Thursday, July 24, 2014

கங்கை கொண்ட சோழபுரம்
அரியலூர் அருகே உள்ளே கங்கை கொண்ட சோழபுரம் 11 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலை நகரமாக இருந்துள்ளது. இதைத் தலைநகரமாக ஆக்கியது முதலாம் ராஜேந்திர சோழன்.
இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை இவை. இது பற்றிய தமிழ் இந்து கட்டுரை படிக்க படிக்க இங்கே க்ளிக்கி படித்து மகிழவும்.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் சென்று வந்தது.உடனடியாகப் பதிவு போடமுடியாமல் தள்ளிக் கொண்டே வந்தது. இப்போதும் அடுத்த வாரம் வெளியிடலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் இந்நாளின் சிறப்பு கருதி இன்றே இந்தப் பதிவை வெளியிடுவது என்று தீர்மானித்து, அங்கு எடுத்த புகைப்படங்களுடன் பகிர்கிறேன்.

தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் அண்ணன் தம்பிகள்! அண்ணன் பெரிய கோவில் 20 வருடம் மூத்தது.


"கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது" என்கிறது விக்கி!  விக்கி சுட்டியைக் க்ளிக்கி விவரங்களை அங்கு படிக்கவும்.
இயற்கைச் சீற்றங்களாலும் அந்நியப் படையெடுப்புக் கொள்ளையர்களாலும் சிதைக்கப்பட்டுள்ள கட்டடக் கலையின் உச்சமான இந்த சோழர்களின் மாபெரும் கலைப் படைப்பில் காலெடுத்து வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்படுவது உண்மை. ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன.தாராசுரத்திலிருந்து இங்கு வந்த நேரம் பிற்பகல் 12 மணியைத் தாண்டியிருக்க,  சன்னதி மூடியிருந்தது. எனவே உள்ளே செல்ல முடியவில்லை.கிளம்ப மனமின்றி புறப்பட்டோம். 

 

21 comments:

இராஜராஜேஸ்வரி said...

ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன/

உண்மைதான்..
அருமைதான்
படங்களும் ,
செய்திகளும்
இணைப்புகளும்..
பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் அருமை. குறிப்பாக 2,4,10 பிரமாதம். சுட்டிகளுக்கு நன்றி. சிம்மக்கேணி தமிழகத்தில் 3 கோவில்களில் மட்டுமே உள்ளன. ஒன்று இங்கே.

G.M Balasubramaniam said...

நாங்களும் கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்திருக்கிறோம். ஆனால் அப்போது தஞ்சைக் கோவிலைப் போல் ஒரு கோவில் என்ற அளவில்தான் தகவல்கள் இருந்தன. இன்று வலைப் பூக்களில் பலரும் அக்கோவில் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் எழுதி வருகின்றனர். வலைப்பூவால் வந்த ஒரு நன்மை , பல அரிய செய்திகள் கிடைக்கின்றன.வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

இன்று சென்ற இடம் எல்லாம் கங்கை கொண்ட சோழபுரம் தான். இதைவிடப் பெருமை ராஜேந்திர சோழனுக்கு வேறென்ன வேண்டும்? இன்னும் கங்கை கொண்ட சோழபுரம் போகலை என்பது தான் என் சோகம்! :)

Thulasidharan V Thillaiakathu said...

அழகான படங்கள்! எவ்வளவு நல்ல தலம்! சோழர்களின் பெருமை பேசும், சிதைக்கப்பட்டாலும், இன்னும் கம்பீரமாக பெருமை பேசி அழகு கலையுடன் நுணுக்கமான கலை நயத்துடன் மிளிரும் ஒரு தலம். பார்த்திருக்கின்றோம் என்றாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தராத தலம். படங்கள் அத்தனையும் கிகத் தெளிவாக அழகாக உள்ளன!

நல்ல ஒரு பதிவு!

மாதேவி said...

அருமை. நேரில்காணும் பாக்கியம் கிட்டவில்லை. படங்களில்பார்த்துமகிழ்ந்திருக்கின்றேன்.

rajalakshmi paramasivam said...

கங்கைக் கொண்ட சோழ புறம் மாயவரம் அருகிலிருக்கிறது என்று நினைத்திருந்தேன். அது வேறா? நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் போய் பார்த்தேன் அதிலும் இதைப் பற்றியக் குறிப்பு இல்லை. நீங்கள் அங்கு போய் வந்ததினால் உங்களிடம் கேட்கிறேன்.

கோமதி அரசு said...

கங்கைகொண்ட சோழபுரத்தின் அழகான படங்களும் செய்தி குறிப்புகளும் அருமை.

மாயவரத்திலிருந்து 40கிலோமீட்டர்.
ஜெயங்கொண்டத்திற்கு மிக அருகில் இருக்கிறது கங்கைகொண்டசோழபுரம் ராஜலக்ஷ்மி பரமசிவம்.

நாங்கள் அடிக்கடி போகும் கோயில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடித்த கோயில்.

செங்கதிரோன் said...

it is a wonderful place to visit with family

Manickam sattanathan said...

அணைத்து படங்களும் மிக அருமையாக உள்ளன.இன்றைய நாளின் பெருமை சொல்லும் அழகான படைப்பு,இதுவரையிலும் சென்று பார்க்காதவர்கள் நிச்சயம் சென்று வர ஆர்வம்தரும்,வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் பிரமாதம் - உங்கள் பிரமிப்பும்...!

ஜீவி said...

அண்ணன் கோயில் போல தம்பி கோயிலும் இருக்க வேண்டும் என்கிற ஆசையில் எழுப்ப முயற்சித்த கலைக்கோயில் என்றும் அறிந்திருக்கிறேன்.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த வரலாற்றுப் பகிர்வு
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தகவல்கள் அருமை
படங்கள் அழகோ அழகு
நன்றி நண்பரே

கோவை ஆவி said...

தஞ்சை சிறு வயதில் போனது, நினைவில் இல்லை.. இங்கே சென்ற வருடம் நண்பர் குழாமுடன் சென்று பிரம்மானந்தத்தை ச்சே பிரம்மாண்டத்தை ரசித்தேன்.. ஒரு ஆயிரம் சதுர அடில ஒரு வீடு கட்டவே நமக்கு நாக்கு தள்ளிடுது. எப்படித்தான் இதை கட்டியிருப்பாரோ ன்னு வியந்தேன்.. தஞ்சை போகணும் விரைவில்..!

Bagawanjee KA said...

நீங்கள் சொல்லவில்லை என்றால் இதையும் தஞ்சைக் கோவில் என்றே நினைத்துக் கொண்டிருப்பேன் ,அச்சு அசலா அப்படியே இருக்கே !

மாடிப்படி மாது said...

படங்கள் மற்றும் விளக்கங்கள் நன்றாக உள்ளது. அண்ணன் கோவில், தம்பி கோவில் என்ற இதுவரை தெரியாத ஒரு புதிய தகவலுக்கு நன்றி

ராஜி said...

ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன
>>
நிஜம்தான் சகோ! எனக்கு எப்பவுமே ராஜராஜ சோழன், தஞ்சாவூர் கோவில், ராஜேந்திர சோழன் மீது அதிக ஈடுபாடு உண்டு. தஞ்சையை பல முறை சென்று ரசித்ததுண்டு. ஆனா, கங்கை கொண்ட சோழபுரத்திற்குமே மாத கடைசியில்தான் நாங்கள் சென்று வந்தோம்.

viyasan said...

//ராஜேந்திரச் சோழன் உள்ளிட்ட பெரும் சோழ மன்னர்கள் காலடி பட்ட தடங்களில் நடக்கும்போது உணர்வுகள் பொங்கி வருகின்றன.//

உண்மை. அந்த உணர்வை நானும் பெருமையுடன் அனுபவித்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

இது வரை சென்றதில்லை. கங்கை கொண்ட சோழபுரம் பார்ர்கும் ஆசை வந்து விட்டது.....

கே. பி. ஜனா... said...

பார்த்ததில்லை. பதிவு பார்த்து பரவசம் அடைந்தேன். நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!