களில் அவர் வசந்தம்'

                                                    
                                                 
                                                               

எத்தனை எத்தனை இன்பமடா என்று பாடியவர்.

அவர் பாடிய பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்
 நம்மையும் அப்படிநினைக்க வைத்தவர்.

ஜீவி சார் அழகான ஒரு வரி சொன்னார். அடடா. தலைப்பாக அந்த வரியை வைத்திருக்கலாமே என்று எண்ணினேன், சொன்னேன்.

'காலங்களில் அவர் வசந்தம்'.

காலத்துக்குச் சொந்தமாகிச் சென்று விட்டார்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

ஆகி விட்டார்.


தள்ளாத வயதிலும் கச்சேரிகள் கேட்பது, பாடல்கள் எழுதுவது என்று 'பிஸியாக'
இருந்தவர்.

பாடமாகக் கவிஞர்கள் எழுதிய பல வரிகளுக்கு உயிர் கொடுத்தவர், உயிரின்றி படமாகி விட்டார்.

உங்கள் பாடல்கள் மூலம் எத்தனையோ சந்தோஷங்களை எங்களுக்குக் கொடுத்த பெருமானே... உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

சமீபத்தில் பாடும் நிலையில் அவர் இல்லை. வயதின் தளர்ச்சி குரலிலும். ஆனாலும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரின் ஒவ்வொரு பாடல்களும் நினைவில் வந்து கொண்டேயிருந்தன.


நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல்,
உங்கள் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். சிரஞ்சீவி நீங்கள்.

காலப் பயணத்தில் இன்னுமொரு முக்கியப் பயணியும் இறங்கிச் சென்று விட்டார். அவர் விட்டுச் சென்ற நினைவுகள் பாடல்களாய் நம்முடன்....

19 comments:

பால கணேஷ் said...

இனிமையான குரலில் அமைந்த அவரின் பாடல்கள் காலங்கள் மாறினாலும் எப்போதும் கேட்க இனிமைதான்! அன்னாரின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திப்போம்!

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு அஞ்சலிப் பதிவு. தலைப்பு மிகப் பொருத்தம். /தள்ளாத வயதிலும் கச்சேரிகள் கேட்பது, பாடல்கள் எழுதுவது என்று 'பிஸியாக' இருந்தவர்./ மற்றவருக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவர். நியூ உட்லண்ட்ஸில் பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

என்றென்றும் நம்மிடையே வாழ்ந்திடுவார் தன் இனிய பாடல்களால். அவர் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல்களின் மூலம் என்றும் நம்மிடம் இருப்பார்...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

ஸாதிகா said...

அவரது உடல்தான் மண்ணை விட்டு மறைந்து விட்டதே தவிர அவர் குரல் என்றும் வாழும்.அவருக்குரிய புகழும்,மரியாதையும்,ரசிகர்களின் கூட்டமும் அவரது மறைவின் பொழுது இப்பொழுது வந்து கொண்டே இருக்கும் கட்டுக்கடங்கா கூட்டத்தைப்பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.அவரது பிரிவால் துயறுறுற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையையும் ஆறுதலையும் அளிப்பானாக!

கோமதி அரசு said...

நேற்று அவர் இறந்ததை தொலைக்காட்சியில் அறிவித்தவுடன் உங்கள் பதிவும், ஜீவிசார் சொன்ன காலங்களில் அவர் வசந்தம் தலைப்பும் நினைவுக்கு வந்தது.
நீங்கள் சொன்ன மாதிரிஅவர் தன் இனிமையான பாடல்களால் எல்லோருக்கும் சந்தோஷங்களை அள்ளி தந்தவர்.

அவர் பாடல்கள் மூலம் வாழ்ந்துக் கொண்டு இருப்பார் என்றென்றும் .
நீங்கள் சொன்னது போல் அவர் சிரஞ்சிவிதான்.
அவர் ஆதமா இசையாய் கலந்து எங்கும் வியாபித்து இருக்கும்.
அவருக்கு வணக்கங்கள், அஞ்சலிகள்.

சீனு said...

அவரை, அவரது இசையை எந்த அளவிற்கு ரசித்துள்ளீர்கள் என்று உங்கள் பதிவின் மூலமே தெரிகிறது. எனக்கும் அவரது பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

அவர் ஆன்மா சாந்தி அடைய பிராத்தனைகள்

வல்லிசிம்ஹன் said...

நம்பிக்கை தளராத மனிதர்.
கண்ணதாசன் பாடல்கள் வாலியின் பாடல்கள் எல்லாம் இவர் குரலில் உயிர் பெற்றன.
வசந்தமே தான் அவர்.வசந்தத்தின் தென்றல்.

மிக மிக நன்றி.ஒரு நல்ல அஞ்சலி.

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் பாடல்கள் மூலம் எத்தனையோ சந்தோஷங்களை எங்களுக்குக் கொடுத்த பெருமானே... உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

மனோ சாமிநாதன் said...

பாடகர் பிபி.சீனிவாஸ் அவர்களின் மறைவு மனதை துயரமாக்குகிறது. த‌னக்கென்று இருந்த் வித்தியாசமான, மென்மையான குரலில் நடிகர்கள் ஜெமினி கணேசன், கல்யானணகுமார்,முத்துராமனுக்காக பாட்டிசைத்து வாழ்ந்தவர். அவரது
மயக்கமா கலக்கமா
நிலவே என்னிடம் நெருங்காதே
காற்று வெளியிடை கண்ணம்மா
பூஜைக்கு வந்த மலரே
யார் யார் அவள் யாரோ
நான் பாட நீ ஆடு கண்ணா

பாடல்க‌ள் எல்லாம் சாகாவரம் பெற்றவை!! உங்களுடன் நானும் அவ‌ருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன்!

rajalakshmi paramasivam said...

Dr.PBS அவர்கள் ஆன்ம சாந்தியடைய வேண்டுகிறேன்.

ஜீவி said...

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் ஆந்திராவின் காக்கிநாடாவில் பிறந்தவராம். ஆர்.கே.நாராயணனின் நாவலைத் தழுவிய 'மிஸ்டர் சம்பத்' ஹிந்திப் படத்தில் இரண்டொரு வரிகள் பாடியது தான் இவரின் முதல் திரையுலக பிரவேசமாம்.

'கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே' 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' 'காற்று வெளியிடை கண்ணம்மா' நீங்கள் மாற்றித் தலைப்பிட்டிருக்கிற 'காலங்களில் அவள் வசந்தம்' எல்லாமே அவர் பாடிய மறக்க முடியாத பாடல்கள்.

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

ஜீவி said...

'தினமலர்' கொடுத்திருக்கிற தலைப்பும் இதே தான்.

ஸ்ரீராம். said...


அனைவருக்கும் நன்றி.

ஜீவி சார்.... தினமலரில் நானும் பார்த்தேன். குறிப்பாக மதுரை பதிப்பில். நீங்கள் இந்தத் தலைப்புக்கான வரியை இதற்குமுன் நாம் பகிர்ந்துகொண்ட பி பி எஸ் பாடல்கள் பகிர்வுப் பகுதியில் பல நாட்களுக்கு முன்னரே கொடுத்து விட்டீர்கள்.

Anonymous said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...

s suresh said...

காலத்தால் அழியா பாடகரை காலன் கொண்டு சென்றுவிட்டான்! இதய அஞ்சலிகள்!

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை காலமானாலும் அவரது பாடல்கள் மனதிலிருந்து மறையா....

அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

அப்பாதுரை said...

பிரதிவாதி பயங்கரம் - இதுவா அவர் பெயர்?
பெயருக்கு சம்பந்தமே இல்லாத குரல்! goodbye PBS!

அமைதிச்சாரல் said...

உடலால் மறைந்தாலும் குரலால் என்றென்றும் வாழ்ந்திருப்பார் அவர்..

Ranjani Narayanan said...

அடுத்த வீட்டுப் பெண்ணில் 'வனிதா மணியே...' என்று ஆரம்பித்து வாதாபி கணபதிம் பஜே....வில் முடித்து வா...வா... என்று இழுப்பார் பாருங்கள் ...மறக்க முடியாத குரலுக்கு சொந்தக் காரர்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!