Sunday, August 17, 2014

ஞாயிறு 267 : படத்துக்குப் பொருத்தமாக 4 வரி ப்ளீஸ்....நிஜத்தின் நிழல்... 

22 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிழல்கள் அழகானவை!
நிஜங்களை பார்க்கும் வரை

Geetha Sambasivam said...

அதோ அந்தப்பறவை போல ஆடவேண்டும்.
அடப் போய்யா, அதுக்கு எத்தனை கஷ்டமோ!

இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிட்டுத் திரியறாங்க!

இதிலே பறவை போலவா ஆடணும்! கிழிஞ்சது!

Thulasidharan V Thillaiakathu said...

நிழலின் அருமை
வெயிலில் தெரியும்!
இந்த நிழல்கள் நிஜமானால்
வெயில்(சூரியன்) வெட்கி
விரைந்து மறையும்!

இராஜராஜேஸ்வரி said...

பின் தொடரும்
நிழலின் குரல்...!

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் ரசித்த புகைப்படம்!! கவித்துவமானதும்!

Bagawanjee KA said...

நிழலை ரசிக்கும் நிஜம் யாரோ ?

Subramaniam Yogarasa said...

அதோ.................அங்க தெரியுது பாரு,அதான் .......................!

vimal said...

அன்றொரு நாள் இதே மர நிழலில்
நீ சொன்ன வார்த்தைகள்
இன்று காற்றில் பறக்கும்
சருகாகி போனதே...!

G.M Balasubramaniam said...

நிஜமோ நிழலோ ஏதாயிருந்தாலும் என்னருகே நீ உன்னருகே நான் .!

sury Siva said...

விக்கிரமாதித்யா !!
உன் முதுகில் தொங்கிக்கொண்டு வரும் நான் உனக்கு
இன்னுமொரு கதை சொல்வேன்.
அதற்கான முடிவைக் கூறு சரியாக.
இல்லையேல், உன் தலை சுக்கு நூறாகி விடும்.

அது இருக்கட்டும். நீ யார் என்று சொல் வேதாளமே ?

என்னைத் தெரியவில்லையா ஸ்ரீராம் !!
நான் தான் சுப்பு தாத்தா. .

www.menakasury.blogspot.com

ஸ்ரீராம். said...

சூப்பர் சுப்பு தாத்தா...

உடம்பு தேவலாமா? நலமடைந்து விட்டீர்களா?

ஸ்ரீராம். said...

ஜி எம் பி ஸார்..
விமல்
சுப்பிரமணியம் யோகராசா
பகவான்ஜி
துளசிதரன்ஜி
ராஜராஜேஸ்வரி மேடம்
கீதா மேடம்
டி என் எம்

அனைவருக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

நான்கு வார்த்தைகளில்..

வாழ்க்கை என்பது ஒரு வட்டம்!

மனோ சாமிநாதன் said...

முதுமை இளமைக்கு வழிகாட்டுகிறதா? அல்லது வழிகள் சொல்லிக்கொடுக்கிறதா?

கே. பி. ஜனா... said...

நிழலும் நிஜமே
ஒளியின் பொருளை
உணர்த்தும்போது!

ஸ்ரீராம். said...

சுருக்கமாக அருமையாகச் சொல்லி விட்டீர்கள் ராமலக்ஷ்மி.

கை கொடுக்கும் அனுபவம் மனோ சாமிநாதன் மேடம்...

ஆஹா ஜனா ஸார்.. அருமை.

கோவை ஆவி said...

தம்பி,எந்தப் பக்கம் வேணும்னாலும் சுத்து..
நான் உன்னைக் கண்டிக்க மாட்டேன்..
ஆனா அதோ அந்தப்பக்கம் மட்டும் போவாதே- அங்கதான் அஞ்சான் ஓடுது.. அப்புறம் உயிருக்கு கேரண்டியில்ல..!

இல. விக்னேஷ் said...

அன்று ஒரு நாள் கனவில்..
உன் தோளில் சாய்ந்துகொண்டு
நான் இப்பூவுலகை மறந்திருந்தேன்..
கனவிற்க்கு வண்ணம் தீட்ட
முயன்ற போதுதான் அறிந்திருந்தேன்..
இது கனவில் மட்டுமே சாத்தியம் என்று..
வலியில் படுத்த நான் உறங்கினேன் நிரந்தரமாக- அன்று..

சே. குமார் said...

நிஜத்தின் நிழல்
நிஜமாகும் வரை
நிழல் அழகு...

சே. குமார் said...

நிஜத்தின் நிழல்
நிஜமாகும் வரை
நிழல் அழகு...

மாடிப்படி மாது said...

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

- கவிஞர் கண்ணதாசன்

அருணா செல்வம் said...

அந்த சூரியன்
மறையும் வரை
நம் நிழலாவது
சேர்ந்திருக்கட்டும்!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!