Saturday, January 4, 2014

Positive செய்திகள்

1) அரசின் சலுகைகள் வேண்டாம். தனக்கும், அமைச்சர்களுக்கும் சுழல் விளக்கு பந்தா கிடையாது. பதவியேற்ற அன்றே வேலைகள் தொடக்கம். பதவியேற்க மெட்ரோ ரயிலில் பயணம்.  இவை தொடரவேண்டும். வதவத என்று அமைச்சர்கள் இல்லாமல் ஐந்தே அமைச்சர்கள். "இப்போதைக்கு" பாஸிட்டிவ் மனிதராகவே தெரிகிறார் கேஜ்ரிவால். ஸ்டன்ட் என்று தோன்றினாலும் ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே....     

  2) மறுபடியும் ஒரு ரயில் விபத்து. 26 பேர் பலி. சோகமான விஷயம். அதில் ஒரு பாசிட்டிவ் செய்தி கண்ணில் பட்டது. அதே ரயிலில் பயணம் செய்த பெங்களுருவைச்சேர்ந்த சரண், அவரின் மனைவியையும் மாமனாரையும் காப்பாற்றமுடியாத நிலையிலும் 20 பேர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். இன்னொருவரும் அதேபோல மனைவி, மாமனார் தீயில் கருகினாலும் 3 பேர்களுக்கும் மேல் காப்பாற்றி இருக்கிறார்.


தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் அந்தப் பெட்டியை மற்ற பெட்டிகளிலிருந்து விரைந்து கழற்றி விட்ட டிரைவரின் விரைந்த செயல்பாடும் பாராட்டுக்குரியதே. 


3) உயிருக்கு பயப்படாத ATM காவல் வீரர் சஹாபுதீன்.


4) ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்கும் (முன்னாள்) லாரி ஓட்டுனர் எஸ் பி செல்வராஜ்.


 


5) நந்தினி


19 comments:

கோவை ஆவி said...

எல்லோருக்கும் என் சல்யுட்!!

திண்டுக்கல் தனபாலன் said...

பெங்களுருவைச் சேர்ந்த சரண் அவர்களுக்கு பாராட்டுக்கள்... மற்ற அனைத்து பாசிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

"இப்போதைக்கு" பாஸிட்டிவ் மனிதராகவே தெரிகிறார் கேஜ்ரிவால். ஸ்டன்ட் என்று தோன்றினாலும் ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே....

பாராட்டத்தக்க ஆரம்பம்..!

கோமதி அரசு said...

ஆரம்பம் இனிதே தொடரட்டும்.
தன் சொந்தங்களை இழந்தாலும் மற்றவர்களை காப்பாற்ற உதவிய இருவருக்கும் வணக்கங்கள்.
ஏடிஎம் வீரர் சஹாபுதீன் அவர்களின் கடமையை பாராட்டி வீர வணக்கம்.
லாரி ஓட்டுனர் திரு செல்வராஜ அவர்களுக்கும், அவர் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.
நந்தினியின் கனவு ஒருநாள் நிச்சயம் பலிக்கும். பலிக்க வாழ்த்துக்கள்.
நல்ல செய்திகளை தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமையான செய்திகள்.....

கேஜரிவால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மெட்ரோவில் வந்த போது பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் என ஒரு படம் இங்கே இணையத்தில் பரவி அனைவர் கருத்துகளையும் சொல்லிக் கொண்டுள்ளார்கள் - விதியை மீறிய முதல்வர் என!

rajalakshmi paramasivam said...

நீங்கள் சொல்வது போல் இப்போதைக்கு பாசிடிவ் மனிதராகவே தெரிகிறார். அப்படியே தொடர்ந்தால் நல்லது தான்.
வேற்றார் சஹாபுதீநின் வீராச செயல் பாராட்டுக்குரியது.திரு.செல்வராஜும், நந்தினியும் பாராட்டபடவேண்டியவர்களே!

Geetha Sambasivam said...

கெஜ்ரிவால் செய்தியைத் தவிர அனைத்துமே நல்ல செய்திகள் கெஜ்ரிவால் இனி எப்படி என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எல்லாம் இலவசம் என ஆரம்பித்துள்ளார். அது எப்படி சாத்தியம் என்பதைச் சிந்தித்தாரா என்பது தெரியவில்லை. :(

Geetha Sambasivam said...

இப்போவே வீடு கொடுத்திருப்பது குறித்துப் பல செய்திகள் வருகின்றன. என்னோட தனிப்பட்ட கருத்து கெஜ்ரிவால் பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபட வேண்டும். ஆனாலும் பேச்சு ரொம்பவே அதிகம். :(

அப்பாதுரை said...

இப்பத்தான் கமெண்டினேன்.. அதுக்குள்ள டிலீட்டிங்களே?
பின்னூட்ட சர்வாதிகாரியா நீங்க?

ஸ்ரீராம். said...

அப்பாஜி நீங்கள் கமெண்ட் செய்துள்ள கேஜ்ரிவால் கமெண்ட் வேறு ஒரு பதிவில் க்ளிக் செய்து இட்டுள்ளீர்கள் என்பதைத் தாழ்மையுடன்.... :)))) (நேற்றைய வெள்ளிக்கிழமை வீடியோ பதிவு!) அது பத்திரமாக அங்கேயே இருக்கிறது என்பதையும்...

அப்பாதுரை said...

காஜர்ஹல்வா நல்லா இருக்கும்னு நினைச்சு வாங்கி ஏமாந்திருக்கேன். அதிலந்து எப்ப காஜர்ஹல்வா வாங்கினாலும் ஏமாத்தமா இருக்கும்னு நினைக்கறேன்.

அப்பாதுரை said...

ஹிஹி.. அப்படியா. சர்வாதிகாரி இல்லையா? மன்னிச்சுருங்க.

அப்பாதுரை said...

எம்ஜிஆர்னு ஒருத்தர்.. இப்படித்தான் அல்வா கொடுத்தார் எல்லாருக்கும்.

அப்பாதுரை said...

தி இந்துனே தமிழ்ல பேர் வச்சிருக்காங்களே!

அப்பாதுரை said...

இப்பத்தான் கவனிச்சேன்.. தி இந்துவுக்குக் கீழே 'தமிழால் இணைவோம்' வேறே.. starkly mischievous.
தமிழ்க் காவலர்களெல்லாம் லீவ்ல போயிருக்காங்களா?

ஸ்ரீராம். said...

கேஜ்ரிவால் நீண்ட நாள் சிம்பிள் நாடகத்தில் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அதற்குள் மற்றவர்கள் நாங்களும் சிம்பிள்தான் என்று (இதையாவது) காபி அடித்தால் தேவலாம். முதல்வர்களின் அனாவசியச் செலவுகளைக் குறைக்கலாம்!

ஸ்ரீராம். said...

அப்பாதுரை... தமிழ் இந்து பக்கத்தை இன்றுதான் பார்க்கிறீர்களா?

அப்பாதுரை said...

ஆமாம்.. எங்கள் தயவுல.

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!